Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
[b]நீங்கள் சொல்லுறதிலை எவ்வளவு உண்மையிருக்கு எண்டதை வன்னிக்கு ஆதரவு தெரிவித்த ஜோசப் பரராஜசிங்கம் இலெக்ஷனிலை அற்றஸ் இல்லாமல்ப்போனதிலையிருந்து விளங்கிச்சிது..
[b] இப்பகூட நடக்கிற சம்பவங்கள் கருணாதரப்பு யாருக்கு என்னசெய்தது என்பதை பறையடிச்சு சொல்லுது.. விளங்குதே..
இதுக்குமிஞ்சி விளக்கம் வேறையாராவதுதான் தரவேணும்.. என்னாலை முடியாது..
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சுட்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் சடலம் - நன்றி தினக்குரல்
<img src='http://www.thinakkural.com/2004/June/01/Na5.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நடேசனின் படுகொலை கிழக்கில் அறிஞர்களை அழித்தொழிக்கும் சதி
"நடுநிலையோடும் துணிவோடும் எவருக்கும் அஞ்சா நிலையோடும் செய்தியாளர்களுக்கு இருக்க வேண்டிய சிறப்பு இயல்புகளுடன் ஈழத்தமிழர் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துரைத்த மட்டக்களப்பு செய்தியாளர் ஜி.நடேசன் வெறி கொண்ட வன்முறைக்குப் பலியானது குறித்து எனக்கு இடிவிழுந்ததுபோல உள்ளது' என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
செய்தியாளர் ஜி.நடேசன் எனக்கு நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, அவர் எழுதிய நூல்களுக்கு முகவுரைகள் எழுதி அவரது எழுத்துப் பணிக்கு ஊக்கம் கொடுத்தவனும் கூட.
ஈழத்தமிழினத்தின் நெருக்கடி மிக்க இக் காலகட்டத்தில் இப்படியான இழப்புகள் தாங்க முடியாதவைகளாகும். இதற்கு முன் கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தம்பையாவின் மரணத்தையும் நடேசனின் மரணத்தையும் பார்க்கின்ற போது கிழக்கில் தொடர்ச்சியாக அறிஞர்கள் அழித்து ஒழிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனந்த சங்கரியின் அனுதாபம் :
ஊடகவியலாளர் ஜி.நடேசனின் படுகொலைச் செய்திகேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கிழக்குப் பல்கலைக்கழகப் பொருளியல் பீடத் தலைவர் அமரர் குமாரவேல் தம்பையாவின் சாம்பல் ஆறுவதற்கு முன் ஊடகவியலாளர் நடேசன் கொலை செய்யப்பட்டது தமிழ்ச் சமுதாயம் எங்கே போகின்றது என்று எண்ண வைக்கின்றது என தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிபிட்டுள்ளார்.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து நடுநிலை வகிக்க வேண்டிய ஊடகவியலாளர்கள் எங்கோ தவறுசெய்துவிட்டார்களோ என்பதற்காக இது ஒரு தண்டனையாக அமைந்துவிடக்கூடாது. ஒரு மனித உரிமையைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. சில படுகொலைகளைச் சரியென நியாயம் கற்பிக்கும் தலைவர்களும் மக்களும் ஊடகவியலாளர்களும் இனியாவது மனிதத்தை மதித்து அருவருக்கத்தக்க அரசியல் படுகொலைகளுக்கு என்றும் ஒரு நாகரிகமான சமூகம் அங்கீகாரம் கொடுக்காது என்பதை தெளிவுபடுத்த முன்வரவேண்டும்.
அமரத்துவமடைந்த ஜி.நடேசனின் ஆத்மாவின் பேரில் சகல தரப்பினரையும் இனியாவது கருத்துச் சுதந்திரங்களுக்கு மதிப்பளித்து ஒரு நல்ல ஆரோக்கியமான அரசியல் சூழலை எங்கள் மண்ணில் உருவாக்க ஆயுத கலாசாரத்தை நிறுத்தி உண்மையான ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களுக்கு மரணந்தான் என்றால் எமது மண்ணில் மிஞ்சுவது யார் ?
அமரர் ஜி.நடேசனை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வேலணை வேணியன் தனது அனுதாபச் செய்தியில் :
தமிழ் மக்களின் நலனுக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்து நின்ற சிறந்த ஊடகவியலாளர் அரசியல் விமர்சகர்,கட்டுரையாளர் வீரகேசரியின் மட்டக்களப்பு நிருபர் ஜி.நடேசனின் அகால மரணம் எவரும் எதிர்பார்க்காத ஒன்று இது அதிர்ச்சி தரும் துன்பகரமான செய்தியாகும்.
