08-08-2003, 12:36 PM
திருகோணமலை மாவட்டத்தில் புலிகளின் இராணுவமுகாம்
குறித்து அமெரிக்கா கவலை
திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ முகாம் ஒன்றை வைத்திருப் பதன் மூலமும், ஷஅரசியற் படுகொலை கள்| கொள்கையைக் கடைப்பிடிப்ப தன் மூலமும் விடுதலைப் புலிகள் சமா தானச் செயல்திட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை உதாசீனம் செய்கின்ற னர் என்று அமெரிக்க இரஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் றீக் கர் கவலை தெரிவித்துள்ளார். பயங் கரவாதத்தைக் கைவிடுமாறும், அரசி யல் கொலைகளை நிறுத்துமாறும் அவர் புலிகளைக் கேட்டுள்ளார்.யுத்தநிறுத்த நிபந்தனைகளைப் புலிகள் ஏற்றுச் செயற்பட வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரி வித்துள்ளார்.றீக்கரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-சமாதானப் பேச்சுக்கள் உரிய காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க் கிறது. வடக்கு - கிழக்கில் இடைக் கால நிர்வாகமொன்றை ஏற்படுத்துவ தற்கு வகைசெய்யும் யோசனையை இலங்கை அரசு கடந்த ஜூலை 17 ஆம் திகதி புலிகளுக்கு வழங்கியி ருந்தது. அதனைப் புலிகள் இன்னும் மீளாய்வு செய்கின்றனர். ஆக்கபுூர்வ மாகவும், சமரச விருப்புடனும் முயற்சி களை மேற்கொண்டால் பேச்சு மூல மான ஒரு தீர்வு கிடைப்பது சாத்திய மானது. இதுவரை புலிகளின் அரசியல் எதிரிகள் எனப்படுவோரும், புலிகளுக் கெதிரான தகவல் கொடுப்போருமாக மூன்று டசின் பேர்களுக்குமதிகமான வர்கள் இலங்கையில் இவ்வருடத்தி னுள் படுகொலை செய்யப்பட்டுள்ள னர். புலிகள் வைத்திருக்கும் முகாம், 2002 பெப்ரவரியில் செய்து கொள் ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த மீறலா கும் என்று கண்காணிப்புக் குழு தெரி வித்துள்ளது.- இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : உதயன்.
நிச்சயமாய் கவலைப்பட வேண்டும் தான். அவர்களின் தளம் அங்கிருந்தால், தாங்களால் தளமமைக்க முடியாதே என்ற கவலையா? ஒருகண்ணில் எண்ணெயும் மறுகண்ணில் சுண்ணாம்பும் வைத்துக் கொண்டு பார்க்கும் வல்லரசு பயங்கரவாதி பயமுறுத்திப்பார்க்கிறதா? யப்பானில் புூசிக் கொண்ட கரி போதாதா? காலம் பதில் சொல்லட்டும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

seelan

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->