Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"கதிர்காமர்" சுட்டுக் கொலை
#61
<b>சினைப்பர் சுடுகலன் மீட்பு!
தேடுதல் தொடர்கின்றது!</b>

அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைச் சுட் டுக் கொன்ற கொலையாளிகளைக் கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைப் பொலீஸார் நாடியிருக்கின்றனர்.
தலைநகரிலும் நகரை அண்டிய பகுதிகளி லும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற் குத் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் அதேவேளை சந்தேக நபர் கள் தொடர்பாகத் தகவல் கிடைத்தால் அரு கில் உள்ள பொலீஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டிருக் கின்றனர்.
இது தொடர்பாகப் பொலீஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்திருப்பதா வது:
இச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்துக்கு இடமானவர்களிடம் விசாரணைகள் நடத்தப் பட்டு வருகின்றன.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் கடும் சோதனைக்குள்ளாகியிருகிறது. மோப்பநாய் களைக் கொண்டு சோதனை நடத்தியதன் மூலம் கைவிரல் அடையாளங்கள் கண்டு பிடிக் கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் தொடர்பாகத் தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அறிவியுங்கள்.
கொலையாளிகளைத் தேடி வெள்ளி இரவு ஆரம்பமான தேடுதல்கள் இன்னும் தொடர் கின்றன. கொழும்பு நகரை மையமாகக் கொண்டே இந்தத் தேடுதல்கள் நடைபெறுகின்றன.
அரசுத் தலைவரினால் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் முக்கிய கார ணங்கள் இல்லாமல் கொழும்பு நகருக்குள் எவரும் உள்நுழைய வேண்டாம் எனப் பாது காப்புத் தரப்பினர் பொதுமக்களுக்கு அறி வித்துள்ளனர்.
அமைச்சர் கதிர்காமரைக் கொலை செய் வதற்காக உள்நுழைந்த குழுவினர் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் சினைப்பர் சுடு கலன் ஒன்று வீடு ஒன்றிற்கு அருகில் இருந்து நேற்றுக்காலை பொலீஸாரால் மீட்கப்பட்டுள் ளது.
இதேவேளை கதிர்காமரின் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள னர்.
இவர்களில் ஒருவர் அயல் வீட்டைச் சேர்ந் தவர். ஏனைய இருவர்களும் வீட்டின் சுற் றுப் புறத்தில் வசித்தவர்கள்.
பொலீஸார் முழு வீச்சுடன் இந்த விசார ணைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, எமக்குப் பொதுமக்களின் உதவி தேவை. பொது மக் கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். தமது தனிப்பட்ட வெறுப்புக்களை வைத்து எவரையும் கைது செய்விக்க முய லாமல் பொதுமக்கள் பொறுப்புடன் செயல் பட வேண்டும். அத்துடன் சந்தேக நபர்கள் இன்னமும் அருகிலேயே உள்ளனர். கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் குறிப்பாக கொழும்பு தெற்குப் பிரதேசத்திலேயே இவர் கள் ஒளிந்திருக்கலாம் என்று தெரிவித்தார்.
Reply
#62
<img src='http://img362.imageshack.us/img362/2570/untitled8so.jpg' border='0' alt='user posted image'>
Reply
#63
<img src='http://www.eelampage.com/d/p/2005AUGUST/20050814001.jpg' border='0' alt='user posted image'>
கிராபிக்ஸ் படம்: சண்டே ரைம்ஸ் வார இதழ்

புதினம்
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#64
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/August/14/F-4.jpg' border='0' alt='user posted image'>


Arrow சினைப்பர் தாக்குதலில் உயிரிழந்த வெளி நாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரது பூதவுடல் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறீர்கள்.
Reply
#65
காப்பாற்றுமாறு கண்ணீர்விட்டு டாக்டர்களிடம் மன்றாடிய ஜனாதிபதி

சினைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கதிர்காமருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது அங்கு சென்ற ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க கதிர்காமரின் உயிரைக் காப்பாற்றுமாறு அழுது கேட்டுக்கொண்டதாக பிரதி அமைச்சர் ஒருவர் நேற்று சனிக்கிழமை தெரிவித்தார்.

மருத்துவ நிபுணர்கள் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த வேளை திருமதி குமாரதுங்க கண்ணீர்விட்டு அழுததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்தப் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#66
பாதுகாப்பு ஓட்டையை இனங்கண்டு செயற்பட்ட துப்பாக்கிதாரிகள்

<b>அமைச்சர் கதிர்காமரின் கொலையால் பேரதிர்ச்சியடைந்துள்ள படையினர்</b>

வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு அடுத்தபடியாக அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த கதிர்காமர் அவரது வீட்டில் வைத்து சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டமை, அவரது பாதுகாப்பு ஏற்பாட்டில் பாரிய ஓட்டையிருந்ததை அப்பட்டமாக்கியுள்ளது.



வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டது முதல் கதிர்காமர் இலங்கை அரசுக்காக அளப்பரிய சேவையாற்றியுள்ளார். அவரது ஒவ்வொரு செயற்பாடும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்த அதேநேரம் சிங்களவர்கள் மத்தியில் இது அவருக்குப் பெரும் புகழைத் தேடிக்கொடுத்தது.

இதனால் நாளுக்கு நாள் அவரது முக்கியத்துவம் தென்பகுதியில் உணரப்பட்டு அதற்கேற்ப அவரது பாதுகாப்பும் பலமடங்காக அதிகரிக்கப்பட்டது.

அமைச்சர் கதிர்காமரின் கொலைக்கு இதுவரை எவருமே உரிமை கோராத போதிலும் விடுதலைப் புலிகளே இந்தக் கொலையைச் செய்ததாக அரசும், பொலிஸ் தரப்பும் கூறுகின்றன. புலிகளைத் தவிர இந்தக் கொலையை வேறு எவரும் செய்திருக்க மாட்டார்களென்றும் செய்யவேண்டிய தேவையில்லை எனவும் இவர்கள் வாதிடுகின்றனர்.

சம்பவம் நடைபெற்றதை அறிந்த உடனேயே, தனது பாதுகாப்பைப் பற்றியும் கருதாது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு காரில் வந்துள்ளார். அந்தளவிற்கு இந்தச் செய்தி ஜனாதிபதியை நிலைகுலையச் செய்தது. கதிர்காமரின் இழப்பானது, ஜனாதிபதியை பொறுத்தவரை ஈடிணையற்றது. அந்தளவிற்கு கதிர்காமர் ஜனாதிபதிக்கு விசுவாசமாகவும் தனது இனத்திற்கு எதிராகவும் செயற்பட்டிருந்தார்.

அமைச்சர் கதிர்காமரின் கொலையை அடுத்து, வடக்கு - கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டன. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான `ஏ-9' பாதைகூட நேற்றுச் சனிக்கிழமை நண்பகல் வரை திறக்கப்படவில்லை. விடுதலைப் புலிகளே இந்தக் கொலையைச் செய்ததாகக் கருதும் அரசு, கதிர்காமரைச் சுட்டவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கிலேயே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கான பாதைகளை மூடினர்.

அமைச்சர் கதிர்காமருக்கு கொழும்பு - 7 இல் இரு வாசஸ்தலங்களுள்ளன. புல்லர்ஸ் லேனில் தனிப்பட்ட தங்ககமும் விஜயராம மாவத்தையில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் உள்ளது. புல்லர்ஸ் லேனிலுள்ள தனிப்பட்ட வாசஸ்தலத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிருந்தும், அதையும் தாண்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை, அமைச்சர் கதிர்காமரின் நூல்வெளியீடு நடைபெற்றது. நூலின் முதற் பிரதியை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் பெற்றார். இந்த விழா முடிவடைந்த பின்னர், விஜயராம மாவத்தையிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குப் புறப்பட்ட அவர், அதற்கு முன்னர் புல்லர்ஸ் லேன் வீட்டிலுள்ள நீச்சல் தடாகத்திற்கு மனைவியுடன் சென்றுள்ளார்.

