Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராளிகள் படைப்பு
ஏழைகளில் விரியும் காட்சிகள்

அந்த வீட்டில்
தீ நாவுகளால்
பல நாட்களாய்
தீண்டப்படாத அடுப்படி
புூனைக்கு
கையளிக்கப்பட்டிருந்தது.


வெற்றுக்கலங்கள்
வெறும் தண்ணீரையும்
அவர்கள் கண்ணீரையும்
சேகரித்தன


தாயின் மார்பை
உறுஞ்சி உறுஞ்சி பலனின்றி
அலுத்துக் கொண்டு அழுதது
அங்கொரு கைக்குழந்தை
என்றோ ஒருநாள்
வேயப்பட்ட கூரை
கறையானுக்கு
காணிக்கையாகியிருந்தது


வீட்டில் விரிசல்களுக்கிடையே
வெய்யிலும், மழையும், காற்றுமே
தடையின்றி வந்து போயின.


இரவில் நிலவிருந்தால் மாத்திரமே
அவர்கள் குடிலுக்கு
வெளிச்சம் வரும்
இரவின் பனிக்காற்று
அவர்கள் உடலை
குளிர்வித்தாலும்
உள்ளம் ஏனோ
எரிந்து கொண்டேயிருந்தது.


இருந்தாலும்,
என்றாவது ஒருநாள்
விடுதலை
தம் வீட்டில்
விளக்கேற்றும்
என்ற நம்பிக்கை
அவர்களுக்குள் இருந்தது.

செ. இராணிமைந்தன
Reply
நாக.சிவசிதம்பரம்
எனக்குப் படிக்க
விளக்கில்லை:
விளக்கம் இல்லை
வெளியிறங்கி,
மூச்செடுக்க முற்றத்தில்
வெளிச்சம் இல்லை.


உழைச்சலுடன்...
சுற்றிவர நோக்கச்
சுடுகிறது உள்மனசு..


என்மூச்சுக் காற்றில்லை
எனது கால் ஈரமில்லை..
என்கோயில் வீதியிலே
இலைதெரியா மரநிழலில்
பள்ளியிலே... என்றந்தப்
பழைய நினைவிடங்கள்...
சுற்றிவர நோக்கச்
சுடுகிறது உள்மனசு
'வந்தவனின்' பக்கம்
வானும் 'வெளிச்சுப்' போய்..
மேகங்களும்... மௌன
'முட்டில்' திணறுதலாய்...


வயல் வரம்பில் தலைபுதைத்து
வதிவிடங்கள் இழந்த - சிறு
குழந்தைகளின் வெற்றுடம்பாய்
சிறுகுடலின் பெருநெருப்பாய்...


விளக்குப் புகையில்
விரித்தபடி புத்தகங்கள்
சுற்றிவர... நோக்க...!
Reply
உமாஜ}ப்ரான்
இருளின் பிடி இறுக
ஒளி சிறுத்து ஒடுங்கிற்று!
ஒளியைத் தின்று... தின்று
கனத்த இருள்
ஒளியிலேறி மிதிக்க
ஒளிநசிந்து முடங்கிற்று
ஒளியின் சுவடழித்து
இருள் கவிந்து மூட...
ஒளியும் இருளும் என்றில்லாது
ஒளியின் உருவழிந்து இருளென்றாயிற்று


விழிபருக ஒரு சிறு
ஒளிக்கீற்றுத் தானுமின்றி
விழி புழுங்கிச் சிவந்தது
ஒளியோடு புணர்கலில்
உயிர்ப்புறும் வாழ்வை
உறுஞ்சிய இருள் தொலைக்க்
விழி கொதித்துக் குமுறிற்று.
ஒளிபருக அவாவி
சகிப்பின் கருப்பையிலிருந்து
கருவிழி பிதுங்கி விரிந்ததுலு}.
ஒளியினை விழுங்கி
உப்பிய இருள் வயிற்றில்
ஓங்கி அறைந்து ஊழியாய் வெடித்தது.
ஓர் கணப்பொழுது
திசைகள் அழிந்து.. உயிர்க்க!
இருள் கிழிந்து பொசுங்க...
பேரொளிப் பிழம்பு தெறித்தது.
Reply
மொழிபெயர்ப்பு: யமுனா ராஜேந்திரன்
நமது பிரச்சினைகளைப்போல, நமது துயரங்களை ஒத்தனவாக, நமது ஏக்கங்களைப் போன்று, நமது போர்க்குரல் மாதிரியே குர்திஸ் மக்களினதும், 'புவிப்பரப்பெங்கும் சிதறடிக்கப்பட்டு வாழும் ஒரு இனத்தைச் சேர்ந்த மக்கள் குர்திஸ் மக்கள், தமது சொந்த நிலங்களிலிருந்து விரட்டப்பட்டவர்கள். ஈரான், ஈராக், துருக்கி, சிரியா, ஆர்மீனியா எனத் துண்டாடப்பட்ட வாழ்வும் கலாச்சாரமும் அவர்களுடையது. அவர்களது வாழ்வு நொறுங்கிப்போனது போலவே அவர்களது மொழியும் படைப்புக்களும் கவிதைகளும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து கொடூரமாக அழிக்கப்பட்டு வருகிறது. அழிவு பற்றிய கண்ணீர் அவர்களது ஆன்மாவில் ஏற்படுத்தும் வலி, வாழ்வுக்கான எதிர்ப்புணர்வு போன்றவைகளே அவர்களின் கவிதைகள். உடனடி வாழ்வனுபவம் மக்களின் பேச்சுமொழி, அரசியல் தொலைநோக்கு போன்றன அவர்களின் கவிதைகளில் வெளியாகின்றது. இழந்துவிட்ட தாயகத்தைப் பற்றிய ஆதங்கம் அழிவுற்ற தாயகத்திற்கு அல்ல, விடுதலைபெற்ற தாயகத்திற்குத் திரும்புவோம் என்ற ஏக்கம், இயற்கை மற்றும் அரசியல் உற்பவங்களில் இருந்து மீண்டும் எழுச்சியுடன் துளிர்க்கும் அவர்களது சங்ககாலம் போன்றவைகளே இன்றைய குர்திஸ் கவிதைகளின் பாடுபொருள்' என்கிறார் இக்கவிதைகளை மொழிபெயர்த்த யமுனா ராஜேந்திரன். எளிமையும், ஆழமும், தீவிர உணர்வும் மிக்க இந்தக் கவிதைகள் நமது சூழலுக்கு மிக அவசியமானவை. எமது படைப்பாளிகளின் பார்வைகள் அகலிக்கவும், படைப்புச் செழுமை, ஆழம், வெளிப்பாட்டு நேர்மை என்பனவற்றுக்கும் இவை பாடமானவை. இவற்றின் முக்கியத்துவம் கருதி மலைகளைத் தவிரவும் எமக்கு நண்பர்களில்லை என்ற குர்திஸ் கவிதைத் தொகுதியிலிருந்து சில கவிதைகளைத் தருகின்றோம்.
Reply
கற்கள்

