Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராளிகள் படைப்பு
#61
யாருமற்ற ஊருக்குள்
ஓவென்று இரைகிறதே காற்று.
என்ன நடந்தது இங்கு
எல்லோரும் எங்கு போய்விட்டனர்?
தெருவில் புழுதியளையும் சிறுவரெங்கே?
அல்லிப் புூவாட்டம்
ஆற்றில் குளித்தெழும் பெண்களைக் காணோமே.
உலாவரும் கொம்பன் மாடுகளும் தொலைந்தனவா?
பாடும் குயில்களும் கிளிகளும் பறந்தனவா?
சலசலத்தோடும் இரணைமடு வாய்க்காலின்
சந்தன நீரை உறுஞ்சியவன் எவன்?
நெற்றியிலிட்ட ஒட்டுப் பொட்டாய்
நிலவுவருமே
எவன் களவெடுத்துப் போனான் அதை.
காடதிரக் கேட்குமே காத்தான் கூத்துப்பாட்டு
அண்ணாவியின் வாயை அடைத்தவன் யார்?
அழுத நாளிற் கூட கலகலவென்றிருந்த ஊருக்கு
எவரிட்ட சாபமிது?
கண்பட்டுப் போனதோ கற்பகவிருட்சம்?
கட்டிய கச்சையை அவிழ்த்து ஏன் மேலாக்குப் பிடிக்கிறனர் எல்லோரும்.
சிறையிருந்த போதே சிரித்தவன்
ஒப்பந்தம் என்றதும் உருகிப் போனார்களா?
ஓமந்தைக்கு அப்பாலான உலகில்
தங்கமழை பொழிவதாக யார் சொன்னது?
மூச்சுவிடக் காற்றைத் தவிர
எல்லாவற்றுக்கும் தடையிருந்தது நேற்று.
எவரும் அழவில்லையே அப்போது
வரும்பகையெதிர்க்கும் வல்லமையுடன்.
வீதி திறந்தும் ஏனிந்த விபாPதம்.
இடிதாங்கி விட்டு இருக்கிறது மாங்குளம்
தேகமெங்கும் குண்டுபட்டும்
போகப் புறப்படவில்லையே புளியங்குளம்
இவர்களுக்கு மட்டுமேன் இத்தனை அவசரம்?

மாலிகா
Reply
#62
வெள்ளெருக்கை மேவும்
மல்லிகையின் வளர்வாக
இந்த மண்ணேன் இப்போது மகிழ்கிறது?
தாயற்று வெம்பும் குழந்தையின் மனதோடும்
தாகங்கள் தீராத முகங்களோடும்
தவிப்பு மேலிட அலைவுற்ற காலங்களின் முடிவாய்


நீங்களற்ற
எமது நகரம் சுமந்த வதைகளும்
வலிந்த புன்னகைகளும் சிதையேறும் கணங்களாக
உங்களின் வரவு நிகழ்கிறது.
சாட்சுவதமான வாழ்வின் மிளிர்வை
உங்கள் காலடிகளில் இருந்து ஏற்றுவோம்.


உயிரணுக்கள் நோக
எம்மில் மோதிய கொடூர விழிகளின் தகிப்பு
தணிந்தோயாப் பொழுதிலும்
உங்கள் நிழல்கண்டு குளிர்வுறுவோம்.


தொன்மங்களாகிப் போகும்.
ஒரு விடுதலையின் படிமங்கள் துலங்க
சித்திரங்கள் நிலையென வரையலாகும் பொழுதுகள்
விழியுருக்குமெனிலும்
ஆத்மாவின் நிறைவு
அதில் உண்டல்லவா?
Reply
#63
வெண்புறாவே
மீண்டும் வரவின்
இன்ப ஒலிகள் காதில் கேட்கிறது.
இருபுறத்தின் வேட்டொலிகளும்
மெல்லத் தணிந்து நிசப்தம் ஆகிவிட்டது.
வண்ண முழு நிலவை கடற்கரை மணலில்
இளம் உள்ளங்கள் இரசிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
மனித சஞ்சாரமற்ற
உறங்கிப் போயிருந்த பல
தெருக்களில் அச்சத்துடன் சிலர் உலாவருகின்றார்கள்.
இன்னும் பச்சை உடைகளும்
வீதித் தடைகளும் அகற்றப்பட வில்லை.


