08-20-2003, 05:53 PM
<span style='color:#0012ff'>ஃப்ரான்ஸ்க்கு அனுப்புவது இருக்கட்டும்... குறும்படங்களை கிராமத்துக்கு அனுப்புங்கள்
\"[size=24]எடிட்டர்\" லெனின்!</span>
பெரும்படங்கள் என்கிற முழு நீளத் திரைப்படங்களின் பரபரப்பான ஆக்கிரமிப்புகளுக்கிடையிலும் குறும்பட உலகம் இன்னமும் அழுத்தமாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்தில் ஜிப்ஸி தியேட்டர்ஸ் நிறுவனம் குறும்படத் திருவிழாவை நடத்திக் காட்டியது சென்னையில்.
பொழுதுபோக்கு, ஆபாசம், வன்முறை போன்ற மலிவான ரசனைக் கலாச்சாரத்தை கடந்து, சில நிமிடங்களில் கண்களையும் இதயங்களையும் கரைத்துவிடும் சக்தி கொண்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன.
குறும்படங்களுக்கு முன்னதாக ஜிப்ஸிராஜ்குமாரின், "எங்கே இளைஞர்கள்?" - என்ற வீதி நாடகமும் அரங்கேற்றப்பட்டது. அதற்கப்புறம் குறும்பட நிகழ்ச்சி. தானம் பண்ண வக்கில்லாதவனாக இருந்தாலும், தனக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பிறருக்குக் கொடுத்து உதவும் ஓர் ஊமை ஏழையை நாயகனாக்கி, இக்குறும்படத்தை இயக்கியிருந்தார் வின்சென்ட்ராய். இல்லாதவனே இருப்பதை கொடுக்கும்போது இருப்பவனுக்கென்ன கேடு எனக் கேட்டு பொட்டில் அறைகிறது படம்.
அடுத்து திரையிடப்பட்ட இயக்குனர் ஜோவின் "குற்றவாளியைத் தேடி" என்ற குறும்படமும், காமராஜின் "கோமாளி", பிரகாஷின் "தி எண்ட்" போன்ற குறுஞ்சித்திரங்களும் ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தின.
த.மு.செ., பாரதி பண்பாட்டு மையம், சாய்மூவி மேக்கர்ஸ், நித்யா மூவிஸ் ஆகிய கலை அமைப்புகள் இணைந்து நடத்திய இக்குறும்பட விழாவில் எடிட்டர் கம் இயக்குனர் லெனின், "குட்டி" இயக்குனர் ஜானகி விஸ்வநாதன், நடிகர் பொன்வண்ணன், த.மு.செ. நிர்வாகிகள் இரா.தெ.முத்து, கே.பி.பாலச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
வாழ்த்திய அனைவருமே தங்களது பேச்சை குறும்படம் போல் கச்சிதமாய் முடித்துக் கொண்டது பொருத்தமான சிறப்பம்சம்.
இவ்விழாவில் ஏற்புரையாற்றிய சில இயக்குனர்கள், "இந்த படத்தை நான் பிரான்ஸுக்கு அனுப்பியிருக்கேன். டெல்லிக்கு அனுப்பியிருக்கேன்" என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க, இவர்களுக்கான பதிலைத் தந்தார் லெனின்.
"குறும்படங்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். ராஜபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் "அசையும் நிழற்பட இயக்கம்" என்றொரு அமைப்பு கிராமப்புறங்களிலெல்லாம் குறும்படங்களைத் திரையிடும் பணியைச் செய்துவருகிறது. இயக்குனர்கள் தங்களது குறும்படங்களை இதுபோன்ற அமைப்புகளுக்கு அனுப்புங்கள்" என்றார்.
இந்தக் குறும்படத் திருவிழா கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்... சிறந்த முதல் குறும்படஇயக்குனருக்கான தேசிய விருதை பிரபு ராதாகிருஷ்ணன் வென்றிருக்கிறார். அவருக்கு வெள்ளித் தாமரையோடு பத்தாயிரம் ரூபாய் பரிசும்... "பரமபதம்" என்ற அந்தக் குறும்படத்தைத் தயாரித்த சென்னை திரைப்படக் கல்லூரிக்கும் இதே அளவு பரிசும் கிடைத்திருக்கிறது.
சுரேஷ் கே.நாயர் ஹீரோவாகவும், பத்மா சவுத்ரி ஹீரோயினாகவும் நடித்துள்ள "பரமபதம்" பல வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கும் போக இருக்கிறது.
எடிட்டர் லெனின் சொன்ன மாதிரி தமிழ்நாட்டுக்குள்ளும் குறும்படங்களைப் பரப்புங்கள்!
நன்றி வெப்உலகம்

<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->