Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News
நான் இங்கே செய்திகளை போடுவதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனது நோக்கம் நாம் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் பார்க்காமல் அனைத்து பக்க செய்திகளையும் பார்த்து அவற்றை அலசி ஆராய்ந்து ஆரோக்கியமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதுதான். நாம் எதை ஆதரிப்பதாக இல்லை எதிர்பதாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் கருத்தாக முன்வைக்க வேண்டும்.ஆனால் சிலர் இந்த கருத்தை மூடவேண்டும் என்றும் சிலர் வாயை பொத்தி கொண்டு இருக்கவேண்டும் சொல்கின்றார்கள். இதுதவிர மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இவை அனைத்தையும் பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன். உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள். பகிரங்கமாக எழுத விரும்பாதவர்கள் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். அதுவரை தற்காலிகமாக ஒரு நாளுக்கு கருத்து எழுதுவதையோ செய்தியை பிரசுரிப்பதையோ மனவருத்தத்துடன் நிறுத்துகின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
[size=18]BBC.. ஓடுவதால் பயனில்லை.. நின்று பயப்படாமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள்..எத்தனையோ மிரட்டல்கள் அவதூறுகளை பொய்ப்பிரச்சாரங்களையும் தவிடுபெடியாக்கித்தான் இதுவரை காலூன்றி நிக்க முடிந்தது.. உங்களில் முழு நம்பிக்கை வைத்து உண்மையான பக்க சார்பற்ற இருபக்கக்கருத்துக்களையும் வையுங்கள்.. அது எப்போதும் வெற்றியைத்தரும்.. குறிப்பிட்ட ஒருவரல்ல.. இங்கு பலரும் கோழைத்தனமான தனிப்பட்ட தாக்குதல் பிரச்சாரத்தை கையாள்பவர்கள்.. தற்போது நடக்கும் பிளவு பெருத்தமைக்கான காரணமும் பொய்ப்பிரச்சாரத்தால் விரைவாக வெண்றுவிடலாம் என்று போட்ட தப்புக்கணக்குத்தான்.. மிரட்டல் உருட்டல்..பொய்ப்பிரச்சார கணிப்பை களமாடும் வாசகர்களிடம் விட்டுவிட்டு தெடர்ந்து எழுதுங்கள்.. செய்திகள் கொண்டுவந்து போடுங்கள்..
நன்றி..
Truth 'll prevail
Reply
பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒரு நாள் - "மாத்தையா தலைமையிலான சதி முயற்சியை எவ்வாறு உங்களால் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டபோது, பொட்டம்மான் இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார் - ?திறமை அரைவாசி அதிஸ்ட்டம் அரைவாசி?. இந்த அதிஸ்டம் பற்றி என்னிடம் ஒரு தனிப்பட்ட ஒரு கருத்து உண்டு.
அது ? நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்களுக்கு, நேர்மையின் பக்கம் இருப்பவர்களுக்கு, ஒரு சீரிய நேரான பாதையில் துன்பங்களைத் தாங்கி முன்னேறுகிறவர்களுக்கு மட்டும் பொருத்தமான நேரத்தில், பொருத்தமான வடிவத்தில் துணைநிற்கும். சில சமயங்களில் அது அவர்களை விட்டு விலகி இருப்பது போல் தோன்றும், ஆனால் அதன் அர்த்தம், அவர்களை அது கைவிட்டுவிட்டது என்பதல்ல, மாறாக அது வேரொரு ? புதிரான - வடிவத்தில் அவர்கட்கு உதவுகின்றது என்பதுவேயாகும். இப்போது ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது. ?இந்தத் தடவை அந்த அதிஸ்டம் ஒரு வித்தியாசமான வடிவத்தில் வேலை செய்திருக்கிறது? என்பது தான் அது. உங்களைக் கொண்டுவித்தே உங்கள் துரோகத்தனத்தை உலகிற்குச் சொல்லுவித்ததன் மூலம் - பழி விழுந்து விடாமல் பிரபாகரனையும், பிளவுபட்டுவிடாமல் போராட்டத்தையும் பாதுகாத்திருக்கிறது.

அந்த அதிஸ்டம் இன்னொரு அளப்பரிய காரியத்தையும் செய்திருக்கிறது. பாராமுகமாக? அலட்சியமாக? அக்கறையற்று இருப்பது போல இருந்த ? அல்லது, கருத்து ஒருமைப்பாடின்மை காரணமாக சற்றே விலகி இருந்த - சொற்ப தமிழர்களையும் வாங்திறந்து பேச வைத்திருக்கிறது ? நெருங்கி வர வைத்திருக்கிறது. உங்கள் துரோகத் தனத்தைக் கண்டு அப்படியானவர்கள் கூட எவ்வளவு கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?... அந்த வகையில் நன்றி ? அதிஸ்டத்திற்கும் உங்களிற்கும்.

உங்களைப்பற்றி பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. நிதி மோசடி என்பதிலிருந்து கொலை மற்றும் தகாத உறவு வரை ஒரு நீண்ட குற்றப்பட்டியல் மக்கள் மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் உண்மை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். உண்மை இருந்தாலும் நீங்கள் அதை ?இல்லை?யென மறுக்கலாம். அதனால், அது பற்றி நான் இங்கு சொல்ல எதுவுமேயில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்ல நீங்களே அடுக்கிய காரணப்பட்டியல் பற்றி உங்களுக்கு சில கருத்துக்கள் வொல்ல விரும்புகின்றேன்.

அம்மான்,

தலைவர் உங்களுக்கு எதைச் செய்யத் தவறினார்?... என்ன குறை வைத்தார்?... என்னைப் பொறுத்த வரையில், உங்கள் விடயத்தில் அவர் பக்கசார்பாக நடந்துகோண்டார் என்று நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு ஒரு வகையில் உண்மை என்று கூடச் சொல்ல முடியும். எவ்வாறெனில் - மரபு வழிப் போரில் உங்களை விட அனுபவம் மிக்க? யுத்த முனைகளிலே உங்களை விட அதிக வெற்றிகளைக் குவித்த? வெற்றிகரமான படைநகர்த்தல்களில் உங்களை விட நிச்சயமாகத் திறமை வாய்ந்த? எத்தனையோ தளபதிகள் தன்னிடம் இருந்த போதும் - மட்டக்களப்பிலிருந்து உங்களைக் கொண்டு வந்து - தமிழீழத் தரைப்படையின் தலைமை - கள ஒருங்கிணைப்புத் - தளபதியாக உங்களை நியமித்தார். அந்த கையில், அது - இதுவரை நீங்களே பார்திராத கருணாவை தலைவர் பார்த்திருக்கிறார் என்று தானே அர்த்தம்?... தமிழீழத்தின் முழு தரைப்படை நகர்த்தல்களையுமே கையாளும் வல்லமை மிக்க தளபதியாக அவர் உங்களைப் பார்த்தபோது, நீங்களோ - பிரதேச வாதம் பேசிக்கொண்டு - உங்களை நீங்களே மட்டக்களப்பு-அம்பாறை என்ற சிறிய வட்டத்திற்குள் சுருக்கிக் கொண்டுவிட்டீர்கள். இத்தகைய ஒரு பொறுப்பை உங்களிடம் வழங்கும் போது, தலைவர் அவர்கள் இரண்டு வி;யங்களைக் கருதியிருக்கலாம் என்று நான் நம்புகின்றேன். முதலாவது ? பால்ராஜ்ஜூம் தீபனும், சொர்ணமும் பானுவும், ஜெயமும் விதுசாவும் - இவர்கள் போன்ற ஏனைய அனுபவம் மிக்க தளபதிகளும் - அதையிட்டுப் பொறாமைப்படாமல் தனது நியமனத்தை மனப்ப10ர்வமா ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர்கள் மீதிருந்த நம்பிக்கை. இரண்டாவது ? சிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உங்களை வளர்த்து உயர்த்தி, அத்தகைய ஒரு பெரும் பொறுப்பு நிலையில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்ற ஆதங்கம். அத்தகைய ஆதங்கத்தொடு உங்களை வளர்த்து ஆளாக்கிய தலைவரை, ?தனக்கு நிகராக யாரும் வளர்ந்து விட அவர் விடமாட்டார்? என்று Hindu பத்திரிகைக்காரனிடம் நீங்கள் கூறியது, பார்த்துப் பார்த்து வளர்த்த பிள்ளை முதுகிலே அல்ல, நெஞ்சிலே குத்திவிட்ட பச்சைத் துரோகம் இல்லையா?

இந்தியாக்காரனிடம் எதையோ எதிர்பார்த்து Hindu பத்திரிiகைகாரனுக்கு நீங்கள் அளந்த கதை, அண்டப்புளுகு என்பது இந்தியாக்காரனுக்கே தெரியும். புலிகளின் படைகளை கெரில்லா யுத்தக் குழுக்கள் என்ற நிலையிலிருந்து மரபு வழிப் போரணிகளாக வளர்த்துவிட்ட பெருமை உங்களையே சாரும் என நீங்கள் கதை விடுகின்றீர்கள். அது ஒரு சர்வ முட்டாள்தனம் என்று உங்களுக்குப் புரியவேயில்லையா?... மட்டக்களப்புக் காடுகளுக்குள் கெரில்லாத் தாக்குதல்கள் கூட நடத்தமுடியாமல் - நீங்கள் பதுங்கிக்கிடந்த நாட்களிலேயே, சொந்தத் தொழிற்சாலைகளில் பீரங்கிகள் தயாரித்து ? வடக்குப் போர் முனைகளில் - மரபுவழிச் சமர்களை நடாத்தியவர் பிரபாகரன் என்பது உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?... யுத்தகளங்களில் நவீன தொழில்நுட்பங்களை நீங்களே அறிமுப்படுத்தியதாக இன்னொரு கதை அளந்துள்ளீர்கள். சமர்க்களங்களில் பிரபாகரன் அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் எங்கிருந்து புலிகளிடம் வந்து சேர்ந்தன என்பதுவே உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ரொமெல் அவன் இவனென்று இரண்டாம் உலகயுத்த காலத்து பழைய ? உலுத்துப் போன ? புத்தகங்களில் படித்து, நீங்களே தான் புலிகளுக்கு யுத்த உத்திகளைச் சொல்லிக் கொடுத்ததாகவும் நீங்கள் ஒரு கதை அளக்கின்றீர்கள். உங்களுக்குத் தெரியுமா?... பிரபாகரன் எப்படி கட்டுநாயக்காவைத் துவம்சம் செய்தார் என்பதை அறிய நவீன உலகத்து உச்ச வல்லரசின் ?ஐங்கோண?க்காரர்களே அவதிப்படுகின்றார்கள் என்பது. ?There must be few military geniuses in the North; at least one must be there for sure? என்று ஒரு ?ஐங்கோண? அதிகாரி எங்கள் ஆட்களிடமே வாய்விட்டுச் சொல்லியிருக்கிறார். அந்த military genius யார் என்பது உங்களுக்கும், எங்களுக்கும் எல்லோருக்குமே தெரியும்.

இங்கே ஆகப் பெரிய நகைப்பு என்ன தெரியுமா?... ?ஜெயசிக்குறு?வை நீங்கள் தான் முறியடித்ததாகவும், ?ஓயாத அலைக?ளை நீங்கள் தான் நடாத்தியதாகவும், ஆனையிறவை நீங்கள் தான் பிடித்ததாகவும் - தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தாக்கம் மிகுந்த திருப்புமுனைகளை ஏற்படுத்திய இராணுவ வெற்றிகளின் சூத்திரதாரி நீங்கள் மட்டுமே என்று - விசியமறியாத வெளிநாட்டு media காரர்களும், சில தமிழ் ஆய்வாளர்களும் விசியமறிந்தவர்கள் போல எழுதுசிற கற்பனைக் கதைகளை உண்மையென்று நீங்களே நம்பிவிடுவது தான்.

வடக்குச் சண்டையை வெல்லுவதற்கு நீங்கள் ஆள்கொடுத்ததாக ஒரு பழைய கணக்ககை நீங்கள் இப்போது காட்டுகின்றீர்கள். அது நீங்கள் பிரதேசவாதம் பேசும் ஒரு வடிவம். நான் இங்கே இன்னொரு விதமான தர்க்கத்தை முன்வைக்கின்றேன். ?வடக்குச் சண்டைக்காக மட்டக்களப்பிலே முகாம்களை மூடி எதிரி யாழ்ப்பாணத்திற்குப் படைகளை நகர்த்துகின்றான். இந்தச் சண்டையில் எவ்வளவு அதிகமான இழப்பை நாம் அவனுக்கு ஏற்படுத்துகின்றோமோ, அதைவிட அதிக படைகள் அவனுக்கு மேலும் தேவைப்படும். அப்போது மேலும் மேலும் முகாம்களை மூடி அவன் மட்டக்களப்பில் நிலங்களைக் கைவிடுவான். அதேசமயம், எதிரிக்கு இங்கே அதிக இழப்பை ஏற்படுத்தவேண்டுமானால், எம்மிடமும் வலுவான படை இருக்க வேண்டும். ஆகவே நாமும் படைகளை வடக்கிற்கு நகர்த்துவது நன்மை பயக்கும்? என்று தலைவர் உங்களுக்குத் தகவல் அனுப்பியிருந்ததாக ?ஜெயசுக்குறு?வின் ஆரம்ப காலத்தில் காலத்தில் நீங்களே ஒரு நாள் என்னிடம் கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் அதை சொல்லியிருக்காவிட்டாலும் அது ஒன்றும் விளங்கிக்கொள்வதற்குக் கடினமான போரியல் சூட்சுமம் அல்ல. ஆகவே ? வடக்கைப் பாதுகாக்க மட்டும் மட்டக்களப்புப் போராளிகளை அனுப்பியதாக நீங்கள் முன்வைக்கும் வாதம் உப்புச்சப்பற்றது. அதே யாழ்ப்பாணம் மற்றும் வன்னிச் சண்டைகளை நான் இன்னொரு விதமாகப் பார்க்கின்றேன். அது உண்மையில் மட்டக்களப்புக்கான சண்டை. ஆனால், வடக்கில் பிடிக்கப்பட்டிருக்கிறது. நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நானும் பிரதேசவாதம் பேச முடியும். ?எங்கள் வீடுகளின் மேல் பீரங்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் பாடசாலைகளின் மேல் விமானக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் உடல்களின் மேல் துப்பாக்கிக் குண்டுகளைத் தாங்கி? எங்கள் வாழ்வுகளைச் சீரழித்து? நாங்கள் நு}ற்றுக்கணக்கில் உயிரிழந்து? நாங்கள் ஐநு}ராயிரம் பேர் ஒரே இரவில் அகதிகளாகி? எங்கள் யாழ்ப்பாணத்தை எதிரியிடம் பறிகொடுத்து? ? கடைசியில் மீட்டெடுத்தது உங்கள் மட்டக்களப்பைத்தானே!? இப்படியாக நானும் பிரதேசவாதம் பேசமுடியும் அல்லவா?... ஆனால் நான் அப்படிப் பேசப்போவதில்லை. ஏனெனில் - இது தமிழீழத்திற்கான போர் தமிழீழத்தின் எல்லாப்பிரதேச மக்களுமே - ஏதோ ஒரு அளவீட்டில்;, ஏதோ ஒரு பரிமாணத்தில், ஏதோ ஒரு கால கட்டத்தில் இந்தச் போரில் தங்கள் தங்கள் பங்களிப்பை ஏதோ ஒருவகையில் வழங்கியுள்ளார்கள் என்பதில் எனக்கு எந்தவிதமான குழப்பமும் கிடையாது. எங்கள் நாட்டை மீட்பதற்காக - நாங்கள் எல்லோரும் சேர்ந்து, நாங்கள் எல்லோருமே இழப்புகளைத் தாங்கி, நாங்கள் எல்லோருமே போராடி, நாங்கள் எல்லோருமே வெற்றிகளைப் பெற்றோhம்.


இங்கே இன்னொரு வரலாற்றுப் போக்கையும் தாங்கள் தயவுசெய்து கவனிக்க வேண்டும். போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இயக்கத்தின் பொறுப்புக்களில் எல்லாம் வல்வெட்டித்துறைக்காரர்களே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வல்வெட்டித்துறை வாதம் பேசியதல்லை. பின்பு - மெல்ல மெல்ல அதில் வடமராட்;சிக்காரர்கள் நியமனம் பெற்றார்கள். அப்போது புலிப்படையில் யாரும் வடமராட்சி வாதம் பேசியதல்லை. பின்பு ? மெல்ல மெல்ல யாழ் மாவட்டத்தார் பொறுப்புக்களுக்கு வந்தார்கள். ஒரு காலத்தில் தமிழீழத்தின் எல்லா மாவட்டத் தளபதிகளாகவும் யாழ்ப்பாணத்தாரே இருந்தார்கள். அப்போது புலிப்படையில் யாரும் யாழ்ப்பாண வாதம் பேசியதில்லை. இவ்வாறாக இருந்து வந்த ஒரு காலகட்டத்தில் தலைவருக்கு அடுத்த நிலைக்கு மாத்தையா நியமனம் பெற்றார்: அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பின்பு ஒரு கட்டத்தில் தலைவருக்கு அடுத்தபடியான தளபதியாக பால்ராஜ் நியமனம் பெற்றார். அவர் வன்னியிலிருந்து வந்தவர். பின்பு ஒரு காலகட்டத்தில் அந்தப் பொறுப்பு தளபதி சொர்ணத்திற்கு வழங்கப்பட்டது: அவர், திருக்கோணமலையிலிருந்து வந்தவர். கடைசியாக ஒரு காலகட்டத்தில் அத்தகைய ஒரு தளபதியாக நீங்கள் நியமனம் பெற்றீர்கள்: நீங்கள் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தவர். உங்களுக்கு உதவியாக தளபதி தீபன் நியமிக்கப்பட்டார்: அவர் வன்னியைச் சேர்ந்தவர். இவ்வாறாக, போராட்டத்தின் படிநிலை வளர்ச்சிக்கேற்ப - அநுபவம், ஆற்றல், செயற்திறனின் அடிப்படையில் கடமைகள் வழங்கப்பட்டு - பொறுப்புக்களில் பொருத்தமானவர்கள், பொருத்தமான நேரங்களில் அமர்த்தப்பட்டு வந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் தலைவர் அதை மிகச் செவ்வனவே செய்து வந்திருக்கிறார். அன்று மாத்தையாவும் இன்று நீங்களும் - உங்களுக்குக் கிடைத்த பொறுப்பு, அதன் மூலம் உங்களுக்குக் கிடைத்த வசதிகள், அதை வைத்து நீங்கள் தேடிய செல்வாக்கு, இவற்றின் உச்சப் பெறுபேறான புகழ், இவை எல்லாமும் சேர்ந்து ? உங்கள் தலைக்குப்பின்னால் ஒரு அகற்றப்படமுடியாத பேரொளிச் சக்கரத்தைச் சுழல விட்டிருப்பதாக நம்பி உங்களை நீங்களே குழப்பிக் கொண்டீர்கள். ஆனால், பிரபாகரனோ, அன்றும், இன்றும், என்றும் மிகத் தெளிவான படிமுறை வளர்ச்சியினு}டாக போராட்டத்தை நகர்த்திச் செல்கினறார்.

திருவாளார் கருணா அவர்களே,

உங்களைக் கொல்லுவதற்கு புலிகளின் ?கொலைப் படைகள்? அலைந்து திரிவதாக நீங்கள் ஒரு செய்தியை பரப்பியிருக்கின்றீர்கள். அதில் உண்மை இருக்கலாம், அல்லது பொய் இருக்கலாம். தலைவரும் தமிழினமும் உங்களைத் தண்டிக்கலாம் அல்லது மன்னிக்கலாம். அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு மனிதனின் மிகப்பெரிய நீதிமன்றம் மனச்சாட்சி அல்லவா அம்மான்.... இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் அது உங்களை வதைக்காதா?... எங்கோ ஒரு மூலையில் நீங்கள் தப்பிப் பிளைத்து இருந்துவிட்டால், உங்களுக்கு ஒரு 80? 90 வயது இருக்கும் போது ? நோய்வாய்ப்பட்டோ அல்லது வயது வந்தோ மரணம் தவிர்க்கமுடியாதது என ஆகி - சாவுப் படுக்கையில் இருக்கும் போது, ?ஒரு நேர்மையான - சரியான மனிதனாக நான் வாழ்ந்தேனா?? என்று ஒரு கேள்வியை உங்களை நோக்கியே நீங்கள் கேட்க மாட்டீர்களா?... ?எனக்கு சோறு போட்ட மக்களுக்கு நான் விசுவாசமாக வாழ்ந்தேனா?? என்று ஒரு சுயவிசாரணை செய்யமாட்டீர்களா?... அப்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும் என்பதை இப்போது யோசித்துப் பாருங்கள். தமிழ் தேசிய இனம் உங்களை மன்னித்தாலும், உங்களுக்குள்ளேயே இருக்கும் முரளீதரன் என்ற தமிழனின் மனச்சாட்சி உங்கள் முகத்தில் காறித் துப்பாதா?...

சரி?. நாளைக்கு நடப்பது எல்லாவற்றையும் விடுங்கள்?.

நல்ல ஒரு நல்ல நிலா நாளில் -
உங்களைச் சுற்றி நீங்கள் வைத்திருக்கும் பரிவாரங்களையெல்லாம் விட்டுவிட்டு - தரவையில் நீங்கள் விதைத்து வைத்திருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்குப் போங்கள். நீண்டு கிடக்கும் கல்லறை வரிசைகளின் ஊடக ?
தன்னந் தனியனாக - மெதுவாக நடவுங்கள்.
ஒவ்வொரு கல்லறைகளின் மீதிருக்கும் பெயர்களையும், அந்த நிலா வெளிச்சத்தில் ஒவ்வொன்றாகப் படியுங்கள்.
பிரபாகரனின் பெயராலும், தமிழீழத் தேசியத்தின் பெயராலும் -
நீங்கள் சேர்த்தெடுத்து வளர்த்தெடுத்த அந்த ஒவ்வொரு போராளியின் முகத்தையும் உங்கள் மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்.
ஏக்கத்தைத் தேக்கிய விழிகளோடு உங்களைப் பார்த்து ?
?ஏன் அம்மான் இப்படிச் செய்துவிட்டீhகள்?? என்று அவர்கள் கேட்பதை உங்கள் மனச்சாட்சி உங்களுக்கு உணர்த்தும்.
அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவீர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் உருவாக்கியுள்ள இன்றைய இக்கட்டான சூழல் சுமூகமாகவும் - வேகமாகவும் தீர்வுக்கு வர ஒரே வழிதான் உண்டு அது உங்கள் மன அரங்கில் மாற்றம் நிகழ வேண்டும். 20 ஆண்டு காலமாக எந்த மக்களுக்காகப் போரடினீர்களோ அந்த மக்களுக்காக... கடந்த 20 ஆண்டு காலமாக நீங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு சரியான அர்த்தத்தை ஏற்படுத்துவதற்காக? ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் மனதிலும் மட்டக்களப்பு மண்ணிலும் ஏற்படுத்துங்கள். மனமிரங்கி உங்களுக்கு மன்னிப்பளிக்கத் தயாராய் இருக்கும் தலைவரின் கருணையை ஏற்று ஏதாவது ஒரு வெளி நாட்டில் போய் நீரா அக்காவுடனும் குழந்தைகளுடனும் குடும்பம் நடாத்தினாலும் சரிதான்: அல்லது போராளி ரஞ்சனை அனுப்பியது போல, சோடாவில் சயனைட் கலந்து நீங்களே குடித்தாலும் சரிதான்.

நன்றி

குளைக்காடான்.
Reply
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
29-03-04

[align=center:a110557eb8]<b>தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அபிலாசையை வெளிப்படுத்துவோம்</b>.[/align:a110557eb8]


இரு தசாப்தங்களைக் கடந்து பல ஆயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்பணிப்புகளாலும் வீரம் செறிந்த போராட்டத்தாலும் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் வளர்ச்சியடைந்து திருப்புமுனையானதோர் கட்டத்தை அடைந்திருக்கிறது. நாம் எமது பாரம்பரிய தாயகத்தில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்பினோம். ஆனால் காலங்காலமாக ஆட்சிக்குவந்த சிறீலங்கா ஆட்சியாளர்களால் எமது சுதந்திரமான கௌரவமான வாழ்வு மறுக்கப்பட்டு அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட போது ஐனநாயக ரீதியில் அகிம்சை வழியில் அதனை எமது மக்கள் எதிர்த்தனர். ஆனால் தமிழ் மக்களின் ஐனநாயக வழிகளிலான போராட்டங்கள் மதிக்கப்படாது ஆயுத பலம் கொண்டு அடக்கப்பட்டன. அன்று நாம் அடக்கி ஒடுக்கப்பட்டபோதெல்லாம் அதனை சமபலத்துடன் துணிந்து எதிர்கொள்வதற்கான உறுதியான தலைமைத்துவமோ போராட்ட சக்தியோ இன்றி நாம் பலவீனமான மக்களினமாக வாழ்ந்தோம். ஐனநாயக ரீதியிலான அகிம்சை வழிப்போராட்டங்கள் அடக்கப்பட்டு எமது வாழ்வுரிமை மறுக்கப்பட்ட போது இளம் தலைமுறை ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரு சிறு துளிராக வடிவெடுத்த எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரு விருட்சமாகி பலம்மிக்கதோர் இனமாக எம்மை மாற்றியுள்ளது.

இன்று பேச்சுவார்த்தை மேசைகளில் ஐனநாயக வழிமுறைகள் ஊடான எமது மக்களின் கருத்துகளுக்குச் சிங்கள ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் மதிப்பளிப்பதன் காரணம் எமது போராட்ட பலமே. போராளிகளினதும் எமது மக்களினதும் குருதியாலும் தசையாலும் கண்ணீராலும் கட்டியெழுப்பப்பட்ட எமது போராட்டம் இன்று உலகின் மனச்சாட்சியைத் தொட்டுவிட்ட ஆற்றல்மிக்கதோர் போராட்ட சக்தியாகப் பரிணமித்துள்ளது. இவ்வாறானதோர் வரலாற்றுப் புறநிலையிலேயே இன்று நாம் எமது அபிலாசைகளை ஒன்றுபட்டுநின்று ஐனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்முறை ஐனநாய ரீதியிலான எமது கருத்து வெளிப்பாடானது கடந்த காலங்களைப் போலன்றி, பெரும் போராட்ட சக்தியாலும் உறுதியான தமிழீழத் தேசியத் தலைமைத்துவத்ததாலும் காத்திரத் தன்மையுடையதாக அமைகிறது. இன்று எமது தேசியத் தலைவரின் தலமைத்துவத்தை ஏற்று ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் என்பதை ஏற்று தமிழ்த்; தேசியத்தை முன்னெடுக்கும் போராட்ட முன்னெடுப்புக்களுக்கு உந்துசக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆகியவற்றை முன்வைத்து ஐனநாயகப் பாதையில் மக்களாணையைப் வெளிப்படுத்துவதனு}டாக தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் ஒன்றுபட்டு நின்று தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்வாறானதோர் புறநிலையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுநின்று தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து ஒருமித்த மக்களாணையை வெளிப்படுத்தி, எமது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி, ஒன்றுபட்ட சக்தியாக நாம் எமது தேசியத் தலைவரின் கீழ் ஒன்றுபட்டுநின்று சுயநிர்ணய உரிமைகொண்ட கௌரவமான சுதந்திரமான மக்களினமாக வாழ விரும்புவதை இவ்வுலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று ஐனநாயக ரீதியல் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையை அதன் உண்மைத்தன்மையை வெளிக்காட்டுவது என்பது, நாம் பலமான ஒன்றுபட்ட மக்களினமாக ஒரு தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரண்டு நிற்பதனை முழு உலகுக்கும் தெளிவாக எடுத்துக்காட்டும். எமது மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்பணிப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான, சக்திகளுடன் கைகோர்த்து நிற்கும் சுயநல அரசியல் நோக்கங் கொண்டவர்களைத் தமிழ் மக்கள் இத்தேர்தலின் மூலம் புறக்கணித்து, தமிழ் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்குச் சரியானதோர் வரலாற்றுப் படிப்பினையைப் புகட்ட வேண்டும்.

இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று ஒருமித்து தமது மக்களாணையை தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி ஐனநாயக ரீதியில் நாம் எமது அபிலாசைகளைத் தெளிவாக இவ்வுலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஐனநாயக ரீதியிலும் நாம் ஒன்றுபட்ட ஒரு பெரும் போராட்ட சக்தியாக வளர்ச்சியடைந்து நிற்பதனை அனைவருக்கும் தெளிவாக உணர்த்துவோம்.

[align=center:a110557eb8]-புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்-[/align:a110557eb8]
Reply
[quote=BBC]நான் இங்கே செய்திகளை போடுவதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எனது நோக்கம் நாம் ஒரு பக்கத்து செய்திகளை மட்டும் பார்க்காமல் அனைத்து பக்க செய்திகளையும் பார்த்து அவற்றை அலசி ஆராய்ந்து ஆரோக்கியமான முறையில் கருத்து பரிமாற்றம் செய்யவேண்டும் என்பதுதான். நாம் எதை ஆதரிப்பதாக இல்லை எதிர்பதாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் கருத்தாக முன்வைக்க வேண்டும்.ஆனால் சிலர் இந்த கருத்தை மூடவேண்டும் என்றும் சிலர் வாயை பொத்தி கொண்டு இருக்கவேண்டும் சொல்கின்றார்கள். இதுதவிர மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

இவை அனைத்தையும் பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன். உங்கள் கருத்தை இங்கே எழுதுங்கள். பகிரங்கமாக எழுத விரும்பாதவர்கள் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பலாம். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். அதுவரை தற்காலிகமாக ஒரு நாளுக்கு கருத்து எழுதுவதையோ செய்தியை பிரசுரிப்பதையோ மனவருத்தத்துடன் நிறுத்துகின்றேன்.[/quote]

[quote=Mathivathanan]BBC.. ஓடுவதால் பயனில்லை.. நின்று பயப்படாமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள்..எத்தனையோ மிரட்டல்கள் அவதூறுகளை பொய்ப்பிரச்சாரங்களையும் தவிடுபெடியாக்கித்தான் இதுவரை காலூன்றி நிக்க முடிந்தது.. உங்களில் முழு நம்பிக்கை வைத்து உண்மையான பக்க சார்பற்ற இருபக்கக்கருத்துக்களையும் வையுங்கள்.. அது எப்போதும் வெற்றியைத்தரும்.. குறிப்பிட்ட ஒருவரல்ல.. இங்கு பலரும் கோழைத்தனமான தனிப்பட்ட தாக்குதல் பிரச்சாரத்தை கையாள்பவர்கள்.. தற்போது நடக்கும் பிளவு பெருத்தமைக்கான காரணமும் பொய்ப்பிரச்சாரத்தால் விரைவாக வெண்றுவிடலாம் என்று போட்ட தப்புக்கணக்குத்தான்.. மிரட்டல் உருட்டல்..பொய்ப்பிரச்சார கணிப்பை களமாடும் வாசகர்களிடம் விட்டுவிட்டு தெடர்ந்து எழுதுங்கள்.. செய்திகள் கொண்டுவந்து போடுங்கள்..
நன்றி..

மேனை பிபிசி உதுக்கெல்லாம் சோரக்கூடாது
தாத்தா சொல்லுறது மெய் கண்டியளோ
அந்தாள் இந்த களத்திற்கு ஒரு பழையகட்டை
எத்தினை பேரை பாத்திருக்கும் இங்கை...
உவையின்ற கதையொண்டும் எடுபடல்லை எண்டவுடன தொடங்கிடுவினம் 'துரோகி' எண்டு.
உதை விட்டால் அவையளுக்கும் வேறவழி தெரியாது....
இல்லாத ஊருக்கு போய்காட்டுறன் எண்டினம்.
சிவ... சிவா..
Reply
உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை.
BBC பெயரில் எழுதாவிட்டால்... உங்களுக்குதானே கன தொப்பி இங்கு உள்ளது மாத்த வேண்டியதுதானே... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea
Reply
இங்கு சில கேள்விகளை நான் முன்வைக்கின்றேன். இந்த கேள்விகளுக்கு ஆம் என்ற விடை உங்களிடம் இருந்தால் மேலே செல்லுங்கள் இல்லை என்ற விடை உங்களிடம் இருக்குமாயின்...............????????

முதலாவது தமிழர்களாகிய நாம் இலங்கையில் உரிமைமறுக்கப்பட்டவர்களாக வாழுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த உரிமைகளை வென்றெடுப்பதுதான் இன்று எங்களின் முன்னுள்ள பிரதான இலக்கு, நோக்காக இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த உரிமைகளை காந்தீய வழிமுறைமூலம் வென்றெடுக்கப்பட முடியாது என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா
ஆம் என்றால்

அந்த காந்தீயவழிமூலம் வென்றெடுக்கப்படமுடியாத உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமை கொண்ட ஒரே சக்தி விடுதலைப்புலிகள் என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா
ஆம் என்றால்

அந்த சக்தியையும் அந்தப்போராட்டத்தையும் தாங்கிக்கொள்ளவேண்டிய தார்மீக பொறுப்பு நம் ஈழத்தமிழன் எல்லோருக்கும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கின்றோமா?
ஆம் என்றால்

இந்த சக்தியை தாங்கி வைத்திருக்கும் மக்களை குழப்புவதன் மூலம் அந்த போராட்டத்தை வலுவிழக்கச் செய்யலாம் என்பதை ஏற்றுக் கொள்கின்றோமா?
ஆம் என்றால

இந்த சக்தியையும் போராட்டத்தையும் அழித்துஒழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஏராளமான வெளிச் சக்திகள் அன்றுதொட்டு இன்றுவரை பல்வேறுவழிகளில் முயன்றுகொண்டு வருகின்றன என்பதை தெரிந்து வைத்திருக்கின்றோமா?
ஆம் என்றால்

அந்த மக்களை கடந்த காலங்களில் பல்வேறுபட்ட திரிபட்ட செய்திகளை பலவழிகளிலும் வழங்கி பல குழப்பங்களை விளைவிக்க முயன்றதை நாம் அறிவோமா
ஆம் என்றால்

அவர்கள் இன்றுள்ள சூழ்நிலையில் மேலும் பலகுழப்பங்களை விளைவிக்க முயல்கின்றார்கள், முயல்வார்கள் என்பதை எம்மால் காண முடிகின்றதா?
ஆம் என்றால்

அந்த சக்திகளை இனங்கண்டு அவர்களின் நோக்கம்களை இனங்கண்டு அவர்கள் செய்திகளை இனங்கண்டு கொள்ளாது அவர்கள் செய்திகளை மீளபிரசுரித்து அவர்களுக்கு மேலும் வாசகர்களைத் தேடிக்கொடுப்பது நமது உரிமைகளை வென்றெடுக்க எந்த விதத்திலாவது உதவுமா?

இதற்குரிய விடையை நீங்களே சொல்லுங்கள்.
Reply
<b>உண்மையை உலகம் முழுவதற்கும் உறுதிபட எடுத்துக்கூறுவோம்!</b>

இன்று தமிழினம் ஜனநாயக ரீதியில் ஒன்றுபட்ட போராட்டசக்தியாக - பலம்மிக்க சக்தியாகத் திகழ் கிறது. நாளை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த உண்மையை உலகம் முழுவதற்கும் உறுதிபட எடுத்துக்கூறுவோம் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அனைத்துத் தமிழ்மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

தமிழ்த் தேசியத்துக்கு வலுச்சேர்த்து ஒன்றுபட்ட போராட்ட சக்தியைக் காத்திரமானதாக்குவதற்குத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக வேண்டுகோளும் விடுத்தார்.

கிளிநொச்சியில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் சார்பில் மேற்படி அழைப் பையும் வேண்டுகோளையும் சு.ப.தமிழ்ச் செல்வன் விடுத்தார்.
கூட்டத்தில் தமிழ்ச்செல்வன் நிகழ்த்திய உரையின் விவரம் வருமாறு:-

இரு தசாப்தங்களைக் கடந்த பல ஆயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் உயரிய அர்ப்ப ணிப்புகளாலும் வீரம் செறிந்த போராட் டத்தாலும் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் வளர்ச்சியடைந்து திருப்புமுனையான தொரு கட்டத்தை அடைந்திருக்கின்றது.

நாம் எமது பாரம்பரிய தாய கத்தில் நிம்மதியாகவும் கௌரவமாக வும் சுதந்திர மனிதர்களாக வாழ விரும்பினோம். ஆனால், காலங்காலமாக ஆட்சிக்கு வந்த சிறீலங்கா ஆட்சி யாளர்களால் எமது சுதந்திரமான கௌரவமான வாழ்வு மறுக்கப்பட்டு அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்டபோது ஜனநாயக ரீதியில் அஹிம்சைவழி யில் அதனை எமது மக்கள் எதிர்த்தனர். ஆனால், தமிழ் மக்களின் ஜனநாயக வழிகளிலான போராட்டங்கள் மதிக்கப்படாமல் ஆயுதபலம் கொண்டு அடக்கப்பட்டன.

அன்று நாம் அடக்கி ஒடுக்கப் பட்டபோதெல்லாம் அதனை சமபலத் துடன் துணிந்து எதிர்கொள்வதற் கான உறுதியான தலைமைத்துவமோ போராட்ட சக்தியோ இன்றி நாம் பல
வீனமான மக்களினமாக வாழ்ந்தோம்.

ஜனநாயக ரீதியிலான அஹிம்சை வழிப் போராட்டங்கள் அகப்பட்டு எமது வாழ்வுரிமை மறுக்கப்பட்டபோது இளம் தலைமுறை ஆயுதப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஒரு சிறு துளியாக வடிவெடுத்த எமது மக்க ளின் தேசிய விடுதலைப் போராட்டம் இன்று பெரும் விருட்சமாகிப் பலம்மிக் கதோர் இனமாக எம்மை மாற்றியுள்ளது.

இன்று பேச்சு மேசைகளில் ஜன நாயக வழிமுறைகள் ஊடான எமது மக்களின் கருத்துக்களுக்குச் சிங் கள ஆட்சியாளர்களும் சர்வதேச சமூகமும் மதிப்பளிப்பதன் காரணம் எமது போராட்ட பலமே.
போராளிகளினதும் எமது மக்களினதும், குருதியாலும், தசையாலும், கண்ணீராலும் கட்டி எழுப்பப்பட்ட எமது போராட்டம் இன்று உலகின் மனச்சாட்சியைத் தொட்டுவிட்ட ஆற் றல்மிக்கதொரு போராட்ட சக்தியாகப் பரிணமித்துள்ளது.

இவ்வாறானதொரு வரலாற்றுப் புறநிலையிலேயே இன்று நாம் எமது அபிலாi~களை ஒன்று பட்டு நின்று ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இம்முறை ஜனநாயக ரீதியிலான எமது கருத்து வெளிப்பாடானது கடந்த காலங்களைப்போலன்றி பெரும் போராட்ட சக்தியாலும் உறுதியான தமிழீழ தேசியத் தலை மைத்துவத்தாலும் காத்திரத் தன்மையுடையதாக அமைகிறது. இன்று எமது தேசியத் தலைவரின் தலைமைத்து வத்தை ஏற்று ஒன்றுபட்ட சக்தியா கத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுகின்றது.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் என்பதை ஏற்று தமிழீழத் தேசியத்தை முன்னெடுக் கும் போராட்ட முன்னெடுப்புகளுக்கு உந்து சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.
தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமை, வடக்கு-கிழக்கு தமிழ் மக் களின் பாரம்பரிய தாயகம், தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியவற்றை முன்வைத்து ஜனநாயகப் பாதையில் மக்கள் ஆணையை வெளிப்படுத்துவ தன் ஊடாகத் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் கீழ் ஒன்றுபட்டு நின்று தேர்தலில் போட்டி யிடுகின்றன.

இவ்வாறானதொரு புற நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து, ஒருமித்த மக்கள் ஆணையை வெளிப்படுத்தி, எமது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி, ஒன்று பட்ட சக்தியாக நாம் எமது தேசியத் தலைவரின் கீழ் ஒன்று பட்டு நின்று சுயநிர்ணய உரிமையைக் கொண்ட கௌரவமான, சுதந்திரமான மக்களினமாக வாழ விரும்புவதை இவ்வுல குக்கு வெளிப்படுத்தவேண்டும்.

தமிழ்மக்கள் அனைவரும் ஒன்று பட்;டு ஜனநாயக hPதியில் எமது போராட் டத்தின் நியாயமான தன்மையை -அதன் உண்மைத்தன்மையை -வெளிக் காட்டுவது என்பதும் நாம் பலமான ஒன்றுபட்ட மக்களினமாக ஒரு தலை மைத்துவத்தின் கீழ் அணிதிரண்டு நிற்பதினை முழு உலகுக்கும் எடுத் துக் காட்டட்டும். எமது மக்களின தும் போராளியினதும் உயரிய அர்ப் பணிப்புகளால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் புறக்கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து நிற்கும் சுயநல அர சியல் நோக்கம் கொண்டவர்களைத் தமிழ்மக்கள் இத்தேர்தலில் புறக் கணித்து தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு சரியானதொரு வர லாற்றுப் படிப்பினையைப் புகட்ட வேண்டும்.

இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனை வரும் ஒன்றுபட்டு நின்று ஒருமித்து தமது மக்கள் ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி ஜன நாயக hPதியில் நாம் எமது அபிலா i~களைத் தெளிவாக இவ்வுல குக்கு வெளிப்படுத்தவேண்டும். இதன் மூலம், ஜனநாயக hPதியிலும் நாம் ஒன்றுபட்டு ஒரு பெரும் போராட்ட சக் தியாக வளர்ச்சியடைந்து நிற்ப தனை அனைவருக்கும் தெளிவாக உணர்த்துவோம்.

- இவ்வாறு தமிழ்ச்செல்வன் கூறினார்.

நன்றி
உதயன் 01-04-2004
Reply
anpagam Wrote:உண்மையின் முன்னால் நடுநிலமை என்பது இல்லை.
BBC பெயரில் எழுதாவிட்டால்... உங்களுக்குதானே கன தொப்பி இங்கு உள்ளது மாத்த வேண்டியதுதானே... <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Idea

அன்பகம், உண்மை என்பது நமக்கு சாதகமான செய்திகளை மட்டும் பார்ப்பது அல்ல.

புது தொப்பியை போட்டு அரசியல் கருத்து எழுதப் போவதில்லை. நான் BBC என்ற பெயரிலேயே அரசியல் கருத்து எழுதி வருகின்றேன். இதை நீங்கள் களப் பொறுப்பாளர்களை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மணிமாறனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.அதே சமயம் 20 வருட போராட்ட ஆதரவை ஒரு சிலரது கருத்து குழப்பிவிடும் என்பது என்னால் ஏற்கமுடியாதது.

அப்படி குழம்புவோர் என்றும் அடிக்கடி குழம்பிக்கொண்டிருப்பவர்கள்.அவர்களது ஆதரவு இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன....
Reply
யாழ்/yarl Wrote:மணிமாறனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.அதே சமயம் 20 வருட போராட்ட ஆதரவை ஒரு சிலரது கருத்து குழப்பிவிடும் என்பது என்னால் ஏற்கமுடியாதது.

அப்படி குழம்புவோர் என்றும் அடிக்கடி குழம்பிக்கொண்டிருப்பவர்கள்.அவர்களது ஆதரவு இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன....

ஆம். அனைத்து தரப்பு செய்திகளையும் சர்வதேச ஊடகங்களையும் பார்ப்பதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.thinakural.com/2004/April/01/moorthy.gif' border='0' alt='user posted image'>

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
தேர்தல் பிரசாரங்களில் புலிகளுக்கு எதிராகப் பேசாதீர் தனது கட்சியினருக்கு ஜெயலலிதா கடும் உத்தரவு

இந்திய பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் தீவிரமடைய ஆரம்பித்திருக்கும் நிலையில், பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து தமிழக தொகுதிகளில் போட்டியிடும் தனது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களோ அவர்களுக்கு ஆதரவாக மேடைகளில் பேசும் முக்கியஸ்தர்களோ விடுதலைப்புலிகளுக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருப்பதாக சென்னையில் இருந்து நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததாக 'பொடா" சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கும் கூடுதலான காலம் சிறையில் அடைக்கப்பட்டு இப்போது வெளியே வந்திருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றும் தேர்தல் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு செல்கின்றனர்.

சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியும் கலைஞர் மு.கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும் வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க.வும் கூட்டாகச் சேர்ந்தே லோகசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. கடந்த காலத்தில் ராஜீவ் காந்தி கொலையுடன் திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வந்த காங்கிரஸ் கட்சி கூட, தேர்தல் கூட்டுக் காரணமாக, அந்த விமர்சனங்களையெல்லாம் பழைய கதையாக மறந்துவிட்ட நிலையில், தனது கட்சியினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசுவதனால், தேர்தலில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை ஜெயலலிதா வெகுவாக உணர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள தனது வாசஸ்தலத்துக்கு அண்ணா தி.மு.க. வின் மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கீழ்மட்டக் கட்சித் தொண்டர்கள் கூட, வீணாக விடுதலைப்புலிகளுக்கு எதிராக உரைகளை ஆற்றாதிருப்பதை உறுதி செய்யுமாறு அவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாக சென்னைத் தகவல் ஒன்று தெரிவித்திருக்கிறது.

வைகோவின் பிரசாரங்களினால் காங்கிரஸ் கூட்டணிப் பக்கம் பெருமளவில் மக்கள் சாய்வதால் அச்சமடைந்திருக்கும் ஜெயலலிதா, தனது எதிரியான ரஜினிகாந்திடம் கூட்டத் தூது அனுப்பி, பழைய பகைமையை மறந்து செயற்படுவோம் என்று கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நன்றி - தினக்குரல்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
மொட்டைத் தலையும் முழங்காலும்...!


~வன்னித்தலைமை, மட்டக்களப்பு-அம்பாறை போராளிகளுக்கு சமஅளவு அதிகாரங்களையும் பதவிகளையும் வழங்கவில்லை, கிழக்கிலங்கை பின்தங்கியிருப்பதற்கு வன்னித் தலைமையின் பாராமுகமே காரணம்| என்பதே கருணா தனது முடிவுக்காக முன்வைத்த குற்றச்சாட்டு.