லத்தீப் ஹல்மத்
கற்கள்
சந்தோஸத்தையோ துக்கத்தையோ உணர்வதில்லை
அது எவரையும்
வெறுப்பதோ நேசிப்பதோ இல்லை


காதலில் ஈடுபட
கற்களுக்கு இதயமும் இல்லை
தமது காதலர்களுக்கு
கடிதங்களோ கவிதைகளோ எழுத
அவற்றுக்கு கைகளும் இல்லை


வீதிக்கு வீதி துரத்தி அவை
காதலுக்கு அலைவதுமில்லை
காதலர்கள் கைது செய்து வரும்போது
கற்களுக்கு
ஓடுவதற்கு கால்களுமில்லை


இறந்துவிட்டால் அழுவதற்கு
அவைகளுக்கு அம்மாக்களும் இல்லை
தவறான வழி நடந்தால் நெறிப்படுத்த
அவைகளுக்குத் தந்தையரும் இல்லை
தம்மை அர்ப்பணிப்பதற்காக கற்களிடம்
குறிப்பிட்ட சேதமும் இல்லை
எங்கே அவைகள் கிடைக்க நேர்கிறதோ
அங்கேயே ஓய்வாக இருப்பதற்கு இடம்பிடிக்கும்
இறுக்கமாக இருந்துவிடும்


கற்கள்
தமது கடந்த காலத்தை நினைக்க முடியாது
அவைகளுக்கு நினைவுகளை மீட்கவும் முடியாது
மாறாக இருந்திருந்தால்
எப்போதேனும் அவை
ஒரு கவிதையோ ஒரு கடிதமோ எழுதியிருக்கக்கூடும்


இவையெல்லாம் இருந்தாலும் கூட
நமது மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள்
கற்கள்
அவை இருக்கும் இடத்துக்கே பாரம்
சில மனிதர்களும் அப்படித்தான
Reply
என்றாலும்
லத்தீப் ஹல்மத்
ரூஙூஸசூசி;
இந்த உலகின் வரைபட வடிவத்தை
முழுக்கவும் நீ
சுவடேயில்லாமல் அழித்து விட்டாலும் கூட
இன்னும் இந்தப் புூமியை நீ
சின்னா பின்னமாக நூலுருண்டையாக
தாறுமாறாக
செய்துவிட்டாலும் கூட
எப்போதெல்லாம்
எல்லைகள் மறுவரையறை செய்யப்படுகிறதோ
அப்போதெல்லாம் இந்த நகரத்திற்கு
நான் மறுபடியும் வருவேன்


குர்திஸ்தானில் மட்டுமே என்
சொந்த வீட்டை நான் அமைத்துக் கொள
Reply
விதைகள்
ஸெர்கே பேகஸ்
நாங்கள் பத்துலட்சக் கணக்கானவர்கள்
நாங்கள் மூத்த மரங்கள்
புதிதாக வளரும் செடிகள்
விதைகள்
அங்காரா தலைக் கவசத்திலிருந்து
விடிகாலையில் அவர்கள் வந்தார்கள்
எங்களை வேரோடு பிடுங்கினார்கள்


எம்மை தொலைதூரம்
வெகு தொலைதூரம் எடுத்துச் சென்றார்கள்
வழியில் நிறைய
பழைய மரங்களின் தலைகள் உதிர்ந்தன
குளிரில் நிறைய புதிய செடிகள் இறந்தன
காலடியில் நிறைய விதைகள் சிதறி தொலைந்து
காணாமற் போய் மறந்துபட்டன


கோடை காலத்தின் சன்னமான நதிபோல்
நாங்கள் கசிந்தோம்
இலையுதிர் காலத்தினுள் பறவைக்கூட்டம் போல
நாம் மறைந்தோம்
ஆயிரக் கணக்கில் மங்கலாகினோம்
எம்மிடம் விதைகளிருந்தன
காற்று மறுபடி
கொண்டு சேர்த்த விதைகள்
பசிகொண்ட மலைகளை மறுபடி அவை சேர்த்தன
பாறைகளின் வெடிப்பில் அவை
மறைந்து கொண்டன


முதல் மழை
இரண்டாம் மழை
மூன்றாம் மழை


மறுபடி அவை வளர்ந்தன
மறுபடியும் நாங்கள் ஒரு ஆரண்யம்


நாங்கள் பத்துலட்சக் கணக்கானவர்கள்
நாங்கள் விதைகள்
செடிகள்
மூத்த மரங்கள்


பழைய தலைக்கவசம் செத்தது
இப்போது நீங்கள்
புதுத் தலைக்கவசம்
ஏன் நீங்கள் ஆகாயத்தின் தலையை
உங்களின் கீழ் வைக்கப் பார்க்கிறீர்கள்?


