Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!
#41
தூயா கதை திரைகதை வசனம் யாருடையது??

புலத்தில் தமிழ் என்று கதைப்பவர்கள் அது நடக்குமா, என்று நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும்.எழுதுபவர்கள் அவர்களின் குழந்தைகளை வைத்தே அறிந்து

கொள்ளளாம்.உதாரணமாக எனது குழந்தைகள் சைவ பாடசாலைக்கு பாலர் வகுப்பில் 45 மாணவர்கள் படித்தவர்கள் இப்போது அவர்களின் வகுப்பில் 20 பேர் மட்டுமே படிக்கிறார்கள் இதே பாடசாலையில் மேற்பிரிவில் 2 பேர் மட்டுமே உள்ளனர்.

தமிழன் என்று அடையாள படுத்துவதற்கு தமிழ் தேவை என்று புலம்புகிறார்கள் ஆனால் ஒரு அந்நியன்(வெள்ளையன்)உங்களை அடையாள படுத்துவது ஆசியன் அல்லது இந்தியன்.அவுஸ்ரேலியா காரன் ஒரு படி மேலே போய்(கறிஸ்)என்று அழைக்கிறான்.

அவர்களை பொறுத்தவரை பாகிஸ்தான்.இந்தியன்,சிங்களவன்,தமிழன் எல்லாமே ஒரே இனம் தான்.

புலம் பெயர் தமிழர்கள் தாங்கள் ஒரு சிறிலங்கன் என்று அடையாள படுத்துகிறார்கள் தமிழன் என்று இல்லை.


நாரதர் எழுதியது போல் உணர்வு ரீதியாகவும் மேடைப்பேச்சுகளுக்கும் களத்தில் எழுதுவதற்கும் சரியாக இருக்கும் நடைமுறையில் சாத்தியமில்லை.

ஆனானபட்ட தமிழ் நாட்டிலே சிறுபவர்களுக்கு ஒழுங்காக தமிழ் வராது ஆங்கிலம் தான் வரும் இந்த இலட்சணத்தில் 8 மணித்தியால ஆங்கில பாடசாலைக்கு போகும் ஒரு குழந்தை எப்படி தமிழை இலகுவாக கற்கும்??

புலம் பெயர்ந்த நாட்டில் தமிழை படித்தால் தான் என்ன படிக்காட்டி தான் என்ன?
"To think freely is great
To think correctly is greater"
Reply
#42
நாரதர் நீங்கள் இருக்கும் இடத்தினைப் பொறுத்தது. அங்கு தமிழ் பாடசாலைகள் இருக்கின்றனவா?.
தூயா நீங்கள் சிட்னியில் எந்தப்பாடசாலையில் தமிழ் படித்தீர்?. ஒபன் தமிழ் ஆலயமா?, கோம்புஸ் தமிழ்பாடசாலையிலா? அல்லது வென்வெர்த்வில்லிலா?. நேற்று சிட்னியில் அன்னை பூபதி கலைமாலைக்குச் சென்றிருந்தேன். அங்கு இறுதியாக ஓளிப்படத்தொகுப்பு ஒன்றினைக் காட்டினார்கள். சென்ற வருடம் தமிழர் இளையர் அமைப்பினால் சுனாமியால் பதிக்கப்பட்ட ஈழத்து மக்களின் நிலை பற்றி 24 மணித்தியால அடையாள நிகழ்ச்சியின் தொகுப்பினைக்காட்டினார்கள். அதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அவுஸ்திரெலியாவில் பிறந்தவர்களும், கைக்குழந்தைகளாக இருக்கும் போது புலம் பெயர்ந்த இளையர்கள். பெரும்பாலன்வர்கள் ஆங்கிலத்தில் உரையாடினாலும், சில யுவதிகள் தமிழில் தான் கதைத்தார்கள். கேட்ட கேள்விகளுக்கு தமிழ் தான் சுனாமி பற்றி விளங்கப்படுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் கோம்புஸ் பாடசாலையில் தமிழ் படித்தவர்கள்
! ?
'' .. ?
! ?.
Reply
#43
தமிழ் கதைக்காட்டியும் பிரச்சனை. தமிழ் கதைக்கிறதால கதை கேட்கிறது நானாகதான் இருக்கும்.

