Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஏன் இந்த இடைவெளி!
#1
ஏன் இந்த இடைவெளி!

Sri Lanka still hungry for peace


Frances Harrison
BBC correspondent in northern Sri Lanka

It's assembly time at the Kiranchchi school and 200 children are praying to the Hindu goddess of wealth.
The irony doesn't strike them - so accustomed are they to poverty in these rebel held jungles of northern Sri Lanka.

Some children walk up to an hour to reach school without breakfast.

The stragglers keep coming in after the bell has rung - barefoot and wearing grubby uniforms.

New research has revealed alarming degrees of malnutrition among children like these affected by Sri Lanka's civil war.

A World Food Programme (WFP) survey just released found at least a quarter of children entering school in the north-east of the island suffered from acute malnutrition.

Although there has been nearly two years of fragile peace there is still severe food deprivation, especially in rebel Tamil Tiger controlled areas.

Parents' dilemma

The malnutrition is not immediately obvious until you ask the children's ages.

"If you compare these children with the children in other parts of Sri Lanka, they are much smaller," says WFP programme officer Hakan Tongal.


The 13-year-olds here... resemble eight or nine-year-olds in other parts of Sri Lanka."

WFP has started providing mid-morning meals to tens of thousands of children across the north-east in an attempt to fight the menace of malnutrition.

Parents cook a vast cauldron of rice and dal over a wood fire.

Thirteen-year-old Rajitha says: "If it doesn't rain then my father can't farm and we don't have food so we starve."


Vivekanth is one 12-year-olds who looks more like eight. His mother, Ratnapoopathy, at 45 already has grey hair and two grandchildren.

Someone has told her she should feed her five children eggs but patiently explains her dilemma - if she buys eggs, she can't buy rice.

"It's sad," she says, "that I am unable to do anything for my children."

According to WFP's research, a child in the conflict areas of the north-east is twice as likely to be malnourished as one in the south.

Sri Lanka may be a small island but even though the fighting has stopped the distances can still be measured by how much food is in children's stomachs.
Reply
#2
நானும்தான் பார்க்கிறன் கைகுடுக்கிற படத்திலையோ, அல்லது ட்றம் அடிச்சு மாச்சிங்செய்யிற படத்திலையோ, மீற்றிங்வழிய பேசவாறவை படத்திலையோ அல்லது கொடிபிடிக்கிறவை படத்திலையோ எல்லாரும் மொழு மொழுவெண்டு கொழுத்துதிருக்கிறது தெரியுது.. ஒருத்தரும் மல்நியூற்றிசன் ஆகத் (சத்துணவு இல்லாமை) தெரியேல்லை. அது எப்படி பஞ்சம் பஞ்சம் எண்டு மேடையிலை கத்திறவை மொழு மொழுவெண்டிருக்க றிப்போட் இப்படி வருகுது..

