Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகள் காதல்..பெற்றோர் உட்பட 4பேர் பலி
#1
<b>காதலுடன் மகள் ஓட்டம் தந்தை தாய் உட்பட 4 பேர் பலி</b>

யார் தவறு
வாசிக்க இங்கே செல்லவும்
http://thatstamil.indiainfo.com/news/2005/...18/suicide.html
<b> .. .. !!</b>
Reply
#2
Quote:Communication barrier Communication barrier is the reason for any problem. To solve it, you must dig deep down to its root. In this case the core cause of the problem was the family being afraid of the society. Everyone has different views and I would like people to post their view :roll:

]இன்றைய சமுதாயத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் தேவையற்ற சமுதாய கட்டுப்பாடுகளே. இந்தப்பிரச்சினையை ஆராயும் போது அந்த குடும்பம் தவறான முடிவை எடுதமைக்கு காரணம் சமுதாயம். அவர்கள் சமுதாயத்துக்கு பயந்தே இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்பது எனது கருத்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் :roll:
<b> .. .. !!</b>
Reply
#3
இன்னா ஆத்தா ஒண்ணும் விழங்கெல்லை தமிழ்லை போடும்மா
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#4
sathiri Wrote:இன்னா ஆத்தா ஒண்ணும் விழங்கெல்லை தமிழ்லை போடும்மா

என்ரை கீபோட்டுல பிரச்சினை நில்லுங்கள் வாறன் தமிழ் மாத்துறன் நீங்கள் அதை வாசித்து விட்டீர்களா யார் தவறு என நினைக்குறீர்கள் :roll:
<b> .. .. !!</b>
Reply
#5
என்னதான் காதலித்தாலும் பெற்று வளர்த்தோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்தால் தான் சிறப்பாக அமையும். அதே சமயம் பெற்றோர்களும் பிள்ளைகளை புரிந்துகொண்டு அவர்களின் தேர்வு சரியாக இருக்கும் போது சம்மதிக்க வேண்டும். இந்த செய்தியை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இதில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டது மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இல்லை ,,,, சுற்றம் என்ன நினைக்குமோ என்று அவமானத்தை தாங்கமுடியாமல் தான் தற்கொலை செய்திருக்கிறார்கள். சுயநலனுக்காக தற்கொலை செய்துகொண்டதால் இது அவர்களில் தவறு தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#6
முதல் தலைப்பே தப்பு...இதென்ன ஓட்டப் பந்தயமா...ஓட...! வாழ்க்கைப் பிரச்சனை...! முதலில் பத்திரிகைகள் தங்கள் பார்வைகளை மாற்ற வேண்டும்..!

தன் மனம் விரும்பின படி வாழ்ந்தாத்தான் வாழ்க்கை...பிறர் விருப்பத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை...பிறரின் விருப்பத்தை தேவைகளை தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால் நிறைவேற்றலாம்...அவசியம் என்றால்...அதுவும் மனிதாபிமானத் தேவை என்றிருந்தால் மட்டும்..மற்றும் படி பிறருக்காக மனம் மாற வேண்டும் சொந்த மகிழ்ச்சியை வாழ்வை தொலைக்க வேண்டும் என்பது முட்டாள் தனம்...! பெற்றோர் அதைப் புரிஞ்சுக்கனும்...பிள்ளைகளும் உணர வேண்டும்..! இது விடயத்தில் பெற்றோர் வழிகாட்டிகளாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கற்களாக இருக்கக் கூடாது..!

அந்தப் பொண்ணு செய்த ஒரே தப்பு....இன்னொரு நிச்சயதார்த்தம் வரை மெளனியாக இருந்தது தான்...! பொலிஸ் ஊடகவோ...இல்ல சட்ட ரீதியாகவோ அணுகி தன்ர விருப்பத்தை பெற்றோருக்கு சொல்லி தன்ர வாழ்க்கையை தன் விருப்பப்படி அமைத்திருக்கலாம்...பெற்றோர் காதலை எதிர்க்கிறார்கள் என்பதற்காக கடைசி வரை மெளனியாக இருந்தால் பெற்றோர் அவள் மனம் மாறி விட்டாள் என்றுதான் எண்ணத் தலைப்படுவர்...!

காதல் மற்றர வீட்ட ஏலியாவே போட்டு உடைச்சிடுங்க.... பிரச்சனை இல்லை...என்ன எல்லாருக்கும் அது உடனடிச் சாத்தியமில்லை...சந்தர்ப்பம் வரேக்க சொல்லிடுங்க...!

