Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விண்ணியல் விநோதங்கள்...
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41355000/jpg/_41355975_mars_lake203_esa.jpg' border='0' alt='user posted image'>

செவ்வாய் மீது விண்பொருள் ஒன்று மோதிய அமைந்த குழியில் பனிக்கட்டிக் குளம்..!

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சொந்தமானதும், செவ்வாய் கிரகத்தை அண்மித்து சுற்றி அதனை ஆய்வு செய்து வரும் விண்கலம் ஒன்று, செவ்வாயின் வட அரைக்கோளத்தில் வடமுனைவு நோக்கிய தூரப் பகுதி ஒன்றில் பனிக்கட்டிக் குளம் ஒன்றை படம் பிடித்துள்ளது...!

இந்தப் பனிக்கட்டிக்குளம் விண்பொருள் ஒன்று செவ்வாயின் வட அரைக்கோளத்தில் மோதிய இடத்தில் அமைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன..!

செவ்வாயில் பனிக்கட்டி நிலையில் நீர் அவதானிக்கப்பட்டிருப்பதானது அங்கு ஏதோ ஒரு வடிவத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் அல்லது வாழலாம் என்ற சாத்தியக்கூற்றை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது...!

அவதானிக்கப்பட்டது பனிக்கட்டி அல்லாத வேறுபடிவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர்..!

செய்தி ஆதாரத்துக்கு - http://kuruvikal.blogspot.com/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
நன்றி குருவிகள்.. குளத்தில் நல்ல தண்ணி நிக்கு போல ..
[b][size=18]
Reply
நல்ல சுவாரிசியமான , & பிரியோசனமான தகவல் குருவி
<b> .. .. !!</b>
Reply
[size=16]<b>டிஸ்கவரி பழுது பார்க்கப்பட்டது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41367000/jpg/_41367907_crew_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
<i>டிஸ்கவரியில் பயணித்தவர்கள்</i>

அமெரிக்க விஞ்ஞானிகளால் டிஸ்கவரி விண்வெளி ஒடம் விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து அந்த விண்கலனின் அடிப்பகுதியில் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய முயல, கலனில் உள்ள விண்வெளி வீரர்கள், சற்று வித்தியாசமான ஒரு சந்தர்ப்பத்தில் விண்வெளியில் நடந்து சரி செய்ய உள்ளனர்.

அதாவது, விண்வெளியில் இந்த விண்வெளி ஓடம் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு இருக்கும்போதே, விண்வெளி வீரர்கள் இந்த ஓடத்தின் அடிப்பகுதிக்கு, அதாவது வெளிப்புறத்தில் உள்ள அடிப்பகுதிக்கு, நடந்து சென்று இதை சரி செய்ய உள்ளனர்.

இவ்வாறு கலன் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் போது அவர்கள் வெளியே வந்து நடப்பது இதுவே முதல் முறை.

நாசா விஞ்ஞானிகள் இந்த மாதிரி அவர்கள் நடப்பதில் பெரும் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிகவும் பாதுகாப்பான வழி என்றும் கூறுகிறார்கள்.

இந்த் பிரச்சினை தெரியவந்த கடந்த மூன்று நாட்களாகவே, நாசா விஞ்ஞானிகள், எப்படி அடுத்த வாரம் டிஸ்கவரி ஓடத்தை பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்பக்கொண்டு வருவது என்பது குறித்து முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த கலனிலிருந்து ஹூஸ்டன் நகரில் உள்ள திட்டக்கட்டுப்பாட்டு தலைமயகத்துக்கு கிடைத்த புகைப்படங்கள் எல்லாம் டிஸ்கவரி ஓடத்தின் அடிப்பகுதியில் , வெளிப்புறத்தில் உள்ள ஓடுகளுக்கிடையே உள்ள இடைவெளியை ஒட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் செராமிக் இழைகள் சில பிய்ந்து தொங்கிக்கொண்டிருப்பதைக்காட்டின.

இந்த தொங்கிக்கொண்டிருக்கும் இழைகள், ஓடம் திரும்ப வருகையில் , பூமியின் சூழலுக்குள் நுழையும் போது, பெருமளவு உஷ்ணமாகி ஆபத்தைத் தோற்றுவிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.

