Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மரணம் உனை அழைக்கும்.....
#1
காதலே வாழ்வென்று-பல
காளைகள் கருதுகின்றார்கள்
கன்னியோ காதலை
கனவாக மதிக்கிறாள்.....
கனிவான காதல் நினைவுகள்
காதல் தொலைந்த பின்....-நெஞ்சை
நெருடும் ரணங்களாய்....
காயப்படுவது உன் உள்ளமே!
கன்னியவள்..... -தாலி
கட்டியவுடன்...-உன்
காதலையும் நினையாள் -உன்
நினைவையும் மீட்டால்....
அவள் நினைவுதனில்-உன்
வாழ்வுதனை ஏன் கருக்குகிறாய்?
காதல் மட்டுமா வாழ்வு?
சாதிக்கப்பிறந்தவன் நீ!...
காதலின் நினைவுகளை...
கடந்த கால சுவடுகளை..
கனவாக்குவது கடினமே!-ஆனால்
கடைசிவரை அதை
எண்ணுவதால்....
எண்ணங்கள் மாறி-உனை
மரணங்கூட அழைக்கலாம் தோழா!
மனிதப்பிறப்பு காதலுக்காய் அல்ல
நிலை நாட்டவே-ஆம்
உன்னை நீ யாரென
நிலை நாட்டிடு.....
நிலை மாறும் உனக்கு...-உனை
நிராகரித்தவள் கூட
உன் மடி நாடி வரலாம்...
எனவே....
காதலி நினைவுதனை
களைந்து விட்டு....
கழிப்புடன் கடமை செய்
காதல் உனை அழைக்கும் வரை....
இல்லையேல் காதலின் நினைவுடன்..
நீயிருக்க...
மரணம் உனை அழைக்கும்.....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:மனிதப்பிறப்பு காதலுக்காய் அல்ல
நிலை நாட்டவே-ஆம்
உன்னை நீ யாரென
நிலை நாட்டிடு.....

கவி வரிகள் அருமை நிதர்சன். வாழ்த்துக்கள்.
மேலும் தொடருங்கள்.
Reply
#3
<!--QuoteBegin-Nitharsan+-->QUOTE(Nitharsan)<!--QuoteEBegin-->காதலே வாழ்வென்று-பல
காளைகள் கருதுகின்றார்கள்
[b]கன்னியோ காதலை
கனவாக மதிக்கிறாள்.....
கனிவான காதல் நினைவுகள்
காதல் தொலைந்த பின்....-நெஞ்சை
நெருடும் ரணங்களாய்....
காயப்படுவது உன் உள்ளமே!
[b]கன்னியவள்..... -தாலி
கட்டியவுடன்...-உன்
காதலையும் நினையாள் -உன்
நினைவையும் மீட்டால்....
அவள் நினைவுதனில்-உன்
வாழ்வுதனை ஏன் கருக்குகிறாய்?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:?: :?: :?: :roll: :roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#4
இந்திரஜித்திற்கு அறிவுரையோ அண்ணா? :roll: ஆனா ஒரு பக்க நியாயத்தை வைச்சு ஒருவரை குற்றம் கூறுவது எப்படி? :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
முக்கோணக் காதல் ,காதல் தொடங்கிய நாளில் இருந்து இருக்கு.இதற்கு எவரும் குற்றவாளி அல்ல,காதலை ஒரு கறை படியாத உன்னதனமான உறவு முறையாக கற்பிக்கப் படுவதே பிரதான காரணம்.வாழ்வதற்காகவே காதல்,
காதலுக்காக வாழ்க்கையல்ல.வாழ்க்கையில் ஒரு சிறிய பகுதியே காதல்,இள வயதில் இதை விளங்குவது கொன்ச்சம் கஸ்ட்டம்.
ஆகவே இப்படியான பிரச்சனைகள் வரும் போது அனுபவத்தில் முதிர்ந்தவர், நம்பிகையானவர்களுடன் கதைப்பதுவே பிரச்சனைக்குள் மூழ்கி இருக்கும் உங்களுக்கு நல் வழி தெரியும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
Reply
#6
நன்றி நண்பா உன்களுக்கும் தான்

