Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சுகமான சுமைகளென....
ஓ. எம் அன்பு உறவுகளே.
போரின் முழுச் சுமையும்
முதுகேற்று
காப்பரண் வேலியிற் காவலிருக்கும்
எம்மவர்க்குப் பலம்சேர்க்கும்
ஈரமுள்ள இயதங்களே
இளங்காலையொன்றின்
இனிமையை இரசிக்கமுடியாது
இயங்கும் என்
கால்களுக்கும் கைகளுக்கும்
உயிர்ப்புூட்ட
உதிரத்தைச் சுரந்தியங்கும்
இதயவறையின் மூலையொன்றில்
உங்கள் வலியை உணர்கின்றேன்.
எமக்குத் தெரியும்
கஞ்சிக்கும் வழியில்லாக் காலத்திலும்
எமது உணவுக்காய்
உமது உணவைத் தந்தது,
பேரினவாதப் பெருங்கரங்கள்
பொருள் மறித்துக்
குரல்வளை நசிக்கையிலும்
குருதிசிந்தத் தயாராகவிருக்கும்
எமது மருந்துக்காய்
அரிசிக்கான உங்கள் பணத்தில்
சிறிதளவு அறவிடப்படுவது,
நைந்து நைந்து
முள்வேலிபட்டுக் கிழிந்து
பின் தைத்துக்
கவசமாய் நாமணிந்துள்ள உடையின்
ஒவ வொரு அங்குலமும்
உங்கள் உழைப்பின் உப்பென்பது
நன்றாய்த் தெரியும் எமக்கு.
போரின் பெரும்பாரம்
இழப்பின் கொடுந்துயரம்
பிரிவின் பெருவலி
எல்லாம் உம்தலையில்
உம் முதுகில்.
எமது துப்பாக்கியிலிருந்து
பகைகொல்லப்புறப்படும்
ஒவ வொரு ரவையும்
உங்கள் நாணயக் காசுகளே.
ஏழைக் குடிலெனிலும்
எம்மைப் போலொரு பிள்ளையை
விடுதலைக்காய்
உவந்தளித்த பெருமை
உங்களுக்குரியது.
நாங்கள் உங்கள் பிள்ளைகள்.
உங்கள் உழைப்பில்லு} உணவில்லு} உடையில்
உங்கள் வறுமையில், வலியில், துயரில்
என்றுமே எங்களுக்குப் பங்குண்டு
விடுதலைக் கனவின் விலையாக
உவந்தளிக்கும்
எங்கள் உயிரின் உழைப்பில்
நாளை மலரும் குழந்தையொன்றுக்கு
இனிய வாழ்வைப் பரிசளிப்போம்.
அதுவரை
எமது தோளிலும்
உமது தோளிலும்
சுமக்கும் சிலுவையின் வலிகளைச்
சுகமெனவே எண்ணியிருப்போம்.
-அம்புலி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பிரதான யாழ் கண்டி வீதி (ஏ.9)
திறப்பு, உணர்வு புூர்வமான நிகழ்வு:
ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப்படையினரால் மூடப்பட்டுக் கிடந்த ஏ.9 எனப்படும் பிரதான யாழ் -கண்டி வீதி அதிகாரபுூர்வமாக 08.04.2002 அன்று திறந்து வைக்கப்பட்டது. இப்பாதை திறந்து வைக்கப்பட்ட அதேவேளை யாழ் குடாநாட்டில். அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கெனச் சென்ற 15 விடுதலைப் புலிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள்திரண்டு மகிழ்ச்சி ஆரவாங்களுடன் தூக்கி அழைத்துச் சென்றனர். மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்ட இவ வுணர்வு புூர்வமான நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய இராணுவத் தளபதிகள் கேணல் பானு, கேணல் தீபன் ஆகியோருடன் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தா களும், நோர்வேயின் போர்நிறுத்தக் குழுவின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட காண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், கிளிநொச்சி அரசாங்க அதிபர் மற்றும் யாழ்-குடாநாட்டுக்கான சிறீலங்கா இராணுவத்தாளபதி மேஐர் nஐனரல் சிசிர விஐயசூரியாவும் மேலும் இரு இராணுவ உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
லையாய் விரித்தெழுந்த அளகபாரமே
எத்தனை அழகாயிருந்தாய்.
வரிசையிட்ட வனவிருட்சங்களிடையே
உரிமை கொண்டோடிய நெடியவளே!
நிலா நாளெனில்
உன் நிர்மல அழகே தனியானது.
உலா வருவோரிடையே
ஒலியற்ற மொழியில் உரையாடுவாய்.
அந்த உணர்வின் இசைகேட்பது சுகம்,
அடித்துப் போட்ட கரும்பாம்பாய் கிடந்தாலும்
எத்தனை அழகிருந்தது உன்னில்.
இரவெனில் உன்னெழில் இலங்கும்.
தேவமகளென வானிருந்திறங்கிய
சொர்ப்பன மகள் நீ.
தெருவென உன்னை எவர் நினைத்தார்?
தாயென இருந்தாய் எம் நெஞ்சில்.
பனிதூவும் இரவில் பார்க்கும் போது
மஞ்சள் குளித்துவரும் தங்கையரைப்போல
விழிமலர்த்தி விட்டு
பேசாமற் கிடப்பாய் போக்கிரி.
ஏதேனும் பேசவேண்டும் போலத் துடிக்கும்
கள்ளி கதைக்கவே மாட்டாய்
உள்ளிழுத்த ஆசையுடன் உட்கார்ந்திருப்பாய்
வனத்திடை ஓடிய உன்காலிடை
வசமிழந்திருந்தோம் ஒருகாலம்.
ஆனையிறவுக்கு இப்பால்வரும் ஒவ வொரு முறையும்
உன் அழகில் கிறங்கிப் போவோம்.
முறிகண்டியிலிருந்து உன் மேனியழகு
கோடிபெறக் கொலுவிருப்பாய்.
புழுதியடித்த பிச்சைக்காரனைப் போல
கொக்காவில் இன்றுபோலவே அன்றும்
பற்றைக் காடுபடர்ந்த பரதேசிக் கோலம்.
