10-17-2005, 06:08 AM
<span style='color:indigo'><b>முகத்தார் வீடு - அங்கம் 3 </b>
<b>இது கொஞ்சம் வித்தியாசமாக</b>
(சாத்திரியை 1 கிழமையாக் காணவில்லை எண்டு முகத்தாரும் சின்னப்புவும் அவரைத் தேடி வருகிறார்கள் அங்கை பாத்தால் சாத்திரி வீட்டுக்கு முன்னால் ஒரு புதுக்கார் நிக்குது. உள்ளே சாத்திரி வலு பிசியா வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் பொறுமையுடன் வெளியில் காத்து நிக்கிறார்கள் முகம்ஸ்மும் சின்னப்புவும்)
சாத்திரி : சின்னப்பு கோவியாதைங்கோ கொஞ்சம் பிசி..
சின்னப்பு : யாரடாப்பா இது புது ஆட்களாக் கிடக்கு. .
சாத்திரி : இவை எங்கடை ஆட்கள்தான் லண்டனிலை இருந்து வந்திருக்கினம்
முகத்தார் : என்னவிசயம் அதுவும் உன்னட்டை வந்திருக்கினம்
சாத்திரி : இவை புலம் பெயர்ந்து போய் கைநிறைய நல்லா சம்பாதிச்சிருக்கினம் இப்ப இதை வைச்சு தமிழை .கலையை வளர்க்க இங்கை வந்திருக்கினம்
சின்னப்பு : அதுக்கு நீ என்ன ஜடியா குடுத்தனி ?
சாத்திரி : அதுதான் தமிழை வளர்க்கிதெண்டால் சினிமாப்படம் எடுங்கோவன் எண்டன் கலையையும் வளர்த்த மாதிரி போகும் எண்டு இப்ப என்னையே பிடிச்சுக் கொண்டினம் படத்தை எடுத்துத் தரச் சொல்லி .
முகத்தார் : முறையான இடத்துக்குத்தான் வந்திருக்கினம் இவைக்கு படமெடுத்த முன் அனுபவம் ஏதெனும் இருக்கோ?
சின்னப்பு : முன்னனுபவமிருந்தால் என்னதுக்கு சாத்திரியிட்டை வருகினம்
சாத்திரி : இஞ்சை வாங்கோவன் உங்களுக்கும் அவையை அறிமுகப்படுத்தி வைக்கிறன் இந்தா இவர்தான் தயாரிப்பாளர் தல. .மற்றதெல்லாம் இவற்றை நண்பர்கள்
முகத்தார் : தம்பி வணக்கம் என்ன படம் எடுக்கப் போறீயளாம்?
தல : அதுதான் வந்திருக்கிறம் படம் எடுக்க ஜடியா குடுத்திட்டு சாத்திரியார் இன்னும் கதையையே சொல்லேலை….
சாத்திரி : கதையா அது என்னத்துக்கு தமிழ் படத்துக்கு தேவையில்லையே அதை நான் பாத்துக் கொள்ளுறன். .
தல : அப்ப ஹீரோ ஹீரோயின் வில்லன் இவர்களையாவது தெரிவுசெய்யலாமே. .
சாத்திரி : (முகத்தாரைக் காட்டு ) இந்தா ஹீரோக்கு இவரைப் போடுவம்
தல : என்ன ஜயா விளையாடுறியள் நான் இவ்வளவு காசைப் போட்டு என்ன பக்திப்படமா எடுக்கப் போறன்
சாத்திரி : ஏன் அப்பிடிச் சொல்லுறீயள் இவருக்கு என்ன 52வயசுதான் ஆகுது அப்பிடியே ஆளைத் மாத்திப் போட்டிட மாட்டன்
தல : என்ன 25 எண்டு எழுதிக்காட்டப் போறீயளா இது படம் ஜயா. .
சாத்திரி : 58 வயசிலை நடிக்கிற ஆட்களின் படத்தை 200 நாளுக்கு மேலை ஓட வைக்கிற சனங்கள் இவரை ஏற்றுக் கொள்ள மாட்டினமோ?
தல : அப்ப வில்லன் நடிகனுக்கெண்டாலும் பழைய ஆளைப் போடுவம். .
சாத்திரி : போட்டாப் போச்சு இந்தா (சின்னப்புவைக் காட்டி) சும்மாதான் இருக்கிறார்
தல : ஜயா நான் படம் எடுக்கிறது சனம் பாக்கிறதுக்கு. . .
சாத்திரி : நீங்க பழைய ஆளைப் போடச் சொன்னதிலை நான் இவரைச் சொன்னனான்
(ரகசியமாக தலையிடம் இந்த 2பேரையும் புக் பண்ணினால் எங்களுக்கு சிலவே இருக்காது யுஸ் குடுக்கிற நேரத்திலை 1போத்தல் கள்ளுக் குடுத்தா காணும் கள்ளு வலு மலிவு இஞ்சை)
தல : சரி டைரக்டர் நீங்க சொல்லுறீயள் அப்ப ஹீரோயின் ஆரைப் போடப் போறீயள்
சாத்திரி : அதுதான் யோசிக்கிறன் கவர்ச்சிப்புயல்கள் 2பேர் இருக்கினம் போய் கேக்கத்தான் பயமாக்கிடக்கு. .
தல : பரவாயில்லை யார் எண்டு சொல்லுங்கோ நான் போய் கேட்டுப் பாக்கிறன்
சாத்திரி : பேர் வந்து பொண்ணம்மா . சின்னாச்சி ஆனா நாங்க எடுக்கிற கதைக்கு அவர்கள் பொருந்த மாட்டார்கள் போலத் தெரியுது ஒரு விஜயசாந்தி மாதிரியான சப்ஜெட் எண்டாப் பரவாயில்லை இது வந்து கணவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறமாதிரியான கரேக்டர்
தல : இப்ப என்ன சார் பண்ணறது?
சாத்திரி : சரி போணாப் போகுது நாங்க ஜோதிகாவை போடுவம்
தல : என்ன ஜோதிகாவா? அவங்க எங்கடை படத்திலை நடிக்க வருவங்களா?
சாத்திரி : நீங்க என்ன நினைச்சு என்னட்டை வந்திருக்கிறீயள் மை போட்டு வித்தை காட்டி ஆளை இழுத்தெடுத்திட மாட்டன் ஆனா என்ன கொஞ்சம் செலவாகும்
தல : காசுக்கு நோ. . பிரோப்பிளம் எனக்கு ஜோதிகா சம்மதிச்சா சரி. .
சாத்திரி : தம்பி தல ஜோதிகா படத்திலை நடிக்கிறதுக்குத்தான் சம்மதிப்பா உங்களுக்கில்லை (சா. . .சரியான ஜோள்ளுப் பார்ட்டியா கிடக்கு இதையே சாட்டா வைச்சு நல்லாக் கறந்திட வேண்டியதுதான்)
(தல அங்கிருந்து புறப்பட்டதும் முகத்தார் சின்னப்பு பக்கம் திரும்புகிறார் சாத்திரி)
சாத்திரி : முகத்தான் இந்தப் படத்துக்கு நீ தான் ஹீரோ சின்னப்புதான் வில்லன் ஜோதிகா தான் ஹீரோயின் நான் முடிவு செய்திட்டன்
முகத்தார்: பாவமடா தயாரிப்பாளர்
சாத்திரி : இந்தா உனக்கு 5டூயட் 5பைட் சீன் இருக்கு வாயை மூடிட்டு இரு
சின்னப்பு : சாத்திரி அப்பிடியே 5ரேப் சீனையும் சேர்த்து விடன் புண்ணியமா போகும்
சாத்திரி : சின்னப்பு பிறகு கொம்பனி கணக்கிலை ஆஸ்பத்திரி சிலவெல்லாம் செய்யேலாது
முகத்தார் : சாத்திரி உனக்கு கோயில் கட்டித்தான் கும்பிட வேணும் என்ரை ஆசையெல்லாம் நிறைவேறப் போகுது
சாத்திரி : ஹீரோ எண்டா பின்னை சும்மாவா.. . . .
முகத்தார் :அதோடை மச்சான் ஓசிலை லண்டன் கனடா எல்லாம் போகலாமே. .
சாத்திரி : ஆர் சொன்னது கூட்டிட்டு போற தெண்டு
முகத்தார் : 5டூயட் எண்டா அங்கையெல்லாம் கொண்டு போய் தானே எடுப்பாங்கள்
சாத்திரி : அது ஒறிச்சினல் டைரக்டர் நான் யாரு. . .உலகப்படத்திலை லண்டன் கனடாவை காட்டிப் போட்டு அதிலை ஏறி நிண்டு ஆடச் சொல்லிட மாட்டன்.
முகத்தார் : அப்ப சூட்டிங் தொடங்கினவுடனை இங்கையே தங்கிடலாம் என்ன சாப்பாடு தண்ணி எல்லாம் தருவினம் தானே. .
