Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
#41
என்ன எல்லாரும் கேட்டீங்களா ஆசிரியருக்கு சண்டை பிடிச்சா பிடிக்காதாம் ( அச்சோ நான் இங்க வாறதே சண்டைபிடிக்கத்தான் :oops: :oops: ) அதால இனிமல் எல்லாரும்சண்டை பிடிக்காமல் இருங்க சரியா :evil:


ஆஹா சுண்டல் முதல் முதல் உங்கட சொந்தக்கருத்தை இப்பிடி கோர்வையா எழுதி இருக்கீங்க போல (தூயவனுக்கு நீங்க எழுதினதை பார்த்து பொறாமை அதான்அப்படி கண்டுக்காதீங்க) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#42
Snegethy Wrote:
தூயவன் Wrote:வாழ்த்துக்கள் சுண்டல்
இன்று தான் அதிக சொல்களைப் பாவித்து மடல் எழுதியிருக்கின்றீர்கள். :wink: இருந்தாலும் ஒரு வானொலி அறிவிப்பாளருக்கு தமிழ் இப்படித்தான் வருமா??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நல்லாக் கேளுங்கோ தூயவன் அண்ணா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> லேசுப்பட்ட வானொலியா....இன்பத்தமிழ் வானொலி. :wink:



இதோடா........ :evil: :twisted:
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#43
எந்த ஆருயிர் நண்பன் கந்தப்புவை கோவில கண்டு என்ன புதினம் என்று கேட்டன் அதற்கு அப்புவோ உனக்கு புதினம் சொல்லி வாய் நோகிறது போய் யாழ்கழத்தை பார் என்று உங்கள் இணையதள முகவரியை தந்தார்.அவ்வாறு தான் ஆரம்பமானது
"To think freely is great
To think correctly is greater"
Reply
#44
அது ஒரு பெரிய கதை. என் நண்பர் சொன்னவர்.

பி.கு. யாழ் களம் வரும் வரைக்கும் எனக்கு களம் என்றால் என்ன என்றே தெரியாது.
.
Reply
#45
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
இந்த நேரத்தில் யாழ்கள பொறுப்பாளரின் கருத்தை அறிய ஆவலா இருக்கு, மோகன் நீங்க சொல்லுங்க, ஏன் உங்களுக்கு இப்படி ஒரு களம் ஆரம்பிக்கனும் எண்டு ஆசை வந்தது? இதனால் எப்படிப்பட்ட கஸ்ரங்களை எதிர்கொண்டனிங்க, வருங்காலத்தில யாழ்களத்தை எப்படி கையாளப்போறீங்க, ஏதாவது திட்டம் இருக்கா? எண்டு சொல்லுங்க... :?

அட வருசம் முழுவதும் நாங்க கதைக்கிறம், இப்ப நீங்க கதைங்க,, ஆ, அப்படியே யாழகளத்தை தனி நபரா ஆரம்பிச்சு நடத்திவாற உங்களுக்கு யாரேனும் (முக்கியஸ்த்தார்கள்) வாழ்த்து சொல்லி இருக்காங்களா? அல்லது ஊக்கம் தந்திருக்காங்களா எண்டு சொல்லுங்க மோகன்,, :? :roll:

ஆ அப்படியே வலைஞன்(இளை), இராவணன்(வசி), யாழி, யாழ்பிரியா, யாழரசி, யாழ்ப்பாடி, உங்க கருத்துகளை காணல்லை? எப்படி 2 பெயரில மாறிமாறி எழுத கஸ்ரமில்லையோ? அதைப்பற்றி சொல்லுங்களேன்,,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்படியே இந்த கூட்டத்தைப்பற்றி என்ன நினைக்கிறீங்க எண்டுறதை மறந்திட்டாமல் சொல்லிடுங்க,, :wink:
களத்தில றோயல் பமிலியின்ர செயற்பாடுகள், அரச குடும்பத்திண்ட செயற்பாடுகள், புடுங்கல் பார்ட்டிகளின் (தம்பியுடையான், லக்கி, ராஜா, தமிழ்மஹான், நாரதர், குறுக்ஸ்) செயற்பாடுகள் எவ்வாறு அமையனும் எண்டு எதிர்பார்க்கிறீங்க, லொள்ளுபார்ட்டிகளின்( ஆனந்தசங்கரி, ஜெயதேவன்) செயற்பாடுகள், பிராணிகள் செயற்பாடுகள், பெண்குழந்தை கருத்தாளர்கள் செயற்பாடுகள் என்பன பற்றி,,, (ஆ ஊ எண்டா உடன எழுத்து வன்முறையை கைவிடசொல்லி கேட்பியள், அதெல்லாம் சரி வராது வேறு ஆசை இருந்தால்சொல்லுங்க, மறு பரிசிலனை செய்யிறம்) :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#47
அப்படி போடுங்கோ டக்கிளஸ்....:wink: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
எனது நீண்ட நாள் ஆசை அது.... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ஆனால்... :? நிறைவேறு(ம்)மா .
.
Reply
#48
நானும் தமிழ் நாதத்திலிருந்து தான் யாழுக்கு வந்தேன்.3 வருடங்களாக பார்வையாளராக இருந்தேன்.இங்கு நடக்கும் விவாதங்களும் அறிவார்ந்த கருத்துக்களும் என்னை கவர்ந்தது.அத்துடன் இங்கு இருக்கும் பல உறுப்pனர்கள் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.நானும் எதாவது எழுதலாம் என்று உறுப்பினராக இநைந்தேன்.ஆனால் நேரம் தான் இடம் கொடுக்குது இல்லை.
Reply
#49
ம். நான் யாழ் இணையத்தை அறிந்துகொண்டது 1999 ஆம் ஆண்டில்தான். யாழ் இணையத்துக்கு வந்த பாதை சுவையானது. இணைய இணைப்பு பெற்றுக்கொண்டது 1997 அல்லது 98 ஆக இருக்கவேண்டும். அப்போதெல்லாம் தமிழ் இணையத்தளங்கள் மிக மிக குறைவாக இருந்தன. இணையப் பக்கங்களை உருவாக்குவது என்பது அப்போது மிகச் சிரமமான வேலையாகவும், செலவான வேலையாகவும் இருந்தது. அதிலும் தமிழில் இணையத்தளம் உருவாக்குவது என்பது சிக்கலான விடயமாகவே பார்க்கப்பட்டது. தமிழில் எழுதிக் கருத்து பரிமாறக் கூடிய இடங்கள் இல்லாமல் அல்லது ஒரு சிலவே இருந்தன. நான் இணைய இணைப்பு பெற்றுக்கொண்ட காலம் - அதாவது எனது அப்போதைய வயது சிந்தனை வளர்ச்சியையும், மாற்றங்களையும், தேடல்களையும் கொண்டதாக இருந்தது. சில கருத்துத் தளங்களில் தேடல் தொடங்கியிருந்த காலமாகவும், தீவிரமாக இருந்த காலமாகவும் அந்தக் காலகட்டம் இருந்தது. குறிப்பாக தமிழ், ஈழம், கடவுள் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம். அப்படியான சந்தர்ப்பத்தில் இணையத்தில் "தமிழர்களோடு தமிழில்" உரையாடக்கூடிய தளங்களை நான் தேடினேன். அரட்டை அறைகள் பல இருந்த போதும், எதுவும் எனது தேடலுக்கு சரியானதாகப் படவில்லை.

அந்த சந்தர்ப்பத்தில் "Chennai Online" இணையத்தளம் "ஒரு தேடற்பொறி" மூலமாக அறிமுகமானது. அங்கு "தமிழில் எழுதி" உரையாடக்கூடிய வசதி செய்திருந்தார்கள். தமிழில் இலகுவாக எழுதி உரையாடக்கூடியதாக இருந்த "அரட்டை அறையாக" அது இருந்தது. என்னை அது கவர்ந்திருந்தது. கூடுதலாக இந்தியத் தமிழர்கள் தான் அங்கு வந்தார்கள். ஒரு சில புலம்பெயர்ந்த எம்மவரும் அங்கு வந்தார்கள். அங்கு கடவுள், மதம், தமிழ், தமிழீழம் போன்ற விடயங்களில் எனது கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியதாகவும், விவாதிக்கக்கூடியதாகவும் இருந்தது. பலநேரங்களில் தீவிரமாக முரண்பட்டிருக்கிறோம். (தமிழில் எழுதுகிற வசதி இருந்த போதும் பலர் ஆங்கிலத்திலேயே எழுதினார்கள்.). இப்படியான சந்தர்ப்பத்தில் இந்திய நண்பி ஒருவர் அங்கு அறிமுகமானார்.

அவர் யாகூ மெசெஞ்சரையும், யாகூ அரட்டை அறையையும் அறிமுகப்படுத்தி வைத்தார். யாகூ அரட்டை அறையில் நிறைய அனுபவங்கள் உண்டு. அவற்றை விரிவான பதிவாகவே இடவேண்டும். யாகூ அரட்டை அறையில் தமிழில் ஒலிவடிவில் உரையாடும் வசதி பயன்படக்கூடிய விடயமாக இருந்தது. ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்து விவாதங்களை செய்தோம். கவிதைகள், பாடல்கள் என பகிர்ந்துகொண்டோம். அப்படி அங்கு அறிமுகமான நண்பர்களில் ஒருவர் கனடாவில் வசிக்கிற இளைஞர்.