அட இந்த றிப்போட்டை கீழே செய்திகள் தளத்திலை படத்தோடை விடியப் போட்டன் பிறகு பார்த்தால் கானேல்லை.. அட அனுப்ப மறந்திட்டனாக்குமெண்டு திரும்பப் போட்டு வந்திட்டுதோ எண்டு பார்த்து வந்ததெண்டு மனத்திருப்தியோடை போனால் பிறகு அதையும் காணேல்லை.. அட பெடியளுக்கு ஏன் பிடிக்கேல்லை ஏன் எடுத்தாங்கள் எண்டு யோசிக்கத்தானே கள்ளம் பிடிபட்டுது..
அதாலை வந்தததான் மெலையுள்ள கருத்து..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
பிழை பிடிக்கவென்றே ஒரு சிலதுகள். இவைகளை திருத்த தமிழீழம் அனுப்பத்தான் வேண்டும்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#4
P.S.Seelan Wrote:பிழை பிடிக்கவென்றே ஒரு சிலதுகள். இவைகளை திருத்த தமிழீழம் அனுப்பத்தான் வேண்டும்.
சீலன் றிப்பொடிலை எந்தப் பிழையுமில்லை எனக்குத் தெரியும்.. சாதாரண பொதுமக்களில் பலரும் இப்படித்தான் இருக்கின்றனர். அவர்களை உதாரணம் காட்டி வாங்கி தாங்கள் தங்களுக்குள்ளேயே தின்று கொழுத்திருக்கிறார்களே. அவர்களைப்பற்றித்தான் கருத்து.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#5
இந்த செய்த பீபீசி தளத்தில் கண்டேன. சுருக்கமாக தமிழில் சொல்வதானானல் சமாதானம் வந்தும் மக்களின் பட்டினி கொடுமை இன்னமும் தீரவில்லை. குறிப்பாக சிறுவர்களின் நிலைமை இதை வாசிக்கும் போது வேதனையாக இரக்கிறது. இந்த செய்தியை நான் இற்கு கொண்டுவந்ததன் முக்கிய நோக்கம். அண்மையில் நான் கண்டு வேதனைப்பட்ட ஒரு உண்மை! அது ஒரு பேத்டேபாட்டி, பையனுக்கு ஒரு வயசு. நான் அங்கு விருந்தாளி அல்ல, எனது நண்பர் வெளி நாட்டிலிருந்து விசேடமாக அங்கு அழைக்கப்படிருந்தார். அவரை சந்திக்க பாட்டி முடியும் நேரம் மண்டபத்திற்கு சென்றேன். இரவு 10மணி பாட்டி முடிந்து ஆட்டம் வப்பெற்ற நேரம். உ;னை பார்த்தால் மேசை முழுவம் சப்பாட்டு எச்ச சொச்சம். ஒரு மேசை முழுவதும் வித வித குடிவகை. இன்னொரு மேசையில் மிஞ்சிய சாப்பாடு (அது இன்னுமெரு 50 பேர் சாப்பிட முடியும்) அரைவாசி பாத்திரத்தை நிறைத்தபடி சாப்பிட்ட மிச்ச சொச்சம் (அதை சேர்த்தால் இன்னுமொரு 50பேர் சாப்பிட முடியும்). கிட்டத்தட்ட 400பேர்வரை வந்தனராம். ஆரைவாசிப்பேர் சாப்பிட்டு முடிந்ததும் பேய்விட்டனர். மெதுவாக என் நண்பரிடம் அந்த பாட்டி செலவுகளை துருவி துருவி கேட்க, பக்கத்தில் நின்ற ஒருவர் அவர் பாட்டி நடாத்pயவரின் கடையில் வேலை செய்பவர். அவர் கூறிய தகவல் என் தலையை விறைக்க வைத்தது. மண்டபத்திற்கு 650 பவுன்ஸ் மண்டபத்தை அலங்கரிக்க 400 பவுன்ஸ் (முழுவதும் புூக்களால் அலங்கரிப்பு) சாப்பாடு தண்ணிக்கு 4500பவுன்ஸ், விடியோ படப்படிப்பக்கு 850பவுனஸ் மற்ற இதர செலவுகள் 1000 பவுன்ஸ் (உடை, கேக் மந்திரவாதி, பாட்டி பைகள்) நேரடி பாட்டுக்கசசேரி குழுவுக்கு 700 பவுன்ஸ். இத்தனைக்கும் பேர்த்டே கொண்டாடிய பிள்ளை ஒரு வயது என்பதால் ஒரே அழுகை. அதை தாய் தகப்பன் பேத்தி கையிலை விட்டுவிட்டு ஒரே ஓடித்திரிந்த படி, படமெடுக்க மட்டும் பிள்ளையை வாங்கி அதை ஆக்கினை பண்ணி கமராவை பாக்க வைச்சினம். பிள்ளைக்கு இரவே காய்ச்சல் வேறை. மொத்த செலவு கிட்டத்தட்ட 7000பவுண்ஸ் எனக்கு தலை சுத்து இன்னமும் தீரவில்லை!
Reply
#6
சில மாதங்களுக்கு முன் எனது நணபர் கனடாவில் தனது பிள்ளையின் 1வது பிற்நத நாளை கொண்டாடினார். அவருக்கு இதுகளில் அவ்வளவு பிடிப்பில்லை. உப்பிடி ஆரும் வைத்தால் ஆக்களை ஒரு பிட பிடிப்பார், ஆனால் அவரே ஒரு சிறு மண்டபம் எடுத்து காட் அடிச்சு வைச்சது எல்லாருக்கும் ஒரு குழப்பம். ஆனால் காட்டிலை அவர் வருபவர்கள் தயவு செய்து அன்பளிப்புகள் கொண்டுவர வேண்டாம் காசா கொண்டு வாங்கோ எண்டது இன்னமும் அதிர்ச்சியாக இருந்தது. பேர்த்டே பாட்டிக்கு கிட்டத்தட்ட 150 பேர் வரை வந்தனராம். மொத்தமாக 4000 டொலர் சேர்ந்ததாம். செலவு தள்ளி ஒரு 2000 டொலர் லாபம். சாப்பாடு கூட தனக்கு தெரிஞ்சவையிட்டை சொல்லி வுpரன் செலவில்லாமல் செய்து போட்டார். பாட்டி முடியிற தறுவாயிலை மனிசன் எல்லாரையும் ஒரு தடவை நிக்ச் சொல்லி போட்டு ஒர வயது வந்த முதியவரை மேடைக்கு வரச்செல்லி அவரை பேச சொல்லியிருக்கிறார். அந்த வயது வந்தவர் கிழக்கு மாகாணத்தில் தனிப்பட்ட முறையில் சில அனாதை குழந்தைகளை பராமரிப்பவர். அவருக்கு அன்று சேர்ந்த காசை அனைவரினம் சார்பாக அந்த அன்பர் கொடுத்தபோது அனைவரும் வாயடைத்து நின்றனர். நண்பர் பின்னர் சொன்னார் நான் கனபேற்றை பட்டியலை குடுத்தனான் அது வீண்போக கூடாது என்டதாலையும் தன்றை சம்சாரத்தை திருப்தி படுத்த வேண்டும் என்ட ஒரு நோக்கத்திற்காவே இப்படி செய்தேன் என்றார். இப்படி நாம் அனைவரும் சிந்தித்தால் தாயகத்தில் பட்டினியை ஓரளவு இல்லாமல் செய்ய முடியாதா? ஒரு சின்ன ஆதங்கம் அவ்வளவுதான்!
Reply
#7
ஹோலெடுத்து பாட்டி வைக்கேல்லையாம்.. பரப்பிவெச்சுப் படம்பிடிக்கேல்லையாம்.. பந்தாக் கதைக்கு உதவேல்லையாம் எண்டு இஞ்சை பிரச்சனையாக்கிடக்கு நீங்கள் வயித்தெரிச்சலைக் கூட்டுறியள்.