"கறி" எனும் பதம் ஆங்கிலேயன் உருவாக்கியதில்லை. எனது பாடசாலையில் அவர்கள் அப்படி அழைப்பதில்லை. ஆனால் தமிழ் பிள்ளைகளே தங்களை அப்படி அழைப்பதை பார்த்து இருக்கின்றேன்.

இங்கு ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பட்டப்பெயர் உண்டு. அவுஸ்திரேலிய ஆங்கிலேயருக்கும் உண்டு.

கந்தப்பு நீங்கள் கூறியது போல, இடங்களை பொருத்ததாக இருக்கலாம்.

தங்களால் முடியாததை, ஏன் மற்றவர்களாலும் முடியாது என நினைக்க வேண்டும்!!!!
[b][size=15]
..


Reply
#44
சங்கீதம், நடனம் படிப்பிக்க திறமையான ஆசிரியர்களினைத்தேடி, ஆசிரியர் வீட்டில் இருந்து தூரத்தில் இருந்தாலும் சென்று கற்பிக்கும் தமிழர்கள்தமிழ் படிப்பிக்க வீட்டுக்கு கிட்ட இருந்தால் போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள். தூயா நீங்கள் எந்தப்பாடசாலையில் படித்தீர்கள்?.
! ?
'' .. ?
! ?.
Reply
#45
தூயா Wrote:தங்களால் முடியாததை, ஏன் மற்றவர்களாலும் முடியாது என நினைக்க வேண்டும்!!!!

சரியாகச் சொன்னீர்கள் தூயா, அவுச்திரெலியாவில் உள்ள சீனர்களினால் முடிகிறதே. ஏன் தமிழர்களினால் முடியாது?
! ?
'' .. ?
! ?.
Reply
#46
ஈழம் என்று பேசுபவர்கள் எதற்கு இங்கு வந்தீர்கள் என கேட்பவர்கள் பலர் அப்படி தான்...நடனத்திற்கு சரி தமிழ் என்றால் பிரச்சனை..

ஈழத்தை நேசிப்பவர்கள் அப்படி அல்ல என்பது என் கருத்து (எனக்கு தெரிந்த வரையில்)

சீனர்கள் மட்டும் அல்ல, மற்ற இனத்தவரும் பலர் தங்கள் மொழியில் தான் பேசுவார்கள்..எங்களில் சிலர்!!!!
[b][size=15]
..


Reply
#47
சிலவற்றைத் தெளிவு படுதலாம் என்று நினைக்கிறேன்.
முதலில் புலத்தில் உள்ள தமிழர் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள், அவர்களின் சுய இருப்பை மையமாக வைத்து கூறப் படட வேண்டும்.அப்போது தான் அவர்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கான வலுவான காரணங்களை விளங்கி பிள்ளைக்களுக்கு தமிழ் படிப்பிப் பார்கள்.

இந்தக் காரணங்கள் எவை?

முதலில் புலத் தமிழருக்கு ,தாம் தமிழர் என்பதற்கான தேவை ஏன் உள்ளது?இப்போது பிரித்தானியாவை எடுத்துக் கொண்டோம் எனில்,வெள்ளயரைப் பொறுத்தவரை அனைத்து ஆசியர்களையும் ஒன்றாகவே நோக்குகின்றனர்.பெரும்பாலான ஆசியர்கள் இசுலாமியர்களாக இருகின்றனர்.ஒரு நாளும் வெள்ளை இனத்தவர்கள் தமது அரசியல் அதிகாரத்தை மற்றய இனத்தவருக்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை.ஆகவே நாம் எமது நிறத்தையும்,பேரையும் மாற்றினால் ஒழிய நாம் வெள்ளயர் ஆகிவிட முடியாது. ஆகவே நாம் வெள்ளயர் ஆகிவிட முடியாது எனில் நாம் யார் என்று அடையாளம் காட்ட முடியும்?
இங்கே தம்மை பிரித்தானிய ஆசியர்கள் என்று அடையாளம் காட்ட சிலர் முற்படுகின்றனர்.ஆனால் இந்த அடையாளம்,ஆசியர்களில் பெரும்பான்மையினராக இருக்கும் பாகிஸ்த்தானிய,வங்காள தேச, மற்றும் இந்திய அடி ஒற்றிய சீக்கியர்,குஜராத்திகளின் கூட்டு அடையாளம் ஆக இருக்கிறது.அதோடு இவர்களின் அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்த பின் புலத்தில் பாகிஸ்த்தானிய மற்றும் இந்திய அரசுகள் செயற்படுகின்றன.அத்தோடு அவர்களும் செறிவாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிக்கிறார்கள்,இதன் மூலம் உள்ளூர் பிரதினுத்துவத்தையும் தக்க வைத்துள்ளார்கள்.ஆனால் இசுலாமிய ஆசியர்களை பொறுத்தவரை ,சர்வதேச ரீதியாக அவர்களுக்கு இருக்கும் அடையாளப் பிரச்சினை இளய தலை முறையினரை ஆட் கொண்டுள்ளது.

