Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி
#61
சர்ச்சையைக் கிளப்பியுள்ள நியமனம்!

அஜாதசத்ரு

இராணுவக் கெடுபிடி மற்றும் ஆயுதம் தாங்கிய பல்வேறு தரப்பினரின் அச்சுறுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கல்விச் செயற்பாடுகள் முழுமையாக செயலிழந்துள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் மீண்டுமொரு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உட்பட வடக்கு, கிழக்கு கல்விச்சமூகம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், இந்த நியமனத்தை தம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அண்மையில் நடைபெற்றபோது பேராசிரியர்களான எஸ்.கந்தசாமி, ஆர்.குமாரவடிவேல், இரத்தினஜீவன் ஹூல் ஆகியோர் முறையே தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களில் பேராசிரியர் ஆர்.குமாரவடிவேலை யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு சிபார்சு செய்தது.

எனினும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சினை நிராகரித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இரத்தினஜீவன் ஹூலை யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக நியமித்து பெரும் சர்ச்சையொன்றை எதிர்கொண்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மாணவர்களின் விருப்பதிற்கு முற்றிலும் நேர்மாறானதோர் போக்கொன்றையே கடைப்பிடித்துள்ளதாகவும் இந்த நியமனத்தை தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லையென்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பெரும் நெருக்கடிகளுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் கட்டிக்காக்கப்பட்டுவரும் தமிழ் மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் நோக்குடனேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவே நாம் கருதவேண்டியுள்ளது.

எனவே, தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளுக்கு முற்றிலும் எதிர்மாறான இந்த நியமனத்தை ரத்துச் செய்யாவிட்டால் யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது.

தமிழ் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை சீர்குலைக்க முற்படும் இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கைவிட்டு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.

அதேநேரம், யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான செய்தி வெளியான வியாழக்கிழமையன்றே ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை நேரடியாக சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன் இந்த நியமனத்தை உடன் ரத்துச் செய்யுமாறும் கோரியுள்ளனர்.

இரத்தினஜீவன் ஹூல் யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பான நிலைமையொன்றைத் தோற்றுவித்துள்ளது.

அது மட்டுமன்றி, இந்த நியமனமானது யாழ்.குடாநாட்டின் தற்போதைய இயல்புநிலைமையைக்கூடச் சீரழித்துவிடலாமென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் காவலரண்கள், அதிகரித்துள்ள படையினரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால கல்விச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலையிலுள்ள யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் மீளமுடியாத மீண்டுமோர் நெருக்கடியான நிலைமையை தோற்றுவித்துள்ளது என்பதையும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போன்ற பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தீர்க்கமானதோர் முடிவெதையும் எடுக்காமலிருப்பது வடக்கு,கிழக்கு கல்விச் செயற்பாடுகளில் பெரும் பாதகமானதோர் நிலைமையை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாமென்றே கருதப்படுகின்றது.

இராணுவ கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மட்டுமன்றி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்ளக செயற்பாடுகளும் சீராக இயங்கமுடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் நல்லூரிலுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு அலுவலகத்திற்கு மகஜர் கையளிப்பதற்காக ஊர்வலமாகச் சென்ற வேளையில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தையடுத்தே கல்விச் செயற்பாடுகள் முற்றாக சீர்குலைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைவிட, திருகோணமலை உட்துறைமுக வீதியில் வைத்து 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு இரு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் அது தொடர்பாக பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கொழும்பிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதிபெற்று திருகோணமலைக்குச் சென்ற விசேட அதிரடிப்படையினரே 5 தமிழ் மாணவர்கள் மீதான படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை நேரடியாகச் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தபோதும்கூட அது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மாறாக, அந்த 5 மாணவர்களும் அரச படையினராலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை நிரூபிக்கும் வகையில் புகைப்படமெடுத்து வெளியுலகிற்கு வெளிக்கொணர்ந்த ஊடகவியலாளர் சுகிர்தராஜன் சில தினங்களில் படுகொலை செய்யப்பட்டார்.

சாவகச்சேரி பகுதியிலுள்ள பல பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், படைத்தரப்பினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதெல்லாவற்றிற்குமப்பால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் பலர் கடந்த சில மாதங்களாக அங்கிருந்து படிப்படியாக வேறிடங்களுக்கு அச்சம் காரணமாக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதாகவும் அறிய வருகிறது.

வடக்கு, கிழக்கில் தமிழ்ச் சமூகத்தினர் மீதான கல்விச் செயற்பாடுகளில் இவ்வாறானதோர் நெருக்கடியான நிலைமைகள் தோன்றியுள்ள இவ்வேளையில்தான் யாழ். பல்கலைக்கழகத்தின் ஆறாவது துணைவேந்தராக இரத்தினஜீவன் ஹூல் நியமனம் பெற்று மீண்டுமோர் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட இலத்திரனியல் பேராசிரியரான இரத்தினஜீவன் ஹூல், பல்கலைக்கழக மனித உரிமைகளுக்கான ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் (UTHR) என்ற அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளரான ராஜன் ஹூல் ,என்பவரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.thinakural.com/New%20web%20site...2/Article-3.htm
Reply
#62
முறிந்தபனை மரம் என்ற புத்தகத்தை எழுதியவர்களுக்கும் சரி அதை தனது goodwill & influence பயன்படுத்தி மேற்கத்தேய பிரசுரிப்பாளர்களின் பெயரில் (ஒரு credibility injection கொடுக்க முயற்சித்து)பிரசுரித்தவர்களிற்கும் குறிக்கோள் ஒன்றாகத்தான் இருந்தது, தமிழ்த் தேசியவிடுதலைப்போரின் மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் மக்களை குளப்புவது திசைதிருப்புவது, முக்கியமாக படித்த மக்களை பல்கலைக்கழக மாணவ சமூகத்தை.

ரட்ணஜீவன் கூல் இற்கும் UTHR-J இக்கும் சம்பந்தமில்லை என்ற நாடகமும் புலி ஆதரவாளர்களால் ரட்ணஜீவனுக்கு உயிர் ஆபத்து என்ற ஒப்பாரியும் UTHR-J இன் முகத்திரை கிழிந்து அது ஒரு பிரச்சார இயந்திரம் என்று இனங்காணப்பட்டாப்பிறகு நடை பெற்றது. இதை ரட்ணஜீவன் செய்யவில்லை சிறிதரனும் ராஜன் கூலும் தமது UTHR-J பொட்டுக்கோடுகள் உலகறியச் செய்யப்பட்டதால் அதற்கு முனைப்போடு செயற்பட்ட தமிழ் அமைப்புகள் மீது ஒரு எதிர்ப்பிரச்சார தந்திரமாக கய்யாண்டிருந்தார்கள். அதாவது ரட்ணஜீவன் கூல் UTHR-J ஓடு சம்பந்தப்பட்டவர் அல்ல ஒரு அப்பாவி, இருந்தாலும் அவரிற்கு எதிராக இந்த புலி ஆதரவு தமிழ் அமைப்புகள் பிரச்சாரம் செய்கிறார்கள் அவருடை உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று அனுதாபத்தை சம்பாதிக்க முற்பட்டவர்கள்.

ரட்ணஜீவன் கூல் முறிந்த பனைமரத்தை எழுதியவிர்களில் ஒருவர் அல்ல அதை புத்தகமாக பிரசுரிக்க உதவியவர் மாத்திரமே, UTHR-J அறிக்கைகளை எழுதவில்லை எழுதியவற்றை இணையத்தில் பிரசுரிக்க ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனது இணைய வசிதகள் மூலம் உதவியவர் மாத்திரமே என்று ரட்ணஜீவனின் covert தேசியவிரோதச் செயற்பாடுகள் backfire பண்ணும் போது explanation ஆக அல்ல silly excuses ஆக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு சிறிது காலத்திற்கு முன்னர் யூட் ஆரம்பிக்க முயன்ற ஒரு முயற்சி இராஜதந்திரிகளிற்கான மாதாந்த சஞ்சிகையை உதாரணமாக எடுப்போம். இன்று அது நடைமுறையில் இருக்கிறது என வைத்துக் கொள்வோம், அதில் ஆசிரியர் குழு அந்த சஞ்சிகையின் உள்ளடக்கத்தை தீர்மானிக்கிறது, மொழிபெயர்பாளார்கள் மொழிபெயர்த்து உதவ பல்மொழி மாதாந்த சஞ்சிகையாக பிரசுரிக்கப்படுகிறது. நான் அதில் ஒரு மொழிபெயர்பிற்கு பொறுப்பாக இருக்கிறேன், எனது அவதானிப்பின் படி சஞ்சிகையின் உள்ளடக்கம் பக்கச்சார்பாக தேசியத்திற்கு எதிராக இருந்தால் அதை எதிர்த்து திருத்த வேண்டும், முடியாவிட்டால் காரணத்தை தொளிவாக அறிவித்துவிட்டு விலகிடவேண்டும். எனது பங்கு மொழிபெயர்ப்பு மாத்திரமே நான் அதை சமூகசேவையாக செய்தனான், ஆசிரியர் குழுதான் தேசியத்திற்கு எதிராக பக்கச்சார்பாக உள்ளடக்கத்தை தீர்மானித்தது நான் நிரபராதி என்று 8...10 வருடங்களிற்கு பிறகு தேவை வரும் போது முதலைக்கண்ணீர் வடித்து நிரபராதி ஆகிவிட முடியாது.
Reply
#63
Quote:ரட்ணஜீவன் கூல் முறிந்த பனைமரத்தை எழுதியவிர்களில் ஒருவர் அல்ல அதை புத்தகமாக பிரசுரிக்க உதவியவர் மாத்திரமே

ம்ம்ம்ம்ம்.... "அவர் பிள்ளையை பெறவில்லையாம், ஆனால் பிள்ளையை வளர்க்கிறாராம்!!!" :roll:
Reply
#64
அகற்றப்பட்டுள்ளது.
.....
அகற்றப்பட்டுள்ளது.
Reply
#65
<b>யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஜே.வி.பி. செல்வாக்கு செலுத்த இரட்ணஜீவன் ஹூலின் நியமனம் வழிவகுக்கலாம்.</b>

UTHR என்ற அமைப்பு ஜே.வி.பி.காலத்தில் (19980/90)ஜே.வி.பி.க்கு ஆதரவான களனி பல்கலைக்கழக சிங்கள பிரிவு பேராசிரியரும் இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் கழக செயலாளருமான ஹேமா குணதிலக்கவினால் ஜே.வி.பி.யின் கரந்துறை அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்த தகவல் 15 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் வெளிவந்துள்ளது.
Three Mules and Sister Rajani

அதே வேளை சிறிதரன் யாழ்ப்பாணத்தில் ஒரு தனியான இயக்கத்தை மனிதஉரிமைகள் சமூக அநீதிகளுக்கு எதிரான அமைப்பாக வழிநடத்தினார். Who is this Fool?
அந்த அமைப்பு உண்மையில் ஜே.வி.பி.யின் யாழ். கிளைக்கான அத்திவார அமைப்பாகும். இராஜினி திரணகமவும், சிறிதரனும், ராஜன் ஹூலும் UTHR யாழ் பிரிவை இந்த அமைப்புடன் இணைந்த அமைப்பாக நடத்தினர். இராஜினி திரணகமவின் கணவர் திரணகம ஒரு முக்கிய ஜே.வி.பி. அங்கத்தவர். தென்பகுதியில் அவரை இராணுவம் தேடியதால் யாழ்ப்பாணத்தில் ஒழிந்திருந்தார்.

சிவராம் (தாராக்கி) ஜே.வி.பி. பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி சில நாட்களில் கொல்லப்பட்டார். இந்த கட்டுரையில் ஜே.வி.பி. எப்படி ஊடுருவி மக்களை தன்பக்கம் கவருகிறது என்று விளங்கப்படுத்தி இருந்தார். "The writing is on the wall, and it is in red", By: Taraki, Source: Daily Mirror - April 13, 2005


ஜே.வி.பி. தாங்கள் ஜே.வி.பி. என்று சொல்லிக்கொண்டு தமக்கு செல்வாக்கில்லாத இடத்தில் பிரவேசிப்பது குறைவு. அவர்கள் அந்த பிரதேசத்துகிகு என்று ஒரு அமைப்பை உருவாக்கி இந்த பிரதேசத்தின் நியாயமான பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆரம்பிப்பார்கள். இந்த அமைப்பு வலுப்பெற்றதும் ஜே.வி.பி. கொஞ்சம் கொஞ்சமாக இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். வடக்கு கிழக்கில் பிரச்சினை மனிதஉரிமைகளாகும்.

ரட்ணஜீவன் ஹூல் துணைவேந்தரானால் சிறிதரன், திரணகம ஜே.வி.பி. மீண்டும் புதிய அல்லது பழைய இயக்கங்களின் பெயரில் தோன்றி, மக்களுக்கு நல்லது செய்வதாக காட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கு மாற்று தலைமையை அல்லது போட்டித்தலைமையை ஏற்படுத்தும் சாத்தியம் பெருமளவில் உள்ளது.

இந்த திட்டம் நன்கு தெரிந்த மகிந்த இராஜபக்ச பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு மாறாக ஹூலை நியமித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஹூல் அங்கத்தவர். அவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு போதிய பணம் ஒதுக்காவிட்டால் சண்டை பிடிப்பார், வழக்கு போடுவார், அரசியல் செல்வாக்கு பாவித்து சிக்கல் தருவார் என்று எண்ணியே, அப்பாவியான செல்வாக்கோ, முதுகெலும்போ இல்லாத (ஆனால் நல்ல ஆசிரியர்) குமாரவடிவேலை பரிந்துரைத்தது. ஜே.வி.பி மகிந்தவுக்கு, ரட்ணஜீவன் ஹூல் தமது நியமன தெரிவு என்று சொல்லியிருக்க வேண்டும். ஆக ரட்ணஜீவன் ஹூல் யாழ்ப்பாணத்தில் போட்டித்தலைமையை உருவாக்கி, தமிழீழ தாகத்தை அழிக்க, வழிதிறக்கும் திறவுகோலாக நியமனமாகிறார்.

<b> கீழேயுள்ள குறளின்படி இப்பொருளே மெய்பபொருளாகும்.</b>
''
'' [.423]
Reply
#66
Quote:ஹூல் அவர்களே!!
அதற்குள் நீங்கள் அச்சேற்றிய உடைந்த பனையை எழுதிய இராஜினிக்கு நடந்ததை மறந்துவிடாதீர்கள்.

உண்மையில் யாழ். பல்கலைக்கழகம், பல்கலைக்கழகமாக இயங்கிய வரலாறே இல்லை. நல்ல கண்டுபிடிப்புகளோ ஆய்வுகளோ அங்கே நடப்பதில்லை.

நீங்கள் போக வேண்டிய இடம் வன்னி தொழில்நுட்பக்கல்லு}ரி. சிறப்பாக நடத்துகிறார்கள். இன்னுமொரு MIT யை உருவாக்க ஒத்துழைத்த பெருமை உங்களை சாரும். இந்த முட்டாள்களுக்கு உங்கள் நாட்டுப்பற்றை விளங்கப்படுத்தி மினக்கடாமல் வன்னியில் போய் விளங்கப்படுத்துங்கள். புூரணபாதுகாப்புடன் கேட்டதெல்லாம் தருவார்கள். தாராளமாக கட்டி எழுப்புங்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தை.

சரியான யோசனை. ஹூல் இதைப்பார்ப்பாரா என்பதே இப்போதைய எனது சந்தேகம்.
Reply
#67
இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.
Reply
#68
ட்
ThamilMahan Wrote:இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.

இது நல்ல ஒரு யோசனை போயிட்டு வாங்க சாமி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ச்ப்ப்
.

.
Reply
#69
ThamilMahan Wrote:இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.

இதோடா,,, ஜோவ் என்ன யாழ் பல்கலைகழகம் நேற்றா ஆரம்பிச்சாங்க? இவ்வளவு நாளும் யாழ் பல்கலைகழகத்தை கூலா நடத்தி உலக தரம் வாய்ந்த பல்கலைகழகமாக மாற்றினாரு? அங்க படிக்கிற மாணவர்களே அவரை எதிர்க்கிறாங்க இவர் ஒருத்தர் தூக்கிபிடிக்கிறார்,,,, :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#70
poonkudiyal Wrote:மதிப்பிற்குரியவர்களே வணக்கம்!
தங்களின் ஆதங்கங்கள் எமக்கு புரிகின்றது. நீங்கள் ஒருசாரர் ரட்ணஜீவன் கூலின் நியமனத்திற்காக குரல் கொடுக்கின்றீர்கள். ஆனால் மற்றையவர்கள் தடுக்கின்றார்கள். ஏன்? அவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன? சிந்தித்தோமா?
இவ்விடயத்தை இணையவலையில் ஏற்றிய தமிழ் மகனின் (மகான்) கருத்தென்ன? ஆழ நாம் நோக்கினோமா? அவர் சொல்ல வரும் விடயம் யாதென பார்த்தோமா? அவர் எழுதுவதற்கெல்லாம் நாமும் பதில் எழுதியும் அவர் இன்னும் மேற்தட்டு (படிப்பை) நிலையிலிருந்து இறங்காமல் வீம்பிற்காக வாதம் செய்வதை அவரின் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக கருதுகின்றேன். மேற்படி தமிழ்மக(h)ன் கூலின் மாணவன் என்பது மட்டும் எனக்கு தெரிகின்றது. குருவிற்காக மதிப்பளிக்கும் அவர் பாங்கு மெச்சத்தக்கது.

மன்னிக்கவும். நான் ஒரு நாள்கூட அவரது மாணவராக இருந்ததில்லை. இன்னும் ஏன் நான் அவரை ஒரேயொரு முறைதான் சந்தித்திருக்கிறேன்.


poonkudiyal Wrote:அதற்காக பசுவிற்கு கொம்பு ஏன் தலையில் இருக்கின்றது. முதுகில் இருந்தால் என்ன? என வாதம் பண்ணுவதும் சரியில்லை. குடும்பத்தில் கணவனோ அன்றி மனைவியே சரியில்லை என்று கண்டால் பேசித்தீர்க்கப்பார்ப்போம். அன்றி பிரிந்து வாழப்பார்ப்போம். அதைப்போன்றே யாழ் மாணவர் சமுதாயமும் தற்போது வேண்டிநிற்கின்றது. திரு. கூலவர்களுக்கு இதுவரைக்கும் யாழ் மண்ணின்மேல் இல்லாத பற்று இப்போ வரக்காரணம் என்ன? தான் பிறந்த மண்பற்று இல்லையென சொல்ல வரவில்லை. யாழ் மாணவர்களின் கல்வித்தகமைபற்றிய ஆர்வம் இல்லாதது ஏன்? பேராதனையில் சேரமுடிந்த அவருக்கு ஏன் பிறமாவட்டங்களில் சேர முடியவில்லையா? அல்லது பிற மாவட்டங்களில் வேலை செய்ய முடியவில்லையா?

ஆமாம் முடியவில்லை. காரணம் இலங்கையில் பொறியியல் பீடம் பேராதனை மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களில் மட்டுமே இருக்கிறது.

poonkudiyal Wrote:எத்தனை கோடிகளை துறந்து இலங்கை வந்திருந்தாலும் தாயகத்திற்கு எதிராக இப்பொதும் கருத்துடையவராக இருப்பின் அவரின் சேவை தேவையில்லை. அவர் எப்படி படித்து முன்னுக்கு வந்தாரோ அதேபோன்று தமிழ் மாணவர் சமுதாயமும் முன்னுக்கு வரும். நான் நினைக்கின்றேன் 1999ம் ஆண்டு யாழ் இந்துக்கல்லு}ரியில் பயின்ற மாணவன் இளங்குமரன் என்பவர் கூல்போன்றே கணிதத்துறையில் பயின்று இதுவரை எடுக்கமுடியாத அளவிற்கு 397 புள்ளிகள் பெற்று இலங்கை ரீதியில் முதன்மை பெற்றிருக்கின்றார். இவர் தற்சமயம் அவுஸ்ரேலியாவில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கின்றார். இவரை அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் தங்களுடன் வேலைசெய்வதற்கு ஒப்பந்தம் செய்வதாகவும் அதற்கு ஒத்துழைக்கும் வண்ணமும் கேட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது. இதை எழுதுவதன் காரணம் மேற்படி கூலைவிட திறமையானவர்கள் எம்தமிழ்ச்சமூகத்தில் நிரம்பவே இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு எதிராக சிங்களத்தின் பொறியில் கூல்போன்றோர் மட்டுமன்றி கனடாவில் புூலோகசிங்கம் போன்றோரும் இருக்கின்றார்கள்.

இருக்கிறார்கள், நான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அதில் எத்தனைபேர் மேற்கத்திய எசமான்களுக்கு சேவை செய்வதை விடுத்து தனது மக்களுக்கு சேவை செய்வதே மேல் என்று நினக்கிறார்கள்? நீங்கள் தரும் மேற்படி உதாரணமே அதற்குச் சான்று. நாசாவுக்கு போய் அமெரிக்கன் இன்னும் உலகில் வலுப்பெற உதவுவார்கள்.

poonkudiyal Wrote:ஆகவே மேற்படி கூலுக்கு வக்காலத்து வாங்கி அவரிடம் கூலான வார்த்தை கேட்பதைவிடுத்து 'நிதர்சனத்திற்கு' வாருங்கள். கூலை வேண்டாமென்பவர்கள் அவர்வந்து விரிவுரை செய்தால் அது மண்டையில் ஏறுமா? மேற்படி விடயம் தெரிந்தும் திரு கூல் அங்கேதான் செல்வேன் என்றால் அவர்தம் மண்டையில் (அவர் மண்டையெல்லாம் கூழ்) என்னதான் இருக்கும். ஆகவே கூலும் சரி, அவரின் விசிறிகளும் சரி, அவர்களை ஆட்டுவிக்கும் சீலங்கா மன்னிச்சிருங்கோ சிறீலங்காவும் சரி தாம் செய்ய நினைத்தது (பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் மாறியகதை)போய் அதன் எதிர்விளைவாக ஏதாவது பயங்கரத்தில் மாட்டி முழிக்கப்போகின்றார்கள். காரணம் யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பு கூல் தமது வளாகத்திற்குள் நுழைவதை பார்க்கின்றோம் என சவால் விட்ட நிலையை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்காகவே அவ்வாறு எழுதியிருக்கின்றேன்.

புூங்குடியாள்
வாழவிடு அன்றி வழிவிடு

அது சரிதான் நான் ஏற்கனவே சொன்னது போல இந்த முட்டாப்பயலுகளுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகுது. போராட்ட வரலாற்றில் எத்தனையோ அறிவுஜீவிகளை விரட்டியடித்தோம் அதில் இவரும் ஒருவராக இருந்துவிட்டுப் போகிறார். இந்தக்குழப்பத்தினால் ஹூல் தனது இராஜினாமாவைச் சமர்ப்பிப்பாரானால் நட்டம் அவருக்கல்ல, யாழ். பல்கலைக்கழகத்துக்குத்தான்.
Reply
#71
[quote=Danklas]
இதோடா,,, ஜோவ் என்ன யாழ் பல்கலைகழகம் நேற்றா ஆரம்பிச்சாங்க? இவ்வளவு நாளும் யாழ் பல்கலைகழகத்தை கூலா நடத்தி உலக தரம்

உலக தரம்?.... ஹாஹா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#72
ஞாயிறு 12-03-2006 17:59 மணி தமிழீழம் [நிருபர் செந்தமிழ்]

ரட்ணஜீவன் கூல் பதவியேற்பாரானால் மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் - கலைப்பீடம் எச்சரிக்கை.
மாணவர்களின் மன உணர்வுகளை கவனத்தில் எடுக்காது பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி ஏற்பாரேயானால் பெரியளவிலான மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் என யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.புருசோத்தமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்சமூகத்துக்கும், தமிழ் மாணவர்களுக்கும் துரோகம் இழைத்த பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் எமது பல்கலைகழகத்தின் துணைவேந்தராக வருவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் தேசிய விரோதியான ரட்ணஜீவன் கூலை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிப்பதன் மூலம் தமிழ் மாணவர்களது கல்வியையும் தேசிய உணர்வுகளையும் மழுங்கடிக்க முயல்கிறார். இதனை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் புருசோத்தமன.

பல்கலைக்கழக சமூகத்தினதும் மாணவர்களினதும் மனஉணர்வுகளுக்கு மதிப்பளிக்காது பேராசிரியர் கூல் ஜனாதிபதியின் விருப்பப்படி துணைவேந்தர் ஆசனத்தில் அமர முற்படுவாரேயானால் அவருக்கு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் குதிப்பதை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

நன்றி>புதினம்
.

.
Reply
#73
ThamilMahan Wrote:இந்த முட்டாப்பயலுகளோட மாரடிக்கிறத விட்டு ஹூல் ஐயா விலகிக்கொள்வதுதான் நல்லது. எனக்குத்தெரியும் நீங்க வந்தா பல்கலக்கழகத்தின், குறிப்பா விஞ்ஞான பீட வளர்ச்சிக்கு உதவுவீங்க. பொறியியல் பீடம் ஒன்றை நிறுவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பீங்க. ஆனா இந்தப்பயலுகளுக்கு அது எங்க புரியப்போகுது. பேசாம குடும்பத்தோட அமெரிக்கா வந்து சந்தோசமா இருங்க. அவங்கள் பொங்கல் விழாவும் ஊர்வலமும் நடத்தி முடியுமெண்டா தங்கட பல்கலைக்கழக கல்வித்தரத்தை உயர்த்தட்டும்.


மேற்குறிப்பிட்ட உமது புலம்பலில் இருந்து தெரிவது, நீர் ஈழத்தில் இருந்து வெகு தூரத்தில் தனிமையில் இருந்து ஈழத்தைப் பற்றிய கற்பனை உலகில் இருப்பது.கூலின் பின் புலம் பற்றியோ யாழ் பல்கலைக் கழகத்திற்கு அவர் அனுப்பபடுவதன் அரசியல் சதி பற்றியோ எதுவித அறிவோ இன்றி மற்றவரை முட்டாள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ,ஒரு அடிமுட்டாள் என்று.

நான் முன்னரே கூறியபடி எமக்கோ அல்லது யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கோ விடிவைத் தருவது எமது தேசிய விடுதலயே அன்றி வேறொன்றும் அல்ல.இதன் பாற்பட்டு போராடும் முன்னணி சக்தியாக உள்ள யாழ் மாணவர்களை நிர்வாகதினூடாக தனிமைப் படுத்துவது, போராட்டத்தின் உக்கிரத்தை மழுங்கடிக்கும் வகையான நடவடிக்கைகளை பல்கலைக் கழகத்திற்குள் மேற் கொள்வது,பல்கலைக் கழ்கத்தை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிடியை பல்கலைக் கழக மாணவர் மத்தில் வலுப்படுத்துவது போன்ற இன்னொரன்ன நோக்குடனயே இந்த நியமனம் இடம்பெறுகிறது.கூல் வந்தால் ,அரசாங்கத்தின் காசு வரும் தான் ,பல்கலைக் கழகம் அபிவிருத்தி செய்யப் படும் தான் இதற்காக நாம் கொடுக்கும் விலை எமது தேசிய விடுதலைப் போரட்டாமாகத் தான் இருக்கும்.இதற்காகவா ஆயிரம் ,ஆயிரம் மாவீரர் தம் இன்னுயிரை ஈந்தனர்?

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பொங்கு தமிழ் போராட்டத்தை எள்ளி நகையாடியதன் மூலம் , நீர் உம்மை வெகுவாக அடயாளம் காட்டி உள்ளீர். இதற்கு மேலும் உம் போன்றவரின் கருத்துக்கு பதிற் கருத்து எழுத வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

கூல் ஐயாவுக்கும் ,உம் போன்ற அறிவிலிகளுக்கும் நல்ல பாடம் வெகு விரைவில் புகட்டப்படும்.
Reply
#74
Birundan Wrote:ஞாயிறு 12-03-2006 17:59 மணி தமிழீழம் [நிருபர் செந்தமிழ்]

ரட்ணஜீவன் கூல் பதவியேற்பாரானால் மாணவர் போராட்டங்கள் வெடிக்கும் - கலைப்பீடம் எச்சரிக்கை

இந்தக்கலைப்பீடத்தை factory என்றுதான் விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள் அழைப்பார்கள். இவர்கள் பல்கலைகழகம் வருவதே ஒரு பொழுதுபோக்கிற்குத்தான். ஆராயச்சி கண்டுபிடிப்பு என்றால் எதுவுமே தெரியாது.


[quote=narathar]நான் முன்னரே கூறியபடி எமக்கோ அல்லது யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கோ விடிவைத் தருவது எமது தேசிய விடுதலயே அன்றி வேறொன்றும் அல்ல.இதன் பாற்பட்டு போராடும் முன்னணி சக்தியாக உள்ள யாழ் மாணவர்களை நிர்வாகதினூடாக தனிமைப் படுத்துவது, போராட்டத்தின் உக்கிரத்தை மழுங்கடிக்கும் வகையான நடவடிக்கைகளை பல்கலைக் கழகத்திற்குள் மேற் கொள்வது,பல்கலைக் கழ்கத்தை அபிவிருத்தி செய்வது என்ற போர்வையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிடியை பல்கலைக் கழக மாணவர் மத்தில் வலுப்படுத்துவது போன்ற இன்னொரன்ன நோக்குடனயே இந்த நியமனம் இடம்பெறுகிறது.கூல் வந்தால் ,அரசாங்கத்தின் காசு வரும் தான் ,பல்கலைக் கழகம் அபிவிருத்தி செய்யப் படும் தான் இதற்காக நாம் கொடுக்கும் விலை எமது தேசிய விடுதலைப் போரட்டாமாகத் தான் இருக்கும்.இதற்காகவா ஆயிரம் ,ஆயிரம் மாவீரர் தம் இன்னுயிரை ஈந்தனர்?

நீர் சாம்பல் மேட்டிலென்றாலும் தமிழீழம் கிடைத்தால் சரி என்று நினைப்பவர். நான் தமிழீழம் உலகிலேயே ஒரு சிறந்த, வளர்ச்சிபெற்ற நாடாக வரவேண்டும் என்ற அவாவினால் கருத்துக் கூறுபவன். என்னைப்பொறுத்தவரை தலைவர் தமிழீழத்தைப் பெற்றுத்தருவார் என்ற அசையாத நம்பிக்கை உண்டு. ஆனால் அந்த ஈழம் சிறந்த முறையில் உருவாக்க நிறையப்பேரின் ஒத்துழைப்புத் தேவை. அவர்களில் ஒருவர் ஹூலாக இருந்தால் நன்றாக இருக்குமென்பதுதான் எனது எண்ணம்.

narathar Wrote:அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பொங்கு தமிழ்

இங்கே பொங்கு தமிழ்பற்றி நான் ஒருதரம்கூட பிரஸ்தாபிக்கவில்லை. எங்கிருந்து உமக்கு இந்த பொங்குதமிழ் பற்றிய எண்ணம் வந்தது என்று தெரியவில்லை.


[quote=narathar] கூல் ஐயாவுக்கும் ,உம் போன்ற அறிவிலிகளுக்கும் நல்ல பாடம் வெகு விரைவில் புகட்டப்படும்.

சரிதான். தேசவிடுதலையில் உண்மையான அவாக்கொண்டவர்கள் நாம். எமது கருத்து உங்களுக்கு ஒத்துவராவிட்டால் விட்டுவிடுங்கள். அதற்காக எம்மை தேசவிரோதிகளாக சித்தரிக்க முற்படாதீர்கள். அது எம்மனதை வேண்டுமென்றே புண்படுத்துவதற்கு ஒப்பானது.

எனது ஒரே கவலை ஒரு last name பிரச்சனைக்காக ஒரு கல்விமானை வீணே புறந்தள்ளக்கூடாதென்பதுதான். உங்களிடம் அவர் தேசத்துக்கு விரோதமானவர் என்பதற்குரிய சரியான ஆதாரங்கள் இருக்கிறதா?(புத்தகம் எழுதினார், வெளியிட்டார், இந்து மதத்தை நையாண்டி செய்தார் என்பதெல்லாம் சரியான ஆதாரமாகாது). அப்படி ஆதாரம் இருக்குமானால் அவரைப்புறந்தள்ளுவதில் உங்களுக்கு துணைநிற்க நாங்களும் தயாராயிருக்கிறோம். அதைவிடுத்து உங்களின் "புடோல்" நியாயத்துகாக ஒரு கல்விமானைப் புறந்தள்ள நாங்கள் தயாராயில்லை.
Reply
#75
இங்கு இந்து மதத்திற்கு எதிரா ரட்ணஜீவன் எழுதியதால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்ற அனாவசியமான கீழ்த்தரமான எதிர்ப்பிரச்சாரத்தை தவிர்த்தால் நல்லம். பேராசிரியர் ஆய்வு ஆராச்சி என்று பந்தாபண்ணினால் மாத்திரம் காணாது, கொஞ்சம் அறிவுபூர்வமாக உங்கள் நிலைப்பாட்டை வைக்க முயற்சிக்கவும், கல்வியின் பெயரால் மக்களை ஏமாத்துவதை தவிர்க்கவும்.
Reply
#76
யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்யவும்.-தமிழ் மக்கள் பேரவை

- இராவணன் - ஆழனெயலஇ 13 ஆயசஉh 2006 03:23

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்யமாறு கோரி திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வ.விக்நேஸ்வரன், சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றினை நேற்று ஞாயிற்றுக் கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஜீவன் ஹ_ல் அவர்களை தாங்கள் நியமித்துள்ளீர்கள். இந் நியமனத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். இந் நியமனத்தை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஏனெனில் தங்களால் எடுக்கப்பட்ட இந்த முடிவானது கபடத்தனமான ஒரு அரசியல் நியமனமென நாங்கள் கருதுகின்றோம். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சமூகம் தமிழ் தேசிய போராட்டத்தின் முக்கிய உந்துவீச்சாக இருப்பதனை நீங்கள் உணர்ந்து யாழ்சங்கதி பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்சங்கதிடினை முடக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்களுக்கும் பீடாதிபதிகளுக்கும் இடையில் முரண்பாடான நிலை ஒன்றினை பேணிப்பாதுகாப்பதினுடாக தமிழ் தேசியத்திற்கு சார்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் செயல்படுவதனை தடுத்து நிறுத்துவதே உங்கள் நியமனத்தின் முக்கிய நோக்கமாகும். தாங்கள் அரசு தலைவராக பதவியேற்றதன் பின்னர் தங்களால் வழங்கப்பட்ட, வழங்கப்பட்டு வருகின்ற அத்தனை நியமனங்களும் தமிழ் மக்களுக்கும், தமிழ் மக்களினது தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்களுக்கே வழங்கப்பட்டு வருவதனை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். சங்கதிஇராணுவத் தளபதியின் நிமனம், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கொட்டகதெனியவின் நியமனம், அமைச்சு செயலாளர்களின் நியமனம், வங்கிகளின் புதிய தலைவர்களின் நியமனம், என ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தால் அத்தனையும் சமாதான விரோத சக்திகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தங்களால் அறிவிக்ப்பட்டுள்ள புதிய உபவேந்தர் அவர்கள் தமிழ் தேசிய போராட்டதிற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் எதிரான கருத்தைக் கொண்டுள்ளவர் என ஒவ்வொரு தமிழ் மக்களும் மாணவர்களும் நன்றாக அறிந்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட புதிய வெட்டுப் புள்ளி அடிப்படையில் வடக்கு கிழக்கசை; சேர்ந்த நு}ற்றுக்கணக்கான மாணவர்கள் பின்தள்ளப்பட்டு பல்கலைக்கழக அனுமதி மறுக்கப்பட்டு அவர்களும் அவர்களது பெற்றோரும் விரக்தியடைந்த நிலையிலுள்ளனர். இந்நிலையில் புதிய நியமனம் மூலம் வடக்கு கிழக்கிலுள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகமும் தங்களது இந்நியமனத்தை எதிர்த்து நிற்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். சமாதானம் மலர வேண்டும் எனவும் ஜெனிவா ஒப்பந்தம் புூரணமாக அமுல்படுத்தப்பட்டுசங்கதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடக்குமெனவும் மேடைக்கு மேடை கூறிவரும் தாங்கள் மறு புறத்தில் சமாதானத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாதென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அத்துமீறி குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் செயற்பாடு காரணமாகவும் படைத்துறை அதிகாரியின் மிலேச்சத்தன அதிகார நடவடிக்கையின் காரணமாகவும் யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் யாவும் குழம்பியுள்ள நிலையில் மேலும் நிலைமையை மோசமடையச் செய்யும் நடவடிக்கையாகவே தங்களின் புதிய நியமனம் அமைந்துள்ளது. எனவே நீடித்த சமாதானத்தை உண்மையாகவே நீங்கள் விரும்புகின்றீர்களாயின் தமிழ் மக்களாலும் மாணவர்களாலும் விரும்பப்படசங்கதிhத இந் நியமனத்தை இரத்துச் செய்து தமிழ மக்களாலும் மாணவர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவருக்கு இந் நியமனத்தை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படடுள்ளது.

சங்கதி
http://www.sankathi.org/index.php?option=c...=2111&Itemid=26
- Cloud - Lighting - Thander - Rain -
Reply
#77
Quote:இதோடா,,, ஜோவ் என்ன யாழ் பல்கலைகழகம் நேற்றா ஆரம்பிச்சாங்க? இவ்வளவு நாளும் யாழ் பல்கலைகழகத்தை கூலா நடத்தி உலக தரம் வாய்ந்த பல்கலைகழகமாக மாற்றினாரு? அங்க படிக்கிற மாணவர்களே அவரை எதிர்க்கிறாங்க இவர் ஒருத்தர் தூக்கிபிடிக்கிறார்,,,,
_________________

அப்படிப் போடு மகேஸ்வரியுடையான்!!! ஏதோ ராஜன் கூல்தான் வந்து தமிழற்றை கல்வித்திறனை முன்னேற்றப்படுத்தப் போகிராராம்!!!! விட்டால் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ராக்கட்டும் கூல் விடுவார் என்பார்கள் போலிருக்குது!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

எடே தம்பீஸ்... யாழ் பல்கலைக்கழகம் காணாத அறிவுஜீவிகளா??? .. எனது சகோதரம் ஒருமுறை சொன்னது ஜாபகம் வருகிறது ,.... "மாமனிதர் துரைராஜா, பேராதனை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தபோது ... சிவிலில் சொயில் சம்பந்தமான குறிப்பிட்ட லெக்ஸரில் ..."அக்கோடிங் ரு மை லோ" ... என்று ஆரம்பிப்பாராம் ..." ... அப்படியான மாபெரும் கல்விமானான மாமனிதரை கண்டது யாழ்பல்கலைக்கழகம்!!! ... இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் தேவை????

விட்டால் கூலைத் தவிர தமிழர்களில் கல்விமான்களே இல்லையென்பீர்கள் போலிருக்குது!!!
Reply
#78
kurukaalapoovan Wrote:இங்கு இந்து மதத்திற்கு எதிரா ரட்ணஜீவன் எழுதியதால் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது என்ற அனாவசியமான கீழ்த்தரமான எதிர்ப்பிரச்சாரத்தை தவிர்த்தால் நல்லம்.

நல்ல ஆலோசனை குறுக்காலபோவான். நாரதர் போன்றவர்கள் இனிமேலும் கீழே மேற்கோள் காட்டியிருப்பது போன்ற கீழ்த்தரமான தவறுகளை செய்யக்கூடாது.

narathar Wrote:ரட்ணா ஜீவன் ஹீலின் ஆய்வு.

"THE EXILE RETURNED'-A Self Portrail of Tamil Vellahlas of Jaffna என்ற அந்த பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹீலின் புத்தகத்தை வாசிக்கும் போது ஒரு ஆபாச சஞ்சிகையை வாசிக்கும் எண்ணம்தான் தோன்றுகின்றது. ....
.....
தமிழர் பாரம்பரியத்தையும், சைவசமயத்தையும் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவுக்குக் கேவலப்படுத்தியிருக்கிறது இந்த நூல். ஒவ்வொரு மனிதனுக்கும் தனது மதத்தில் பற்று இருக்கு வேண்டும் தான். ஆனால், அதற்காக இன்னொரு மதத்தைக் கேவலப்படுத்திக் கிண்டலடித்துத் தான் தன்து மதப்பற்றைக் காட்ட நினைப்பது வரவேற்கப்படக் கூடிய தொன்றல்ல.
.............
.............

இரட்ணஜீவன் ஹூல் எழுதிய புத்தகம் அவரது தலைப்பு படி "திரும்பி செல்லும் வெளியேறியோர். ஒரு தமிழ் வெள்ளாளனின் சுயசரிதை." அவரைப்பற்றியதும் அவரது சமுகத்தை பற்றியதும். அவரது மூதாதையர் இந்துக்களாக இருந்தவர்கள். அவர்களைப்பற்றியும் அவர்களும் தானும் வாழும் சமுதாயம் பற்றியும் அவர் எழுதினார். அதை இங்கு ஹூல் இந்து சமயத்துக்கு எதிரானவர் என்றும் ஆகவே அவர் யாழ் பல்கலைக்கழகத்துக்கு பொருத்தமற்றவர் என்றும் காட்ட முயன்றவர் நாரதர்.

கிறிஸ்தவர்கள் பற்றி இந்துக்கள் என்றுமே எழுதியதில்லையா? அல்லது கிறிஸ்தவத்தில் உள்ள நகைப்புக்கிடமான ஆபாசமான விடயங்கள் பற்றி இந்துக்கள எழுதியதில்லையா? இது கருத்து சுதந்திரம். பேராசிரியருக்கு தான் தன்னைப்பற்றியும் தனது சமுதாயம் பற்றியும் எழுத உரிமை உண்டு. அந்த கருத்துக்கள் தவறானால் மறுத்து எழுதும் உரிமை எவருக்கும் உண்டு. அதை விடுத்து கீழ்த்தரமாக அனாவசியமாக அவர் இந்துக்களை பற்றி எழுதியதால் யாழ் பல்கலைக்கழகத்துக்கு பொருத்தமில்லாதவர் என்று சமய மேலாண்மை அல்லது ஆதிக்கத்தை காட்ட நினைப்பது மத துவேசமாகும்.

இவ்வாறான, இந்து மதத்திற்கு எதிரா ரட்ணஜீவன் எழுதியதால் எதிர்ப்பு என்ற அனாவசியமான கீழ்த்தரமான பிரச்சாரத்தை தவிர்த்தால் நல்லம்.
''
'' [.423]
Reply
#79
<b>யாழ். புதிய துணைவேந்தர் கவனத்திற்கு. </b>

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் இரத்தினஜீவன் கூல் அவர்களை சிறிலங்காவின் ஜனாதிபதி நியமித்திருப்பதானது முற்று முழுதான சுயலாப அரசியல் ஆதாயங்களை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட நியமனமாகும். யாழ் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது துணைவேந்தராக பேராசிரியர் மோகனதாஸ் பதவி வகித்தார். ஒரு உபவேந்தரின் பதவிக்காலம் மூன்று வருடங்களாதலால் இன்றுடன் மோகனதாஸ் அவர்கள் ஓய்வு பெறுகின்றார்.

ஆறாவது உபவேந்தரை நியமிக்குமாறு நடைபெற்ற வாக்கெடுப்பில் பேராசிரியர்களான ஆர். குமாரவடிவேல், எஸ்.கந்தசாமி,இரத்தினஜீவன் கூல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

[b] இவர்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர். குமாரவடிவேல் அவர்களை நியமிக்குமாறு பரிந்துரைத்திருந்தது. ஆனால் அப்பரிந்துரை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு பேராசிரியர் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் ஊழியர்களிடையேயும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நியமனத்தை இரத்துச் செய்யுமாறு வன்மையாகக் கண்டித்துள்ளன.

[b] யாழ்பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் உணர்வுகளுக்கும் தேசிய விடுதலை நோக்கிய போராட்டத்திற்கு மாணவர் சமூகம் நடத்துகின்ற அளப்பெரிய பங்களிப்புகளுக்கு ஆதரவு நல்கின்ற களநிலைமைகளை யதார்த்தமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு துணைவேந்தர் அவசியமானது எனவும் அதற்கான அம்சங்களை பேராசிரியர் ஒப்பீட்டு ரீதியில் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச் சாட்டு யாழ். பல்கலைக்கழக சமூகத்தினால் முன்வைக்கப்படுகின்றது

உண்மையில் இக்கூற்று யதார்த்தமானது ஈழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களப் பேரினவாத அடக்குமுறை அரசபயங்கரவாத அநியாயங்கள், சிங்களப் படைகளின் கொடூரங்கள் பாலியல் வன்புணர்வுகள் எனப் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது அதனை எதிர்த்து அகிம்சை வழியில் தமது உணர்வுகள் ரீதியாக சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதில் யாழ். பல்கலைக்கழகம் காத்திரமான பங்களிப்பை ஆற்றி வருகின்றது.

யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக இடம்பெற்ற பொங்குதமிழ் எழுச்சி, பொங்குதமிழ் பிரகடனங்கள் என்பன உலகளாவிய ரீதியில் சிறிலங்கா அரசிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர் சமூகம் மாத்திரமன்றி ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்தின் உணர்வு ரீதியான போராட்டங்களாகவே அவை வெளிப்பட்டன.

அண்மைக்காலமாக சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கள் பாலியல் வன்புணர்வுகள் மற்றும் கெடுபிடிகள் அதிகரித்த காலகட்டத்தில் யாழ்.பல்கலை க்கழக சமூகத்தின் அகிம்சை வழிப்போராட்டங்களின் கனதியாயிருந்தன.

யாழ் புங்குடுதீவு மாணவி மீதான கடற்படை காமுகர்களின் கொடூர செயலைக் கூட கண்டித்திருந்ததுடன் அகிம்சைவழிப்போராட்டங்களில் ஈடு பட்ட வேளை பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் மீது சிங்களப் படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடாத்தி பெரும் களேபரத்தைக் கூட ஏற்படுத்தியிருந்தனர்.

அது மாத்திரமன்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட குடாநாட்டின் கல்வி நடவடிக்கைகள், கல்வி சமூகத்தின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான இராணுவக் கெடுபிடி, அச்சுறுத்தல்கள் என்பன தற்போது தொடர்கதையாகிச் செல்கின்ற நிலையில் யாழ்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் தமது தேசிய விடுதலைக்கான குரல்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தாத வகையில் தான் இந்த உபவேந்தர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் யாழ். பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போரா ட்டங்களுக்கு உந்து சக்தியாக செயற்படக்கூடிய தேசிய உணர்வுமிக்க ஒரு உபவேந்தரே யாழ். பல்கலைக்கழகத்துக்கு அவசியமானது. எனவே அதற்கான வழியைப் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டு இருக்கும் கூல் அவர்கள் விட்டுக் கொடுக்கும் வகையில் பதவியை இராஜினாமாச் செய்வது சிறந்த பண்பாக அமையும். அதைத் தவிர்த்து மாணவர்கள் மற் றும் ஊழியர்களின் மனநலன்களுக்கு மாறான ஒருவராக நிருவாகத்தைப் பொறுப்பேற்று நடத்த முனைந்தால் ஒரு போதும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சமூகம் ஒத்துழைப்பு வழங்காது என்பது உறுதி. .

<i>எடுத்தது ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பில் இருந்து.</i>
<b>
?

?</b>-
Reply
#80
Aalavanthan Wrote:[b] இவர்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஆர். குமாரவடிவேல் அவர்களை நியமிக்குமாறு பரிந்துரைத்திருந்தது. ஆனால் அப்பரிந்துரை ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு பேராசிரியர் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இனத்துவேசமாக நடக்கிறது. பொறியியல் பீடத்தை கட்ட விடவில்லை என்று அழுது அழுது விடை பெறுகிறார். மாணவர்களோ அடுத்த துணைவேந்தராக அதே இனத்துவேச மானியங்கள் ஆணைக்குழு தெரிவு செய்தவர் வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள். ஏன் இனத்துவேச மானியங்கள் ஆணைக்குழு குமாரவடிவேலை பரிந்துரை செய்தது என்று எந்த மானமுள்ள அல்லது குறைந்த பட்சம் மூளையுள்ள யாழ் பல்கலைக்கழகத்தவராவது கேட்டாரா? குமாரவடிவேல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வீருப்புக்குரியவராக இருப்பதற்கு காரணம் என்ன?

[quote=Aalavanthan]
[b] யாழ்பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் உணர்வுகளுக்கும் தேசிய விடுதலை நோக்கிய போராட்டத்திற்கு மாணவர் சமூகம் நடத்துகின்ற அளப்பெரிய பங்களிப்புகளுக்கு ஆதரவு நல்கின்ற களநிலைமைகளை யதார்த்தமாக புரிந்து கொள்ளக்கூடிய ஒரு துணைவேந்தர் அவசியமானது எனவும் அதற்கான அம்சங்களை பேராசிரியர் ஒப்பீட்டு ரீதியில் கொண்டிருக்கவில்லை என்ற குற்றச் சாட்டு யாழ். பல்கலைக்கழக சமூகத்தினால் முன்வைக்கப்படுகின்றது

ஆக குமாரவடிவேலுக்கு இந்த தகுதிகள் இருப்பதாக கருதியா பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அவரை பரிந்துரைத்துள்ளது?

யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளிநாடுகளில் வேலை பெற சிரமப்படுவதன் காரணம் இப்போது எனக்கு புரிகிறது. இவர்களுக்கு பகுத்தறிவு குறைவாக இருக்க வேண்டும்.

உங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தரும் துணைவேந்தரை நியமிப்பதற்கா சிறிலங்கா ஜனாதிபதி அந்த அதிகாரத்தை கொண்டிருக்கிறார்? உங்கள் கடிதத்தை பார்த்து அவர்கள் ஏளனம் செய்யாமல் என்ன செய்வார்கள்?
''
'' [.423]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)