'பதினெட்டாம் போர்' ஏற்றத்தில் ஏற
மேனிக்குள் பாயும் ஒரு பரவசம்.
எம் முந்தைத் தலைமுறையின் மூத்தோன்
உப்புப்போட்டு உண்ட ஒரு தமிழன்
வெள்ளைக்காரனுக்கே தண்ணிகாட்டிய வீரன்
பண்டாரவன்னியன்
இந்த வெட்டையிற் தானாம்
எதிரிகளை எதிர்கொண்டான்.
அவன் காலடி மண்ணைத் தொட்டுத்தான்
இன்றும் களத்திலிருக்கின்றனர் பிள்ளைகள்
பழைய முறிகண்டி வர
காட்டுமல்லி வாசம் மூக்கிலடிக்கும்.
மூசலற்று மேய்ந்தபடி
ஒற்றைக்கண் யானையொன்று எப்போம் நிற்கும்
மாங்குளம் சந்தி மகுடம் தரித்தெழுந்து
வந்து போவோரை வரவேற்கும்.
சின்னவெளிச்சங்களுடனான சிறு கடைகளெனினும்
இரவில் என்னே அழகு
ஊசியாய் குத்தும் பனிக்குளிர்
ஒரு 'பிளேன்hP' அடித்ததும் ஓடிப்போகும்.
அதற்கும் அடங்கவில்லையெனில் ஒரு 'சிகரெட்' போதும்
ஐயோ போதுமென அகலும்.
கனகராயன்குளம்
புளியங்குளம்
விளக்கு வைச்ச குளம்
ஓமந்தையென எத்தனை ஊர்கள்
அத்தனைக்கும் நீதானே அரசி.
உள்ளிருக்கும் ஊர்களிலிருந்து ஏறினால்
அள்ளி அழகெறிந்தபடி கிடப்பாய்.
ஒருகாலம் 'சுப்பர் டீலக்ஸ்' உலவின உன்னில்.
வரிசைகட்டி பாவுூர்திகள் வறுகின.
வண்டிகட்டி வன்னி மாந்தர்
உன்னில் உலாப் போயினர்.
திருமேனி நசியாமற் கிடப்பாய் சிரித்தபடி.
புதூர் நாகதம்பிரான் பொங்கலெனில்
விதானைமார் வீடுகளிற்தான் விருந்து.
கொள்ளை சனத்தின் குவியலில் குலுங்கிப்போவாய்.
எல்லாம் இழந்து கிடக்கிறாய் இன்று.
தோளில் வலுவுடைய தேவியே!
நீ வாளெடுத்த கோலமும் கண்டோம்.
மடியேறிய பகைக்கெதிராய் நிமிர்ந்தபோது
சூரியனே கூசும் சுடர் கொண்டிருந்தாய்.
அது 'ஜெயசிக்குறு' காலம்
பிள்ளைகளை நெஞ்சில் பொத்தியபடி போரிட்டாய்.
பகை சரிந்து நிமிர்ந்தபோது
களைப்புற்ற உன் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
அது ஆனந்தக் கண்ணீரென அறிவோம்.
ஒவ வொருவரையும் கட்டி உச்சிமோர்ந்தாய்
அன்றுதான் கண்டோம் உன் அன்னைவடிவம்
வரலாறாய் வாழும் வழியே!
மீண்டும் ஒளியுற்றுலவும் காலம் உனக்கானது
புூண்டெழுவாய் புதுக்கோலம்.
நாமிருக்கோமெனினும் நீயிருப்பாய்
எம்பிள்ளைகள் போய்வரும்போது
வரலாறுரைக்கும் வாயளாய்
பேசாய் பெருந்தெருவே.
-புதுவை இரத்தினதுரை
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மண்ணுள் புதையுண்டு போனவரே
உயிர்ப்புறுவீர்.
எண்ணிலடங்காது- பகைக்
கரத்தால் கொன்றொழிக்கப் பட்டவரே
மீண்டும் பிறவுங்கள்.
கானகத்து மரங்களே
தளிர்கள் ஒவ வொன்றையும் மனிதராய்த் தருவீர்.
வாடிச் சருகாகும் புூக்களும் உயிர் பெற்றிங்குலவட்டும்
எறிகணையின் இடிச்சிரிப்பில்
குவியலாய்க் கிடக்கும் கட்டடத்தின் துகள்களே
உங்களுக்குள்ளும் உயிர்வந்து கொள்ளட்டும்.
எம் புூமியிற் பரந்துள நீர் நிலைகளெல்லாம்
நெருப்புச் சுமந்தெழுக
யாவரும் வருவீர்
யாவையும் எழுவீர்.
இடியோசை எழுப்பாதெழுந்த
புத்தாண்டை வரவேற்க
வாசலிற் கோலமிடுவோம்
மலர் தூவி வரவேற்போம்.
மனம் நிறைந்தெம் வாசலைக் கடந்து வந்து
ஆரத்தழுவி அன்பு காட்டுமெனில்
என்பையுங் கொடுப்போம்
தழுவிட விரையும்- எம்
கரங்களின் என்புகளை நசிக்குமெனில்
வீரியங் கொள்ள விழைவோம்.
நம்பிச் சிரித்த பற்களுக்கு. தன்
கோரப் பற்களைக் காட்டுமெனில்
அவற்றை உடைக்கும் பலம் கரங்களிற் கொள்வோம்
வசந்தம் சொரிந்து நாம்
வரவேற்று மகிழ்கையில்
தீக்கனல்களே தன் பரிசெனத் தருமெனில்
நெருப்பு நதியாய் மீண்டும் பெருகுவோம்
காட்டாற்று வெள்ளத்தை
ஆற்றுப்படுத்தி நாம்
அமைதியாய்ப் பாய்கையில்
கொந்தளிப்பதே தன் கொள்கையெனக் கொண்டால்
வெந்தழல் சுமப்போம் வாருங்கள்
உயிருள்ள யாவரும், உயிரற்ற பாவையும்.
முந்தைய ஆண்டுகள் பலவாறாய் வந்தன.
