Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஷங்கர் இயக்கத்தில் ரஜனி !
#1
ஏவிஎம் படத்தில் ரஜினி: ஷங்கர் இயக்குகிறார்

<img src='http://www.dinamani.com/cinema/images/Aug05/20shankar.jpg' border='0' alt='user posted image'>

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரஜினியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது.

ஏவிஎம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தை இயக்குவது ஷங்கர்.

எம். சரவணன், எம்.எஸ். குகன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஏவிஎம்மின் 168-வது படமிது. இந்நிறுவனத்தில் ரஜினி நடிக்கும் 9-வது படமிது. அதே போல ஷங்கர் இயக்கும் 9-வது படமிது. ரஜினியின் ராசி எண்ணும் 9 என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்துக்கான தலைப்பு இன்னும் சூட்டப்படவில்லை. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் கதை விவாதத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் ஷங்கர்.

இது தொடர்பாக ஷங்கரிடம் கேட்டபோது, "ரஜினியின் படத்தை இயக்கப்போவது சந்தோஷமான விஷயம். பெருமையாக இருக்கிறது. அதே சமயம் பொறுப்பும் அதிகமாக இருக்கிறது' என்றார்.

இயக்குநர்கள் பி. வாசு, ராஜா ஆகியோரும் தனித்தனியே ரஜினியின் புதிய படத்துக்காக கதை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகும் செய்தி திடீரென வெளிவந்துள்ளது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#2
ரஜினியின் புதிய படம் ÔசிவாஜிÕ


சென்னை, ஆகஸ்ட் 20: ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்ட் செய்கிறார். புதிய படத்துக்கு ÔசிவாஜிÕ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் நடித்த Ôசந்திரமுகிÕ 125 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவரது அடுத்த படத்தை யார் இயக்குவது, எந்த நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்று சினிமா வட்டாரத்தில் பல்வேறு வதந்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தன.


ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்குவார், பூர்ணசந்திரசேகர ராவ் தயாரிக்கிறார் என்றெல்லாம் வந்த செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் வழக்கம் போலவே மவுனம் காத்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்துக்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை 'அந்நியன்' உட்பட தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய ஷங்கர் டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு ÔசிவாஜிÕ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஷங்கருக்கு 9 ஆவது படமாகும்.

சிவாஜிகணேசன் நடித்த முதல் படமான ÔÔபராசக்திÕயை தயாரித்தது ஏ.வி.எம். நிறுவனம்தான். அவருடைய நினைவாக இந்த படத்துக்கு ÔசிவாஜிÕ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத்துக்கான கதை விவாதத்தில் டைரக்டர் ஷங்கர் ஈடுபட்டு இருக்கிறார்.

இந்த புதிய பட அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய பற்றி ஏ.வி.எம்.சரவணன் ''ரஜினியுடன் சேர்ந்து இந்தப் படத்தில் பணி புரிவது திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஷங்கர் இந்தப் படத்தை இயக்குவது பழம் நழுவி பாலில் விழுந்தது போல என்று கூறுவார்களே அதற்குப் பொருத்தமானதாக இருக்கிறது.

தமிழ் திரையுலக வரலாற்றில் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இது நிச்சயம் சாத்தியமாகும்'' என்று கூறினார்.

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி இயக்குனர் ஷங்கர் கூறுகையில் ÔÔ ரஜினி படத்தை ஏ.வி.எம். தயாரிப்பில் இயக்குவது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம் பயமாகவும் இருக்கிறதுÕÕ என்றார்.

'சிவாஜி' படம் ஏ.வி.எம் நிறுவனத்தின் 168 படத் தயாரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




|பாலாஜி
vikatan
[b][size=15]
..


Reply
#3
தகவலுக்கு நன்றி
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
சங்கரும் ரஜினியும் இணைந்தால் சுவாரசிமான
படம் ஒன்று கிடைக்கும் என நம்புகிறேன்.
அல்லது சங்கரும் ரஜினியின் போக்குக்கு வளைந்து
கொடுக்கப்போகிறாரோ தெரியாது.
Reply
#5
உங்கள் தகவலுக்கு நன்றி

...................................
jothika
Reply
#6
vasisutha Wrote:சங்கரும் ரஜினியும் இணைந்தால் சுவாரசிமான
படம் ஒன்று கிடைக்கும் என நம்புகிறேன்.
அல்லது சங்கரும் ரஜினியின் போக்குக்கு வளைந்து
கொடுக்கப்போகிறாரோ தெரியாது.

