08-21-2005, 03:21 PM
ஹலோ நேயர்களே, இன்னிக்கு ஆகஸ்ட் 15, சுதந்திரத் தினச் சிறப்பு நிகழ்ச்சியா... நம்ம ஸ்டூடியோக்குப் பிரபல கதாநாயகர்கள் "கரண்டி'யோட வந்திருக்காங்க. எப்பவும் "பஞ்ச்' டயலாக்கால நம்ம காதை நிறைக்கறவங்க, இன்னிக்கு நம்ம வயித்தை நிறைக்க வரிஞ்சு கட்டிட்டு வந்திருக்காங்க! இந்தச் "சூப்பர் ஸ்டார் சமையல் போட்டிக்கு நடுவரா பிரபல செஃப் ஆப்பக்கரண்டியான்' இருக்கப் போறாரு. மாவுல முக்குன வாழைக்காய் -எண்ணைச் சட்டிக்குள்ளே குதிக்கிற மாதிரி நாமளும் நிகழ்ச்சிக்குள்ள குதிப்போமா!
முதலில் வருகிறார் சிம்பு...
சிம்பு : ஹாய் நேயர்களே! நான்தான் பர்ஸ்ட். எப்பவும் மன்மதன்தான் பெஸ்ட்.
தொகுப்பாளினி : அதெல்லாம் இருக்கட்டும். என்ன செய்யப் போறீங்க?
சிம்பு : "ஸ்வீட்' தரப் போறேன்.
தொகுப்பாளினி : அய்யய்யோ...(அவசரமாக தன் உதட்டை மறைக்கிறார்)
சிம்பு : ஹே...யூ நாட்டி. ஸ்வீட்னா கிஸ் இல்ல. இது வேறு. செய்யுறேன் நீ பாரு. முதல்ல தேவையான பொருட்கள் -"கடலை' மாவு கால் கிலோ, இச்சு வெல்லம்...
தொகுப்பாளினி : ஹைய்யோ, அது அச்சு வெல்லம்!
சிம்பு : நச்சுன்னு சொன்னீங்க..அது அரைக் கிலோ. அப்புறம் வாசனைக்கு க்ங்ய்ண்ம்’ டியோடரண்ட். "பஞ்ச் டயலாக்' தேவைக்கேற்ப! "குட்டி'யா இருந்தப்பவே வெட்டியா இருந்தவன் நான் இல்ல. சிம்பு காட்டுவான் வெரைட்டி. முதல்ல எடுக்க வேண்டியது வறுக்குற சட்டி. கடலை மாவை அதுல கொட்டி கோவம் வர்ற வரைக்கும் "விரலால' வறுக்கணும்.
தொகுப்பாளினி : எப்ப கோவம் வரும்?
சிம்பு : "அவனை' நினை..மவனே...தானா கோவம் வரும்டி!(நறநறவென பற்களைக் கடிக்கிறார்)
தொகுப்பாளினி : அய்யோ அச்சு வெல்லத்தை என்ன பண்ணனும்னு சொல்லவே இல்லையே!
சிம்பு : அதை இன்னொரு சட்டியில போட்டு பத்த வைச்சிட்டு, யானாகுப்தா கூட ஒரு குத்தாட்டம் ஆடிட்டு வந்தோம்னா அது ஆகும் "பாகு'. அதுல கடலை மாவைக்கொட்டி கிண்டி, தட்டுல ஊத்தி, நாலு வெட்டு வெட்டி, டியோடரண்ட் அடிச்சிட்டா ஸ்வீட் ரெடி! இதோட பேரு "ஸ்வீட் தாரா'
அடுத்து வருகிறார் தனுஷ்...
தனுஷ் : கஸ்தூரி அப்பா, லெட்சுமி அம்மா, செல்வா அண்ணன், சோனியா அண்ணி எல்லாத்துக்கும் எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல முதன் முறையா ஐஸ்வர்யா இதுதான் செஞ்சுக் கொடுத்தாங்க! அவ்வளவு ஏன், எங்க மாமா ஒவ்வொரு முறையும் இமயமலை போறதுக்கு முன்னாடி லதா அத்தை இதைத்தான் செஞ்சுக் கொடுப்பாங்களாம்.
தொகுப்பாளினி : வாவ், அது பேரு என்ன..."ஒரு நாள் ஒரு உணவா?'
தனுஷ்: இல்ல... பேரை க்ளைமாக்ஸ்ல சொல்லுறேன். ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க. பாத்திரம்னா சும்மா இல்ல. செல்வா அண்ணன் படத்துல என்னோட கதாபாத்திரம் எப்படி இருக்கும், அவ்ளோ வெயிட்டா இருக்கணும். அதுல ஒரு லிட்டர் பாலை ஊத்துங்க! நான் பாக்கத்தான் சுள்ளான் மாதிரி இருப்பேன்... மவனே... கைவச்சேன்...சுருண்டுருவ!
தொகுப்பாளினி: இதை யார்கிட்ட சொல்லணும்?
தனுஷ்: இப்படிக் கோவமா ஒரு டயலாக் வுட்டா, அடுப்பு தானா பத்திக்கும். பாலை சுண்டக் காய்ச்சி இறக்கிறணும். அப்புறம் சர்க்கரை சேர்த்து, ஸ்பூனால கலக்கி, எல்லாத்துக்கும் ஊத்திக் கொடுக்கலாம். இந்த அயிட்டத்துக்குப் பேரு, ஆரோக்யா!