இங்கு நீச்சலை முடித்துக்கொண்டு விஜயராம மாவத்தை வீட்டிற்குச் செல்வதற்காக அமைச்சர் கதிர்காமர் மனைவியுடன் புறப்பட்டு காரில் ஏறுவதற்காக நடந்து வந்துகொண்டிருந்த போதே அடுத்தடுத்து இரு குண்டுகள் கதிர்காமரின் தலையையும், மார்பையும் துளைத்தன. தலையில் ஒரு குண்டும் மார்பில் ஒரு குண்டும் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

தன்னுடன் ஒன்றாக (அருகே) நடந்து வந்த கதிர்காமர் திடீரென பின்புறமாகச் சரிந்து வீழ்வதை, உடன் வந்த மனைவி அவதானித்துள்ளார். எந்தவிதச் சத்தமும் கேட்காததால் மயக்கமடைந்துதான் அவர் வீழ்ந்ததாக நினைத்த மனைவி, ஓடிச்சென்று பார்த்தபோது தலையிலிருந்தும், மார்பிலிருந்தும் இரத்தம் பாய்வதை அவதானித்து அலறவே படையினர் விரைந்து வந்து தூக்கி அவரை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் சில மணிநேரத்தில் அங்கு அவர் மரணமானார்.

அமைச்சர் கதிர்காமர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதைப் படையினர் உணர்ந்து கொண்டாலும் `சினைப்பர்' தாக்குதல் தான் அது என்பதை கண்டுபிடிக்க சில நிமிடநேரங்கள் பிடித்துள்ளது. `சைலன்சர்' பொருத்தப்பட்ட துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருந்தால் கூட, சுட்டவர்கள் அந்த வீட்டு வளவினுள் இருந்திருக்க வேண்டும். ஆனால், உடனடித் தேடுதலில் எவரும் சிக்காததாலும், தாக்குதலின் பாணியும் சினைப்பர் தாக்குதலே நடத்தப்பட்டுள்ளதென்பது தெரிய வந்தது.

ஆனாலும், எங்கிருந்து எவ்வாறு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதென்பதை உடனடியாக அவர்களால் அறிய முடியாதபோதும், கதிர்காமரின் வீட்டின் நான்கு புறத்திலுமுள்ள ஏதாவதொரு வீட்டிலிருந்தே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கவேண்டுமென்பதைப் படையினர் உணர்ந்தனர். கதிர்காமரின் வீட்டைச் சுற்றியுள்ள வீடுகள் மேல்வீடுகளென்பதால் உடனடியாகவே சகல வீடுகளுக்குள்ளும் தேடுதலுக்கான பெருமளவு படையினர் சென்றனர்.

குண்டுத் தாக்குதலுக்கிலக்கானவரோ அல்லது கதிர்காமரின் மனைவியோ அல்லது கதிர்காமரின் வீட்டின் நான்கு புறங்களிலும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த படையினருக்கோ, குண்டு எங்கிருந்து வந்ததெனத் தெரிந்திருக்கவில்லை. இதனால் கதிர்காமரின் வீட்டைச் சுற்றியிருந்த மாடிவீடுகளில் படையினர் தீவிர தேடுதல்களை நடத்தினர்.

அவ்வேளையில் கதிர்காமரது வீட்டின் வலது புறமாக உள்ள இரு மாடிகளைக் கொண்ட வீட்டின் குளியல் அறையினுள், சினைப்பரை பொருத்தி தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக மேடையொன்றும் `ஸ்ரான்ட்' ஒன்றுமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், தாக்குதலை நடத்தியவர்கள் பயன்படுத்திய சில பொருட்களும் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த வீட்டில் வயோதிப தமிழ்த் தம்பதியர் இருவரே இருந்துள்ளனர். படையினர் அவர்களது வீட்டைத் தட்டித் திறந்து உள்ளே சென்றபின்னர்தான் என்ன நடந்ததென அவர்கள் அறிந்துகொண்டனர். அவர்களது வீட்டின் மேல் மாடியில் குளியலறையில்` ஸ்ரான்ட்'டும் வேறுபொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாகவே தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

வீட்டின் 2ஆவது மாடியில் குளியலறையில் ஜன்னலுக்கு மேலேயுள்ள `கிறில்' கல்லு உடைக்கப்பட்டு சிறு ஓட்டையொன்றை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தினூடாக சினைப்பரை ஸ்ரான்டில் பொருத்தியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குளியலறைக்குள் இரும்புக் கம்பிகளைப் பொருத்தி சுமார் ஏழு அடி உயரத்திற்கு மேடையொன்று அமைக்கப்பட்டு அதன் நடுவில், மெல்லிய இரு இரும்புக் கேடர்கள் அமைத்து அதன் குறுக்கே ஒரு கேடரை பொருத்தி அதில் ஒருவர், சைக்கிள் சீற்றில் இருப்பது போன்று வசதியாக இருக்கும் வகையில் சீற் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னால், ஜன்னல் கிறிலினூடாக சினைப்பரை வெளியே நீட்டி வைப்பதற்கு வசதியாக ஸ்ரான்ட் ஒன்றும் பொருத்தப்பட்டு அதில் சினைப்பரைப் பொருத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரு குண்டுகள் கதிர்காமரின் தலையிலும், மார்பிலும் பாய்ந்துள்ளன.

சினைப்பரைப் பொறுத்தவரை ஒரு நேரத்தில் ஒரு தடவையே சுடமுடியும். இயந்திரத் துப்பாக்கிகள் போன்று பல சுற்றுக்கள் சுடமுடியாது. ஒரு தடவை சினைப்பர் குண்டு பாய்ந்தால், மீண்டும் அதில் குண்டை நிரப்பி விட்டே மறுமுறை சுடமுடியும். இவ்வாறான வேளைகளில் குண்டை மீண்டும் சினைப்பரில் நிரப்பி சுடுவதென்பது சாத்தியப்படாததொன்றென்பதால் சினைப்பரை கையாள்வதில் மிகவும் தேர்ச்சியுள்ள இருவர் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

ஆனால், குளியலறை ஜன்னலின் மேலுள்ள கிறிலில் ஒரு சினைப்பரை நுழைத்துச் சுடுவதற்கேற்பவே துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தச் சினைப்பரின் இலக்கு குறிதவறாமல் கதிர்காமரைத் தாக்க வேண்டுமென்பதற்காக வசதியாக `ஸ்ரான்ட்' ஒன்றும் அங்கு வைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்ட சினைப்பர் மூலம் முதல் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

அதேநேரம், இந்தத் தாக்குதலில் குறிதப்பினால் இலக்கை உடனடியாகத் தாக்குவதற்காக அந்தக் கட்டிடத்தில் இன்னொரு பகுதியில் இன்னொருவர் சினைப்பருடன் நின்று அவரும் கதிர்காமர் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் விசாரணையாளர்கள் கருதுகின்றனர். இதனால் இந்தத் தாக்குதலிலிருந்து (இரு சினைப்பர்காரர்களினதும்) கதிர்காமர் தப்பிவிடக் கூடாதென்பதில் தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் மிகக் கவனமாயிருந்துள்ளனர்.

தற்செயலாக இந்தத் தாக்குதலில் குறிதவறியிருந்தால் தாக்குதலை நடத்தியவர்களைப் படையினர் உடனடியாகப் பிடித்திருக்க முடியும், ஏனெனில் தாக்குதலிலிருந்து தப்புபவருக்கு குண்டுகள் எங்கிருந்து பாய்ந்து வருகின்றன என்ற திசை தெரியும். ஆனால், இந்தத் தாக்குதலில் இரு குண்டுகளும் கதிர்காமரை உடனடியாகவே மிக மோசமாகத் தாக்கிவிட்டதால் அவர் அவ்விடத்திலேயே சுயநினைவின்றி வீழ்ந்து விட்டார். அதேநேரம், கதிர்காமரின் அருகில் வந்த மனைவிக்கே என்ன நடந்ததெனத் தெரியாதளவிற்கு தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

கதிர்காமர் மயங்கி வீழ்வதாகவே முதலில் மனைவி நினைத்துள்ளார். அருகில் சென்று பார்த்த போதுதான் அவரது தலையிலும், மார்பிலும் குண்டு துளைத்தது தெரிய வந்தது.

இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சினைப்பர்கள் மிக நவீனமானவையாகவும், குண்டு புறப்படும்போது மிகக் குறைந்த சத்தத்தையே வெளியிடுபவையாகவும் இருக்கலாமென்றும் கருதப்படுகிறது.

இரவு நேர பார்வைக் கண்ணாடியும் (நைற் விஷன்) `சூம்' லென்ஸும் பொருத்தப்பட்ட சினைப்பரே பயன்படுத் தப்பட்டுள்ளது.சுட்டவர்களுக்கும் கதிர்காமருக்குமிடையே 300 மீற்றர் தூர இடைவெளி இருந்துள்ளது.