உங்க நம்பிக்கை வீண்போகாட்டி சரி. முதல்வன் மாதிரி படம் இருக்குமோ தெரியலை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
ரஜினி நடிக்கும் புதிய படம் "சிவாஜி'

சென்னை, ஆக. 21: ரஜினி நடிக்கும் புதிய படத்துக்கு "சிவாஜி' என பெயரிடப்பட்டுள்ளது. ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கும் இப் படத்தை ஷங்கர் இயக்குகிறார்.

"சிவாஜி' என்ற தலைப்பு வைப்பதற்காக, சிவாஜி கணேசனின் குடும்பத்தாரிடம் அனுமதி பெற்றதாக தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் தெரிவித்தார்.

படத்தின் பூஜை, இதர நடிகர், நடிகைகள் தேர்வு ஆகிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#8
6.30 க்கு சந்திரமுகி வெக்டோனில், பார்த்து மகிழவும்.
.

.
Reply
#9
சிவாஜp† பட வெற்றிக்காக ரஜpனிகாந்த் நேற்று திருப்பதியில் சிறப்பு அர்ச்சனை செய்தார். அடுத்து மாதம் 3 வது வாரத்தில் இதன் தொடக்க விழா நடக்க உள்ளது.

Nப்பர் ஸ்டார் ரஜpனிகாந்த் நடிக்க ஷங்கர் இயக்க உள்ள -சிவாஜp† படத்தின் எதிர்பார்ப்பு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எங்கு திரும்பினாலும்

இதைப்பற்றித்தான் பேச்சு. மீடியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் இன்னும் சொல்லப்போனால் சில தயாரிப்பாளர்களே இந்த படத்தின் செலவு என்ன ஆகும். இதில் தயாரிப்பாளருக்கு கிடைக்கப்போவது எவ்வளவு, ரஜpனியின் சம்பளம் என்ன, தெலுங்கு பதிப்பின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்று கால்குலேட்டர் வைத்துக்கொண்டு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறhர்கள்.

ஒரு தோராய கணக்கு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு தயாரிப்பாளர் தெரிவித்தார். அதாவது படத்திற்கு செலவு என்று வைத்துக்கொண்டால் அதிக பட்சமாக 40 கோடி ஆகும். இதில் இயக்குனருக்கு சம்பளம் 10 கோடி கிடைக்கும். இதன் விற்பனை என்பது 70 கோடியை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளருக்கு 40 சதவீதம், ரஜpனிக்கு 60 சதவீதம் என்று லாபத்தில் பிரிக்கப்படுகிறது.

இந்த லாபத்தில் ரஜpனிகாந்த் பழம் பெரும் தயாரிப்பாளரும், தனது நெருங்கிய நண்பருமான ஒருவருக்கு பெரும் தொகையை கொடுப்பதாக உறுதி கூறி இருப்பதுடன் அவரும் ஒரு வகையில் மறைமுக பார்ட்னராக இதில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே ரஜpனியை வைத்து பெரிய படங்களை தயாரித்தவர் தற்போது நலிந்த நிலையில் இருக்கிறhர் என்பது குறிப்பிடத்தக்கது.

-அந்நியன்† படத்தை இயக்கி முடித்த டைரக்டர் ஷங்கர் பிரபல தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத்துக்கு தெலுங்கு படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருந்தார். அதற்காக பெரும் தொகை ஷங்கருக்கு முன்பணமாக வழங்கப்பட்டது. இப்படத்தில் தெலுங்கு பட Nப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பதாக இருந்தது. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. சிரஞ்சீவி- ஷங்கர் சந்திப்பும் நடந்தது.

இந்தநிலையில்தான் ரஜpனிகாந்த் ஏவி.எம்.நிறுவனத்துக்கு படம் நடிப்பது என்றும் அதை ஷங்கர் இயக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இப்படியொரு வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று -முதல்வன்† படம் இயக்கும்போதிலிருந்தே ஷங்கரும் எதிர்பார்த்து இருந்தார்.

