வணக்கம் களஉறவுகளே,
களஉறுப்பினர்களின் பெயர்களை நகைச்சுவைத் துணுக்குகளில், கற்பனைக் கதைகளில், கட்டுரைகளில் பயன்படுத்துவது பற்றியதான கருத்து.
கற்பனைக் கதைகளில் களஉறுப்பினர்களின் பெயர் பயன்படுத்தப்பட்டதால், அதுபற்றி மட்டுறுத்துனர்களிடம் முறையிடப்பட்டதால் கருத்துக்கள் நீக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. தம் கருத்துக்களை நீக்கியதால் களஉறுப்பினர்களிடம் தோன்றிய கருத்துமுரண் களவிதிகள் மீதான விவாதமாகத் தொடங்கியது. அவ்விவாதம் களவிதிகள் பற்றிய விரிவான விளக்கத்தை வேணு்டி நின்றதால் இங்கு அதுபற்றிய விளக்கத்தையும், ஒரு தீர்வையும் முன்வைக்கிறோம்.
இந்தக் கருப்பொருளோடு தொடர்புடைய களத்தின் (ஏற்கனவே உள்ள) விதிமுறைகள்:
1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது.
2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில்
திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு.
4. கருத்துக்கள், ஆக்கங்கள் எழுதுபவருக்கு சொந்தமானவை. நிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், மற்றும் அவற்றின் உறுப்பினர்களை விமர்சிப்பவர்கள் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம் அல்லது கருத்துக்களை
வைக்கலாம். ஆதாரங்கள் இல்லாத ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களுக்கான அனைத்து விமர்சனங்களுக்கும் எழுதுபவரே பொறுப்பேற்கவேண்டும்.
8. ஏனைய கருத்துக்கள அங்கத்துவர்களுடன் பண்பாக நடந்து கொள்ளவேண்டும்.
இவற்றின் அடிப்படையில் சக களஉறுப்பினர்களைத் தாக்கி நேரடியாகவோ (உதாரணம்: பெயர் குறிப்பிடப்பட்டு), அல்லது மறைமுகமாகவோ (உதாரணம்: அடையாளம் குறிப்பிடப்பட்டு) கருத்துக்கள், விமர்சனங்கள், (இங்கே பொதுவாக அனைத்துவகை ஆக்கங்களையுமே குறிப்பிடப்பட்டுள்ளது: நகைச்சுவைத் துணுக்குகள், கட்டுரைகள், கதைகள், கவிதைகள் போன்றன - இருப்பினும் விளக்கம் கருதி ஆக்கங்கள் என்பதனையும் களவிதியில் சேர்த்துக்கொள்கிறோம்.) இங்கு வைக்கக்கூடாது. களஉறுப்பினர்களோடு பண்புடனும், கண்ணியத்துடனும் நடந்துகொள்வதுடன், பகிர்ந்துகொள்கின்ற கருத்துக்களிலும் (ஆக்கங்கள், விமர்சனங்கள்) பண்பினையும் கண்ணியத்தையும் பேணவேண்டும்.
