Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் எச்சில் போர்வை
#1
அஜீவனின் எச்சில் போர்வை மிகவிரைவில் உங்கள் பார்வைக்கு யாழ்இணையத்தினூடாக வருகிறது.

நாம் இரண்டுஅளவுகளில் இந்தபடத்தை இணையத்தில் விடவுள்ளோம்
->வேகம் குறைந்த இணையஇணைப்பு உள்ளவர்கள்
-->வேகம் கூடிய இணையஇணைப்பு உள்ளவர்கள்

வேகம் கூடிய இணைப்பில் உள்ளவர்களுக்காக தயாரிக்கபடம் VCD தரத்தில் உள்ளது

எனவே உங்கள் கணணியில் அதை இறக்கி பார்ப்பதே நல்லது
சில கணணிகளில் இறக்காமலே தானகவே
online இல் படம் வந்துவிடும்.
online இல்பார்க்காமல் கணணியில் இறக்கி எப்படி offline இல் பார்ப்பது என்பது பற்றிய விளக்கங்களுடன் மிகவிரைவில்
Reply
#2
இது ஒரு நல்ல ஆரம்பம்
Reply
#3
[Image: Meoclub_16_Standard.jpg]
<span style='font-size:25pt;line-height:100%'>எச்சில் போர்வை</span>
குறும்படத்தை இணையத்தில் கொண்டு வரும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது நன்றிகள்.

இக் குறும்படம் 1997ம் ஆண்டு பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழக குறும்படப் போட்டியில் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது.

இதுபோல் ஏனைய புலம் பெயர் கலைஞர்களது குறும்படங்களையும் யாழ் இணைய வழி பார்ப்பதற்கு , ஏனைய புலம் பெயர் கலைஞர்களும் அனுப்புங்கள்.இதுவே
யாழ் சொன்னது போல் நல்லதொரு ஆரம்பம்தான்.

நன்றிகள்...............

அன்புடன்
-அஜீவன்

[scroll:cd9b90cf8f][size=15] film maker's job is therefor to present us with the sense of the society within which a story functions............ - ajeevan
Reply
#4
ஆரம்பம் நல்ல வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு .......எம்மவர்களது படைப்புக்களை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#5
அஜீவனின் எச்சில் போர்வையை கீழே உள்ள இணைப்பிலிருந்து உங்கள் கணணிக்கு இறக்கி கொள்ளலாம்.
25 MB அளவுவுள்ள video file ,
divx முறையில் தயாரிக்கபட்ட asf file

இதை Download Accelerator Plus மூலம் வேகமாக இறக்கலாம் அதே போல்
56kb உள்ளவர்கள் ஒரு சிறுது நேரம் தான் ஒன்லைனில் இருப்பது எனில் கூட இந்த மென்பொருள் மூலம் இன்று ஒரு சிறு அளவையும் மிகுதியை நாளையும் கூட இறக்கலாம்
ஆனால் முழுவதையும் இறக்கியபின்பு தான் படத்தை பார்க்கலாம்.

எச்சில் போர்வையை இறக்குவதற்கு முன்
Download Accelerator Plus இறக்கி உங்கள் கணணியில் இயங்கவிடுங்கள்.

பின்
<img src='http://www.speedbit.com/help/IMAGES/Main-Screen.gif' border='0' alt='user posted image'>
அதில் Add url என்பதை சொடுக்கவும்
அப்போது <img src='http://www.speedbit.com/help/images/addurl.gif' border='0' alt='user posted image'>
இப்படி வரும்

எச்சில் போர்வையின் இணைப்பான
http://home.no.net/yarl/alien_viel.asf
என்பதை தெரிவு செய்து copy பண்ணி பின்
இதற்குள் paste செய்யவும்
<img src='http://www.speedbit.com/help/images/addurl.gif' border='0' alt='user posted image'>
பின் ok யை சொடுக்குங்கள்
வேகம் கூடிய இணைய இணைப்பு எனில் சில நிமிடங்கில் உங்கள் கணணியில் video file இறங்கிவிடும்
வேகம் குறைந்தது எனில் கொஞசம் நேரம் பிடிக்கலாம்.
பொறுத்திருக்க நேரமில்லை எனில்


<img src='http://www.speedbit.com/help/IMAGES/Download-Screen.gif' border='0' alt='user posted image'>

Pause சொடுக்கி தற்காலிகமாக நிறுத்திவிடலாம்.
கணணியை நிறுத்திவிட்டு மீண்டும் நாளை மிகுதியை
<img src='http://www.speedbit.com/help/IMAGES/ResumeDLS.gif' border='0' alt='user posted image'>

