tamilini Wrote:Quote:நாங்க சின்னனா இருக்கே அவதானிச்சு அதிசயப்பட்டதும் ஆச்சரியப்பட்டதுமான ஒரு விசயம்.... எங்கள் வீட்டில் கோழி குஞ்சுகளோட நின்றது நாங்க குருவிகளா.. குஞ்சுகள் எங்களோடையும் விளையாடுங்கள்... தாய்க் கோழி எங்கட பிரண்ட்...அப்பாச் சேவலும் பிரண்ட்.... ஒரு நாள் விசேடமா ஒரு உணவு கிடைக்க அதை கோழிகளுக்குக் கொடுத்தம்.... அம்மா கோழி கூப்பிட்டு குஞ்சுக்குக் கொடுக்க அப்பா கோழியும் கூப்பிடுகுது... குஞ்சுகள் சாப்பாட்டில மிணக்கடப் போகல்ல...அம்மாக் கோழி போய் சாப்பிடுகுது.... என்ன பாசம் அதுகளுக்க.... ஒரு விசயம் எங்கள் வீட்டு பிராணிகள் எதுவும் அடுத்த வீட்டுக்கெலாம் போகாதுகள்...!
இது உண்மையா எப்படி நமக்கு தெரியும்...!
நம்ம அம்மாவும் பெண் தானே.. அவங்க ஒரு பிள்ளை பள்ளிக்கூடத்தால வராட்டாலும் காத்திருப்பா.. வந்தவுடன் தான் நமக்கு சாப்பாடு தந்து விளையாட இல்லை படிக்க அனுப்பி விட்டு அப்பா வந்தவுடன் தான் சாப்பிடுவா.. நாங்கள் சொன்னாலும் கேக்க மாட்டா.. இங்க இருக்கிற பெண்கள் ஆண்கள் எல்லாம் வேலைக்கு போறாங்களா.. சோ களைப்பா இருந்திருக்கும் றெஸ்ட் எடுத்திருக்கலாம்... ?? இதைவிட தினம் நாம் சாப்பிடறதை விட வேறை விசேசமாய் செய்யிற பண்டங்கள் சாப்பிடா நம்ம அம்மா.. நாம் பிறகு சாப்பிட என்று வைப்பா.. இது நமக்கு தெரியும் இல்லையா..?? அப்ப நாங்கள் சாப்பிடும் போது அவாக்கு தீத்திறது... அப்பாவும் அப்படி தான்.. அதெல்லாம் பழைய இனிமையான கதைகள்.. நீங்கள் வேறை எந்த அம்மாவும் பிள்ளையைத்தான் முதலில் பாப்ப .. அடுத்தது கணவன்.. பிறகு தான் மற்றதெல்லாம் அப்படி என்று நினைக்கிறன்...!
நம்பிக்கைதான் வாழ்க்கை.... ரோட்டில போனா வாகனம் அடிக்கும்... அடிக்காது என்று நம்பிற படியாத்தானே ரோட்டில இறங்கிறீங்க... அதுபோலத்தான் இதுவும்...இதில பொய் சொல்லி நமக்கென்ன ஆகிறது மோகன் அண்ணா என்ன பரிசா தரப் போறார்... நம்பாச் சாதிகள்... விஞ்ஞானிகள் தேவையில்ல...சும்மா இங்கையே நிரூபிச்சிடலாம்....!
உங்க அம்மா இல்ல எங்க அம்மாவும் அப்படித்தான் உலகத்தில டொல்பினின்ர அம்மாவும் அப்படித்தான்...ஏன் குரங்கிட்ட அம்மாவும் அப்படித்தான்... குழந்தை அழுதா அம்மா அலேட் ஆவா...ஆகாமல் இருக்க முடியாது...அது அம்மா விரும்பினாலும் ஆகாத காரியம்...அதுதான் இயற்கையின் விதிப்பு.... உடலின் உணர்வின் தூண்டலும் விளைவும்....அப்படித் தூண்டல் விளைவு இல்லையோ...அப்ப குறைபாடுதான்....!
அதுபோக எங்க வீட்டில அப்பாவும் தான் அம்மாவுக்கு ஈடா வாங்கித் தருவார்.... நேரம் கிடைத்தா உணவும் செய்து பரிமாறுவார்... தினமும் ஸ்கூல் கொண்டு போய் விடுவார்..கூட விளையாடுவார்.... தூர இடங்களுக்குக் கூட்டிப் போவார்... பாவம் அவரும் தன்னால இயன்றதுகளைச் செய்வார்...அந்த மனுசனை உலகத்தில ஒருத்தரும் கவனிக்கிறதில்ல.... அப்பா இல்லாமல் அம்மாவா...???! இரண்டும் இரண்டு கண்கள்... ஒன்றில்லையோ மற்றதிருந்தும் பலனில்லை....!
இப்ப நாங்க பேசிறது அம்மா பிள்ளை அப்பா பிள்ளை பாசம் பற்றியல்ல...
ஆண் பெண் பாசம் பற்றி.... குறிப்பா இளைஞர் யுவதிகள் பற்றி.... அதிலும் குறிப்பாக நாகரீக உச்சியில் மிதப்பதாக கனவோட அலையுற இளைஞர்கள் யுவதிகள் பற்றி... நிச்சயமா... அதுகளுக்கு சோ காட்டிற அளவிற்கு சோ வா சிந்திக்க முடியுதோ.... பறவைகள் விலங்குகள் கூட மறைஞ்சு செய்யுறத மறைச்சு வைச்சிருக்கிறத உதுகள் நாகரிகத்தின் பெயரால் திறந்து செய்துகள் திறந்து திரியுதுகள்....இதெல்லாம் எந்த நாகரீகமோ...விஞ்ஞானிகள் உதையும் ஆராயலாமே... சா...உவையள் உது செய்யாயினம்... தங்கட வண்டவாளமும் தண்டவாளம் ஏறிடம்...உது நாங்க தான் செய்ய வேணும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>