குடிசைகளுள் உறங்கிக் கொண்டிருக்கும்
உயிருள்ள எலும்புக் கூடுகள்
கண்களில் சிறு பிரகாசம்.
உணவு வண்டிகள் பல வரும் என்ற
மகிழ்ச்சிப் பிரகாசம்.


பல வீதிகளுக்கு கூட சிறு கனவு:
தங்கள் மீது
இனியாவது,
புழுதியடங்குமா?
என்றுதான
அம்பாப் பாடல்களின்
இன்னொலிகள் கேட்குமென்று.


முகில்களின் சந்தோசப் பிரகாசிப்பில்
பறவையினங்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றன.
காற்றினை அடைக்கும்
கொடூர ஒலியினை எழுப்பும்
போர்ப் பறவைகள் இனி
உலாவராது என்ற எதிர்பார்ப்பில்
எல்லா மகிழ்வும்
வெண்புறாவின் சுதந்திரப் பறப்பிலேயே உள்ளது.
Reply
#64
சேது....நல்லது அவர்களின் படைப்புக்கள் அவர்களின் பெயர் சொல்லும்..இதையே கவிதைப்பகுதிக்குள் தனித்து ஒரு தலைப்பில் விட்டிருந்தால் இக்களம் அவர்களுக்கும் ஒரு போர்களமாகவன்றி கலைக்களமாக விளங்க உதவியிருக்கும்! அவர்களின் படைப்புக்களும் பலகதை பகிர உதவியிருக்கும் அத்துடன் அவர்கள் உணர்வுகள் வெளிப்படவும் உதவியாக விருக்கும்! அது மற்றவர்களுக்கு பாடமாகவும் விளங்குமல்லவா.....!
கவனிக்க......!
:twisted: Idea :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#65
உண்மைதான் மோகன் செய்ய தவறிவிட்டார்போலும். ஆகவே அவர்களின் படைப்புகளை யாழ் இனையத்தினுடாக உலகறியவைப்போம் என்ன சொல்லுறீங்கள் குருவி
Reply
#66
குலை குலையாய் காய்த்த மரம்
குருவிக்கும் அணிலுக்கும் கொடுத்தமரம்
தம்பி பவான் ஒரு பழம் பறிக்கவே
ஐயா அவனுக்கு அடிக்க
அன்று சிரித்த மரம்
இன்று எலும்புக்கூடாய் என்னை பார்க்கிறது.


விறகுக்காய் நிற்பதாய்
நிற்குமிந்தக் கொய்யாவுக்கருகில்
செல்லமுடியாது.
தொட்டு வருடவோ
கிளை சுள்ளி முறிக்கவோ முடியாது
அருகில் மிதிவெடிகள
Reply
#67
எமக்கென்றொரு வீடு
எத்தின தடவை மேஞ்சாச்சு;
ஒழுங்கில்லாத இடம் ஒண்டுமேயில்லை.
தலைவாசலும் அப்படி.
தலைவைச்சு படுக்கிற இடமும் அப்படி.
நடு அறைக்குள்ள இன்னமும் கறையானும் புத்தும்.
அடி விறாந்தையிலதான் கொஞ்சம் ஆறுதல்.
அதுக்கும் பிரச்சனையாத்தானிருக்கு.
ஒழுக்கில்லாத இடம் ஒண்டுமில்லை.


காத்து கச்சானாய் வந்து கலைச்சுது.
கொண்டாலாய் வந்து கூரையைப் பிரிச்சுது.
சோழகம் எண்டும் வந்துது.
பந்தல் புரட்டி பனங்காயுறுட்டி விசாகமெண்டு
மாறி மாறிப் புரட்டி எடுத்து,
புயலெண்டு வந்து ஒரு பக்கத்தைப்புடுங்கி
மாரி மழையாய் சில காலம்
பேயறைஞ சு பேசி
போன முறையுமொருக்காக் கூரையொழுகினது.
போட்டுத்தாறதெண்டு.
கூரைக்கு கோபுரம் வச்சவை.
அரசமர நிழலில நிண்டு கொண்டு
அனுதாபப் பட்ட மாதிரியழுது
இருந்த வீட்ற்கும், எட்ட நின்று கல்லெறிஞ சவை.
இருந்ததும் இல்லாமல் போய்
படுக்க நிக்க ஏலாம பதறி, பரிதவிச்சு
எத்தினதரம் மேயுறதும் பிரிக்கிறதும்,
பிரிக்கிறதும் மேயுறதும்.
உடைக்கிறதும் கட்டுறதும்.
கட்டினதை உடைக்கிறதும்.
எங்கட வீட்டிலதானே நாங்கள் இருக்கிறம்,
ஏன் ஒண்டுக்கும் பிடிக்கேல்ல.