கதிர்காமரின் இல்லம் இருக்குமிடம் மிகவும் அமைதியான சூழலில் இருப்பதால் சிறு சத்தம் கூட அவரது மெய்ப்பாதுகாவலர்களுக்கும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் துல்லியமாகக் கேட்டிருக்கும். ஆனால், இது எவருக்குமே கேட்கவில்லை.

அதேநேரம் கதிர்காமர் குண்டுகள் துளைத்து வீழ்ந்த நிலையில் அவரைக் காப்பாற்றவேண்டும்,ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லவேண்டுமென்ற முனைப்பிலேயே அவரது மெய்ப்பாதுகாவலர்களும், படையினரும் இருந்ததால் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி துப்பாக்கிதாரிகள் இருவரும் விரைந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.

அத்துடன் அவ்வாறான சந்தர்ப்பத்திலும் அவர்கள் எப்படி அந்தச் சினைப்பர்களைக் கொண்டு சென்றார்களென்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது. தாக்குதலை இருந்து நடத்திய வீட்டின் மேல்மாடியிலிருந்து இறங்கி, நீண்ட சினைப்பரை பாகம் பாகமாகக் கழற்றி எவரது கண்களிலும் சிக்காமல் அவர்கள் எப்படித் தப்பிச் சென்றார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டு துப்பாக்கி நபர்களை ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடும் முயற்சியும் நடந்தது. சக்திமிக்க வெளிச்சத்தை வெளிப்படுத்தும் விளக்குகள் பொருத்தி ஹெலிகொப்டர்கள் தேடுதல் நடத்தியும் துப்பாக்கி நபர்களைப் பிடிக்க முடியாததாலேயே, அவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக வடக்கு - கிழக்கில் புலிகளின் பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன.

இதேநேரம், இந்தத் தாக்குதலை புலிகள்தான் நடத்தினார்களென்றால், கொழும்பில் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்படும் மிக முக்கிய தலைவர் ஒருவருக்காக முதல் தடவையாக சினைப்பர் தாக்குதல் நடத்தியுள்ளரெனலாம். இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். பின் (வரதர் அணி) முக்கியஸ்தரான ரி.சுபத்திரன் அவரது அலுவலகத்தின் மேல் மாடியில் உடற்பயிற்சியிலீடுபட்டிருந்த வேளை சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

புலிகளைப் பொறுத்தவரை எட்டமுடியாத இலக்குகளைத் தாக்க தற்கொலைக் குண்டுதாரிகளையே பயன்படுத்துவர். மிக நெருங்கி கிட்டத்திலிருந்து துல்லியமாக நடத்தப்படுவது தற்கொலைக் குண்டுத்தாக்குதல். மிக எட்டத்திலிருந்து மிகத் துல்லியமாக நடத்தப்படுவது சினைப்பர் தாக்குதல். புலிகள்தான் இதனைச் செய்தார்களென்றால் அவர்களது தாக்குதல் பாணி மாறுகின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதேநேரம், நாட்டில் ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்ட ஒருவரை இந்தளவு தூரம் உளவு பார்த்துள்ளதும் இந்தத் தாக்குதலின் மூலம் தெரியவந்துள்ளது. தற்காலிக வாசஸ்தலம், நிரந்தர வாசஸ்தலமென இரு வாசஸ்தலத்தைக் கொண்டிருந்த மிக மிக முக்கிய புள்ளியொருவரை எவ்வாறு இவ்வளவு துல்லியமாக உளவு பார்த்துள்ளார்களென்ற கேள்வியும் எழுகிறது.

அதி உயர்பாதுகாப்பு வழங்கப்படும் ஒருவரின் ஒரு வாசஸ்தலத்தை மையமாக வைத்து உளவுபார்ப்பதென்பது சாதாரண விடயமல்ல. அவ்வாறிருக்கையில் அவரது இரு வாசஸ்தலத்தையும் ஒரே நேரத்தில் உளவு பார்ப்பதென்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாததொன்று.

ஆனாலும், துல்லியமான உளவுத் தகவல்கள்தான், வெள்ளிக்கிழமை இரவு கதிர்காமர் அங்கு வருவாரென்பதை உறுதிப்படுத்தி துப்பாக்கி நபர்கள் அடுத்த வீட்டின் மேல்மாடியில் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் காரியத்தை நிறைவேற்றி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கதிர்காமரின் புல்லர்ஸ் லேன் வாசஸ்தலத்தில் நீச்சல் தடாகமிருப்பதும் அவர் இரவு நேரத்தில் அங்கு வருவதும் உளவுத் தகவல்கள் மூலம் தெளிவாகியுள்ளது. பகல் வேளைகளில் கூட சிலநேரம் நீச்சல் தடாகத்திற்கு அவர் வந்து செல்வதை உளவுத் தகவல்கள் மூலம் துப்பாக்கிதாரிகள் அறிந்திருந்தாலும், தாங்கள் தப்பிச் செல்வதற்கு இரவு நேரமே பொருத்தமென்பதால் இரவுப் பொழுதிற்காக காத்திருந்திருக்கலாம்.

அதேநேரம், வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் புத்தக வெளியீட்டிற்குச் செல்வதும் பின்னர் கதிர்காமர் நீச்சல் தடாகத்திற்கு வரப்போவதும் உளவுத் தகவல்கள் மூலம் அறியப்பட்டு துப்பாக்கிதாரிகள் காத்திருந்துள்ளனர்.

இந்த வாசஸ்தலத்தின் பாதுகாப்பைவிட விஜயராம மாவத்தையிலுள்ள கதிர்காமரின் நிரந்தர வாசஸ்தலத்தின் பாதுகாப்பு மிகவும் அதிகம். அதனால் கதிர்காமரை அங்கு வைத்து இலக்கு வைப்பதென்பது மிக மிகக் கடினமென்பதாலேயே பாதுகாப்பு குறைந்த இந்த இடம் அவர்களுக்கு வசதியாகப் போனது.

அதேநேரம், நாட்டின் மிக மிக முக்கியமான தலைவரொருவரை இந்தளவிற்கு உளவு பார்த்து அவரை, அவருக்கு அருகிலிருந்தே சினைப்பர் தாக்குதல் மூலம் கொல்ல முடியுமென்பதை தாக்குதல்காரர்கள் உணர்த்தும் அளவிற்கு அவரது பாதுகாப்பில் பெரும் ஓட்டை இருந்துள்ளது.

அதைவிட, அருகிலிருந்த வீட்டில் அவர்களுக்கும் தெரியாது நுழைந்து நீண்ட நாட்கள் காத்திருந்து உளவு பார்த்து சம்பவதினம் அல்லது அதற்கு முன்பே சினைப்பர்களைக் கொண்டு வந்து சேர்த்து மிகவும் துல்லியமாகத் தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளமை அரசை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேற்படி வீட்டின் பின்புறத்தில் வெற்றுக் காணியுள்ளது. அங்கு சிறு பற்றைகளுமுள்ளன. அதனூடாகவே தாக்குதல்காரர்கள் உளவு பார்க்க வந்தும் தாக்குதல் நடத்த வந்துமுள்ளதாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர். தாக்குதலின் பின் அதனூடாகவே தப்பிச் சென்றுமுள்ளனர்.

நேற்றுக் காலை அந்தக் காணிக்குள் தேடுதல் நடத்தப்பட்டபோது, கிரனைட் லோஞ்சர் ஒன்றும் அதற்கான குண்டுகளும் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், சினைப்பர் தாக்குதலுக்கு வாய்ப்பில்லாது போனால் கதிர்காமரின் கார் மீது கிரனைட் லோஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருக்கலாமெனவும் கருதப்படுகிறது.

இவ்வாறு, நாட்டின் முக்கிய தலைவரொருவர் மிக இலகுவாக இலக்கு வைக்கப்பட்டமை படைத் தரப்புக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமரைப் புலிகள் தாக்குவதாயின் தற்கொலைக் குண்டுதாரிகளையே பயன்படுத்துவார்களென்ற மிகுந்த முன்னெச்சரிக்கையால், கதிர்காமருக்கு அருகே எவரும் நெருங்காமல் படையினர் பாதுகாக்க, கதிர்காமருக்கு மிகவும் தூரத்திலிருந்தே தாக்குதல்காரர்கள் அவரைத் தாக்கிவிட்டுச் சென்று விட்டனர்.

thinakkural
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#67
<b><span style='color:red'>புலிகள் கொலை செய்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை
அமைச்சர், பிரதி அமைச்சர் தெரிவிப்பு
(டி. சார்ள்ஸ் பீட்டர்)

[size=15]வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை செய்தது விடுதலைப் புலிகள் தான் என தெரிவிக்கப்பட்ட போதிலும் அது உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் விடுதலைப் புலிகள் அதனை மறுக்கிறார்கள் எனவும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.