எனக்குத் தெரியும்
அது உங்களுக்கும் கூடத்தெரியும்
மழைக்கும் காற்றுக்கும்
ஒரேயொரு விதை இருக்குமட்டும்
இந்த ஆரண்யம் எந்நாளும் முடிவுறாது
Reply
எதிரிகள்
குர்திஸ் தேசிய கீதம்
இய் ரக்விப்
எதிரிகளே
குர்துக்கள் இப்போதும் வாழ்கிறார்கள்
வெடிகுண்டுகள் அவர்களை அழித்துவிடமுடியாது
ரூஙூஸசூசி;
நாம் போராடுவதை விட்டுவிட்டோமென
எவரும் சொல்லமுடியாது
நாம் எம் பதாகையை ஓங்கி
உயர்த்தியபடி
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்
குர்துக்கள்
தமது சுதந்திரத்திற்காகவே
தமது பாசறைகளுக்குப் போனார்கள்
தமது தேசத்திற்காகவே இரத்தம் சிந்தினார்கள்
தம் உயிரையும் ஈந்தார்கள்


நாம் போராடுவதை விட்டு விட்டோமென
எவரும் சொல்லமுடியாது
நாம் எம் பாதாகையை ஓங்கி
உயர்த்தியபடி
தொடர்ந்து
போராடிக் கொண்டிருக்கிறோம்


நாங்கள் மெதஸின் குழந்தைகள்
குர்திஸ்தான் மட்டுமே எமது இலக்கு


நாம் போராடுவதை விட்டுவிட்டோமென
எவரும் சொல்லமுடியாது
நாம் எம் பதாகையை ஓங்கி
உயர்த்தியபடி
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.


இரத்தச் சிவப்பு நிறத்தின்
புரட்சியின் குழந்தைகள் நாங்கள்
எமது வரலாறு
எமது குருதியினால் எழுதப் பட்டிருக்கிறது


நாம் போராடுவதை விட்டுவிட்டோமென
எவரும் சொல்லமுடியாது
நாம் எம் பதாகையை ஓங்கி
உயர்த்தியபடி
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்


நாங்கள் குர்துக்கள்
எப்போதும் எம் தேசத்திற்காக
மரணமுற
நாங்கள் தயாராயிருக்கிறோம்


நாம் போராடுவதை விட்டுவிட்டோமென
எவரும் சொல்ல முடியாது
நாம் எம் பதாகையை ஓங்கி
உயர்த்தியபடி
தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
Reply
சித்தாந்தன்
துப்பாக்கி முகமணிந்த அவர்கள்
நெருப்புத் தெறிக்கும் சொற்களை
காற்றில் எழுதுகிறார்கள்.


நீண்டு கிடக்கும் மனித வரிசையில்
அவஸ்தையுறுகிறது.
என் மனமும் கனவுகளும்
பீதியிலுறைந்த விழிகளை
கொடூர முகங்களிலிருந்து விலக்கி
பார்வையை திருப்ப முடியாதபடி
சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.


தோழில் மாட்டியிருக்கிற தோற்பையின்
ஒடுங்கியபட்டி
மனதை இறுக்கிக்கொண்டிருக்கிறது.
நட்சத்திரங்களை வருடிவரும்
இனிய என் பாடல்
கால்களுக்கிடையில் அழுந்தி சிதைகிறது.


கிரகணங்களை அள்ளியுூற்றும்
சூரிய நடுப்பகலில்
என இளமை கருகி எரிகிறது.


ஒவ வொரு மனித முகத்தையும்
துப்பாக்கி முகங்கள் சந்தேகமெழ
பார்ப்பதாய்
உயிரை உறுத்தும் வலி
மனதைத் துண்டுகளாக உடைக்கின்றது.
இந்த உயிர்த்தொடுகை வரிசையில்
வாழ்வு அறுபடும் கணம்
என் தலையில் எழுதப்பட்டிருக்கலாம்.


படபடப்பு நிறைந்த கைகளால்
அடையாள அட்டையை எடுக்கிறேன்
அதில்
இப்போதுள்ள என்முகம் இல்லையென
எல்லோரும் சொல்கிறார்கள்.
Reply
விண்வரை விரியும் வியத்தகு வீரம்
விரிந்தோர் மலரை நிகர்த்திடும் அழகு
பண்ணெடுத் தெவரும் பாடிடும் பண்பு
பரணியொன் றெழுத வல்லவுன் வெற்றி
கண்வழி வழியும் கருணையின் கசிவு
களத்தினில் பகையை வெல்லுமுன் ஆற்றல்
இன்னும் பல்லாண்டு ஆண்டென வளர்க.
இளமையோடிருந்து வாழ்க பல்லாண்டு!
ரூஙூஸசூசி;
ஆயிரம் அகவை நினக்கெனவாகும்
அன்பினர் வாழ்த்து அதையுருவாக்கும்.
நாவிருந் தெழுமென் நற்கலி யெழுதும்.
நலன்பெறும் சொற்கள் நடப்பனவாகும்.
காவியப் பொருளே! காலையின் கதிரே!
கவினுறப் பொலியும் அருள்மிகு திருவே!
தேவியின் கடைக்கண் பார்வை பெற்றவனே
திருவெலாம் சூழ வாழ்க பல்லாண்டு!