வரும்போது இனிமையாய்க் கதைபேசின பல.
பின்னர் கர்ண கடூரமாய்ச் சிரித்தன.
எம் நம்பிக்கை சிதைத்துக் குரல்வளை நசித்தன.
வரும்போதே எறிகணை மழை தூவி வந்தன சில
எல்லாமே எம் இரத்தக் குழம்பையும்
தசைக் குவியல்களையும் தின்று பசியாறிக் கொண்டன.
ஒவ வொன்றின் இறுதியிலும்
அதற்கெதிராய்ப் போரிட்ட புூக்களுக்கு
நெய்விளக்கேற்றி நெக்குருகினோம்.
அவர்க்காயன்றி
அநியாயமாய்ப் போனோருக்காக
அழுது கொண்டது மனது
எதிர்ப்பலையெழுப்பி வீழ்ந்தோரின்
விதைகுழிக்கருகில் நின்று வீணாகிப் போனவர்க்காக
விம்மியதெம் இதயம், அதனால்தான்
எச்சரிக்கையோடு வரவேற்போம் இதனையும்.
எத்தனை பாரச் சிலுவைகள் சுமந்தோம்.
எத்தனை உயிர்களைப் பலியாய்க் கொடுத்தோம்.
எத்தனை காலம் மனத்தவம் புூண்டோம்.
வருவதும் விரைவதும்
இடையிடை இழுபறிப் பட்டெமை அலைப்பதும்
இறுதியிற் தோல்வியில் முடிவதும்
வருகின்ற ஆண்டின் மகிமையைப் பொறுத்தது.
விட்டேற்றியாய்- இங்கனைத்தையும் உரைக்கிலேன்.
நட்டாற்றில் நின்- எம் இனத்தைத் துணிவெனும்
துடுப்பாற் கரை சேர்த்த
தூங்கா மணி விளக்கின் சுடர்க்கீழ்
ஒன்றுபட்டெழுந்த மாந்தரின் குரலாய் ஒலிக்கிறேன்
இனிய ஆண்டே
இதழ் விரிப்பாய் இதழ் தருவாய்.
சுகந்தம் தருவது உன் சுயத்தைப் பொறுத்தது.
இல்லை உன் மெல்லிதழ்க் கரத்திடை
புூநாகம் இருக்குமெனில்
விண் தொட்டெழ விரையும் வேகத்துடன் உன்னை
மண் பற்றி விழவைக்கும்
எம் உயிருள்ள யாவரும்
உயிரற்ற யாவையும்.
அம்புலி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கல்லுப்பட்ட
கண்ணாடியாய்
வெள்ளத்தில் மிதக்கிறது
வீடு,
அதோ.
மழையில்
நனைந்தபடி
போகின்றார்கள்
கூடு இழந்த
பறவைகளாய்
மனிதர்கள்,
மழையொழுக்கை
தவிர்ப்பதற்கு
உள்ளே
பாத்திரங்கள் வைத்தும்
வெள்ளம்
விரவிப்பாய்கிறது
வேகமாகலு}
கூரை இருந்தும்
அது
இல்லாததாய்
குடியிருக்கிறது
அதனுள்
ஒரு குடும்பம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தெருவே!
சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தம் புதைத்து
ஏதோ சொல்லத் துடிக்கிறாய்.
மனதின் சாளரங்கள் திறந்து வீசு
சொல்ல நினைக்கும் வார்த்தைகளை
நேற்று வரை யாருமற்றுக் கிடத்தாய்;
துகிலுரித்து துச்சாதனர்கள் மூலை நெரிக்க
நீ ஓலக் குரலிட்ட போது
கம்பன் புகழ்பாடும் இந்திரவிழாவில்
பத்மா சுப்பிரமணியம் பரதமாடிக்கொண்டும்
சேஸ கோபாலன் தில்லானா பாடிக்கொண்டுமிருந்தனர்
சதங்கை ஒலியிலும், சங்கீத ஸ்வரங்களிலும்
சபைக்குக் கேட்கவில்லை உன் சாக்குரல்.
உலகெங்கும் உலாப்போகும் அறிஞர்களும்
சாவுக்குப் பின்னும் ஜீவிக்கும் கனவில்
புத்தகங்கள் அச்சிட்டுக் கொண்டிருந்தனர்,
உனக்காக வார்த்தையுதிர்க்க
அவர்களுக்கெங்கே நேரமிருந்தது
கேட்க நாதியற்றுக் கிடந்தாய்.
வெள்ளைக்காரன் விட்டுப்போய் அம்பது வருடங்கள்
ஆயினுமென்ன?
அவன் போட்டுவிட்டுப் போன முடிச்சுகள்
இன றும்தான் இறுகிறது.
காலத்துக்கு வயதேற ஏறவும் தளர்வின்றி
கழுத்தைத் திருகி மூச்சுத் திணறவைக்கிறது முடிச்சு,
தேம்ஸ்நதி தன்தேவைக்கெனப் பெற்ற உன்னில்
மகாவலியும், கனகராயன் ஆறும்
மல்லுக்கட்டிப் புரண்டன நேற்று;
இருதயத்துக்குக் குருதிகொண்டோடும் நரம்பறுந்து போக
ஓமந்தையில் ஒட்டுப்போட்டது அதிகாரக் கொடிக கால்,
விளக்கு வைத்த குளம்கூட இருண்டிருந்தது,
ஒளிகொண்டுலவிய புலிவீரர்மட்டும் உன்னோடு.
ஊர்மனைகளை ஒட்டஇறைத்து எல்லோரும் போக
வழிமறித்திருந்த பிள்ளைகள் மட்டும் உன்னோடு,
தோலுரிந்து
எக்ஸிமா செதிலாகப் படையெழும்பி
படுக்கைப் புண்ணோடு நீ படுத்திருந்த போது
கதை முடிந்ததெனக் காற்றுரைக்கும் நாளுக்காக
காத்திருந்தனர் பலர்,
சிதையும் எரிந்து முடியட்டும் செலவுக்குப் போவோமென
நடந்தது வேறாகிப் போனது.