நிலையமே பிழையாம்.
பேயங்கள்
நாங்களெடுத்த ந}லையமே?
பாட்டனும் புூட்டனும் எடுத்த நிலையம்.
நிலையம் சரி.
அதில மாற்றமில்லை.
பழைய வீடெண்டாலும்
உடைபட்டுப் போனதெண்டாலும்
இது எங்கட வீடு.


எத்தனையக் கண்டுட்டம் இதுக்குள்ள.
எத்தனை இழப்பு
எத்தனை இழவு, அலைவு.
அழுகையும் பற்கடிப்பும் அடுத்தடுத்து.
இனிமேலும் ஒழுங்குக்குள்ள இருக்ககேலாது.
மேச்சல சரியா மேயோணும்
கூரைக்கும் அமுக்கம் போடோணும்.
எந்தக் காத்தும் புடுங்காதமாதிரி.
உடம்பை வெறுத்து.
உயிரை வ}த்து
கல்லறுத்து சூளை வச்சிருக்கு.
களியோட இந்த முறை சுண்ணாம்பும் சேர்க்கோணும்.
கறையான் கூடு வராமல்.
தம பியன் தான் எங்கட மேசன்.
கட்டுறதுக்கு ப}ளான் சொல்ல கனபேர் வருவினம்.
எங்களுக்கும் பிளானிருக்கு;
இருக்கப் போறது நாங்கள்.
Reply
#68
அந்தக் கடைசிக் கணத்திலும்
கும்..கும்..கும்.. எறிகணை வீழ்ந்து வெடித்த சத்தத்தில் சாரத்திற்குள் சுருண்டு படுத்திருந்த வஞ்சி திடுக்கிட்டு எழுந்தாள். கொட்டிக்கொண்டிருந்த பனித்துளிகளால் விறைத்திருந்த உடல் மீண்டும் தன்னை சாரத்துக்குள் புகுத்தும்படி கெஞ்சியது.
காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தோழியிடம் "நேரம் என்ன செவ வந்தி?" என்று கேட்டாள். "நாலுமணியாகுது. நித்திரை கொண்டது காணும் பொசிசனுக்கு வாங்கோ அம்மையாரே" என்றாள் தோழி.
துள்ளியெழுந்த வஞ்சி, தனது பீ.கே.எல்.எம்.ஜீ யை து}க்கிக் கொண்டு, அருகிலிருந்த மரத்தினடியில் வைத்துவிட்டு, மரத்தில் சாய்ந்து நின்றபடி, எதிரியின் பிரதேசத்தை உற்று நோக்கிக்கொண்டிருந்தாள். அங்கே எதிரியின் காவல் அரண்களிற்கும் இவர்களின் காவலரண்களிற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இவளது வீடு மொட்டைச் சுவருடன் அவளைப் பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்தது. முரசுமோட்டை என்னும் பெயருடைய அந்த அழகிய கிராமம் அமைதியாய் உறங்கிக்கொண்டிருந்தது. வாணியின் வீட்டுக்கு அவசர அவசரமாய் ஓடிவந்த மாமா "அவன் வந்திட்டான், சனமெல்லாம் ஓடுதுகள். நீங்கள் நித்திரை கொள்ளிறியள். கெதியா வெளிக்கிடுங்கோ"
கையில் அகப்பட்ட பொருட்களைத் து}க்கிக்கொண்டு அயலவர்களோடு இணைந்து கொண்டது வாணியின் குடும்பம். வீடிழந்து, சொத்திழந்து, சுகமிழந்து உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்ற துடிப்புடன் ஓடிக்கொண்டிருந்த மக்கள் மீது இராணுவத்தினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.
"ஐயோலு}அம்மாலு} காப்பாற்றுங்கோலு} காப்பாற்றுங்கோலு}" அவலக்குரல்கள் ஓங்கி ஒலித்து தேய்ந்து போயின. யார் யாரைக் காப்பாற்றுவது.
பிள்ளைகளை இழந்த பெற்றோரும், பெற்றோரை இழந்த பிள்ளைகளும், கணவனை இழந்த மனைவியும், மனைவியை இழந்த கணவனுமாய்லு} பல குடும்பங்கள் சிதைந்துபோயின. இந்த அவலத்திற்குள்ளாகிய குடும்பங்களில் வாணியின் குடும்பமும் ஒன்று. வாணியின் கடைக்குட்டித் தம்பியும், அம்மாவும், அப்பாவும், இவளையும் தம்பி ரஞ்சனையும் அனாதைகளாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.
ஐந்து வயது நிரம்பிய தம்பிக்கும், பதினைந்து வயது நிரம்பிய வாணிக்கும் பாலசிங்கம் மாமாவின் வீடுதான் அடைக்கலம். கண்முன்னால் உடல்சிதறி பலியாகிய குட்டித் தம்பியும், அம்மாவும், அப்பாவும் அடிக்கடி அவள் முன்தோன்றி அவளை அழவைத்தனர். ஒன்றும் அறியா பச்சிளம் பாலகனான தம்பியும் பாசத்தைக் கொட்டி வளர்த்த அம்மாவும், அப்பாவும் நிர்க்கதியாய் அவர்களைத் தவிக்கவிட்டு சென்றது கொடுமை.