இருக்கும் சிக்கல்கள் மற்றும் அபாயங்களைக் கணித்த பிறகு, விஞ்ஞானிகள், இந்த கலனில் ஏற்பட்ட இந்த சேதத்தை சரிசெய்ய, இரு விண்வெளி வீரர்களை கலனில் இருந்து ஒடத்தின் அடிப்பகுதிக்கு விண்வெளியில் நடந்து சென்று, தொங்கிக்கொண்டிருக்கும் இழைகளை உடைத்து அப்புறப்படுத்தவைக்க முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு கலன் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கையில், விண்வெளி வீரர்களை நடந்து கலனின் அடிப்பகுதிக்கு சென்று இதைச் சரி செய்ய வைப்பது என்பது இதற்கு முன்னர் வரை செய்யப்படாத, ஒத்திகை பார்க்கப்படாத ஒரு முறை.

ஆனால், இதுதான் இந்த கட்டத்தில் இருக்கும் சிறந்த வழி என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் செய்வதற்கான தகவல்கள் தங்களிடம் இருக்கின்றன, விண்வெளி வீரர்களுக்கு இதைச்செய்வதற்கான திறன் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர்.

bbc tamil
Reply
டிஸ்கவரி திருத்த வேலை வெற்றிகரமாக முடிந்தது

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41372000/jpg/_41372891_nasa203indextile.jpg' border='0' alt='user posted image'>
<b>திருத்தம் செய்யப்பட்ட பகுதி</b>

அமெரிக்காவின் டிஸ்கவரி விண் ஓடத்தின் வீரரான ஸ்ரிபன் றொபின்சன், அதனது திருத்த வேலைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.

இயந்திரக் கை ஒன்றின் மூலம் வெளியே இறக்கப்பட்ட றொபின்சன், ஓடத்தின் அடிப்பாகத்தை அணுகி, வெப்பந் தாங்கும் ஓடுகளுக்கு இடையில் துருத்திக் கொண்டிருந்த துணித் துண்டுகளை அகற்றினார்.

ஓடம் மீண்டும் பூமிக்குத் திரும்பும் போது வெப்பம் அதிகரித்து, அது தீக்கிரையாவதை தடுக்க இந்த அவசரத் திருத்த வேலை அவசியம் என்று கருதப்பட்டது.

விண் வெளியில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடத்துக்கு வெளியே போய் இப்படி ஒரு திருத்த வேலையைச் செய்வது இதுவே முதற்தடவை என்று கூறப்படுகிறது.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் கொலம்பியா விண் ஓடம் பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது, அது வெப்பமடைந்து (தீப்பிடித்து), அதிலிருந்த 7 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் போன்று மீண்டும் ஏற்படாமலிருக்க இந்த திருத்த வேலை செய்யப்பட்டது

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>உலகெங்கும் பரபரப்புடன் எதிர்பார்க்கும் டிஸ்கவரி இன்று பூமி திரும்புகின்றது </b>

அமெரிக்கா மட்டுமல்ல அகில உலகமும் பரபரப்புடன் எதிர்நோக்கும் டிஸ்கவரி விண்வெளி ஓடம் மீண்டும் இன்று பூமி திரும்புகின்றது.

ஆனால் அதற்கு முன்பாக டிஸ்கவரி பல்வேறு ஆபத்துகளைக் கடக்க வேண்டியுள்ளது. விண்வெளியிலிருந்து பூமியின் வளிமண்டலத்தில் டிஸ்கவரி நுழையும் தருணம் மிக முக்கியமானது. அதை பட படக்கும் இதயங்களுடன் நாசாவின் பொறியியலாளர்கள் கவனித்துக் கொண்டே இருப்பார்கள்

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட கொலம்பியா விண்வெளி ஓடம் பூமியின் வலி மண்டலத்தில் நுழையும் போது தான் வெடித்து சிதறியது 7 பேர் இறந்தனர்.

திடீரென வளிமண்டலத்துக்குள் நுழையும் போது உராய்வினால் ஏற்படும் 1,650 டிகிரி வெப்பத்தை டிஸ்கவரி விண்வெளி ஓடம் தாங்கியாக வேண்டும். சுற்றுப் பாதையிலி ருந்து புறப்பட்ட 32 நிமிடங்களில் புவியின் வளி மண்டலத்தை டிஸ்கவரி எட்டிவிடும் அதைத்தொடர்ந்து அடுத்த 31 நிமடங்களில் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கேப் கனவொராவில் தரை இறங்கிவிடும். டிஸ்கவரி விண்வெளி ஓடம் மணிக்கு 29 ஆயிரம் கி. மீ. வேகத்தில் பயணம் செய்யும். ஆனால் புவி வளிமண்டலத்தில் நுழையும் போது இந்த வேகத்தை கட்டாயமாகக் குறைக்க வேண்டும். அப்போதுதான் பய ணம் பாதுகாப்பானதாக அமையும். பின் னோக்கியும் மேலும் கீழும் பறந்து வேகத்தை டிஸ்கவரி குறைக்கும்.

வணிகரீதியிலான விமானங்களை விட வேகமாகவும் செங்குத்தாகவும் டிஸ்கவரி தரையிறங்கும் நிலத்தைத் தொடும்போது ஒரு பாரசூட் விரிந்து அதன் வேகம் முற்றிலும் தடைபடும்.

டிஸ்கவரியில் மேற்கொள்ளப்பட்ட பழுது நீக்கும் பணிகளுக்குப் பின்னர் ஆபத்து ஏதும் இல்லை. பயணம் பாதுகாப்பானதாக இருக்கும் என உறுதி செய்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள். இருந்தாலும் படபடக்கும் மனதுடன் உலகம், டிஸ்கவரிக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது
veerakesari
Reply
தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா
[b][size=18]
Reply
நாசா விண்ணாய்வு நிறுவனத்தினால் அனுப்பப்ட்ட டிஸ்கவரி விண் ஓடம் இன்று அமெரிக்க நேரப்படி அதிகாலை 4:46 மணியளவில் புூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையவுள்ளது. புூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும் போது ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக விண் ஓடத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் முழு உலகமுமே பரபரப்பில் உள்ளது.

2003ம் ஆண்டு 7 விண்வெளி வீரர்களுடன் விண்ணில் வெடித்துச் சிதறிய கொலம்பிய விண் ஓடம் ஏவப்பட்ட போது அதிலிருந்து வெப்பத் தடுப்பு ஓடுகள் உடைந்து வீழ்ந்ததைப் போன்று டிஸ்கவரி ஓடம் ஏவப்பட்ட போது வெப்பத் தடுப்பு ஓடுகள் சிறியளவில் உடைந்து வீழ்ந்ததுடன் வெளிப்புற எரிபொருள் தாங்கியில் உள்ள நு}ரைப் பஞ்சு உடைந்து வீழ்ந்தது.

இதனால் டிஸ்கவரி ஓடம் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது பாதிப்புக்கள் ஏற்படலாம் என அஞ்சிய நாசா விஞ்ஞானிகள் ஓடத்தை முழுமையாகச் சோதனை செய்து ஏற்பட்டிருந்த தவறுகளை விண்ணில் வைத்தே விண்வெளி வீரர்கள் மூலம் திருத்தியமைத்தனர்.



இந்நிலையில் இன்று அதிகாலை 4:14 மணிக்கு சுற்றுப் பாதையிலிருந்து புறப்பட்டு 32 நிமிடங்களில் புவியின் வளி மண்டலத்தை டிஸ்கவரி எட்டிவிடும். டிஸ்கவரி விண் ஓடம் திடீரென வளி மண்டலத்திற்குள் நுழையும் போது உராய்வினால் 1,650 டிகிரி வெப்பம் உண்டாகும். அதிலிருந்து விண் ஓடம் தப்பித்தால் அடுத்த 31 நிமிடங்களில் அமெரிக்க புளோரிடாவில் உள்ள கேப் கனவொராவில் தரையிங்கும்.

நன்றி சங்கதி

ஆனால் சற்று முன்கிடைத்த தகவல் தரையிறக்கம் நாளை கலைதான் காரணம் சீரற்ற காலநிலை[/img][img][/img][img][/img[Image: discovery3wk.th.jpg]]
Reply
தரை இறங்குவதை நேரடியாக பார்க்க...
http://news.yahoo.com/fc/science/space_shuttle
Reply
என்ன இறக்கும் இடத்தை மாற்றி மாற்றி குளபு;புகிறார்கள்
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>டிஸ்கவரியின் தரை இறக்கம் தாமதம்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40665000/jpg/_40665380_disc_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
டிஸ்கவரி

அமெரிக்க விண்கலமான டிஸ்கவரி தரையிறங்கும் புளோரிடாவில் மேகமூட்டம் அதிகமாக இருப்பதாலும், கடும் மழையினாலும், டிஸ்கவரி விண்கலம் பூமிக்கு திரும்பி வருவது 24 மணி நேரத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.

விண் வெளியில் இருந்து பூமிக்குத் திரும்புகையில் காற்று மண்டலத்தின் ஊடாக பயணிப்பது விண்கலத்திற்கு சோதனையான கட்டம் என்று கூறலாம்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கொலம்பியா விண்கலமானது இவ்வாறு விண்ணில் இருந்து காற்று மண்டலத்தின் ஊடாக பூமிக்குத் திரும்புகையில் உடைந்து சிதறிப் போனது.

கொலம்பியா பூமியில் இருந்து வானிற்கு செல்லும் போது உண்டான சிதிலங்கள் விண்கலத்தின் முக்கிய பகுதியினைத் தாக்கி சேதப்படுத்தியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது.

இதே போல டிஸ்கவரி விண்கலம் விண்ணில் ஏவப்படும் போதும் சிறிய சேதம் ஏற்பட்டது ஆனால் விண்வெளி வீரர்கள் வானில் மிதந்த நிலையிலேயே கோளாறைச் சரி செய்தனர்.

இந்த முறை விண்வெளி ஓடம் எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் பத்திரமாகத் தரையிறங்கும் என விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>ÊŠ¸Åâ Àò¾¢ÃÁ¡¸ ¸Ä¢§À¡÷½¢Â¡Å¢ø ¾¨Ã¢Èí¸¢ÂÐ.</span>
<img src='http://www.nasa.gov/externalflash/rtf_front/images/main_image.jpg' border='0' alt='user posted image'>
Discovery and the STS-114 crew have touched down safely at Edwards Air Force Base in California, successfully wrapping up NASA's historic Return to Flight mission.

During their two weeks in space, Commander Eileen Collins and her six crewmates tested out new safety procedures and delivered supplies and equipment the International Space Station
<img src='http://img301.imageshack.us/img301/7707/fp3pz6wm.jpg' border='0' alt='user posted image'>
Reply
இவ்வளவு நாளும் அவர்களின் உயிர் நிச்சயமற்று இருந்தது. அத்தனை மனித உழைப்புகளும் வீணாகாமல் அவர்கள் பத்திரமாக தரையிறங்கியதில் மிக்க மகிழ்ச்சி.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தவிர்க்க முடியாத காரணங்களால் களம் வரமுடியவில்லை... விஞ்ஞானச் செய்தியும் படிக்க முடியவில்லை... செய்தி மட்டும் பார்க்க முடிந்தது...களத்தில் தகவல்கள் உடனுக்குடன் தரப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது...! நன்றி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஓடத்திற்கு ஏதாவது நடக்குமா என எல்லோரும் அச்சினர். ஒருவழியாக நாசா பிரச்சினையில்லாமல் தரையிறங்கி விட்டது. சந்தோசம்.
<b>
?
- . - .</b>
Reply
<b>New US Mars probe delayed again </b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40678000/jpg/_40678114_mro_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
The US space agency Nasa has delayed
the launch of its new Mars probe for the
second day running.

http://news.bbc.co.uk/2/hi/science/nature/4134300.stm
Reply
செவ்வாய்க் கிரகத்துக்கு புதிய விண்கலம்

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40683000/jpg/_40683896_probe_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
<b>புதிய விண்கலம்</b>

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம் செவ்வாய்க் கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்பும் தனது புதிய முயற்சியை ஆரம்பித்துள்ளது.

மார்ஸ் ஒபிர்ட்டர் என்னும் புதிய விண்கலம் புளோரிடா மாநிலத்தின் கனவரல் என்னும் இடத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்த வார ஆரம்பத்தில் இந்த விண்கலத்தை ஏவ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொழில்நுட்பக் காரணங்களுக்காக கைவிடப்பட்டன.

செவ்வாய்க் கிரகத்தை அளந்து, அதன் சுற்றாடலையும் மற்றும் சுவாத்தியத்தையும் ஆராய இந்த விண்கலம் நான்கு வருடங்களைச் செலவிடும்.

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
என்ன மதன்,? தமிழன் ஆடி மாதத்தில் சாப்பிடுறதை தவிர வேற ஒன்றும் செய்யமாட்டான் என்கின்றான், இவன் என்னன்ட விண்கலத்தை தரையிறக்கியதும் ஆடி மாதம், விண்ணுக்கு அனுப்பியதும் ஆடி மாதத்தில் இவங்கள் முன்னெற மாட்டார்கள்! :evil:
Reply
விண்வெளியில் மிதந்த சாதனங்களை மையத்துக்கு கொண்டு சேர்த்தனர்

<img src='http://www.dinamani.com/Images/Aug05/20Space.jpg' border='0' alt='user posted image'>

<b>சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்</b>


கேப் கனவெரால், ஆக. 20: சர்வதேச விண்வெளி மையத்துக்கு வெளியே மிதந்த பல்வேறு சாதனங்களை, மீண்டும் ஆராய்ச்சி மையத்துக்குக் கொண்டு சேர்த்தனர் விஞ்ஞானிகள்.

பூமியிலிருந்து 350 கி.மீ. உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரு விஞ்ஞானிகள் நிரந்தரமாக தங்கி, ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். செர்ஜி கிரிகலேவ், ஜான் பிலிப்ஸ் ஆகியோர் அந்த விஞ்ஞானிகள்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் வியாழக்கிழமை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்தனர். மையத்தின் வெளியே, விண்வெளியில் மிதந்தவாறு இருந்த பல்வேறு சாதனங்களை மீண்டும் மையத்துக்குள் கொண்டு சேர்த்தனர். நீண்ட காலமாக இவை விண்வெளியில் மிதந்து வந்தன.

டிஸ்கவரி விண்கலம் புறப்பட்ட சில நாள்களுக்குள் இவர்கள் "விண் நடை' மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

<b>இங்கிருந்தே பணி!</b>

இவர்கள் விண்வெளி மையத்தில் இல்லாத நேரத்தில், அமெரிக்காவின் ஹூஸ்டனிலும் ரஷியாவின் மாஸ்கோவிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் பணிகளைக் கவனித்தனர்.


<b>விண்வெளி பொம்மை</b>

செர்ஜி, ஜானின் விண்நடையின் முக்கிய நோக்கம், "மாட்ரியோஷ்கா' என்ற கதிரியக்கத்தை அளவிடும் பொம்மையை எடுத்து வருவதுதான்!

மென்மையான பொருள்களால் செய்யப்பட்ட அந்த பொம்மை, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு வெளியே கடந்த ஆண்டு வைக்கப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கும் பல்வேறு முக்கியத் தகவல்களை வைத்து, நிலாவுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸô திட்டமிட்டு உள்ளது.

ஆய்வு மையத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாக, இதைச் சுற்றியிருந்த உறையை விஞ்ஞானிகள் பிரித்தனர். அதை விண்வெளியில் தூக்கி எறிந்தனர். மேலும் சாதனங்களைத் தூய்மைப்படுத்த பயன்படுத்திய துணிகளையும் தூக்கி எறிந்தனர்.

மேலும் ஒரு டிவி காமிராவை பொருத்தினர். அடுத்த ஆண்டில், விண்வெளி ஓடம் வரும்போது இது பயன்படுத்தப்படும்.

பல்வேறு சாதனங்கள் மீண்டும் ஆய்வு மையத்துக்குள் கொண்டு செல்லப்பட்டதால், அவற்றை மீண்டும் பூமிக்கு எடுத்து வர விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தகவலுக்கு நன்றியண்ணா
----------
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)