நாம் தமிழராக எம்மை அடயாளப் படுத்தி ஒருங்கிணைப்பதன் மூலமும்,தமிழ் ஈழ அரசை நிறுவுவதன் மூலமும் பிரித்தானியாவில் எமது அரசியற் தரத்தை மேம் படுத்த முடியும்.இது ஏன் அவசியம் ஆகிறது.

இதற்கு உதாரணமாக சீனர்களை எடுத்துக் கொள்வோம்.சீனர்கள் தம்மை நிலை நிறுத்த தமது வியாபாரத்தை அதனால் வாழ்க்கையை வளம் படுத்த ,தமக்கிடயே ஆன தொடர்புகளை குடும்ப உறவுகளை வலுப்படுத்த தமது மொழியயைப் பாவிக்கின்றனர்.இவர்கள் சீனாவுக்குச் செல்லும் போது இவர்களுக்கு அவர்களின் மொழி அவசியமாகிறது.சீனாவில் இருக்கும் உறவினருடன் வியாபாரம் சம்பந்தமாக தொடர்புகொள்ள,சீன அரசுடன் ,கொங்கொங் அரசுடன் தொடர்புகொள்ள அங்கே ஒரு வியாபாரத்தை நடத்த மொழி இவர்களுக்கு அவசியமாகிறது.

ஆகவே வருங்காலத்தில் புலத் தமிழர்களின் சந்ததியினர் அரசியல் செல்வாக்குடன்,வியாபார வளத்துடன்,வேலை வாய்ப்புக்களுடன் வளமாக வாழ வேன்டின் அவர்கள் தமிழ் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.ஏனெனில் உலகில் நிரந்தரமான பேரரசுகள் கிடயாது.இன்றைய உலகப் பொருளாதார வளர்ச்சியானாது சீனாவையும்,இந்தியாவையும் அடி ஒற்றியதாகவே இருகிறது.இன்று மேற்குலகில் இருக்கும் வேலை வாய்ப்புக்கள் இப்படியே இருக்கும் என்று கூற முடியாது.இன்று மேற்குலகிற்குப் புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் வேலை வாய்ப்பிற்காக மீண்டும் சொந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.இது இன்று சீனர்களுக்கும்,இந்தியர்களுக்கும் நிதர்சனமான உண்மை.
மேற்கூறியவை வாழ்வியல் அல்லது பொருளாதாரக் காரணிகள்.

இனி ஒருவரிற்கான இனத்துவ ,மொழி அடயாளம் ஆனது ஒருவரின் ஆத்ம திருப்திக்கும்,உள வளத்திற்கும்,குடும்ப்ப உறவு நிலைகளுக்கும் அவசியமானதாகின்றது.மொழியில் இருந்தே ஒருவரின் பண்பாட்டு விழுமியங்கள் பகிரப் படுகின்றன.குடும்ப உறவு முறைகள் முரண் இல்லாது இருப்பதற்கு அந்த அந்த மொழியில் உள்ள பொதுவான பண்பாட்டு முறமைகள் ,ஊடகங்களினூடாக,உறவு நிலைகளிணூடாக பகிரப் பட வேண்டி உள்ளது.அத்தோடு சமூக ரீதியாக மொழி என்பது பல்வேறு நாடுகளில் பூகோள ரீதியாக பிரிக்கப்பட்டவர்களை இணைக்கும் பாலமாக இருக்கிறது.இவ்வாறு ஏற்படும் உறவு முறையானது மனிதர்களுக்கு இருக்கும் சமூக உறவு என்னும் உளவளத் தேவயை நிறைவு செய்கிறது.இவை இன்று சிறுவர்களாக இருப்பவர்களால் உணர முடியாமல் விட்டாலும்,பின்னர் தாம் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று அவர்கள் பெரியவர்களானவுடன் உணரக்கூடும்.அப்போது தமது தாய் தந்தையரயே தமக்குத் தமிழைப் படிப்பிக்காததற்கு அவர்கள் குறை கூற முடியும்.