அம்பகாமத்தில் nஐயசிக்குறுவுக்கு அந்திரட்டி செய்தோம்
அன்று கொள்ளிவைக்க வராதவர்கள் கூட
இன்று பிண்டம்போடப் புறப்பட்டு வருகின்றனர்,
வென்று மீண்ட வீதியே!
புண்ணான மேனிக்கு புதூவும் கூத்து நடக்கிறது
ரணங்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை,
ஏறிவந்த யமருடன் பொருதி
முழத்துக்கு ஒருவராய் வீழ்ந்தவரை
எவர் நினைத்தார்?
புளியங் குளத்திலும், புதூர்ச் சந்தியிலும்
வழிமறித்திருந்த சோதரியரை எவர்வாய் பேசிற்று!
தடுத்தாட்கொண்ட தென்தமிழீழ மறவர்
கொடுத்த விலைக்கு எவர்தலை குனிந்தது!
பழையன மறக்கும் பண்பு இதிலுமா?
யு-9 தெருவே!
உனக்கு வாழ்வு வந்ததடி.
இன்று கரைமருங்கான கண்ணிகள் அகற்றி
முள்ளரண் தூர்த்து
பீரங்கி நிலைகள் பின் நகர்த்தி
துலாக்கால் தூக்கி
முதலில் சாமான் லொறிகளாம்
பின்னர்தான் "பெருங்குடிமக்களாம்"
காற்றின் திசையறிந்து நெல் தூர்த்தவும்
முதலில் போனவரென்ற முடிசூடவும்
ஆசனங்கள் அகப்பட்டால் அமரவும்
பங்குப்பணம் கேட்கவுமென
இனி எத்தனை "உறவுகள்" வந்துசேரும்,
கண்டிவீதியின் கரைமருங்குள்ள
காயமுற்ற மரங்களே!
குண்டுபட்டுக் குழியுண்ட வன்னி மண்ணே!
போய்வரப் போகும் உறவுகளுடன் பேசுங்கள்.
ஒளியேற்றிய வீரர்களுக்கு கொஞ்சம் ஓய்வு
சற்று விலகியிருப்பர்.
எம் பிள்ளைகளின் குருதிபடிந்த சுவடுகள்
இது இதுதான் என்று
உல்லாசப் பயணம் வரும் உறவுகளுக்குக்குக் காட்டுங்கள !
பார்த்து விட்டுப்போய்
கொழும்பில் பட்டிமன்றம் பேசட்டும்,
கவிதை எழுதி விற்கட்டும்.
மீண்டும் உன்னை மூடும் வரை
சொந்தங்களென உனக்கு ஆயிரம் போர்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தெருவே!
சிரிப்புக்குள் ஆயிரம் அர்த்தம் புதைத்து
ஏதோ சொல்லத் துடிக்கிறாய்.
மனதின் சாளரங்கள் திறந்து வீசு
சொல்ல நினைக்கும் வார்த்தைகளை
நேற்று வரை யாருமற்றுக் கிடத்தாய்;
துகிலுரித்து துச்சாதனர்கள் மூலை நெரிக்க
நீ ஓலக் குரலிட்ட போது
கம்பன் புகழ்பாடும் இந்திரவிழாவில்
பத்மா சுப்பிரமணியம் பரதமாடிக்கொண்டும்
சேஸ கோபாலன் தில்லானா பாடிக்கொண்டுமிருந்தனர்
சதங்கை ஒலியிலும், சங்கீத ஸ்வரங்களிலும்
சபைக்குக் கேட்கவில்லை உன் சாக்குரல்.
உலகெங்கும் உலாப்போகும் அறிஞர்களும்
சாவுக்குப் பின்னும் ஜீவிக்கும் கனவில்
புத்தகங்கள் அச்சிட்டுக் கொண்டிருந்தனர்,
உனக்காக வார்த்தையுதிர்க்க
அவர்களுக்கெங்கே நேரமிருந்தது
கேட்க நாதியற்றுக் கிடந்தாய்.
வெள்ளைக்காரன் விட்டுப்போய் அம்பது வருடங்கள்
ஆயினுமென்ன?
அவன் போட்டுவிட்டுப் போன முடிச்சுகள்
இன றும்தான் இறுகிறது.
காலத்துக்கு வயதேற ஏறவும் தளர்வின்றி
கழுத்தைத் திருகி மூச்சுத் திணறவைக்கிறது முடிச்சு,
தேம்ஸ்நதி தன்தேவைக்கெனப் பெற்ற உன்னில்
மகாவலியும், கனகராயன் ஆறும்
மல்லுக்கட்டிப் புரண்டன நேற்று;
இருதயத்துக்குக் குருதிகொண்டோடும் நரம்பறுந்து போக
ஓமந்தையில் ஒட்டுப்போட்டது அதிகாரக் கொடிக கால்,
விளக்கு வைத்த குளம்கூட இருண்டிருந்தது,
ஒளிகொண்டுலவிய புலிவீரர்மட்டும் உன்னோடு.
ஊர்மனைகளை ஒட்டஇறைத்து எல்லோரும் போக
வழிமறித்திருந்த பிள்ளைகள் மட்டும் உன்னோடு,
தோலுரிந்து
எக்ஸிமா செதிலாகப் படையெழும்பி
படுக்கைப் புண்ணோடு நீ படுத்திருந்த போது
கதை முடிந்ததெனக் காற்றுரைக்கும் நாளுக்காக
காத்திருந்தனர் பலர்,
சிதையும் எரிந்து முடியட்டும் செலவுக்குப் போவோமென
நடந்தது வேறாகிப் போனது.
அம்பகாமத்தில் nஐயசிக்குறுவுக்கு அந்திரட்டி செய்தோம்
அன்று கொள்ளிவைக்க வராதவர்கள் கூட
இன்று பிண்டம்போடப் புறப்பட்டு வருகின்றனர்,
வென்று மீண்ட வீதியே!
புண்ணான மேனிக்கு புதூவும் கூத்து நடக்கிறது
ரணங்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை,
ஏறிவந்த யமருடன் பொருதி
முழத்துக்கு ஒருவராய் வீழ்ந்தவரை
எவர் நினைத்தார்?
