Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இய்ற்கையின் சீற்றத்தால் எம் தாயகப்பூமி அழிப்பு
#41
¿ýÈ¢...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#42
<img src='http://uk.geocities.com/manxmathan/pix/help.JPG' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#43
<b>இலங்கை நிலவரம்</b>

இந்தோனேஷியா, இலங்கை ஆகிய இடங்களில் நேர்ந்துள்ள இழப்பு மிகவும் மோசமானது. இவ்விரு நாடுகளிலும் ஆளும் அரசுக்கு எதிராக சண்டையிட்ட குழுவினர் கையில் இருக்கும் இடங்களிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் சேதம் ஏற்பட்டுள்ள, அரசின் கீழுள்ள பகுதிகளில்கூட மீட்புப் பணிகள் நடப்பதில் சிரமங்கள் உள்ளன. அரசின் அங்கம் ஏதும் இல்லாத விடுதலைப்புலிகள் கீழுள்ள பகுதிகளில் அரசு நிறுவனத்தால் எந்தவிதத்தில் உதவி செய்யமுடியும்?

இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் கையிலான தமிழர் பகுதிகளுக்கான நிவாரணத்தை சரியாகச் செய்யக்கூடியவர்கள் விடுதலைப் புலிகள்தான். ஆனால் பிற நாட்டு அரசுகளால் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படாத ஓரமைப்பிற்கு எந்த அளவுக்கு பிற நாட்டு அரசுகள் உதவி செய்யும் என்று தெரியவில்லை.

இந்தியா இலங்கைக்கு ரூ. 100 கோடி உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறது. இதில் எத்தனை வடகிழக்கிலங்கைக்குப் போய்ச்சேரும் என்று தெரியவில்லை. அதைப்போல இந்தியா அனுப்பியுள்ள மருத்துவர்களில் சிலர்தான் திரிகோணமலைப் பகுதிக்கு மட்டும் சென்றுள்ளனர். தமிழகத்தில் ஏதேனும் அமைப்பு மருத்துவர்கள் பலரை ஒன்று சேர்த்து வன்னி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். இந்திய அரசே இந்தச் செயலை முன்னின்று செய்யும் என்று எனக்குத் தோன்றவில்லை.

செஞ்சிலுவைச் சங்கம் போன்றவை, (ஆக்ஸ்ஃபாம்?) வடகிழக்கிலங்கையில் எந்த அளவுக்கு இருக்கின்றன என்றும் தெரியவில்லை.

வடகிழக்கிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை மிகவும் வருத்தத்தைத் தருகிறது.

பத்ரி, 13:03, தனிச்சுட்டி, 9 மறுமொழிகள்
9 மறுமொழிகள்:
இதில் அரசாங்கம் இலங்கை அரசோ, இந்திய அரசோ எதுவும் செய்யகூடும் என்ற நப்பாசைக்கு அர்த்தமே இல்லை. எல்லா தமிழர்களும், அரசு நிறுவனங்களை தவிர்த்து, இந்த விஷயத்தில் புலிகள் சார்ந்தவர்களுடன் தொடர்பு கொள்வதே சரியானது.

வைகோ போன்றவர்கள் இந்த நேரத்தில், இந்த விஷயம் குறித்து பேசாமல் வேறு என்ன புடுங்கி கொண்டிருக்கிறார்கள்? மத்திய அரசை இன்ஃப்ளுயன்ஸ் செய்யகூடிய இவர்கள் இந்நேரம் மவ்னமாகவோ, வேறு எதையோ பேசிகொண்டிருந்தால், அதைவிட மொள்ளமாறித்தனம் கிடையாது. ஈழபிர்ரசனையில் போராதரவு தந்து சத்தம் எழுப்பியவர்கள் இப்போது இந்த பிரச்சனை குறித்து பேசுவது மிக அவசியமானது.

By: ROSAVASANTH, at 12:45
உண்மை அதுதான். அங்கிருக்கும் மக்களுக்கு வெளியுதவியென்று பெரிதாக எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தமிழர் புனர்வாழ்வுக் கழகமே முழுமூச்சாகச் செயற்படுகிறது. செய்தி ஊடகங்கள் கூட சரியான நிலைவரத்தைத் தெரிவிப்பதில்லை.

வசந்தன்.

By: வசந்தன்., at 12:45

இந்தியா ஒரு குறிப்பிட்ட சதவிகித உதவிகளை வன்னி பகுதிக்கு அளிக்க இலங்கை அரசை கட்டாயபடுத்தும் என்று தோன்றவில்லை- நம் அரசியல்வாதிகள் சத்தம் எழுப்பினாலும். தமிழகத்தில்ம் அரசு சாராமல்தான் அதை செய்தாக வேண்டும்.

நான் அறிந்த வரையில் தமிழகதில் பணம், பொருட்கள் பெரிய பிரச்சனை இல்லை என்று தெரிகிறது. அதில் ஒரு பகுதியை வன்னி பகுத்திக்கு (அரசிடம் அல்ல) அளிப்பதே தமிழ்நாட்டிலிருந்து செய்ய கூடியது. குறைந்த படசம் தமிழ் தேசியம் பேசியவர்கள் அதற்கு முற்சிக்க வேண்டும்.

By: ROSAVASANTH, at 12:49

<b>பத்ரி அவர்களே TRO என்பது இலங்கை நிர்வாக சேவைகளின் கீழ் முறைப்படி பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்பு(NGO).வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு ஒரே வழி அருகிலுள்ள TRO கிளையை நாடுவதுதான்.இப்போதுள்ள நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவிகூட வன்னிப்பகுதிக்கும் அம்பாறைக்கும் போய்ச்சேருமா எனப்து சந்தேகமே.

இந்தியா அனுப்பவிருக்கும் நூறு கோடியிலும் அமெரிக்கா அனுப்பிய 15 மில்லியனிலும் எவ்வளவு சதவீதம் இராணுவத்துக்குப் போய்ச்சேரும் என நினைக்கிறீர்கள்.பேச்சுவார்த்தையை மீள ஆரம்பித்தாலொழிய நிதியுதவி இல்லை என்று ஜப்பானும்,அமெரிக்காவும் கைவிரித்திருந்த நிலையில் இந்த நிதி உதவி இலங்கை அரசுக்கு புதையல் மாதிரி.குறிப்பாக தமிழ்ப்பகுதிகளில் நடந்த இழப்பை மூடி மறைப்பது எதற்காக வரும் நிதியெல்லாவற்றையும் முடக்கி ஆயுதம்வாங்கிச் சேர்ப்பதற்குத்தான்.இதுவரை BBC,CNN போன்ற ஊடகங்களோ அல்லது இலங்கை அரசுக்குச் சார்பான ஊடகங்களோ வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புப் பற்றி மூச்சுவிடவில்லை உயிரிழப்பை இலக்கங்களில் சொல்கிறார்களே ஒழிய உண்மையான பாதிப்பு வெளியுலகிற்குத் தெரியாவண்ணம் மறைப்பதில்தான் முனைப்பாக உள்ளனர்.</b>

By: ஈழநாதன், at 14:59

ஈழநாதனின் கருத்து கவலை அளிக்கிறது. இங்கு அமெரிக்காவில் செய்தி ஊடகங்கள், காலே மற்றும் கொழும்புவில் ஏற்பட்ட இழப்புகளைத் தான் காண்பிக்கிறார்கள்; பேசுகிறார்கள். வரைபடத்தைப் பார்த்தால் கிழக்கில் சேதாரம் அதிகமாக இருந்திருக்க வேண்டும் என்று ஐயம் ஏற்படுகிறது. இப்பகுதி புலிகளின் நிர்வாகத்திலும் இருக்கிறதா என்று சந்தேகமாக இருக்கிறது. TRO வைப் பற்றி நல்ல விஷயங்கள் கேள்விப்படுகிறேன். இதற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் செல்ல வேண்டிய வலைத்தளம்:

http://www.troonline.org/en/

நன்றி

By: Srikanth, at 18:47

As RosaVasanth said, I was so suprised by the silence of Vaiko and others (specially the ppl who have so much concern abt Eelam Tamils). Even I saw very rare politicians in affected areas in Tamil Naadu. May be they have just visited to say sorry for ppl for a short period. I saw only Thirumaavalan helping ppl in TV.
Also, its true that the TRO registered in whole Sri Lanka as a NGO. Even today, the sri lankan PM told something stupid to reuters. He said, If international countreis accept the request by LTTE (cuz they are asking help separately), then it will be worsing the ethnic war more. What the hell he is thinking? All i can say to him, Yoo Man, if you helping north and east tamil ppl like you are donig to other places, we don't need to beg international countries separately.
We have experienced and learned lotz of stuffs by our 20 year ethnic war. One of the important lessons we have learned that we can't depend on others. Thaz what was proven us again.


By: DJ, at 20:13

<b>சற்றுமுன் கேட்ட பிபிசி செய்திகளில் கூட தென்னிலங்கையில் தான் சேதம் அதிகம் என்கிறார்கள். கொழும்பில் உள்ளவர்களிடம் மட்டும் தான் பேட்டி எடுக்கிறார்கள்--இந்தியத் தூதர் நிரூபமா ராவ் உள்பட. வடகிழக்குப் பகுதியைப் பற்றி அறவே செய்தி இல்லை. அரசுதவி வரவில்லை என்று போராளிகள் குற்றம் சாட்டுவதாக மேலோட்டமாகச் சொல்லிப்போகிறார்கள். அதைப்பற்றி அரசாங்கத்திடம் ஒரு கருத்துகூடவா கேட்டு ஒலிபரப்ப முடியாது? ஊடகங்கள் போய் பார்க்கவில்லை என்பதால் அங்கு சேதமில்லை என்று அர்த்தமாகி விடுமா? உலகப்படத்தையும், கடலலை பாய்ந்த திசையையும் வைத்துப் பார்க்கும்போது இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக ஈழப்பகுதியில் தான் அதிக சேதம் இருக்கவேண்டும். இந்தியா உள்பட உலக நாடுகளின் உதவிகள் அனைத்தும் கொழும்பு அரசிடம் தான் கையளிக்கப்படுகின்றன. மனிதர்களால் உருவாக்கப்படும் அழிவுகளில்தான் அரசியல் புகுந்து விளையாடுகிறதென்றால் இயற்கைச் சீரழிவுகளின்போது கூடவா?

தமிழ் நாட்டுத் தமிழர்களுக்குத்தான் அச்சமோ, அக்கறையில்லாமலோ இருக்கும். வெளியில் வசிக்கும் தமிழர்களாவது இருபக்கமும் ஆதரவுக் கரங்களை நீட்ட வேண்டும்.</b>

சுந்தரமூர்த்தி


By: M. Sundaramoorthy, at 21:25

<b>இந்தியாவில் பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. மருந்துகள், உணவு, உடைகள், போர்வைகள் என. சரியான நேரத்தில் சரியான மக்களுக்குப் போய்ச்சேர சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளதே தவிர, ஓரிரு நாள்கள் ஆனாலும் இப்பொழுது எனக்குக் கிடைக்கும் தகவல்களிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் - அரசு வழியாகவோ, தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ - தேவையானவை போய்ச்சேரத் தொடங்கி விட்டன.

எனவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஈழத்தமிழர்களுக்கு உதவுவதை முதற்காரியமாக ஏற்றுச் செய்யவேண்டும். மேலும் பண உதவி மட்டும் போதாது. பொருள்கள் தேவை. உணவுப்பொருட்கள், உடைகள், மருந்துகள், மருத்துவர்கள் என ஏகப்பட்ட தேவை உள்ளது.

இந்தியாவில் இருந்துகொண்டு - வெறும் 40 கிமீ தூரம்தான் என்றாலும் - இலங்கைத்தமிழர்களுக்கு உதவி செய்வது முடியாத காரியம் என்றே தோன்றுகிறது.

இதில் அச்சம், அக்கறையின்மை என்று ஏதும் கிடையாது. செய்வதற்கு வழியே இல்லை! ஒரு காரையோ, லாரியையோ எடுத்துக்கொண்டு மருந்துகளைத் தூக்கிப்போட்டுக்கொண்டு யாரும் அங்கே போய்விட முடியாது. விமானம் தேவை. விமானம் ஒன்றை சார்ட்டர் செய்ய ஏகப்பட்ட பணம் தேவை. இலங்கை அரசு அனுமதி தேவை. வெளியே போக இந்திய அரசு அனுமதி தேவை. தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு என பொதுமக்களிடையே பொருட்களை சேகரிக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை! தனியார்களாக நாம் நாலைந்து பேர் பேசினால் அதனால் சிறிது பணத்தைத்தான் சேர்க்க முடியும்.

அரசியல் மாற்றங்கள் ஏதும் திடீரென நிகழாத வரை, தமிழ் தேசியவாதிகள் வாய்பொத்தி மவுனம் காக்கும் வரை, மேற்சொன்னவற்றில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இப்பொழுதிருக்கும் நேரம் குறைவு.

கனடா வாழ் தமிழர்கள் தம் நாட்டை நேரடியாக வலியுறுத்தி உதவிகள் நேரடியாக பொருட்களாக ஈழத்தமிழர் பகுதிகளுக்கு விமானம்/கப்பல் மூலமாகப் போய்ச்சேர வகைசெய்ய வேண்டும். பிரிட்டன் வாழ் தமிழர்களும் இதைச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தமிழர்கள், சிங்கப்பூர், மலேசியா தமிழர்கள் முன்வரவேண்டும். இதற்காக அந்தந்த நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தமிழர் குழுக்கள் சென்று போய்ப் பார்க்கவேண்டும்.</b>

இலங்கை அரசு வழியாக தமிழர் பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள், எந்த வகையிலும், எவ்வித உதவிகளும் போய்ச்சேராது என்பது இப்பொழுது நன்றாக விளங்கி விட்டது.

By: Badri, at 22:32

<b>பேரிழப்பிலும்கூடவா இலங்கை அரசு பேதைமை காட்ட வேண்டும்? மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தக்க உதவிகளை உடனே செய்ய முன்வர வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் யாராயினும் ஆபத்துக்கு உதவுவதே மனிதத் தன்மை. இதில் விரோதம் காட்டுவது கண்டிக்கத் தக்கது. தமிழ்நாதம் இணையத்தளம் அங்குள்ள நிலைமைகளை மிகவும் துல்லியமாக விளக்கியுள்ளது.</b>

By: மூர்த்தி, at 06:05
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#44
புலத்தில் மற்றும் இலங்கையில் பண பலத்தோடு இருக்கும் கோயில்கள் இந்த கனாமி துயர் துடைப்பு பணிக்கு தம்மிடம் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியையாவது ஒதுக்கலாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#45
பல ஆலயங்கள் குறிப்பாக லண்டனில் கொடுத்துள்ளதுடன் எதிர் வரும் நாட்களில் அங்கு சில நிகழ்ச்சிகளை நடாத்தி பணம் சேர்க்க உள்ளனர். இன்று சன் பத்திரிகையில் தலைவரின் செய்தி வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.

ஆனால் இந்த உயிரிளப்புகளில் ஒரு அதிசயம் நடந்ததுள்ளது. யால காட்டுப்பகுதி இந்த பேரலையால் பாதிப்படைந்தது. அனால் அங்கிருந்து ஒரு விலங்குகள் கூட இதனால் பாதிப்படையவில்லை. ஆறறிவு படைத்தது மனிதான பல ஆலயங்கள் குறிப்பாக லண்டனில் கொடுத்துள்ளதுடன் எதிர் வரும் நாட்களில் அங்கு சில நிகழ்ச்சிகளை நடாத்தி பணம் சேர்க்க உள்ளனர். இன்று சன் பத்திரிகையில் தலைவரின் செய்தி வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.

ஆனால் இந்த உயிரிளப்புகளில் ஒரு அதிசயம் நடந்ததுள்ளது. யால காட்டுப்பகுதி இந்த பேரலையால் பாதிப்படைந்தது. அனால் அங்கிருந்து ஒரு விலங்குகள் கூட இதனால் பாதிப்படையவில்லை. ஆறறிவு படைத்தது மனிதானh மிருகமா?

சம்பவம் நடைபெற முன்பாகவே விலங்குகள் அனை;தும் பாதுகாப்பான இடத்திற்கு போய் விட்டன. ஆனால் மனிதனால் வழர்க்கப்பட்ட மீரகங்கள் அதாவது கட்டி வைக்கப்பட்ட மிருகங்கள் பல பலியாகியுள்ளன.

இதை அதிசயம் என்பதா அல்லது விலங்குகளின் ஆறாவது புலன் என்பதா? இந்த ஆறாவது புலன் மனிதனுக்கு இருந்திருந்தால் இந்த அழிவுகளை தடுத்திருக்கலாமோ என்னவோ?
Reply
#46
<img src='http://cagle.slate.msn.com/news/Tsunami/images/tab.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#47
கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களுக்கு உதவுங்கள்.

கடந்த ஞாயிறு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து கிழக்கு இன்னமும் மீளவில்லை தொடர்ந்தும் உயிரிழந்த உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 13000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள்.6000 பேர் காணாமற் போயிருக்கிறார்கள்.அதேபோன்று மட்டக்களப்பில் 1800 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் 1000 இற்கும் மேற்பட்டவர்கள் காணமற் போயுமிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்டு வீடுகளையும் உடமைகளையும் இழந்து இருமாவட்டங்களையும் சேர்ந்த 400,000
பொதுமக்கள் பாடசாலைகள்,கோவில்கள்,தேவாலயங்கள்,பள்ளிவாசல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் காத்தான் குடி கல்முனை ஆகிய பிரதேசங்களில் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கிழக்கில் மீட்புப்பணிகளில் பள்ளிவாசல் சம்மேளத்தினர்,புலிகள்,புனர்வாழ்வுக்கழகத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளும் அரசாங்க நிறுவனங்களும் உதவிகளை எடுத்துச் செல்லும் வரையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மாத்திரமே தமிழ்,முஸ்லிம் ஆகிய இருபகுதியினருக்கும் உதவிகளை வழங்கிவந்தது.

அரசாங்கத்தினது பாராபட்சத்தால் தமிழ் மக்களைப் போலவே முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களுக்கு உதவுவதில் பள்ளிவாசல்களின் சம்மேளனம் புனர்வாழ்வுக்கழகத்துடன் கூட்டாக இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

92 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைத்தபோதும் 400,000 இற்கும் மேற்பட்ட மக்களைப் பராமரிப்பதற்கு அவர்களின் உதவி போதவில்லை.

கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு உதவி வேண்டி தமிழர் புனர்வாழ்வுக்கழகமும்,பள்ளிவாசல்களின் சம்மேளனமும் தனியாகவும் கூட்டாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.வெளிநாடுகளில் வாழ்பவர்களிடமிருந்து மாவட்டத்தைப் புனரமைப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் நிதியுதவி பொருளுதவிகளை எதிர்பார்க்கின்றன.

வெள்ளம் இன்னும் முற்றாக வடியாத நிலையில் தொற்றுநொய்களின் அபாயம் தலைதூக்கியுள்ளது.மருத்துவ உதவிகள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.முல்லைத்தீவு கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையிலும் இரு லொறிகளில் மருத்துவ உதவியும் 50 வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்றும் கிழக்குக்கு கிளிநொச்சியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.வவுனியா மாவட்டத்திலிருந்தும் தொடர்ச்சியாக கிழக்குக்கு உதவிகள் அனுப்பபப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

பேரிழப்பின் மத்தியிலும் சிங்கள காடையர்கள் இராணுவத்தினரின் உதவியுடன் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் உதவிகளை தடுத்து நிறுத்த முயன்று வருகிறார்கள்.நேற்றும் பல வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படு பொருட்களைத் தென்னிலங்கைக்கு கொண்டு செல்லுமாறு மிரட்டப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்,வெளிநாட்டு நிருவனங்களின் உதவியை கிழக்கு எதிர்பார்த்திருக்கிறது.
உதவ விரும்புபவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கழத்தின் மூலமாக உதவலாம்.

TRO Bank account in Colombo, Sri Lanka:

Bank A/C: 01607837001
Standard Chartered Bank
Wellewatte Branch
Colombo 06
Sri Lanka

TRO
410/112, Buller Street
Buddhaloga Mawatha
Colombo 7

Phone: +94 11 2 69 32 54
Fax: +94 11 4 71 65 76


நலன்புரி நிலையங்களின் மையச்செலகத்தை இந்த தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்.
94- 65- 2226592

நன்றி - ஈழநாதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)