"அக்கா எங்கட அம்மாவையும், அப்பாவையும், தம்பியையும் கொன்றவர்களை நான் கொல்லுவேன் அக்கா" இது தம்பி ரஞ்சனின் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தைகள்.
அந்த பிஞ்சு மனதில் ஏற்பட்ட தாக்கத்தை எண்ணியெண்ணி அவள் இளநெஞ்சம் துடிக்கும். எமது குடும்பத்திற்கு ஏற்பட்ட இந்த அவலம் எந்தக் குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது. ஏற்படவிடக்கூடாது. சிந்தித்த வாணி தம்பி ரஞ்சனை காந்தரூபன் அறிவுச் சோலையில் சேர்த்துவிட்டு இன்று வஞ்சியாய்லு}
'சரசர..' என்ற சருகுச் சத்தம் அவளைக் கடந்த கால நினைவுகளிலிருந்து மீட்டுவந்தது. சத்தம் வந்த திசையை உற்றுநோக்கினாள இராணுவத்தினர் அவளது நிலையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஒரு கணத்தில் அவள் தன்னை சுதாரித்துக் கொண்டாள். அவளது பீ.கே இயங்கத் தொடங்கியது. சக தோழிகளது ஆயுதங்களும் சடசடக்கத் தொடங்கின. இருதரப்பினருக்கும் இடையில் கடும் மோதல். செல் மழையாய் பொழிந்துகொண்டிருந்தது.
எதிரி ஏவிய செல் அருகில் வீழ்ந்து வெடித்ததில் இவர்களது பொசிசன் நிலைகுலைந்தது. பீஸ் ஒன்று செவ வந்தியின் வயிற்றைப் பதம் பார்த்தது. வஞ்சிக்கும் இக்கட்டான நிலை. முன்னேறிக் கொண்டிருக்கும் எதிரியைத் தாக்குவதா? வயிற்றை இரு கைகளாலும் பொத்திக்கொண்டு வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும் தோழியைக் காப்பாற்றுவதா?
அவள் உயிர்த்தோழி வேதனையோடு இவளைப் பார்த்த வண்ணம் மண்ணை முத்தமிட்டாள். அவளது காயத்திலிருந்து பெருகிய குருதியைக் கட்டுப் படுத்தி தோழியைக் காப்பாற்ற முடியாத இக்கட்டான நிலைக்கு உள்ளாகிவிட்டேனே. என் தோழி என் கண்முன்னாலேயே துடி துடித்து இறந்துவிட்டாளே அவள் நெஞ்சம் வேதனையால் துவண்டது. தனியொருத்தியாய் நின்று ஆவேசத்தோடு எதிரியைத் தாக்கிக்கொண்டிருந்தாள். சீறி வந்த ரவையொன்று வஞ்சியின் இதயத்தைத் துளைத்தது. பீ.கே.பட்டில் அவள் தலை சாய்ந்தது.
பக்கத்து நிலைகளிலிருந்து போராளிகள எதிரியை வஞ்சியின் பக்கம் நெருங்கவிடாது தடுத்துத் தாக்கினார்கள். பல மணி நேரங்கள் சண்டை தொடர்ந்தது. போராளிகளின் வீராவேசத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது படையினர் இறந்த சகாக்களையும் கைவிட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தலைதெறிக்க ஓடிவிட்டனர்.
வஞ்சியின் நிலைக்கு விரைந்த தோழிகள் செவ வந்தியையும், வஞ்சியையும் து}க்கியபோது, வஞ்சியின் பீ.கே.எல்.எம்.ஜீ 'சடசட' என ரவைகளைக் கக்கியது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்னவென்று பார்த்தபோது வஞ்சியின் கைவிரல் விசைவில் காப்புக்குள் இருந்தது. 'எதிரியை அழிக்க வேண்டும் எம்மக்களைக் காப்பாற்ற வேண்டும்' என்ற எண்ணமே அவளுக்கு உயிர் பிரியும் அந்தக் கணத்திலும்..
தமிழறிவு
Reply
#69
நீ ரேறிய காh முகில்
உலாப்போகின்றது எம்மூh}ல்
குளிh மழை பெய்யட்டும்
எம் வெளிகளில்
கானல் தோய்ந்த காலங்கள் அழிய
வெப்பியாரம் பிதுங்கிய மனங்கள் குளிர
நீh த்துளிகள் எம்
நிலங்களில் வீழட்டும்.