படுகொலை செய்யப்பட்ட லக்ஷ்மன் கதிர்காமரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு விஜேராம மாவத்தையிலுள்ள கதிர்காமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு வருகை தந்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒரு முக்கிய நபரை இன்று இலங்கை இழந்துவிட்டது. இந்த கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் யார் இந்த கொலையை செய்தாலும் அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கதிர்காமர் பெரும் பாடுபட்டார். இந்த கொலையின் மூலம் நாட்டின் சமாதானத்தை கொண்டு வருவது எவ்வளவு பாரதூரமான விடயம் என்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

லக்ஷ்மன் கதிர்காமர் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருவராவார். ஆனால் எத்தனையோ அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து மேடைகளில் பேசினார்கள். அவர்களே இன்று அனுதாபப்படுகிறார்கள்'' என்று கூறினார். இதேவேளை கதிர்காமரின் படுகொலையால் நாட்டின் பாதுகாப்புக்கு பாதகமான நிலை ஏற்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிலான் பெரேரா,

""நாட்டின் பாதுகாப்பை தற்போது பலப்படுத்தியுள்ளோம் அவசர கால சட்டமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டின் பாதுகாப்புக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்'' எனத் தெரிவித்தார். இதேவேளை கதிர்காமருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தந்திருந்த நீதி அமைச்சர் ஜோன் செனவிரத்ன கூறுகையில்இ புலிகள் கதிர்காமரை கொலை செய்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை'' எனத் தெரிவித்தார்.

[b]கதிர்காமரின் வாழ்க்கையில் சில துளிகள் </b>
இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் 1932 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி பிறந்தார்.

கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கியமைக்கான கல்லூரியின் "ரைத்' தங்கப் பதக்கத்தையும் பெற்றவர்.

1953ல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டமானிப் பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்தார். இதே ஆண்டில் அதியுயர் சட்டக் கல்விப் பரீட்சையின் இடைநிலைப் பரீட்சையில் முதல் தரத்தில் சித்தியடைந்தார்.

1954ல் இலங்கைச் சட்டக் கல்லூரியில் அதியுயர் சட்ட இறுதிப் பரீட்சையில் முதல் தரத்தில் முதலாவதாக தேர்ச்சியடைந்தார். சாட்சிய சட்டம்இ தனி நபர்இ சொத்துக்கள் தொடர்பான சட்டம் என்பவற்றுக்கும் பரிசில்களையும் பெற்றார்.

1955ல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றார்.

சட்டத்துறையில் பரிஸ்டர் என்ற வகையில் இவர் 1958 இல் ஐக்கிய ராச்சிய சட்டமன்றத்திலும் உறுப்பினரானார்.

1959ல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக யூனியனின் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.

1960ல் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் (ஆ.ஃடிவ) பி.லிற் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

1955, 1960, 1971, 1974 காலப் பகுதியில் லண்டன் பிரிவுக்கவுன்சிலின் சட்டக் குழுவில் பணி புரிந்தார்.

1960, 1971, 1989, 1994 வரையிலும் இலங்கை சட்டக் கழகத்திலும் பணியாற்றினார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பில் ஆலோசகராகவும் பணியாற்றிய இவர்இ அபிவிருத்தியடைந்து வரும் ஆசிய பசுபிக் அரசாங்கங்களின் அறிவு சொத்து தொடர்பான ஆலோசனை வழங்கும் ஆசியப் பசுபிக் பிராந்திய பணிப்பாளராகவும் (1983 1988) வரை பணியாற்றியுள்ளார்.

1963ல் வியட்நாமில் கத்தோலிக்கர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே இடம்பெற்ற பிரச்சினையை ஆராய்வதற்கென சர்வதேச மன்னிப்புச் சபையினால் ஆணையாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

1990ல் இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட வெளிவிவகார ஆய்வுக் குழுவுக்கும் புலமைச் சொத்து சம்பந்தமான ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையிலும் இலங்கை அரசுக்கு பல ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். 1991 ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் பெற்றார்.

இலங்கையின் சட்டச் சீர்திருத்தம் தொடர்பான ஆலோசனைக் குழுவிலும் அங்கம் வகித்து சேவையாற்றி வந்த இவர் இலங்கையின் நிர்மாணத் தொழில் சேவைகளுக்கான ஆலோசனைச் சேவைகளை மேல்நிலைப்படுத்துவதற்கான கமிட்டிக்கும் தலைமை தாங்கினார்.

பல்வேறு சர்வதேச சட்டச் சஞ்சிகைகளிலும் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

வெளிவிவகாரங்கள் பற்றிய சட்டம் சம்பந்தமாகவும், ஜோர்ஜ் வொஷிங்டன், ஹாவார்ட், ஒக்ஸ்போர்ட், பிரின்ஸ்டன் நிவ்யோர்க் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், இங்கிலாந்து, ஜெர்மனி, சீனா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலுள்ள நிறுவனங்களிலும் விரிவுரையாற்றியுள்ளார்.

கொள்கைகள் திட்டமிடல் ஆலோசனைச் சபையில் ஒரு உறுப்பினராகவும் இவர் நியமனம் பெற்றிருந்தார். 1997 இல் பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்து சமுத்திரக் கரையோரச் சங்கத்தின் உப தலைவராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

1994 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் பிரவேசித்த இவர், அந்த அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1998 1999 இல் சார்க் நாடுகளது அமைச்சர் குழுவின் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.

<b>பூதவுடலை படமெடுக்க நேற்று அனுமதி மறுப்பு </b>
டி. சார்ள்ஸ் பீட்டர்ஸ்

படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பாரியாரின் வேண்டுகோளுக்கிணங்க லக்ஷ்மன் கதிர்காமரின் பூதவுடலை படமெடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் எவரும் நேற்றைய தினம் அனுமதிக்கப்படவில்லை.

படுகொலை செய்யப்பட்ட வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மர் கதிர்காமரின் பூதவுடல் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பொரளை ரேமன்ட் மலர்ச்சாலையிலிருந்து கொழும்பு 7, விஜேராம மாவத்தையிலிருக்கும் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு பொலிஸ் அணி வகுப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

கதிர்காமரின் பூதவுடல் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்குள் கொண்டு செல்லப்பட்டவுடன்,

பொலிஸார் ஊடகவியலாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இது தொடர்பாக பொலிஸாரிடம் காரணம் கேட்டபோது, கதிர்காமரின் பாரியார் தான் படமெடுப்பதற்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார் என தெரிவித்தனர்.

இதேவேளை, சுதந்திர சதுக்கத்தில் நாளை இடம்பெறவிருக்கும் கதிர்காமரின் இறுதிக் கிரியைகள் நிகழ்வுகளையும், ஊடகவியலாளர்கள் படமெடுக்க முடியாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

</span>

Veerakesari
Reply
#68
<span style='font-size:23pt;line-height:100%'><b>\"அமைச்சர் கதிர்காமர் கொலைக்கு பாதுகாப்பு குறைபாடும் ஒரு காரணமே\"- இலங்கை இராணுவப் பேச்சாளர்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050813143954srilanka_funeral.jpg' border='0' alt='user posted image'>
கொழும்பில் உயர் பாதுகாப்பு உள்ள ஓர் இடத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் இலகுவாக சுட்டுக் கொல்லப்பட்டது பாதுகாப்பு ஏற்பாடுகளில் பெரிய அளவிலான பிழை இருந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது என்று இலங்கை இராணுவப் பேச்சாளார் தயா ரட்ணாயக்கா ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தக் கவனக்குறைவை பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெளியுறவுத் துறை அமைச்சரை சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும், இது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன, இதற்கு யாரேனும் ஒரு தனி நபரோ அல்லது அமைப்போ பொறுப்பாக இருந்தால் அது இந்த விசாரணையில் தெரிய வரும், இலங்கயைப் பொறுத்த வரையில் இந்தப் பிரச்சனை 25 ஆண்டுகளாக இருந்து வருகிறது, பாதுகாப்பு வழங்கும் பொறுப்பை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியாது, இது பாதுகாப்புப் படையினரின் பொறுப்பு மட்டும் அல்ல, அதையும் தாண்டி நிலைமை சென்று விட்டது நாம் அனைவரும் இணைந்து நின்று இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்றும் ரட்ணாயக்கா கூறினார்.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050812230327lanka_police203.jpg' border='0' alt='user posted image'>
<i>கடும் சோதனை</i>

தாங்கள் போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், ஆனால் விடுதலைப் புலிகள்தான் பலமுறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றும் இறுதியாக இதில் தாங்களே வெற்றி பெறுவோம் என்று தங்களுக்குத் தெரியும் என்றும், ஏனென்றால் இது போன்ற செயல்களைச் செய்து கொண்டு விடுதலைப் புலிகள் வெற்றி பெற முடியாது என்றும் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறினார்.