என வேலணை வேணியன் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படுகொலை ஒவ்வொரு தமிழ் மகனாலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும். ஊடகவியலாளர்களைத் தாக்குவதும் கைது செய்வதும் படுகொலை செய்வதும் ஒரு அரசாங்கத்தில் அநாகரிகமான செயலாகும்.
நடேசனின் இழப்பு இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் உலகத் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கு எமது மேல் மாகாண மக்கள் முன்னணி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நெஞ்சை உலுக்கும் படுகொலைகள்
மட்டக்களப்பில் அடுத்தடுத்து இடம் பெறும் வன்முறைகள், துப்பாக்கிக் கலாசாரம், தொடர்பாக பத்திரிகைகள் அடிக்கடி சுட்டிக் காட்டி வந்தன.
அது மாத்திரமன்றி, பத்திரிகையாளர்கள், கல்விமான்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் தெட்டத் தெளிவாக பாதுகாப்புசார்ந்தோரின் கவனத்துக்கு பல்வேறு தடவைகள் கொண்டு வரப்பட்டன.
எவ்வாறெனினும் வன்முறைகளும், கொலைகளும் கட்டுமீறிச் செல்வதையே காண முடிகின்றது. அந்த வரிசையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய பாதுகாப்புத் தரப்பினர் தவறி விட்டனரோ என்ற சந்தேகமே இன்று எங்கும் மேலோங்கியுள்ளது. பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் அடிக்கடி இடம் பெற்று வரும் சம்பவங்கள் பாதுகாப்புப் படையினருக்கே பாரிய சவாலாக மாறி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
போர் நிறுத்தத்துக்கு மத்தியில் ஆயுதபாணிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்களா? அல்லது வேறு ஏதேனும் சக்திகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பழிதீர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனவா? என்ற சந்தேகங்களும் கூடவே எழுதுகின்றன. அத்துடன் மக்களின் பாதுகாப்பும் கேள்விகுறியாகி வருகிறது.
தமது அட்டூழியங்களுக்கும் வன்முறைக் கலாசாரங்களுக்கும் துணைபோகத் தவறுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக அப்பாவி பத்திரிகையாளர்களைத் தீர்த்துக் கட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கதும், கவலைக்குரியதுமாகும்.
இதுவரை காலம் அரசியல்வாதிகள் மீது வைக்கப்பட்ட குறி தற்பொழுது பத்திரிகையாளர்கள் மீது வேகமாக மாறி வருவதை நன்கு உணர முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலோ அல்லது பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறை செலுத்தப்பட்டிருந்தாலோ இவ்வாறான படுகொலைகளைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.
சாதாரணமாக எழுத்துச் சுதந்திரத்தைக் கூட குழிதோண்டி புதைக்கும் வகையில் ஆயுத கலாசாரம் தலைவிரித்தாடுமானால், இந்த நாட்டின் எதிர்காலமும், இளம் வயதினரின் எதிர்காலமும் குட்டிச் சுவராகப் போவதை எவராலும் தடுக்க முடியாமலேயே போகும்.
சமுதாயத்தை நல்வழிப்படுத்தவும், அவர்களுக்குப் பக்க பல மாகவும்இருக்கும் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது.
வெறுமனே ஒவ்வொரு கொலைக்கும் ஏதாவதோர் நியாயம் கற்பித்து அதேவேகத்தில் மறந்து போவதை விடுத்து, மேலும் ஒருகொலை இந்த நாட்டில் எந்த மூலையிலும் இடம் பெறாதிருப்பதை உறுதி செய்வது அனைத்து தரப்பினரதும் கடப்பாடாகும்.
நாட்டின் சமாதானத்துக்காகவும், மக்களின் ஒருமைப்பாட்டுக்காகவும் ஓயாது குரல் கொடுத்து வந்த ஒரு ஜீவன் இன்று மீளாத்துயில் கொண்டு விட்டது. அந்த ஜீவனின் ஆத்ம சாந்திக்காக நாமும் பிரார்த்திக்கும் அதேவேளை, கொலைஞர்களை கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
பலியெடுக்கிறதும் பலிகொடுக்கிறதும்தானே 20 வருஷமா நடக்குதே.. இப்படி எத்தனையை பார்த்துவிட்டோம்..
