Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இந்திரஜித் நல்லாத்தான் கொண்டுபோறியள். நெடுக சோகமா?? அப்புறம் இந்திரஜித் என்றாலே சோககீதம் என்று முடித்துவிடுவார்கள். மாறி மாறி முடிவுகளை வைத்தால் தான் வாசர்களிற்கு. சற்று மாறுதல் கிடைக்கும். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
டமிழ்.......... இந்திரஜீத் வாழ்க்கேலை நடந்த . நடக்கிற உண்மை சம்பவங்களின் வைத்துத்தான் கதையை எழுதிக் கொண்ட போகிறார் இனி மாத்தி மாத்தி எழுதச் சொன்ன எப்பிடி நிகழ்ச்சிகளை தேடுவது அவரின் சோகம் எமக்கொரு பாடமாக இருக்கட்டுமன் சரி நீங்க சந்தோஷமா ஒரு கதை எழுதுங்கோவன் வாசிக்க நாங்க ரெடி.........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
இந்திரஜித் கதையை நன்றாக நகர்த்துகிறீர்கள் தொடருங்கள், சிலரிற்கு வாழ்க்கை துன்பமாய் இருக்கும் சிலரிற்கு அது சுகமாய் இன்பமாய் இருக்கும் அதற்கு நாம் என்ன செய்வது, அது அவரவரைப் பொறுத்தது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
MUGATHTHAR Wrote:டமிழ்.......... இந்திரஜீத் வாழ்க்கேலை நடந்த . நடக்கிற உண்மை சம்பவங்களின் வைத்துத்தான் கதையை எழுதிக் கொண்ட போகிறார் இனி மாத்தி மாத்தி எழுதச் சொன்ன எப்பிடி நிகழ்ச்சிகளை தேடுவது அவரின் சோகம் எமக்கொரு பாடமாக இருக்கட்டுமன் சரி நீங்க சந்தோஷமா ஒரு கதை எழுதுங்கோவன் வாசிக்க நாங்க ரெடி.........
நடக்கிறதை அப்படியே எழுதினால் சமூகத்தில சோகம் தான் மிஞ்சும் என்றியளா..?? அப்ப சரி முகம்ஸ்.. நான் சொன்னதற்கு காரணம். தொடராக சோகக்கதைகளை கொடுத்தால் இந்திரஜித் என்றாலே சோக கிதம் அப்படி என்று வந்திடும் அதுக்காகத்தான் சொன்னேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (நாங்க கதை எழுதாமலா??)
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கதை நன்றாக போகின்றது, தொடர்ந்து எழுதுங்களை இந்திரஜித். மற்றய பாகங்களையும் வாசிக்க காத்திருக்கின்றோம். முதல் தொடரை போல் அவசரப்பட்டு திடீரென்று நிறுத்தி விடாதீர்கள். நீங்கள் எழுத நினைத்திருக்கும் அனைத்தையும் எழுதுங்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
இந்திரஜித்
கதை உண்மைக்கதையென்றால் அதில் எவ்வித மாற்றமும் செய்ய வேண்டாம். அதனை அப்படியே தாருங்கள். நீங்கள் சொந்தமாக உங்கள் கற்பனைக்கேற்றவாறு எழுதும்போது அதில் மாற்றம் செய்வதில் தவறில்லை.
Posts: 69
Threads: 15
Joined: Oct 2005
Reputation:
0
கதை நன்றாக போகுது....முடிவு நீங்கள் முதல் நினைத்தவாறே அமையட்டும்.... காத்திருப்போம் :wink:
!