அதற்கான காலம் கனிந்து வந்ததையடுத்து தான் இயக்க இருந்த தெலுங்கு பட திட்டத்தை தள்ளி வைத்தார். இதுகுறித்து அந்த தயாரிப்பாளருடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இருவருக்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. ரஜpனிகாந்த் நடிக்கும் -சிவாஜp† படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை அவருக்கு வழங்குவது என்று பேசி முடிக்கப்பட்டது.

தெலுங்கு பட தயாரிப்பாளருக்கு உரிமை கொடுக்கப்பட்டபோதிலும் அதிலும் முக்கியமான சில தயாரிப்பாளர்கள் பார்ட்னர்களாக இணைந்திருக்கிறhர்கள். அதில் தமிழ் பட அதிபர் ஆர்.பி.சவுத்ரியும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இப்படித்தான் சிவாஜpயின் தற்போதைய நிலவரமாக திரையுலகில் கணிக்கப்பட்டு உள்ளது.

எப்போதுமே ஒரு படத்தை நடித்து முடித்துவிட்டு 2 அல்லது 3 வருடம் இடைவெளிவிட்டு அடுத்த படத்தை முடிவு செய்யும் ரஜpனி தற்போது -சந்திரமுகி† வெளியாகி 150 நாட்கள் கூட முடியாத நிலையில் ரஜpனிகாந்த் தனது அடுத்த பட முடிவை அறிவித்திருப்பது திரையுலகினருக்கு ஒரு வகையில் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. யாருமே எதிர்பார்க்காத Nழலில் இந்த முடிவை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயம் ரஜpனிக்கு ஏற்பட்டது என்பதுதான் உண்மை.

60 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏவி.எம்.ஸ்டூடியோவில் கட்டப்பட்டு உள்ள புதிய பிள்ளையார் கோவிலுக்கு வருமாறு கடந்த வாரம் ரஜpனிக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் அங்கு சென்றhர்.

அப்போது ஸ்டூடியோவில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்ததை அவர் கண்டு திடுக்கிட்டார். ஸ்டுடியோவின் பல இடங்களில் -பென்ஸ்† எனப்படும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு தடுப்புகள் ஏற்பட்டிருப்பதை கண்டார். அதற்கு என்ன காரணம் என்று ரஜpனிகாந்த் கேட்டு விவரங்களை அறிந்தார். பிறகு வீடு திரும்பிய ரஜpனிகாந்த் நீண்ட நேரம் யோசித்தார். சட்டென ஒரு முடிவுக்கு வந்தார். பட அதிபர் ஏவி.எம்.சரவணனை தொடர்பு கொண்டு -அடுத்து நாம் இணைந்து செய்வோம்† என்று கூறினார். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை தொடங்கினார். 2 நாட்களில் அனைத்து பணிகளும் முடிந்து அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

சந்திரமுகியின் மாபெரும் வெற்றியும், தான் நடிக்க உள்ள புதிய படமான -சிவாஜp†யின் பிரமாண்ட வெற்றிக்குமாக சேர்த்து திருப்பதி வெங்கடாஜலபதிக்கு சிறப்பு அர்ச்சனை செய்வது என்று முடிவு செய்த ரஜpனிகாந்த் நேற்று காலை திருப்பதி புறப்பட்டு சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து சிறப்பு அர்ச்சனை செய்தார். பின்னர் அங்கிருந்து பெங்களூர் புறப்பட்டு சென்றhர். ஒன்றிரண்டு வாரம் அவர் அங்கேயே தங்கி இருக்கிறhர்.