எது எப்படியோ..இந்திய சமூகம் நிறையக் கற்றுக் கொள்ள இருக்கிறது..வெறும் சமுதாயம் சம்பிரதாயம் பாரம்பரியம் என்று சில தவறான எண்ணங்களை தொடர்ந்து தக்கவைக்க உயிர்ப்பலிகள் விளைவாவது வருத்தம் தரும் விடயம்...! தெளிவான சமூக, மனித வாழ்வியல் கல்வி அறிவூட்டலே இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக முடியும்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
Mathan Wrote:என்னதான் காதலித்தாலும் பெற்று வளர்த்தோரை சம்மதிக்க வைத்து திருமணம் செய்தால் தான் சிறப்பாக அமையும். அதே சமயம் பெற்றோர்களும் பிள்ளைகளை புரிந்துகொண்டு அவர்களின் தேர்வு சரியாக இருக்கும் போது சம்மதிக்க வேண்டும். இந்த செய்தியை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது இதில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டது மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் இல்லை ,,,, சுற்றம் என்ன நினைக்குமோ என்று அவமானத்தை தாங்கமுடியாமல் தான் தற்கொலை செய்திருக்கிறார்கள். சுயநலனுக்காக தற்கொலை செய்துகொண்டதால் இது அவர்களில் தவறு தான்.

மதன் உங்கள் கருத்துடன் உடன்பட்டாலும் பெற்றோரை உங்கள் நிலைக்கு எடுத்து வருவதென்பது எப்போதும் இலகுவான விடயமல்ல... உங்கள் மனவோட்டம் போல அவர்களுக்கும் அமைந்தால் அமையும் என்றால் அது மிக இலகு..இன்றேல் அது கடினம்...! முயன்றால் முடியாதது எதுவும் இல்லை...ஒரு கால அவசாகத்தோடு பெற்றோரை அணுக வேண்டும் இது விடயத்தில்...அவர்களுக்கும் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்...! இல்லை என்றால் சட்டத்தை அணுகுவதே சிறந்தது...அதன் பின்னாவது புரிய வேண்டியவங்க புரிஞ்சுக்குவாங்க தங்கள் தவறை...!

ஆனால் பெற்றோர் தனிமைப்படுவதை பிள்ளைகள் எச்சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கக் கூடாது...ஒருவேளை அவர்களைப் பிரிந்து அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வாழ வேண்டி நேரிட்டால் கூட...! இப்போ பெற்றோர் பெரிதும் புரிந்து கொள்ளக் கூடிய நிலைக்கு வந்திவிட்டார்கள்... ஈழத்தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை...அது ஆரோக்கியமான விடயம்...! இருந்தாலும் இன்னும் இருக்கினம் அதே பழைய சாதக சாதி சம்பிரதாயக் கோட்பாடுகளுக்கு உயிர் கொடுக்க ஆக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
இருபக்கமும் தான் தவறு நடந்திருக்கு. அந்த பொண்ணு கலியாணம் வரை காத்திருந்திருக்கவேணாம். அதற்கு முதல் உறுதியா ஒரு முடிவு எடுத்திருக்கலாம். பெற்றோர்களும் அவள் விரும்பத்திற்கு இப்படி கடுமையா நடந்திருக்கவேணாம். 4 உயிர்கள். அநியாயமாய் போயிட்டே. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
குருவிகள் பெற்றோர் சம்மதிக்காவிட்டால் சட்டத்தை அணுக வேண்டுமா? எதுக்கு? :?
<b> .. .. !!</b>
Reply
#10
kuruvikal Wrote:முதல் தலைப்பே தப்பு...இதென்ன ஓட்டப் பந்தயமா...ஓட...! வாழ்க்கைப் பிரச்சனை...! முதலில் பத்திரிகைகள் தங்கள் பார்வைகளை மாற்ற வேண்டும்..!

தன் மனம் விரும்பின படி வாழ்ந்தாத்தான் வாழ்க்கை...பிறர் விருப்பத்துக்கு வாழ்வதல்ல வாழ்க்கை...பிறரின் விருப்பத்தை தேவைகளை தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பால் நிறைவேற்றலாம்...அவசியம் என்றால்...அதுவும் மனிதாபிமானத் தேவை என்றிருந்தால் மட்டும்..மற்றும் படி பிறருக்காக மனம் மாற வேண்டும் சொந்த மகிழ்ச்சியை வாழ்வை தொலைக்க வேண்டும் என்பது முட்டாள் தனம் !
குருவி அண்ணா சொன்னவற்றில் சிலது சரியானது.

ஒருவருடைய விருப்பம் அவருக்கு இருக்கும் தனிமனித சுதந்திரதுக்குட்பட்டாதாக இருக்கும்போது அதை மறுக்கும் உரிமை யாருக்கும் இல்லை.
உலகத்தில் உள்ள பலகோடி அறிவில்லாத மனிதர்கள் பட்டியலில் தங்கள் பெயரையும் இணைத்துகொண்டு அந்த நாள்வரும் போய்விட்டார்கள். Cry Cry Cry
Reply
#11
Rasikai Wrote:கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
குருவிகள் பெற்றோர் சம்மதிக்காவிட்டால் சட்டத்தை அணுக வேண்டுமா? எதுக்கு? :?