-புதுவை இரத்தினதுரை
Reply
உள்ளத்தில் மலர்ந்தவை.
உள்ளத்தில் மலர்ந்த தேசப்பற்றால்
ஊருக்குள் புகுந்து பகைவிரட்ட
உலகம் என்றும் வியக்கும்
உன்னத போராட்டம்
உறுதி மிகுநெஞ்சின்
உணர்வுகளைத் தூண்டியது
உடலென்ற சிகரத்தில்
ஊடுருவும் சன்னத்தால்
ஓனங்கள் வந்தாலும்
உயிரென்று உள்ளவரை
உறங்காது எம் கண்கள்
உலகத்தில் தமிழ் ஓங்க
உன்னத இலட்சியத்தால்
உருக்குலையா மனங்கொண்ட
உத்தமனின் வழி அமைப்பில்
உறுதியுடன் களம் விரைவோம்.

போராளி.
தமிழ்மாறன்.
Reply
யுத்தம்

செந்தமிழர் நிலம் எங்கும்
மலர்ந்திருக்கும் யுத்தம்
கயவரின் வெறித்தனத்தால்
உறங்குவதற்கே அச்சம்
பல இழசின் ஓசையினால்
பாரெங்கும் பெரும் சேதம்
குண்டுகளின் அறுவடையால்
குடியிருக்க பதற்றம்
அன்றாடம் உணவருந்த
அவனியிலே கஸ்டம்
தமிழ் இனம் அடங்கி
இருப்பதில் இனி ஏதும் இல்லை அர்த்தம்
செந்தமிழன் தேசம் எங்கும்
மீட்பதற்கே சித்தம்
இனி சிந்துவோம் சுதந்திர இரத்தம்.


போராளி
தமிழ்மாறன்.
Reply
மரண தண்டனை
இரவில் படையினருக்குக் கட்டளை வந்தது
எங்கள் அழகிய கிராமம்
செய்த்தாவை அழித்திடுமாறு
செய்த்தா
மரங்களின் மணமகள்
முகை அவிழும் மலர்ச் சோலை
காற்றுகளின் தீப்பொறி
இருளில் வந்தனர் படையினர்
கிராமத்தின் புதல்வர்
மரங்கள்
வயல்கள்
மலரா முகைகள் அனைத்தும்
புகலிடம் தேடி
செய்த்தாவை இறுகப்பற்றி
அணைத்து நின்றன.
'கட்டளை இதுதான்
விடியமுன்னர் செய்த்தா அழிக்கப்படும்
எல்லாரும் வெளியேறலாம்'
ஆயினும் நாங்கள்
இறுகப்பற்றி அணைத்து நின்றோம்
பாடினோம், செய்த்தா எங்கள் புூமி
புூமியின் இதயம்
நாம் அதன் கிளைகள்
எனினும் மக்கள் வீழ்ச்சி அடைந்தனர்
சிறிது நேர எதிர்ப்பு
பின்னர் இரவுகளின் எல்லை தாண்டி
அழிவுற்ற ஒரு அணைப்பாக மட்டும்
செய்த்தா எஞ்சி இருக்கிறாள்
வினாடிகளில் அவள் கற்குவியலானாள்
ஒரு சிறு அடுப்புக்கூட மிஞ்சவில்லை
மனிதரும் கற்களும் அரைபட்டு
புழுதியாய் மாறினர்
சாத்தியமற்றதின் வெளிச்சத்தில்
என்றைக்குமாகத் தூவிக் கலந்தனர்
இப்போது மாலை வேளைகளில்
எமது காற்றின் பாடலில்
சமவெளிகள் மேலாக
தன் கருஞ்சிவப்புத் தீப்பொறிகளைக்
கனலவிட்டவாறு செய்த்தா எழுகிறாள்
காலையில் செய்த்தா
வயல்களுக்குத் திரும்புகிறாள்
டியுூவிப் மலர்களைப் போல்
செய்த்தாவில் இரவுதான் காலை
இரவுதான் காலை

சுலஃபா ஹ்ஜாவி
Reply
பாடகன்
ஒரு சிறிய மாலைப் பொழுது
ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமம்
இரண்டு தூங்கும் விழிகள்
முப்பது வருடங்கள்
ஐந்து யுத்தங்கள்
காலம் எனக்காக ஒரு கோதுமைத் தாழை
ஒளித்து வைக்கிறது
பாடகன் பாடுகிறான்
நெருப்பையும் அன்னியர்களையும்
மாலைப் பொழுது
மாலைப் பொழுதாகவே இருந்தது
பாடகன் பாடிக் கொண்டிருந்தான்
அவர்கள் அவனை விசாரித்தனர்
நீ ஏன் பாடுகிறாய்?
அவர்கள் அவனைக் கைது செய்கையில்
அவன் பதில் கூறுகிறான்
ஏனெனில் நான் பாடுகிறேன்
அவர்கள் அவனைச் சோதனையிட்டனர்
அவனது மார்பில் அவனது இதயம் மட்டும்
அவனது இதயத்தில் அவனது மக்கள் மட்டும்
அவனது குரலில் அவனது துயரம் மட்டும்
அவனது துயரத்தில் அவனது சிறைச்சாலை மட்டும்
அவனது சிறைச்சாலையில்
அவர்கள் தேடுதல் நடத்தினர்
சங்கிலியில் பிணைப்புண்டு கிடக்கும்
தங்களை மட்டுமே அங்கு கண்டனர்


(Pழநஅ ழக வாந டயனெ) (நிலத்தின் கவிதை) என்ற
நீண்ட கவிதையின் ஒரு பகுதி)
மஹ்முட் தர்வீஸ்
Reply
நெஞ்சமெல்லாம் நிறைந்தவரே...