மீண்டும் வன்னித் தலைமையுடன் இணைந்து செயற்படுவதாக இருந்தால், இதுகுறித்து வன்னித்தலைமை என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்? - இது செய்தியாளரின் கேள்வி.

~உளவுத்துறை பொட்டம்மானையும், நிதித்துறை புகழேந்தியையும், காவற்துறை நடேசனையும் நீக்கி விடும்படி கூறுங்கள், நான் தலைவருடன் சமரசம் செய்து கொள்கிறேன்| - இது கருணா.

இந்த மூவரையும் நீக்குவதன் மூலம், கருணா கிளப்பியுள்ள கிழக்கிலங்கையின் பிரதேசவாதப் பிரச்சனை தீருவதற்கு எந்த வாய்ப்புமே இல்லை என்று பார்க்கும் பொழுது, கருணா எங்கேயோ சொதப்பி விட்டார் என்று இலகுவாகப் புரிந்து விடும்.

விடுதலைப் புலிகளின் தலைமையிலிருந்து பிரிந்து போவதாக அறிவித்த சில மணி நேரத்தில் வழங்கிய செவ்வியில், கருணா முன்வைத்த குற்றச்சாட்டும், அதற்கான நிவர்த்தி நிலைப்பாடும் இவை மட்டுமே.

பின்னர் சுதாரித்துக்கொண்டு, அதையும் இதையும் அடுத்தடுத்துச் சொன்னாலும், அந்த முதல் நாளில் அவர் கொடுத்த காரணம், அவரது நம்பகத்தன்மையை நலிவடைய வைத்துவிட்டது.

அடித்து முந்திக்கொண்டு நோர்வேயும், ஐப்பானும் தன்னிடம் ஓடிவந்து மடிப்பிச்சை கேட்கும், இறங்கிவந்து இணங்கிக்கொள் என்று தன்னிடம் கோரும், வன்னித் தலைமையை ஓர் இணக்கப்பாட்டிற்கு வரும்படி அழுத்தம் கொடுக்கும், இதற்கிடையில் கிழக்கிலங்கைத் தமிழர்கள் தன்னை கிழக்கின் விடுதலை நாயகனாகக் கொண்டாடுவார்கள் என்றெல்லாம் கருணா கனவுகண்டு கொண்டிருக்க, நடந்ததென்னவோ எதிர்மாறான நிகழ்வுகள் தான்.

நோர்வேயும் ஐப்பானும் ஓடிவந்தது என்னவோ உண்மைதான், கருணாவும் தனது திட்டப்படிதான் எல்லாமே நகர்வதாக அனுமானித்ததும் உண்மைதான், ஆனால், வந்தவர்கள் வன்னித் தலைமையைச் சந்தித்துவிட்டு, சத்தமின்றித் திரும்பியபோதுதான் கருணாவுக்கு நிஐங்கள் வெளிக்க ஆரம்பித்தன.

கருணா எதிர்பார்த்த திசையில் காய்கள் நகரவில்லை என்பதால், இனி காய்களை தானே நகர்த்த வேண்டிய கட்டாய நிலை. அந்த முயற்சியில் தான், தற்போது பத்திரிகை எரிப்புக்கள், கடையடைப்புக்கள், கைதுகள், வேட்பாளர் சந்திப்புக்கள் எல்லாமே. இருந்தாலும் இதுஹ
~நேத்துப் பிறந்த குரங்கு குட்டிக்கரணம் போட்டுக் காட்டினமாதிரி| தானும் தலைமைக்கும் புத்தி சொல்லப் போய் தன்னிலை கெட்டுப்போய், மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறல், திண்டாட்டம்!

உண்மைகள் இப்போது அடுக்கடுக்காய் வெளிவர ஆரம்பித்துள்ளன.

- கடந்த ஐந்து வருடங்களாக, கருணா தனக்கான தனித் தலைமையில் குறிவைத்து செயற்பட்டமை

- தனது குடும்பத்தை மலேசிய நாட்டில் குடிவைத்ததோடு, தனக்கென பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்தமை

- தலைவரின் உத்தரவில் உள்ளெடுக்கப்பட்ட பெருந்தொகை ஆயுத தளபாடங்களை தனக்கு மட்டுமே தெரிந்த இடங்களில் மறைத்து வைத்தமை

- தலைமைக்குத் தெரியாமல், தனக்கென ஓர் உளவுப்படை வைத்திருந்தமை

- தலைமைக்குத் தெரியாமல், தனக்கென ஓர் உயர்பாதுகாப்புப்படையை உருவாக்கியமை

- தலைமைக்குத் தெரியாமல், வெளிநாடுகளில் முதலீடு செய்தமை

- தலைமையின் முடிவின்றி, தன்னிச்சையாக முடிவுகள் எடுத்தமை

- அமைப்பின் துறைகளுக்கான பிரத்தியேக பொறுப்பாளர்களோடு கலந்தாலோசிக்காது செயற்பட்டு வந்தமை

- தனது நடவடிக்கைகளை மேலிடத்திற்கு அறிவிக்க மறுத்தமை

- தனது நேரடி நிர்வாகத்தின் கீழ், தன்னைப் பலப்படுத்தும் நோக்குடன் தனியாக ஒரு பத்திரிகை நடாத்தியமை

- அமைப்பிலிருந்த தனது சகோதரர்கள் இருவரை, தனது இரகசியத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியமை

- இன்னும் பல பண மோசடிகள், காதல் லீலைகள், இரகசியத் தொடர்புகள் மற்றும் மிரட்டல்கள், வன்முறைகள் என்று இப்பட்டியல் நீண்டு செல்லும்.

ஆக, கருணா சுயநல பாதுகாப்புக்காக பிரதேசவாதத்தைத் து}க்கியிராவிட்டால், இப்போது மட்டக்களப்பு பிரதேசமே கதிகலங்கிப் போயிருப்பது குறித்து அவசியம் கவலைப்பட்டிருப்பார். ஆனால், மட்டக்களப்பு மக்கள் கதிகலங்கினாலென்ன, கண்ணீர் விட்டாலென்ன, தமிழர் வியாபாரங்கள் பாழாய்ப் போனாலென்ன, பறிபோனாலென்ன, யாருக்கு அவர்களைப் பற்றிக் கவலை? கருணா பிரதேசவாதம் மூலம் தன்னைக் காத்துக் கொள்ள முயன்றாரேயொழிய கிழக்கையல்ல. இதை இன்னும் ஒரு சிறுதொகை கிழக்கிலங்கை மக்கள் உணர்ந்துகொள்ளாது இருப்பது அதிசயமாக இருக்கிறது.

கிழக்கைப்பற்றிக் கவலைப்படாது, வடக்கின் விடுதலையை வென்றெடுப்பதாக இருந்தால், வடக்கு மட்டும் தனிஈழமாக மலர்ந்து, இருபது வருடத்துக்கு முன்னரே இரண்டாவது சிங்கப்பூராக மாறியிருக்கும். கிழக்கும் இணைந்த தமிழீழம் தான் தமிழரின் தாயகம் என்று உறுதியாக வன்னித் தலைமை இருந்ததால் மட்டுமே, இதுவரை இந்தக் கடுமையான போராட்டம். வடக்கை மட்டும் வென்றெடுப்பதே வன்னித் தலைமையின் நோக்கமாக இருந்திருந்தால், கருணா என்ற ஒரு தளபதியை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக்கூட வாய்ப்பிருந்திருக்காது. கருணா என்ற முரளீதரன், புலிகள் அமைப்பில் பால்குடியாக இருந்தபோதே, தமிழீழப் பிரச்சனை தீர்ந்து போயிருக்கும். ஆனால், கிழக்கும் தேவை, அதுவும் வடக்கின் சமஅளவு அதிகாரங்கள் படிமானங்களோடு ஒன்றாகத் தரவேண்டும் என்று அழுத்தம் கொடுத்த ஒருவர், ஈழத் தமிழரின் வரலாற்றிலேயே, வே.பிரபாகரன் ஒருவர் தான்.

1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற காலம் முதல், வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒன்றான தமிழர் தாயகம் என்று உரிமை கொண்டாடுவதில் தேர்தல் காலத்தில் பலர் குளிர்காய்ந்திருந்தாலும், வடக்கும் கிழக்கும் இணைந்த பிரதேசமே தமிழர் தாயகம் என்பதை, வெற்றியின் போதும் தோல்வியின் போதும், ஏன், இந்திய இராணுவம் கொடுரப் போர் புரிந்து, கிழக்கில் வரதராஐப்பெருமாளை முதலமைச்சராக பலவந்தமாக நியமித்து, வடக்கும் கிழக்கும் இரு மாகாணங்களாக ஒரு முதலமைச்சரின் கீழ் இயங்கும் என்று றீல் விட்டபோதும் கூட, வன்னித் தலைமை அடர்ந்த காட்டுக்குள் இருந்து, வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு பிரதேசமே தமிழர் தாயகமாக அமையமுடியும் என்று ஒற்றைக்குரலில் hPங்காரமிட்டது.

அப்போதெல்லாம், குலைக்காமல் வாலையாட்டிய சின்னன்கள், பதவியையும் புகழையும் பணத்தையும் சுகத்தையும் கண்டதும், நச்சுப்பாம்பாக உருமாறியிருப்பது சுயநலம் தவிர வேறெதுவுமில்லை. பிரதேசவாதம் என்ற மொட்டைத் தலைக்கும், பொட்டம்மான் என்ற முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது, நகைப்பிற்கிடமானது.