இஞ்சை மாத்திரமே.. அங்கையும் பெரிய புள்ளியள் 5 ஸ்ரார் போலைதான் படத்திலை தெரியுது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
மனவேதனைப்படுகிறேன். அங்கு மட்டுமல்ல மொஹமட் ஏன் தமிழீழத்திலும் கூட இந்த அவல நிலையை கண்டவன் நான். பக்கத்து வீடு பசித்திருக்க கொண்டாட்டங்கள் நடத்தி ஊருக்கு தமது பணச் செருக்கை வெளிக் காட்டுகின்றார்கள். எத்தனையோ பள்ளிச்சிறுவர்கள் படிக்க பள்ளிக் கூடம் போகவோ பசிக்கு ஒரு வேளை வயிராறவோ உண்ண உணவில்லாமல் தவிக்கின்றார்கள். ஆனால் அதற்காக பொங்குதமிழில் ஏதோ இரண்டோருவர் உருப்படியாகத் தெரிந்தாரேன எல்லோரையும் அந்த கண்களாளே பார்ப்பது என்ன நியாயம். வன்னியில் எத்தனையோ செஞ்சொலைகளும் நந்தவனங்களும் ஆனாதைக் குழந்தைகளை பாராமரிக்கின்ற இல்லங்கள். உண்டு. விடுமுறைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த சனம் தெற்கிலே உல்லாசபயணமும் கோயில்களுக்கு சுற்றுபயணமும் மேற் கொண்டு இலட்சங்கள செலவழிப்பவர்கள் இவைகளை கடைக்கண்ணாலும் பார்ப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கின்றதா என்று இவர்களுக்க தெரியுமோ தெரியாது. ஏன் புனர் வாழ்வுக் கென்று என்று பணம் வாங்கி கோவில்களுக்கு வெள்ளை யடித்து தமது மேன்மையான பெயரை தேர் முட்டிகளில் எழுதி வைத்திருப்பவர்களும் கவனிக்கவில்லை. வன்னி வீதிக்கு வரி அறவிடுவதற்கு தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தியவர்கள் அது எதற்கு என்று கிஞ்சித்தாவது யோசித்திருப்பார்களா என்றால் அதுவுமில்லை. இவர்களை எப்படித் திருத்த இவர்கள் எப்போது திருந்துவார்கள்? அதற்காக அனைவரையும் ஒன்றாக ஒரு தராசுத் தட்டினில் வைத்து எடைபோடாதீhகள். அவலம் விரைவில் தீரும். தீர வேண்டும்.