இரா.திருமாறன்

கார்த்திகைத் திங்கள்
கார்மழை மேகம் சூழ்ந்திருக்கும்
மாலைநேரம் எங்கள் தாயகத்தில்
ஊர்முழுதும் திரண்டு வந்து - உம்
அருகில் அணிவகுத்து நின்று,
நெய்விளக்கேற்றி உமை
நினைத்து நிற்கும் அந்த
நினைவழியா நாட்கள்,
நேற்றுப்போல் இருக்கிறதே
எங்கிருந்தோ வந்தவெதிரி
எங்கள் ஊர் புகுந்தவேளை
போட்டது போட்டபடி
எல்லாமும் இடிந்து
எங்கள் உறவுகளோடு
உயிரை மட்டும் இறுகப்பற்றி வந்தோம்.
ஏதிலியாய் வாழ்க்கை.
எவரிடமும் கையேந்தவில்லை நாம்
எதற்கும் கூட கலங்கவில்லை.
ஆனால்.?
உங்கள் கல்லறைகள் மட்டும்
எதிரியவன் காலடியில்
விட்டு வந்த காரணத்தால்
வருந்தினோம், வாய்விட்டழுதோம்
பெருகியது துயரத்துடன் கண்ணீரும் தான்.
வருடா வருடம் வருகின்ற
உம் திருநாளில் அருகிருக்க,
எம் நெஞ்சமெல்லாம் ஏங்கி
நெக்குருகிப் போகிறதே.
தனிமையிலே உமை விட்டுவந்த
துயர் நினைந்து
நெக்குருகிப் போகிறதே நெஞ்சமெல்லாம்.
ஆறு வருடங்களில் முன் வந்த
அந்த ஒக்டோபர் திங்கள் 30ஆம் நாள்,
தமிழர் தம் இதயமெல்லாம்
துயரத்தில் தோய்ந்த நாள்.
எதிரி ஊர் புகுந்த சேதி
எங்கள் காதினிலே வந்ததனால்
புறப்பட்டோம் ஊர் பிரிந்து.
கண்டி வீதி வழியாக செம்மணிதான் கடந்து,
கால்போன போக்கினிலே
நடைப்பிணங்கள் போல
நாம் நடந்த காட்சி
சொல்லில் வடித்திடத்தான் முடிந்திடுமா?
குஞ்சென்றும் மூப்பென்றும்
கூனென்றும் குருடென்றும்
பேதங்கள் ஏதுமின்றி,
துயர் சுமந்தோம் அந்நாளினிலே,
ஊரிழந்து வந்தவர் நாம்
திசைக் கொன்றாய்ப் பிரிந்தோம்.
வன்னியிலும் வளங்கொழிக்கும்
பிறநாடுகளிலும்
எங்குதான் இருந்தாலும்
எம் நினைவு தாயகத்தின் காவலர்கள்
உம்முடனே
எங்கிருக்கின்றோம்? என்பதல்ல
என்ன செய்கின்றோம்? என்பதுதான்
தமிழர் தம் கடப்பாடு.
தமிழர் தம் தலை நிமிர,
தாயகமும் கைசேர,
கரம் கொடுப்போம் நாமொன்றாய்,
மாவீரர் உம் நினைவுடனே,
உமக்கென்று எதுவும் வேண்டாது
எமக்கென்று உம்முயிர் தந்தவரே,
மறப்போமா உம்முகவரிகள்?
எங்கிருக்கின்றோம் என்பதல்ல
என்ன செய்கின்றோம் என்பதனை
நன்றாக உணர்ந்தவர்கள் நாம்.
உறுதியாய் எமக்கொன்று தெரிகிறது.
ஊர்பிரிந்த உறவுகள் - நாம்
ஊர் திரும்பும் நாள்
தூரத்தில் இல்லை.
Reply
காலத்தின் கருவுூலங்கள்
-ஆதிலட்சுமி சிவகுமார்.
என் ஜென்மங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறவே
என்னைத்தேடி எங்கேயும் நீ அலையவேண்டாம்.
கண்ணீரில் உன்னைக் கரைக்கவேண்டாம்.
இனிமைகளை துறக்கவேண்டாம்
பனியில் நனைந்து முகம்சிலிர்த்து நிற்கும்
புூக்களை உற்றுப்பார்; அதில்
என் முகம் இருக்கிறது.
காலையில் கண்களை விழித்தவுடன்
யன்னலூடாக ஓடிவந்து ஒட்டிக்கொள்கிறதே காற்று
ஆழமாக அக்காற்றை உள்ளிளுத்துப்பார்; அதில் என்
மூச்சின் வாசத்தை உணர்வாய்!
எதிரியிடமிருந்து மீட்டெடுத்த நிலப்பரப்புகளில்
அவதானமாய் அடியெடுத்து நடந்துபார்!
அங்கே என் சுவடுகள் பதிந்து கிடக்கின்றன.
வேகமாகப் போகும் வாகனங்களின் பின்னே
எழுந்து பரவி அடங்குகிறதே புழுதி
அதில் என் உடற்கலங்கள் உருமாறியுள்ளன.
நிலவு பிரிந்த வானத்தில் தனித்து நின்று
கண்சிமிட்டுகின்றனவே நட்சத்திரங்கள்
அவற்றில் என்புன்னகைகள் பொதிந்துள்ளன.
மூசி எழுந்து வந்து உன் முன்னால் மண்டியிட்டு
திரும்பிச் செல்கின்றனவே திரைகள்
அவற்றில் என் ஆன்மா மிதக்கின்றது.
என்னைத்தேடி நீ எங்கேயும் அலையவேண்டாம்
காலத்தின் கருவுூலமாய் உன்காலடியில் கிடக்
Reply
வேட்டைக்காரர் வந்தபோதும்...
வந்த பின்பும்...
இனிப் போகும் வரையும்...
புூ சிலிர்த்த வனத்தில்
பனி தடவிய காலையிருந்தது.
இருள் புணர்ந்த காடெங்கும்
சௌந்தர்யத்தின் ஜொலிப்பு.
நாசி துளைத்தேகியது வாசம் சுமந்த காற்று.
வனப் பறவைகளின் வாயிலிருந்து
பாடலாய் வழிந்தது அமிர்ததாரை.
சலசலத்து நடந்து போயிற்று
நிறைமாதத் தாயாய் ஒரு குளவாய்க்கால்.