இவை பற்றிய ஆளமான அறிவோ ஆய்வோ இன்றி ,வருங்கால உலகம் பற்றிய தெளிவின்றி, நிகழ்காலத்தில் இருக்கும் உடனடித் தேவைகளைக் கொண்டே, பல புலத் தமிழர்கள் தமிழ் மொழியின் அவசியத்தை உணராமல் உள்ளனர்.

அடுத்ததாக தமிழ் மொழி படிப்பதில் உள்ள சிரமங்கள் நீக்கப் பட வேண்டும். நாம் இப்போதும் கரும்பலகையையும்,தமிழ் நாட்டுச் சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களையுமே நம்பி உள்ளோம்.

புலத்தில் குழந்தைகளிற்கான கல்விச் செயற்பாடுகள் விளையாட்டினூடாகவே மேற் கொள்ளப்படுகின்றன.கற்பதென்பது இலகுவான விடயமாகப் பட்டு அது ஒரு விருப்பமான விடயமாக்கப் படுகிறது.ஆனால் தமிழ் படிப்பதென்பது பழமையான கற்பித்தல் நடைமுறைகளால் விருப்பம் இல்லாத ஒரு விடயமாகப் பட்டுள்ளது.எழுதப்பட்டுள்ள புத்தகங்களும் புலச் சூழலில் உள்ள விடயங்களை மையமாக வைத்து எழுதப் படாததனால் ,குழந்தைகளுக்கு அன்னியமாகா இருகின்றன.சிறுவயது முதல் தமிழை விரும்பிப் படிக்கும் துயாவிற்கே இன்னும் எழுத்துப்பிழை இன்றி தமிழை எழுத முடியாமல் இருக்கிறது என்றால், தமிழ் கற்பிக்கப்படும் முறமையில் மாற்றங்கள் வேண்டும் அல்லவா?

அத்தோடு தமிழ் வகுப்புக்கள் என்பது எல்லா இடத்திலும் இல்லை.தமிழர்கள் செறிவாக இருக்கும் இடங்களிலயே உள்ளன.அதோடு தேவைக்கேற்றவாறு தற்போது வகுப்புக்களில் இடம் கிடைப்பதில்லை.ஆகவே கற்றலை வகுப்புக்கள் என்றில்லாமல் விளயாட்டினூடாக, உதாரணத்திற்கு தமிழில் கணணியில் விளயாடக் கூடிய கேம்களை உருவாக்குவதன் மூலம், சிறுவர்களைக் கவரும் வண்ணம் காட்டூன் அனிமேசன்கள் மூலம் கற்பிக்கலாம்.இவ்வாறான விடயங்களை புலத்தில் கல்வி கற்கும் 'இளஞர்க'ள் உருவாக்க வேண்டும்.குழந்தைகள் தமிழ் கற்பதற்கான இணயத்தளங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இவற்றிற்கான தேவை உள்ளதால் வியாபார ரீதியாகக்கூட இவை வெற்றி அழிக்கும்.

மேடைப் பேச்சுக்களை விட இப்படியான செயற்பாடுகளே இப்போது புலத்தில் தேவயானதாக இருக்கின்றது.
Reply
#48
சிறிலங்காவில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள மீனவ சமூகம் 50 வருடங்களுக்கு முன் தமிழ் அவர்களுடைய பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்தது ஆனால் இப்போது அவர்களின் பிள்ளைகள் பேரபிள்ளைகள் எல்லோரும் சிங்கள மொழி தான் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாவும் மாறி அவர்கள் சிங்களவராக மாறியுள்ளார்கள். இதற்கு காரணம் அவர்கள் சிங்கள சமுதாயத்தில் வாழ்ந்ததால்.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#49
putthan Wrote:சிறிலங்காவில் நீர்கொழும்பு பகுதியில் உள்ள மீனவ சமூகம் 50 வருடங்களுக்கு முன் தமிழ் அவர்களுடைய பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்தது ஆனால் இப்போது அவர்களின் பிள்ளைகள் பேரபிள்ளைகள் எல்லோரும் சிங்கள மொழி தான் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாவும் மாறி அவர்கள் சிங்களவராக மாறியுள்ளார்கள். <b>இதற்கு காரணம் அவர்கள் சிங்கள சமுதாயத்தில் வாழ்ந்ததால்</b>.