--
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
இப்படி அன்பான நண்பர்களையும் விமர்சனங்களையும் பார்க்கும் போது நிஜமாவே புல்லரிக்கிறது உங்களால் நம்பமுடியுமோ தெரியாது தொடர்ந்து 3 நாட்கள் ஓய்வே இல்லாதபோதும் அதிகாலை எழுந்து கதை எழுதி விட்டு போனேன் 15 மணி நேரம் நின்றபடியே வேலை செய்து விட்டும் கதை எழுதுவது இப்படி பட்ட அன்பும்ரசிகதன்மைக்கும் தான் இப்படி ரசிக்கும் உள்ளங்களை அறிமுகப்படுத்திய யாழ் இணையத்துக்கும் என் அருமை நண்பிக்கும் என் தாழ்மையான நன்றிகள் இந்த கதை நிறைவு பெற்றதும்.சந்தோசமான கதை ஆரம்பிப்பேன்
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
<b> வலி தெரியாக்காயங்கள் பாகம் 9</b>
பிறந்த நாள் சந்தோஸமாக முடிந்தது ஆனால் வேணிக்கு தான் நிம்மதி இல்லை எப்போ போட்டோக்கள் வரும் தனக்கு பக்கத்தில் சண் நிற்கும் படம் வரும் வரை அவள் பட்ட அவஸ்தை இருக்கே அம்மாடியோ சந்தோசமான அவஸ்தை தான்.
அவளுடன் கூடபடிக்கும் நண்பிக்கும் இப்போ வேணியின் புதிய போக்கு பிடிபடவில்லை அவளிடன் ஜாடை மாடையாக கேட்டும் பார்த்தாள். வேணியோ பிடி கொடுக்கவில்லை. ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டாள் அவளறியாமலே அவள் பாடசாலை பையினுள் சண் கொடுத்த நோட்ஸ் கொப்பி இருந்தது அதை பார்த்த நண்பி கொஞ்சம் புரிந்து கொண்டாள். "ஓ ஓ இப்ப தான் தெரியுது நீ எப்படி நல்லா படிப்பதும் கொஞ்சம் குழப்பமாக கதைப்பதும் காரணம் எல்லாம் இவர் தானோ நல்லது தாயே...கவனமடி கொழும்பான் எதாவது செய்து விட்டு கொழும்புக்கு போனால் என்னசெய்வாய்?பார்த்து பழகுடி" என்று நண்பி சொன்ன போது "சும்மா எல்லோரையும் போல் சண் பற்றி தப்பாக கதைக்காதே எவ்வளவு நல்லவர் தெரியுமா?" என்று வேணி சொன்ன போது. சிரித்தபடியே "ம்ம் இப்போ சொன்னது உண்மைதான் உனக்கு இனி அவர் தானே உனக்கு வாத்தியார் அவரிடமே படி ஓ சொல்ல மறந்து விட்டேன் உனக்ககா ஊரில் இருக்கும் பொடியங்களுக்கு அடித்து விபரம் கேள்விபட்டேன் நல்ல அக்கறை தான் உன்னில்" என்று சிரித்த போது வேணியின் முகம் குங்குமமாய் சிவந்து விட்டது.அவளின் ஆசையில் ஒரு நாள் குழப்பம் வந்தது சண் அப்பா வடிவில்
ஒரு வார விடுமுறையில் அவர் வந்து இருந்தபோது ஒரு நாள் வேணி அவர் வந்தது தெரியாமல் உரிமையுடம் "அன்ரி" என்று அழைத்தபடியே சண் வீட்டுக்குள் போனபோது புதிதாக ஒருவர் கண்ணாடியுடன் அவளையே கூர்ந்து பார்த்தபடி "யாரம்மா நீ?" என்று கேட்டார். அவர் சண் வயது வந்தால் இப்படி தான் இருப்பான் என்று நினைத்த போது வேணிக்கு சிரிப்பு வந்து விட்டது. இருந்தாலும் மரியாதையுடன் "நாங்கள் பக்கத்து வீடு அன்ரியிட்டை வந்தேன் நீங்கள் சண் அப்பா தானே சுகமா இருக்கிறிங்களோ?" என்று கேட்டா வேணியிடம் "ஓம் பிள்ளை சண் எப்படி" என்று கேட்டார் சண் அப்பா சண் பேரை சொன்னதுமே வேணியில் ஒரு மாற்றம் அது சண் அப்பாவுக்கு புரிந்து விட்டது. "சரி பிள்ளை சண் அம்மா உள்ளே தான் இருக்கிறா போங்கோ உள்ளே" என்று சொன்னார்
-தொடரும்-
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
<b>வலி தெரியாக்காயங்கள் பாகம் 10</b>
சமையலறைக்குள் சென்ற வேணி சண் அம்மாவுக்கு உதவிகள் செய்துகொடுத்தா அப்போது அங்கே வந்த சண் அப்பா "ஓ நல்ல கை உதவியா தான் இந்த பிள்ளை இருக்கிறா" என்று சொல்லிச் சிரித்தபோது சண் அம்மா சொன்னா "ஓமப்பா கோவிலுக்கு கடைக்கு எல்லாம் இவ இல்லா விட்டால் சரியான கஸ்ரம். வேணியின் அப்பா தான் சந்தைக்கும் எல்லா இடத்துக்கும் போகும் போது எங்கள் எல்லாரையும் நினைத்து வாங்கி கொண்டு வருவார்" என்று சொல்லிகொண்டே போனா.
ம்ம்... என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போது, அங்கே வந்த சண் "அப்பா அம்மாவை பார்த்திங்களே சம்பளமில்லாமல் ஒரு ஆள் இருக்கு" என்று சொல்லி விகல்பம் இல்லாமல் சிரித்தான் அப்போ சண் அப்பா கேட்டார்.
"சண் உங்கள் மாமியும் மகளும் யூ.கே இல் இருந்து அடுத்த மாதம் வருகினமாம் நீ யூனிவசிற்றிக்கு மெடிசின் கிடைத்து போகிறாய் என்று சொன்னான் அவைக்கும் நல்ல சந்தோசமா இருக்கினம் யூனிவசிற்றி படிப்பு முடிய உன்னை யூகே வரட்டம் மேற்கொண்டு அங்கே படிக்கலாம் என்று மாமியும் சொன்னா உன் யோசனை என்ன?" என்று அப்பா கேட்டார்.
சண் அம்மா சிரித்து கொண்டே கேட்டா "என்னப்பா ஆச்சரியமா கிடக்கு உங்கட தங்கச்சி எங்களிலை பாசமாகிவிட்டா என்னவாம் சொன்னா என்று கேட்டா இல்லையப்ப சண் இல் மேகலாவுக்கு விருப்பமாம் என்று தான் தங்கச்சி சொன்னவா அது தான் சண்ணை பார்க்கவருகினம்" என்று சொல்லிவிட்டு கூர்மையாக வேணியை பார்த்தபடி இருந்தார் சண் அப்பா.
திடுமென்று எழும்பிய வேணி " நான் வீட்டை போறேன்" என்று சொல்லி விட்டு கண்கள் குளமாக கண்னை துடைக்க கூட தோன்றாமல் வெளிக்கிட்டாள் "ஏன் வேணி போறீங்கள்" என்று கேட்ட சண் இடம் பதில் சொல்லhமல் போனாள் அந்த மனமுடைந்த பேதை.
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
சண் அப்பாவுக்கு இருந்த கொஞ்ச சந்தேகமும் போய்விட்டது வேணியின் மனம் அவருக்கு தெரிந்துவிட்டது அவர் சண்ணிடம் சொன்னார்.
"தம்பி யாரிடமும் எப்போதும் மனகஸ்ரம் கொடுக்காமல் பழகவேணும். நான் சொன்னது புரிந்து இருக்கும் தானே அந்தபிள்ளைக்கு நான் சொன்னது பிடிக்கவில்லை போல் இருக்கு. அப்போ சண் அம்மா சொன்னா "ஏனப்பா சண் இஞ்ச படிச்சு இங்கேயே டொக்ரரா இருந்தால் நல்லம் தானே ஏன் வேறை நாட்டுக்கு அலைவான் எங்களுக்கும் மகள் கலியாணம் கட்டி போனால் யாரப்பாபா இருக்கினம் தம்பி இல்லாமல் விசர் எல்லே பிடிக்கும் நீங்களும் வேறை ஊரிலை ஏன் இந்த வீட்டை கட்டினீங்கள் பிள்ளைகளுக்கு தானே பிறகு யூகே எண்டு சொன்னால் என்ன கதை" என்று அம்மா கோபமாக அப்பாவுடன் கதைத்தா
அவர்களுக்கு இடையில் கதைத்த சண் "எனக்கு வேறை நாடு போக விருப்பமில்லை.இங்கேயே வேலை செய்யப்போறன் இன்னும் 5 வருடங்கள் இருக்குத்தானே அப்போ யோசிப்போம் சும்மா ஏன் சண்டை பிடிப்பான்" என்று சண் அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான் சண்.