இதற்கிடையில் படத்தின் -ஒன்லைன்† எனப்படும் கதையின் கருவை இறுதி செய்யும் ஷங்கர் அதனை ரஜpனிக்கு தெரிவிக்கிறhர். இதைத்தொடர்ந்து பூiஜக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வழக்கமாக ஏவி.எம்.ஸ்டூடியோவில் உள்ள பழைய பிள்ளையார் கோவிலில்தான் ரஜpனியின் பட தொடக்க விழா நடக்கும். இப்படத்தின் தொடக்க விழா தற்போது ஏவி.எம்.ஸ்டூடியோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதுபிள்ளையார் கோவிலில் நடக்க உள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில் 22-ந் தேதி அல்லது 4வது வாரத்தில் 29-ந் தேதி பட தொடக்க விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#10
<b>ரஜினியின் சிவாஜி ஒரு மாவீரன் வாழ்க்கையை எதிரொலிக்கும் ஆக்ஷன் படம் </b>

ரஜினி ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதற்கு `சிவாஜி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷங்கர் இயக்குகிறார்.

-இது தான் இப்போது தமிழக ரசிகர்களிடம்.... இல்லை.... இல்லை... நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் செய்தி, `சந்திரமுகி'யின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ரஜினியின் புதிய படம் பற்றிய அறிவிப்பு சாதாரண மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினியின் புதிய படம் எப்படி இருக்கும்? ஷங்கர் இயக்குகிறார். ஏவி.எம். தயாரிக்கிறது. படத்துக்கு ஏன் `சிவாஜி' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கதை என்ன? எதை பிரமாண்டப்படுத்தப் போகிறார்கள்? ரஜினிக்கு கொடுக்கப்படும் வேடம் எப்படி இருக்கும்...? என்ற கேள்விகளுக்கு நாமும் விடை தேடி அலைந்தோம்... பதில்.... இதோ...

வழக்கமாக ஏவி.எம். நிறுவனம் தயாரிக்கும் படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் வகையில் அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இருக்கும். இதன் 60-வது ஆண்டில் தயாராகும் 168-வது படமாகவும், ரஜினி இந்த நிறுவனத்தில் நடிக்கும் 9-வது படமாகவும் `சிவாஜி' தயார் ஆகிறது.

எனவே இந்த படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று ஏவி.எம். நிறுவனம் விரும்புகிறது. அதற்கேற்ப கதையில் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஷங்கர் இயக்கும் படங்களில் படம் பார்ப்பவர்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்லுவார். `இந்தியன்', `முதல்வன்,' `அந்தியன்' படங்களில் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்கள் கூறப்பட்டன.

`சிவாஜி' படத்திலும் பொது மக்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். செய்யத் தவறினால் என்ன என்ன பாதிப்பு ஏற்படும் என்பது ரஜினி பாணியில் சொல்லப் படுகிறது.

ரஜினி `சந்திரமுகி' படத்தில் கதைக்காக நடித்தார். அவரது பாணி அதில் இடம் பெறவில்லை. சிவாஜி படத்திலும் மாறுபட்ட ஆக்ஷன் ஹீரோவாக ரஜினி நடிக்கிறார் என்றாலும் ரஜினி முத்திரைகளும் அறிவுரைகளும் இடம் பெறும் வகையில் கதை அமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மராட்டிய மன்னர் சிவாஜி மாபெரும் வீரன். நடிகர் திலகம் சிவாஜி உழைப்பால் உயர்ந்த தலைசிறந்த நடிகர். இந்த 2 அம்சங்களும் நிறைந்த சமூக சிந்தனையுள்ள மாவீரனாக ரஜினியின் சிவாஜி பாத்திரம் உருவாகிறது. சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள தன் மானம் மிக்க வீரன் ஒருவன் சமூகத்தின் நலனுக்காக பாடுபடுவதே `சிவாஜி' யின் கதை.

என்றாலும் இதை வழக்கமான பாணியில் சொல்லாமல் புதிய கோணத்தில் திரை வடிவமாக உருவாக்க ஷங்கர் திட்டமிட்டு உள்ளார். பிரமாண்டங்களும் உண்டு. பிரபலங்களும் உண்டு. அதற்கு ஏற்ப கதையில் பங்கேற்கும் அனைவருமே பிரபலங்களாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி ஜோடியாக நடிகை ஐஸ்வர்யாராயை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இசை இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் என்று கோடம்பாக்கம் வட்டாரங்கள் கூறுகின்றன.