பொட்டம்மான் நிர்வகிக்கும் உளவுத்துறை, வடக்கு கிழக்கு குறித்த பிரதேசவாரியான எந்த முடிவையும் எடுப்பதில் பங்கெடுக்கப் போவதில்லை, பங்கெடுத்திருக்கவும் வாய்ப்பில்லை. நீதித்துறையும், நிதித்துறையும், சட்டத்துறையும், பாதுகாப்புத்துறையும் கூட வடக்கு கிழக்கை பிரிப்பதா இணைப்பதா என்ற வாதத்திலும் பிரதிவாதத்திலும் கலந்து கொண்டிருக்க வாய்ப்பேதுமில்லை. ஆக, கருணாவுக்கு ஆறாவது அறிவு, மீதி ஐந்தறிவின் வேகத்தில் செயற்பட மறுத்திருக்கிறது என்பதே நிஐம்.

எல்லாம் இப்போது நன்றாகப் புரிந்து விட்டது. பிரதேசவாதம் பொய், போராளிகளைக் கேட்டது பொய், கிழக்கை விட வடக்கை அதிகம் அபிவிருத்தி செய்ததென்ற கோசம் பொய், கிழக்கின் தனியான விடுதலை என்ற பிரச்சாரமும் பொய். பொய்களுக்கு ஆயுள் சிறிது என்பதை முரளீதரன் புரியாவிட்டாலும், தமிழ் மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள்.

இறுதியாக முரளீதரனுக்கு விரிந்திருக்கும் இரு வாய்ப்புக்கள், இரண்டே இரண்டு வாய்ப்புக்கள், தெளிவாகத் தெரிகின்றன:

1) பொது மன்னிப்பை ஏற்று, சரணடைந்து, சாவைத் தவிர்த்து, சரித்திரம் படைத்து, தமிழினத்திற்கு நிரந்தரப் புகழ் சேர்ப்பது.

2) நோர்வேயின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறி, ஈழப் போராட்டத்தை முற்றாகத் துறந்து, தனது மனைவி குழந்தைகளுடன் குடித்தனம் நடாத்துவது.

இந்த இரு வாய்ப்புக்களுக்கும் கூட, அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் காலஅவகாசம் மிக சொற்பமே. ஏப்ரல் 2, தேர்தல் நாள். ~தேர்தல் செல்லுபடியானது, பாராளுமன்றம் அமையும்| என்ற முடிவு அதைத் தொடரும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம். அதுவரைதான் அவகாசம் இருக்கிறது முரளிக்கு. இரண்டில் ஒரு முடிவை விரைவாக எடுத்து, விடைபெற வினயமாய் வேண்டுகிறோம்.

ஏனைய எல்லா முயற்சிகளுமே, தமிழினத்தின் நிரந்தரத் துரோகி என்ற பட்டத்துடன், ஈழத்தமிழர் வரலாற்றில் இன்னுமொரு ஈனப்பிறவியாகப் பதிவு செய்யப்படும் கோரநிலைக்கே கோலமிடும்.


அன்புடன்,
காவலு}ர் கவிதன்
ரொறன்ரோ, கனடா

நன்றி - தமிழ் நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Sri Lanka votes in tense election


<b>Voting is underway in Sri Lanka in an early election which is being seen as a referendum on the peace process with the Tamil Tiger rebels.</b>

The country has been in crisis since a bitter dispute erupted between President Chandrika Kumaratunga and Prime Minister Ranil Wickramasinghe.

The president called elections four years early.

Neither of the two main political parties is expected to win an outright majority in parliament.

But Mr Wickramasinghe sounded confident, when he arrived to cast his vote at a polling station in central Colombo soon after it had opened.

"I am certain people will vote for peace," he said.

"I am confident of securing a majority of seats."

Queues formed outside polling stations even before they opened, officials said.

Heavy security is in place for the vote with soldiers fanning out across the island nation.

For the first time there will be election monitors at every polling station in the country.


<b>Early elections </b>

For more than two years there has been rivalry between the president and the prime minister, who come from different political parties.

In a surprise move last November, President Kumaratunga took over the defence, interior and information ministries, effectively crippling the prime minister's government.

Then in February, the president called early elections, saying the ruling party had jeopardised national security in peace negotiations with the Tamil Tigers.

If there is a hung parliament the Tamil National Alliance, backed by the Tamil Tigers, may hold the balance of power.

Adding to the acute uncertainty, the Tamil Tigers have seen an unprecedented split after a breakaway commander, Colonel Karuna, said he wanted to form his own administration in the east to prevent discrimination by northern Tamils.

There are fears that fighting will break out between the rival rebel factions.

<b>Exodus</b>

The east of the country is already in turmoil as a result of the division.

Hundreds of Tamil businessmen, doctors and university staff have fled the area after anonymous leaflets were dropped warning Tamils who originate from the north should leave or else face being burnt to death.

Colonel Karuna has denied being behind the threats, but they were carried on the front page of a newspaper he controls, the BBC's Frances Harrison reports from Colombo.

One local businessman said he recognised the rebels who came to his house and ordered him to leave with only a few rupees in his pocket.

Several Jaffna Tamil doctors have also left the hospital in Batticaloa, prompting staff there to mount a protest.

Other people speak of Colonel Karuna's men coming to Jaffna Tamil shopkeepers, locking the shops, taking the keys away and telling them to go.

It looks as if it was an attempt to rid the east of Tamils who are not loyal to the breakaway commander, our correspondent said.

European Union election observers said they were concerned that significant numbers of people were being threatened in the east and they said they totally deplored such attempts at intimidation.

Even if Mr Wickramasinghe does receive a fresh mandate at the polls, President Kumaratunga will still be president for another year and so the unhappy cohabitation between the presidency and parliament is likely to continue.
நன்றி - http://news.bbc.co.uk
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
"High Scale Impersonations Taking Place in Jaffna- Anandasangaree

Bandula Jayasekara in Colombo, SLT 1.50 P.M Friday 2 April. TULF leader and Independent Candidate V. Ananddasangaree says that high scale impersonations are taking place in Jaffna with the same group of people going from booth to booth and casting other peoples votes. He told The Lanka Academic from Jaffna " The TNA/LTTE are transporting hundreds in buses. They would do even more if they have more vehicles. Even schoolboys are going and voting. They are voting on behalf of their fathers and grandfathers." The TULF leader said he had never seen this type of impersonations and mass scale rigging in Jaffna before. He accused the government for allowing the buses to ply freely with impersonators without taking any action. He said, " We warned that the LTTE had collected polling cards of the dead and the displaced much earlier and that they were planning to do this. It is happening right now under our own nose. Presiding officers are also helping them. May be they are helpless. This is why we asked for officers from Colombo to be sent here."
The TULF leader said that elections in Jaffna must be made null and void.

Yesterday, well informed Tamil sources in Jaffna said that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had planned a mass scale vote rigging to ensure the victory of the TNA by casting the vote of nearly 90,000 dead and displaced people. They said that the LTTE would use nearly 5000 cadres to carry the vote rigging exercise. A candidate from a small party said that the LTTE had already warned local monitors not to interfere with their activities. He pointed out that the LTTE is determined to defeat the leader of the TULF V. Anandasangaree and members of other parties to ensure the representation of LTTE in parliament.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Small Parties May Benefit in Sri Lanka

Associated Press, Thu April 1, 2004 22:27 EST . TIM SULLIVAN - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) Soldiers were out in force for parliamentary elections Friday seen as a showdown between Sri Lanka - 's president and prime minister but also likely to give increased power to smaller parties in the war-savaged country. ``I am confident that the people will vote for a stable government,'' Wickremesinghe, the architect of Sri Lanka - 's peace bid with separatist Tamil Tiger rebels, said.
Voting picked up after officials formally declared the polls open at schools and government buildings which were turned into polling booths. At one polling booth in Colombo, 182 voters cast their ballot out of 1,800 registered voters in the first half-an-hour hour.

In eastern Sri Lanka - , ravaged by two decades of civil war, pre-poll violence left at least two people dead, including a candidate backed by Tamil Tiger rebels.

An uneasy tension prevailed in the area's main town, Batticaloa. Heavily armed soldiers were stationed every 100 yards in the Tamil-majority town.

In the Tamil heartland of northern Sri Lanka - , about 20,000 Tamil voters from remote rebel-held areas camped overnight to be able to cast their ballots at booths set up in areas between lands held by the rebels and the government, TamilNet Web site that reports on Tamil affairs said.

Opinion polls indicated that neither of Sri Lanka - 's two main parties were likely to win a majority in the 225-seat Parliament, which would force them to turn to smaller parties ranging from one tied to the Tamil Tiger rebels to one led by Buddhist clergymen to forge a coalition or get legislation passed.

The Sri Lankan media call the parties ``kingmakers,'' and while Sri Lanka - has long been accustomed to coalitions the most recent parliament was governed by one the role of small parties is likely to grow as top politicians struggle for a political mandate to resolve the civil war.

``In a situation of a hung Parliament, the importance of minority parties will be reinforced,'' said Paikiasothy Saravanamuttu, a political analyst with the Center for Policy Alternatives.

A fragile truce is holding between the government and Tamil Tiger rebels, who fought to try to carve out a separate homeland for minority ethnic Tamils who have long faced discrimination by the Sinhalese majority.

The election is, in many ways, a showdown between President Chandrika Kumaratunga and Wickremesinghe, and their rival approaches to ending the war.

Wickremesinghe, who signed a February 2002 cease-fire agreement, says he's the only politician who can negotiate with the Tigers. But the president takes a more hardline approach, and insists the prime minister has made too many concessions to the rebels.