அப்பா இருக்கும்வரை வேணிக்கு சண் வீட்டுபக்கமே போகபö பிடிக்கவில்லை ஆனால், சண் அப்பாவே அவளை தேடி வீட்டுக்கு வந்தபோது, அவளால் மறுக்கமுடியவில்லை. சண் அப்பாவும் வேணி அப்பாவும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டார்கள் அவர் திரும்பி கொழும்புக்கு போக முதல் வேணியின் வீட்டில் இரவு உணவுக்கு அழைத்து இருந்தார்கள்.
அந்த இரவு உணவின் போது போது சண்ணும் வந்து இருந்தான். சாப்பிடும் போது "சாப்பாடு நல்ல இருக்கு" என்று பாராட்டிய போது வேணி அம்மா சொன்னா "இன்டைக்கு நான் சமைக்கவே இல்லை எல்ணாம் வேணிதான் என்னை சமையலறைகுள் போகவே விடவில்லை. தம்பி உப்பு உறைப்பு எல்லாம் சரியா இருக்கோ என்று வேணி அம்மா கேட்டபோது சண் அப்பா கேட்டார் "வீடு எல்லாம் பூக்கன்று வைத்தது யார்.." என்று வேணி அப்பா சொன்னார் பிள்ளை தான் எங்களுக்கு கைவைக்க முடியாது அவவின் அரசு தான் இங்கே என்று சிரிக்க சண் அம்மாவும் "எங்கட பூந்தோட்டமும் வேணி உதவி தான்" என்று சொல்ல சண் சொன்னான் "ஓம் வேணியில்லாமல் எனக்கு இத்தனை அறிவு வராது அவவுக்கு நல்ல கைராசி" என்று சிலாகித்து பேசினான்.
நன்றி சொல்லிவிட்டு வேணியின் அப்பா போகும் போது வேணியிடம் "பிள்ளை எனக்கும் கொஞ்சம் புரியும் யோசிக்கவேண்டாம் கடவுள் எழுதினதுபடி நடக்கும் என்று கண்ணை சிமிட்டிய படியே சொன்ன போது, தன் மனம் அவருக்கு புரிந்து விட்டது என்று வெட்கமாகி விட்டது வேணிக்கு.
inthirajith
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
நண்றாக இருக்கிறது கதையின் போக்கு. உங்களின் வலைப்பதிவையும் இப்பதான் படிக்க ஆரம்பித்தேன். இன்னும் முடிக்கவில்லை.
:::::::::::::: :::::::::::::::
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
ஒரு நாள் துர்க்கையம்மன் கோவிலுக்குப் போக ஆயத்தபடுத்தும் போது, அம்மாவுக்கு கோவிலுக்கு வரமுடியாத சூழ்நிலை துர்க்கையம்மன் தேருக்காக விரதம் இருந்த வேணிக்கும் கோவிலுக்கு போக துணையாக யாரும் இல்லை.
அப்போ தான் சைக்கிளில் சிவப்பழமாக வேட்டியுடன் வந்தான் சண். அவனைப் பார்த்த வேணியின் அம்மா "தம்பி தயவுசெய்து வேணியையும் கூட்டி கொண்டு போறீங்களா?" என்று கேட்டா. !சரியம்மா வேணியை அவவின் சைக்கிளில் வர சொல்லுங்கோ" என்று சொல்லி விட்டு இருவருமாக துர்க்கையம்மன் கோவிலுக்கு போகும் போதுஇ அத்தனை சந்தோசம் வேணிக்கு. இன்று 7வது செவ்வாய் கிழமை தான் நேர்ந்தது போல் இந்த முறை சண் கூட வருவது மகிழ்ச்சிய்யாகவும் இருந்தது வேணிக்கு.
அவ்வழியாக வந்த அவள் நண்பிகள் சந்தோசமாக அவளை பார்த்து சிரித்தார்கள் கடவுளே நாளைக்கு சரி பள்ளிக்கூடத்தில் என்னை நக்கலடித்தே ஒரு வழி பண்ணப்போகினம் என்று நினைக்கவே ஏதோ வெட்கம் அவளை பிடுங்கித் தின்றது.