Resume என்பதை சொடுக்கி தொடரலாம்.
Reply
#6
படம் பார்த்தவர்கள் எதுவும் கூறவில்லையோ??????
Reply
#7
அஜீவன் அண்ணையின்ர படம் பார்த்தன் தென்னிந்திய படங்களுக்கு சளைக்காதவர் என்று காட்டிவிட்டார்..
ஒரே ஒரு குறை Cry படம் 10 நிமிடத்தில முடிஞ்சுபோச்சுது....ஆவலாக கதிரையைப் போட்டு இருந்து பார்த்தா இப்பிடி ஏமாத்திட்டாரே Cry
ஒரு முழுநீளப் படம் எடுக்கலாமே அண்ணை...நிச்சயம் வெற்றிபெறும்!
Reply
#8
அருமை. நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் யாழ் இணைய திரைப்படக்குழுவிற்கு
[b] ?
Reply
#9
ஒரு சண்டைக்காட்சி,ஒரு தொப்புள்காட்சி,ஒரு மரத்தோடு மரதன் காட்சி,தாரை தப்பட்டை அதனிள் அமுங்கும் ஈனககுரல் பாடல் காட்சி
யாவுமின்றி மிக இயற்கையாக
ஒரு படத்தை தந்துள்ள திரு அஜீவன் பாராட்டப்படக்கூடியவர் மட்டுமல்ல.மற்றைய புல தாயக தொப்புள்கொடி உறவுகளுக்கும் முன்மாதிரியாக விளங்கக்கூடியவர்
விளங்குவார் என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

இனி படம் பற்றிய ஒரு சிறு விளக்கம்.
கதைக்கான கரு அற்புதமான கரு
கம்பவாரிதி பார்க்கவேண்டிய கரு

இந்தப்படத்தின வெற்றி இந்தப்படத்தை நாம் எப்படி மற்றைய ஊடகங்களுக்கு
அறிமுகப்படுத்தப்போகிறோம் என்பதிலிருக்கிறது.
Reply
#10
படம் நன்றாக....பாராட்டக் கூடியதாக இருக்கின்றது.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Reply
#11
ஒரு படைப்பாளியின் ஆதங்கமெல்லாம் தன் திறமையை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பதுதான்.

அதே நேரம் வெளிக்கொண்டுவரப்படும் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பிரசவம் தான்.பிரசவ வேதனை தான் அதனை உருவாக்குவென்பது.

அந்த வகையில் அஜீவனின் பிரசவமான எச்சில் போர்வை இலட்சிய வெறியோடு பிறந்த குழந்தை போன்று இனிய முகத்துடன் காணப்படுவது போன்று உணரப்படுகிறது.

வாழ்த்துக்கள் அஜீவன் மற்றும் யாழ் இணையத்தாருக்கும்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#12
எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு அண்மையில் குடும்பமாக சென்றிருந்தோம். உண்மையில் எனக்கு உந்த சினிமா பற்றியதான ஆர்வம் இல்லாததால் அவற்றின் நுணுக்கங்கள் தெரியாது. அஐPவனின் குறும்படங்கள் பற்றிய பேச்சு வந்தது. அஐPவனின் கமறா நுணுக்கங்கள் பற்றி நிறைய வாயுூறிச் சொன்னார். பாத்துக்கொண்டே இருக்கலாம் நல்ல ஒரு கலைஞன் ஒளியமைப்பு இந்திய பாலச்சந்தரின் அளவுக்கு. அதுக்கும் மேல் இப்படி எல்லாம் நிறைய சத்தியமாக எனக்கு இவை பற்றி தெரியாததால் என்னால் அவரோடு பெரிதாக கதைக்க முடியாமல் போய் விட்டது. அவர் கதைக்க நாம் கேட்டுக்கொண்டிருந்தோம்: அஐPவனால் இன்னும் நல்ல பல எழுத்தாளரை அணுகி இவற்றை விட நல்ல கருவை கொண்டு வந்தால் இன்னும் பேசப்படுவார். அவரால் கொண்டு வரப்பட்ட குறும்படங்களை விட இன்னும் நன்றாக செய்யலாம் எனவும் கூறினார்.நல்ல ஊக்கமுடைய ஒரு படைப்பாற்றல் கொண்டவர். என கூறி முடித்தார்கள். (முடிவாக வீடியோ கமறாவை மிக நுணுக்கமாக கையாளக் கூடிய வல்லமை பொருந்தியவர் என்பதாகும்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#13
பாராட்டிய
அனைத்து உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
ஒரு கலைஞன் வாழ்வதும் வீழ்வதும் உண்மையுள்ளங்களின் பாராட்டினால்தான் என்பதை மனம் திறந்து சொல்லியே ஆக வேண்டும்.

இவ் வேளையில் எச்சில் போர்வையில் பணியாற்றிய, என்னோடு தோளோடு தோள் நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். நீங்களெல்லலாம் என்னோடு இல்லாவிடில் என் பெயர் வெளியே வர வாய்ப்பேயில்லை.

அக்கால கட்டத்தில் என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கும்,நண்பர்களுக்கும் நன்றி.

