Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:அது பெண்ணுக்கு மட்டும் இல்லீங்க.. ஆணுக்கும் தான்.. ஒற்றுமையா நின்றால் பெரிசு.. பெண்ணுடன்.. சேர்ந்து.. இல்லாட்டால்.. யெஸ்ட் வாய்ப்பேச்சு தான்.. (உங்களை மாதிரி) :wink:
நாங்க சொல்லுறது மனசாளுக்கு...குருவிகள் எப்பவும் அப்படித்தான்...ஒற்றுமைதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:நாங்க சொல்லுறது மனசாளுக்கு...குருவிகள் எப்பவும் அப்படித்தான்...ஒற்றுமைதான்...!
உங்களை மாதிரிக்கதைக்கிற ஆண்களுக்கு என்று சொன்னம்.. என்ன அடிக்கடி குருவிகள் என்ற போர்வையில் தப்பிக்கிறீங்களோ.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 118
Threads: 3
Joined: Jan 2005
Reputation:
0
tamilini Wrote:என்ன அடிக்கடி குருவிகள் என்ற போர்வையில் தப்பிக்கிறீங்களோ.. :wink:
அது குருவீங்க ஸ்டைல் ஆச்சே.....
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
Posts: 564
Threads: 22
Joined: Feb 2005
Reputation:
0
கையோடை hiv test யையும் எடுத்துப் பார்த்தால் நல்லது
Posts: 219
Threads: 48
Joined: May 2005
Reputation:
0
எங்களுர்ப் பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையருக்காகத் தவம் கிடப்பதற்கு இன்னொரு காரணம், விடுமுறைகளின் போது இங்குவரும் வெளிநாட்டவர்கள் காது,கழுத்தில் தொங்கும் வடம் போன்ற "பவுண்" சமாச்சாரங்கள் தான். அட! இத்தனை பவுண் சங்கிலியை சும்மார ரோட்டாலை போகேக்கையே போட்டுக்கொண்டு போறாளென்றால உள்ளுக்குள்ளை எவ்வளவு வைச்சிருப்பாள்.
"தலைமுறை தலைமுறையாக சொத்துச் சேர்த்து வைத்த குடும்மென்றாலும் இங்கே இருந்து கொண்டு இவ்வளவு உழைக்க முடியாது. ஆகவே, புறப்பட்டுப் போய் ஒருத்தனைக் கைபிடிப்பதே நலம்" என்று இளம் பெண்கள் விரும்பிக் கொண்டுவிடுகின்றனர்.
மணமன் தேவை 1. யாழ்.இந்து வேளார் 81ஆம் ஆண்டு A/L IAB படித்த, அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய லண்டன் மணமகன் தேவை.
மணமகன் தேவை 2 யாழ்.இந்து வேளாளர் 79ம் ஆண்டு சுவாதி... டொக்டர் மணமகளுக்கு தராதரமுடைய டொக்டர், எஞ்சினியர் லண்டன் மணமகன் தேவை.
மணமகன் தேவை 3 யாழ்.இந்து வேளாளர் 77ஆம் ஆண்டு 5'2' உயரம்.... கம்பியூட்டர் பிரிவில் படித்த அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய வெளிநாட்டு மணமகன் தேவை.
மேற்தரப்பட்டுள்ளவை. அண்மையில் எங்களுர் பத்திரிகைகளில் "மணமகன் தேவை" என்ற தலைப்பின் கீழ் வெளிவந்த விளம்பரங்கள் சில. பெண்களின் வரிசையைப் பாருங்கள். ஒருவர் உயர்தரம் படித்தவர். இன்னொருவர் வைத்தியர். மற்றொருவர் கணினித்துறையில் கல்வி கற்றவர். வேறொருவர்.. இப்படியாக இன்னும் பலலை வரிசையாகக் சொல்லிக் கொண்டே வரலாம்.
இவர்களின் அல்லது இவர்களுடைய பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கள் அந்தந்த விளம்பரங்களில் தலை காட்டியபடி உள்ளன. என்ன எதிர்பார்ப்புக்கள்? வேறொன்றுமில்லை. வெளிநாட்டுப் மாப்பிள்ளை. அவ்வளவுதான். அந்த மாப்பிள்ளை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதல்ல முக்கியம். அவர் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையோடு இருக்கிறாரா என்பதே முக்கியம்.
