சிறிது நேரம் சிவாவை பார்த்த சிறி தொடர்ந்தான் இல்லையடாப்பா சாந்தி தன்ரை வாழ்க்கையிலை அவன் ரவியை கலியாணம் செய்ததை விடவேறை எந்த தவறையும் வெசய்யேல்லை அது ஏதோ தெரியா தனமா நடந்திட்டிது அதை தவிர்த்து பாத்தா அந்த பிள்ளையிலை குணத்திலையோ மற்றபடி பழகிற விதங்களிலையோ எந்த குறையும் இல்லை.
இப்ப ஒருவருசமா நீயும் நல்லா அந்த பிள்ளையோடை பழகிறாய அதுகின்ரை குணம் நடை உனக்கும் பிடிச்சிருக்கும்;. இனி அந்த பிள்ளையும் இப்பிடியே இஞ்சை தனியா எவ்வளவு கால்துக்கு இருக்க போகு பேசாமல் நீயே அந்த பிள்ளையை கலியாணம் செய்யன்.
ஒண்டும் தப்பா நினைக்காதை அந்த பிள்ளையின்ரை குணத்திற்கு அந்த பிள்ளை விரும்பினால் நானே செய்திடுவன் ஆனால் உனக்கே தெரியும் எனக்கிருக்கிற குடும்ப பொறுப்பு பிரச்சனையள் இப்போதைக்கு கலியாணம் எண்டதை நான் நினைச்சு பாக்கஏலாது உனக்கென்ன செல்லப்பிள்ளை பொறுப்பு கிடையாது அதோடை சாந்திக்கும் இவ்வளவு நாழும் ஒடியோடி உதவி செய்தனி உனக்கு பிடிச்சிருந்தா அந்த பிள்ளையிட்டை கேட்டுபார்.
எதுவும் பேசாமல் கேட்டு கொண்டிருந்த சிவா ஒரு பெமூச்சுடன் எனக்கும் அப்பிடியொரு யோசினை இருக்குதான் எனக்கு சாந்தியை மாதிரி ஒருமனிசி கிடைச்சா சந்தோசம் தான். ஆனால் சாந்தி எப்பிடி என்னோடை பழகுதெண்டு எனக்கு தெரியும் அதாலை நான் என்ரை விருப்பத்தை சொல்லப்போய் கடைசியா எங்களிற்கை இருக்கிற நட்பான உறவும் இல்லாமல் போடுமோ ? எண்டிற பயத்திலை தான் நான் ஒண்டும் உதைப்பற்றி கதைக்கிறேல்லை.
முதல் நடந்த ரவியின்ரை பிரச்சனையளிலை இருந்து இப்பதான்: கொஞ்சம் அவா விடுபட தொடங்கிருக்கிறா அதுக்கை போய் நான் என்ரை பிரச்சனை சொல் விரும்பேல்லை அது ஏதோ அனுதாபத்திலை தன்னிலை வந்த காதல் எண்கூட சாந்தி நினைக்கலாம் எதுக்கும் சாந்தியும் ஏதோ சொல்ல வேண்டுமெண்டவா வரட்டும் பாப்பம். என்று சொல்லி கொண்டிருபக்கும்போதே வாசல் அழைப்பு மணி ஒலித்தது.
இந்தா வந்திட்டா என்ற படி சிவாபோய் கதைவை திறந்தான் .சாந்திதான். வாங்கோ உங்களை பற்றித்தான் கதைத்து கொண்டிருந்தனாங்கள். என்று வரவேற்க . என்ன என்னை பற்றியோ என்ணெண்டு சொல்லுங்கோ என்றபடி சாந்தி உள்ளே நுளைந்தாள்.
இருங்கோ முதலிலை நீங்கள் சொல்ல வந்ததை சொல்லுங்கோ பிறகு நான் சொல்லுறன் சரி என்ன குடிக்கிறீங்கள் யுூஸ் இல்லாட்டி தேத்தண்ணி என்ன வேணும் என்றபடி சிவா சமையலறைக்குள் போக.
இருங்கோ குளிருது சுூடா எல்லாருக்கும் நான் தேத்தண்ணி ஊத்திறன் என்றபடி சாந்தி அடுப்படிக்குள் நுளைய. சரி தேத்தண்ணியை குடிச்சபடி சாந்தி சொல்ல வந்த விசயத்தை கேப்:பம் என்றபடி சிறியும் அடுப்படிக்கள் நுழைந்தான்.