நாணற்புல், சடைத்த கரைமருங்கெங்கும்
மோனத் தவமிருந்தன
அடிமண்ணை நீரரித்துப் போக
தாடி முளைத்த மரவேர்கள்.
இராமுழுவதும் இன்பம் துய்த்தோய்ந்த மான்கள்
கரையிறங்கி மறுகரையேறிப் புழுதி கிளப்பிப் போயின.
பகலுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்தி
நதிக்கரையில் சுவடுவிட்டு
நகர்ந்திருந்தன யானைகள்.
வேட்டைக்காரர் வராத காலை
இப்படிக் காடுறைந்து கிடந்தது
அந்த நொடிவரை.
அவரவர் அவரவர் கூட்டிலும் வீட்டிலுமாக
தத்தம் சுயத்தையும் இருப்பையும் எழுதியபடி
இருந்தது அவரவருக்கான வாழ்வு.


1505இல் முதல் வேட்டைக்காரன்
படகேறி வந்திறங்கினான் பீரங்கிகளோடு
கரையெங்கும் சாதாளை நெடிலு}
மணலெங்கும் பிணமெரிக்கும் வாடை
காடு கலங்கி முதன்முதல் கண்ணீர் விட்டது.
பிறகு இன்னொருவன்
அதன் பிறகு வேறொருவன்
வேட்டைக்காரரின் வருகை தொடர்ந்த போது
காடு கன்னிமைகிழிந்து கதறியது.
வேட்டைக்காரரின் நிறங்கள் மாறின
மொழிகள் மாறின
ஆயினும் காடு அழிவுறலானது இன்றுவரை.


ஒரு நாள் தென்திசைக் காட்டுக்கு தீமூட்டி விட்டனர்
அகதியாயின மான்களும் மயில்களும்
இன்னும் பேசாதிருந்தால் காடே எரிந்துபோம்
போராடப் போயின புலிகள்
புள்ளி மான்களும் புலியாகிப் போயின
இப்போ வனமெங்கும்
வேட்டைக்காரர்களுக்கும் மூத்த குடிமக்களுக்குமான போர்.
இந்த முதிர்காடு பறவைகளுக்கான தொட்டில்;
மிருகங்களுக்கான மரபுவழி முற்றம்;
யாருக்கும் குத்தகைக்கு கொடுக்காத கொடிக்கால்;
விட்டுக்கொடுப்புகளுக்கு இடமற்ற உரிமம்
காடு புகுந்த வேட்டைக்காரர்கள்
ஆதிக்குடிகளை பேச்சுக்கு அழைக்கும் அவலம்
காடு மீளும் வரை
வேட்டைக்காரருடன் போர் தொடரும்
புலிகள் உறுதியுரைத்துள்ளன
புள்ளிமான்களும் வரித்தோல் போர்த்துள்ளன.


மான்களின் கண்களில் இப்போ மையில்லை
கால்கள் வலுக் கொண்டுள்ளன
புூச்சிகளின் வாயிற் கூடப் போர்ப்பாட்டு
காடு கிளர்ந்தெழுந்து விட்டது
வேட்டைக் காரரெல்லாம் காடுவிட்டேகும் வரை
பாட்டின் சுருதி பிசகாது.
Reply
விண்பொய்க்கா வளமெறிந்து, விரிசுடர் எழில்வீசும்
பொன்னான புூமியிலே
மண்வாசத்துடனேயே மலர்வாசம் கமழ்ந்து நிற்க
மாடிணைத்து ஏரோடி மணிமணியாய்
நெல்விதைத்து நெற்றியுடன் நிலமகளும்
வியர்வையாலே உறவாடி
பல்வளமும் பொலிந்தொளிர்ந்த பொன்நாடு - எம்நாடு
பஞ்சத்தெரிகுடிலாய் பாழ்பட்டுப் போனதென்னே!!


தென்றல் தவழ்ந்து வர தெம்மாங்குப் பாட்டிசைத்து
தேரோடித் திழைத்திருந்த தேன்தமிழ் ஈழமிது
கன்றல்க் காடாகி கயல்பாய்ந்த அருவிகளும் - கானகத்துச்
சுடுகாடாய் கருகிப் போனதென்னே!
புழுதி புரட்டியிங்கு பொன்னெடுத்த பார்விட்டு
புூச்சிகளாய் கலைந்தோடி
அழுதிங்கு அலைகின்றோம் - ஆதரிப்பார் யாருமின்றி
அயலவனின் வாசலிலே.


அன்னமிட்டு ஆதரித்து அன்புடனே அரவணைத்து
அணைவோரை அணைப்போமே - இன்று
சின்னதுகள் வாய்வயிறு ஒட்டியிங்கு அலறுதய்யா - எம்
சீர்பாய்ந்த பாரதுவும் செங்குருதிச் சிவப்பாச்சு!
ஆராரோ ஆரிவரோ அழகாக ஒலித்த மண்ணில் இன்று
ஆவென்று வாய்பிளந்து ஓலமிடும் சாவோசை!
ஆராரோ அடிமிதித்து அழகுநகர் பாழாச்சு!!
ஆவியுடன் பேயலையும் ஆளில்லா வீடாச்சு!!!


