08-20-2005, 03:17 PM
மனைவியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமா?
மனைவியிடம் கணவன் நல்ல பெயர் வாங்குவது அவ்வளவு சுலபமல்ல... சரி. ஒரு கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொண்டால் நல்ல பெயர் வாங்கலாம்?
உங்களுக்கு சில யோசனைகள்:-
* மனைவியை கவுரவமாக நடத்துங்கள். ஏய், வா, போ... என்று அழைப்பதை தவிர்த்திடுங்கள். வாடி, போடி என்பது இதை விட கொச்சையான வார்த்தைகள். அவற்றை வாய் தவறிக்கூட பயன்படுத்தி விடாதீர்கள்.
* இரவு நேரத்தில் வெளியே செல்வதாக இருந்தால் எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புவீர்கள் என்பதையும் தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இருந்தால் தொலைபேசி எண்ணையும் தெரிவித்துவிடுங்கள். எதிர்பாராத விதமாக அதிக நேரமாகிவிட்டால் மனைவிக்கு தகவலை தெரிவித்து விடுங்கள்.
* ஆடம்பரச் செலவு செய்வதை எந்த மனைவியும் விரும்பமாட்டார். எனவே தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
* வேலைக்குச் செல்லும்போது மனைவிக்கு சிறிதளவு பாக்கெட் மணி கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
* அலுவலக பிரச்சினைகளையும் உற்றார், உறவினர், நண்பர்களால் ஏற்படும் பிரச்சினைகளையும் நல்ல விஷயங்களையும் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள்.
* அதேபோன்று மனைவி தன்னிடம் உள்ள மனக்குறையையோ, பிரச்சினைகளையோ சொன்னால் அதை காது கொடுத்து கேளுங்கள்.
* சேமிக்கும் பழக்கம் எப்போதும் உங்களிடம் இருக்கட்டும். எதிர்காலத்தில் ஏற்படப்போகும் செலவினங்கள், திட்டங்கள் போன்றவற்றிற்கு ஏற்ப உங்களது சேமிப்பு அமையட்டும்.
* குழந்தைகளைப் பற்றிய சிந்தனை எப்போதும் உங்களிடம் இருக்கட்டும். அவர்கள் எப்படி படிக்கிறார்கள், விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள், அவர்களின் குறைகள் என்னென்ன, பள்ளி, கல்லூரிகளிலும், வகுப்பின் சக மாணவர்கள் பற்றியும் அக்கறையுடன் கேளுங்கள். அப்போதுதான் குழந்தைகள் உங்களிடம் தோழமையுடன் பழகுவார்கள்.
* மனைவியைப் பிரியும் நிலையிலும் வீட்டிற்கு வரும் போதும் அன்பாக முத்தம் கொடுங்கள். முடியாத சூழ்நிலையில் புன்னகை செய்வது அவசியம்.
* அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள், உங்கள் மனைவியின் தோழிகள் பற்றி அவதூறாக எதையும் பேச வேண்டாம். அவர்களிடம் நிறை குறைகள் இருந்தால் அது பற்றி விமர்சிக்கலாம்.
* மனைவியைப் பற்றி உங்கள் பெற்றோர் கூறும் குறைபாடுகளையும் குற்றங்களையும் அப்படியே உள் வாங்கிக் கொண்டு மனைவியை சாடவேண்டாம். அதில் உள்ள சாதக, பாதகங்கள், மனைவியின் கருத்து ஆகியவற்றையும் மனம் விட்டு பேசி பின்னர் அதை தீர்ப்பதற்கான வழியைக் காணுங்கள்.
* போதைப் பழக்கமிருந்தால் அதனை உடனடியாக கைவிடுங்கள். எந்தப் பெண்ணும் போதைக்கு ஆண்கள் அடிமையாவதை விரும்புவதில்லை.
* வயதிற்கேற்ப ஆரோக்கியமான தாம்பத்யம் அவசியம்.
இப்படி சகலவிதத்திலும் நீங்கள் மனைவியை திருப்திப்படுத்துகிறவர்களாக இருந்தால் உங்களுக்கு மனைவியிடம் நல்ல பெயர் தாராளமாய் கிடைக்கவே செய்யும்.
Thanks:Thanthi

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அதில எதோ இருக்காம்..என்ன என்று தான் தெரியல :roll: