Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கடலாதிக்கப்பலத்தில் புலிகள் முதலிடம்
#1
<b> கடலாதிக்கப்பலத்தில் புலிகளுக்கு முதலிடம்
புலனாய்வுப்பிரிவு தெரிவித்ததாக "லக்பிம' தகவல்</b>

சர்வதேச ரீதியில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஒப்புநோக்கினால் கட லாதிக்கப்பலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அரச புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளதாக "லக்பிம' சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தீவிரவாத அமைப்புகளான பிரிட்டனில் செயற்படும் ஐ.ஆர்.ஏ. மற்றும் பலஸ்தீன விடுதலை அமைப்பு போன்றவை கூட தமது தேவைக்கு வாடகைக் கப்பல்களையே பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 4 கப்பல்களும் 10 றோலர் படகுகளும் ஏற்கனவே மத்தியதரைக் கடல் மற்றும் தென்கிழக்காசியக் கடல் பிராந்தியங்களில் சேவையில் ஈடுபட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் வர்த்தக சேவையில் ஈடுபடும் கப்பல்கள் பிரிட்டனில் தலைமையகத்தைக் கொண்ட "வொய்ட்ஸ்' அமைப்பில் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால், அங்கு பதிவு செய்யப் படாத கப்பல்கள் சிலவற்றையும் விடு தலைப் புலிகள் பயன்படுத்துகின்றனர் என்று புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதிவுசெய்யப்பட்ட புலிகளின் கப்பல்களுக்கு பெயரும், வர்ணமும் அவ்வவ்போது மாற்றப்படுகின்றன என்றும் தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் சேவையின் தலைவரான குமாரன் பத்மநாதன் (கே.பி) மற்றும் சர்வ தேச ரீதியிலான ஆயுத விநியோகங்களுக்குப் பொறுப்பான லோறன்ஸ் ஆகியோரின் முகாமைத்துவத்தின் கீழ் இச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய சர்வதேச வர்த்தகங்கள் ஊடாக ஆண்டொன்றில் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுதலைப் புலிகள் அமைப்பு பெறுகிறது. இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reply
#2
அவங்கட புலநாய் வேலை செய்திடுமே.
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)