சில வினாடிகளில் தேனீர் தயாரித்து சிறிக்கும் சிவாக்கும் வழங்கியபடி இண்டைக்கு அம்மான்ரை கடிதம் வந்தது தங்கச்சிக்கு கனடாவிலை சம்பந்தம் ஒண்டு சரி வந்திட்டுதாம் இந்த மாதமளவிலை தங்கச்சி கனடா போடுவாளாம்.
என்ரை பிரச்சனையளையும் நான் விளக்கமா அவைக்கு இதுவரை சொல்லேல்லை.
நானும் இனி எவ்வளவு காலம் இஞ்சையிருந்து இப்பிடியே காலத்தை ஓட்டுறது அதுதான் நான் என்ரை இங்கத்தைய விசாவை திருப்பி குடுத்திட்டு ஊருக்கு போய் அம்மா அப்பாவோடை அவையின்ரை கடைசிகாலம் தனிய அவையை கஸ்ரபட விடாமல் அவைக்கு உதவியா போய் ஊhரிலை இருக்கிறதெண்டு முடிவெடுத்திட்டன் அது எனக்கும் கொஞ்சம் ஆறுதலாவும் மாறுதலாவும் இருக்கும்.அதுதான் உங்களிட்டை சொல்லிப்போட்டு போகிற அலுவலை பாப்பம் எண்டு முடிவெடுத்திட்டன்.
சிவாவும் சிறியும் ஒருவரை ஒருவர் பாத்து கொண்டனர். மூவரும் சில செக்கன்கள் எதுவும் பேசவில்லை சிவாதான் அந்த மௌனத்தை உடைத்து நல்லது சாந்தி நீங்கள் எடுத்த முடிவு சரி ஆனால் அதுக்கு விசாவை திருப்பி குடுக்க வேணுமெண்டு அவசரம் இல்லை ஏனெண்டால்.உங்கடை நன்மைக்குதான் சொல்லுறன்.
நீங்கள் பிரான்ஸ் விசாவேடை போங்கோ போகேக்கை அங்கை கொழும்பிலையும் உங்களிற்கு பிரச்னை இருக்காது அதோடை ஒரு நேரம் உங்கடை மனது மாறி சில நேரம் பிரான்சிற்கு வாறதெண்டாலும் வரலாம்.நான் சொல்லுறது சரிதானே சிறி என்று சிறியின் பக்கம் திரும்பி கேட்டான் .சிறி என்ன சொல்லுறதெண்டு தெரியாமல் ம் ம் ம் ...என்று தலையை மட்டும் ஆட்டினான்.
சில நேரங்களின் பின் சாந்தி விடை பெற்று கொண்டு போனதன் பின்.சிவாவை கோபமாய் பாத்த சிவா அப்போதை ஏதோ சொல்லுறணெண்டு போட்டு சாந்தி ஊருக்கு போறனெண்டதும் கோயில் மாடு மாதிரி தலையை ஆட்டுறாய். உனக்கு கதைக்க தயக்கமெண்டால் உன்ரை விருப்பத்தை நான் கேட்டிருப்பன்தானே என்று சத்தமாகவே கேட்டான்.
இல்லையடா சிறி சாந்தி சொல்லுறதும் சரி ஊருக்கு போகட்டும் போய் அவாவின்ரைஅம்மா அப்பாவை பாக்கட்டும் அது அவாக்கும் ஒரு மாறுதலா இருக்கும். இவ்வளவு பிரச்சனையும் என்ன நடந்தது எண்டு முழுதா தெரியாமல் அவையும் யோசிச்சு கொண்டிருப்பினம். ஆனால் அதுக்காக என்ரை விருப்பத்தை சொல்லாமல் விடமாட்டன் அதற்கான நேரம் வரேக்கை கட்டாயம் சொல்லுவன் அதுக்கு சாந்தி என்ன முடிவெடுத்தாலும் அதை நான் எற்று கொள்ளுவன்.
சிறி தலையை ஆட்டியபடி டேய் உனக்கு என்ன விசரே சாந்தி ஊருக்கு போகட்டுமெண்டிறாய். பிறகு உன்ரை விருப்பத்தை சொல்போறணெண்டிறாய் அதுக்கான் நேரம் வரேல்லையெண்டிறாய். எனக்கு ஒண்டும் விழங்கேல்லை அவா பிளேனிலை பறக்கேக்கை நீ கீழை நிண்டு I LOVE YOUUUU........ எண்டு கத்த போறியா???
சிவா சிரித்தபடி அதெல்லாம் உனக்கு விளங்காது மச்சான் பொறுத்திருந்து பார்