BBC Wrote:பாதுகாப்பு வழங்க ஈ.பி.டி.பி கோரிக்கை
பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் போட்டிýயிடுவதனால் அக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வடக்கு கிழக்கு உட்பட பிற மாவட்டங்களுக்கும் சென்று வருவதற்கு அவர்களின் போக்குவரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்குமாறு இக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் மா அதிபர் இந்திரா டP சில்வாவிடம் கடிýத மூýலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இக்கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும், விடுதலைப்புலிகளிடம் இருந்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் ஏ9 பாதைய10டாக போக்குவரவு செய்யவும் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்கவும் எனவும் அக் கடிýதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - தினக்குரல்
<b>இதுபற்றிய புலிகளின் கருத்து</b>
இந்தத் தேர்தலில் தமக்கு ஆசனம் கிடைக்கும் - மக்கள் தம்மை வெல்ல வைப்பார்கள் என தமிழ் விரோதக் குழுக்கள் கனவு காண்கின்றன.
இதற்குள் நு.P.னு.P குழு தலைமை வன்னிக்குள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தாம் பரப்புரை செய்ய வேண்டுமாம், அதற்கு சிறீலங்கா காவல்த்துறை தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. உண்மையாக தமிழ் மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றிருந்தால் இவர்கள் இப்படிக் கேட்டிருக்க மாட்டார்கள்.
கடந்த காலங்களில் அரச வாகனங்களையும், படையினர், காவல்த்துறையினரையும் பயன்படுத்தி ஆயுதங்களின் முனையில் மக்களையும் மிரட்டி தமிழ்;த் தேசியவாதிகளை தாக்கியும் - கொன்றும் கள்ள வாக்குகளைப் போட்டு நாடாளுமன்ற ஆசனங்;களைப் பெற்ற கூட்டம் - யதார்த்தத்தை உணராது வன்னிக்குள் பரப்புரை செய்ய சிறீலங்கா காவல்த்துறையின் பாதுகாப்பைக் கேட்கிறது. வன்னிக்குள் சிறீலங்கா காவல்த்துறை நுழைய முடியுமானால் நிலைமை இப்படியிருக்காது.
கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களில் கள்ள வாக்குகளை நு.P.னு.P போட முயன்ற போது அதனை எதிர்த்த அதிகாரிகளை மிரட்டி வாக்குப்பெட்டிகளை நிறைத்த சம்பவங்கள் யாழ். தீவகத்தில் பெருமளவில் நடந்திருக்கின்றன. வாக்குச் சீட்டுக்களை அபகரித்துச் சென்று தமது இடத்தில் வைத்து புள்ளடி போட்டு வாக்குப்பெட்டிகள் நு.P.னு.P யினரால் நிரப்பப்பட்டன.
இன்றைக்கும் சிறீலங்கா காவல்த்துறையினர், இராணுவத்தினருடன் திரியும் இவர்கள் உண்மையில் தமிழ் ;மக்களுக்கு சேவையாற்றுபவர்களா?. ஆளும் கட்சிகளுடன் நின்று பதவி ஆசைக்காக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சிதைக்கும் கைங்கரியத்தை புரியும் இந்த தேச விரோதிகள் - இம்முறை தமிழ் மக்களின் உண்மையான வாக்களிப்பு யாருக்கு என்பதை புரிந்து கொள்ளுவர். தமது முகாம்களை சிறீலங்காப் படையினரின் உயர் பாதுகாப்பு வலயங்களைப் போல வைத்திருக்கும். நு.P.னு.P குழு தம்மை மக்களுக்காக உழைப்பவர்கள் எனக் கூற என்ன அருகதை இருக்கிறது?.