வலி தெரிந்தவள் கூடவாèத்து சொல்வது
என்வாèக்கையில் நடக்கிறது என்ன செய்வது
சாதிக்கும்வரை துணை நான் என்றாளே நான்
தப்பாக புரிந்து விட்டேன் சாகும்வரை என்று
தான் சொன்னாளோ
சத்தியம் செய்தவள் நட்பாக இருப்போம் என்றால்
நான் மட்டும் நடைபிணமாக அலைகிறேன்
inthirajith
Reply
#7
tamilini Wrote:இந்திரஜித்திற்கு அறிவுரையோ அண்ணா? :roll: ஆனா ஒரு பக்க நியாயத்தை வைச்சு ஒருவரை குற்றம் கூறுவது எப்படி? :?

:roll: :roll: ஒரு பக்கம் மட்டும் நியாயம் இருப்பதாய் தோன்றியது.... ஆனால் இது மற்றமாதிரியும் சில இடங்களில் பொருந்தும்..ஆனாலும் பெரும்பாலன இடங்களில்....நிலமை உங்களுக்கே புரியும்..

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
நன்றி அண்ணா கவிதை நன்றாக இருக்குது

----------------
jothika
Reply
#9
இந்திரஜீத்...
ஒன்றை ப்பற்றி நாம் திருப்பி திருப்பி யோசிக்கும் போது அதன் வலி அதிகமாகும். சிந்தனையை மாற்றி உங்கள் எண்ணங்களை வேறு ஒரு திசை நோக்கி சொலுத்துவீர்களாளால் நிச்சயம் நல்லதொரு மாற்றம் உங்களுக்குள் ஏற்ப்படும். அவ்வாறான மாற்றத்தின் மூலமே நீங்கள் சாதாரண நிலைக்கு வருவீர்கள்.

குறிப்பு: நான் அறிவுரைகூறுவதாய் தயவு செய்து கோபப்படாதீர்கள்..உங்களுக்கு அறிவுரை கூறுமளவுக்கு எனக்கு அனுபவமும் இல்லை வயதும் இல்லை Big Grin

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
கவிதை அருமை
Reply
#11
நிதர்சன் அண்ணா..ரொம்ப நல்ல கவிதை...
ஆனாலும் சில பெண்களை நினைத்து எல்லா பெண்களையும் சேர்த்து பிழையாகக் கதைப்பது ரொம்ப கவலையைக் கொடுக்கிறது...
ஆனாலும் இது இந்த கால சில இளைஞர்களுக்கு...ஒரு நல்ல கருத்துகள் கொடுக்கும் கவிதை..அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்
..
....
..!
Reply
#12
Quote:ஒரு பக்கம் மட்டும் நியாயம் இருப்பதாய் தோன்றியது.... ஆனால் இது மற்றமாதிரியும் சில இடங்களில் பொருந்தும்..ஆனாலும் பெரும்பாலன இடங்களில்....நிலமை உங்களுக்கே புரியும்..
இந்திரஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனமாய் போகவேண்டாமே :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
எடுத்துக்கொண்ட கருப்பொருள் அருமை நிதர்சன்... வாழ்த்துக்கள் என்பதை விட நன்றிகள்...பல..

ப்ரியசகி Wrote:நிதர்சன் அண்ணா..ரொம்ப நல்ல கவிதை...
ஆனாலும் சில பெண்களை நினைத்து எல்லா பெண்களையும் சேர்த்து பிழையாகக் கதைப்பது ரொம்ப கவலையைக் கொடுக்கிறது...
ஆனாலும் இது இந்த கால சில இளைஞர்களுக்கு...ஒரு நல்ல கருத்துகள் கொடுக்கும் கவிதை..அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்