நாய் பூனை குருவி இதுகளுக்குக் கூட தான் விரும்பும் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க இயற்கையில் பரிபூரண சுதந்திரம் இருக்கு...! மனிதருக்கு மட்டும் குறிப்பாக கீழத்தேச சமூகக் கட்டமைப்புக்குள்... அந்த உரிமை ஏன் பறிக்கப்பட வேண்டும்...! உரிமை பறிக்கப்பட்டால்... போராட வேண்டும்...அதை சட்டப்படி செய்தால்...பாதுகாப்பு என்று சொல்ல வந்தம்...! பெற்றோர் என்பதற்காக தனி மனித வாழ்வில் அதிகம் தலைப்போடுவதிலும் வழிகாட்டுவதே சிறந்தது..அல்லது ஒதுங்கிக் கொள்வதே....ஆரோக்கியமானது...! அவை தான் தனி மனித ஆளுமைக்கு வளர்ச்சிக்கு உதவக் கூடியது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
ஆமா குருவிகள் நீங்கள் சொல்வது சரியே.
<b> .. .. !!</b>
Reply
#13
நாங்க என்னதான் சொன்னாலும்... பதவி பட்டம் பணம் வசதி வாய்ப்பு அந்தஸ்து சுயநலம் என்று வந்திவிட்டால்..வாய் பிளக்கும் செயற்கை மனிதருக்குள்... காதல் என்ற இயற் தன்மை..உண்மைத் தன்மையோடு வாழுமா என்பது ஐயமே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
kuruvikal Wrote:நாங்க என்னதான் சொன்னாலும்... பதவி பட்டம் பணம் வசதி வாய்ப்பு அந்தஸ்து சுயநலம் என்று வந்திவிட்டால்..வாய் பிளக்கும் செயற்கை மனிதருக்குள்... காதல் என்ற இயற் தன்மை..உண்மைத் தன்மையோடு வாழுமா என்பது ஐயமே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Idea

என்ன குருவி அப்படி சொல்கிறீர்கள். ஒருவர் உண்மையான நேசம் பாசம் காதல் அன்பு வைத்திருக்கும் போது பணம் பதவி பட்டம் அந்தஸ்து என்ன செய்ய முடியும்?? :?:
<b> .. .. !!</b>
Reply
#15
Rasikai Wrote:[quote=kuruvikal]நாங்க என்னதான் சொன்னாலும்... பதவி பட்டம் பணம் வசதி வாய்ப்பு அந்தஸ்து சுயநலம் என்று வந்திவிட்டால்..வாய் பிளக்கும் செயற்கை மனிதருக்குள்... காதல் என்ற இயற் தன்மை..உண்மைத் தன்மையோடு வாழுமா என்பது ஐயமே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea Idea

என்ன குருவி அப்படி சொல்கிறீர்கள். ஒருவர் உண்மையான

ஒரு சிலருக்குள்...அது உண்மையாக இருக்கலாம்...ஆனால்...பிரச்சனையே அந்த உண்மை வடிவத்தை காண காக்க பலரும் தயங்கி நிற்பதுதான்...! உலகம் போலியில் உழன்று கொண்டிருக்கிறது...! அதற்கு உண்மை வடிவத்தின் வலிமை ஆற்றலை உணரக் கூட நேரமில்லை.... மனித உலகம் அப்படித்தான் பெரிதும் இயங்கிக் கொண்டிருக்கிறது...!

ஒரு சிறு காரியத்தைக் கூட உண்மைக்கு இடம் தந்து நம்பி செய்யக் கூடிய நிலையில் இல்லை...! அண்மையில் ஒரு பெரும் நகருக்குப் போய் பணம் மாற்றிய போது...அதற்குள் போலி நாணயக் குற்றி...வழமை போல நம்பி...அதை இன்னொரு இடத்தில் கொடுக்க...இது செல்லாதே என்றார்கள்..பார்த்தால் போலி நாணயம்..செயற்கை நாணயமே போலியான போது மனித நாணயம் மட்டும் எவ்வளவு உண்மையுடையதாக இருக்க முடியும்...???! பெயருக்கு பெரும் நகரம்...உண்மையில் அது இப்ப நரகமாத்தான் கண்ணுக்குத் தெரிகிறது...! மனிதரும் கூட..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
இதில இரு பகுதியிலும் பிழை உள்ளது. மகள் முடிந்தவரை பெற்றோர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் வேறு முடிவு எடுத்திருக்கலாம். பெற்று வளர்த்தவர்களை விட்டு செல்வது பிழை.
தாய் தந்தையார் மகளைப்புரிந்து இந்த சாதி,அந்தஸ்தை விட்டு திருமணம் செய்து வைத்திருக்கலாம். இல்லை என்றால்..தற்கொலை செய்து அந்த பெண்ணின் மனம் காலமும் கவலைப்பட வைத்திருக்கக்கூடாது.