புளியங் குளத்திலும், புதூர்ச் சந்தியிலும்
வழிமறித்திருந்த சோதரியரை எவர்வாய் பேசிற்று!
தடுத்தாட்கொண்ட தென்தமிழீழ மறவர்
கொடுத்த விலைக்கு எவர்தலை குனிந்தது!
பழையன மறக்கும் பண்பு இதிலுமா?
யு-9 தெருவே!
உனக்கு வாழ்வு வந்ததடி.
இன்று கரைமருங்கான கண்ணிகள் அகற்றி
முள்ளரண் தூர்த்து
பீரங்கி நிலைகள் பின் நகர்த்தி
துலாக்கால் தூக்கி
முதலில் சாமான் லொறிகளாம்
பின்னர்தான் "பெருங்குடிமக்களாம்"
காற்றின் திசையறிந்து நெல் தூர்த்தவும்
முதலில் போனவரென்ற முடிசூடவும்
ஆசனங்கள் அகப்பட்டால் அமரவும்
பங்குப்பணம் கேட்கவுமென
இனி எத்தனை "உறவுகள்" வந்துசேரும்,
கண்டிவீதியின் கரைமருங்குள்ள
காயமுற்ற மரங்களே!
குண்டுபட்டுக் குழியுண்ட வன்னி மண்ணே!
போய்வரப் போகும் உறவுகளுடன் பேசுங்கள்.
ஒளியேற்றிய வீரர்களுக்கு கொஞ்சம் ஓய்வு
சற்று விலகியிருப்பர்.
எம் பிள்ளைகளின் குருதிபடிந்த சுவடுகள்
இது இதுதான் என்று
உல்லாசப் பயணம் வரும் உறவுகளுக்குக்குக் காட்டுங்கள !
பார்த்து விட்டுப்போய்
கொழும்பில் பட்டிமன்றம் பேசட்டும்,
கவிதை எழுதி விற்கட்டும்.
மீண்டும் உன்னை மூடும் வரை
சொந்தங்களென உனக்கு ஆயிரம் போர்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
காடுகள்
கல்லு முள்ளுகள்
கரை காணா இடமெனத் தாவி
உலாவரும் ஊதல் காற்றே
நீ பேறு பெற்றாய.
கந்தகப் பொடி சுமந்து
கரைந்துருகி காவியமானவர்கள்
கட்டுடல்களும் தடவியே வருவாய்
பெருமைகொள்.
நீ பேறு பெற்றாய்.
உயிர் பிரியுமந்தக் கணமதில்
வாயுதிர்த்த வார்த்தைகள்
உம்முள் அமிழ்ந்துள்ளனவே.
அடியேனுடன் அந்த
உணர்வின் மேன்மையினை பகிர்வாயா?
வான் வெளிக்கு ஈடாக
நீளக் கால் பரப்பியே
மண் பருக்கைகள் மீது}ர்ந்து
கரைவந்தெம் கால் தடவும்
கடல் மடியே
என்னோடு பேசு.
உன் மடியில்தான்
உதயம் காண ஒளியாய் ஆனவர்
உயிர் மூச்சைத் திறந்தார்?
கரை நின்று விடைதேடு மெந்தன்
விழிகளுக்கு விடை கொடு.
ஒரு கணம் தானுமெந்தன்
புூமுகங்களைக் காவி வந்து காட்டிவிடு.
அலையின் மடிமீது காவிவந்து
அடியேனுக்கு காட்டிவிடு.
அது தானுமென்னை
ஓரளவுக்கு தேற்றுவிக்கும்.
அ. பி. குணா
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கடற்பாறை
திசை இசைமேவி
அசைபோட்டு ஆடும்
கடல் நடுவே நின்றபடி!
பகை திசைமேவி வெடியாக
துடித்தவண்ணம்!
என் உணர்வுகளை கிளறி
வாழ்நாளை நினைத்தபடி
அசை போட்டு ஓசையுடன் நகர்கிறேன்.
எண் திசை எங்கும் வெடி ஓசை
கண் அசைபோடும் திசை எங்கும்
பகை இசைபோடும் கலம்.
இன்னும் சிறு நேரம் கழிந்தால்!
என் உடல் ஓசையுன் சேர்ந்து
நெருப்பாக மாறி மறையும்.
நீரோடு சேர்ந்து கடலோடு கரையுமுன்!
என் நினைவோடு வாழும்
உறவுகளை எண்ணிப் பார்க்கிறேன்.
அவர் துயர் எண்ணி!
பலர் துயர் தீர்க்க துடிக்கிறேன். கனவோடு மடிந்தவர்
நினைவெண்ணித் தவிக்கிறேன்
உடலோடு ஒட்டி உறவாடி
கடல் மடிமீது உறங்கும்
என் அன்புகளைப் பார்க்க
மிக வேகம் எடுக்கிறேன்.
இன்னும் நெருங்கவில்லை
சிறு து}ரப்பயணம்
மனம் மகிழ்கின்றது.
இன்றும் நான் வெடியாகவில்லை.
அந்தக் கணம் வரும் போது
ஓசை எழும்
என் ஆசை விரைவில் ஈடேறும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இனவெறி,
கொலைவெறியும்
இலங்கையில்
இருக்கும்வரை
முரசறையும் ஒலி
ஈழத்தில்
முழங்கிக் கொண்டே
இருக்கும்!
தமிழ்ஈழம் வித்துக்கள் பல
விழ விழ
மண்ணில்
விருட்சமொன்று
உருப்பெறுகின்றது
வீரியமாக!
காவித்துணி
சிங்களப்
பேரினவாதிகளின்
சிறுமைத்தனங்களை
மூடிமறைக்கின்றன
'மொட்டை'க் கவசங்கள்!
கோமேதகன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மண்ணை அரிப்பதற்காய்
பேய்களின் பெருநதி
பெருக்கெடுத்தது.
அணைகட்ட சிலர்
மண்வெட்டி கொண்டு
புறப்பட்டனர்.
புறப்பட்டவர்களில் சிலர்
நதியின் குளிர்மையில்
மூழ்கித் திளைப்பதில்
இன்பம் கண்டனர்.