கோலாடிக் கும்மியெடுத்து கோயிலில் விளக்கேற்றி
காலெடுத்துப் பரதமாடிக் கனிவுூறக் கவியிசைத்து
மேலாக நிமிர்ந்ததெம் மேனிநிலம் போனதய்யா!! - எம்
மாதாவும் எங்கே? மால்மருகன் கோயிலெங்கே?
யாதெவையும் விட்டோடி யாசகராய் ஆனமிங்கே?
யாழெடுத்த நிலந்தன்னின் யௌவனம் தானெங்கே?
ஏதெவையும் போனாலும் ஏற்றமுறு வீரமது
எங்கேயும் போகவில்லை! எழுந்துவிட்டால் ஏதுஇல்லை?


போர்மேகம் ஓடிப் புதுப் பொலிவு புலர்ந்திடும்
பைந்தமிழ் நிலமெல்லாம் பசுமை புத்தொளிரும்
வேரோடு சாய்ந்துவிடும்லு}
வெறிகொண்ட வேற்றரசு!
தாரோடு நாமாண்ட தாயகம் மீண்டிடும்,
தண்தமிழும் இசைபாடும் - தீந்தென்றல் விளையாடும்
ஏரோடு மீண்டுமங்கு ஏற்றமும் எழுந்துவிடும்! - இனியென்றும்
எம்மினம் தலைநிமிரும்!! - இதைத் தரணி போற்றும
Reply
துடுப்புக்களின்
தீரா வலித்தல்
உடைத்தெறிந்த துடுப்புக்களின்
இன்னும் அடங்காத் துடிப்பு
என்றும் கூர்மைமழுங்கா
வலிமையின் உயிர்ப்பே


எதிர் நீச்சலிடுகின்ற
எல்லாவற்றுள்ளும்
அதே இயக்கம்


துடுப்பாக இருத்தல்
துடுப்பாக உழைத்தல்
துடுப்பாக வலித்தல்
வலிமை கொள் வாழ்வே


துடுப்புக்களை
உடைத்தெறிந்த பின்னாலும்
உடைக்க முடியாது போனது


மரணமில்லா வாழ்வின்
திசை நோக்கிய
தீரா வலித்தலை


தீராது வலிக்கும் துடுப்புக்களும்
சுதந்திரத் தூரிகையே
சுதந்திரத் தூரிகையின்
தீராவலி கொண்ட இயக்கம்
என்றைக்குத் தான் தணிந்தது?