வெற்றிக்குப்பின்னால தான் எல்லா ஆண்களும் ஓடுவார்கள் அதுதான் உலகநியதி, ஆனால் பெண்கள் மட்டுமேன் தன்னிடம் காதல் சொன்னவனிடம் விரும்புகிறேன் என்று சொல்ல வேணும், அப்படி விரும்புகிறேன் என்று சொன்னாலும் அவன் தனக்கு உகந்தவன் அல்ல என்று தெரிந்தால் விலகிவிடுவதுதானே இருவருக்குமே நல்லது. அப்படிப்பிரிந்தால் பிழை என்று சொல்ல முடியாதுதானே. அதற்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீங்கள்...ஆ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#14
தல அண்ணா..நான் கவலைப்படுவது ஏன் என்றால்..பொதுவாக ஆண்கள் பெண்கள் தான் ஏமாத்துபவர்கள் என்று சொல்லுவார்கள். அதைத்தான் பிழை என்கிறேன்.
காதலில் உண்மையா இருப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற கேள்விக்கு பெண்கள் என்பது போல கருத்து நிறைப்பேர் எழுதினார்கள். எனக்கு அப்பிடியான பேச்சுக்கள் கேட்க கவலையாக உள்ளது..அதைத்தான் சொல்கிறேன். அதற்காக பெண்கள் ஏமாத்தவே இல்லை என்று நான் சொல்லவில்லை. ஏமாத்துபவர்களை மட்டும் கதையுங்கள்..பொதுவாக பெண்கள் என்று குறிப்பிட்டால் அதில்..நானும் தான் அடங்குவேன்..யேன் தமிழினி அக்காவும் தான். :wink:

.
Quote:அப்படி விரும்புகிறேன் என்று சொன்னாலும் அவன் தனக்கு உகந்தவன் அல்ல என்று தெரிந்தால் விலகிவிடுவதுதானே இருவருக்குமே நல்லது. அப்படிப்பிரிந்தால் பிழை என்று சொல்ல முடியாதுதானே.
சொல்ல முடியாது. தான்..அப்புறம் ஏன் இந்த ஆண்கள் பெண்கள் ஏமாத்துபவர்கள் என்று சொல்கிறார்கள். அதையும் சொல்லாமல் விடலாம் தானே..இல்லையா?
..
....
..!
Reply
#15
Nitharsan Wrote:காதலே வாழ்வென்று-பல
காளைகள் கருதுகின்றார்கள்
கன்னியோ காதலை
கனவாக மதிக்கிறாள்.....
கனிவான காதல் நினைவுகள்
காதல் தொலைந்த பின்....-நெஞ்சை
நெருடும் ரணங்களாய்....
காயப்படுவது உன் உள்ளமே!

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் நிதர்சன்.

காதலே வாழ்க்கை என்று காளைகள் மட்டுமல்ல பல கன்னியரும் தான் நினைக்கின்றார்கள். காதலே வாழ்க்கை என்று இருக்கும் போது வாழ்வின் மற்றய இலட்சியங்கள் அடிபட்டு போகும் வாய்ப்பு உண்டு. அதனால் காதலே வாழ்க்கையாக இல்லாமல் வாழ்கை காதலுடன் இருக்க வேண்டும். அந்த காதல் தரும் தன்னம்பிக்கையுடன் உத்வேகத்துடன் நம்முடைய மற்றய இலட்சியங்களை இலகுவாக அடைய முடியும். வாழ்க்கையில் காதல் என்ற வசந்தகாலம் நிச்சயம் வரவேண்டும் அப்படி வரவில்லை என்றால் துரதிஸ்டன் தான், அது தவிர காதலை ஆண்கள் தான் மதிக்கிறார்கள் பெண்கள் கனவாக நினைக்கிறார்கள் என்று குற்றம் சாட்ட முடியாது. காதலை உயிரிலும் உயர்வாக நினைப்பவர்களும் பொழுதுபோக்காக நினைப்பவர்களும் இருபக்கமும் நினைக்கிறார்கள், அப்படி இருக்கும் போது ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு. ஒரு ஆண் காதலால் ரணப்பட்டவுடன் அதனை வெளி உலகிற்கு வெளிக்காட்டுவதால் ஆண்கள் தான் காதலால் காயப்படுவது போல் ஒரு தோற்றம் உருவாகின்றது, ரணப்பட்ட பெண்களோ அதனை மனதில் வைத்து அவர்களுக்குள்ளேயே வேதனைப்படுவதால் அவர்களுடைய வேதனைகள் வெளியில் தெரிவதில்லை. அவ்வளவு தான்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
Mathan Wrote:
Nitharsan Wrote:காதலே வாழ்வென்று-பல
காளைகள் கருதுகின்றார்கள்
கன்னியோ காதலை
கனவாக மதிக்கிறாள்.....
கனிவான காதல் நினைவுகள்
காதல் தொலைந்த பின்....-நெஞ்சை
நெருடும் ரணங்களாய்....
காயப்படுவது உன் உள்ளமே!

