Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறுக்கு வழிகள்
#61
குறுக்குவழிகள் பற்றிய தரவுகளுக்கு நன்றி தேவகுரு.
<b>
?

?</b>-
Reply
#62
<b>குறுக்குவழிகள்-29</b>

<b>·பிளப்பியில் இருந்து ·பிளப்பிக்கு</b>

ஒரு டிஸ்க்கை டுப்பிளிகேட் செய்தால் டுப்பிளிக்கேட் செய்யப்பட்ட டிஸ்க் ஒறிஜினல் டிஸ்க்கின் கொப்பியாகும். ஒறிஜினல் டிஸ்க்கில் bad sector இருந்தால் அல்லது பழுதடைந்த ·பைல்கள் இருப்பின் அதில் இருப்பதைப்போன்றே இங்கும் கிடைக்கும். Back up என்பதும் Disk Copy என்பதும் வேறு. ஆனாலும் இதுவும் ஒரு வகை பாக்-அப்தான். ஒரு ·பைலை பாக்-அப் செய்தால் அதை நேரடியாக பாவிக்கமுடியாது. அப்படி பாவிக்கவேண்டுமெனில் பாக்-அப் ஐ Restore செய்து பாவிக்கவேண்டும். ஆனால் டிஸ்க்கொப்பி செய்தால் அதை நேரடியாக பாவிக்கமுடியும்.தற்போது பாவனையிலுள்ள விண்டோஸ் ஓப்ப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஒரு ·பிளப்பில் உள்ள தகவல்களை இன்னொன்றுக்கு மாற்றுவது மிக சுலபம்.

1. தகவல் உள்ள ·பிளப்பியை டிறைவினுள் செலுத்தவும்.
2. டெஸ்க்ரொப்பில் உள்ள My Computer ஐகொனை ட்புள் கிளிக் செய்யவும்.
3. வரும் சட்டத்தில் [A:] டிறைவின் ஐகொனை வலது கிளிக் செய்யவும்.
4. வரும் மெனுவில் காணப்படும் Disk Copy என்ற கட்டளையை தெரிவுசெய்யவும்.
5. வரும் சிறிய சட்டத்தில் உள்ள Start என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது ·பிளப்பியில் உள்ள தகவல்கள் கணணியின் மெமறிக்கு பிரதிபண்ணப்பட்டுவிடும்.
6. அடுத்து கணணியில் உள்ள டிஸ்க்கை எடுத்துவிட்டு, புதிய தகவல் ஏதுமற்ற டிஸ்க்கை உட்செலுத்துமாறு கேட்கும். அப்படியே செய்து O.K ஐ கிளிக் பண்ணவும்
7. புதிய டிஸ்கில் தகவல் பதியப்பட்டு, Copy Completed Successfully என்ற அறிவிப்பு காணப்படும்.
Reply
#63
<b>குறுக்குவழிகள்-30</b>

<b>உங்கள் கம்பியூட்டரை வேகப்படுத்துங்கள்</b>

இதற்கு பல காரியங்களை பல டூல்களின் உதவியோடு செய்யவேண்டும். இதோ சில வழிகள்.

1) "Disk Clean-up" Tool ஐ பாவித்து தேவையற்ற ·பைல்களை அழிக்கவேண்டும்.
கிளிக்பண்ணுங்கள் Start->Accessories->System Tools-> Disk Clean-up, எந்த டிறைவை சுத்தம்பண்ணப்போகிறீர்கள் என கேட்கும். வலப்பக்கமுக்கோணத்தை கிளிக் செய்து, வரும் மெனுவில் டிறைவை தெரிவு செய்யுங்கள்.இப்போது இன்னொரு சட்டம் தோன்றி இவைகளில் எவற்றை அழிக்கவேண்டும் எனக்கேட்கும்.

Downloaded Program Files
Temporary Internet Files
Recycle Bin
Temporary Files
Temporary Offline Files
Offline Files
Catalog Files

தேவையானவற்றை அல்லது முழுவதையும் தெரிவுசெய்யுங்கள். இவைகளை அழிப்பதன் மூலம் எவ்வளவு இடம் காலியாகும் என்பதையும் காட்டிநிற்கும். இதில் காட்டப்படும் எல்லாவற்றையுமே நீங்கள் பயமின்றி அழிக்கலாம்.இந்த இதனால் காலியிடமும் அதிகமாகும் கம்பியூட்டரும் வேகமடையும். Downloaded Program Files என்பது ஏதோ ஒரு புறோகிறாம் டவுண்லோட் ஆகிய பின் கைவிடப்பட்ட தேவையற்ற ·பைல்களாகும். இவ்·பைல்கலை கீழே காணப்படும் View Files என்ற பட்டனை கிளிக்பண்ணி தேவையானால் பார்வையிடலாம்.

தொடரும்-----
Reply
#64
ம் அருமை நண்பரே !

நன்றி

இன்னும் எதிர்பார்த்து
[b] ?
Reply
#65
<b>குறுக்குவழிகள்-31</b>

<b>உங்கள் கம்பியூட்டரை வேகப்படுத்துங்கள் </b>(தொடர்ச்சி)

2) <b>Disk Defragmenter </b>ஐ பாவித்து சிதறிய ஒவ்வொரு ·பைலின் துண்டங்களையும் சேர்த்து ஒவ்வொரு ·பைலையும் தொடர் முழு ·பைல் ஆக்குங்கள்.
·பைல்கள் சேமிக்கப்படும்போதும் அழிக்கப்படும்போதும் இடங்கள் விட்டுவிட்டு காலியாகின்றன. திரும்பவும் சேமிக்கப்படும்போது காலியாக உள்ள இடங்களில் தொடர்பற சேமிக்கப்படுகின்றன. இப்படி பல ·பைல்கள் தொடர்பற பதியப்படுவதனால் வாசிக்கப்படும்போது இத்துண்டு ·பைல்களை தேடிகண்டுபிடிப்பதற்கு நேரம் அதிகமாகிறது. இதனால் இவைகளை தொடர்புற திருப்பி எழுதிவைத்தால் தேடும் குறைவடையும். கம்பியூட்டரின் வேகம் அதிகரிக்கும். இந்த வேலைத்தான் Defragmenter என்னும் Tool செய்கிறது. முதலில் உங்கள் கம்பியூட்டரில் screen saver போட்டிருந்தால் அதை disable பண்ணுங்கள்.

இப்போ கிளிக்பண்ணுஙகள் Start-->Programs-->Accessories-->System Tools-->Defragmenter or Start-->Run--> (type) Defrag--> O.K, இப்போது Defragmenter திரையில் காட்சியளிக்கும். அதில் உங்கள் கம்பியூட்டரில் உள்ள எல்லா டிறைவுகளும் காட்சியளிக்கும். எதை Defragment செய்யப்போகிறீகளோ அதை தெரிவு செய்யுங்கள்.
இப்போது Analyze பட்டனை கிளிக்பண்ணுங்கள். உடனே உங்கள் Drive ஆராயப்பட்டு நாலு நிறங்களில் விபரம் காட்டப்பட்டு, defragment செய்யவேண்டுமா? தேவையில்லையா? என கூறும். தேவையெனில் Defragment என்ற பட்டனை கிளிக்பண்ணவும்.

வேலை அதிகமாக இருந்தால் அரை மணித்தியாலங்கள் வரை அல்லது அதற்கும் கூடுதலாகவும் Defragmentation நடக்கலாம். இவ்வேலையை கம்பியூட்டருக்கு வேறு வேலையற்ற போது செய்வதுதான் பொருத்தமானது. சாதாரணமாக மாதமொரு முறையாவது Degragmentation செய்யவேண்டும். கடுமையாக உழைக்கும் கம்பியூட்டர் எனில் வாரமொரு முறையாவது செய்யவேண்டும். Page File, Windows Registry, Master File Table, Hibernate Files போன்ற System Files களை Disk Defragmenter எதுவும் செய்யாது.

Disk Defragmenter ஒரு டிறைவை Defragment செய்வதற்கு அந்த டிறைவின் முழு அளவில் பதினைந்து வீதம் காலியாக இருக்கவேண்டும். அப்படி காலியாக இடம் இல்லையெனில் நீங்கள் Defragment செய்ய முற்படும்போது அது கூறும் "காலியிடம் போதாது, தேவையற்ற ·பைல்களை அழித்து காலிபண்ணு" என்று. அவ்வாறு செய்துகொடுங்கள்.

தொடரும் -------
Reply
#66
<b>குறுக்குவழிகள்</b>

எனது தகவல்களை வாசிப்பவர்களுக்கும், வாசித்து நன்றி சொல்லி என்னை ஊக்கப்படுத்துபவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அடுத்து BBC அவர்கள் இணைத்த லிங் (உங்கள் கம்பியூட்டரை இளமையாக வைத்திருக்க சில ஐடியாக்கள்) போன்ற பிரயோசனமான தகவல்கள் அல்லது கட்டுரைகளை இந்த பகுதியில் போஸ்ற் செய்வது மிகவும் விரும்பத்தக்கது.விடயம் தெரிந்தவர்கள் தங்கள் அறிவை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது அவர்களது அறிவும் பெருகுமல்லவா?

தொட்டனைத் தூறம் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறம் அறிவு
Reply
#67
நன்றி தேவகுரு.. இவ்வளவும் இங்க நடக்குது.. அடுத்த வழிமுறைக்காக காத்திருக்கிறேன்..<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#68
இது நானும் வெப் உலகத்தில படிச்சேன். அத சுட்டு கீழ் போடுறன் try பண்ணி பாருங்க
Reply
#69
<span style='font-size:30pt;line-height:100%'>உங்கள் கம்ப்யூட்டரை இளமையாக வைத்திருக்க சில ஐடியாக்கள்</span>

உங்கள் கம்ப்யூட்டர் எருமை மாடு மாதிரி இயங்குகிறதா? டிஸ்க்கில் இடம் இல்லையா? அடிக்கடி புரோகிராம்கள் "hயபே" ஆகிறதா? இந்தச் சிக்கல்களை சமாளிக்க சில யோசனைகள்.

விண்டோஸ் 98-ல் 64 எம்.பி. ராம் போட்டும் சிஸ்டம் ஆமை வேகத்தில் மாத்ரி வேலை செய்வது சகஜம்தான். பலர் கூடுதலாக ராம் சேர்க்கவேண்டுமா என்று யோசிப்பார்கள். சிலருக்கு டிஸ்க்கில் இடம் இருக்காது. உங்கள் கம்ப்யூட்டரை டீசன்ட்டாக செயல்பட வைக்க அதிலேயே பல உபயோகமான புரோகிராம்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, மேற்கொண்டு சில ரிப்பேர் வேலைகளைச் செய்தால் சிஸ்டம் சூப்பராகிவிடும்.

<span style='font-size:25pt;line-height:100%'>ஐடியா 1 : ஹார்டு டிஸ்க்கை ஒழுங்குபடுத்துங்கள்</span>

உங்கள் ஹார்டு டிஸ்க்கில் தகவல், துணுக்குகளாக ஒழுங்கில்லாமல் சிதறிக் கிடக்கும். ஆபரேட்டிங் சிஸ்டம், காலியான இடத்தில் புதிய தகவல்களை சேமிப்பதால் ஃபைல்கள் தாறுமாறாகப் பரவியிருக்கும். இதனால் ஃபைல்களைத் திறக்கத் தாமதமாகிறது. இவற்றை அருகருகே அடுக்கி வைத்தால் பிரச்சனை தீரும். துணுக்குகளாக (<b>fragments</b>) இருக்கும் தகவலை ஒழுங்குபடுத்த அடிக்கடி உங்கள் டிரைவ்களை <b>defragment</b> செய்ய வேண்டும். அதற்கான புரோகிராம்தான் னுளைம <b>Disk Defragmenter</b>. இந்த சாஃட்வேரைப் பயன்படுத்தி னநகசயப செய்வது சுலபம்.