சகோதரம் இப்பவும் சொல்லி கவலைப்படுது..
நாய்மாதிரி சுடடுப்போட்டுப்போக விடுப்புப் பார்கவெண்டே கூட்டம் போகும் என..
அப்படியான நாய்க்கூட்டம் மத்தியில் இதுவும் ஒன்று..
ஒண்றரை மணி நேரம் வீதியோரம் கிடக்குமளவுக்கு.. ஆதரவு இருந்திருக்கின்றது என்பது வேதனையான உண்மை..
:?: :!:
Truth 'll prevail
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
<b>ஆனந்த சங்கரியின் அனுதாப செய்தியிலிருந்து</b>
[b][size=18]ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து நடுநிலை வகிக்க வேண்டிய ஊடகவியலாளர்கள் எங்கோ தவறுசெய்துவிட்டார்களோ என்பதற்காக இது ஒரு தண்டனையாக அமைந்துவிடக்கூடாது. ஒரு மனித உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சங்கரிக்கு குலப்பன் போல....அதுசரி சங்கரி.... ஈழத்தில் தமிழர் தேசியத்திற்கும் தேசத்திற்கும் விடுதலையும் எழுச்சியும் பாதுகாப்பும் அளிக்கத்தக்க தற்போதுள்ள கருத்துக்கு ஈடான மாற்றுக் கருத்திருந்தால்...அதை முன்னிறுத்துங்கள் வரவேறக்க மக்கள் இருக்கின்றனர்...ஆனால் உள்ள நியாயத்துக்கு காட்டிக்கொடுப்புகள் மூலமும் கொலைகள் மூலமும் குழிபறிக்க நினைப்பவர் எவரும் துரோகிகள் தான்....அதுதான் தர்மத்தின் விதி....! தர்மத்தின் பக்கம் நின்ற பல்லாயிரம் பாண்டவரில் ஐவர் தான் பிழைத்தனர்....மிகுதிப் பேர் அதர்மத்தால் அழிக்கப்பட்டனர்....!
எனவே இதை ஒரு பாண்டவ வீரனின் இழப்பாகக் கொண்டு தர்மத்தின் தலைக்காக்க முனைவதே மக்களினதும் அதன் உண்மைப் பிரதிநிகளினதும் கடமை.....!
குலப்பன் என்றால் கொழும்பு வைத்தியசாலையை நாடவும்...அங்குதானே உங்கள் தமிழ் தேசியமும் தேசமும் குடிகொண்டுள்ளது....!
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
அடடே.. தனிப்பட்ட தாக்குதல் பற்றிய BBC யினது கருத்து நல்லா வேலைசெய்யிது..
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.virakesari.lk/VIRAKESARI/daily/20040602/images/vd2p1_1.jpg' border='0' alt='user posted image'>
<b>படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் பூதவுடல் நேற்றுக்காலை அவரது சொந்த ஊரான நெல்லியடிக்கு எடுத்துச் செல்லும் முன்னர் மட்டக்களப்பில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருப்பதையும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அழுது புலம்புவதையும் படத்தில் காணலாம்.</b>
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
நடேசன் படுகொலைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்
யாழ். எம்.பி. சிவõஜிலிங்கம்
மூத்த பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது ஈழத்தமிழ் மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. நீண்டகாலமாக தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்காகவும், ஒற்றுமைக்காகவும் அயராது உழைத்துவந்த நடேசனது இப்படுகொலைச் சம்பவத்திற்கான முழுப்பொறுப்பினையும், அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும் என யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உங்கள் பெயரில் எங்கள் தெரிவு என்ற அடிப்படையில் கருணா குழுவினரின் பெயரில் இவ்வாறான படுகொலைகளை அரசாங்கம், படைகளின் உதவியுடன் செய்வதனை தொடர்ந்தும் எம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறான படுகொலைகளை நிறுத்துவதன் மூலம்தான் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.