அண்மையில் 34 வயதான கணினித்துறையில் பணிபுரியும் மகனை, கன்னி அழியாமல் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு வயோதிப தம்பதியினரைச் சந்திக்க நேர்ந்தது. "என்ன மகனுக்கு முற்றாகவில்லையோ?" என்று வேறு கதை பேசுவதற்குப் பதிலாய் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டதுதான்.. பரிதாபம்... அவர்களின் முகத்தைப் பார்க்க வேணுமே. "அதையேன் கேக்கிறியள்" எத்தனையோ இடம் தேடிப் பாத்திட்டம்.. எல்லாப் பெடிச்சிகளும் வெளிநாட்டு மாப்பிள்ளையளையெல்லோ கேக்கிறாளவை. நேற்றுக்கூட ஒரு சாதகம் பொருந்தி... அந்த புரோக்கர் மூலம் பிள்ளையின்ரை வீட்டுக்கு போன் பண்ணினம், பிள்ளையின்ரை அப்பாதான் கதைச்சவர். அவருக்கு சந்தோஷம். அப்பாடி! இனித்தான் நிம்மதி என்று நினைச்சபடி "அப்ப படத்தை ஒருக்கா எடுக்கலாமோ?" என்று கேட்டம். அவரும் பின்னேரம் புரோக்கரிட்டை குடுத்தனுப்புகிறதென்று சொன்னார். பின்னேரம் புரோக்கரிட்டைப் போனா, அவரோ "பிள்ளையின்ர அப்பா, அம்மாதான் சம்மதிச்சிருக்கினம், பிள்ளை ஓமெண்டு சொல்லேல்லயாம். தன்னோடை படிச்ச சிநேகிதிப் பெட்டையளெல்லாம் லண்டன், கனடா என்று சொகுசா வாழ்க்கை... தான் மட்டும் இஞ்சை நிண்டு என்ன குப்பை கொட்டுறதோ? பார்க்கிறதெண்டால் வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பாருங்கோ." என்று அடிச்சு வைச்ச மாதிரி சொல்லிப் போட்டுதாம் என்று சொன்னார். என்ன வழி? "இப்ப திரும்பி குறிப்போடை திரியுறம்" என்று அந்த அப்பா சொல்லிச் சலித்தார்.
இந்தச் சம்பவம் சும்மா ஒரு மாதிரிதான். நூறு திருமண முயற்சிகளில் கிட்டத்தட்ட 95வீத திருமண முயற்சிகளின் நிலைமை இதுதான். இளம் பெண்கள் வெளிநாடுகள் என்றால் சொர்க்காபுரிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மணமகன்மார் அனைவரும் பொருளாதாரவசதி படைத்தவர்கள் என்றும், அவர்களைக் கட்டிவிடுவதால் சொகுசான இல்வாழ்க்கை கிடைத்துவிடும் என்றும் ஒரு மாயக் கற்பனை உலகை எங்கள் மணமகள்மார் உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மாய கனவுலக சஞ்சரிப்புக்கு அங்கிருந்து உறவினர்களால்/நண்பர்களால் அனுப்பப் பெறும் புகைப்படங்கள் பிரதான காரணங்களாக விளங்குகின்றன. "பொலிஷ்" பண்ணித் துடைத்த "பளிச்" சென்ற வீடுகள், புதிய ரக கார்கள், மகனின் அறைக்கோர் கணினி, மகளுக்கோர் கணினி, தனித்தனியே தொலைக்காட்சி என்று வீடு முழுவதும் நிரம்பியிருக்கின்ற பொருட்கள்- இவற்றை அங்கிருந்து வரும் புகைப்படங்களில் பார்க்கின்ற இளம் பெண்களில் மனசுகள் றெக்கை கட்டிப் பறப்பதிலும் நியாயமுண்டுதான். எனினும், இந்த வண்ணங்களுக்குப் பின்னால் பாரிய வங்கிக் கடன் சுமை இருக்கென்றும், அந்தக் கடன் சுமைக்காக தாங்களும் கொட்டும் பணியில் வேலைக்குக் குதித்தோட வேண்டும் என்றும் அந்த கனவுலக இளம் பெண்களுக்கு தெரிவதேயில்லை.
எங்களுர்ப் பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையருக்காகத் தவம் கிடப்பதற்கு இன்னொரு காரணம், விடுமுறைகளின் போது இங்குவரும் வெளிநாட்டவர்கள் காது,கழுத்தில் தொங்கும் வடம் போன்ற 'பவுண்" சமாச்சாரங்கள் தான். அட! இத்தனை பவுண் சங்கிலியை சும்மார ரோட்டாலை போகேக்கையே போட்டுக்கொண்டு போறாளென்றால உள்ளுக்குள்ளை எவ்வளவு வைச்சிருப்பாள்.