சுபாஸ்.
Reply
அறியப்படாதவர் மீது
ஒரு அஞ்சலிப் பாடல்

-வி யாசன்
என்றும் போலத்தான் அன்றும் விடிந்தது
எந்த மாற்றமுமில்லாது
வழியில் அகப்பட்டதனைத்தையும் தழுவியபடி
நேற்றைய இரவைக்கீறி காற்று உயிர்ப்புற்றுலவியது.
நம்பிக்கையே நாளாந்தமாகிய வாசல்களில்
மெல்ல மெல்ல வெய்யில் பரவியது.
அவிச்சலில்லாத அந்த ஆனந்தப்பொழுதில்
வன்னியின் துயரத்துள்ளும் ஒரு சுகம்தெரிந்தது.
பாதங்களில் வேகம்புூட்டாத பரவசத்துடன்
விடுதலை மனிதர்கள் வெளியே வந்தனர்.
எந்தவானொலி என்ன சொல்லிற்றோ தெரியாது.
முகிலுரசிய தலைகளில் முகங்கள் புூவனமாயின.
மகிழ்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும் போல
ஆனந்தத்தவிப்பில் பலர் அழுதேவிட்டனர்.
வாய்வந்த வார்த்தைகளும் கூட
தொண்டையில் சிக்குண்டு திணறின
எடுத்தது எடுத்தபடியும் போட்டது போட்டபடியும்
புழுகமேறிய தமிழர் சைக்கிளேறி உலாப்போயினர்.
நெஞ்சுக்குள் சந்தோசம் நிறையும்போது
புூரிப்பின் வேர்களில் யாருக்கும் புூப்புூக்கும்.
புூத்துச் சிலிர்த்துப்போனது எம்புூமி.
காற்றின் திசைகளெல்லாம் கட்டுநாயக்காவே விரிந்தது.
பன்னிரண்டு குண்டுக்குருவிகளின் குடலுருவிப்போனதாம்.
எவரோ எய்த அம்பு
வீணான பொல்லாப்பேதும் வியாசனுக்கு வேண்டாமே
எய்தவரை ஓ எனக்கொள்வோம்
அது யாராகவும் இருந்துவிட்டுப்போகட்டும்,
அம்பெய்த அபிமன்யுூக்களைப் பற்றியே
எல்லாவாய்களும் பேசின.
அருச்சுனனின் புதல்வர்களே!
உங்களுக்கெம் நன்றியென உரைத்தது காற்று.
தன் சாபக் கவிதைகள் பலித்ததெனச்
சந்தோஸித்தான் வியாசன்.
வானத்தாயும் வஞ்சிக்கவில்லை
அன்று பாளம்பிளந்த எம்மண்மீது
சில தூறல்கள் விழுந்தன.
ஓம்: ஓமெனத் தேவருரைத்த வாழ்த்தொலி
எல்லாச் செவிகளிலும் கேட்டது.
வெற்றிப்பெருமிதத்தின் வீறாய்ப்பிலிருந்தாள்
கொற்றப்பெருமாட்டி,
உயிரற்ற யந்திரங்கள் மீது இத்தனை கோபமா? என்று
'அரசியற் சாதுரியர்' யாரும் ஆச்சரியப்படலாம்,
எள்ளி நகையாடியும் சிலர் எழுதலாம்.
கட்டுநாயக்காவில் கருகிப்போனவை
வெட்டுக்கத்தியும் சின்னப் புட்டுப்பானையுமல்ல,
எரிந்தது பகைவரின் பலம்,
அழிந்தது அவர்களின் ஆணவம்,
எங்கள் உயிருறிஞ்சிக் குடித்தவை
இந்த ஊத்தைப் பேய்கள் தான்.
நவாலியிலும்; நாகர்கோவிலிலும்
நரபலியெடுத்த ரத்தப்பிசாசுகளிவை.
கிளாலியிலும்; சுதந்திரபுரத்திலும்
எம் உறவுகளைத் தீயிட்ட எரிமாடன்கள் இவைதான்,
மந்துவிலிலும், மாத்தளனிலும்
சின்னப்பிஞ்சுகளின் உயிர்தின்ற வன்மவல்லூறுகளிவை.
இந்த மகிழ்ச்சி இருக்காதா எங்களுக்கு?
குண்டுகொட்டிய போது கீழே நின்றவருக்கு
கொடுத்த தண்டனையறிந்து கொள்ளை மகிழ்ச்சி
குருதியும் சதையுமாகக் கூட்டியள்ளியவருக்குத்தான்
இந்த அழிப்பின் பெறுமதி புரியும்,
பிஞ்சைப் பறிகொடுத்த பெருதுயரில்
நெஞ்சிலும் தலையிலுமடித்து ஓலமிட்டாளே ஒருதாய்
அவளைக்கேளுங்கள்
கட்டுநாயக்காவுக்கு அவளின் கருவறை பதில்சொல்லும்.
குண்டுபிளந்த தாயின் மார்பருகே கிடந்து
பச்சைப்புல்லொன்று பாலுக்கழுததே
அந்தச் சந்திரவதனத்துத் தளிரைக் கேளுங்கள்
முற்றாக எரியவில்லையா கட்டுநாயக்கா?
என்று மூச்செரியும்.
ஊரிழந்த துயரில் உருகியபடி
கிளாலிக்கரையில் வந்து கிடந்தோமே.
விட்டானா பாவி
விரட்டி விரட்டி உயிர்ப்புூக்களைக் கிள்ளியெறிந்துவிட்டு
கட்டுநாயக்காவிற்தானே களைப்பாறினான்
நெருப்பிட்டது யாரெனத் தெரியாதெனினும்
தகும் செயலாற்றியவர்களுக்கு எம் தலைசாய்த்தோம்.
'செட்டிக்குத்தானே தெரியும் வட்டியும் முதலும்'
இந்திரபுரியை விற்றுத்தான் இவை இறக்குமதியாயின.
இந்த வல்லூறுகள் வெறும் யந்திரங்களல்ல.
எதிரி தவம்செய்து பெற்ற வரங்களிவை.
எங்களைக் கொல்லவென வாங்கிய நாகாஸ்த்திரங்கள்.
உட்புக முடியாதெனும் நம்பிக்கையில்
வித்தகர் வகுத்த பத்மவியுூகம் பிளந்து
உள்ளே புகுந்தவர் யாரெனத் தெரியாதெனினும்
அவர்கள் சென்ற திசைநோக்கிச் சிரம் சாய்த்தோம்.
விமானத்தளத்தின் அருகுள்ள விளையாட்டுத்திடலில்
பழிதீர்க்கப் போனவரின் பாதணிகள் கிடந்தனவாம்
செருப்புகளை எடுத்துவாருங்கள் சிம்மானசனத்தில் வைப்போம்.
சென்றவர்கள் உண்டெறிந்த மீதவுணவிருந்ததாம்
எடுத்து வாருங்கள் ஒரு பருக்கையுண்டாலே போதும்
எமக்கும் பலம் பெருகும்.
வண்டிலில் வந்தார்கள், வாய்க்காலால் வந்தார்கள்
கடலால் வந்தார்கள்
காற்றாகிக் குதித்தார்களென்று கூறுகின்றீர்களே
வெற்றுப்பீரங்கிகளே உங்களுக்கு வெட்கமே கிடையாதா?
கண்ணி வயல் கடந்து
காவல் அரண் கடந்து, மின்சாரவேலி மீதேறி
வந்தவர்களென்று கூறும்போதில்
பெருமையில் நாங்கள் புல்லரித்துப் போகிறோம்.
சிரசேறும் செருக்கில் திணறுகிறோம்.
புத்தபெருமானே!
சத்தியமாய் எங்களுக்குத் தெரியாது.
வந்தவர்கள் தமிழரென்பதால் வாழ்த்துகிறோம்.
அவர்கள் கொன்றவையெல்லாம்
முன்னரெம்மைக் கொன்றவையென்பதால்
நாலுவரியெழுதி அவர்களுக்கு நன்றி சொல்கிறோம்.
கழிவு நீர் வாய்க்காலுக்குள்ளாலே நடந்தார்களாம்
வாய்க்காலே! உமக்கெமது நன்றி!
தென்னை மரத் தோப்புக்குள்ளே திரிந்தார்களாம்
தென்னை மரங்களே! உங்களுக்கெம் நன்றி
மின்சாரவெட்டுக்கு உத்தரவிட்ட ரத்வத்தையாரே!
நன்றிக்குரியவர் நீருமானீர்.
கட்டுநாயக்காவின் தலையில் குட்டியவரே
நீங்கள் யார்பெற்ற பிள்ளைகளோ நாமறியோம்.
உங்கள் பெயரும் அறியோம்
உங்கள் ஊரும் தெரியோம்
ஆயினுமுமக்கு ஆயிரம் தீபங்களேற்றினோம்.
நாயினும் கீழாய் நலிவுற்ற தமிழினத்தை
உலகத்தின் உதடுகளால் உச்சரிக்க வைத்தவரே!
எழுதும் எந்தவரியும் உங்களிடம் தோற்கும்,
நீங்ளெழுதிய வரிகள் மட்டுமே நிலைக்கும்.
பிரிந்தோம்
மீண்டும் சந்திப
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)