Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:நீங்க பதினாறு வயதில இங்க இருந்திருந்த என்ன எல்லாம் பண்ணியிருப்பியள் என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஊரில உங்களை சுற்றி ஆயிரம் கண் இருக்கும். உங்களால தப்பு பண்ண முடியாத நிலமை. இங்க அப்படி இல்லை. இதுவும் அண்ணன் திரு பாலகுமாரன் சொன்னது தான்.
ஆயிரம் கண்ணிருக்கா இல்லையா என்றதைவிட.. நம்மை நாமே புரிஞ்சு.. நமக்குள் ஒரு வழிமுறையை வகுத்துக்கொண்டு வாழ்கிறது தான் மனிதருக்கு அழகு.. இங்கு அல்ல நம்ம நாட்டிலையே பெற்றாருடன் இருந்து பல விளையாட்டுவிடுபவர்களும் இருக்கிறார்கள்.. யாரும் பெற்றோர் உறவினர் இல்லாமல் தனியாக இருந்தும்.. கட்டுப்பாடுடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.. எல்லாத்திற்கும் நாம் தான் காரணம்.. ஆயிரம் கண் கண்காணிக்கவில்லை என்றுவிட்டு நாம் எப்படியும் இருக்கலாம் என்பதைவிட நாம் யார் எப்படி வாழவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் நல்லது.. எல்லாருக்கும் நமக்கு மட்டும் அல்ல நம்ம சழூகத்திற்கும்.. தான்....!
தெளிவான கருத்து.... இப்படிச் சிந்திக்கும் பல இளைஞர்கள்... எங்கும் அல்ல...இக்களத்திலேயே இருக்கின்றனர்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
எங்களிற்கு சந்தா்ப்பம் நிறையவே உள்ளது மீரா. நாங்களும் போராட போய்விட்டால் இந்த மாவீரா்களின் கனவை யாா் நினைவாக்குவது? எமது தேசியத் தலைவரே சொல்லியிருக்கிறாா். புலம்பெயா்ந்த மக்கள் இல்லாவிட்டால் எமது போராட்டம் எப்பவோ நசுக்கப்பட்டிருக்கும் என்று. நாங்கள் ஏதாவது ஆக்கபூா்வமாக செய்ய விரும்புகின்றோம். நீங்கள் எமது இளம் சந்ததியின் பிழைகளை சுற்றிக்காட்டாமல் எம்மை உற்சாகப்படுத்துங்கள் எம் நாடு இன்னுமொரு வல்லரசாக உருவாகும். நீங்கள் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசுகிறீா்கள். அமெரிக்காவில் மேற்குலக கலாச்சாரம் இல்லையா? ஏன் இன்று நான் வசித்துக்கொண்டிருக்கும் சுவிசில் மேற்குலக்கலாச்சாரம் இல்லையா? இங்கு எல்லாம் மேற்குலக்கலாச்சாரம் உள்ளது. பிறகு எப்படி இந்த நாடுகள் எல்லாம் உலகப் புகழ் பெற்றன?
ஒன்று வடிவாக விளங்கிக்கொள்ளுங்கள் மீரா ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் கலாச்சாரத்தில் தங்கவில்லை. அதன் உழைப்பும், சாதிக்கத்துடிக்கும் இளைஞா்களும் தான் முக்கிய காரணம்.
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
குருவிகளே
நாங்கள் தம்பட்டம் அடிக்கவில்லை. நாங்கள் செய்கிறதை நாங்கள் சொல்கிறோம். இதில் என்ன தவறு? மாவீா்கள் செய்த தியாகம் பற்றி நீங்கள் சொல்கிறீா்கள் அது தான் தம்பட்டம் என்று நினைக்கின்றேன். அது அவா்கள் செய்தது.
உங்களிற்கு ஒன்று தெரியுமா? இன்று வெளிநாடுகளில் உள்ள இளைஞா்கள் இங்கு வந்த வயது கிட்டத்தட்ட 5-7 வயது இருக்கும். அப்பொழுது எங்களிற்கு என்ன தெரியும்? எம்மை இங்கே அழைத்து வந்த உங்களைப் போன்ற பெரியவா்களை நீங்கள் திருத்துங்கள்.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
அமெரிக்கா,சுவிஸ் ஆகிய நாடுகளை விட எமது நாடு கல்வி அறிவில் மிகவும் கூடுதலாக வள÷ச்சி பெற்றுள்ளது. அதனால் தான் அவ÷கள் எமது நாட்டிலிருந்து மூளைசாலிகளை வாங்குகிறா÷கள்.