சகல அம்சங்களும் கொண்ட வித்தியாசமான கதையை உருவாக்கும் வேலையில் ஷங்கர் இரவு பகலாக ஈடுபட்டுள்ளார். இதையடுத்து பொருத்தமான நடிகர், நடி கர்கள்,தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

`சிவாஜி' படம் விரைவாக தயார் ஆகி தமிழ்ப்புத்தாண்டில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
விடுப்பு :
<b> .. .. !!</b>
Reply
#11
ரஜனியின் புதிய திரைப்படமான சிவாஜி படம் பற்றி எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவராத மிக முக்கிய 15 தகவல்களை டன் புலனாய்வு குழு ரஜனிக்கே தெரியாமல் சுட்டிருக்கின்றது.. இதோ அவ் 15 முக்கிய தகவல்களும் உங்களின் பார்வைக்கு....

சிவாஜி படம் பற்றி டன் புலனாய்வு சுட்ட மிக முக்கிய தகவல்கள்...

தகவல்1 : சிவாஜி படம் எப்பவாவது ஒரு நாள் வரும்....

தகவல்2 : ரஜனி அதில் கட்டாயம் எதவது ஒரு வார்த்தை கதைப்பார்..

தகவல்3 : நிச்சயமாக குறைந்த பட்சம் 3 பாடல்களும், 1 பைட்டும், இருக்கும்..

தகவல் 4: நிச்சயமாக அந்த படத்தில் ஒரு முன்னனி ஹீரோயினும் முன்னனி காமெடியனும் முன்னனி வில்லனும் டைக்ரர் சொல்லுறபடி நடிப்பார்கள்...

தகவல் 5: நிச்சயமாக சிவாஜி படம் குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஓடும்..

தகவல் 6: முக்கிய படக்காட்சிகள் தமிழ் நாட்டிலே எடுப்பார்கள்...

தகவல் 7: ரஜனி வில்லனுகளை பந்தாடுபொழுது ஆ, ஊ அம்மா, கும், டுசும் எண்டெல்லாம் சத்தம் வரும்..

தகவல்8: ரஜனி ஹீரோயினோடு டூயட் சாங்க் பாடும்பொழுது ரஜனிக்கு ஆண் குரலும், ஹீரோயினுக்கு பெண் குரலும் குடுக்கப்படும்..

தகவல் 9: சிவாஜி படத்தை கட்டாயம் வீடியோ முலம்தான் படம் பிடிப்பார்கள்...

தகவல் 10: சிவாஜி படத்தில் ரஜனி ஜின்ஸ், சேட் அல்லது லுங்கி, அல்லது சோட்ஸ் அட்லீஸ் ஒரு ரவலைசுத்திக்கொண்டு தன்னும் வருவார்..

தகவல் 11: ரஜனி வில்லனுகளை அடிக்கும்பொழுது வில்லனுகள் பறந்து பறந்து நிலத்தில் தான் விழுவார்கள்..

தகவல் 12: சிவாஜி படத்தினை கட்டாயம் தியேட்டரில் 3 நேரக்காட்சிகளாக போடுவார்கள்.

தகவல் 13: சிவாஜி தமிழ் படத்தினை தமிழ் மக்கள் அட்லீஸ் 1 தடவை தன்னும் பார்ப்பார்கள்..

தகவல் 14: ரஜனி ரசிகர்கள் நிச்சயமாக மொட்டை அடித்து வாயிலை அலவாங்கு சா வேல் குத்தி காவடி எடுப்பார்கள்..

தகவல் 15: ரஜனி கண்டிப்பாக அடுத்தபடத்திலும் கமரா முன்னாடிதான் நடிப்பார்... Idea :wink:

நன்றி டன் புலனாய்.. Idea .
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அடடா எப்படி டண் ரஜனி ரசிகருக்கே தெரியாத விடயமெல்லாம் டக்கு டக்கு என்று சொல்லுறீங்கோ. சும்மா சொல்லக்கூடாது உங்களுக்கு அபார மூளை. :wink:
<b> .. .. !!</b>
Reply
#13
<b>டண்!.. அத்தியாவசிய தகவலுக்கு நண்றிகள்...</b>