இப்படுகொலைகளைச் செய்துவரும் அரசாங்கத்தின் முகமூடியைக் கிழித்தெறிந்து சர்வதேசத்திற்கும் அம்பலப்படுத்த முன்வருமாறு தமிழ்த்தேசிய இனத்தின் சகல பிரிவினருக்கும், முற்போக்காளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் நாட்டுப் பற்றாளர் நடேசனின் மனைவி, அன்புச் செல்வங்கள், குடும்பத்தினர் தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எனது ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினப் படுகொலைகளைப் பற்றி செய்திகளைத் திரிவுபடுத்தி வெளியிடும் சிங்கள ஊடகங்களையும் கண்டிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
நீக்கப்பட்டள்ளது - மோகன்
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
RSF condemns Nadesan's murder
<b>[TamilNet, June 01, 2004 21:57 GMT]</b>
The Paris based world media watchdog, Reporters Without Borders (Reporters sans frontières) Tuesday condemned the murder of Tamil journalist Aiyathurai Nadesan in Batticaloa and voiced concern that "dissension within the Tamil separatist movement and existing tensions with the security forces could lead to an escalation of violation against the news media".
Following is the RSF statement:
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/02/rsfLogo.gif' border='0' alt='user posted image'>
"We call on the authorities to keep us informed of progress in the investigation into this new crime against the press, the organisation said.
Nadesan was gunned down as he was going to work at about 8:00 a.m. by two men on a motorcycle who got away. His body was taken to the local hospital where an autopsy was carried out.
The online news agency tamilnet.com said Nadesan worked for the daily Virakesari Tamil, the Tamil-language service of the London-based radio station IBC and several online media. He was known for criticising the Sri Lankan army and paramilitary groups in his weekly column in Virakesari Tamil¹s Sunday edition.
His murder comes amid a resurgence of violence linked to a split within the Tamil Tigers (LTTE). After signing a cease-fire with the government, the LTTE is having to deal with the emergence of an armed breakaway faction. Nadesan was considered to be close to LTTE.
A prominent member of the local press, Nadesan received the prize for the best Tamil journalist in 2000. He was briefly detained in July 2001 and threatened by an army officer with prosecution under the Prevention of Terrorism Act because of his criticism of the government and the security forces. He was married and had three children.
Myilvaganam Nimalarajan, a Jaffna-based stringer for the Sinhala-language service of the BBC World Service, was killed in October 2000 at a time of tension within the different Tamil movements. Despite national and international pressure, his murder remains unpunished."
Meanwhile, Liberation Tigers have alleged that Mr. Nadesan's murder is part of a campaign by elements of the Sri Lanka Army against their cadres and intellectuals supporting their political stand in the Batticaloa-Amparai region.
The SLA is using several Tamil paramilitary groups, including the 'Karuna' group that recently broke away from the LTTE, in its campaign, the Tigers say. The head of the LTTE's political wing in Batticaloa-Amparai, Mr. E. Kausalyan, said in May, "Karuna's rebellion has become routine explanation for the attacks on [the LTTE]. But these are being organized by the Sinhala military.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
வசூல் செய்து வன்னிக்குக் கொண்டுபோனால் அதுகொள்ளை அதையே வாலாட்டிக் கொண்டு மலேசியாவுக்கோ அவுஸ்திரேலியாவுக்கோ கொண்டு போனா அது அபிவிருத்தி இதற்குப் பெயர்தான் மோட்டுவாதம்
இரு பக்கமும் தவறு கண்டுபிடியுங்கள் ஏற்றுக்கொள்ளலாம் கருணாவுக்கு குடை பிடிக்காதீர்கள்
\" \"
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
சுட்டுப் போட்டுவிட்டுப் போன சுடலைமாடன்கள் எங்காவது ஒளிந்திருந்து தூக்க வருபவர்களையும் சுட்டாலும் என்ற பயத்தில் யாரும் போயிருக்கமாட்டார்கள்.பிரேமதாசா கூட குண்டுவெடிப்பில் தனது கோட்டையிலேயே நீண்டநேரமாகக் கிடந்தவர் தான் அவரது செல்வாக்கு அவ்வளவா?
\" \"
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அமரர் ஐp.நடேசனின் இறுதிஅஞ்சலியின் போது, அரசுக்கு பாலகுமார் கடும் எச்சரிக்கை
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ புதன்கிழமை, 02 யூன் 2004, 21:56 ஈழம் ஸ
இன்று கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பு செயலகத்தில் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த எழுத்தாளருமான 'நாட்டுப்பற்றாளர்" அமரர் ஜி.நடேசனுக்கு இறுதி வணக்க நிகழ்வு இடம்பெற்றபோது பல பிரமுகர்களும் உரை நிகழ்த்தினார்கள்.