அடுத்து வருகிறார் விஜய்...
விஜய்: வணக்கங்கமுங்கோ!
தொகுப்பாளினி : நீங்க என்ன பண்ணப் போறீங்க?
விஜய்: நம்ம டேஸ்ட்டே எப்பவும் மசாலாதானுங்க! அதைவிட்டா வேற எதுவும் பிடிக்காதுங்க! அதை நான் விட்டுட்டா எங்க என்னைப் பிடிக்காமப் போயிருமோன்னு கூட ரிஸ்க்கே எடுக்கிறதில்லீங்க!
தொகுப்பாளினி: ஓ...தேவையான பொருள்களைச் சொல்லுங்க...
விஜய்: ரெண்டு வரியில கதை, அஞ்சு குத்துப் பாட்டு, நாலு சுத்து பைட்டு, கால்கிலோ காமெடி, அரைக்கிலோ காதல், ரெண்டு டீஸ்பூன் சோகம், பஞ்ச் டயலாக்ஸ் தேவையே இல்லாம.
தொகுப்பாளினி: ஹலோ அது எங்களுக்கே தெரியும். நீங்க செய்யப்போற பதார்த்துத்துக்குத் தேவையானதை யதார்த்தமா சொல்லுங்க!
விஜய்: இப்படிச் சூடு... முதல் வில்லன் சிக்கனை "அந்நியன்' ஸ்டைல்ல சூடான எண்ணையில பொரிச்சி, வறுத்து, தாளிச்சி எடுக்கணும். ரெண்டாவது வில்லன் மட்டனோட "தல'யில இருந்து மூளையை மட்டும் தனியாக் கழட்டி சாப்ஸ் பண்ணிடணும். மீதி வில்லன் அயிட்டங்களை அவிச்சு வைச்சுடணும். அப்புறம் கிலோக்கணக்கா மொளகா வத்தலை வாணலியில போட்டு, அருவாளால வறுக்கணும். இது எல்லாத்தோடயும், கையில கிடைக்குற மசாலைவையெல்லாம் சேர்த்து மிக்ஸியில் அடிச்சு, பிரிட்ஜ்ல கூலா வைச்சுட்டா "மசாலா ஜுஸ்!' ரெடி!
அடுத்து வருகிறார் அஜீத்
அஜீத்: நான் வந்துட்டேன். உனக்கென்ன...உனக்கென்ன..
தொகுப்பாளினி: எனக்கு ஒண்ணுமில்லீங்க!
அஜீத்: நான் தனி ஆளு இல்ல! ஏய்... நான் நினைச்சுட்டா அதைச் செஞ்சே தீருவேன். எவனாலயும் தடுக்கவே முடியாது.
தொகுப்பாளினி: அட, கேமரா பார்த்தாலே "பஞ்ச்' டயலாக் பேச ஆரம்பிச்சுடுவீங்களே! சமையல் குறிப்பைச் சொல்லுங்க.
அஜீத் : என் மனசுக்குள்ள ஒரு நெருப்பு இருக்கு. என் கண்ணு ரெணடுலயும் சூரியன் உட்கார்ந்திருக்கு.
தொகுப்பாளினி: ஆமா உங்க மூளையில "சுக்ரன்' இருக்கு. நாக்குல "சனி' இருக்கு. அதெல்லாம் விடுங்க. தேவையான பொருட்களைச் சொல்லுங்க!
அஜீத்: வேணும். எனக்கு சூப்பர் ஸ்டார் நாற்காலி வேணும்.
தொகுப்பாளினி: அய்யய்யே...போரடிக்காதீங்க. மேட்டருக்கு வாங்க.
அஜீத்: வரேன். வல்லவனுக்கு புல்லும் ஆயதம்.
தொகுப்பாளினி : யாரு சிம்புவுக்கா?
அஜீத்: எனக்கு குறுக்க பேசுனா பிடிக்காது. புல்...அருகம்புல். எடுத்துக்கணும். காய வைக்கணும். பொடி பண்ணணும். அந்தப் பொடியை நீர்ல கலந்து அடிச்சா. உடற்பயிற்சியே தேவையில்லை...
தொகுப்பாளினி: ஆமா, தொப்பை தானா குறைஞ்சிடும். ஓ.கே. நேயர்களே, நம்ம ஸ்டார்ஸ், சமையல் கலர் கலரா செஞ்சு அசத்திட்டாங்க. யாரு இதுல "சூப்பர் ஸ்டார்'னு இவங்க சமையலை டேஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, நடுவர் செஃப் ஆப்பக்கரண்டியான் முடிவைச் சொல்வாரு. அதுவரைக்கும் ஒரு குட்டி பிரேக்.
விளம்பர இடைவெளிக்குப் பிறகு...
தொகுப்பாளினி: சாரி நேயர்களே... எல்லாத்தையும் ஒரே நேரத்துல டேஸ்ட் பண்ணிப் பார்த்ததால நிலைமை "சீரியஸ்' ஆகி, ஆப்பக்கரண்டியான ஆம்புலன்ஸ்ல அள்ளிப் போட்டு அப்பல்லோவுக்கு கொண்டு போயிட்டுருக்காங்க. அதனால "சூப்பர் ஸ்டார் சமையல்' ரிசல்ட் கேன்சல்!
Thanks
inamani..

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->