aathipan Wrote:யாருடைய புகழ்ச்சியை எதிர்பார்த்தும் நான் இங்கு கவிதை எழுத வில்லை....
யார் நனைநதார்கள் யார் நனைய வில்லை என்று எனக்கு கவலையும் இல்லை......
ஏட்டிக்கு போட்டியாய் கவிதைகள் வேண்டாம்......
நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....
அன்புடன் ஆதீபனுக்கு,
உணர்ச்சி வசப்பட்டவன்தான் உண்மையான கலைஞன்.
அதற்காக உடனடியாக கோபப் படக் கூடாது. உங்களிடம் நிறையவே திறமையிருக்கிறது. எதாவது ஒன்று உங்களை தாக்குகிறதோ,அல்லது உங்களுக்கு பதில் எழுதுவதற்கு விருப்பமில்லையோ அதை தவிர்த்து விடுங்கள்...........
சிலவேளை அப்படி ஏன் செய்தேன் என்று ஒருவேளை பின்னர் தோன்றலாம்.இல்லாவிடில் உங்கள் எண்ணங்களை நேர்மையோடு தொடர்ந்தும் எழுதுங்கள்.ஒருநாள் நீங்கள் உங்களையே வெல்வீர்கள். இது நிச்சயம்..............
உன்னை அறிந்தால் -நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் - தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் - நீ
வாழலாம்
நான் சொல்வதை ஏற்றுக் கொள்ள மறுப்பீர்களானால்,
இன்று அல்ல என்றோ ஒரு நாள் உங்களுக்கு அது புரியும்....................
(உங்களைப் போல் உணர்ச்சிவசப்பட்டு இன்று வேதனைப்படுபவன்.................அனுபவப்பட்டவன் என்பதால் சொல்கிறேன்.)
உங்களைப் போன்றவர்கள் உதிர்ந்து விடக் கூடாது.
பூத்துக் குலுங்க வேண்டும்.அது நிறைவேறும் என்று நம்புகிறேன்.....................
aathipan Wrote:ஏட்டிக்கு போட்டியாய் கவிதைகள் வேண்டாம்......
நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....
ஏட்டிக்கு போட்டியாக நான்தான் எழுதினேன்.உங்கள் கவிதைகள் என்னை ஈர்த்த போது,அதோடு உறைந்து போவேன்.சில வரிகளில் பல கோடி அர்த்தங்கள்.............சிலவேளை உங்களுக்கே தெரியாத - புரியாத திறமையாக இருக்கலாம்.
உங்கள் கவிதைப் பெண், இன்று வேறொருவருக்கு மனைவியாகி அதுவும்...............
aathipan Wrote:ஒரு நாள் பள்ளிவிட்டு வரும்போது
பாதி வழியில் துப்பாக்கிச்சத்தம்
அது உன்வீட்டுப்பக்கம் தான்..
பதறி அடித்து ஓடிவந்தேன்..
நல்ல காலம் யாருக்கும் எதுவும் இல்லை...
ஆனால்
கூலிப்படைகளிடம் நன்றாக வாங்கிக்கொண்டேன்..
என்ற வரிகளின் ஊடாக , உங்களால் இப்படியான ஒரு விபத்து நடந்து அவள் ஒரு படை அதிகாரிக்கு இரையாகி அவனோடு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால், அவள் என்ன நினைப்பாள் என்று யோசித்தேன்.அதை எழுத்துகளில் வடித்தேன்...........
நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களென்று..............ஆனால்.........
(நான் கதையொன்றை வாசிக்கும் போது அந்த பாத்திரமாக வாசிப்பேன்.பின்னர் அதற்கு எதிராக ஒருவர் சிந்தித்தால்................எப்படியென்று பார்ப்பேன்.என் படைப்புகளில் யாரையும் நான் வில்லத்தனமாக காட்டுவதேயில்லை.அவர்கள் சரியென்று நினைப்பது போல்தான் படைப்பேன்.பெண்ணின் பகுதியை எழுதும் போது என்னை ஒரு பெண்ணாகவோ,ஒரு குழந்தையானால் ஒரு குழந்தையாகவோ என்னை மாற்றிக் கொள்வேன்............)
பல கவிஞர்கள் விழுந்ததற்கு காரணம், அவர்களை விடுத்து வேறு ஒருவரது மனதை புரிந்து எழுத முடியாததுதான்.
உ+ம்:கண்ணதாசனின் பாடல்களை பாருங்கள்,
கடவுடளை எதிர்த்த பாடல்களும் உண்டு.கடவுளிடம் வரம் கேட்ட பாடல்களும் உண்டு.
காதலை எதிர்த்த பாடல்களும் உண்டு. காதலுக்காக உருகிய பாடல்களும் உண்டு.
aathipan Wrote:யாருடைய புகழ்ச்சியை எதிர்பார்த்தும் நான் இங்கு கவிதை எழுத வில்லை....
இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.ஒருவன் எதையாவது எதிர்பார்க்காமல் எதுவுமே செய்வதில்லை.
உங்கள் கவிதைகளில் பாருங்கள் எங்கும் எதிர்பார்ப்புகள்,நிறைந்து (கிடந்தன)கிடக்கிறது..................சில வேளை அடி மனது சொல்வதை புறமனது சொல்ல மறுக்கலாம்.அது உண்மையில்லை.
aathipan Wrote:நான் எதிர்பார்த்தது உண்மையாகிவிடப்போகிறது....
நீங்கள் எதையோ எதிர் மறையாக எதிர்பார்த்துக் கொண்டே செயல் படுகிறீர்கள் என்பதை இந்த வரி கூறுகிறது.
நம்பிக்கை, ஒரு நாள் சாதிப்பேன் என்று எண்ணுங்கள். எதிரிகளாகவோ, கெட்டவர்களாகவோ யாரும் பிறப்பதில்லை.அது உருவாகிறது,அது மாறவும் வாய்ப்பிருக்கிறது.இல்லாவிடில் மனநல மருத்துவ மனைகளும்,சிறைகளும் தேவையில்லை. கெட்டவர்வர்களையும்,பகைவர்களையும் கொன்று போடலாம்.
தயவு செய்து கொஞ்சம் அமைதியாக யோசியுங்கள்........
ஒரு கலைஞன் அழிவதை நான் விரும்பவில்லை.
Have always balanced mind
controlle anger by love
reduce your wants
avoid unnececssary worry
-swamy sivananda
aathipan Wrote:இன்னும் வரும்
வரவேண்டும்...............
அதுவே என் பிரார்த்தனை.................
ஒருநாள் உங்கள் ரசிகனாக நானும் இருக்க வேண்டும்.
அன்புடன்
அஜீவன்