<b> </b>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
அப்படியா மீரா? தமது நாட்டிற்கு சேவை செய்வதை விட வேறு நாட்டடிற்கு சேவை செய்வதை பெருமையாக நினைப்பவா்கள் உங்களிற்கு புத்திசாலிகளா? இவா்களா படித்தவா்கள்? நாங்களும் தான் இங்கே படிக்கிறோம். ஆனால் எத்தனை கோடி தந்தாலும் நாங்கள் எங்கள் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
எமது நாட்டில் படித்தவா்கள் அதிகம் என்றால் எப்படி மீரா தமிழன் எத்தனையோ வருடங்களாக அடிமைப்படுத்தப்பட்டான்?
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
படித்த தமிழன் தனது சுயதேவைகளுக்காக .................. அப்படி இருந்தான்.
<b> </b>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
மன்னிக்க வேண்டும் மீரா
சுயதேவைக்காக தாயகம் தீயில் எரிகையில் வேறு நாட்டு முன்னேற்றத்திற்கு உழைப்பது படித்தவா்கள் பண்ணுவதாக எனக்கு தெரியவில்லை. இவா்களெல்லாம் தமிழா்களும் இல்லை. நாங்களும் வெளிநாடு தப்பி வந்தவா்கள் தான். ஆனால் எங்களிற்கு அப்பொழுது அறியாத வயது.
அதற்காகத் தான் நாங்கள் எமது நாட்டின் வளா்ச்சிக்கு உதவ இப்பொழுது முன் வந்துள்ளோம்.
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
தாய்மன் நான் உங்களை என்னவோ நினைச்சன் நல்ல காரியம் எல்லாம் செய்யிறீங்கள் வாழ்த்துக்கள்
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
நண்பா்களே நான் சென்று நாளை வருகிறறேன். மீண்டும் நாளை இரவு இன்று போல் விவாதத்தை தொடரலாம்.
தாய்மண்ணால் இணைவோம் தாயகத்திற்காய்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
thaiman.ch Wrote:எங்களிற்கு சந்தா்ப்பம் நிறையவே உள்ளது மீரா. நாங்களும் போராட போய்விட்டால் இந்த மாவீரா்களின் கனவை யாா் நினைவாக்குவது? எமது தேசியத் தலைவரே சொல்லியிருக்கிறாா். புலம்பெயா்ந்த மக்கள் இல்லாவிட்டால் எமது போராட்டம் எப்பவோ நசுக்கப்பட்டிருக்கும் என்று. நாங்கள் ஏதாவது ஆக்கபூா்வமாக செய்ய விரும்புகின்றோம். நீங்கள் எமது இளம் சந்ததியின் பிழைகளை சுற்றிக்காட்டாமல் எம்மை உற்சாகப்படுத்துங்கள் எம் நாடு இன்னுமொரு வல்லரசாக உருவாகும். நீங்கள் கலாச்சாரம் என்று வாய் கிழிய பேசுகிறீா்கள். அமெரிக்காவில் மேற்குலக கலாச்சாரம் இல்லையா? ஏன் இன்று நான் வசித்துக்கொண்டிருக்கும் சுவிசில் மேற்குலக்கலாச்சாரம் இல்லையா? இங்கு எல்லாம் மேற்குலக்கலாச்சாரம் உள்ளது. பிறகு எப்படி இந்த நாடுகள் எல்லாம் உலகப் புகழ் பெற்றன?
ஒன்று வடிவாக விளங்கிக்கொள்ளுங்கள் மீரா ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் கலாச்சாரத்தில் தங்கவில்லை. அதன் உழைப்பும், சாதிக்கத்துடிக்கும் இளைஞா்களும் தான் முக்கிய காரணம்.
நீங்கள் புலம்பெயர்ந்ததே மாவீரர்களைக் காட்டித்தானே... அன்றே மக்கள் அனைவரும் ஒரு சேர இணைந்து போராடி இருந்தால் இன்று தமிழீழ தேசத்தில் நாம் இருந்திருப்போம்...இவ்வளவு இழப்புக்களை சந்தித்திருக்கத் தேவையில்லை...!
இன்றும் அதே போராட்டத்தைக் காட்டி சுகபோகம் காண்பவர்கள் தொகை எத்தனை... இவர்கள் தானா தமிழீழ விடுதலைக்காய் உழைப்பவர்கள்...! தாயகம் என்றால் வெக்கை என்போரும் வசந்தகாலச் சுற்றுலாச் செல்வோரும் தானா... தாயகத்தை நேசிக்கும் பெருமக்கள்....! கெஞ்சி கூத்தாடிக் கேட்டால் பிச்சை போடும் அளவில் தான் உங்கள் நிதி உதவி... அன்று துன்பத்தின் மத்தியிலும் தங்கப் பவுண்களாய் கொடுத்ததை தலைவரோ எவருமோ இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்....!
அதுப் போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருக்கவில்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்...!
இன்று அதே மக்கள் நிர்கதியாய் ஏன் நிற்கின்றனர்... உங்கள் பணத்தை எதிர்பார்த்து ஏன் நிற்கின்றனர்... நீங்கள் ஆட்ட ஆடும் நிலையில் ஏன் அந்த மக்கள் இருக்க வேண்டும்...அதுகூட அம்மண்ணைப் பலவீனப்படுத்தும் அது தெரியுமா.... இதைச் செய்வது எதிரிக்கு மிக இலகு....! அந்த மக்கள் தங்கள் காலில் தாங்கள் நிமிர்ந்து நிற்க வழி செய்வதே தகுந்தது அவசியம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
குருவிகளே உணர்ச்சிவசப்படாதீர்கள்
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
குருவிகளே புலம் பெயர்ந்த தமிழனில் ஆயிரம் சோகங்கள் கவலைகள் பிரிவுகள் எல்லாம் உண்டு அதை யெல்லாம் மறக்க நாங்கள் எமதுஉறவை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வை ஓரளவேனும் மறக்க தான தம்மாலான உதவியான நிதி உதவியை செய்கிறான் அவர்கள் மனதை காயப்படுத்த வேண்டாம்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சிறீரமணன் அவர்களே ...
நிச்சயமாக வயது பால் பிரதேச பாகுபாட்டுக்கப்பால் நாம் எமது மண்ணிற்கு மக்களுக்கு செய்யும் உதவிகள் அவை...அவை பிரசித்தத்திற்குச் செய்வதில்லை... அதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்...அது எமது பெற்றோருக்கு நாம் செய்யும் கடமை போன்றது... நான் இளைஞன் அம்மாவுக்கும் உணவு கொடுக்கின்றேன் என்றால் என்ன அர்த்தம்..அது மகனின் கடமை....வன்னிக்கு உதவினால்தான் உதவி என்பதல்ல... தமிழீழ தேசத்தில் எந்த மூலைக்கு உதவி போனாலும் அது எந்த வடிவத்தில் போனாலும் அது வரவேற்க்கப் பட வேண்டியதுடன் உற்சாகம் வழங்கப்பட வேண்டிய விடயமும் கூட....! அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை....ஆனால் தம்பட்டம் அவசியமில்லை என்பதே எமது கருத்து....!
பாலகுமாரையோ அல்லது எந்தத் தனிநபரையோ இந்த இடத்தில் நாம் கொண்டு வரவில்லை... மேலே தரப்பட்ட தகவலுக்குப் பதில் தந்தோம்...அவ்வளவும் தான்...!
குறிப்பாக தென்னிலங்கைச் சிறைகளில் வாடும் அப்பாவி இளைஞர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்... நாம் சொன்னதன் வேதனை புரியும்...அவர்களும் எம்மைப் போன்ற இளையவர்கள்... தாயகப் பற்றுறுதி கொண்டோர்...அவர்களில் பலரும் தாயகத்துக்காகத்தான் உழைத்தார்கள்.... ஆனால் அவர்களைப் பற்றி சிந்திக்க ஏன் இளைஞர்களே மறுக்கின்றனரோ....??! நாங்களும் இளைஞர்கள் தான் நாம் இப்போ சிந்திப்பது அந்த அப்பாவிகள் பற்றித்தான்....தாயக விடுதலை கிடைத்தாலும் அந்த இள இரத்தங்களின் விடுதலை என்னாவது...???!
அவர்களுக்கு குளப்படி செய்ய விருப்பமில்லையா... மேற்குலக காலாசாரத்தில் மிதக்க விருப்பமில்லையா...என்ன ஆசையில்லை.....இல்ல அவர்களுக்கு மனசுதான் இல்லையா...அவர்கள் சிறைகளுக்குள் படும் பட்ட வேதனைகளுக்கு விலை என்ன....????! சிந்தித்துப் பாருங்கள் சிலவேளை உங்களுக்குள்ளும் அந்த அனுபவங்கள் இருக்கலாம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
ஆம் அந்த இளைஞ÷களைப் பற்றி ஒருவரும் இப்போது கதைப்பதில்லை.
<b> </b>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
ஜுட் நான் சொல்ல வந்தது ..... ஒருவ÷ இப்படி வந்தால் குறிப்பிட்ட காலத்தில் அவரது குடும்பமும் வெளியேறும் போது அவரது வழித் தோன்றல்கள் இங்கே வளர ஆரம்பிக்கின்றன. இதனால் எமது நாட்டைப் போல் வர முடியாமல் உள்ளது...
<b> </b>
Posts: 213
Threads: 9
Joined: Nov 2004
Reputation:
0
வணக்கம் குருவிகள்
குருவிகளே நீங்கள் சொல்கிறீா்கள் நாங்கள் மாவீரா்களின் பெயரை பயன்படுத்தி இங்கே வந்தோம் என்று. நீங்கள் சொல்லவது நிறையப் பேருக்கு இங்கே போருந்தும். ஆனால் குருவிகளே ஒன்றை மறந்து விட்டீா்களே. நாங்கள் இங்கு அழைத்து வரப்பட்ட போது எங்களிற்கு வயது 6. எமது நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. நீங்கள் எப்படி எங்களை குற்றம் சொல்கிறீா்கள்? எங்களை அழைத்து வந்த பெற்றோா்களை தான் நீங்கள் குற்றம் சொல்ல வேண்டும். பொற்றோா்கள் என்ன இளைஞா்களா? இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள் குருவிகளே நாங்கள் விரும்பி இங்கு வரவில்லை. இப்பொழுது நாங்கள் எங்கள் நாட்டிற்கு வரலாம். ஆனால் இப்படி வந்து என்ன செய்யப்போகிறோம்? எமது நாட்டிற்கு பாரமாக தான் இருப்போம். எனவே தான் நாங்கள் ஒரு தொழிற்கல்வி படித்து விட்டு அதை எமது நாட்டிற்கு பயன்பட செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.
நாங்கள் பிரதேசவாதிகள் இல்லை குருவிகள். நீங்கள் தான் அதை இங்கே கொண்டு வந்தீா்கள். நாங்கள் தமிழீழ விளையாட்டுத்துறைக்கு நிதி உதவி மட்டுமே செய்வதாக உறுதியளித்தோம். அந்த மைதானத்தை எங்கே எப்படி கட்டுவது என்பது அவா்கள் தீா்மானித்தது. இப்பொழுது விளங்குகிறதா இன்றைய இளைஞா்கள் எப்படி சிந்திக்கின்றாா்கள் என்று?
இன்று சிறையில் எத்தனை தமிழ் இளைஞா்கள் வாடுகிறாா்க்கள் என்று எமக்கு தெரியாது. உங்களிற்கு வடிவாக தெரியும். அப்படியென்றால் நீங்கள் ஏன் அவா்களை வெளியில் கொண்டு வர முயலவில்லை? அவா்களை பற்றி வெறுமனே கவலைப்பட்டு ஒரு பலனும் இல்லை. அவா்களை வெளியில் கொண்டு வர நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீா்கள்? சொல்லுங்கள் அதையும் இளைஞா்களாகிய நாங்களே உங்களிற்காக எமது உறவுகளிற்காக செய்கிறோம்.
வெளிநாட்டில் உள்ள எங்களைப் பற்றி நீங்கள் இப்படியெல்லாம் பேசுகிறீா்களே. நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன். இங்கு நான் வாழும் சுவிசில் விடுதலைப்புலிகள் அமைப்பை தவிர வேறு எந்த ஒரு அமைப்பையும் நாங்கள் ஆதரப்பதில்லை. ஆனால் இன்று தமிழீழத்தில் பிளட் அமைப்பு எப்படி தான் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது? அதில் எப்படி உங்களைப் போன்ற இளைஞா்கள் சோ்ந்தாா்கள்? ஏன் நீங்கள் அவா்களை தடுக்கவில்லை?
இதைவிட இங்கே சில தவறுகளை செய்தாலும் எமக்கு அவா்களை விட நாட்டுப்பற்று அதிகம் என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லை.