ஒருவாறு சண் உடன் கதைத்தபடியே கோவிலில் அவனுடன் வீதியை சுற்றும் போது, அவள் மனதார அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. அவளைத் தெரிந்தவர்கள் எல்லாம் அவளை பொறாமையுடன் பார்த்தார்கள். கூட படிக்கும் தோழிகள் மெல்ல வந்து காதில் "ம்ம் நல்ல இருக்கிறார் புளியங்கொம்புதான்டி வேணி" என்று கிசுகிசுத்து விட்டு போனார்கள் 8 முழவேட்டியுடன் மார்பு முழுவதும் சால்வையால் மறைத்து இருந்தாலும் அவன் ரோமமும் அகன்ற நெஞ்சும் ம்ம் அழகான ஆம்பிளை தான் என்று தன் கண்களாலே விழுங்கினாள் வேணி. தேர் முட்டியில் அர்ச்சனை பண்ண நின்றபோது சண் இடிபாட்டுக்குள் அவனுடன் நெருங்கியே நிற்க வேண்டி வந்தது. கோழிகுஞ்சை அடைகாக்கும் கோழி போல அவளில் யாரும் இடிக்கமால் கவனமாக பாதுகாத்துஇ அவள் பேருக்கும் அவனே டிக்கெட் எடுத்து தன் குடும்பம் அவள் குடும்பம் என்று சேர்த்து அர்ச்சனை செய்யும் போது கூட படிக்கும் தோழியும் அப்போதுதானா அருகில் வர வேண்டும் ஜயர் சொன்ன பேர்கள் எல்லாமே அவள் காதிலும் விழுந்துவிட்டது அவள் இவளைப் பார்த்து கண்ணடித்தாள்.
-தொடரும்-
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
<b>வலி தெரியாக்காயங்கள் பாகம் 11</b>
கண்ணடித்த நண்பி அருகே வந்து அவளிடம் மெல்ல "நல்ல காதலனடி, காதலி குடும்பத்துக்கும் பார்த்து கடவுளை கும்பிடும் நல்ல ஆளு தான்" என்று சொல்ல வேணியோ என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தாள்.
ஆறுதலாக கும்பிட்டு விட்டு வெளியே வந்த சண் வேணியிடம் "வேணி எனக்கு ஒரு ஆசை என்றான்" "என்ன ஆசை சொல்லுங்கோ" என்று ஆவலுடனும் ஆசையுடனும் கேட்டாள் வேணி "ம்ம் எனக்கு கோவில் மடத்தில் சாப்பிட ஆசையா இருக்கு வாறிங்களா சாப்பிடுவோம்" என்று கேட்ட போது அம்மா சமைத்து வைத்திருக்கும் சமையல் நினைப்ப்பு வந்தது ஆனாலும் சண்ணுடன் சேர்ந்து சாப்பிடுவது சந்தோசமாக இருந்தது "சரி வாங்கோ சாப்பிடுவோம் என்று அவனையும் அழைத்துக் கொண்டு போனாள். அங்கேயும் அவளுக்கு விதி விளையாடியது. பக்கத்து வீட்டு அங்கிளும் வாசலில் நின்றார் அவளை பார்த்து விட்டு தடை இல்லாமல் உள்ளே சாப்பிட விட்டார். சண்னையும் சேர்ந்து பார்த்தவர் நமுட்டு சிரிப்புடன் வழி விட்டார். நாளைக்கு அவரின் மனைவி அன்னம்மாக்கா ஊர் முழுக்க பறை தட்டப்போறா என்ற யோசனையுடன் பந்தியில் சண்ணுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். அங்கேயும் அப்பாவின் சினேகிதர் தான் சாப்பாடு போட்டார் "ஓ பிள்ளை எப்படி சுகம் இதுயாரு? என்று கேட்ட போது" எனக்குத் துணையா கோவிலுக்கு வந்தவர் என்று மட்டும் சொன்னாள் வேணி. அவர் சந்தேகத்துடன் திரும்பி திரும்பி பார்த்தபடியே போனார்.