பசுமையற்று, பட்சிகளற்று
கந்தகப் புகை கலந்த
கானகத்தில்
முட்புதா கீறிய பற்றைகளில்
பதுங்கியிருந்த வாழ்வு
தொலையட்டும் என்றெழுந்த
இறகுகள் கொஞ்சமும்
இளைப்பாறா.


மூடிய பேழைகளின்
உள்ளிருந்த பிள்ளையை
இரை தேடும் முனைப்பில் பறந்து
இன்னமும் கூடு திரும்பாத குருவியை
இருப்பும் இழப்பும் அறிய முடியா
தெங்கோ கேட்ட வெடிப்பொழுதை
எண்ணத்துள் தேக்கிய
இதயங்களிலிருந்து வழிகின்றது துயரம்.
வலி சுமந்த என்புகளின்
உக்கிய மீதி
வெளித் தொ}யும் ஊh களில்
நினைவுகளைப் புதைத்து விட்டு
எப்படி ஆனந்தப்படுவோம்.
மேனி கழுவி
வாசம் புூசிய பின்னும்
உள்ளிருந்த புண்ணாய்
வலிக்கிறது எம் ஆன்மா.


வெடியோசை கேட்கவில்லை
எறிகணைகள் கூவவில்லை
எமன் ஏறிவரும் கழுகு
எம்மூh}ற் திh}யவில்லை
எனினும் புூமியின் கீழே
விசப் பல்லும்
குரோதம் ததும்பிய குரல்களும்
முதுகின் பின்னான பாh வைகளும்
அழகாயிருப்பதாய் தொ}யவில்லை.
விழி துடைக்க வரும் கரங்களைக்கூட
நம்ப மறுக்கின்றது இதயம்.
முற்றும் விடுதலையுறாது
முதுகிற் புூட்டிய இறகின்
வேதனையிது.


நீரேறிய காh முகில்
உலாப் போகின்றது எம்மூh}ல்
எல்லா மனங்களும் ஆற
எல்லா வடுக்களும் மாற
குளிh மழை இங்கே பொழியட்டும்
வானம் பாh த்து
விழைவதே எம்புூமி
நிலவை நம்பியல்ல
சூh}யனை மட்டுமே நம்பி.