மகாராஸ்டிரா காறர் ஆன கர்நாடகாவில் வளர்ந்த <b>சிவாஜி ராவ்</b> தானாம் இந்த ரஜனி உண்மையா?
::
Reply
#14
மகாராஸ்ட்டிராவை ஆட்சி செய்த மன்னன் ஒருவுனுடைய பெயர் கூட சிவாஜி....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#15
மகராஸ்டிர அரசனின் வீர சிவாஜி நாடகத்தில் திறமையாக நடித்தத்தை பாராட்டி பெரியாரால் வி.சி கணேசனக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர்தான் சிவாஜி கணேசன் எனற அழைக்கப்பட்டார்

ரஜனி என்ற சிவாஜிராவ் மராட்டிய இனத்தை சேர்ந்த கரநாடகத்தை சேர்ந்தவராகும் .

அடையாறு திரைபடகல்லாரிக்கு பார்ட் டைம் லெக்சர்ராக பாலசந்தர் செல்வதுண்டு அங்கு ரஜனி மாணவர்களோடு கதைத்து சிரிக்குமுறையயும் மெனரித்தைக்கண்ட பால சந்தர் அபூவராகங்கள் படத்தில் சிவாஜி ராவ் என்ற பெயரை ரஜனியாக மாறறி நடிக்க வைத்தார்
Reply
#16
நன்றிகள் குட்டி சின்ன குட்டி தகவல்களுக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#17
சிவாஜp†யில் ரஜpனியுடன் அமிதாப் முக்கிய வேடத்தில் நடிக்கிறhர், இந்தி மாநிலங்களிலும் திரையிட ஏற்பாடு
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ


அமிதாப் பச்சன்

சென்னை செப் 2- Nப்பர் ஸ்டார் ரஜpனி நடிக்கும் -சிவாஜp† படத்தை இந்தியா முழுவதும் திரையிட இருப்பதால் அதற்கு ஏற்ப இந்தி Nப்பர் ஸ்டார் அபிதாப்பை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தி மாநிலங்களில்„-ரஜpனியின் படங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் தென்னிந்திய மக்கள் வாழும் பகுதியில் திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் திரையிடப்படுவது இல்லை. தற்போது தயாhpக்கப்பட இருக்கும் -சிவாஜp† படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்து இந்தி பேசும் மாநிலங்களிலும் திரையிட முடிவு செய்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான்„-ஒரு படம் இந்தி பேசும் மாநிலங்களில் வெற்றிபெற வேண்டும் என்றhல் சில இந்தி முகங்கள் படத்தில் இடம்பெற வேண்டும். அதனால்தான் ரஜpனிக்கு nஜhடியாக தற்போது இந்தியின் முன்னணி நடிகையாக இருக்கும் ராணி முகர்ஜpயை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதேபோன்று -சிவாஜp[†க்கு இசை அமைக்கவிருக்கும் ஏ.ஆர்.ரகுமான் இந்தியா முழுவதும் அறிந்த இசை அமைப்பாளர். தற்போது வெளிவந்துள்ள -மங்கள் பாண்டே† படம் ரகுமானின் இசைக்காகவே நன்றhக ஓடுவதாக கூறுகிறhர்கள்.

இயக்குனர் ஷங்கரும் இந்தி மாநிலங்களில் ஓரளவுக்கு அறிமுகமானவர். இவர் தமிழில் இயக்கிய -முதல்வன்† படத்தை -நாயக்† என்ற பெயாpல் இந்தியில் இயக்கியவர். Nப்பர் ஸ்டார் ரஜpனி இந்தியில் 20-க்கும் மேற்பட்;ட படங்களில் நடித்து நன்கு அறிமுகமானவர்.

