Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட திட்டம்
#1
டக்ளஸ், சங்கரி உட்பட முக்கியஸ்தர்களின்
பாதுகாப்பைப் பலப்படுத்த விசேட திட்டம்
அவசர பாதுகாப்புச் சபை கூட்டத்தில் முடிவு

ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வீ.ஆனந்தசங்கரி உட்படக் கொலை அச்சுறுத்தல்களுக்கு இலக்காகக் கூடிய முக்கியஸ்தர்களின் பாதுகாப்பை உட னடியாக அதிகரிப்பது என்று தேசிய பாதுகாப் புச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக் கின்றது.
இத்தகையோரின் பாதுகாப்பை உறுதிசெய் யும் விதத்தில் விசேட பாதுகாப்புத் திட்டங் களை நடைமுறைப்படுத்துவதற்காக பொலீஸ் தலைமையகத்துக்கு விசேட நிதி ஓதுக்கீடு செய்யவும் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்வதற்காக நேற்றுக் காலை கூட்டப்பட்ட விசேட பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமை யில் ஜனாதிபதி மாளிகையில் இந்தக் கூட் டம் நடைபெற்றது. முப்படைத் தளபதிகள், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ரத்னசிறி விக்கி ரமநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செய லாளர் உட்பட அரச முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரமுகர்களின் பாதுகாப்பைப் பேணுவதற் கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி தேவைப்படுவதாக கூட்டத்தில் விடுக்கப் பட்ட கோரிக்கையை உடனடியாக நிறைவேற்று மாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி பொலீஸ் திணைக்களத்துக்குத் தேவையான நிதியை உடனடியாக வழங்கு மாறு திறைசேரிக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிதி ஓதுக்கீடு தொடர்பாக திறை சேரியின் செயலாளர் பின்னர் பொலீஸ்மா அதிபருடன் தனியாகப் பேச்சு நடத்தினார்.
தலைநகரிலும் நாட்டின் முக்கிய பகுதிகளி லும் எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நட வடிக்கைகள் தொடர்பாகவும் நேற்றைய பாது காப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
அமைச்சர் கதிர்காமரின் படுகொலை தொடர் பான தேடுதல்கள், விசாரணைகள் முடிவடை யும் வரை அவசரகாலநிலை வாபஸ் பெறப் படமாட்டாது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டதாக அறியவந்தது.
Reply
#2
அதுதான் டன் அண்ணாவைக் களத்தில காணேல்லப் போல.
Reply
#3
ஓய் சங்கரிக்கெல்லாம் எதுக்கு பாதுகாப்பு கொடுத்து காசை செலவழிக்கிறாங்களோ தெரியாது விட்டா அதுவோ தானா போயிடும் இண்டைக்கோ நாளைக்கோ

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)