ஸ்டார்ட் மெனுவில் <b>Programs > Accessories > System Tools</b> என்ற ரூட்டில் போனால் Defragementer கண்ணில் படும். அல்லது ஸ்டார்ட் மெனுவில் <b>Run</b>-ஐ க்ளிக் செய்யுங்கள். <b>defrag</b> என்று டைப் செய்து <b>Enter</b> கீயைத் தட்டுங்கள். எந்த டிரைவை சீராக்கவேண்டும் என்று கேட்கும். டிரைவைத் தேர்ந்தெடுத்து <b>OK </b>பட்டனைத் தட்டுங்கள்.

டீஃப்ராக்மென்ட் பணி முடிய சமயத்தில் ஒரு மணி நேரம் கூட ஆகும். அது வரை மெஷினைத் தொடாமல் இருங்கள். எல்லா புரோகிராம்களையும் அணைத்து வையுங்கள் - குறிப்பாக ஸ்க்ரீன்சேவர்களை.

டீஃப்ராக்மென்ட் பணி ஆரம்பித்து 3 நிமிடம் கழித்து ஸ்க்ரீன்சேவர் வந்தால் வேலை தடைபட்டுவிடும். மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டியிருக்கும். டெஸ்க்டாப் மேல் ரைட் க்ளிக் செய்யுங்கள். Screensaver என்ற தலைப்பை க்ளிக் செய்யுங்கள். பிறகு ஃஸ்க்ரீன்சேவர்கள் பட்டியலில் None என்பதைத் தேர்ந்தெடுத்து OK-ஐ க்ளிக் செய்யுங்கள்.

மாதம் ஒரு முறையாவது நீங்கள் defragment செய்தால் ஃபைல்கள் வேகமாகத் திறப்பதைப் பார்க்கலாம்.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>நான் சுட்ட இடம் வெப் உலகம் (Webulagam). இந்த லின்ங்க கிளிக் பண்ணுங்க </span>
Reply
#70
<b>குறுக்குவழிகள்-32</b>

<b>உங்கள் கம்பியூட்டரை வேகப்படுத்துங்கள் </b>(தொடர்ச்சி)

3) Scandisk and chkdsk
Defragmentation முழுமையாகவும், சிறப்பாகவும், திக்குமுக்காடி நின்றுவிடாது, நடைபெறவேண்டுமானால், அதன் முன்பாக Hard Disk ன் தவறுகளையும் பிழைகளையும் நீக்கி திருத்தம் செய்யும் Scandisk இயக்கப்படவேண்டும். Win 2000 அல்லது Win XP பாவிப்பவர்கள் அதற்கு பதிலாக Chkdsk ஐ இயக்கவேண்டும். Scandisk ல் இரண்டு பதிப்புக்கள் உண்டு. அவையாவன Standard and Thorough என்பனவாகும்.

Scandisk:- Start-->Programs-->Accessories-->System Tools-->Scandisk Or Start-->Run (type) Scandisk. வரும் சட்டத்தில் Standard அல்லது Thorough என இரண்டு விருப்பத்தேர்வு காணப்படும். இரண்டாவதை தேர்வு செய்யவும். அத்தோடு Automatically Fix Errors என்பதனையும் தேர்வு செய்யவும்.

Chkdsk:- டபுள் கிளிக் My Computer-->வலது கிளிக் C டிறைவ் அல்லது விரும்பிய ஏதாவது டிறைவ்-->Properties-->Tools-->Check Now-->Automatically fix file system error , Scan and attempt recovery of bad sectors என்ற இரண்டையும் தேர்வு செய்துவிடவும்-->Start பட்டனை கிளிக்பண்ணவும். வேலை முடிவடைந்தது என்ற செய்தி வரும்.அப்போது O.K ஐ கிளிக்பண்ணவும்.

தொடரும்---
Reply
#71
நன்றி தேவகுரு
பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள்.
மிகவும் உதவியாக இருக்கிறது.
மீண்டும் நன்றி.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#72
<b>குறுக்குவழிகள்-33</b>

<b>Missing or Corrupted File</b>

மின்விநியோகம் சீரின்மை, முறையற்ற கம்பியூட்டர் நிறுத்தம், வைரஸ், ஊறு உள்ள புறோகிறாம்களை நிறுவுதல் போன்ற பல காரணிகளால் உங்கள் ஹாட் டிறைவின் செக்ரர்கள் ஊறு அடைகின்றன. (Getting corrupted). இதனால் நீங்கள் கம்பிட்டரில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இப்பிழைகள் இப்படி அறிவிக்கப்படுகின்றன.

