Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெரியாத பாதை தெளிவானபோது
#61
ரவி உள்ளே நுழையவும் பிறகென்ன அத்தானும் வந்திட்டார் வாங்கோ அத்தான் . அக்கா நான் அத்தானுக்கு கொண்டந்த சாமான்களை எடு. அத்தான் உங்களிறக்கு ஸ்பெசல் ஸ்கொச் 25 இயர் ஓல்ட் ஒண்டு கொண்டந்தனான் அடிச்சு பாத்து சொல்லுங்கோ எப்பிடியெண்டு. எனறவாறே ஈசன் கையில் மது போத்தலை எடுத்தவாறு.

உங்களை பாத்து கொண்டிருந்தனான் அப்பதானே உங்கடை சாட்டிலை நானும் கொஞ்சம் அடிக்கலாம் இல்லாட்டி அக்காள் விடமாட்டாள்.என்று சொல்லி கொண்டே அவன் இரண்டு கிளாசில் மதுவை ஊற்ற சாந்தி பேசாமல் பாத்த வண்ணம் நின்றாள்.

ரவியும் பெரிதாக எதுவும் பேசவில்லை தொலை காட்சியை பாத்தபடி சாந்தியின் தம்பியின் கதைகளிற்கு ஓம் இல்லை ம்..என்ன சொற்கள் மட்டுமே அவன் வாயிலிருந்து வந்தது. நிண்ட நேரத்தின் பின்னர் ஈசனும் ஏதோ புரிந்தவனாக பேசுவதை குறைத்து கொண்டு சரி எனக்கும் கொஞ்சம் அலுப்பா இருக்கு படுப்பம் என்றவாறு படுக்கைக்கு போன ஈசனுக்குள் ஆயிரம் கேள்விகள் எதற்குமே விடை தெரியாது உறங்கி போனான்.

மறு நாள் ரவி வேலைக்கு போன பின்னர் ஈசன் சாந்தியிடம் அக்கா உண்மையை சொல்லு நீயும் பெரிசா கதைக்கிறாய் இல்லை அத்தனும் உம்மெண்டு கொண்டிருக்கிறார் உங்களிற்கை ஏதும் பிரச்சனையா?? இல்லாட்டி நான் வந்தது பிடிக்கேல்லையா பிடிக்காட்டி சொல்லு நான் இப்பவே போறன் நான் கன காலத்திற்கு பிறகு உன்னை பாக்கிறணெண்டு எவ்வளவு ஆசையா வந்தனான் இஞ்சை யென்னண்டா ஏதோ இழவு வீடு மாதிரி இருக்கு என்றவும்.

சாந்தி அதற்கு மேலும் தனது உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் தம்பி என்னத்தை சொல் எல்லாம் என்ரை விதி யென்றவாறு ஒரு குழந்தையை போல விக்கி விக்கி அழ தொடங்கி விட்டாள்.ஈசனுக்கு அவளது அழுகையை நிறுத்துவதே பெரும்பாடாகி விட்டது .என்ணெண்டு சொல்லிட்டு அழன் எனக்கு ஒண்டும் விழங்கேல்லை என்ன பிரச்சனையெண்டாலும் சொல்லு முடிஞ்சளவு உதவி செய்யிறன் .

சாந்தி ஓரளவு தன்னை ஆசுவாச படுத்திக் கொண்டு நடந்ததையெல்லாம் மூக்கை சீறியபடியே மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டு கொண்டிருந்த ரவி
. ம் இஞ்சை தண்ணியடிக்கிறது கட்டையடிக்கிறது எல்லாம் அனேகமான எல்லா இளைஞரிட்டையும் சில நேரம் இருக்கும் ஆனால் குடும்பம் எண்டு வரேக்கை கொஞ்சம் மாறத்தான் வேணும் சில நேரம் அத்தான் கொஞ்சம் கொஞ்சமா மாறுவார் நீ அதுகளை உடைனை விடச்சொல்லி அடம் பிடிச்சு சண்டை பிடிக்காதை நான்வேணுமெண்டா கதைச்சு பாக்கிறன்.

இல்லையடா நான் ஒண்டுமே சொல்லுறேல்லை அவரும் மாறுவார் எண்டுதான் நானும் பொறுமையா இருக்கிறன் ஆனால் அவரின்ரை பழக்கம் கூடிக்கொண்டுதான் போகுதே ஒழிய குறையேல்லை அதை விட இப்ப வீட்டுக்கே சில நேரங்களிலை வாறது இல்லை ஏன் எங்கை போறார் எண்டு கேக்க ஏலாது கேட்டா அது பெரிய பிரச்:சனையாயிடும் நீயும் ஒண்டும் அவரிட்டை கேக்காதை பிறகு நான் சொல்லித்தான் நீ கே;கிறாயெண்டு அது வேறை பிரச்சனையா போகும் .எந்த நேரம் என்ன நடக்குமெண்டு தெரியாமல் தினம் தினம் செத்து பிழைக்கிற வாழ்க்கையா போச்சு எனக்கு.

