Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
[/size]அம்மா[size=12]
அம்மா என்காத உயிர் இல்லையே
அவள் இல்லையேல் வாழ்வு தொல்லையே!
எம் தொல்லை என்றும் பொறுத்திருப்பாள்
எம்மை கண் இமைபோன்று காத்திருப்பாள்!
எம்மை காக்க அரும்பாடுபட்டாள்
எம்மை சான்றோனாக்க பெரும்பாடுபட்டாள்!
திட்டிப்பேசினாலும் வட்டிலில் சோறு வைப்பாள்
நாம் பட்டினி கிடந்தால் மனம் துடித்திருப்பாள்!
எம்மை காக்க இரவினில் விழித்திருப்பாள்
எமக்காகவே உயிர் கொடுத்திருப்பாள்!
தன் வயிறு பசித்திருந்து எம் வயிறு புசிக்க
தன் உணவு சேர்த்து எம் வட்டிலில் போட்டு!
நாம் உண்ணும் அழகு கண்டு
தான் திருப்தி கொண்டு உள்ளம் களித்திருப்பாள்!
தன் உயிர் கொடுத்து
எம் உயிர் வளர்த்தாள் அன்னை!
அவள்தான் நான் உலகில் வந்து
கண்ட முதல் தெய்வம்.
.
.
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
பிருந்தன்அண்ணா உங்கள் தாய்க்காக வடித்த கவிதை நல்லாய்ருக்கு நன்றி
-------------
jothika
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
நன்றாய் உள்ளது
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இது ஒரு காலத்துக்கு முந்திய அம்மாக்களுக்குத் தான் பொருந்தும்...இப்ப அம்மாக்கள் ரெம்ப பிசி.... நீங்க கெயார் சென்ரரிலதான் உதுகளக் காண வேணும்...! அதுபோக இப்ப உணவைக் கொடுத்திட்டு ரசிக்கிற அளவில அவைக்கு பொறுமை நிதானம் புரிந்துணர்வு இல்ல...கெதியா திண்ணு...ரெலி சீரியல் தொடங்கப் போகுது இல்ல இன்ரெநெட்டில டேட்டிங்க என்று துடிக்கும் அம்மாக்களும்...வங்கியில கடன் எடுத்து அது கட்ட வேலைக்கு ஓடி ஓடி தேய்ந்து போன அப்பாக்களும் அம்மாக்களும்...விரக்தியில பெற்ற பிள்ளையை கொல்லும் அம்மாக்களும்...பெறாமலே அழிக்கும் விசித்திரப் பிறவிகளும் என்று உலகம் ரெம்ப மாறிட்டு...! ஆனா என்ன...நம்ம பறவைகள் மாறவே இல்லை...அதே அன்பு பாசத்தோட இருக்குதுகள்...! உலகம் மாறினதா..மனிசன் மாறிட்டு..மாத்திட்டு...உலகம் மாறினது என்றான் போல...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எனிவே...உங்க கவிதை அம்மாவை நினைக்க வைச்சுது...நன்றி..! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை நல்லா இருக்கு.. தொடர்ந்து எழுதுங்கள்...
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
அம்மாவுக்காய்
அருமையாய் கவி எழுதிய
புதுவுறவு பிருந்தனுக்கு
நன்றி சொல்லி......
வாழ்த்துவதோடு...
நீங்கள் உங்கள் அம்மாவக்காய் எழுதிய கவிதையாய் இருந்தால் நிச்சயம் என்னால் கருத்து சொல்ல முடியாது..ஆனால் பொது வாக எழுதியிருந்தால்........குருவிகளின் கருத்தே எனதும்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
அம்மாக்காக எழுதிய கவி அருமை. தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்க:ள்
<b> .. .. !!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இது ஒரு காலத்துக்கு முந்திய அம்மாக்களுக்குத் தான் பொருந்தும்...இப்ப அம்மாக்கள் ரெம்ப பிசி.... நீங்க கெயார் சென்ரரிலதான் உதுகளக் காண வேணும்...! அதுபோக இப்ப உணவைக் கொடுத்திட்டு ரசிக்கிற அளவில அவைக்கு பொறுமை நிதானம் புரிந்துணர்வு இல்ல...கெதியா திண்ணு...ரெலி சீரியல் தொடங்கப் போகுது இல்ல இன்ரெநெட்டில டேட்டிங்க என்று துடிக்கும் அம்மாக்களும்...வங்கியில கடன் எடுத்து அது கட்ட வேலைக்கு ஓடி ஓடி தேய்ந்து போன அப்பாக்களும் அம்மாக்களும்...விரக்தியில பெற்ற பிள்ளையை கொல்லும் அம்மாக்களும்...பெறாமலே அழிக்கும் விசித்திரப் பிறவிகளும் என்று உலகம் ரெம்ப மாறிட்டு...! ஆனா என்ன...நம்ம பறவைகள் மாறவே இல்லை...அதே அன்பு பாசத்தோட இருக்குதுகள்...! உலகம் மாறினதா..மனிசன் மாறிட்டு..மாத்திட்டு...உலகம் மாறினது என்றான் போல...!
அநுபவம் போல ஆசான் உண்டா என்ன?? சிலர் காணுறது பாக்கிறது எல்லாம் உந்தக்கேசு போலான் கிடக்கு. :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,542
Threads: 15
Joined: May 2005
Reputation:
0
கவிதை நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள் பிருந்தன் அண்ணா..
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
லிபரேஷன் ஒப்பரேஷன்
வீதி எங்கும் சடலம்
எத்தனை போர் எடுப்பு படலம்!
உருண்டு செல்லும் தலைகள்
பிணங்களால் எத்தனை மலைகள்!
தனித்தனியாக எத்தனை கைகால்கள் தெரியும்
இது யார் யாருடையது என்று எங்குபுரியும்!
சிதறிய கண் துடிக்குது
அது யாரை எண்ணி ரத்தம் வடிக்குது!
எங்கும் ஈயக்குண்டின் ரீங்காரம்
எத்தனை உடல்களை துளையிட்டு செல்லும் சிங்காரம்!
திடீர் திடீரென பெரும் இடிகள்
இவைகள் நம்மை நோக்கிவரும் பீரங்கிவெடிகள்!
விமானங்கள் கூட போடுது குண்டு
எம் தலைகளை சரியாகக் கண்டு!
எதற்கு இந்த வெறி ஆட்டம்
பிணங்களின் மணமோ தாங்கவில்லை நாற்றம்!
எமது மண்ணை தனதாக்க
நடக்குது யுத்தம்!
இவர்களுக்கு மண்பறிப்புப் போராட்டம்
எமக்கு மரனப்போராட்டம்.
.
.
Posts: 1,660
Threads: 21
Joined: Jul 2005
Reputation:
0
நீங்கள் ரொம்ப நல்லா கவிதை எழுதுரீங்க பிருந்தன்அண்ணா...
..
....
..!
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
நல்லாயிக்கு பிருந்தன்அண்ணா உங்கள் சொந்த கவிதையா ?
.........................
jothikaaaaa
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
சொந்த கவிதை மட்டும் அல்ல சொந்த கதையும் கூட,அந்த நேரத்தில் நானும் அதில் மாட்டுப்பட்டேன்.அந்த அவலங்களை நேராக கண்டேன்.
.
.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
நல்ல கவிதை மேலும் எழுதுங்கள்,மேலும் வாசியுங்கள்.
வாழ்த்துக்கள் பிருந்தன்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
பிருந்தன் கவிதைகள் நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்க
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>