அம்புலி
Reply
#70
மானிடர்களின் மனங்கள்
மதங்களின் காலடியில்,
மண்டியிட்டுக் கிடக்கின்றது.
சுவாசத்தின் அகோரம்
அதுபடும் அவஸ்தைகள்,
'சோகம்'
சாதிவெறி அகவர்களின்
விழிகளை சாத்தி விட்டது.
குருடாய்ப் போனது
அவர்களின்
கண்கள் மட்டுமல்ல
கருத்துக்களும் தான்.
வேதங்களின் சேதங்களினால்,
வரண்டு போனது இப்பிரபஞ்சம்.
சிநேகிதங்கள் உலவ வேண்டிய
நெஞ்சங்களில் ஏனோலு}?
இத்தனை வஞ்சம்.
தேனாய் வழிந்தென்ன,
மழையாய் பொழிந்தென்ன,
இதயத்தில் பேதம் இருக்கும் வரையில்லு}..
'சோலைவனமாய்'
புூத்துக் குலுங்க வேண்டிய
'நம் தேசம்'
என்றென்றும் பாலைவனம் தான்.


புலோப்பளையுூர்
பே.பாஸ்கரன
Reply
#71
அறுந்து தொங்கும் நு}லிழையில்
ஓர் ஆத்மா ஊசலாடுகிறது
வலியடைந்து வலியடைந்து
கணமெல்லாம் வருந்துகிறது
எந்தக் கலப்புமில்லா வார்த்தைகளுக்காக
ஏங்கி நிற்கிறது
முகமூடியற்ற மனித முகம் தேடி
அலைந்து திரிகிறது..
பிரபஞ்ச வெளியெங்கணும் துயரச்லு}
சுமை சுமந்து பறக்கிறது.
கறையில்லா இரண்டு
கரங்களின் கலப்பிற்காக
போலியற்ற புன்முறுவலுக்காக
புரிந்துணர்வுள்ள ஒரு மென்னிதயத்துக்காக
தவம் செய்கிறது
புழுக்கள் நெளியும் புன்னகைகளையும்
பொய்களை உற்பவிக்கும் மனங்களையும்
விஸம் கலந்த சிரிப்புகளையும்
வெறுக்கிறது.
ஒட்டுண்ணி வேர்களற்ற உயிர்
உறவுகளைத் தேடிநிற்கிறது

ஆதிலட்சுமி சிவகுமார்
Reply
#72
வாள் கொண்டு
என் மேனியை
மானிடர் அறுத்திடும்போதில்
வருத்தத்தால் துடிதுடித்தேன்.
எத்தனை சோகம் என்னுள்
மரமாய் பிறப்பது
மகாபாவம் என
மனதுள் எண்ணிக்கொண்டேன்.
அழுதேன்.
அந்தக் கண்ணீரை
யார்தான் அறிந்தார்கள்.


இப்போது எத்தனை மாற்றங்கள்
மரமாய் பிறந்ததற்கு
மகாதவம் செய்து விட்டேனோ.
மாவீரன் அவனுக்கு
பேழை உருவாக்கும்போது
எந்தனுக்குத்தானே
இப்போது முதலிடம்.
அவனைத் தாங்கிடும்
அந்தப் பாக்கியம்
எந்தனுக்கு கிடைத்தது.
மரமாய் பிறந்தது
மகிழ்ச்சிக்குரியதென
இப்போது எனக்குள்
எண்ணிக் கொள்கிறேன்.
யோ.புரட்சி
Reply
#73
குறிஞ்சிநிலம் தழுவி
ஒரு குரல்
ஜீவனுள்ளதாய்
உனைப் போலவே
ஒலியெழுப்பியபடி
நீள்கிறது.
முரசொலிக்க
நாம் எழுவோம்.
முன்னே
ஓயாது ஊசலாடும்
உனைப் போலவே
இன்றும்
எமக்குள் கரைந்த
உன் உருவம்
முல்லைமண் தடவிய
காற்றோடு வந்து
முகம் தழுவுகிறது.
ஜீவநதியாய்
முட்டிமோதும்
எங்கள் நீழ்ச்சி
முரணிற்காய்
காத்திருக்கிறது.
நீ தழுவிய மண்
உனைப் போலவே
நீயிருப்பதாய்
மாற்றம் காண.

