Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கமல்.. எதிர்பாராத பரவசம்!
#1
கமல்.. எதிர்பாராத பரவசம்!
<img src='http://www.vikatan.com/av/2003/oct/19102003/s16.jpg' border='0' alt='user posted image'>

ஏக பரபரப்பு... எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கிடையே விறு விறுவெனத் தயாராகிக்
கொண்டிருக்கிறது கமலின் புதிய படம்! தற்செயலாகக் காணக்கிடைத்த ஆல்பமே பிரமிப்பூட்டுகிறது! அந்த 'சினி'யின் துளிகள் -

'தூள்' படத்துக்குப் பின் வந்த எல்லா வாய்ப்புகளையும் மறுத்து விட்டுக் காத்திருந்த 'கூத்துப் பட்டறை' பசுபதி. படத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

அபிராமிக்கு 'லைஃப் டைம் காரெக்டர்' என்கிறார்கள். ஜாலியாக டூயட் ஆடிக்கொண்டிருந்தவர் இதில் உணர்ச்சிப் புயலாக கிராமத்துப் பெண்ணாகவே உருமாறி விட்டாராம்.

வத்தலக்குண்டில் நாலே நாட்கள்தான் அவுட்டோர் ஷ$ட்டிங் நடந்தது. அதில் ஒரு அழகான பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். கமலும் அபிராமியும் தாமரைக் குளத்தில் காதல் பண்ணும் காட்சி அதில் ஹைலைட்!

கால்ஷீட் பிரச்னை காரணமாக விலகிய நாசர் இப்போது மீண்டும் நடிக்கிறார்.. வே`றாரு காரெக்டரில்! கவுதமிக்கும் மிக முக்கியமான ஒரு வேடம் உண்டு.

தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி ஒரு ஜல்லிக் கட்டு வந்திருக்காது என்கிறார்கள். வாடிவாசல் கட்டி, தெருவுக்குள்ளேயே காளைகளை இறக்கி அதகளம் பண்ணுகிற ஒரிஜினல் ஜல்லிக்கட்டை சென்னை 'கேம்பகோலா' வளாகத்திலேயே 'செட்' போட்டு அசத்தியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் பிரபாகர். நாற்பது காளைகள், இருநூறு மாடுபிடி வீரர்கள் என்று மதுரைப் பக்கமிருந்து கொண்டு வந்து இறக்கி விளையாட விட்டிருக்கிறார்கள். மாடு முட்டி, கீழே விழுந்து கமல் உடலெங்கும் பட்ட ரத்தக் காயங்களின் வடு இன்னும் மறையவில்லை.

இளையராஜாவின் இசை பற்றி பிரமாதமாகப் பேசுகிறார்கள். கதைக்களம் அவரது சொந்த மண் என்பதால், 'பிளந்து கட்டியிருக்கிறார்' ராஜா. சொந்த குரலில் கமல் பாட்டு உண்டு. தவிர, தேனி குஞ்சரம்மாள், நடராஜன் என்று அப்படியே கிராமத்திய இசை. காஸெட் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடக்கப் போகிறது. விழாவில் வெளியிட படத்துக்கு மிக வித்தியாசமான ஒரு புதிய டைட்டிலுடன் காத்திருக்கிறார் கமல்.

மதுரை கூத்துக் கலைஞர்கள் நிறையப் பேர் படத்தில் நடிக்கிறார்கள். கமலுக்கு இயல்பாகவே கூத்துக் கலைஞர்கள்மீது ஈடுபாடும் அவர்களின் வசதியில்லாத வாழ்க்கையைப் பற்றிய அனுதாபமும் உண்டு. அவரது ஆதரவோடு உற்சாக வேகம் பிடிக்கிறார்கள் கலைஞர்கள்!

'படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது வந்துவிடுகிறேன்' என்று அடம்பிடிக்கிறாராம் வடிவேலு. கமல் பொறுத்திருக்கச் சொல்லியிருக்கிறார்.

ஒரு கிராமத்து படத்தை முழுக்கவே 'செட்' போட்டுப் படமாகியிருப்பது இதுவே முதல் முறை. இதற்கென்றே இரண்டு கிராமங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.


ஜெயில் காட்சிகளுக்காக சென்னை சென்ட்ரல் ஜெயில் நிர்வாகத்தை அணுகியிருக்கிறார்கள். தடா, பொடா, தீவிரவாதி கைதிகள் இருப்பதால் அனுமதி கிடைப்பதில் சற்று தாமதமாகிறது. கடைசிவரை கிடைக்காவிட்டால் அதுவும் 'செட்'தான்!

படத்தைப் பற்றி பரபரப்பான சர்ச்சைகள் கிளம்பியதே... எதிர்பார்த்த மாதிரி எந்த வில்லங்கமும் படத்தில் இல்லையாம். ஆனால், எதிர்பார்க்காத பரவசங்கள் நிறைய காத்திருக்கின்றனவாம்!

<img src='http://www.vikatan.com/av/2003/oct/19102003/s108.gif' border='0' alt='user posted image'>

''உங்க படம் பயங்கர எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கு..!''

''அப்படியா..!''

''ஆமாம்... இப்பவே நிறைய பேர்
'வீச்சரிவாளோடு' சுத்திக்கிட்டு இருக்காங்க..!''

- இடைப்பாடி ஜெ. மாணிக்கவாசகம்

நன்றி:விகடன்

[scroll:beaf162934][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#2
"விருமாண்டி" ஆன சண்டியர்

<img src='http://www.thatstamil.com/images16/cinema/kamal-250.jpg' border='0' alt='user posted image'>
நடிகர் கமல்ஹாசன்
தனது பிரமாண்டமான படைப்புக்கு விருமாண்டி என பெயர் சூட்டியுள்ளார். இதனை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார்.

இந்த முன்னாள் சண்டியர் படத்தின் பாடல் கேசட் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. இதற்காக மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசனின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு படையெடுத்துள்ளனர்.

கமல்ஹாசன் தனது புதிய படைப்புக்கு சண்டியர் என்று பெயர் சூட்டியபோது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், படப்பிடிப்பை நடத்த முடியாமல் தடங்கல் ஏற்பட்டது. இருப்பினும் சளைக்காத கமல்ஹாசன் படப்பிடிப்பை சென்னையில் வைத்தும், திருவள்ளூர் பகுதி கிராமங்களில் வைத்தும் எடுத்து முடித்துள்ளார்.

இந் நிலையில் படத்தின் பெயரை சொல்லாமல் படு ரகசியம் காத்து வந்த கமல் அதற்கு 'விருமாண்டி' என்று பெயர் சூட்டிவிட்டார்.

இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல். இந்தப் படத்தின் பாடல் கேசட்டுகளை சென்னை கேம்பகோலா மைதானத்தில் வைத்து ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடுகிறார் கமல். இதற்காக பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கேசட்டை ஏவி.எம். சரவணன் வெளியிட இயக்குனர் கே.பாலச்சந்தர் பெற்றுக் கொள்கிறார். நிகழ்ச்சியில் பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட திரையுலக முக்கியஸ்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

'சண்டியர்' என்ற டைட்டிலை விட பல மடங்கு முறுக்கான 'விருமாண்டி' பெயரை கமல்ஹாசன் வைத்துள்ளதாக திரையுலகினர் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

கிருஷ்ணசாமி வரவேற்பு:

கமல்ஹாசன் படத்தின் புதிய பெயர் சூட்டல் குறித்து கருத்து தெரிவித்த கிருஷ்ணசாமி, கமலின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இது திரையுலகினரின் மன மாற்றத்துக்குக்கான முன் மாதிரியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்றார்.

Thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)