சிலர் அணைகளாய்
மாறி
அசையாமல் நிமிர்ந்தனர்.
அவ அணைகளை,
அடித்துச் செல்வதற்காய்
மீண்டும் மீண்டும்
பேய்களின் பெருநதி
ஆக்ரோசமாய் எழுந்து
சூழ முனைகையில்
அணைகள் விடவில்லை.
அவை
தீயொன்றின் மூலத்தில்
இருந்து புறப்பட்டனவாய்
பெரும்
சுவாலை வளர்த்தன
சுவாலையின் வெம்மையால்
பேய்களின் பெருநதி
சுவடுகள்
அழிந்து போயின.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
வார்த்தைகளில் சிக்காத
ஓர் உன்மத்தம்
உள்ளே திமிறும்.
வான் முகடுகளைத் தொட்டபடி
ஓடும் புகைச்சுருள்களில்
என் எண்ணத்தின் வேர்கள்
விரைந்து செல்லும்.
இரையெடுத்து ஏப்பம் விடும்
பாம்புகளின் வாசனை
என் சுற்றாடலை நிரப்பும்.
சிலந்திகள் பின்னிய வலையாய்
என் வீடு
கனத்துப் பிசிறடிக்கும்.
ஒற்றைக் குரலில்
ஓர் ஆன்மாவின்
சோகம் பிழிந்த அலறல்
காற்றில் கரையும்.
எங்கள் வீதிகளுக்கு வேலிபோட வந்தவர்கள்
வட்டத்துள்..
நாம் வெளியே விழிகளைத் திறந்தபடி
வாழ்ந்து பங்கப்பட்ட
வரலாறொன்றின் சாட்சியாய்
எச்சமாகிப் போன எலும்புக்கூடுகள் நடுவே.
ஆனாலும்,
பார் புூமியெங்கும் பாறைபிளந்து
ஓராயிரம் வேர்ப்பின்னல்கள்
இனி அவை துளிர்விடும்.
-சுதாமதி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உயிர் ததும்பத் ததும்ப
உருவிரியும் கோடுகள்
இயல்பான முறிவுகளும்
லாவகமான வளைவுகளும்
உணர்வுகளின் முடிச்சவிழ்க்கும் ஓவியம்
வண்ணங்களைக் கலந்து கலந்து
உனக்கு இதமான வண்ணம் காண
காதலுற்று உழைத்தாய்.
எத்தனை கொடூரமாய் இடறியது காலம்?
சிதறிய வண்ணங்கள்
உன் பிரிய முகங்களில்
விகாரமாய் வழிய வழிய
உனது பாத்திரங்களை வெறுமை கவ வியது.
இராணுவக் காலணியின் திகிற்சுவடுகள்
வண்ணக்குழம்பெங்கும் விரிந்து
குரூரமாய் பல்லிளித்தன.
அவற்றின் நெரிசல் இடுக்குகளில்
கிருஸ்ண ஜெயந்திப் பாதங்கள் திணறின.
ஒளிப்பொட்டும் ஊடுருவா வதைநிலத்தில்
கோடுகள் சிதைந்த ஓவியம்
கரும்பாசி படரக் கிடக்கிறது.
உனது பாத்திரங்களை
தடவித் தடவி
தவித்தலைகின்றன விடாயுற்ற உறவுகள்.
ஓவியங்கள் வெறித்து வெறித்து
ஏங்கும் முகங்களில்
கருவண்ணம் தீற்றும்
காலத்து}ரிகையின் சிலிர்ப்பொடுங்கா மிருக உரோமங்கள்.
-எஸ். உமாஜிப்ரான்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இப்பொழுது
ஊர் நினைவுகளை
அடிக்கடி தூசு தட்டுகிறேன்
ஞாபகப் பக்கங்களை
அடிக்கடி புரட்டுகின்றேன்.
அப்பொழுதெல்லாம்
அந்நினைவுகளின் அடுக்குகளில்
இடறி விழுகிறேன்
அதில்
எனக்கு அலாதிசுகம்
வாய்க்காலில் குளித்தது
பழைய நினைவு அது
நினைக்கையில் இப்போதும்
மூச்சுத்திணறுகிறது
ஆம், எனக்கு
அப்போது நீந்தத்தெரியாது.
கற்ற பள்ளிபற்றி எண்ணுகையில்
சுள்ளென்று பிரம்படிபட்டதாய்
இன்றும்
இதயம் வலிக்கிறது.
முருகனின்
ஆலய மணிஒலி
இதய ஒலிப்பேழையிலிருந்து
அழிக்கமுடியாததொன்றாகிவிட்டது
இப்படி இந்த
நினைவுகள் தந்த ஈரம்
எந்தக் காற்றாலும் உலராது
இருப்பிட வேரறுந்ததால்
வேறிடத்தில்
வேர்கொள்ள முடியாததால்
என்னின் மனிதனைக் காண
அடிக்கடி
ஊர் நினைவுகளை
தூசு தட்டுகிறேன்.
தி. றமணன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
உயிர்பெறும் காலம்
நீ எங்கிருக்கிறாய் என்பதை நானறியேன்
என் நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட
ஒரு நாளில்
நீ அங்கும் நாம் இங்குமாய் பிரிந்துபோனோம்.
எப்படியிருக்கிறாய்...
அதே கனிந்த பார்வையுடன்லு} பொறுமையாய்..
தாயாய் என்னைத் தாலாட்டித்
தூங்க வைத்த நாட்கள்;
இன்னும் நெஞ்சுக் கூட்டுக்குள்
நெகிழ்ந்திடும் ஞாபகங்களாய் நிறைந்திருக்கின்றன.
இப்போதும் அடிக்கடி
கனவுகளில் வந்து
ஆறுதல் தருகிறாய்.
விழிக்குழிகள் நிறைந்த
சோகமான ஏக்கத்துடன்
என்னைத் தடவிக் கொடுக்கிறாய்.
பிரிவு சொல்லாமற் பிரிந்துபோன
அந்தக் கணங்களுக்காக
நான் வருந்துகிறேன்.