களத்தைப் பொறுத்தவரை சக களஉறுப்பினர்களின் பெயர்கள் பல இடங்களில் (கருத்துக்களில், விமர்சனங்களில், மற்றும் நகைச்சுவைத் துணுக்குகளில்) ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் நீக்கப்படவில்லை. காரணம்: களஉறுப்பினர்களிடையே இருந்த புரிதல். களம் ஆரம்பித்த போதிலிருந்து சககளஉறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்துவது நடந்துவந்துள்ளது. அவை நல்ல புரிதலோடும், பண்போடும், கண்ணியத்தோடும் பயன்படுத்தப்பட்டதால் அங்கு பிரச்சினைகள் எழவில்லை. ஆனால் களத்தில் இப்போது இடையிடையே களஉறுப்பினர்களின் அடையாளத்தைக் குறிப்பிட்டு மறைமுகமாகவும், பெயரைக் குறிப்பிட்டு நேரடியாகவும் தாக்கும் செயல் நடைபெறுகிறது. அவற்றில் முடிந்தளவு பலவற்றை நீக்கியுள்ளோம். ஆனால் நீக்கப்படமுடியாமல் பலகருத்துக்கள் இன்னும் களத்தில் உள்ளன. அவற்றைத் தேடியெடுத்து உதாரணம் காட்டலாம் - ஆனால் அவற்றையெல்லாம் மறுபடிக் கிளறி முரண்களை வளர்க்காமல் தீர்வை எட்டுவோம். அநேகமாக களஉறுப்பினர்களிடையே கருத்துமுரண்பாடுகள் தோன்றுகிறபோது - எதிர்க்கருத்துக்களை உள்வாங்கமுடியாத கருத்தாளர்களும், ஏற்கனவே தனிப்பட்ட விரோதமுடைய கருத்தாளர்களும் களஉறுப்பினரின் பெயரைப் பயன்படுத்தி, அடையாளத்தைப் பயன்படுத்தி தாக்குகின்ற, அல்லது பண்பற்ற முறையில் கருத்துக்களையோ, ஆக்கங்களையோ, விமர்சனங்களையோ எழுதுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க தமது பெயரை பயன்படுத்தி பிறர் ஆக்கங்களை எழுதுவதை சில களஉறுப்பினர்கள் விரும்புவதில்லை. களத்தில் புனைபெயரில் எழுதுபவர்கள் (யாரென்கிற அடையாளம் தெரியாமல், உதாரணம்: நாரதர், சாத்திரி), சொந்தப் பெயரில் எழுதுபவர்கள் (உதாரணம்: சாந்தி ரமேஸ் வவுனியன், சந்திரவதனா), யாரென்று தெரிந்தும் தம் அடையாளத்துடன் புனைபெயரில் எழுதுபவர்கள் (உதாரணம்: சோழியான், இளைஞன்) என மூன்று வகைக் கருத்தாளர்கள் உள்ளார்கள். இதில் யாரென்கிற அடையாளம் தெரியாமல் புனைபெயரில் எழுதுபவர்களிற்கு தமது பெயரை சக களஉறுப்பினர் தனது ஆக்கத்தில் (நகைச்சுவைத் துணுக்கு, கற்பனைக்கதை) பயன்படுத்துவதால் அநேகமாக எந்தப் பிரச்சனையும் தோன்றுவதில்லை. ஆனால் மற்றைய இரண்டு வகையினருக்கும் தமது பெயரை ஆக்கங்களில் பயன்படுத்துவதால் பிரச்சனைகள் தோன்றலாம். தமது தனித்துவம், அடையாளம் பாதிக்கப்படுவதாக அவர்கள் கருதலாம். அதில் நியாயமும் உண்டு.
<b>எனவே களஉறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க களவிதிகளை மீறாதவண்ணமும், சககளஉறுப்பினர்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் பாதிக்காதவண்ணமும் களஉறுப்பினர்களின் பெயர்களை கருத்துக்களில், விமர்சனங்களில், ஆக்கங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தமது பெயர்களை சக களஉறுப்பினர்கள் ஆக்கங்களில் பயன்படுத்துவதை விரும்பாதோர் களம்பற்றி பகுதியில்
"களஉறுப்பினர் பெயர்களும் - ஆக்கங்களும்" எனும் தலைப்பில் தெரிவிக்கலாம். </b>(இவ் யோசனையைத் தந்த நாரதர், வியாசன் ஆகியோர்க்கு எமது நன்றிகள்)
களவிதிகளில் குறிப்பிடப்பட்ட விடயங்களை மீறி களஉறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் அக்கருத்து (ஆக்கங்கள், விமர்சனங்கள்) முற்றாக நீக்கப்படும். அதேபோல் தம்பெயர்களை ஆக்கங்களில் பயன்படுத்தவேண்டாம் என்று குறிப்பிட்ட களஉறுப்பினரின் பெயரை பயன்படுத்தினால் அவ்வாக்கத்தில் இருந்து "குறிப்பிட்ட பெயர்" மட்டும் தணிக்கை செய்யப்படும். இது களநிர்வாகத்தின் தீர்வு. தம் கருத்துக்களை முன்வைத்த அனைத்து களஉறுப்பினர்களுக்கும் எமது நன்றிகள். இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி.