08-03-2005, 07:16 PM
நேற்றுக்காலை வெக்ரோன் தொலைக்காட்சியில் "விடியல்" நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் செய்தி ஆய்வில் கலந்து கொண்ட தயானந்தா அவர்கள், "ஜெ.வி.பி", "இடசாரிகள்" சம்பந்தமான உரையாடல் வந்தபோது, பங்குபற்றிய விருந்தினர் ஜெ.வி.பியை இடதுசாரிகள் என்றழைப்பதை ஆமோதிக்காது போது, தயானந்தா அவர்கள் ஜெ.வி.பியினர் இடதுசாரிகள்தான்! என்று உறுதியாகக்கூறி, ஏனென்றால் "வலது குறைந்த கும்பல்கள் - இடதுசாரிகள் " தானென்றார்.
ஆனால் உண்மையில் இந்த ஜெ.வி.பியினரின் கடந்தகால, நிகழ்கால செயற்பாடுகளை பார்க்குமிடத்து, வலதுகுறைந்தவர்கள்! என்றழைப்பதைவிட மனநோயாளிகள்! என்றழைப்பதே பொருத்தமாகவிருக்கும்.
இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக.....
...... இந்தப் பேச்சையே எடுக்கலாம்.
இவர்கள் மட்டுமல்ல, தாடி வளர்த்ததால் மாக்ஸ்ஸிய இடதுசாரியாகிய எச்சிலிலை "டக்லஸ்" ஆகட்டும், இப்படிப் பலர் இடதுசாரிகளென இலங்கைத்தீவில் திரிகிறார்கள்.
வலதுகுறைந்தவர்கள், மனநோயாளிகள், எச்சிலிலைகள், கொலை-கொள்ளைக்காரர்கள், ... எல்லோரும் இடதுசாரிகளாம்! உங்கள் கருத்துக்கள் இந்த "இடதுசாரிகள்" தொடர்பாக என்னவென்று இங்கே கூறுங்கள்/எழுதுங்கள்.
ஆனால் உண்மையில் இந்த ஜெ.வி.பியினரின் கடந்தகால, நிகழ்கால செயற்பாடுகளை பார்க்குமிடத்து, வலதுகுறைந்தவர்கள்! என்றழைப்பதைவிட மனநோயாளிகள்! என்றழைப்பதே பொருத்தமாகவிருக்கும்.
இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக.....
Quote:விடுதலைப் புலிகளுக்கு அமெரிக்கா இராணுவம் உதவி: விமல் வீரவன்ச
சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வந்த அமெரிக்க இராணுவத்தினர் எமது இராணுவத்தினரின் உட்தகவல்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் முகாம்கள் குறித்து இராணுவத்தினர் அறிந்து வைத்துள்ள தகவல்கள் அனைத்தையும் கணனியில் பதிவுசெய்து கொண்டு சென்றுவிட்டனர்.
இது மிகவும் பயங்கரமான நிலை. இவையனைத்தையும் தெரிந்து கொண்டும் எமது தலைவர்கள் மௌனம் சாதித்து வருகின்றனர் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் இணைத்தலைவரான விமல் வீரவன்ச காலியில் நடைபெற்ற அதன் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் கூறியுள்ளார்.
அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது:
எமது நாட்டின் அரசியல் நெருக்கடிகள் புதிய புதிய மாற்றங்களுடன் அதிகரித்துச் செல்கிறது. இந்த நெருக்கடிகள் ஒருநேரம் ஒரே அளவில் இருக்கிறது. மறுநேரம் அதிகரித்துச் செல்கிறது.
அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆழிப்பேரலை நிவாரண சபை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் இந்தப் பிரச்சனை அதிகரித்துள்ளது.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடியதொரு தலைவரை நாம் தெரிவு செய்து கொள்ளாததாலேயே இவ்வாறான பிரச்சனைகள் எழுகின்றன. இங்கிருப்பது தலைமைத்துவம் பற்றிய பிரச்சனையாகும்.
சரியான தலைமைத்துவம் இருந்த காலங்களில் இந்த நாடு நேராக இருந்தது. தேசிய பாதுகாப்பு நல்ல நிலையில் இருந்தது. கலாச்சாரமும் பொருளாதாரமும் சீராக இருந்தது. இன்று இருக்கும் பிரச்சனை சரியான தலைமையின்மையாகும்.
அரசுத் தலைவர் தனது தனிப்பட்ட பிரச்சனைகள் இரண்டை தலையில் வைத்துக் கொண்டே இந்த விடயத்தை நோக்குகிறார். அவருக்கு தேவையான வகையில் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டுமாயின் நாடு ஸ்திரமற்ற நிலையில் இருக்க வேண்டும். அடுத்து பதவியை பிடிக்க வரும் தலைவரால் அந்த போட்டியில் வெல்ல முடியாத நிலையை ஏற்படுத்தவும் வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க அன்று செய்ததும் இதனையே. காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டமைக்கும் இதுவே காரணம். உலகின் புதிய அடிப்படைவாதிகளின் ஆதரவு ரணில்இ சந்திரிகா இருவருக்குமே கிடைக்கிறது.
மகிந்த ராஜபக்ச இவற்றை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மேற்கத்தேய ஏகாதிபத்தியவாதிகளுக்குத் தேவை பிரிவினையை வேண்டும் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதமே. அவர்களுக்கு பிறிதொரு இராஜ்ஜியத்தை ஏற்படுத்திக் கொடுப்பதும் நாட்டின் வளங்களை சூறையாடுவதுமே அவர்களின் திட்டம். அவர்களுக்கு தேவை இலங்கையை கரைத்து அழிப்பதாகும். பொருளாதார ரீதியாகஇ சமூக ரீதியாகஇ கலாச்சார ரீதியாக அதனை அவர்கள் ஆற்றிவருகின்றனர்.
மேற்கத்தேய சக்திகளின் தேவைக்காக இங்கிருக்கும் அரசசார்ப்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் விவகாரத்து சட்டத்தை விரிவாக்கும் ஒரு சட்டமூலத்தை கடந்த காலத்தில் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் எங்களின் எதிர்ப்பினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அந்த சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவர முயல்கின்றனர். இதன்மூலம் எமது சமூகத்தில் குடும்ப அமைப்பானது சீர்குலையும் நிலை ஏற்படும்.
இந்த செயற்பாடுகளால் எதிர்ப்பார்ப்புகள் பொய்த்துப் போதல் மற்றும் விரக்தி ஏற்படுவதால் நாட்டை பலவீனமாக்குதல் மேலும் இலகுவாகும்.
நோர்வே அரசு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும் வழங்குகிறது. எதிர்காலத்தில் கொழும்பு கோட்டை பகுதி முழுவதையும் வன்னியிலிருந்தவாறே வெடித்துச் சிதற வைக்கக் கூடிய தொழில்நுட்பங்கள் தற்போது புலிகளிடம் உள்ளன. அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கும் உதவிகளின் சிறியளவு தொடர்பான தகவல்களே வெளிவருகின்றன. சமாதானத்தின் பெயரால் நாட்டின் பாதுகாப்பு பலியிடப்பட்டுள்ளது.
இன்று எமது இராணுவ அதிகாரிகள் பலர் அரசுத் தலைவரை விட சமாதான சலாட்டில் மூழ்கியுள்ளனர். அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
எமது நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதற்காக நோர்வே தரப்பினர் பல திட்டங்களை வகுக்கின்றனர். இதற்கென பௌத்த கலாச்சாரத்தை குலைப்பதற்காக சங்க சபையினரின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர். தேசிய பற்றையும் சமூக பற்றையும் அழிக்கின்றனர்.
இப்போது கல்வி சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர கல்வியமைச்சின் செயலாளர் முயற்சிக்கிறார். அவற்றிற்கு தேவையான நிதியை உலக வங்கியே வழங்குகிறது. அதன் மூலம் செய்யப்படப்போவது சர்வதேச பாடசாலைகளின் மூலமான பிரிதொரு வகுப்பினை ஏற்படுத்துவதாகும். ஏமது நாட்டின் பலவீனமான தலைவர்களினூடாக மேற்கத்தேய சக்திகள் இந்த செயற்பாடுகளை மேற்கொள்கிறது.
இவ்வாறான நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய தைரியமானஇ நேர்மையானஇ தலைமையே எமக்குத் தேவை.
இந்நாட்டு புலனாய்வுப்பிரிவினரை அழிப்பதற்கு ரணிலின் சமாதான உடன்படிக்கைகளே உதவின. சந்திரிகாவின் உடன்படிக்கையினால் புலனாய்வுப்பிரிவு முழுமையாக செயழிலக்கும்.
அதனால் இந்நாட்டிலிருக்கும் தேசிய சக்திகளை இனிமேலும் ஏமாற்ற இடமளியாது முற்போக்குச் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து எமது தாய்நாட்டிற்கு எதிரான அனைத்து சக்திகளையும் தோற்கடிக்க வேண்டும் என தேசப்பற்றுள்ள இயக்கத்தின் இணைத்தலைவரும் ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
...... இந்தப் பேச்சையே எடுக்கலாம்.
இவர்கள் மட்டுமல்ல, தாடி வளர்த்ததால் மாக்ஸ்ஸிய இடதுசாரியாகிய எச்சிலிலை "டக்லஸ்" ஆகட்டும், இப்படிப் பலர் இடதுசாரிகளென இலங்கைத்தீவில் திரிகிறார்கள்.
வலதுகுறைந்தவர்கள், மனநோயாளிகள், எச்சிலிலைகள், கொலை-கொள்ளைக்காரர்கள், ... எல்லோரும் இடதுசாரிகளாம்! உங்கள் கருத்துக்கள் இந்த "இடதுசாரிகள்" தொடர்பாக என்னவென்று இங்கே கூறுங்கள்/எழுதுங்கள்.
" "