ஏடெடுத்த நாள் முதலாய்
படித்ததெல்லாம் உன்னிடந்தானே!
பிராணிகளிடத்தில் அன்பையும்
'பொறுமை செய்' என்ற பண்பையும்
இறையன்பு யாவற்றையும்
எனக்குக் கற்றுக்கொடுத்தது நீதானே!
எனக்கு உணவுூட்டிய உன்கைபற்றி
எப்போது விழி ஒற்றிக்கொள்வேன்.
காலநதியின் வேகத்தில்லு} நாமெல்லாம்
மீண்டும் எப்போது திரும்புவோம்.
ஒரு சுமையாய் கனக்கிறது இதயம்
ஆனாலும்
நான் வருவேன் மறுபடியும்
ஓர் இனிமையான நாளில்
எமது வீதிகளிலெல்லாம்
தடையற்ற ஒரு சுதந்திரமான பொழுதில்
உனது குழந்தையாய்...
-சுதாமதி
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
என் கோயில் பெருவெளியில்
அது நிகழ்கிறது.
செவிப்பறையைப் பிளக்கிறது
போர்ப்பறை முழக்கம்
இடி மின்னல் எல்லாமும்-என்
கோயில் பெருவெளியில்...
ஊழியை என்னுள் உதைத்து விரட்ட
உடுக்கை அடிக்கிறது நெஞ்சறை
சுதந்திர தேவி கருவறையில்
திரைச்சேலை அவள்
முன்னால் இப்போது இல்லை
எனினுமவள் சுதந்திரமாயில்லை-என்
கோயில் பெருவெளியில்
அது நிகழ்கிறது- அவளை
மானசீகமாய் மனத்தில் இருத்திவிட்டு
மேலெழும் போர்த்தீயில்...
தீக்குளிப்பு நடக்கிறது-அவளை (ப்)
பக்தித்தோர் பரவசமாய்..
வெற்றி நிச்சயம் எமக்கே
நிஐத்தை நெஞ்சில் இருத்தி
நீள்கிறதுஅவர் நேர்த்தி.
உதிராபிஸேகம் அங்கப் பிரதிஸ்டை
நேத்திக் காவடிகளின்
நிரை(தி)யாக உயிர்ப் புூக்கள்
அவளை(ப்) பக்திதோர் பரவசமாய்..
நிமிர்ந்து நிற்கிறது அவர் நெஞ்சுரம்-என்
கோயில் பெருவெளியில் அது நிகழ்கிறது.
அவரைத் தாண்டி வர அதுவும் இயலாது
வெற்றியை மட்டுமே
அவர் கை விழுதெனப் பற்றும்
மண்ணை மனத்தில் மானசீகமாய்
இருத்திவிட்டு பக்திக்கோர் பரவசமாய்..
என் கோயில் பெருவெளியில்
அது நிகழ்கிறது.
முல்லைக்கமல்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
எனக்கு
ஒரு குப்பி விளக்கு
ஒரு சைக்கிள்
ஒரு குடை
இவைகள் போதும்.
மின் விசிறி
சொகுசு கார்
எல்லாவற்றையும்
நீ அங்கேயே வைத்திரு;
புழுதிகளற்றதும்
தார்களிலுமான ஒரு தெரு
எமக்காய் வரும்வரை.
பிரஞ்ஞன்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
காத்திருத்தலின் சுகம்
என்னமாய் இனிக்கிறது.
சுகந்தம் வீச மறுத்திட்ட வாழ்வை
மாற்றிட எண்ணிய
மனிதங்களின் உயரிய பயணம்,
ஓரிருவருடன் ஆரம்பமாகி
பல்லாயிரம் பயணிகளாய்ப் பெருகி
'தாயகம்' எனும் தேசம் நோக்கி நகருகிறது.
விரிந்த நெடிய பயணம்..
தடம் புரளாத பயணம்
இருள் சூழ்ந்த குகையினூடும்
உறுதி எனும் ஒளி பாய்ச்சி
குருதி எனும் எரிபொருளிட்டு
தடைகளகற்றி
தரித்தும், தாமதித்தும் செல்கிறது.
தடம்புரளாத இப்பயணத்தில்
நாம்
பயணிகள் சிலரை இழந்தோம்.
சிலர் எங்கோ மறைந்தார்.
இன்னும் சிலர் தரிப்பின் போது
திக்கொன்றாய் திசைமாறிச் சென்றார்.
இருந்தபோதும்
பயணம் நின்றிடவில்லை!
புதிய பயணிகள் நித்தமும் சேரச் சேர
இலக்கெட்டும்வரை இடைவிடாத பயணம்
தடம் புரளாது தொடரும்.
தொடர்கிறது.
பிலோமினா
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
குர்திஸ் குழந்தை
ஸர்பாஸ் கார்குகி
மனித குலத்துக்கு மனச்சாட்சி இருக்கிறதெனில்
எனக்கு ஏன் ஒரு இடம் இல்லை?
உலகத்தில் எனக்கொரு இடம் இருக்கிறதெனில்
எனக்கென ஏன் புூர்வீக வீடு இல்லை?
எனக்கென ஒரு இடமிருந்தால்
அது ஏன் அழிக்கப்பட்டது?
அது ஏன் எப்போதும் சிதறடிக்கப்படுகிறது?
என் வீட்டில் ஏன் துப்பாக்கி துளைத்த
துளைகள் இருக்கிறது?
எனக்கொரு இடம் இருந்ததெனில்
அது ஏன் எரிக்கப்பட்டது?