சாப்பிட்ட சண் க்கு இவர்களின் பொடிவைத்த பேச்சு புரியவில்லை ஆனால் வேணி மட்டும் ஏதோ அவஸ்தை படுவது புரிந்தது. "என்ன வேணி மூட் குழம்பி இருக்கிறீங்க சொல்லுங்கோ?" என்று கேட்டவனிடம் வெளியே போனதும் சொல்கிறேன் என்று சொன்னாள்.சாப்பிட்டுமுடிந்ததும் சண் சொன்னான் "நல்லா இருக்கு வேணி இன்றுதான் முதல் முறை சாப்பிட்டேன் நல்லா இருக்கு" என்று சொல்லி கொண்டே வெளியே வந்த சண் "வாங்கோ லிங்கம் கூல்பாருக்கு போவோம் ஜஸ்கிறீம் குடிக்க" என்று அழைத்து கொண்டு போனான் அங்கே அவள் நெளிந்து கொண்டே இருந்தாள் "என்ன சொல்லுங்கோ பிரச்சனையா இருக்கிறீங்க ?" என்று கேட்ட போது "இல்லை உங்களுடன் கோயிலுக்கு வந்தது எல்லோரும் ஏதோ சந்தேகமாக பார்க்கினம் கூடபடிக்கும் பிள்ளைகளும் தப்பா நினைக்கினம் என்ன சொல்வது என்று தெரிய வில்லை" என்று சொன்னாள்
அப்போ தான் சண் ஒரு வார்த்தை சொன்னான் "கோவிலுக்கு முன்னால் வைத்து யார் என்ன சொன்னலும் நீங்கள் மறுக்க வேண்டாம் வேணி. அப்பா சொன்னது போல் காலம் கனிந்து வரும்" என்று காதலுடன் பார்த்தான் சண்.
inthirajith
Posts: 271
Threads: 22
Joined: Jul 2005
Reputation:
0
அடுத்த நாள் காலையிலேயே அன்னம்மாக்கா வந்து விட்டா விடுப்பு கேட்க. வேணியின் அம்மாவிடம் "என்ன அக்கா என்ரை மனிசன் நேற்று வேணியைய்யும் அந்த கொழும்புத்தம்பியையும் ஒண்டா பார்த்தவராம்.ஏன் நீங்கள் போகேல்லை" என்று சொல்ல அம்மா சொன்னா "நான் தான் அனுப்பினான் கூட்டி கொண்டு போக ஆரும் இல்லை என்ன செய்ய உதவிக்கு அந்த தம்பியுடன் போனா" என்று அவ வாயை அடைத்தா அம்மா.
ஆனால் நேற்று சண் சொன்னது அவளால் நம்ப முடியவில்லை அவனிடம் திரும்பவும் அந்த வார்த்தைகளை கேட்க ஆசையா இருந்தது ஆனால் எப்போ திருப்பி சண்ணை பார்ப்பது அவர்கள் வீட்டுக்கும் போக வெட்கமாக இருந்தது. ஆசை வெட்கமறியாது அம்மாவிடம் சொல்லி விட்டு நோட்ஸ் புத்தகம் வாங்க போவதாக சொல்லி விட்டு போனாள்.
அவர்கள் வீட்டுக்கு கிட்ட போகும் போது கால்கள் பின்னியது மெதுவாக அன்னம் போல் நடந்து போனாள். அங்கே வாசலில் நின்றான் சண் வேணியை பார்த்ததும் அவன் ஒரு கனிவுடன் "வாங்கோ வேணி அம்மா வீட்டை இல்லை ஏதும் வேணுமா? ஓம் உங்களிட்டை கலாநிதி சித்திர வடிவேல் எழுதிய விலங்கியல் புத்தகம் இருக்கா? இருந்தால் தாங்கோ" என்று உளறினாள் "ம்ம் அது உங்களிடம் தானே தந்து விட்டேன் என்ன இது குழப்பமா நான் நேற்று சொன்னது உண்மை தான் யோசிக்காமல் இருங்கோ அம்மா வந்தால் பிறகு வாங்கோ "என்று அவளை அனுப்பினான்.
-தொடரும்-
inthirajith
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
இந்திரஐித் அருமையாக போகின்றது.. தொடர்ந்து எழுதுங்கள்.. காத்திருக்கின்றோம்.