1. The following file is missing or corrupted.
2. The download location information is damaged
3. Unable to load file

பூட் ·பைல்கள் ஊறு அடைந்திருந்தால் பிழைச்செய்தி இப்படி வரலாம்.

1. Cannot find Command.com
2. Error loading operating system.
3. Invalid Boot.ini

இப்படி தோன்றும் செய்திகளின் காரணங்களை ஹாட் டிஸ்க்கில் நிவர்த்தி செய்வதற்காகத்தான் Scan Disk or Check Disk என்னும் செயலியை விண்டோஸ் தன்னுள் வைத்திருக்கின்றது. இவ்விரண்டும் ஒரே வேலைத்தான் செய்கின்றன. அதாவது ·பைல்களின் பெயர்கள் சரியாக இருக்கின்றனவா? ·போல்டர்களுக்குள் தொடர்புகள் சரியான முறையில் இயங்குகின்றனவா?. Bad cluster கள் எவை எவையென File Allocation Table (FAT) ளில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா? என தேடி சீர் செய்கின்றது.

புதிதாக ஒரு cluster பழுது என கண்டுபிடித்தால் அதில் உள்ள டேட்டாவை நல்ல ஒரு cluster க்கு மாற்றமுயலும். அதிகமாக இச்செயல் வெற்றிபெற தவறுவதில்லை. அதன்பின்பே அக்கிளஸ்ரர் பழுது, அதில் எந்த டேட்டாவையும் பதிவேண்டாம் என FAT ல் குறித்து வைக்கும். இச்செயலி செய்யும் காரியங்களில் மிகவும் நன்மை பயக்கும் காரியம் இதுவேயாகும். இதனால் தொலைந்து அல்லது அழிந்து போகும் ஒரு ·பைல் காப்பாற்றப்படுகிறது. எமது தவிப்பும் அடங்குகிறது.

எனவே Degragment செய்யுமுன் மாத்திரம்தான் என்றில்லாமல் மேலே கூறப்பட்ட பிழைச்செய்தி வந்தவுடன் இதை நீங்கள் குறுக்குவழிகள்-32 ல் கூறப்பட்டபடி Scan Disk or Check Disk ஐ இயக்கலாம்
Reply
#73
<b>குறுகுவழிகள்-34</b>

<b>IP Address </b>

IP Address என்பது wan நெட்வேர்கில் இணைந்துள்ள ஒவ்வொரு கம்பியூட்டருக்கும் தரப்படும் இலக்கத்திலான விலாசம். இவ்விலாசம் நிரந்தரமானது அல்ல. இணையத்தில் தன்னை பிணைத்துள்ள கம்பியூட்டர் ஒவ்வொருமுறையும் பூட் ஆகும்போது தரப்படுகின்றது. கம்பியூட்டரில் ஒரு வெப்சைட்டை பார்த்துகொண்டிருக்கும்போது நெட்வேர்க் கேபிலை கழற்றிவிட்டு உடனேயே பொருத்துங்கள், விலாசம் மாறிவிடும். விலாசம் இப்படித்தான் அமைந்திருக்கும். உ-ம்: 24.101 146.302

உங்கள் கம்பியூட்டருக்கு என்ன விலாசம் தரப்பட்டிருக்கின்றது என்பதை அறிய மிகவும் இலேசான வழி உங்கள் உலாவியின் (Browser) அட்றஸ் பாரில் www.whatismyip.com என் ரைப் செய்துவிட்டு Enter ஐ தட்டுங்கள். அல்லது இந்த லிங்கையே கிளிக் பண்ணிப்பாருஙக்ள். உங்கள் விலாசத்தை காணலாம்
Reply
#74
E.Thevaguru Wrote:<b>குறுகுவழிகள்-34</b>

<b>IP Address </b>
இணையத்தில் தன்னை பிணைத்துள்ள கம்பியூட்டர் ஒவ்வொருமுறையும் பூட் ஆகும்போது தரப்படுகின்றது. கம்பியூட்டரில் ஒரு வெப்சைட்டை பார்த்துகொண்டிருக்கும்போது நெட்வேர்க் கேபிலை கழற்றிவிட்டு உடனேயே பொருத்துங்கள், விலாசம் மாறிவிடும்.