தமிழ் மக்களை போர்க் காலத்தில் படையினருடன் இணைந்தே கொலை செய்த கைங்கரியத்தை செய்தவர்களாக இருக்கிறார்கள். சிறீலங்கா அரசின் ஒட்டுப்படையாகவே அவர்கள் துணைப்படையினருக்குரிய சம்பளத்தைப் பெற்றுகொண்டிருக்கிறார்கள்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று இப்பொழுதும் இவர்கள் பரப்புரை செய்கின்றனர். இவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஜே.வி.பி; - சந்திரிகா கூட்டணி எப்பொழுது தமிழ் மக்களுக்கு சுயாட்சியை தரப்போவதாக கூறிருக்கின்றன?. அல்லது இதுவரை சந்திரிகா கூட்டணி அரசுக்கு முண்டு கொடுத்து அமைச்சுப் பதவியையும் பெற்ற நு.P.னு.P கூட்டம் எப்போதாவது தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தர வேண்டும் எனக் கேட்டிக்கிறதா? அல்லது அதற்கான அழுத்தங்களையாவது கொடுத்திருக்கிறதா? அத்தகைய அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய இராணுவ பலமோ அரசியல் பலமோ அற்றதே அக்கூட்டம்.
இத்தகைய கூட்டம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை கொள்கையாக வைத்திருப்பது எப்படிப்பட்ட போலி அரசியல் என்பதை சகலராலும் புரிந்து கொள்ள முடியும். இராணுவ ஒட்டுப்படையாக இருந்து கொண்டு - அரசுக்கு தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து ஒரு பங்குக்கு தாமும் மக்களை படுகொலை செய்து வந்த இந்தக்கூட்டம் தாமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்ட முனைகின்றது. இம்முறை தேர்தலில் இந்தக்கூட்டம் கடந்த தேர்தல்களில் எப்படி ஆசனங்களை பெற்றன என்பதை சகலரும் விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்.
தமிழ்த் தேசியத்துக்காகவே எப்பொழுதும் தமிழ் மக்கள் வாக்களித்து வந்தனர். 1948 முதல் தம் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே இழப்புகளைத் தாங்கியவாறு அர்ப்பணிப்புகளை செய்தவாறு தமிழ் மக்கள் தம் வாழ்வை நகர்த்திக் கொண்டு வந்துள்ளனர். அற்ப சலுகைகளுக்காக இலவசங்களுக்காக தமிழ் மக்கள் எப்பொழுதும் உரிமைகளை விட்டுக்கொடுத்ததில்லை.
இதுவரை இதற்காக பட்ட துன்ப துயரங்களை இழப்புகளை தமிழ் மக்கள் அர்த்தமிழக்கச் செய்ய மாட்டார்கள். தமிழ் மக்கள் யார் தம் பிரதிநிதிகள் என்பதை இதுவரை கடந்து வந்த குருதிச்சுவடுகளின் சாட்சியாக வெளிப்படுத்துவர்கள். கடந்த காலங்களில் நு.P.னு.P போன்ற குழுக்களுக்களின் கொடூரங்களுக்கு பயந்து, பதுங்கியிருந்த தமிழ்மக்கள் - இன்று அவர்களின் வாகனங்களை கொழுத்தும் அளவுக்கு துணிந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அக்கூட்டம்;; வாகனங்களை வாடகைக்கு கேட்ட போது துணிச்சலாக மறுத்துள்ளனர். இதுவே வரலாற்று மாற்றம். அடுத்த கட்டமாக இக்கூட்டத்தை அடித்துத் துரத்தக் கூட மக்கள் தயாராகவுள்ளனர்.
தமிழ் மக்கள் உரிமைகளை பெற அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய நிலைமைக்கு இராணுவ hPதியாக அவர்கள் பெற்றிருக்கும் பலமே காரணமாகும். இதனை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். இத்தேர்தல் நாடாளுமன்றில் தமிழ் மக்களை அழுத்தம் கொடுக்கும் சக்தியாக மாற்றும் என்றாலும் அந்த ஆசனங்களுக்காக அல்லாது தமிழ் மக்களின் ஒரு கருத்துக்கணிப்பாகவே அமைகின்றது.
ஆகவே தமிழ் மக்கள் சகல சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்தி தமது வாக்குகளை வழங்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் உலகுக்கு சொல்லும் செய்தியாக அமையப் போகின்றது.
தமிழ் மக்கள் தமது கருத்துகளை தம் தாயகத்தின் குறியீடாக அமைந்துள்ளா ~வீடு| க்கு நேராக புள்ளடியிட்டு உலகுக்கு தெரியப்படுத்தவே போகின்றார்கள்.
நன்றி - புலிகளின் குரல்/தமிழ் நாதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>