நண்பர்கள்„-இந்த வாpசையில் இப்போது இந்தி Nப்பர் ஸ்டார் அமிதாப்பும் சேர்ந்திருக்கிறhர். அமிதாப்பும், ரஜpனியும் பல இந்தி படங்களில் இணைந்து நடித்திருக்கிறhர்கள். இருவரும் நல்ல நண்பர்கள். ரஜனி மகள் திருமணத்தில் கூட அமிதாப் நோpல் வாழ்த்தினார். தற்போது அமிதாப்பும் ரஜpனியுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதனால் -சிவாஜp† படத்தின் இந்தி மொழிமாற்றத்துக்கு ஏதுவாக அவரை இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-சிவாஜp† படம் தமிழில் தயாhpக்கப்பட்டாலும் அதனை ஒரு இந்திய படமாக உருவாக்குவதில் தயாhpப்பு நிறுவனமும், ரஜpனியும் ஆர்வமாக உள்ளனர்.
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#18
ரஜினிக்கு நம்ம ஊர் ஹீரோயின் இல்லை... பாலிவுட்டில் இருந்து வருகிறார் ஆயிஷா
ஏவி.எம். பட நிறுவனத் தயாரிப்பில் ரஜினி ஷங்கர் இணையும் …சிவாஜி படத்தில் ரஜினியின் ஜொடியாக பாலிவுட்டின் இளம் கதாநாயகி ஆயிஷாதாகியா நடிக்கப் போவது உறுதியாகிவிட்டது.

ரஜினிகாந்த் நடித்த …சந்திரமுகி திரைப்படம் அமோக வெற்றி பெற்று வெள்ளி விழாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. அதே டே;டோடு ரஜினி அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஏவி.எம். பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் முதல் முறையாக டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு …சிவாஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஏவி.எம்.-ரஜினி- ஷங்கர் மூவர் கூட்டணி உறுதியான நிலையில் …சிவாஜியில் ரஜினியின் ஜொடி யார்? என்பது முடிவாகாமல் இருந்தது. பாலிவுட் அழகி ஐஸ்வர்யாராய் முதல் ராணி முகர்ஜி திரிஷா என பலரது பெயர்கள் யூகங்களாக வெளியாகின. ஆனால் மூவர் கூட்டணியில் யாரும் இதுபற்றி வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் ஹாலிவுட் படங்கள் உட்பட ஐஸ்வர்யாராய்க்கு அடுத்தஓராண்டுக்கு கால்ஷீட் தேதிகளே இல்லை என்பதால் ஷங்கரின் வற் புறுத்தலுக்கு அவர் விரும்பினாலும் ரஜினிக்கு ஜொடி சேர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே ஐஸ்வர்யாராயை அழைக்கும் முடிவைக் கைவிட்ட டைரக்டர் ஷங்கர் மும்பையில் வேறொரு சரியான ஜொடியை ரஜினிக்காக தேடுவதில் கடந்த சில நாட்களாக தீவிரம் காட்டி வந்தார். அதில் இப்போது ஷங்கர் வெற்றி பெற்றுவிட்டதாக மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன. …சிவாஜியில் ரஜினிக்கு ஜொடியாக நடிக்க ஷங்கர் தேர்ந்தெடுத்துள்ள நடிகை ஆயிஷா தாகியா பாலிவுட்;டில் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகை. ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம் பிடித்து வரும் ஆயிஷா இந்தியில் ஒரு படத்துக்கு ரூ.50 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.

சிவாஜியில் ரஜினிக்கு ஜொடியாக நடிக்குமாறு ஆயிஷாவிடம் ஷங்கர் கேட்டுள்ளார். தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனாவுக்கு ஜொடியாக நடிக்க அழைப்பு வந்தபோது அதை மறுத்தவர் ஆயிஷா. இருப்பினும் பே;பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜொடி என்றதும் டைரக்டர் ஷங்கரிடம் ஓகே சொல்லிவிட் டாராம். இதையடுத்து ஆயிஷா விரைவில் சென்னை வருவார் என்றும் மும்பையில் பாலிவுட் வட்டாரங்கள் நேற்று உறுதியாகத் தெரிவித்தன.

சந்திரமுகியில் ரஜனிக்கு புதுமுகம் நயன்தாராவை அறிமுகம் செய்ததில் படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுபோல சிவாஜியில் ரஜினி-ஆயிஷா ஜொடியும் பெரும் ஆதரவைப்பெறும் என்று ஷங்கரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் நடிகை ஆயிஷா தாகியாவை விரைவில் தமிழ் ரசிகர்களும் தரிசித்து வரவேற்கலாம்
dinakaran.com
விடுப்பு : .
11 Sep 2005
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)