இது தவறான தகவல். Modem பாவிப்பவர்களுக்கு மேற்கூறிய விபரங்கள் பொருந்தும். xDSL வகை இணைப்பினை வைத்திருப்பவர்களின் IP அடிக்கடி மாறுவது இல்லை.
<b>
?

?</b>-
Reply
#75
<b>குறுக்குவழிகள்-35</b>

<b>பத்திரத்தை பிரித்து ஒப்புநோக்குதல்</b>

நீங்கள் பல பந்திகளைக் கொண்ட நீண்ட ஒரு Word பத்திரத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். முதற்பந்தியையும் கடைசிப்பந்தியையும் ஒப்புநோக்கவேண்டியுள்ளது. இதற்காக முன்னும் பின்னும் பத்திரத்தை நகர்த்தி பார்ப்பது ஒரு சிரமமான வேலை. ஞாபகமறதி உள்ளவர்களுக்கு மேலும் இது கஷ்டமான காரியமாகும். பத்திரத்தின் அப்பந்திகளை அல்லது வேண்டிய ஏதாவது இரு பகுதிகளை ஒரே கண்பார்வைக்குள் வைத்துபார்க்கக்முடிந்தால் நன்றல்லவா? இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.

பத்திரத்தை திறவுங்கள். மெனு பாரில் உள்ள "Window" என்ற மெனுவை கிளிக்பண்ணவும்.
பின்பு தோன்றும் பட்டியலில் காணப்படும் "split" என்ற கட்டளையை கிளிக்பண்ணவும். இப்போது நகர்த்தக்கூடிய ஒரு Horizontal Bar, pointer ன் நுனியில் ஒட்டிகொண்டிருக்கும். அதை சட்டம் இரு கூறாக பிரியக்கூடியதாக மத்தியில் நிலைநிறுத்தி கிளிக்பண்ணவும்.

இப்போது சட்டம் இருகூறாகி இரண்டிலும் ஒரே பத்திரம் Scroll Bar களுடன் காணப்படும். மேல் சட்டத்தில் பத்திரத்தின் முதல் பந்தியையும் கீழ் சட்டத்தில் பத்திரத்தின் கடைசிப்பந்தியையும் scroll பண்ணி எடுங்கள். ஒப்புநோக்குங்கள். வேலை முடிந்தபின்,
மீண்டும் மெனு பாரில் முன்போல "Window" வை கிளிக்பண்ணவும். பின் "Remove Split" என்பதை கிளிக்பண்ணவும். இப்போது பத்திரம் ஒரே பத்திரமாகிவிடும்.

இரு வெவ்வேறு பத்திரங்களையும் இதேபோல் நிலைப்படுத்தி பார்வையிடலாம்.
இரு பத்திரங்களையும் முழுமையாக திறந்துகொள்ளுங்கள். இரண்டாவதாக திறந்த பத்திரத்தின் மெனு பாரில் உள்ள மெனுவில் "Window" என்ற மெனுவை கிளிக்பண்ணி அதில் காணப்படும் "Arrange all" என்ற கட்டளையை கிளிக்பண்ணவும். பத்திரங்கள் இரண்டும் திரையில் முன்புபோல வெவ்வேறு Scroll Bar களுடன் காணப்படும். வேலைமுடிந்தபின் இரு பத்திரங்களையும் Close Button களை பாவித்து மூடிவிடவும்.

Also, please see page no. 6
Reply
#76
shanmuhi Wrote:குறுக்குவழிகள் எல்லாம் வாசிக்க நன்றாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்......
ஆனால் எனது கணனி டொச். நீங்கள் கூறுவது ஆங்கிலத்தில்.
இங்கு டொச் பாதி, இலங்கையில் ஆங்கிலம் பாதி என கலந்து செய்த கலவையாகி விட்டதே ?