"தலைமுறை தலைமுறையாக சொத்துச் சேர்த்து வைத்த குடும்மென்றாலும் இங்கே இருந்து கொண்டு இவ்வளவு உழைக்க முடியாது. ஆகவே, புறப்பட்டுப் போய் ஒருத்தனைக் கைபிடிப்பதே நலம்" என்று இளம் பெண்கள் விரும்பிக் கொண்டுவிடுகின்றனர்.
பெண்கள் வெளிநாடுகளே மேல் என்று தீர்மானிப்பதற்கு இன்னுமோர் காரணம், உள்நாட்டு மாப்பிள்ளையள் கேட்கிற பெருந்தொகைச் சீதனம் என்பதை மறந்து விடக்கூடாது. பொருளாதாரம் ஒரு பிரச்சினையே இல்லாமல் உழைத்து வைத்திருக்கின்ற புலம் பெயர் மன்மதர்கள் இங்கு வந்து... எந்தவித சத செலவையும் பெண் பகுதிக்கு வைக்காமல் அழகிகளையும்... கொஞசம் படித்தவர்களையும் அள்ளிக்கொண்ட போய்விடுகின்றார்கள். இதனால் அந்த மன்மதர்களுடைய எதிர்பார்ப்பும் நிறைவடைகின்றது. பெண்களைப் பெற்றவர்களின் பொருளாதாரமும் பேணப்படுகின்றது.
இத்தகைய புலம்பெயர் மாப்பிள்ளைகள் வந்து உள்ளுர் பெண்களைக் கொத்திக் கொண்டு போய்விடுவதால், பாதிக்கப்படுவது உள்ளுர் மாப்பிள்ளை மட்டும் தான் என்றில்லை. புலம்பெயர் நாடுகளில் பருவ வயதினராய் கல்யாணக் கனவுலளோடு காத்திருக்கின்ற தமிழ்ப் பெண்களின் நிலையும் பரிதாபமே.
புலம் பெயர் நாடுகளில் வாழ்க்கின்ற நமது இளம் சந்ததியர் நமது தமிழ் கலாச்சார, பண்பாட்டின் படி வாழ்கின்றனர் என்றில்லை. திறந்த பொருளாதாரம் மாதிரி "திறந்த" கலாச்சாரத்துக்கு அவர்கள் பழகிப் போய் விட்டார்கள். காதல் ஒருவனைக் கைபிடித்து அவரன் காரியம் யாவிலும் கைகொடுப்பது என்கிற தமிழர் அறம் அவர்களைப் பொறுத்தவரை சலித்துப் போன விஷயம். கண்டதே காட்சி, கொண்டே கோலம் என்றபதற்கு இளைய வயது எடுபட்டுவிடும் என்பதை சொல்ல வேண்டுமா, என்ன?
இதனால், புலம்பெயர் வாழ் இளைஞர்களில் பெரும்பான்மையர்கள் ஒழுக்கத்தைப் பொறுத்தவரை சுத்தமில்லை என்பதே உண்மை. சிறிய வயதிலேயே உழைக்க முடிகிறது. கையில் பணம் புரள்கிறது. கண்டித்து வளர்க்குகும் தந்தை,தாயார்கள் தூரத்தே... தாயகத்தில் இருக்கிறார்கள். கெடுக்கவல்ல சிநேகிதர்கள் அருகில். திருமணத்துக்கு முந்தைய உடலுறவு பற்றி அலட்டிக் கொள்ளாத வெள்ளைக்கார ஜரோப்பிய தோழிமார் ஒரு சிலருடைய நட்பாவது வேலைத்தளத்திலோ, படிக்குமிடத்திலோ கிடைத்துவிடுகிறது. பிறகென்ன வேண்டும்? அழிவின் கைதிகளாகிற இந்தப் புலம்பெயர் இளைஞர்கள் தங்களைப் போலவே புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளவயது யுவதிகளும் ஒழுக்கமின்றிப் போய்விட்டிருப்பார்கள் என்று நம்புகின்றார்கள். எனவே, "அந்தப் பெண்கள் வேண்டாம்." என்றபடி தாயகத்துக்கு 'தூய" பெண்களை எதிர்பார்த்து மணமாலையோடி ஓடி வருகின்றனர். இவர்களுள் சிலர் 'பி.