ஆனால் இதையொண்டையும் நீ ஊருக்கு சொல்லி போடாதை பிறகு அங்கை அப்பர் அம்மா வேறை என்னாலை யோசிச்சு அவைக்கு மேன் பிரச்சனை ஏதோ என்ரை தலைவிதி இப்பிடி அது என்னோடை போகட்டும். நான் கும்பிட்ட தெய்வங்கள்: தான் எனக்கு வழி காட்ட வேணும் எண்று ஒரு பெரு மூச்சுடன் நிறுத்தினாள்.

அக்கா எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை ஏதோ பக்குவமா அத்தானோடை கதைச்சு பார் எனக்கு இவ்வளவும் கேட்டா பிறகு இஞ்சை நிக்கவும் ஒரு மாதிரியிருக்கு அதாலை நான் என்ரை சினேதன் வீட்டிலை போய் நிக்கிறன் குறை நினைக்காதை. நான் போகேக்கை போன் பண்ணுறன்;.என்ற வாறு ஈசன் தனது பொதியை தயார் செய்தான்.

நானும் உன்னட்டை சொல்ல நினைச்சனான் நீ இஞ்சை நிக்கிறதும் அவருக்கு பெரிசா பிடிக்கேல்லை அதை உன்னட்டை என்ணெண்டு சொல்லுறது அதை விடை அவர் சில நேரம் உன்னோடை பிரச்சனைக்கு வந்திடுவாரோ எண்டு வேறை எனக்கு பயம் அதாலை நீ வேறையிடத்திலை நிக்கிறது உனக்கும் நல்லது கோவிக்காதையடா என்றவாறு ஈசனின் கைகளை பிடித்து கொண்டாள்.

ஈசன் தனது நண்பன் வீட்டிற்கு போய்விட இரவு வேலையால் வந்த ரவி . சாந்தி ஈசன் கொண்டு வந்த சொக்லெற்ரை சாப்பிட்டபடி தொலை காட்சி பாத்து கொண்டுருந்ததை கண்டதும்
எங்கை உன்ரை தம்பி ஆழை காணேல்லை

சாந்தி எழுந்தவாறு அலன் யாரோ தன்ரை சினேதன் வீட்டை நிக்கிறணெண்டு போட்டான் போகேக்கை வருவானாம் உங்களிட்டையும் சொல்ல சொன்னவன்.

ரவி அலமாரியிலிருந்த முதல்நாள் ஈசன் குடுத்த விஸ்கியில் இருந்த மீதத்தையும் இரண்டு கிளாசையும் எடுத்தவாறு என்ன என்னைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாத்தையும் சொல்லி ஆளை அனுப்பிட்டியா??வா வந்து இதிலை இரு என்று சாந்தியை கூப்பிட சாந்தி தயங்கியவாறு நிக்க வாடி வந்து இரடி எண்று கத்த சாந்தி பயத்துடன் அருகில் போய் இருந்தாள்.

இரண்டு கிளாசில் விஸ்கியை ஊத்தியபடி நான் ஒரு முடிவுக்கு வந்திட்டன் இப்பிடியே ஒவ்வொரு நாளும் நானும் நீயும் சண்டை பிடிச்சு மூஞ்சையை நீட்டி கொண்டிருக்கிறதிலை பிரயோசனம் இல்லை.என்று கூறிவிட்டு சாந்தியை உற்று பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு தனது சட்டை பையிலிருந்து ஒரு கட்டு துண்டை எடுத்து லைற்றரில் சுூடாக்கி அதனை புகையிலை தூளுடன் கலந்து பேப்பரில் சுத்தியவாறு தொடர்ந்தான்.

அதாலை நீ யோசிக்காதை உன்னை வீட்டை விட்டு கலைக்கப்பேறனெண்டு ஏணெண்டா பிரெஞ்சு காரியளிட்டை இல்லாத ஏதோ ஒரு ஒரு கிக் உன்னட்டை இருக்கு ஆனால் நீ விரும்பின மாதிரி என்னாலை மாற ஏலாது அதாலை நீ நான் விரும்பின படி மாறிடு பிறகு இரண்டு பேருக்கும் பிரச்சனையே இல்லை .

என்ற படி ஒரு விஸ்கி கிளாசை சாந்தியின் கையில் கொடுத்து விட்டு தானும் மற்ற கிளாசை தனது கையில் எடுத்து சாந்தியின் கிளாசில் சிங் என்று சொல்லி தட்டி விட்டு குடி என்றான்.சாந்தி என்ன செய்வது என்று தெரியாமல் மலைத்துப்போய் நிற்க
அவன் தனது விஸ்கியை ஒரே மடக்கில் குடித்து முடித்து விட்டு .

குடியடி குடி குடி குடி தம்பி கொண்டந்த சொக்கிலேற்ரை ஆசையா திண்டனியல்லே இதுவும் உன்ரை தம்பிதான் கொண்டந்தவன் குடி என்றவாறு அவளது கிளாசை அவளது வாயில் வைத்து திணித்து ஊற்றி விட கொஞ்ச விஸ்கி அவளின் தொண்டைக்குள் இறங்க அவள் திமிறி அவனை தள்ளிவிட மீதி கிளாசுடன் கீழே விழுந்துடைந்தது அவள் வேண்டாமப்பா அய்யோ தயவு செய்து என்னை விட்டு விடுங்கோ வேண்டாம் என்று கத்தியவாறு குளியலறைக்கு ஓட வெளிக்கிட அவளை கதிரையில் இழுத்து இருத்தி விட்டு அவன் சுத்திய கட்டுசிகரற்ரை புகைத்து சாந்தியின் முகத்தில் மாறி மாறி ஊதி விட்டு ஒரு மன நோயாளியை போல் சிரித்தான்.

சாந்திக்கு வயிற்ரை புரட்டிகொண்டு வாந்தி வருவது போல இருந்தது வார்த்தைகள் வரவில்லை கண்கள் பிதுங்கி தலை சுற்றுவது போல இருந்தது ஓங்காழித்த படி குளியலறைக்குள் பேனவள் கீழே விழுந்து தட்டு தடுமாளி எழுந்து குடல் வெளியே வருவது போல வாந்தியெடுத்து கொண்டிருக்க .

அவனோ விழுந்து விழுந்:து சிரித்தபடி முதல் இப்பிடித்தான் இருக்கும் போக போக பிறகு நீயே என்னை கேட்பாய் என்று சொல்லி கொண்டிருக்க வாசல் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது. ரவி சினத்துடன் அடசே பக்கத்து வீட்டு காரன் வந்திட்டானாக்கும் ஒரு சின்ன சத்தம் கேட்டா போதும் உடைனை வந்திடுவான் இண்டைக்கு இவனுக்கு இருக்கு என்று நினைத்தபடி போய் கதவு துவாரம் வழியாக பாரத்தான் வெளியே இரண்டு காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர் Arrow
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#62
ஐயா சாத்திரியாரே உண்மையி உங்கள் கதை நன்றாக இருக்கின்றது பாராட்டுக்கள்
அடுத்து என்ன நடக்குமென்று கொஞ்சம் ஊகிக்கக் கூடியதாகவே உள்ளது. Cry Cry :oops:
<<<<<..... .....>>>>>
Reply
#63
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
அவனோ விழுந்து விழுந்:து சிரித்தபடி முதல் இப்பிடித்தான் இருக்கும் போக போக பிறகு நீயே என்னை கேட்பாய் என்று சொல்லி கொண்டிருக்க வாசல் அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்டது. ரவி சினத்துடன் அடசே பக்கத்து வீட்டு காரன் வந்திட்டானாக்கும் ஒரு சின்ன சத்தம் கேட்டா போதும் உடைனை வந்திடுவான் இண்டைக்கு இவனுக்கு இருக்கு என்று நினைத்தபடி போய் கதவு துவாரம் வழியாக பாரத்தான் வெளியே இரண்டு காவல் துறை அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

தம்பி வெளியில் போய் ஆப்பு வைத்திட்டாரா இல்லை பக்கத்திவீட்டுக்காரனா.?
அடுத்த பாதையைப்பாத்தபடி <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#64
கதையினை ஆறுதலாக வாசித்துவிட்டு வாறன்.
முன்பும் உங்கள் கதைகள் வாசித்திருக்கிறன். எப்படியும் நன்றாகத்தான் இருக்கும்.
வாழ்த்துக்கள்...
மேலும் தொடருங்கள்...
Reply
#65
கதை நன்றாக இருக்கு . .. நல்லா போகுது ...சாந்தி தான் பாவம் ரொம்ப கஸ்டப் பட்டுருக்குறா ... சரி அடுத்த பாகத்தை போடுங்க வாசிக்க ஆவாலாக இருக்கு...
Reply
#66
சாத்திரி கதை மிகவும் நிஐமாக இருக்கின்றது. புலத்தில் கன வீட்டில் நடக்கும் கதையை அழகாக சொல்கிறீர்கள். சாந்தி மனமுடைந்து எடுக்கும் கடைசி முடிவு மிகவும் வித்தியாசமாய் இருக்கும் என நினைக்கின்றேன். காத்திருக்கின்றேன்

Reply
#67
இப்போதெல்லாம் சிவா ஒவ்வொருநாள் காலையும் சாந்தியின் வரவுக்காய் காத்து நிற்பது வழைமையாகி விட்டதுஇருவரும் ஒன்றாகவே வகுப்புகளிற்கு புறப்படுவார்கள் அன்றும் வழைமை போல காத்து நின்றான் ஆனால் சாந்தியை காணவில்லை அவனுக்கு கற்பனை பல பக்கத்தால் ஓடியது நேற்று இரவு பொலிசும் வந்திட்டு போனவன் என்ன நடந்ததோ எண்று நினைத்தவன்.

எதற்கும் போய் ஒருக்கா கதவிலை தட்டி பாப்பமா?? சே சில நேரம் ரவி நிண்டால் அதுவேறை வம்பா போயிடும் என்ன செய்யலாம் என்று தத்தளித்து கொண்டிருந்த வேளை லிப்ற் இறங்கும் சத்தம் கேட்டது அவனையறியாமலே கடவுளே சாந்தியா இருக்க வேணும் என நினைக்க லிப்ற் இரண்டாம் மாடியில் நிற்று கதவு திறந்தது .

சாந்திதான் அவளை பார்த்ததும். ஒரு நிம்மதி பொரு மூச்சுடன். என்ன வழக்கம் போலை பாத்றுமிலை வழுக்கி விழுந்திட்டீங்களா ?? முகம் ஒரு மாதிரியிருக்கு அது சரி நேற்று பொலிஸ் வந்த மாதிரி கிடக்கு நான் நினைச்சன் மனிசனை பிடிச்சு கொண்டு போட்டாங்களாக்கும் எண்டு என்ன நடந்தது .

ம் நான் இண்டைக்கு வகுப்புக்கு வரேல்லைஎனக்கு சரியா வயிறு நோகுது தலையிடியும். நீங்கள் பாத்து கொண்டு நிண்டாலும் எண்டு சொல்லதான் வந்தனான். ரெலிபோன் அடிச்சு சொல்ல உங்களின்ரை நம்பர் என்னட்டை இல்லை நானும் இவ்வளவு நாளும் கேக்கேல்லை என்று கலங்கிய கண்களை துடைத்தவாறு கூறினாள்.

சிவா தலையை ஆட்டியபடி என்ன நடந்தது நேற்றும் சண்டையோ பொலிஸ் வரேக்கை கண்டனான் வந்து பாக்க வெண்டு யோசிச்சிட்டு பிறகு அதாலை உங்களிற்குதான் இன்னும் பிரச்சனை அதுதான் வரேல்லை என்ன நடந்தது சொல்லுங்கோ ??வாங்கோ இதிலை நிண்டு கதைக்காமல் வீட்டுக்கை உள்ளை வாங்கோ என்று அழைத்தான் .

சிவா வீட்டில் உள்ளே போன சாந்தி உள்ளே போய் கதிரையில்: அமர மறுத்து நான் கன நேரம் நிக்கேல்லை அவர் வெளியிலை போட்டார் வேலைக்கா தான் இருக்க வேணும் . சில நேரம் திடீரெண்டு வந்தாலும். நான் கெதியா போறன் என்றவாறு சிவரில் சாய்ந்தபடி நடந்தவற்ரை சிவாவிடம் விளக்கினாள் . பக்கத்து வீட்டு காரன் தான் போன் பண்ணியிருக்கவேணும் பொலிஸ் வந்திட்டான் நான் தான் எனக்கு சுகமில்லை விழுந்திட்டன் எண்டு சொல்லிசமாளிச்சு அனுப்பிட்டன்.

நான் சத்தியெடுத்து கொணந்டிருந்ததாலை பொலிசும் அம்புலன்சை கூப்பிடவா எண்டு கேட்டான் நானும் தேவையில்லை எண்டு சொல்ல அவையள் நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியேல்லை இரண்டு பேரின்ரை பெயர் விபரத்தை வாங்கி எழுதி கொண்டு போட்டாங்கள்.அதோடை அவரும் பேசாமல் இருந்திட்டார்.

சிவாவந்த கோபத்தை அடக்கியவாறு அவர் என்ன அவர் அவருக்கு மரியாதை வேறை வேண்டி கிடக்கோ நீங்கள் பேசாமல் பொலிசிட்டை உண்மையை சொல்லியிருக்கலாம் கொஞ்ச நாள் உள்ளை போட்டு வந்தால்தான் உப்பிடியான ஆக்கள் திருந்துவினம்.

சாந்தி நான் உங்கடை பிரச்சனையிக்கை தலையிடுறன் எண்டு நினைக்காதையுங்கோ ஏதோ உங்கடை அப்பாட்டை படிச்சிருக்கிறன் அந்த நன்றி கடனிலை உள்ள அக்கறை எண்டு எடுத்தாலும் சரி அல்லது யாரோ ஒரு தமிழ் பிள்ளை கஸ்ர படுறதை பாக்க முடியாமல் சொல்லுறன் எண்டு எடுத்தாலும் சரி இன்னும் எத்தினை நாள் இப்பிடி சித்திர வதையிக்கை வாழ போறியள் உங்கடை வாழ்க்கையை உப்பிடியே நீங்களே அழிக்க போறீங்களா உங்கடை தம்பி நிக்கேக்கையே ஒரு முடிவு எடுத்திருக்கலாம். ஏதோ யோசிச்சு நடவுங்கோ ஆனால் ஒண்டு மட்டும் தெரியிது ஒருநாளைக்கு அவன் உங்களை அடிச்சே கொல்ல போறான்.

சாந்திக்கு அவளால் கட்டுபடுத்த முடியாமல் கண்களால் வழிந்த நீரை துடைத்த படி.
என்னை அடிச்சு கெண்டால்தான் பிரச்சனை முடீஞ்சுதே என்ன செய்ய பேசாமல் தற்கொலை செய்யலாம் எண்டும் யோசிச்சனான் ஆனால் அதுக்கும் ஊரிலை அம்மா அப்பா தங்கச்சியை நினைச்சா மனம் வருகுது இல்லை. அடுத்தா தங்கச்சி வேறை பிறகு அவளுக்கு நாளைக்கு ஒரு சம்பந்தம் எண்டு வரேக்கை ஊரிலை பலமாதிரியும் கதைப்பினம்.

அம்மா பாவம் ஏற்கனவே வருத்த காரி இப்பிடி எல்லாத்தையும் யோசிச்சு ஏதோ நான் இஞ்சை சந்தோசமா இருக்கிறன் எண்டு நினைச்சு கொண்டாவது அவையள் நிம்மதியா இருக்கட்டுமெண்டுதான் பல்லை கடிச்சு கொண்டு இருக்கிறன்.பாப்பம் ஏதாவது முடிவு ஒண்டு கடவுள் வழி காட்டுவார்தானே சரி உங்களிற்கு நேரம் போட்டுது போங்கோ முடிஞ்சா நாளைக்கு வகுப்புக்கு வாறன்.

ம் உங்களை திருத்த ஏலாது நான் என்ன சொன்னாலும் நீங்கள் கேக்கிற மாதிரியில்லை உப்பிடியே சமுதாயத்துக்கு பயந்து கொண்டும் அம்மா அப்பாவை நினைச்சு கொண்டு ஒவ்வொரு நாளும் அடி வாங்கி கொண்டு அழுது கொண்டு இருங்கோ. சரி டொக்ரரிட்டை போறீங்களோ இல்லாட்டி நான் வலிக்கு ஏதும் மருந்து வாங்கி தந்திட்டு போகட்டோ?


வேண்டாம் நீங்கள் போங்கோ என்னட்டை மருந்துகள் இருக்கு அப்பிடியும் முடியாட்டி நானே டொக்ரரிட்டை போறன் . என்றவாறு சிவாவும் சாந்தியும் வீட்டை விட்டு வெளியே வந்ததும் அப்பிடியே உறைந்து போய் நின்றார்கள். ரவி சுவரில் ஒரு கையை ஊன்றியபடி ஒரு சிகரற் ஒன்றை ஊதியவாறுவாறு நிண்டு கொண்டிருந்தான் Arrow
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#68
ஆகா ரவிட்டை மாட்டுப்பட்டு போட்டினமா? பாவம் சாந்தி. இனி என்ன நடக்கும் என்று அறிய ஆவலாக உள்ளோம்
<b> .. .. !!</b>
Reply
#69
சிவாவின் பாத்திரம் பொறுப்புடன் அமைந்துள்ளது. ம் பாப்பம் ரவி என்ன சொல்றார் என்று தொடருங்கள் சாத்திரி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#70
நானும் அடுத்தவாரம் அய்ரோப்பிய சுற்று பயணம் மேற்கொள்ள(பெல்யியம்.கொலண்ட்.யெர்மன்.சுவிஸ்)இருப்தால் முடிந்தளவு கதையை முடித்துவிட்டு போக முயற்சிக்கிறேன் இல்லாட்டி முடிவு ஒரு பத்து நாளின் பின்னரே எழுத வேண்டி வரும் என்பதை கவலையுடன் தெரிவிக்கிறேன் Cry Cry Arrow
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#71
சாத்திரி தொடர் மிகவும் அருமை
ஐய்யோ சாத்திரி வாசகர்களை இப்படி ஏங்க வைக்காதீர்கள். தொடரை முடித்து விட்டு உங்கள் சுற்றுலா பயணத்து போங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று ஆறிய ஆவல்

Reply
#72
சாத்திரி அண்ணா...கதை விறுவிறுப்பாக இருக்கிறது...ஆனால்..கதைல் வரும் சாந்தியின் வாழ்க்கையை நினைக்கயில் தான் மனசுக்கு ஏதோ கஷ்டமா இருக்கிறது.... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்னவோ..கதை மனதோடு உறைந்து போவது போல் ஒரு உணர்வு.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Quote:ரவி சுவரில் ஒரு கையை ஊன்றியபடி ஒரு சிகரற் ஒன்றை ஊதியவாறுவாறு நிண்டு கொண்டிருந்தான்

இதில விட்டுட்டு போவதாக சொல்லுறீங்களே. Confusedhock: போய் வரும் வரை பொறுப்பது கஷ்டம்..சொல்லிட்டு ப்போங்கோ... :roll:
..
....
..!
Reply
#73
பெல்யியம்.கொலண்ட்.யெர்மன்.சுவிஸ் ல இப்பவே பொங்கலுக்கு ஆயத்தம் செய்யவோ?
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#74
கொஞ்சம் வாசித்தன் சாத்திரி
நல்லாயிருக்கு
முழுவதும் வாசித்து விட்டு சொல்றன்.

வாழ்த்துகள்.............
Reply
#75
sathiri Wrote:நானும் அடுத்தவாரம் அய்ரோப்பிய சுற்று பயணம் மேற்கொள்ள(பெல்யியம்.கொலண்ட்.யெர்மன்.சுவிஸ்)இருப்தால் முடிந்தளவு கதையை முடித்துவிட்டு போக முயற்சிக்கிறேன் இல்லாட்டி முடிவு ஒரு பத்து நாளின் பின்னரே எழுத வேண்டி வரும் என்பதை கவலையுடன் தெரிவிக்கிறேன் Cry Cry Arrow

சாந்தியையும் சிவாவையும் ரவியிடம் மாட்டிவிட்டுவிட்டு நீர் ஓடித்தப்ப(எஸ்கேப் ஆக)பார்க்கிறீர். :? :? :?
கதை நன்றாக உள்ளது மிகுதியை தொடரவும் Arrow Arrow
" "
Reply
#76
சாத்திரி, உங்கட ஐரோப்பிய அவலம் தொடருக்காக உங்களை சுற்றுலா போகும் நேரம் யாரும் போட்டு தள்ள வாய்ப்பிருக்கு கவனமா போய் வாருங்க. எதுக்கும் இந்த தொடர்கதையை முக்கியமான இடத்தில விட்டுட்டு போகாம் எழுதிட்டு போனால் நல்லாருக்கும் :wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#77
சாத்திரி சுற்றுலா போய் வந்தும் மிகுதி தொடரை காணலையே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#78
Mathan Wrote:சாத்திரி சுற்றுலா போய் வந்தும் மிகுதி தொடரை காணலையே?
அடிச்சது இன்னும் இறங்கேலைப்போல கொஞ்சம் பொறுங்கோ....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#79
சாத்திரி வந்து ஒரு கிழமையாச்சு எங்க இன்னும் தொடரை தொடரக் காணவில்லை :evil:
<b> .. .. !!</b>
Reply
#80
வணக்கம் உறவுகளே சுற்றுலா முடிந்து வந்ததும் உடல் நிலையும் சரியாக இல்லை அதோடை வீடும் மாறி கொண்டிருப்பதால் நேரமின்மை ஆனாலும் கதையின் தொடருக்கு ஆவலாய் காத்திருந்த உங்களிற்காய் இதோ.....

சிகரற் புகையை மேலே நேக்கி ஊதிவிட்டு மீதியை தரையயில் எறிந்துவிட்டு ரவி வாடி வா நான் நினைச்சனான் என்னடா இப்ப கொஞ்ச நாளா என்னை எதிர்த்து கதைக்கிறயெண்டு அந்த தைரியம் எங்கை இருந்து வந்ததெண்டு இப்ப தெரியிது நான் சந்தேக பட்டதும் சரியா தான் போச்சுது.

அதாலை தான் இண்டைக்கு வேலைக்கு பேகாகாமல் ஒளிச்சிருந்து பாத்தனான் என்ன நடக்குதெண்டு
அப்பிடி யென்னத்தையடி என்னட்டை இல்லாததை அவனிட்டை கண்டனி யென்றபடி சாந்தியை நெருங்கி அவளது தலை முடியை கொத்தாய் பிடித்து இழுத்து வந்து லிப்ற்றினுள் தள்ளினான்.

சிவா எதுவும் செய்ய முடியாதவனாக ரவி அவசரப்படாதை நீ நினைக்கிற மாதிரியில்லை..என்றவும் ரவி ஆவேசமாக சிவா பக்கம் திரும்பி டேய் சிவா பொத்து வாயை இது எனக்கும் மனிசிக்கும் உள்ள பிரச்சனை நீ தலையிடாதை எண்று கையை நீட்டி விரலை சுண்டியவாறு கூறிவிட்டு லிப்றினுள் நுளைந்தவன் அவனது சப்பாத்து கால் சாந்தியின் அடி வயிற்றில் இறங்கியது.

அய்யோ அம்மா என்ற சாந்தியின் அலறலுடன் லிப்ற் மூடிக் கொள்ள அதுதான் சமயமமென்று காத்திருந்த ரவியின் கால் கை எல்லாமே சாந்தியை பதம் பாத்தது. அடி வயிற்றை பொத்தி பிடித்தபடி அவன் அடிப்பதைகூட தடுக்க முடியாமல் சாந்தி லிப்றின் முலையில் சுருண்டு போய் இருந்துவிட்டாள்.

லிப்ற் அவர்கள் மாடியில் நின்றதும் ரவி சாந்தியை ஒரு கையால் தலை முடியை பிடித்து இழுத்து சென்று வீட்டை திறந்து உள்ளே தள்ளசாந்தி தட்டு தடுமாறி உள்ளே ஒடிப்போய் படுக்கையறையினுள் நுளைந்து கதைவை புூட்டி கொண்டு படுக்கையில் விழுந்தவளிள்கு தலை சுற்றி கொண்டு கண்கள் இருண்டு கொண்டு வருவதை போல இருந்தது அப்படியே மயங்கி போய் விட்டாள்.

கீழே ரவி சாந்தியை உதைந்ததையும் அவளது அலறலையும் பார்த்து திகைத்து போய் நின்ற சிவா சில கணங்களில் தன்னை சுதாகரித்தவன் தனது கை தொலை பேசியை எடுத்து காவல் துறையின் இலக்கங்களை அழுத்தி விபரத்தை கூறி விட்டு அந்த குடியிருப்பின் கீழேபேய் நின்று கொண்டான்.

; ரவியோ சாந்தியிடம் படுக்கையறையை திறக்கும்படி கத்தி கதைவை தட்டி உதைந்து பார்த்து விட்டு இரடி உனக்கு பிறகு வந்து மிச்சம் கவனிக்கிறன் என்று கத்திவிட்டு வீட்டை விட்டு வெளி யேறவும்.சில நிமிடங்களில் வந்த காவல் துறையினர் அங்கு வந்ததும் சிவா தன்னை அறிமுகபடுத்தி தான் தான் அழைத்ததாககூறி அவர்களுடன் ரவியின் வீட்டிற்கு அழைத்து சொல்லவும் நேரம் சரியாக இருந்தது.

வந்த காவல் துறையினர் ரவியை கைது செய்துவிட்டு சாந்தியின் படுக்கையறையை தட்டி தாங்கள் காவல்துறை வந்திருப்பதாகவும் பயப்படாமல் கதைவை திறக்கும்படி கூறியும் எந்தவித பதிலும் இல்லாததால் உடனடியாக முதலுதவிபிரிவை அழைத்துவிட்டு கதைவை உடைத்து உள்ளே போன காவல்துறை மயங்கி கிடந்த சாந்தியை அவசரமாக வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்து விட்டு சிவாவின் விபரங்களை பெற்று கொண்டுதேவையேற்பட்டால் அழைப்பதாக கூறி விட்டு ரவியின் வீட்டை சோதனை செய்து விட்டு ரவியை அழைத்து சென்று விட்டனர்.

வைத்திய சாலையில் சாந்தி மெல்ல மயக்கம் தெளிந்து கண்விழித்து பார்தாள் உடலை அசைக்க முடியவில்லை கையில் மூக்கில் என்று வயர்கள் பொருத்தபட்ட நிலையில் கட்டிலில் படுத்திருந்தாள்.மெல்ல அசயமுயன்றபோது அங்கு அவசரமாக நுளைந்த தாதியர் இருவர் அவரை அசைய வேண்டாம் என கூறிய போதுதான் தான் வைத்திய சாலையில் இருப்பதை சாந்தி உணர்ந்தாள்.

வந்த தாதியரில் ஒருவர் சாந்திக்கு கையில் ஒரு ஊசியை போட்டுவிட்டு. உங்களிடம் காவல்துறை விசாரணைக்கு வருவார்கள்.அத்துடன் உங்களுடன் வந்த உங்கள் நண்பர் ஒருவரும் வெளியில் காத்து நிக்கிறார்.அவரை அனுப்புகிறோம் என்று விட்டு போய் விட்டனர்.