நூற்றாண்டுகள் வருகிறது
நூற்றாண்டுகள் போகிறது
நான் ஒரு அகதி
மலைகளில் தொலைந்த விருந்தாளி
அழிப்பவர்கள் வருகிறார்கள்
அழிப்பவர்கள் போகிறார்கள்
ஒரு இடமோ பெயரோ இல்லாமல்
நான் விதிக்கப்பட்டிருக்கிறேன்
முழு உலகமும் உன்னுடையது எனும்
அம்மணப் பொய்யில் அர்த்தம் இல்லை
முழு உலகமும் உன்னுடையது என்பதுதான்
இந்த யுகத்தின் மிகப் பெரிய பொய்
போதும் போதும்
பொய்கள் போதும்
வேண்டாம் பொய்கள் இனிமேல்
வெற்றுப் பதாகைகளை
உயர்த்துவதை நிறுத்துங்கள்
நான் ஒரு குர்திஸ் குழந்தை
எனக்கென்றொரு வீடு இல்லை
நான் ஒரு குர்திஸ் குழந்தை
எனக் கென்றொரு இடமில்லை
குர்திஸ்தானுக்கு ஒரு கொடி கிடைக்கும் வரை
குர்திஸ் குழந்தைக்கு வீடு இல்லை
நிஜமான எல்லைகள் இல்லாதவரை
குர்திஸ் குழந்தைக்கு வீடு இல்லை
நான் ஒரு குர்திஸ் குழந்தை
எனக்கென்றொரு வீடு இல்லை
நான் ஒரு குர்திஸ் குழந்தை
எக்கென்றொரு இடமில்லை.
ஜனனம்
ரபீக் ஸபர்
ஒரு குளிர் உறைந்த குடிசையில்
பலத்த மழையின் இடையில்
பசியோடு
பயத்துடன் நடுங்கியபடி
நண்பனற்று
மருத்துவிச்சி இல்லாமல் அவன் பிறந்தான்.
ஒரு புகை மண்டிய குகையில்
கதறல்களுக்கிடையில்
இராணுவ டிரக்கில்
ஒரு கூடாரத்தின் கீழ்
காயத்தின் உள்ளே அவன் பிறந்தான்.
எம் மக்களை
அவர்கள் வெட்டிச் சாய்க்கும் வேளை
அவன் பிறந்தான்.
வெடிகுண்டுச் சிதறலின் கீழ்
ஒரு குர்திஸ் குழந்தை பிறக்கிறது.
எதிர்த்து நிற்க
கலகத்தில் ஈடுபட
ஒரு குர்திஸ் குழந்தை பிறக்கிறது.
(முற்றும்)
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
-நாமகள்
ஒரு கணம்தான்
அதிலும்
குறைவாகக் கூட இருக்கலாம்.
யாருமே எதிர்பாராமல்,
அது நிகழ்ந்தது.
அந்தச் சந்தியை
கடந்து கொண்டிருந்தவர்கள்,
தேநீர்க் கடையினுள்ளே
அமர்ந்திருந்தவர்கள்,
மண்ணெண்ணெய்க்காய்
வரிசையில் நின்றவர்கள்
எல்லோரையும் தாண்டி
அவனுக்கு முன்பாய்
நிகழ்ந்த வெடிப்பு.
மேலே விமானங்கள் இல்லை;
ஸெல்தான்.
அவன்
ஒரு முறை மேலெழும்பி
கீழே வீழ்ந்தான்.
எந்தச் சத்தமுமில்லை.
கத்த நினைப்பதற்குள்
அவன் இறந்திருக்க வேண்டும்.
வெடிப்பின் அதிர்வில்
அவன் கத்தல்
கேட்காமலும் போயிருக்கலாம்.
எதுவும் சொல்வதற்கில்லை
சனங்கள்
திடீரென ஒதுங்கிப் போனார்கள்
தேநீர்க் கடையின் பாட்டுக்கூட
நின்று போயிருந்தது.
வெறிச்சோடிய வீதியில்
அவன் மட்டும்
தனியாகக் கிடந்தான்.
கையொன்று
வீதியின் மறுகரையில்
விரல்களை நீட்டியபடி
யாரையோ
குற்றஞ் சாட்டுவதாய்லு}
சில நிமிஸங்கள் தான்.
'அம்புலன்ஸ்' வந்து
எல்லாவற்றையும்
அள்ளிக்கொண்டு போனது,
எஞ்சியதாய்
கொஞ்சமாய் அவனது இரத்தம்
ஒன்றிரண்டு
சைக்கிள் கம்பிகள்
ஸெல் துண்டுகள்
அவ வளவுதான்.
வாகனங்கள்
அவற்றையும்
துடைத்துக்கொண்டே கடந்தன.
வீதியில்
இப்போது எதுவுமேயில்லை.
எல்லாமே
பழையபடி.
மண்ணெண்ணெய் வரிசை
முன்பை விட நீண்டிருக்கிறது
தேநீர்க் கடையிலும்
புதிதாய்
ஒரு பாட்டு ஆரம்பமாகியிருக்கிறது
சனங்கள்
விரைந்து கொண்டிருக்கிறார்கள்
எதுவுமே நிகழாத மாதிரி.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
என் மீது உன்னகமும் முகமும்
நேற்றய பொழுதொன்றில்
நான் உன்னை இழந்து போனேன்
என்னில் உன்னை விதைப்பதற்காய்
பலமுறை முயன்றும்
தோற்றுப்போனேன்
நீண்ட இரவுப் பொழுதொன்றில்
ஆந்தை அலறும் வேளை
ஆட்காட்டிக்குருவி அவலமாய்க் கத்தி
அமைதியைக் கலைக்கும்
மனிதம் எப்பவோ நடந்து முடிந்த பாதையில்
உன் சிறிய பாதங்களை
வெள்ளை மணலில் பதித்திருப்பாய்
தடம் பதித்து மீண்டும் வருவாயென்று
நினைவுகளைச் சுமந்து எட்டி நடந்திருப்பாய்
நினைவுகள் வழித்தடங்களாக
கரிய இருளொன்றுக்குள்
உந்தனைத் திணித்திருப்பாய்
கருமை படர்ந்த இரவுகள் தான்
உன் இறுதிப்பயண மாயிற்று
இறுதியாய் கானககுடிசை வந்தும் போனாய்
அங்கங்களையும் முகங்களையும் இழந்துபோன
நகரொன்றுக்குள் நீ
இறுதியாய் சரிந்து போனாய்
என்னில் உன் பயணத்தடமிருக்கும்
என் மனதில் நீ
இன்னும் கனமாய் படர்ந்துள்ளாய்
-சத்திய மலரவன்
|