கலிங்கன்
Reply
#74
எங்கெங்கோ
திசைமாறிச் சென்ற
சிட்டுக்கள் எல்லாம்
சிறகடித்து வருகின்றன
தம் கூடு நோக்கி.
அப்பப்பா
இந்த அழகு காணவே
என்
கண்களுக்குக் கிடைத்த பாக்கியம்
போதும்.. போதும்
ஒரேயொரு குறை
உள்ளது என் மனதில்
மீண்டும் இந்த
சிட்டுக் கூட்டங்கள்
திசை மாறியலையும்
பொழுதொன்று புூக்குமோ?
ஏங்குகிறது இப்போதும்
என் மனது.

நிரோசா
Reply
#75
இளமை ஒளிர்கின்ற போராளியாய்
வாழ்ந்த காலத்தில்
சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்ததுன் மரணம்


எப்போதும் போலவே பேசிச்சிரித்தபடி
விடைபெற்ற பொழுதின் பின்
நீ வீரச்சாவடைந்தாய்


போராயுதங்கள் பற்றிய பரிச்சயம்
நன்கறிந்தும்
நீ அப்படி ஆனாய்


மரணத்தின் கொடுவலி உணர்தலில்லாமல்
உன் போர்முகம் சிதைந்து போயிற்று
சிதைந்தே போயிற்று.


நினைவுக் கூர்மைகள் மனம் நிறைய
பிரிவின் வலியும் துக்கமும் எழ
பற்றைகளிலும் மரக்கொப்புகளிலும்
உன்னுடலைத் தேடித்திரிந்த கணங்களை


விரித்த சாறத்தில் குருதி சொட்டச்சொட்ட
சின்ன ஒரு பொதியாய்
உன்னை அள்ளி எடுத்த பின்


ஆற்றப்படாத காயங்களினால் மனம் நோக
வலிகள் பெருகும் வார்த்தைகளோடு
உன்னை து}க்கிச் சென்றோம்.


இனி இப்போர் வெளியில்
விழிகள் நிலை குத்திச் செல்கையில்
உனது கணங்கள் மனதில் நிறையும்
மனதில் நிறையும்
நிறைந்தபடியே இருக்கும்.
தமிழ்மாறன்
Reply
#76
சுவாசக்குழாய்கள்
சிற்றறைகளைச்
சென்றடைவது போல
வீதிகள் வீட்டையோ
அல்லது ஏதாவதையோ
சென்றடைகின்றன.
நாடு வீதிகளில் தான்
சுவாசிக்கின்றது
வீதிகள் தான் உண்மையான
வரலாற்று ஏடு- ஏனெனில்
வீதிகள் பாரபட்சம்
பார்ப்பது இல்லை
வீதிக்குத் தெரிந்தது 'சேவை' ஒன்று தான்
அவை நல்லவன்
கெட்டவன் பார்ப்பது இல்லை
வீதிகளில் ஒற்றையடிப் பாதை,
குச்சொழுங்கை, தெரு என்று
சில வகைகள்.
ஒவ வொரு வீதிகளும் ஒவ வொரு
பெயர்கள்: அதன் நெற்றியில்
பொறிக்கப்பட்ட
மாவீரர்களின் பெயர்களும்தான்
வீதிக்கே வராதவன் மனிதனாக
இருக்க முடியாது- வீதிதான்
மனிதனைச் செதுக்குகிறது
வீதிகள் முக்கியத்துவம்
வாய்ந்தவை- nஐயசிக்குறு
ராணுவ நடவடிக்கை
வீதிக்கானது.
இறுதியில் மண்கவ விக்
கொண்டது.
இப்போது
சமாதானத்துக்கான பாதையில்
ஒரு வீதி திறக்கப்படிருக்கிறது
இனி ஒவ வொரு பாதைகளும்
திறக்கப்படும்
-கே
Reply
#77
உயிரின்
இசைப்பாடல்
என் உடலின்
ஒவ வொரு பகுதியையும்
நான் தருவேன்
என் நிலத்தின்
சிறு பகுதியைக் கூட
நான் தர மாட்டேன்.
என் ஜீவன்
இப்போது வாழுவதும்
என் உயிரின்
இசைப் பாட்டுகளும்
உடலின் ஒவ வொரு
சிறிய அசைவுகளும்
நிலத்திற்காகவே.
நீங்கள்
உடலை எடுத்தாலும்
என் உயிரின்
இசைப் பாட்டுக்கள்
நிலத்திற்காக
நிதம் ஒலிக்கும்
நிற்காத கடலலைகள் போல....