யாழ் இணைய நண்பர்களுக்கும் அதே போன்ற நன்றிகளே...........................
தொடரும்.................
அதுவரை
பணிவன்புடன்,
அஜீவன்
Reply
#14
அஜீவனின் எச்சில் போர்வை ஒளிபரப்பாகிய அத்தனை நிமிடத்துளிகளிலும் ஏதோ ஒர் எதிர்பார்ப்புதான்…. கதாபாத்திரத்திற்குள் தெரிகிறது.
எடுத்துக்கொள்ளப்பட்ட கரு அகதியின் நிலை.
ஊரிலிருந்து வந்த கடிதத்தின் வரிகள் ....அவை மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்ற.....அதை வெளிப்படுத்துகின்ற விதம்…. உண்மையில் என்னை ஒருகணம் தாயகத்திற்கு அழைத்துச்செல்கிறது.

வெட்டிய மரத்துக்கு மேல் இருந்துகொண்டு இருகைகளால் முகத்தை மூடிக்கொள்வதும் மூக்கை சீறித்துடைப்பதும் நடைமுறை வாழ்க்கையின் யதார்த்தங்களாக பிரதிபலிக்கின்றது.
மரங்களுக்கிடையே கமராவை கொண்டு செல்வதில்.....அஜீவனின் கைவண்ணம் அங்கே…..பரிணமிக்கின்றது.
கமராவை கையாளும் முறை நேர்த்தியாக அமைந்திருக்கிறது.
மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு...மேலும் பல குறும்படங்களைத்தர வேண்டும் என்று கூறிக்கொண்டு விடைபெற்றுக்கொள்கிறேன்.

நட்புடன்.
தமிழ்செல்லம்.
Reply
#15
கருத்துத்தெரிவித்த அனைவருக்கும் நன்றி
அஜீவனின் மற்iறைய படமான நிழல்யுத்தம் மிகவிரைவில் வரவுள்ளது.
அந்த இணைப்பு வரும்போது இந்த இணைப்பை நிறுத்திவிடவேண்டிய கட்டாயம்
எனவே படத்தை இறக்காதவர்கள் இறக்கிகொள்ளுங்கள்
Reply
#16
எச்சில் போர்வை ஒரு ஈரவிதை....வாழ்த்துக்கள் அஜீவன் மற்றும் அனைத்துத்துறை கலைஞர்களுக்கும்..குறிப்பாக குறும்படத்தின் கதையோட்டத்துடன் ஒன்றித்து கதைகே உருக்கொடுத்த நடிகருக்கு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
ஏற்கெனவே இங்கு நான் தந்திருந்த
[url=http://www.yarl.com/articles.php?articleId=295][b]எனது பார்வை
Nadpudan
Chandravathanaa
Reply
#18
அ.ஜீவன் அண்ணாவின் "எச்சில் போர்வை" குறும்படம் [b]தெளிவாக இருக்கிறது.

ஒளிப்பதிவு,
காட்சியமைப்பு,
கருப்பொருள்,

எல்லாம்
தெளிவு!

நன்று
அ.ஜீவன் அண்ணா!

நன்றி
மோகன் அண்ணா!


Reply
#19
சந்திரவதனா அக்கா இணைத்த அந்த தொடுப்பு ஒன்று அஜீவன் அண்ணாவின் திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக அமையும்.

Quote:ஏற்கெனவே இங்கு நான் குறிப்பிட்ட
எனது பார்வை
[b] ?
Reply
#20
எனக்கு கலைகளைச் சுவைக்கவே தெரியும் (அதுவும் நுணுக்கமின்றியே ) :mrgreen: . ஒரு பார்வையாளன் என்ற கோணத்தில், 'எச்சிற் போர்வை' என்ற அயீவன் அவர்களின் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. தலை நடிகர் பேசாமலே ஒரு அகதியின் அவலங்களை படமே முழுமையாச் சொல்லியது. தொலைபேசியில் பேசியவர் சற்றுத் தெளிவாகவும், கோயில் மணி அடிக்கும் போழ்து அது மட்டும் தெளிவாக இருந்திருந்தால் (பின்னணி இரைச்சலின்றி)மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
அதோடு அந்த ஆளேற்றியினுள் () நிகழ்ந்த கலந்துரையாடலின் தேவை என்ன? காட்டினுள் வந்த காட்சியில், அந்த அகதிகளின் ஓலம் சற்று பிசகப் பின்னப்பட்டது போல் தெரிகிறது. சற்று இரைச்சல்களைக் குறைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மற்றும் படி அந்தது துப்பாக்கிச் சூட்டொல்லிகள் அவரின் கடந்த கால அவல நிலைகளை மீட்டிருக்கின்றன. தலைப்பாத்திரந்டின் வேதனைகளை பார்வையாளர்கள் நன்கு உணரும் படி இருந்தந்து. அயீவன், இளங்கோ, யாழ் இணையப் பொறுப்பாளர்கள் யாவர்க்கும் மிக்க நன்றி.

பி.கு.: காலம் நீட்டித்தலால் காலம் தாழ்த்தி நன்றி நவின்றமைக்கு எனது வருத்தத்தைத் தெரிவிக்கிறேன்.

-
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)