<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்ன குருவி அப்படி சொல்கிறீர்கள். ஒருவர் உண்மையான நேசம் பாசம் காதல் அன்பு வைத்திருக்கும் போது பணம் பதவி பட்டம் அந்தஸ்து என்ன செய்ய முடியும்?? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ரசிகை அக்கா..இப்போதேல..உணமையான நேசத்துக்கு தான் இதெல்லாம் முன்னால வந்து நிண்டு தொல்லை குடுக்கிறது. காதலர்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் பெற்றோர் நிறையப்பேர் அவற்றைத்தான் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படியான குடும்பத்தில் பிறந்த பெண் அதுவும் பெற்றோர் மேல் பாசம் உள்ள ஒரு பெண்..காதலித்தால் ரொம்ப கஸ்டமான சூழ்நிலை உருவாகும். அதையும் மீறு திருமண்ம் என்றால் அது அவங்க அவங்க முயறிசியிலும் அதிஸ்டத்திலும் தன இருக்கு.

குருவி அண்ணா சொன்னது உண்மை. இப்பொதேல யாரையும் நம்ப முடியாது. எதிர் காலத்தையும் தான்.
..
....
..!
Reply
#17
ம்ம்ம்ம்ம் நீங்கள் சொல்வது சரியே ப்ரியசகி
<b> .. .. !!</b>
Reply
#18
ப்ரியசகி Wrote:இதில இரு பகுதியிலும் பிழை உள்ளது. மகள் முடிந்தவரை பெற்றோர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் வேறு முடிவு எடுத்திருக்கலாம். பெற்று வளர்த்தவர்களை விட்டு செல்வது பிழை.
தாய் தந்தையார் மகளைப்புரிந்து இந்த சாதி,அந்தஸ்தை விட்டு திருமணம் செய்து வைத்திருக்கலாம். இல்லை என்றால்..தற்கொலை செய்து அந்த பெண்ணின் மனம் காலமும் கவலைப்பட வைத்திருக்கக்கூடாது.


Quote:என்ன குருவி அப்படி சொல்கிறீர்கள். ஒருவர் உண்மையான நேசம் பாசம் காதல் அன்பு வைத்திருக்கும் போது பணம் பதவி பட்டம் அந்தஸ்து என்ன செய்ய முடியும்??

ரசிகை அக்கா..இப்போதேல..உணமையான நேசத்துக்கு தான் இதெல்லாம் முன்னால வந்து நிண்டு தொல்லை குடுக்கிறது. காதலர்களுக்கு பிரச்சனை இல்லை என்றாலும் பெற்றோர் நிறையப்பேர் அவற்றைத்தான் கட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அப்படியான குடும்பத்தில் பிறந்த பெண் அதுவும் பெற்றோர் மேல் பாசம் உள்ள ஒரு பெண்..காதலித்தால் ரொம்ப கஸ்டமான சூழ்நிலை உருவாகும். அதையும் மீறு திருமண்ம் என்றால் அது அவங்க அவங்க முயறிசியிலும் அதிஸ்டத்திலும் தன இருக்கு.

குருவி அண்ணா சொன்னது உண்மை. இப்பொதேல யாரையும் நம்ப முடியாது. எதிர் காலத்தையும் தான்.




ம்ம்மம் ரொம்ப feel பன்னி சொல்றிங்க..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#19
Quote:ம்ம்மம் ரொம்ப feel பன்னி சொல்றிங்க.....

சுண்டல்...நான் பீல் பண்ணி சொல்லலயே...சும்மா என்னோட கருத்தை தான் சொன்னேன்... :wink: (நீங்கள் பீல் பண்ணாம இருங்க) :wink:
இப்பிடி கதைச்சா அடுத்த பக்கத்தில கதையே மாறிடும்... :roll:
..
....
..!
Reply
#20
ப்ரியசகி Wrote:
Quote:ம்ம்மம் ரொம்ப feel பன்னி சொல்றிங்க.....

சுண்டல்...நான் பீல் பண்ணி சொல்லலயே...சும்மா என்னோட கருத்தை தான் சொன்னேன்... :wink: (நீங்கள் பீல் பண்ணாம இருங்க) :wink:
இப்பிடி கதைச்சா அடுத்த பக்கத்தில கதையே மாறிடும்... :roll:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)