ஆனால் இலங்கை பாதுகாப்புப் படைகள்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பல முறை மீறியதாகவும், கிழக்கில் துணைப் படைகளை வைத்து தங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதாகவும் உங்கள் மீது புலிகள் குற்றம் சுமத்துகிறார்களே என்று கேட்டதற்குப் பதிலளித்த ரட்ணாயக்கா அவர்கள், விடுதலைப் புலிகளின் அலுவலகம் ஒன்றின் மீது கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்றும், இதில் அடையாளந் தெரியாத நபர்கள் கைக்குண்டினை வீசியிருக்கிறார்கள் என்றும், அமைச்சர் கதிர்காமர் அவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணைகளின் கவனத்தைத் திசை திருப்பும் விதமாகவே விடுதலைப் புலிகள் இப்படிக் கூறுகின்றனர் என்றும், உலகின் மொத்த கவனத்தையும் திசை திருப்பும் விதமாகவே விடுதலைப் புலிகள் வேண்டுமென்று இவ்வாறு கூறுகின்றனர் என்றும் இலங்கை ராணுவத் தரப்பில் பேசவல்லவரான பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறினார்.</span>
-BBC tamil
Reply
#69
இதை புலிகள் செய்தாக தெரியவில்லை. இதை செய்தது ஜேவிபியாகத்தான் இருக்கவேண்டும்.. காரணம் கதிர்காமர் புலிகளின் இலக்கில் 1வது அல்லத் 2வதாக இருக்கும் நபர் என்று தெரியும், இத் தகவலை மையமாக கொண்டு காயை நகர்த்தி இருக்கிறது ஜேவிபி.. இதில் ஒரு விடயத்தைப்பாருங்கள், புலிகளை வேனுமெண்டு சிக்கவைக்கவேண்டும் என்ற என்னத்தில் இனிப்புகள், கண்டேஸ்களை (சாதரணமாக எதேனும் நீண்ட நாட்கள் காத்திருந்து தாக்கும்பொழுது புலிகள் தான் இச்செயலை செய்வார்கள்) தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தடயமாக விட்டுச்சென்றிருக்கிறார்கள்.. பெரும்பாலும்புலிகள் அவ்வாறு தடயங்களை விடுவதில்லை.. மேலும் இத்தாக்குதல் இராணுவத்தின் உதவியுடன் நிகழ்ந்து இருக்கலாம்..

ஜேவிபி 1கல்லில் 3 மாங்காய்களை அடித்திருக்கிறது...

1. ஜேவிபி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு கதிர்காமர் ஒரு காரணம்,, (சந்திரிக்காவின் ஆலோசகர் என்ற முறையில் தடுத்தி நிறுத்தி இருக்கலாம்)

2. புலிகளை உலக நாடுகளின் கண்டனத்துக்கு ஆளாக்குதல்..

3. புலிகள் மீது யுத்தத்தை தொடக்கி, அதில் குளிர் காய்வது..

மொத்தத்தில் ஜேவிபி என்னம் ஆயுத அமைப்பாக இயங்கி வருகிறது... Idea
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
சந்திரிக்கா புலிகள்தான் செய்தார்கள் என்று இன்றிரவு ரூபவாஹினியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது சொல்லியுள்ளார். அத்துடன் புலிகளைப் பலமாகச் சாடியுள்ளார். கொலையாளிகளையும் புலிகளின் உளவாளிகளையும் பிடிக்கத்தான் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தியுள்ளதாகச் சொல்லியுள்ளார். நிலைமைகள் போகும் போக்கைப் பார்த்தால் முறுகல் நிலை முற்றிப் போராக வெடிக்க அதிக காலம் எடுக்காது போலுள்ளது.
<b> . .</b>
Reply
#71
இந்திய உளவுப் பிரிவில் முன்பு வேலை செய்தவரும், புலிகளைப் பலமாக எதிர்த்து எழுதிவருபவருமான பி.ராமன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றில் கதிர்காமரின் கொலை ஜக்கால் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட யுக்தி என வர்ணித்துள்ளார்.

ஜக்கால் படத்தில் சினைப்பர் தாக்குதல் மூலம் பிரஞ்சு அதிபர் சார்ள்ஸ் டீ கோலை கொல்ல எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

http://www.saag.org/papers15/paper1500.html
<b> . .</b>
Reply
#72
இது ஜக்கால் இல்லையப்பு சினைப்பர் 2 பகுதி 2... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (அடுத்த வரத்தில் நானோ ச**ரியோ??) ஜோவ்வ் யாரங்கே வாசலில் ஒரு கட்டெறும்பு உலாவுகின்றது சுட்டுப்பொசுக்குங்கள்) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#73
<img src='http://www.virakesari.lk/VIRA/20050815/images/index.jpg' border='0' alt='user posted image'>
இதுவரை இக் கொலை தொடர்பாக 28 தமிழர்களும் ஒரு சிங்களவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

<b>குளியல் அறையிலிருந்து முறுக்கு,கேக்,பிஸ்கட் மீட்பு
துப்பாக்கிதாரிகள் 5 நாட்கள் அங்கு தங்கியிருந்தனரா?
புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம்</b>
(கிருஷ்ணி கந்தசாமி)

அமைச்சர் கதிர்காமர் மீது மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு தகவல்களைத் திரட்டியுள்ளனர்.

அவற்றின் விபரம் வருமாறு:

அமைச்சர் கதிர்காமருக்கு சொந்தமான வீட்டின் பக்கவாட்டில் எதிர்ப்புறமாக அமைந்துள்ள மாடி வீடொன்றின் குளியல் அறையிலிருந்தே சினைப்பர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குளியல் அறையில் தற்காலிகமாக 8 அடி உயரத்தில் மரத்திலான மேடை ஒன்று அமைக்கப்பட்டு, அதில் சினைப்பர் துப்பாக்கி பொருத்தப்பட்டுள்ளது. இது இரவில் நன்கு பார்க்கக் கூடியதும், சத்தமின்றி குண்டுகளை செலுத்தக் கூடியதுமாகும்.

தாக்குதலையடுத்து சுமார் 15 நிமிட நேரத்தில் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு தேடப்பட்டுள்ளது. இதன் போது

சினைப்பர் குண்டு, வெற்று தோட்டாக்கள் ஐந்து மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குளியலறையிலிருந்து பிஸ்கட், சொக்லேட், சீஸ், கேக், பழங்கள், முறுக்கு, தண்ணீர் போத்தல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கும் அமைச்சரின் வீட்டுக்கும் இடையில் சுமார் 100 மீற்றர்களாகும். அத்துடன் தாக்குதலை மேற்கொண்டோர் ஐந்து தினங்களாவது அங்கு தங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 5 தடவைகள் சினைப்பர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கான சான்றுகள் உள்ளன. அவற்றில் மூன்று அமைச்சரின் வீட்டு சுவரை துளைத்துச் சென்றுள்ளன.

இத்தாக்குதலை மேற்கொள்ளும் பொருட்டு இருவர் குறித்த பகுதியில் வந்து மறைந்திருந்திருக்கலாம் என்றும் தாக்குதலையடுத்து சுமார் 5 நிமிட நேரத்தில் அவர்கள் அங்கிருந்தும் தலைமறைவாகியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேற்படி தாக்குதல் இடம் பெற்ற வீடு முன்னாள் பொலிஸ் அத்தியட்சர் ஒருவருக்கு சொந்தமானதாகும். அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரது உறவினரான லக்ஷ்மன் தளையசிங்கம் :வயது 58, மனைவி விபியன் செல்வலோஜினி (வயது 52) ஆகியோர் கீழ்த் தளத்தில் வசித்து வருகின்றனர். அத்துடன் இவர் பக்கவாத நோயினால் பீடிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வருகிறார்.

தங்கள் வீட்டின் மேல்மாடி பாவனைக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும், தாங்கள் அங்கு செல்வதில்லை என்றும் தளையசிங்கம் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன் ஆயுததாரிகள் எவ்வாறு அங்கு வந்துமறைந்திருந்து தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

ஆயுததாரிகள் இவ்வீட்டின் குளியல் அறையிலிருந்தவாறு, அமைச்சர் கதிர்காமரை நீண்டகாலம் குறிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

தாக்குதலை நடத்தியோர் வீட்டின் கீழாக உள்ள பற்றைகளைக் கடந்து நாரஹென்பிட்டியூடாக தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் தெரியவருகிறது.

Veerakesari
Reply
#74
இராமன் தன்ரை வழமையான வயித்தொரிச்சலையும் வக்கிரத்தையும் கக்கியிருக்கிறான்:

-1- மேற்குலக நாடுகளில் தற்பொழுதுள்ள தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றிய உணர்வலைகளை இந்த சம்பவத்தில் பயன்படுத்தி புலிகளிற்கெதிராக விசமப்பிரச்சாரம் செய்யமுடியாமை.

-2- கதிர்காமர் யுத்தநிறுத்தத்திற்கு முன்னர் செய்த பொய்ப்பிரச்சாரம் எல்லாம் தோலுரித்துக்காட்டப்பட்டு தற்பொழுது மேற்குலகத்தில் செல்வாக்கையும் நம்பிக்கையையும் எதிர்பாரத அளவு இ;ளந்துள்ளார் எண்டதை விழுந்தும் மீசையில மண்பிரளேலை என.

-3- மேற்குலகத்தால் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இந்தியாவால் அரவணைக்கப்பட்ட கதிர்காமர் இந்தியா நலன்களின் காவலனாக இந்த வருட ஆரம்பத்திலிருந்து நடக்கத் தொடங்கியிருந்தார். சொந்த இனத்திற்கு எதிராக எப்படி எதிர்பார்ப்புக்களை மீறுமளவிற்கு துரோகம் செய்தாரோ ஆதேபாணியில் இலங்கையின் நலன்களிற்கு எதிராக சேதுசமுத்திர திட்டத்தை ஆதரித்து பொரும்பான்மையினத்தவரின் நம்பிக்கையிளந்தார் என்றது மாத்திரமல்ல வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார் என்றதை ஒருவரும் அறியாதது போல <b>கதிர்காமர் புகழ்</b> பாடியுள்ளார்.

-4- எதோ கிடைக்கிற சந்தர்பத்தை விடக்குடாதென்று, தாங்கள் கைக்கூலிகள் ஒரு பாரிய இராணுவ சக்தியாக திகழ்வதாக பன்றிகள் <b>பறக்கும்</b> மட்டக்களப்பின் கற்பனைக்குப் போட்டியாக பன்றிகள் <b>பறக்க போகும் </b>வடக்கு-கிழக்கு பாணியல் உளறியுள்ளார்.

-5- புலிகளின் புத்தி சாதுரியமான அரசியல் இராணுவ இராஜதந்திர நகர்வுகளால் அவமானப்பட்ட பிராமண மேலாண்மை வாதிகள் புலிகள் திரைப்படங்களைப்பார்த்து தான் தாக்குதல் வியுhகங்களையும் திட்டங்களையும் வகுக்கிறார்கள் என்று தம்மை தாமே தேற்றிக் கொள்ளுவதில் வல்லவர்கள், இப்படியான ஒப்பாரி ஒன்றும் முதல் முறையல்ல இவருக்கு.
Reply
#75
<b>அமைச்சர் கதிர்காமரின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40691000/jpg/_40691914_funesap.jpg' border='0' alt='user posted image'>


இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பூதவுடல் இன்று பூரண அரச மரியாதையுடன் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் தகனம் செய்யப்பட்டது.

மிகவும் இறுக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்த இந்தத் தகனக் கிரியைகளின்போது இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் வந்து கலந்து கொண்டார்.

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40691000/jpg/_40691896_procession_afp_cr_203.jpg' border='0' alt='user posted image'>
இன்று பிற்பகல் சுமார் 4.30 மணியளவில் அமைச்சர் கதிர்காமரின் பூதவுடல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பூரண இராணுவ மரியாதையுடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அவரது மகனும், மருமகனும் அவரது பூதவுடலுக்கு தீ மூட்டினார்கள்.

இந்த இறுதிக்கிரியைகளில் இலங்கை, இந்தியா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சர் யான் பீற்றர்சன், நோர்வே பிரதி வெளியுறவு அமைச்சர் விதார் ஹெல்ஹிசன் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்சித் கசூரி ஆகியோரும் இதில் அடங்குவார்கள்.

இலங்கை அரசின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அஞ்சலியுரையை நிகழ்த்தினார்.

BBC tamil
Reply
#76
சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா

தி(ஒ)ரு லக்ஷ்மன் கதிர்காமரின்,
"ஒரு தனி மனிதச்சாவு"ஒரு பதிவு

"..இன்று இந்தத் தனி மனிதச்சாவைப் பூரண அரச மரியாதைகளுடன் அடையாளப்படுத்துகின்ற சிங்களப் பேரினவாதம் நாளை லக்ஷ்மன் கதிர்காமரை முழுமையாக மறந்து போய் விடும். ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் மேன்மைக்குத் தன் சேவையை அர்ப்பணித்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை ஈழத்தமிழினம் என்றுமே மறக்காது!.."

15 August 2005


--------------------------------------------------------------------------------


சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரான திரு லக்ஷ்மன் கதிர்காமர், துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டுள்ளார். மானிப்பாய் தமிழீழத்தைச் சேர்ந்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு தமிழராவர். நன்கு கற்றுத் தேர்ந்த ஒரு கல்விமான். சட்ட நுணுக்கங்களையும் கரை கண்டவர். மிகுந்த ஆங்கில மொழிப்புலமை கொண்ட ஒரு நாவண்மையாளன். அறிவாளி என்றும் அறிவுஜீவி என்றும் அறியப்பட்டவர்.
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, இங்கிலாந்தின் புகழ் வாய்ந்த ஒக்ஸ்வோர்ட் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டங்களைப் பெற்றவர். அவருடைய விவாதத் திறமையை "ஒக்ஸ்வோர்ட்" பல்கலைக்கழக பேராசிரியர்களும் வியந்து பாராட்டினார்கள்.

திரு லக்ஷ்மன் கதிர்காமர் பணியாற்றிய சர்வதேச நிறுவனங்கள் பலவாகும். Internationa Labour Organisation (ILO) world Intellectural Property Organisation, (WIPO), SAARC போன்ற அமைப்புக்களில் அவர் ஆலோசகராகவும், இயக்குனராகவும், தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். வணிகம், முகாமைத்துவம், அறிவுசார் இயல்பு, தொழில்துறை, அரசியல் யாப்பு மற்றும் சர்வதேச சட்டவியல் போன்ற துறைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரின் முழுத்திறமைகளையும், சேவைகளையும் முழுமையாகப் பெற்றுக் கொண்ட சிங்களப் பேரினவாதம் இன்று துக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கிறது. அதன் வருத்தம் நமக்கு புரிகின்றது. சரியாக சொல்லப் போனால் சிங்களப் பேரினவாதத்தின் இந்த வருத்தத்தையும், சோகத்தையும் தமிழர்களால்தான் சரியாகப் புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் முடியும்.

லக்ஷ்மன் கதிர்காமர் என்கின்ற தமிழரின் "தனிமனிதச் சாவு" குறித்து சில தர்க்கங்களை நம் முன் வைப்பதற்கு முதல், சில கேள்விகளை முன் வேண்டிய அவசியத்தையும் நாம் உணர்கிறோம். அது லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களின் கொலையின் பின்னணி குறித்து எழுந்துள்ள சந்தேகங்களாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பின்னிரவு வேளையின் போது சுடப்பட்டு சனிக்கிழமை விடிந்த வேளையிலே, லக்ஷ்மன் கதிர்காமர் வைத்தியசாலையில் காலமாகியபோது, பல சர்வதேச ஊடகங்கள் அவரது சாவு குறித்துச் செய்திகளை வெளியிட்டிருந்தன. சனிக்கிழமை அதிகாலை சுமார் 1.30 மணியளவில் கதிர்காமரின் சாவு குறித்துச் செய்தி வெளியிட்ட சர்வதேச ஊடகமான றொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் சிறிலங்காவின் பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்னாண்டோ, "விடுதலைப் புலிகளே இக்கொலையைச் செய்துள்ளார்கள்" என்று குற்றம் சாட்டியதாக குறிப்பிட்டிருந்தது.

"It is the Tigers" Inspector General of Police, Chandra Fernando told reporters early on Saturday.

என்று கதிர்காமர் அவர்களின் உயிர் பிரிந்த உடனேயே உலகளாவிய ரீதியில் கருத்து ஒன்று பரப்பப்பட்டு விட்டது.

"கதிர்காமரின் சாவுக்கு விடுதலைப் புலிகள் காரணமாக இருக்கக் கூடும்" என்றோ, அல்லது கதிர்காமரின் சாவுக்கு விடுதலைப் புலிகளை நாம் சந்தேகிக்கின்றோம் என்றோ, பொலிஸ் மாஅதிபர் கூறவில்லை! மாறாக விடுதலைப்புலிகளே "இச்சாவுக்கு காரணம்! அவர்கள் தாம் இந்தக் கொலையைச் செய்தார்கள்!" என்று அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.

இந்தக் குற்றச் சாட்டுக்குரிய ஆதாரங்களையோ, சந்தேகங்களையோ இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை, அவர் தெரிவிக்க வில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லக்ஷ்மன் கதிர்காமரின் உயிர் பிரிந்த உடனேயே கொலை சம்பந்தப்பட்ட விபரங்களை சிறிலங்கா பொலிஸ் மாஅதிபர் அறிந்து விட்டார். என்றால் அதற்குரிய அடிப்படைப் புலனாய்வுத் தகவல்களை இந்தக் கொலை நடப்பதற்கு முன்பதாகவே அவர் அறிந்திருக்க கூடும் என்ற எண்ணம், என்ற ஐயம் எமக்கு எழுவதை எம்மால் தடுக்க முடியவில்லை.

அப்படியென்றால் அதாவது இக்கொலை நடக்கப் போவது குறித்து அவருக்கு அதாவது இந்த பொலிஸ்மா அதிபருக்கு தெரிந்திருந்தால், அவர் ஏன் இதனை தடுக்கும் நடவடிக்கையை மேற் கொள்ளவில்லை என்ற கேள்வியும் பெரிதாக எழுகிறது.! தெரிந்திருந்தும் அவர் பேசாமல் இருந்திருக்கின்றார் என்றால் இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் அவர் பக்கத்து ஆட்களோ என்ற சந்தேகமும் எமக்கு விபரீதமாக எழுகின்றது.

அப்படி இல்லையென்றால் அவர் அவசரப்பட்டு இப்படிப்பட்ட அறிக்கையை அறிவித்திருக்கக் கூடாது! ஏனென்றால் இப்படிப்பட்ட உடனடியான அவசரமான அறிக்கைகள் எதனையும் சிறிலங்காவின் பொலிஸ் மாஅதிபரோ, அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ முன்னர் ஒருபோதும் அறிவித்திருக்க வில்லை!

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கொலை செய்யப்பட்டபோது கொலைகாரர்கள் யார் என்பது குறித்து சிறிலங்கா அரசு அவசரப்பட்டோ அல்லது ஆறுதலோ தெரிவிக்கவில்லை.

இதே நிலைதான் றிச்சட் டீ சொய்ஸா உட்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், ஏன் சந்திரிக்கா அம்மையாரின் கணவரான விஜயகுமாரதுங்கவிற்கும் நேர்ந்தது.

பொலிஸ் மா அதிபரின் இந்தக் குற்றச்சாட்டை மேற்கூறிய சம்பவங்களின் அடிப்படையில் நாம் தர்க்கிக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு மட்டுமல்லாமல் இதனை இந்தக் குற்றச்சாட்டை-வன்மையாக கண்டித்திருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறியுள்ள காரணங்களும் மிகவும் வலுவானவையாகும்.

ஆனால் இந்த மறுப்பை சிறிலங்காவின் அரசாங்கப் பேச்சாளர் நிமால் சிறீபால டி சில்வா நிராகரித்துள்ளார். அவரும் சிறிலங்காவின் பொலிஸ் மாஅதிபர் போன்றே எந்தவிதக் காரணத்தையோ அல்லது ஆதாரத்தையோ காட்டாமல் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுப்பை நிராகரித்துள்ளார்.

நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம்தான்.! ஆனால் கதைப்பொருள்தான் பலவீனமாக உள்ளது.

இந்தத் தர்க்கங்களின் அடிப்படையில்தான் லக்ஷ்மன் கதிர்காமர் என்பவரின் தனி மனிதச்சாவு குறித்து மேலும் சில தர்க்கங்களை நாம் முன் வைக்க விரும்புகின்றோம்.

திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களுடைய தகைமைகள் குறித்தும் அவரது ஆற்றல் குறித்தும் இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் வருந்தத்தக்க வகையில் இவருடைய இந்தத் தகைமைகளும், ஆற்றலும் தமிழின மக்களுக்கு எதிராகவும் அவர்களது நாளாந்த இயல்பு வாழ்க்கைக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகட்கு எதிராகவும் செயல்பட்டு வந்துள்ளன. அடிப்படையில் இவர் மண்ணோடு ஒட்டாதவர். அதன் மக்களோடு உறவாடாதவர். தன் இன மக்களால் தேர்ந்தெடுக்கப் படாமலேயே ஒரு நியமனப் பாராளுமன்ற உறுப்பினராக சிங்களப் பேரினவாதிகளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.

இன்னுமொரு விடயத்தையும் நாம் இங்கே சுட்டிக் காட்டியாக வேண்டும். திரு லக்ஷ்மன் கதிர்காமர் என்பவர் "தமிழினத் துரோகி"- என்ற ரீதியில் பலராலும் குற்றம் சாட்டப்பட்டு வந்தவர்தான்.! ஆனால் அவருடைய "உலகம் இதனை விடப் பெரியது" ஆகும் அவர் தன்னுடைய தலைவியான சந்திரிக்கா அம்மையாரின் தனிப்பட்ட நலனுக்காகவும், அவருடைய அரசியல் நலனுக்காகவும் தன்னுடைய அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்தவர் ஆவார்.! அந்த அர்ப்பணிப்பிற்காக அவர் தமிழர்களின் நலனை மட்டுமல்ல, முஸ்லிம் இன மக்களின் நலனையும், சிங்கள மக்களின் பெரும்பான்மையானவர்களின் நலனையும் பலி கொடுத்தவரும் கூட.!

ஆழிப்பேரலை அழிவுகள் காரணமாக உருவாக்கப்பட வேண்டிய பொதுக் கட்டமைப்பு தனியே தமிழ் மக்களுக்கான கட்டமைப்பு மட்டும் அல்ல.! இப்பொதுக் கட்டமைப்பின் செயற்பாடுகள் ஊடாக தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் பயனடைவதாக இருந்தனர். ஆனால் சந்திரிக்கா அம்மையாரின் தனிப்பட்ட அரசியல் விருப்பு-வெறுப்பு காரணங்களுக்கு அமைய திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் பொதுக் கட்டமைப்புக்கு எதிரான கருத்துக்களை முடுக்கி விட்டிருந்தார்.

இந்தப் பொதுக் கட்டமைப்பு எல்லோருக்கும் பொதுவான ஒன்றாகும். அதனைக் கூடச் சட்டை செய்யாத வகையில் திரு லக்ஷ்மன் கதிர்கமர் அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம் மற்றும் சிங்களப் பொது மக்களுக்கும் தீமை செய்தவர் ஆவார்.! இவர் தமிழ் மக்களுக்கு எதிரிதான்! ஆனால் மற்றவர்களுக்கும், உண்மையான நண்பர் இல்லை.!! ஏனென்றால் சந்திரிக்கா அம்மையாரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றிய ஒரு தனி மனிதர்தான் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள்.

