08-18-2005, 09:38 PM
இலங்கையில் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களின் படுகொலையை அடுத்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலைப் பிரகடனத்தை ஒரு மாதகாலத்துக்கு நீடிக்கும் தீர்மானத்தை இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் 124 பேர் இந்த நீட்டிப்பு பிரேரணைக்கு ஆதரவாகவும், 21 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
எதிர்க்கட்சியான் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்களுடனும் சேர்ந்து தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மலையகக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகியனவும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்கள், மேல் மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதை எதிர்த்து வாக்களித்தனர்.
தடைபட்டுப் போயுள்ள சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்த அவசரகாலச்சட்டம் பாதிப்பாக அமையும் என்றும், ஏற்கனவே அமுலில் உள்ள யுத்த நிறுத்த உடன்பாட்டை அது பலவீனப்படுத்தும் என்றும் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள், அதனாலேயே தமது கட்சி அதனை எதிர்த்து வாக்களித்ததாகக் கூறுகிறார்.
அதேவேளை நாட்டில் பல இடங்களிலும் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் அதனை கட்டுப்படுத்த உதவுமுகமாகவே தாம் இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும், ஆனால் இதனைத் தொடர்ந்து நீடிக்க முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான மயோன் முஸ்தபா கூறியுள்ளார்.