ஷண்முஹி வழியில் ஒரு பொருளை கண்டேன். அது உங்களுக்கு பிரயோசனப்படும் என ஞாபகம் வந்தது. அதனால் அதை பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து தருகின்றேன்.
உங்கள் கண்ணி டொச், நாம் தருவது ஆங்கிலத்தில் என விசனப்பட்டீர்கள். நாம் தரும் ஆங்கிலத்தை நீங்கள் டொச்சில் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். இதோ அதற்கான வெப்தளம்.

"Foreign Language Translation

I ran across an interesting site that lets you type a phrase in English, whereupon it is immediately translated into another language. I tried it with Happy New Year! and came up with:
French: Nouvelle Annee Heureuse!
German: Gluckliches Neues Jahr!
Italian: Nuovo Anno Felice!
Spanish: iFeliz Ano Nuevo!
Portuguese: Ano Novo Feliz!
It also works in reverse, translating a foregin phrase into English or, in some cases, into one of the other languages. As with all translators, it has its limitations and imperfections, but I was surprised at how well it worked with a number of English/Spanish and Spanish/English phrases I typed in. (I'm moderately fluent in Spanish.) The site can be accessed by clicking this link. Have fun with it."

http://babelfish.altavista.com/babelfish/tr
Reply
#77
தங்களின் தேடுதலால் கிடைக்கப்பட்ட இணையதளம் மிகவும் பிரயோசனமாகதாக இருந்தது.

நன்றிகள் பல...............
Reply
#78
<b>குறுக்குவழிகள்-36</b>

<b>புதிய ரெலிபோன் இலக்கங்கள் - இலங்கை</b>

இலங்கையில் உள்ள எல்லா ரெலிபோன் இலக்கங்களும், பத்து தானங்களை கொண்ட புதிய இலக்கங்களாக மாற்றம்பெற்றுள்ளதை தெரிந்திராத அல்லது தெரிந்தும் சரியான இலக்கம் தெரியாத பலர் தமது உறவினர்களுக்கு போன் பண்ணுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்த சிரமத்தை தவிர்க்கவும் புதிய இலக்கங்களை அது எந்த மாவட்டை சேர்ந்ததாயினும்ரி அறிந்துகொள்ளவும், Telecommunication Regulatory Commission of Srilanka ஒரு சிறிய 124KB அளவுள்ள புறோகிறாமை டவுண்லோட் பண்ணி உங்கள் கம்பியூட்டரில் பொருத்திக்கொள்ள வசதி செய்துதந்துள்ளது.

இதில் நீங்கள் பழைய இலகத்தை ரைப் செய்து புதிய இலக்கத்தை தெரிந்துகொள்ளலாம். கீழே உள்ள லிங்ஙை கிளிக் செய்து "Download 10 Digit Phone Nnumber Generator" என்ற ஓடிக்கொண்டிருக்கும் வாசகத்தை கண்டுபிடித்து டவுண்லோட் பண்ணிக்கொள்ளவும்

http://www.trc.gov.lk/10digit.htm
Reply
#79
தகவலுக்கு நன்றி தேவகுரு. நீங்கள் உண்மையில் 'தேவர்களுக்கு' குருதான்.
Reply
#80
ஷண்முஹி,
Quote:தேவகுரு


Quote:நாம் தரும் ஆங்கிலத்தை நீங்கள் டொச்சில் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். இதோ அதற்கான வெப்தளம்.

"Foreign Language Translation

Quote:http://babelfish.altavista.com/babelfish/tr

பின்வருவனவும் தங்களுக்கு மொழி மாற்றீடு செய்ய உதவி புரியலாம்

http://www.freetranslation.com
http://www.systransoft.com


இதில் முன்னையது போலந்து, போர்த்துக்கேய மொழி மாற்றத்துக்கு எனக்கு பெரிதும் உதவியது. ஆகவே தங்களுக்கும் இது உதவும்.

வழுதி/-
Reply


Forum Jump:


Users browsing this thread: 4 Guest(s)