08-19-2005, 06:40 PM
;சிறீலங்கா அரசிற்கு சிங்கள இனவாதக் கட்சியான ஜேவிபி மீண்டும் ஆதரவை வழங்க இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை இழந்திருந்த அரசிற்கு ஜேவிபியின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் தலைமையில் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியயோர் இந்த முயற்ச்சிகளில் ஈடுபட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது
கதிர்காமர் கொல்லப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்னர் சுதந்திர கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளரான தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சவிற்கும் ஜே.வி.பியினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது மகிந்;த ராஜபக்சவிற்கான தமது ஆதரவை ஜே.வி.பி உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பினை லக்ஸ்மன் கதிர்காமரே ஏற்பாடு செய்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ஜே.வி.பியினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த முயற்சிகள்; குறித்து அரசுத் தலைவர் சந்திரிகாவி;ற்கு தெரியப் படுத்தப்படாமல் இரகசியம் பேணப்பட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது
இதனை தொடர்ந்தே அரசுத் தலைவர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கதிர்காமரின் படுகொலையின் பின்னணயில் உள் வீட்டு சதி இடம்பெற்றிருக்கலாம் என்பது குறித்து பலமான சந்தேகம் எழுவதற்கு இந்த நடவடிக்கைகளே காரணம் என்று புலனாய்வு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சுட்டது சங்கதியிலிருந்து

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]