சாத்திரி : ஏன் பொண்ணம்மா சொந்தங்கள் எல்லாத்தையும் கூட்டி வாவன் அதெல்லாம் சரி வராது வீட்டிலை சாப்பிட்டுட்டு வரேக்கை எனக்கும் ஒரு பார்சல் கட்டிக் கொண்டு வரவேணும் விளங்கிச்சே. ..
முகத்தார் : சரி சாத்திரி கதையிலை கொஞ்சத்தை சொல்லன்
சாத்திரி : ஹீரோ அதாவது நீ என்றி ஆகிற சீனைச் சொல்லுறன் கேள்
நம்மடை ஹீரோயின் அதுதான் ஜோதிகா றோட்டாலை நடந்து வாற அவவின்ரை காலை மாத்திரம் காட்டுறம் அப்ப றோட்டிலை இருந்த கல்லொண்டு அவவின் காலிலை தட்டுப்பட்டு அங்கை படுத்திருந்த ஒரு சொறிநாய் மீது பட்டு விடுகிது நாய் மெல்ல தலையை தூக்கிப் பாத்து உறுமுது இந்த இடத்திலை பயங்கர சவுண்ட் ஈபைக்ட் ஒண்டைப் போடுறன் நாய் உறுமுறது தத்துரூபமா இருக்கும் பாரன்.;
முகத்தார் : என்ன நாயின் வொயிசை றைக்கோட் பண்ணிப் போடப் போறீயே
சாத்திரி : சா. . .முனியம்மாவை டப்பிங் குடுக்க வைக்கலாம் எண்டு இருக்கிறன்
முகத்தார்: சரி இதுக்கை நான் எங்கை வாறன்
சாத்திரி : பொறன். . அப்பதான் நீ நித்திரையாலை எழும்பி கேட்டை திறந்து கொண்டு றோட்டுக்கு வாறாய் ஜோதிகாவை துரத்த நினைத்த நாய் சடின் பிரேக் போட்டு உன்னைப் பாக்குது அதுக்கு பழைய நினைவுகள் ஏதோ ஞாபகம் வர அப்பிடியே உன்மேலை பாய்ஞ்சு கொத்தோடை கவ்வுது. .
முகத்தார் : சாத்திரி உனக்கே இது நல்லா இருக்கா ஜோதிகாவை காப்பாத்தப் போய் கடைசிலை என்னையே காப்பாத்தேலாம போகப் போகுது. .
சாத்திரி : ஆ.. இஞ்சைதான் நீ சாத்திரியின் விளையாட்டை பாக்கனும் அப்பிடியே உனக்கும் நாய்க்கும் ஒரு பயங்கரச் சண்டையை சேக்கிறன் திடீரென நீ நாயின் காதுக்கை ஏதோ சொல்லுறாய் அதைக் கேட்டதும் நாய் சும்மா பிச்சுக்கிட்டு திரும்பி பாக்காம ஓடுது நீ என்ன சொன்னாய் எண்டதை படத்திலை கடைசி மட்டும் சொல்லவே மாட்டம் இதையெல்லாம் ஓரமா பாத்துக் கொண்டிருந்த ஜோதிகா உனக்குக் கிட்ட வந்து அப்பிடியே உன்ரை கையை பிடித்து தாங்ஸ் எண்டு சொல்லறா அப்பிடியே கட் பண்ணி போடுறம் ஒரு குத்து சோங் சும்மா மன்மதராசா தோத்துப் போகும் பாரன்
முகத்தார் : எனக்கெல்லாம் அப்பிடி ஆட ஏலாதடா. .
சாத்திரி : உன்னை ஆர் ஆடச் சொன்னது நீ சும்மா நில்லு நான் கமராவை ஆட்டுறன்
(முகத்தார் மெதுவாக கண்ணை மூடி ஜோதிகாவுடன் டூயட் பாடுற சீனுக்குள் போகிறார் திடீரென "பொதக்' எண்டு ஒரு சத்தம்)
பொண்ணம்மா : என்னப்பா ஒழுங்கா கட்டிலை படுக்கத்தெரியாதோ விழுந்திட்டியள் வயசுபோண நேரத்திலை கை கால் முறிஞ்சா எனக்குத்தான் கரைச்சல்
முகத்தார் : (மனசுக்குள் அடக் கடவுளே கனவிலை ஜோதிகாவோடை கட்டிப் பிடிச்சு உருளேக்கைதான் விழுந்ததெண்டு பொண்ணம்மாக்குத் தெரிஞ்சால்??????? )
[size=9]<b>(யாவும் கற்பனை)</b></span>

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&