கணணிப்பித்தன்/Kanani Wrote:சரி IQ என்பது ஒரு பிரச்சினை அல்லது தீர்வை அணுகும் முறையும் உள்ளார்ந்த கருத்துக்களை விரைவாக கிரகித்துக்கொள்ளும் தன்மையையும் குறிக்கும் என பொதுவாகக் கூறலாம்
மனிதமூளையில்......
ஒரு பெண்ணுடைய மூளையின் அளவு ஆணிண் மூளையினதின் 90 வீதமாகும்
பொதுவாக மூளையின் ஞாபகத் திறனை அதிலுள்ள நரை நிறப்பொருளின் அளவை வைத்தே தீர்மானிக்கலாம். இதன் அளவு அதிகரிக்க மூளையின் மடிப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ( அப்பதான் மண்டையோட்டை பெரிதாக்காமல் மேற்பரப்பை அதிகரித்து நரை நிறப்பொருள் வளர வழிசெய்யலாம் :wink: )
ஆணிண் மூளை அமைப்பு விரைவான தகவல் (கணத்தாக்கு) பரிமாற்றத்தைக் கொண்டது
ஒரு கரு உருவாகி முதல் 3 மாதங்களுக்கு ஆண் பெண் இரு கருவினதும் மூளை ஒரே மாதிரியே இருக்கும் ஆனால் பின்னர் ஹோமோன்களின் விளையாட்டுத் தொடங்கிவிடும்
இப்படியாக வளரும் முளையில் ஆணின் மூளை விரைவான துாண்டலும், மனதினால் கணிப்பீடுகளைச்செய்வதிலும், வேகத்தை அறிவதிலும், முப்பரிமாண பொருள்களையும் அவற்றின் தொழிற்பாடுகளை விளங்கிக்கொள்ளலிலும் பெண்ணிண் மூளையை விட சிறப்பான தன்மையைக் காட்டுகின்றன!
பெண்ணின் மூளை நினைவாற்றல், மனிதத்தொடர்பு மற்றும் உறவுகளிலும், உணர்ச்சி சம்பந்தமான விடயங்களிலும், கலையுணர்வுடன் கூடிய தொழிற்பாடுகளிலும், அழகை ரசிப்பதிலும், மொழி மற்றும் மொழி சம்பந்தமான விடயங்களில் ஆணிண் மூளையைவிட சிறப்பாக தொழிற்படுகின்றன!
இப்பொழுது புரிகிறதா பெரும்பாலும் ஆண்கள் பொறியியல், கார் மற்றும் விமானம் போன்ற வாகனங்களை செலுத்தல், கட்டட நிர்மானத் தொழில் போன்ற பகுத்தாயும் தொழில்களில் ஈடுபடுவார்கள் அதே நேரம் பெண்கள் மொழி கலை சம்பந்தமான துறையிலும், குடும்பம் பராமரித்தல் போன்ற தொழில்களிலும் பெரும்பாலும் ஈடுபடுவர்
இவை உங்கள் சந்தேகங்களை விளக்கியிருக்கும் என நினைக்கிறேன் இன்னொரு விடயம்
அண்மையில் இங்கு பி பி சி நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட IQ - Test for the Nation எனும் நிகழ்வின்போது ஐக்கிய இராச்சியத்தின் பல்லாயிரக்கணக்காண மக்கள் பங்கு கொண்டனர் அதன் முடிவில் ஸ்கொட்லாந்தும் ஐயர்லாந்தும் IQ இல் முன்னனி வகித்தன அத்துடன் ஆண்களின் IQ பெண்களை விட அதிகம் என்பது வழமைபோல் நிரூபணமானது
ஆண்களும் பெண்களும் மூளையைப் பாவிக்கும் விதத்தில் வித்தியாசமிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆண்களின் மூளை பெண்களின் மூளையை விட 130கிராம் நிறை கூடியது.
ஆண்களிடம் பகுத்து ஆராயும் தன்மையும் மனதை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும் கூடுதலாக உள்ளன.
இதே போலப் பெண்களிடம் நினைவாற்றல், அனுசரித்தல்... போன்ற தன்மைகள் கூடுதலாக உள்ளன.
அதற்காக ஆண்கள் பெண்களை விட மேலானவர்கள் என்றோ பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள் என்றோ சொல்ல முடியாது.
எப்படி ஒரு குழந்தை வளர்க்கப் படுகிறதோ,
எப்படி ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வியும் அதையடுத்த வேலைக்கான கல்வியும் தொடர்கிறதோ,
எப்படி ஒரு குழந்தையின் சுற்றாடல் அமைந்துள்ளதோ..
எப்படியான கூட்டாளிகள் ஒரு குழந்தைக்குக் கிடைக்கிறார்களோ..
அதைப் பொறுத்தே அந்தக் குழந்தையின் அறிவும் நடத்தைகளும் செயற்பாடுகளும் தொடரும்.
இதன் அடிப்படையில்தான் ஆண் குழந்தையாயினும் சரி பெண் குழந்தையாயினும் சரி ஒரு குழந்தையின் கெட்டித்தனம் மிளிரும். இது நரம்பியல் விஞ்ஞான ஆய்வாளர்களின் கண்டு பிடிப்பு.
கெட்டிக்கார ஆண்களும் உள்ளார்கள். கெட்டிக்காரப் பெண்களும் உள்ளார்கள்.
அதே போல கெட்டித்தனமற்ற ஆண்களும் உள்ளார்கள். கெட்டித்தனமற்ற பெண்களும் உள்ளார்கள்.