ஆர்' பெறுவதற்காக அந்நாட்டு யுவதிகளைக் திருமணம் செய்துவிட்டு பின் காசு கொடுத்து விவாகரத்துப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாயகத்துக்கு வந்து பெண்தேடும் படலம் நடாத்த இது மட்டுமே காரணமென்றில்லை. புலம்பெயர் தமிழ் யுவதிகள் சொந்தமாக உழைக்கத் தொடங்கி விட்டவர்கள் என்பதோடு, குடும்ப வேலைகளில் ஆணும் அரைப்பங்கு செய்து தர வேண்டும் என்கிற "பெமினிஸ" எண்ணப்பாங்குள்ள நாடுகளில் வளர்வதால் தங்கள் கணவன்மாரிடமும் அதை எதிர்பார்ப்பவர்கள். அவர், தனது உடுப்பை தானே தோய்க்கட்டும், எனது சம்பளத்தை நானே செலவழிப்பேன். இன்று நான் சமைத்தால் நாளை அவர் என்கிற பணிக்கு புலம்பெயர் யுவதிகள் பழக்கப்பட்டுவிட்டார்கள். இது புலம்பெயர் இளைஞருக்கு ஒத்துவருவதாயில்லை. புலம்பெயர்ந்து பலவிடயங்களில் மாறிவிட்டபோதும், மனைவியர் தனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து, தனது வேலைகளையும் செய்து தருபவர்களாக இருத்தல் வேண்டும் என்கிற கீழைத்தேய எண்ணத்திலிருந்து இன்னமும் மாறாதவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு 'சுதந்திர" புலம்பெயர் யுவதிகளைக் கண்டால் "துடக்கு" ஆகிவிடுகிறது. எனவேதான், ஓரளவுக்காவது இன்னும் பணிவு கொண்டுள்ள தாயகத்துக்குக் கிளிகளிடம் ஓடி வருகிறார்கள். (இந்தக் கிளிகளில் பல அங்கு போய் பணத்தால் உருமாறி வேற்றூருக்கு கொண்டு விடுவதும் நடந்தே வருகிறது)
இவ்வாறு தமிழராகப் பிறந்து, இன்னொரு தேசியராக வாழ நேர்ந்துவிட்ட, "இரண்டுமிலி அலி" வாழ்க்கையில் பல வண்ணக் கனவுகளும் கரைந்து போக, பெரும்பான்மைய புலம்பெயர் குடும்பங்களில் விரிசல் விழுந்து விட்டிருக்கிறது. சகிப்பு, விட்டுக் கொடுப்பு என்பவற்றைக் கொண்டு "குணம் நாடி" ஊடிப் பின் கூடி வாழ்ந்த தமிழ் வாழ்வை புலம்பெயர்ந்த குடும்பங்கள் தொலைந்துவிட்டன. யூதக் கண்ணாடி கொண்டு குற்றத்தை மட்டும் பரஸ்பரம் தேடுவதும், அதை ப10தாகரமாகப் பெருப்பித்துக் காட்டுவதும், பின் அதைக் காரணமாக்கி விவகாரத்துக் கோருவதும், பின் இன்னொரு வாழ்வைத் தேடுவதுமாகத் தொடர்கிறது புலத்தில் நமது இனத்து எச்சங்களின் வாழ்க்கை, இந்தப் பாதிப்பு தாயகத்தையும் தொடவில்லை என முடியாதபடி இப்போது..... இங்கேயும் மணப்பிரிவினைகள் சகஜமாகத் தொடங்கிவிட்டன.
:roll: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இப்படி முன்பு எங்கோ படித்த நினைவு :roll:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இது யாழில் இணைக்கப்பட்டதாகதான் எனக்கும் ஞாபகம் தேடி பார்க்கணும். தலைப்பை சமுதாயம் பகுதிக்கு மாற்றியுள்ளேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
எங்கும் படிக்கல்ல வசி இங்க யாழ்ல தான் கீழ இருக்கிற இணைப்பில் இருக்கு..... மதன் தேடிக் கஸ்ப்டப்பாடாதீங்க...
இது சூரியன் இணையத்தில் வெளிவந்த கட்டுரை..
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நன்றி நிதர்சன் அவற்றை இணைத்து விடலாம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 112
Threads: 2
Joined: Mar 2005
Reputation:
0
அக்கரைக்கு இக்கரை பச்சை பாருங்கோ
_______________________________________________________
<span style='font-size:30pt;line-height:100%'>'' தேசம் மாறினாலும் தேசியம் மாறாது''</span>
_____________________________________________________
நிதர்சன் சரியான கருத்து