காரணம் சிங்களச் சமுதாயத்தில் வாழ்ந்ததல்ல. அது திட்டமிட்டு செய்யப்பட்ட மாற்றங்கள். பாடசாலைகள் படிப்படியாச் சிங்களமயமாக்கப்பட்டன. குழந்தை பிறந்து பாடசாலை செல்லவேண்டும் எனில் தமிழ் பாடசாலைக்குப் போவதென்றால் தூர இடமொன்றிற்குச் செல்லவேண்டிய நிலை. அதன் பிறகு இருந்த பாடசாலைகளும் மாணவர்கள் வரவில்லை என்று திட்டமிட்டு சிங்களப் பாடசாலையாக மாற்றப்பட்டன. அதனால் அப்பகுதி தமிழ்மாணவர்கள் போவதற்கு வேறு இடமின்றி சிங்களப்பாடசாலைகளில் சேர்ந்தனர். அப்பகுதி மக்களிற்கு தம் குறைகளைக் கூறி தீர்வு பெறுவதற்கு அரசியலில் ஓர் பலம் இருக்கவில்லை. இன்றும் கூட சிங்களத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வீடுகளிலும் தம் குடும்பத்தாருடனும் தமிழில் பேசுவதை காணலாம். தாம் திட்டமிட்டு சிங்களவராக மாற்றப்படுகிறோம் என்னும் கவலை அவர்களிற்கு உண்டு. ஆயினும் அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நிலையில் அவர்களிற்கு பின்புலம் இல்லை என்பதே உண்மையான விடயமாகும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#50
தமிழ் மீது ஆர்வம் கொண்டு புலத்தில் தமிழ் படித்து யாழில் கருத்தெழுதும் தூயாவுக்கு எனது பாராட்டுக்கள்
,
,
Reply
#51
சிங்கப்பூர் நாட்டில் கற்பிக்கப்படும் தமிழ் பாடப்புத்தகமே சிட்னியில் முன்பு தமிழ்ப்பாடசலைகள் சிலவற்றுக்கு பாடப்புத்தகமாக அமைந்தது. பிறகு சிட்னி வாழ் ஈழத்தமிழர்கள் தங்களாகவே பாடப்புத்தகத்தினை வெளியிட்டார்கள். கொழும்பு விவேகானந்தா சபையினால் வெளியிடப்படும் சைவசமயப் பரிட்சைகள் சிட்னியிலும் நடைபெறுகின்றன.தமிழ் தெரிந்த சைவசமயப்பாடங்கள் படிக்கும் மாணவர்களில் சிலர் இப்பரிட்சைகளில் பங்கேக்கிறார்கள். சிறுவர்களுக்காக சிட்னியில் வசிக்கும் கவிஞர் அம்பி என்ற அழைக்கப்படும் அம்பிகைபாலன் அவர்கள் சிறுகதைத் தொகுப்புக்கள், தமிழ் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுவருகிறார்.
,
,
Reply
#52
நானும் கவிஞர் அம்பியின் படைப்புகளை படித்து இருக்கின்றேன். தமிழ் பாடசாலையில் ஆசிரியர் தந்தவர்.

"கங்காரு" கதை காட்டூன் போல வந்ததே..பார்த்தீர்களா?
[b][size=15]
..


Reply
#53
புலச் சூழலை வைத்து எழுதப்பட்ட சிறுவர்களுக்கான புத்தகங்கள்,சிடிக்களை இணயத்தில் பெறலாமா?தெரிந்திருந்தால் இங்கே இணைக்கவும்.பலருக்கும் பயன் பெறும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)