எழுத்தாளர் திரு.பாலகுமார் உரையாற்றுகையில், தமிழினத்திற்குப் பாரிய பணி செய்த அற்புதமான ஒரு மனிதரை, எமது இனம் இழந்துவிட்டது என்று குறிப்பிட்டார்.
கடந்தகால வரலாற்றிலிருந்து சிங்கள அரசும் சிங்கள மக்களும் சரியான பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என்றும், பேச்சுவார்த்தைகளும் யுத்தநிறுத்தமும் வெறும் கண்துடைப்புக்களாகவே அரசு நினைக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
எத்தனையோ சிங்களத் தலைவர்கள், இராணுவத் தலைவர்கள், அரசியற் கட்சியின் தலைவர்கள் வந்துபோய்க்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் தமிழினத்தின் உரிமைக்குரலாக ஒலிப்பது எங்களது தலைவரே. அவர் ஒருவரே அரசில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும், எதற்கும் அஞ்சாது, எதற்காகவும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாது, துணிந்து தமிழின விடுதலைக்காகக் குரல் கொடுப்பவர்.
தேசியத் தலைவரைப் பற்றி யாராவது தவறாக மதிப்பீடு செய்தால், அதற்கான பின்விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்பதை சிங்கள அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாம் போரை விரும்பவில்லை. எம்மீது திணிக்கப்பட்ட போரில், நாம் வலுவானவர்கள் என்பதை சிங்களத் தலைமைக்கும் மக்களுக்கும் புரியவைத்துள்ளோம்.
இப்போது நாம் சமாதானத்திற்காக, எமது அடிப்படை உரிமைக்காகக் குரல்கொடுத்துக் காத்திருக்கிறோம்.
இந்த வேளையில் தொடர்ச்சியான இந்த அத்துமீறல்கள், கொலைகள், கொலை மிரட்டல்கள் மூலம் சிங்கள அரசு எமக்குத் தரும் செய்தி என்ன? என்ன அழுத்தத்தை சிங்கள அரசு தர எண்ணுகிறது? தமிழினத்தின் அறிவுப் பலத்தை அழிக்கும் எண்ணமா? அல்லது இறங்கி வந்து தருவதை ஏற்றுக்கொள் என்ற அழுத்தமா?
இலங்கையின் வரைபடத்தில் ஈழத்தின் எல்லைகள் எவையென்று சிங்கள அரசுக்கு நன்றாகவே தெரியும். வரைபடத்தில் பிரிவுகளை ஏற்படுத்தி, இல்லாத பிரிவினைவாதத்தையும் பிரதேசவாதத்தையும் இருப்பதாக நியாயப்படுத்த அவசியமற்ற இரகசிய வன்முறைகளில் சிங்கள அரசு இறங்கியுள்ளதை நாம் பார்க்கிறோம்.
இதுகுறித்து சிங்கள அரசு தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, தமிழனத்திற்கான ஒரு மிகப்பெரிய துரோகம். சிங்கள அரசின் இந்தத் துரோகச் செயல் மீண்டும் இலங்கையில் ஒரு புதிய வரலாற்றைச் சொல்லப்போகும் அறைகூவலாக அமைந்து விடப்போகிறது. சிங்கள அரசு இதைப் புரிந்துகொண்டு, சரியான தெளிவான நிலைப்பாட்டை எடுப்பது மிகமிக முக்கியமானது.
இந்த நிலை தொடருமானால், நாம் மீண்டும் போருக்குப் புறப்பட்டு எமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்த இறுதி எச்சரிக்கையை அரசு புரிந்துகொண்டு செயற்படும் என்று நாம் நம்புகிறோம்.
இங்கே உயிரிழந்து தூங்கும் அமரர் ஐp.நடேசன் ஒரு தனிமனித இழப்பென்று நாம் கருதவில்லை. இது ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் இழைக்கப்பட்ட ஒரு கோரமான அநீதி, அநியாயம், துரோகம். இந்த சோகநிலையில், இம்மரணத்தை நாம் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனாலும் அரசுக்கு தெளிவாக இதைச் சொல்லிவைக்கவே விரும்புகிறோம்.