விழிகளில் இரத்தக்கண்ணீருடன்


சீலன்
seelan
Reply
#9
சீலன்.. ஒன்றிரண்டு பேரா.. தளம் தளமாக எவ்வளவோ படங்கள் அத்தனையும் அதிகாரத்தில் உள்ளவர்கள் மொழு மொழுவெண்டு கொழுத்து இருக்கின்றர்.. மேலும் ஆட்சேர்ப்புக்கு இவர்கள் கொடுத்த காரணங்களில் நீக்கப்பட்டுள்ளது கிடைக்கும்.. இப்படியான செய்திகள் வரும்போது சரிபிழை பார்க்கவேண்டிய கட்டாயம் ஒன்று இருக்கின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

பெய்யான தகவல்களை கொடுக்க முற்பட்டதால் கருத்தில் சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail
Reply
#10
[quote=Mohan]
பெய்யான தகவல்களை கொடுக்க முற்பட்டதால் கருத்தில் சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்கடந்த இரு வாரங்களுக்குள் நடந்த மட்டக்களபு பிரச்சனைக்கு பிள்ளைகள் தாங்களாகவே வந்து சேர்ந்ததாகவும் உணவு பற்றாக்குறை ஒரு காரணமென்றும் அறிக்கை விட்டு செய்திபோட்டதை மறந்து பொய்யான தகவல் என்கிறீர்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
அதிகாரத்திலுள்ளவர்கள் எப்போது தான் அப்படி இருக்கவில்லை? அப்பாவிகளின் தோளிலே சவாரிவிடுவது அவர்களின் சுக போக வாழ்வுக்குத் தானே? அதற்காக பொங்குதமிழிற்கு அவர்கள் வந்தார்கள் என்று பொங்குதமிழை குற்றம் சாட்டுவது என்ன நியதி. வந்தவர்கள். அவர்களையோ அல்லது அவர்களின் குடும்பத்திலுள்ளவர்களோ சத்துணவு இல்லாமல் கஸ்டப்படுகின்றார்கள் என்றா சொன்னார்கள். வடகிழக்கில் வாழும் சிறுவர் சிறுமியரைப்பற்றித் தானே கூறியிருந்தார்கள். அது அவர்களின் வாயால் வந்தது என்ன தப்பு. அதிகாரத்தில் உள்ளவர்களின் வாயாலாவது அங்குள்ள நிலைமை வெளிப்படட்டுமே. அதற்கு இப்படிப் பொறிவது நியாயமா? ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா சபை கழுத்தி;ல் பட்டிகட்டிக் கொண்டிருப்பவர்கள் கதையையும் அதிகார வர்க்கத்தின் பித்தலாட்டங்களையும் தானே செவிமடுக்கின்றனர். அவர்களின் வாயல் இவைகள் வெளிவரட்டும். அப்போதாவது அவர்களின் காதுகளில் விழுகின்றதா என்று பார்ப்போம். யார் கத்தினாலும் அதனால் அங்குள்ள குருத்துகளுக்குப் பயன் கிடைத்தால் மகிழ்ச்சிதானே.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#12
சரி சரி.. மேடையிலை யும் வந்து பேசினவையே ..? அப்பச்சரி நன்றி சீலன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#13
தவறுதான் அவர்கள் மேடைகளில் பேசவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்
சீலன்
seelan
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)