சில நிமிடங்களில் சாந்தியின் அறையில் நுளைந்த சிவா சாந்தியை பார்த்படி நான் சரியா பயந்திட்டன் டொக்ரர் சொன்னார் நீங்கள் உடல் மன நிலையாலை சரியா பலவீன பட்டு இருக்கிறியள் அதுதான் மற்றபடி பெரிய பிரச்சனை இல்லையெண்டார் இப்பதான் நிம்மதியாயிருக்கு எண்றவாறு சாந்திக்கு நடந்தவற்றை விபரித்தான்.

அசையாமல் எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த சாந்தி .சிவா நீங்கள் ஏன் பொலிசை கூப்பிட்டனீங்கள்.இனி இது எங்கை போய் முடிய போகுதோ தெரியேல்லை.கடவுளே இனி நான் வீட்டு காரருக்கு என்ன சொல்ல மனிசனை பொலிசிலை பிடிச்சு குடுத்திட்டாள் எண்டு எல்லாசனமும் இனி கதைக்கபோகுது.இனி ரவி வேறை வெளியிலை வந்து பிரச்சனை வளர போகுதே ஒளிய குறையாது பேசாமல் விட்டிருந்தா நான் அப்பிடியே செத்து போயிருப்பன் ஒரு பிரச்சனையும் இல்லை .

கதிரை ஒண்ரை எடுத்து சாந்தியின் அருகில் போட்டு அமர்ந்த சிவா.
சாந்தி வடிவா கேளும் அப்போதை நான் பொலிசை கூப்பிடாட்டிலும் வேறை யாராவது கட்டாயம் கூப்பிட்டிருப்பான்.அதை விட இப்ப பொலிஸ் உங்களிட்டை வாக்கு மூலம் எடுக்க வருவினம் உங்களிற்கு பாசை பிரச்சனையெண்டா என்ரை பெயரை சொல்லுங்கோ நான் உதவி செய்யிறன் வாக்கு மூலம் குடுக்க.

ஆனால் நீங்கள் குடுக்கிற வாக்கு மூலத்தை பொறுத்துதான். ரவியை பற்றின முடிவுகளை பொலிஸ் எடுக்கும் இப்ப ரவிக்கு எதிரா சரியான சாட்சியள் பக்கத்து வீட்டு காரனின்ரை சாட்சி எண்டு கனக்க இருக்கு. நீங்கள் இன்னமும் இவ்வளவும் நடந்தா பிறகும் பத்தாம் பசலித்தனமா புருசனை காப்பாத்திறணெண்டு வெளிக்கிட்டா.அது நீங்களே உங்கடை தலையிலை மண்ணள்ளி போடுற மாதிரி முடியும்.

ரவி நாளைக்கு வெளியிலை வந்து இதை தான் தொடர போறான். அதாலை இது சரியான சந்தர்ப்பம் உங்கடை நன்மைக்கு சொல்லுறன் யோசிச்சு முடிவெடுங்கோ.

அதோடை இப்ப ரவிக்கு எல்லா ஆத்திரமும் என்னிலை வெளியிலை வந்தாலும் முதல் என்னோடைதான் கொழுவுவான். எனக்கு பிரச்:சனையில்லை நான் வேறை இடம் மாறி போடுவன்.பிறகு நீங்களாச்சு ரவியாச்சு கொங்ச நேரத்திலை பொலிஸ் வரும் ரவிக்கு எதிரா வாக்கு மூலம் குடுக்கிறதா இல்லையா எண்டதை யோசிச்சு முடிவெடுங்கோ நான் வெளியிலை நிக்கிறன்.

எண்றவாறு சிவா போய்விட சாந்திக்கு இந்த உலகத்திலிருந்து தன்னை மட்டும் தனியே வெளியே தூக்கி போட்டு விட்டதை போன்றதொரு உணர்வு.கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி சிவா சொல்லுறதும் நியாயமாக பட்டாலும் பின்னர் புருசனை யெயிலுக்கு அனுப்பினவள் எண்று தனது தாய் தந்தையரே தன்னுடன் கதைப்பார்களா??சரி அப்pடித்தான் செய்தாலும் அடுத்து தான் என்ன செய்வது ?? அல்லது பேசாமல் ரவியுடன் மீண்டும் சேர்ந்தாலும் வாழ ஏலாது அது நிச்சயம் ???பேசாமல் தற்கொலை செய்து விட்டால் எல்லாத்திற்கும்ஒரு முடிவு வருமா???
என்று யோசித்தவள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள். Arrow



உறவுகளே சாந்தி எடுத்த முடிவு எப்படிப்பட்டது ரவிக்கு எதிரான முடிவா?? அல்லது ரவியுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? அல்லது தற்கொலை செய்து கொண்டாளா?? உங்கள் ஊகம் என்ன ????
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)