அடிப்படையில் சமாதானத்திற்கு விரோதியாகத்தான் திரு லக்ஷ்மன் கதிர்காமர் செயற்பட்டு வந்துள்ளார். தமிழ்த்தேசிய வாதத்திற்கு மட்டும் அவர் எதிரியாகச் செயற்பட வில்லை. எந்த வகையான சமாதானத் தீர்வுக்கும் அவர் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்துள்ளார். நோர்வே நாட்டின் சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக, திரு லக்ஷ்மன் கதிர்காமர் மிகக் காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் படித்தவர்தான்! சட்டம் தெரிந்தவர்தான்! ஆனால் ஆக்க பூர்வமாகச் செயல்படாதவர். அவர் திறமையாகச் செய்ததுதான் என்ன? ஜனநாயக மரபுகளை சட்டரீதியாக மீறுவது எப்படி? என்று ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு ஆலோசனை வழங்குவதுதான் இவரது முக்கிய வேலையாக இருந்திருக்கிறது. அதனை திரு கதிர்காமர் மிகத்திறமையாகவே செய்து வந்திருக்கிறார்.

உலகநாடுகளினதும், உலக நிறுவனங்களினதும் நியாயமான கரிசனைகளைக் கூட திரு கதிர்காமர் மதித்ததில்லை. 1999ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ந் திகதியன்று சிறிலங்கா விமானப்படையின் குண்டு வீச்சுத் தாக்குதலால் புதுக்குடியிருப்பில் 22 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளி உலகிற்கு உறுதி செய்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்த போது திரு லக்ஷ்மன் கதிர்காமர் பதிலுக்கு ஐக்கிய நாடுகள் சபையை கண்டித்தார். அன்று அவர் சொன்னதை எமது நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

"ஐக்கிய நாடுகள் சபை, உள்நாட்டுப் போரில் ஏற்படும் இழப்புக்கள் குறித்து தலையிட வேண்டியதில்லை. மலேரியா மற்றும் நுளம்புப் பிரச்சனைகளையும் சமூக பொருளாதார வளர்ச்சிகளையும் குறித்தே ஐக்கிய நாடுகள் சபை அக்கறை காட்ட வேண்டும்." என்று மிக்க கடுமையாக கதிர்காமர் அன்று கண்டித்திருந்தாhர். அவர் கருத்துப்டி நுளம்பு அடிக்க வேண்டிய இந்த அமைப்புக்கள் இன்று நுளம்படிக்காமல் அவருக்கு அஞ்சலிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

தன் இனத்து மக்கள் போர் காரணமாகவும், பொருளாதாரத் தடை காரணமாகவும் இன்னல் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கையில், திரு கதிர்காமர் அவர்கள் தன்னுடைய மனைவியுடன் உலகநாடுகள் பலவிற்கும் விஜயம் செய்ததால் ஏற்பட்ட செலவு சுமார் ஆறுகோடி ரூபாய்களுக்கும் மேலானதாகும். இச் செலவுகள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்ட போது அவர் கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் இந்த மனிதர் தன் மண்ணோடு ஒட்டாதவர். தமிழ் மக்களின் சாதாரண வாழ்வு முறை குறித்துக் கூட எதையும் அறியாதவர்தான் இவர்.

சந்திரிக்கா அம்மையாரின் தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் மண்ணோடு ஒட்டாத இன்னொரு மனிதரான பீலிக்கஸ் டயஸ் பண்டாரநாயக்கா என்பவர் சிறிமாவோ அம்மையாருக்கு ஆலோசகராக இருந்தார். சிறிமாவோ அம்மையாரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா அவர்கள் அன்று வழங்கிய ஆலோசனைகள் சாதாரண மக்களுக்குப் பெரும் துன்பத்தை வழங்கின. அந்த வகையில் இங்கே ஒரு வரலாற்று ஒற்றுமையையும் நாம் காண்கின்றோம்.

இந்த வேளையில் பின் நவீனத்துவ சிந்தனை ஒன்றை நாம் எமது நேயர்கள் முன் வைக்க விரும்புகின்றோம். வன்முறை என்பது ஆயுதத்தாலோ, அல்லது போரினாலோ வருவது மட்டும் அன்று! அரசியல் ஊடாகவும், சட்டங்கள் ஊடாகவும் வன்முறையை பிரயோகிக்கலாம். உதாரணத்திற்கு, ஓர் இனத்தின் மீது விதிக்கப்படுகின்ற பொருளாதாரத் தடை என்பது ஒரு வன்முறையான செயலாகும். அதேபோல் கருத்து வன்முறை, பிரச்சார வன்முறை என்று பல வன்முறைகளைப் பேரினவாதிகள் செய்து வருவது கண்கூடு.

அந்தவகையில் மெத்தப் படித்தவரும், கல்விமானும் அறிவுஜீவியுமான திரு லக்ஷ்மன் கதிர்காமரும் ஒரு வன்முறையாளரே! இவருடைய வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க வேண்டி வந்துள்ளதோடு, பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னல் நிறைந்த வழ்க்கையை மேற்கொள்ள வேண்டியும் வந்தது. இவற்றிற்கு திரு லக்ஷ்மன் கதிர்காமர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இன்று இந்தத் தனி மனிதச்சாவைப் பூரண அரச மரியாதைகளுடன் அடையாளப்படுத்துகின்ற சிங்களப் பேரினவாதம் நாளை லக்ஷ்மன் கதிர்காமரை முழுமையாக மறந்து போய் விடும். ஆனால் சிங்களப் பேரினவாதத்தின் மேன்மைக்குத் தன் சேவையை அர்ப்பணித்த திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களை ஈழத்தமிழினம் என்றுமே மறக்காது!



நன்றி. தமிழ் நேசன்
<b> . .</b>
Reply
#77
http://206.190.35.122/photos/ss/events/wl/...BHNlYwNzc2xpc3Q கதிர்காமரின் பியுனறல் சிலைட் சோ போட்டோஸ்
Reply
#78
கதிர்காமரை கொலை செய்தது புலிகள் தான் என்று ஆனித்தரமாக கூறி வரும் சிங்களப்பேரினவாதிகள் மற்றும் நாங்கள் (மாற்றுக்கருத்து நரிகள்) எத்தனை தடயங்களை பொலிஸார் கைப்பற்றி உள்ளார்கள் என்பதை கவனிக்க தவறிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது... :? காரணம் தாக்குதல் நடத்தியவருக்கு அருகில் ஒரு சிகரட் துண்டு ஒன்று இருந்துஇருக்கின்றது,, அதை பகுப்பாய்வு செய்வதற்கு அனுப்பியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்... "புலிகள் சிகரட் பத்துவதில்லை" என்பதை மாற்றுக்கருத்துக்கொண்ட நானும், சிங்கள பேரனவாதிகளும் சிந்திக்க தவறிவிட்டோமோ என்று என்னத்தோன்றுகின்றது... Confusedhock: Confusedhock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#79
கொலைகள் இவ்வளவு நாளும் கிழக்கில நடந்திச்சு இப்ப
கொழும்பில நடக்குது,தற்போதைய நிலவரத்தின் படி
இதுகள நிப்பாட்டுறது எண்டா போர் நிறுத்த ஒப்பந்ததில்
உள்ள சரத்துக்கள் நிறைவேற்றப் பட வேண்டும்.

அதாவது மக்கள் குடியிருப்புக்களில இருந்து இராணுவம்
வெளியேற வேண்டும்,ஒட்டுக் குழுக்கள் வட கிழக்கில
இருந்து வெளியேற்றப் பட வேண்டும்,அவற்றின் ஆயுதங்கள்
களயப் பட வேண்டும்.விடுதலைப் புலிகளின் போக்குவரத்து
ஏற்பாடுகள் பாதுகாப்பாக நடை பெற வேண்டும்.

எங்க செய்யுங்கோ பாப்பம்.Check mate. Idea
Reply
#80
<img src='http://www.nitharsanam.com/public/gallery/thuroki/DSCF5694.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/thuroki/DSCF5727.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/thuroki/DSCF5980.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/thuroki/DSCF5979.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/thuroki/DSCF5817.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/thuroki/DSCF5790.JPG' border='0' alt='user posted image'>
<img src='http://www.nitharsanam.com/public/gallery/thuroki/DSCF5671.JPG' border='0' alt='user posted image'>

படங்கள். நிதர்சனம்

ஒரு தமிழனின் இறுதிக்கிரியையில் அதிகமாக சிங்களவர்கள் வந்த முதல் சம்பவம் இது,
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)