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள் நிதர்சன்.

காதலே வாழ்க்கை என்று காளைகள் மட்டுமல்ல பல கன்னியரும் தான் நினைக்கின்றார்கள். காதலே வாழ்க்கை என்று இருக்கும் போது வாழ்வின் மற்றய இலட்சியங்கள் அடிபட்டு போகும் வாய்ப்பு உண்டு. அதனால் காதலே வாழ்க்கையாக இல்லாமல் வாழ்கை காதலுடன் இருக்க வேண்டும். அந்த காதல் தரும் தன்னம்பிக்கையுடன் உத்வேகத்துடன் நம்முடைய மற்றய இலட்சியங்களை இலகுவாக அடைய முடியும். வாழ்க்கையில் காதல் என்ற வசந்தகாலம் நிச்சயம் வரவேண்டும் அப்படி வரவில்லை என்றால் துரதிஸ்டன் தான், அது தவிர காதலை ஆண்கள் தான் மதிக்கிறார்கள் பெண்கள் கனவாக நினைக்கிறார்கள் என்று குற்றம் சாட்ட முடியாது. காதலை உயிரிலும் உயர்வாக நினைப்பவர்களும் பொழுதுபோக்காக நினைப்பவர்களும் இருபக்கமும் நினைக்கிறார்கள், அப்படி இருக்கும் போது ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாட்டுவது தவறு. ஒரு ஆண் காதலால் ரணப்பட்டவுடன் அதனை வெளி உலகிற்கு வெளிக்காட்டுவதால் ஆண்கள் தான் காதலால் காயப்படுவது போல் ஒரு தோற்றம் உருவாகின்றது, ரணப்பட்ட பெண்களோ அதனை மனதில் வைத்து அவர்களுக்குள்ளேயே வேதனைப்படுவதால் அவர்களுடைய வேதனைகள் வெளியில் தெரிவதில்லை. அவ்வளவு தான்.

உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகிறேன்..ஆனால் நான் எழுதிய சூழ்நிலை அப்படியானதால்.....அப்படியாக வார்த்தைகள் வந்துவிட்டன அதற்காள் வருந்துகிறேன்..

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
ப்ரியசகி Wrote:சொல்ல முடியாது. தான்..அப்புறம் ஏன் இந்த ஆண்கள் பெண்கள் ஏமாத்துபவர்கள் என்று சொல்கிறார்கள். அதையும் சொல்லாமல் விடலாம் தானே..இல்லையா?

மன வேதனையில சொல்லுறதை எல்லாம் நினைச்சு கலங்கி உங்களை ஏன் வருத்துறிங்கள்....ஆ <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
::
Reply
#18
Quote:கடந்த கால சுவடுகளை..
கனவாக்குவது கடினமே!-ஆனால்
கடைசிவரை அதை
எண்ணுவதால்....
எண்ணங்கள் மாறி-உனை
மரணங்கூட அழைக்கலாம் தோழா

பிடித்தமான வரிகள் நன்றி நிதர்சன்
----------
Reply
#19
நானும் தான் மன வேதனைல சொல்றேன் அண்ணா :wink:
..
....
..!
Reply
#20
<!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->நானும் தான் மன வேதனைல சொல்றேன் அண்ணா :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னது அது?..... எதாவது பரிட்சைத் தோல்வியா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
::
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)