Political violence has been rising in recent days in Sri Lanka - , although it remains far less rampant than in the last election in 2001, when 61 people were killed in political attacks.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
யாழ்/yarl Wrote:மணிமாறனின் கருத்துடன் நான் ஒத்துப்போகிறேன்.அதே சமயம் 20 வருட போராட்ட ஆதரவை ஒரு சிலரது கருத்து குழப்பிவிடும் என்பது என்னால் ஏற்கமுடியாதது.

அப்படி குழம்புவோர் என்றும் அடிக்கடி குழம்பிக்கொண்டிருப்பவர்கள்.அவர்களது ஆதரவு இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன....

உங்கள் கருத்துக்கு நன்றி. அதேவேளை இங்கு சில விடயங்களை நான் குறிப்பிட விரும்புகின்றேன். பெரும்பாலும் பெரும்பாலான பொதுமக்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறிவியல் புூர்வமாக தங்களது முடிவுகளை மேற்கொள்வதில்லை. அவர்கள் உணர்வுகளுக்கும் தங்களின் சூழலில் உடனடியாக காணும் கேட்கும் செய்திகளுக்குமே தங்களது பிரதிபலிப்பைக் காட்டுவார்கள். தர்க்க ரீதியாக சிந்தித்து செயல்படுபவர்கள் இந்த விடயத்தை மக்களுக்கு தெளிவாக தொட்டுக் காட்டும்வரை அவர்கள் சிந்தித்து செயல்படத் தொடங்குவதில்லை. ஆனால் இந்த சிந்திக்காது செயல்படும் அவர்களது செயல்பாட்டால் ஏற்படும் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது.

உதாரணத்திற்கு அண்மையில் இசுப்பானியாவில் நடந்த தேர்தலில் வாக்களிப்புக்கு ஒருநாளின் முன்னர் நடந்த குண்டுவெடிப்பின் பின்னால் மக்களின் வாக்களிப்பின் சடுதியான மாற்றத்தை நீங்கள் அவதானித்திருக்கக் கூடும். அது இன்று ஐரோப்பாவின் யாப்பை சீர்திருத்தியமைப்பதுவரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, மக்கள் எப்படி பொதுவில் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

ஏன் அங்கு போவான் ‘நம்ம’ கருணா விடயத்திற்கு வருவோமே. கருணாவின் அடியாட்களாக இன்றுள்ள பலர் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு தங்களது உயிர்களை துறப்பதற்குக்கூட தயாரான நிலையில் போராட்டத்தில் இணைந்து அவ்வாறே பலகாலம் செயற்பட்டு வந்தவர்கள். இன்று அவர்கள் எப்படிச் செயல்படுகின்றார்கள்? கருணாவால் என்ன கருத்துக்கள் விதைக்கப்படுகின்றதோ அதை தங்களில் வாங்கி அதற்கு செயல்வடிவம் கொடுக்கின்றார்கள். அவர்களில் பலர் தாங்கள் ஏன்போராட்டத்தில் இணைந்தோம், எப்படியாக இந்தப் போராட்டத்தால் இந்த உயர் நிலையை அடைந்தோம், தாங்களின் இப்படியான செயல்பாட்டால் எத்தகைய விளைவுகளை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் எதிர்கொள்ளப்போகின்றது என்ற ரீதியில் அறிவுபுூர்வமாக சிந்திக்கும் நிலையில் இல்லை. உணர்வுகளுக்கு அடிமையாக அலைந்து திரிகின்றார்கள். இப்படியான உசுப்பல்களுக்கு அலைபாய்வது மானிட இயல்பு. அவர்களுக்கு ஒருவர் ஆறுதலாக இருந்து விளக்கமாக தர்க்க ரீதியாக உண்மையை எடுத்துச் சொல்லும் வரை அவர்களில் பலர் இப்படித்தான் இருக்கப்போகின்றார்கள்.

எனவே நாங்கள் கருத்துக்களை மக்கள் முன் விதைக்கமுன்னர் மிக்க கவனமாக இருக்கவேண்டும். அப்படி விதைப்பவர்கள்பற்றி விழிப்பாக இருந்து அவதானிப்பது அவசியமாகின்றது.

நாங்கள் மேற்கத்தைய சூழலை வைத்து எங்களை ஒப்பிட்டுப்பார்க்கின்றோம். நாங்கள் ஒன்றை இங்கு நிச்சயமாக விளங்கிக் கொள்ளல் வேண்டும். அதாவது நாங்கள் இன்னும் மேற்கத்தைய சூழலையொத்த அமைதியான நிலையை அடையவில்லை. நாங்கள் இன்னும் களத்தில்தான் நிற்கின்றோம். அவர்களையொத்த நிலையை அடையும் வரை சில கட்டுப்பாடுகளை வரையறைகளை வகுத்துக் கொள்ளல் தவிர்க்க முடியாதது.

ஏன் இவர்கள் இந்த நிலையை அடைந்த வரலாற்றை சற்றுப் புரட்டிப்பார்த்தோமானால் அவர்கள் எப்படி எப்படியான முறைகளை கையாண்டு இப்படியான நிலையை அடைந்தார்கள் என்பதனைப் புரியக் கூடியதாக இருக்கும். இன்றுள்ள சூழ்நிலையில் எம்மக்களில் ஏற்படும் சிறு குழப்பங்களும் பாரிய விளைவுகளை, பின்னடைவுகளை ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் சந்திக்கும். ஏனெனில் நாம் இன்று மலையின் உச்சியில் நிற்கின்றோம் ஒரு சிறிய அசைவும் எங்கள் பயணத்திசையின் விளைவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. அதனால் இது மட்டில் நாம் அசட்டைத்தனமாக இருந்து விடமுடியாது.
Reply
அமைதியாய் நடந்து முடிந்த இலங்கை தேர்தல்: 75 சதவீத வாக்குப் பதிவு

கொழும்பு:

பலத்த பாதுகாப்புக்கு இடையே, எந்த விதமான அசம்பாவிதங்களும் இன்றி இலங்கை நாடாளுமன்றத்துக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது.


காலை 6.30 மணிக்குத் தொடங்கிய இந்த வாக்குப் பதிவு மாலை 3.30 மணிக்கு நிறைவடைந்தது.

கடந்த 4 ஆண்டுகளில் நடந்த மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலையொட்டி இலங்கை முழுவதுமே மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பல இடங்களில் வாக்குச் சாவடிகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டளித்தனர்.

225 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடும் கட்சிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி, அதிபர் சந்திகாஜனதா விமுக்தி பெரமுனான் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகளின் ஆதரவு கொண்ட தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவையே மிக முக்கியமானவை.

மொத்தம் 24 கட்சிகளைச் சேர்ந்த 6,024 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு இலங்கையில் ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

யாழ்பாணம் உள்ளிட்ட வட இலங்கையில் புலிகள் மற்றும் ராணுவம் வசம் உள்ள பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடந்தது. வாக்களிப்பதற்காக நேற்றிரவில் இருந்தே வன்னி பகுதியைச் சேர்ந்த சுமார் 20,000 வாக்காளர்கள் இந்த எல்லைப் பகுதியில் குவிந்துவிட்டனர்.

மேலும் இன்று காலையில் தங்களது பஸ்கள் மூலம் வாக்காளர்களை புலிகள் இந்தப் பகுதிக்கு அழைத்து வந்தனர். இப் பகுதியில் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டுப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பில் வாக்களித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நிருபர்களிடம் பேசுகையில், அமைதிக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். எனக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்கும் என்றார். அதிபர் சந்திரிகா கம்பகா மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

முன்னதாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பேசிய சந்திரிகா, தேர்தல் அமைதியாக நடக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளேன என்றார்.

வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளையே முடிவுகளும் தெரிந்துவிடும்.

இத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்தல் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. இதனால் சிறு கட்சிகளின் ஆதரவுடன் தான் அடுத்த அரசு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 முதல் 20 இடங்களைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் தேசியக் கூட்டணியும் அடுத்த ஆட்சி அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நன்றி - தட்ஸ் தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இலங்கைத் தேர்தல் : மதியம் வரை 62 விழுக்காடு பதிவு!

வெள்ளி, 2 ஏப்ரல் 2004

இலங்கை நாடாளுமன்றத்திற்கு இன்று நடைபெற்றத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதியில் மதியம் வரை 62 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 30 வாக்குச் சாவடிகளிலும், கிழக்கு வடமொராச்சியில் உள்ள 32 வாக்குச் சாவடிகளிலும் இந்த அளவிற்கு வாக்குப் பதிவு நடந்துள்ளதாக புலிகள் ஆதரவு இணையதளமான தமிழ்நெட் கூறியுள்ளது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டை பரிச்சான், மகேந்திரபுரா மற்றும் முட்டூர் பகுதிகளில் இன்று மதியத்திற்குள் 75 விழுக்காடு வாக்குகள் பதிவாகிவிட்டதாக தேர்தல் அதிகாரி காமினி ரோட்ரிகோ கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள சுண்ணாகம், மல்லாகம் ஆகிய இடங்களில் இன்று மாலை 4 மணி வரை 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளதென செய்திகள் கூறுகின்றன.

கிழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வாக்குப் பதிவு சுறுசுறுப்பாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாக்குப் பதிவு மந்தமாக இருந்ததென செய்திகள் கூறுகின்றன.

நன்றி - வெப் உலகம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 23 Guest(s)