என்று தன் உணர்வுகளை ஆக்ரோசத்துடன் கொட்டித் தீர்த்தார், அமரர் நடேசனின் நண்பனும் நலன்விரும்பியும் தமிழ்ப் பற்றாளருமான எழுத்தாளர் பாலகுமார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Eelavan Wrote:சுட்டுப் போட்டுவிட்டுப் போன சுடலைமாடன்கள் எங்காவது ஒளிந்திருந்து தூக்க வருபவர்களையும் சுட்டாலும் என்ற பயத்தில் யாரும் போயிருக்கமாட்டார்கள்.பிரேமதாசா கூட குண்டுவெடிப்பில் தனது கோட்டையிலேயே நீண்டநேரமாகக் கிடந்தவர் தான் அவரது செல்வாக்கு அவ்வளவா? அதே சுடலைமாடன்கள்தான் துக்கம் கொண்டாடி பெரிசா செத்தவீடும் செய்யிறாங்களோ யார் கண்டது.. தோழமை கொண்டாடிப்போட்டு கொல்லுறதுதான் சுடலைமாடன்களுக்கு கைவந்த கலையாச்சே.
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<img src='http://www.virakesari.lk/VIRAKESARI/daily/20040603/images/vd03pg2.jpg' border='0' alt='user posted image'>
சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் பூதவுடல் தாங்கிய பேழை ஊர்வலமாக கிளிநொச்சியிலிருந்து எடுத்துச்செல்லப்படுவதையும் முகமாலையில் வைத்து ஈழவேந்தன் எம்.பி. மற்றும் பிரமுகர்கள் அதனை பொறுப்பேற்க செல்வதனையும் படத்தில் காணலாம்
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
கிழக்கில் இடம்பெறும் படுகொலைச் சம்பவங்கள் குறித்து உதவி வழங்கும் மாநாட்டில் கவலை தெரிவிப்பு
இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற சமாதான முயற்சிகளில் முன்னேற்றங்கள் காணப்படாத விடத்து வெளிநாட்டு நிதியுதவிகள் கைநழுவிப் போகும் சாத்தியம் உள்ளதாக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டின் ஏற்பாட்டாளர்குழு தெரிவித்துள்ளது. உடனடியாக சமாதான செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டால் மாத்திரமே வெளிநாட்டு நிதியுதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் மேற்படி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புக்கு உதவிகளை வழங்கும் நாடுகளின் மாநாடு செவ்வாய்க்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸில் நடைபெற்றது.இங்கு சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் சமாதான செயற்பாடுகளுக்கான ஆர்வம் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய சங்கம், ஜப்பான், நோர்வே ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் மேற்படி மாநாட்டில் கலந்து கொண்டனர். சமாதான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இணங்கிக் கொண்டுள்ள அரசாங்கத்தையும் புலிகள் இயக்கத்தையும் பாராட்டியுள்ள மேற்படி உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகள் நோர்வே நாட்டை சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாளராக ஏற்றுக் கொண்டுள்ளமையையும் வரவேற்றுள்ளனர். அத்துடன் சமாதான செயற்பாடுகள் குறித்து புலிகள் இயக்கம் வெளிக்காட்டும் ஆர்வத்தையும் பாராட்டியுள்ளனர்.மேலும் பொருளாதார திட்டங்களையும் நடுத்தர கைத்தொழில் திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். வடகிழக்கில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும் வரை அப்பகுதிகளுக்கான நிதியுதவிகள் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும்
இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு பகுதியில் இடம் பெற்று வரும் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்த மேற்படி நாடுகள் போர்நிறுத்த உடன்படிக்கையை அனைவரும் சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன
நன்றி - வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 1,073
Threads: 25
Joined: Jan 2004
Reputation:
0
Mathivathanan Wrote:[quote=Eelavan]சுட்டுப் போட்டுவிட்டுப் போன சுடலைமாடன்கள் எங்காவது ஒளிந்திருந்து தூக்க வருபவர்களையும் சுட்டாலும் என்ற பயத்தில் யாரும் போயிருக்கமாட்டார்கள்.பிரேமதாசா கூட குண்டுவெடிப்பில் தனது கோட்டையிலேயே நீண்டநேரமாகக் கிடந்தவர் தான் அவரது செல்வாக்கு அவ்வளவா? அதே சுடலைமாடன்கள்தான் துக்கம் கொண்டாடி பெரிசா செத்தவீடும் செய்யிறாங்களோ யார் கண்டது.. தோழமை கொண்டாடிப்போட்டு கொல்லுறதுதான் சுடலைமாடன்களுக்கு கைவந்த கலையாச்சே.
இதே கதைதான் அந்த மட்டக்களப்பு மாமனிதன் விடயத்திலும் நடந்தது என்று சொல்லவருகிறீர்களா?
\" \"
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
|