யோ.புரட்சி
Reply
#78
உனக்கும் எனக்கும்
இனம் வேறு வேறு
இருந்தாலும் நாமிருவரும் சகோதரர்கள்.
ஏனெனில்
குடியரசுகளின்
அரசியல் சாசனங்களின்
எந்த சரத்தும்
எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.


உனக்கும் எனக்கும்
மொழியும் வேறு வேறு
இருந்தாலும் நாமிருவரும் சகோதரர்கள்.
ஏனெனில்
குடியரசுகளின்
வண்டில் நுகங்களில்
இருவரும் புூட்டப்படுகிறோம்
சுமையிழுக்கும் மாடுகளாக.


எனக்கும் உனக்குமிடையில்
மதம் கூட: இரத்த மரபணுக்கள்கூட
வேறு வேறாயிருக்கலாம்
இருந்தாலும் நாமிருவரும் சகோதரர்கள்.
ஏனெனில்
குடியரசுகளின்; கனவான்களின்
வலுவேற்றிய சாட்டைகள்
இருவரையும் விளாசுகின்றன ஒரு சேர.
இவையெல்லாவற்றுக்கும அப்பால்
நான் உனக்காகவும்
போhராடும் ஒரு போராளி

திருநகரூர் ஜெகா
Reply
#79
உனக்கும் எனக்கும்
இனம் வேறு வேறு
இருந்தாலும் நாமிருவரும் சகோதரர்கள்.
ஏனெனில்
குடியரசுகளின்
அரசியல் சாசனங்களின்
எந்த சரத்தும்
எம்மை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.


உனக்கும் எனக்கும்
மொழியும் வேறு வேறு
இருந்தாலும் நாமிருவரும் சகோதரர்கள்.
ஏனெனில்
குடியரசுகளின்
வண்டில் நுகங்களில்
இருவரும் புூட்டப்படுகிறோம்
சுமையிழுக்கும் மாடுகளாக.


எனக்கும் உனக்குமிடையில்
மதம் கூட: இரத்த மரபணுக்கள்கூட
வேறு வேறாயிருக்கலாம்
இருந்தாலும் நாமிருவரும் சகோதரர்கள்.
ஏனெனில்
குடியரசுகளின்; கனவான்களின்
வலுவேற்றிய சாட்டைகள்
இருவரையும் விளாசுகின்றன ஒரு சேர.
இவையெல்லாவற்றுக்கும அப்பால்
நான் உனக்காகவும்
போhராடும் ஒரு போராளி

திருநகரூர் ஜெகா
Reply
#80
உரமேறிய கால்கள் பலமற்றுப் போயின
வலுவேறிய கைகள் உணர்வற்றுத் தொய்ந்தன
இளமைத்துடிப்பில் அன்று திளைத்தது
முதுமைச்சுமையில் இன்று களைத்தது.
கண்கள் வெளிறி ஒளியை இழந்தன
சீண்டாத புண்கள் புரையோடிப்போயின.
ஒட்டிப்பிடித்த சொந்தங்கள் இன்று
ஓட்டம்பிடித்தன அவா நிலைகண்டு.


அன்புடன் தழுவிய நட்புகள் கூட
அகன்றன அவரது வெறுங்கை பார்த்து.


தோள்மீது தூக்கி வளர்த்திட்ட பிள்ளையும்
தொல்லையென விரட்டி அடிக்கிறான் வெளியே.


வயதான காலத்தில் சத்தங்கள் போடாதே
தேவாரம் படிப்பதாய் கத்தித் தொலையாதே
பசிகாதை யடைத்தாலும் வாய்விட்டுக் கேட்காதே
என்னவளிடம் இங்கிதமில்லாமல் நடவாதே
போர்ப்புழுதி சூழ்ந்தது.
வெண்தணலில் நித்தமும் வேகின்ற மனமும்
மௌனமாய்க் கதறியழும் தவிப்புடனே தினமும்.


ஏன் மனிதா இப்படிப் பாதகம் உன்னுள்?
இளமையும் முதுமை நாடியே செல்லும்
கருணையும் அன்புமே பாரினில் வெல்லும்
உரிமையும் உணர்வுமே ஓர்பெருஞ செல்வம், உணர்.

-வி.அகல்யா
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)