Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
ஜோவ் ஆருய்யா? கடவுளை வாழ்த்தவேணுமா.? அவர் எங்களை வாழ்த்தினால் போதாதா?
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
பிருந்தன் உங்கள் இயந்திர மனிதன் கவிதை நன்றாக உள்ளது, ம்ம்ம் புலம்பெயர் நாடுகளில் இயந்திர வாழ்க்கைதனே வாழுகிறோம்
<b> .. .. !!</b>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
மனிதன் மட்டும்
போர்வைக்குள் முடங்கிக்கிடந்தான்!
அவனை எழுப்ப வேண்டும்
கடிகார சத்தம்!
இன்ப ஓசையில் எழும்பாத அவன்
இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான்
ம்ம் இது எனக்கும் நல்லாய் பொருந்துகின்றது. நிஐமாக எழுதியுள்ளிர்கள். நன்றி
Posts: 642
Threads: 66
Joined: Nov 2005
Reputation:
0
பிருந்தன்,
சோக்காயிருக்கு...வாழ்த்துக்கள்....
இன்னும் நிறைய வித்தியாசமாய்த் தாங்கோ....
".....இன்ப ஓசையில் எழும்பாத அவன்
இயந்திர ஒலியில் இயந்திரமாய் எழுந்தான். "
என்ற வரிகள் "டக்" என்று பிடிச்சிட்டுது...
"
"
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
<b>கவிதைக் காதல்</b>
காதல் என்பது இயற்கையானது
அது எல்லோருக்கும் சொந்தமானது!
எனது காதல் மாறுபட்டது
மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!
என் காதலியின் இளமை மறைவதில்லை
எனக்கு அவளிடத்தில் அன்பு குறைவதில்லை!
எனது காதல் இலக்கணத்துக்கு அப்பாற்பட்டது
அவளோ இலக்கணத்துக்கு உட்பட்டவள்!
அன்று பலர் அவளுடன் காதல் புரிந்தனர்
இன்றும் பலர் அவளுடன் காதல் புரிகின்றனர்!
அவள் தேவர்குல தாசியுமல்ல
பூவுலக மாதவியுமல்ல!
அவளின் காதலில் முதன்மையானவன் கம்பன்
அவன் சரியான வம்பன்!
கண்ணதாசன் கூட காதலித்ததுண்டு
கம்பதாசன் கூட போட்டி போட்டதுண்டு!
பாரதி அவளுக்கொரு தாசன்
பாரதிதாசன் அவளுக்கொரு நேசன்!
வாலி போடுவார் அவளுக்கு வேலி
முத்துக்கள் பல கொடுத்தார், வைரமுத்து!
அவளே என்றும்
எனது பெரிய சொத்து!
அவளை வரையும்போது
சிலிர்க்குது எனது சித்து!
அவளே கவிதை நாயகி
எனது காதல் நாயகி.
.
.
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
காதல் என்பது இயற்கையானது
அது எல்லோருக்கும் சொந்தமானது!
எனது காதல் மாறுபட்டது
மனிதக்காதலில் இருந்து வேறுபட்டது!
இந்த வரிகளை பார்த்தவுடன் வழமையான காதல் கவிதை என்று தான் நினைத்தேன். ஆனால் அழகாக நீங்கள் உங்கள் காதலியை அட கவிதையை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.
சிறிது இடைவெளிக்கு பின்னால் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
Posts: 220
Threads: 13
Joined: Jan 2006
Reputation:
0
அண்ணா இன்று தான் உங்கள் கவிதைகள் பார்த்தேன் வாழ்த்துக்கள் எல்லாம் நன்றாக உள்ளது
>>>>******<<<<
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
வணக்கம் ரமா, சந்தியா உங்கள் வாழ்த்துக்கு நன்றி, ஆம் ரமா சிறிதுகாலம் களத்துக்கு வரமுடியவில்லை.
.
.
Posts: 313
Threads: 5
Joined: Sep 2005
Reputation:
0
பிருந்தன் உங்கள்கவிதை கனக்க போயிருக்கும் என்று நினைத்தேன். நல்ல காலம் அதிகம் போகவில்லை. நானும் களம் அதிக நாட்கள் வரவில்லை.
உங்கள் கவிதையை தொகுத்து வையுங்கோ. பிறகு நூலாய் வெளியிடலாம். சஸ்பென்ஸ் கவிதை சூப்பர்.
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
கவிதைக் காதலை சுவைத்தோம் பிருந்தன். தொடருங்கள்.
"வாலி போடுவார் அவளுக்கு வேலி" என்கிற வரிகளின் கருத்தோடு உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? கவிதைக்கு வேலி போட முடியுமா? வாலி என்கிற சொல்லுக்காக வேலியை பயன்படுத்தியிருக்கிறீர்கள், ஆனால் கருத்து பொருத்தமாக இருக்குமா என்பது குழப்பமாகவே உள்ளது.
நன்றி.
Posts: 377
Threads: 14
Joined: Jul 2005
Reputation:
0
கவிதை அழகா இருக்கு பிருந்தன்........தொடர்ந்து எழுதுங்க....
Posts: 26
Threads: 1
Joined: Feb 2006
Reputation:
0
பிரிந்தன் உங்கள் கவி நல்லாயிருந்தது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
.