அவர் எனது கவிதைகளையும், எண்ணவெளிப்பாடுகளையும் கண்டுவிட்டு "யாழ் இணையம் உமக்கு பயனுள்ளதாக இருக்கும். அங்கு கவிதைகளால் மோதல்கள் எல்லாம் செய்கிறார்கள். நல்லா இருக்குது" என்றார். சரி என்றுவிட்டு யாழ் இணையம் வந்தேன். மேலோட்டமாகப் பார்த்துவிட்டு போய்விட்டேன். பிறகு இன்னொரு தடவை வரும் போது யாழ் இணையம் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு சில நாட்கள் கழித்து வந்து வாசித்தேன். ஏதோ ஒரு தலைப்பில் கருத்து எழுதவேண்டி இருந்தது. சரியென்று "இளைஞன்" என்று பதிந்து, உள்நுழைந்து கருத்தை எழுதினேன். எழுதிய கருத்தின் கீழ் "புதியதோர் உலகம் செய்வோம் இளைஞன் சஞ்சீவ்காந்த்" என்று இணைத்திருந்தேன் (என நினைக்கிறேன்). அந்தப் பெயரைப் பார்த்துவிட்டு சந்திரவதனா அக்கா அடையாளம் கண்டுகொண்டார். பிறகு யாழில் "வெளியில் ஊடகங்கள் ஊடாக" அறிந்த உறவுகள் பலரை சந்திக்க முடிந்தது. நளாயினி அக்கா, சாந்தி அக்கா, சந்திரவதனா அக்கா, மூனா அண்ணா, இராஜன் முருகவேல் அண்ணா, நாச்சிமார் கோயிலடி இராஜன் அண்ணா, அம்பலத்தார் என்று பலரை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. பலரோடு கருத்து பரிமாற்றங்களை செய்துகொள்ள முடிந்தது. கவிதைகளை இணைத்து கருத்துப் பெறமுடிந்தது. எனது எண்ணங்களை வெளிப்படுத்த முடிந்தது. பிறகு ஒரு கட்டத்தில் யாழ் அரட்டை அறையும் தமிழில் எழுதி உரையாடக்கூடிய வசதியைக் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் யாழ் கள உறுப்பினர்கள் - மோகன் அண்ணா உட்பட - சிலர் மாலை வேளையில் ஒவ்வொருநாளும் அரட்டை அறையில் சந்தித்தோம். நட்போடு பல விடயங்கள் பேசினோம்.

சமகாலத்தில் நான் ஒரு இணையப்பக்கம் செய்து வைத்திருந்தேன். அதை இன்னும் விரிவாக செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. யாழைக் கண்டதும் அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

யாழ் முற்றம் என்று இணைய சஞ்சிகை ஒன்றை மாதமொரு முறை என மோகன் அண்ணா செய்தார். களஉறவுகள் உட்பட வேறு பலரின் ஆக்கங்களும் அங்கு இடம்பெற்றது.

இன்னொருவரை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும். அவர் சுரதா அண்ணா. ஆரம்பகாலங்களில் களத்தில் எம்மோடு கருத்தாடியவர். தமிழில் எழுதுவதற்கான செயலிகளை செய்தவர்.

யாழ் இணையத்தின் மூலம் பலவிடயங்களை கற்றிருக்கிறேன். அறிந்திருக்கிறேன். இணையத்தொழில்நுட்பம் பற்றிய பலவிடயங்களை ஆரம்பகாலங்களில் பரீட்சித்துப் பார்ப்பதற்கு மோகன் அண்ணா யாழ் இணையம் ஊடாக நிறையவே துணைபுரிந்திருக்கிறார். யாழ் இணையத்தில் இணைந்தபோது அவருடன் உண்டான நட்பு இன்னும் தொடர்கிறது...

இவற்றையெல்லாம் இவ்வளவு எழுதுவற்கு காரணம்: எதனால் யாழ் எனக்கு அறிமுகமானது, ஏன் நான் யாழுக்கு வந்தேன், ஏன் யாழில் இணைந்தேன், ஏன் இன்னும் யாழில் தொடர்கிறேன் என்பதற்கான காரணத்தைச் சொல்லவே. அந்தக் காரணம் இன்று யாழில் இணைந்திருக்கிற பலருக்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கும்.

ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் இப்போது வருகைதருவதில்லை. அவர்களுடைய வேலைப்பழு, நேரமின்மை என பல காரணங்கள் இருக்கலாம். ஆனாலும் ஒருமாதத்தில் ஒருமுறையாவது அவர்கள் இங்கு வந்து தங்கள் கருத்துக்களை இணைக்கலாமே.

சந்திரவதனா அக்கா, நளாயினி அக்கா, சாந்தி அக்கா, மூனா அண்ணா, பரணி அண்ணா, கண்ணன் அண்ணா, அம்பலத்தார் அண்ணா, கெளரி மகேஸ் அக்கா, மதிவதனன் ஐயா, கணினிப்பித்தன், சுரதா அண்ணா, இன்னும் இன்னும் பல உறுப்பினர்கள்...

யாழ் களத்தில் ஆரம்பகாலத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெரியவர்களே. அப்போது யாழில் இருந்த ஒரே ஒரு "சின்னப் பெடி" நான் தான் என்று நினைக்கிறேன்.

இப்போது யாழ்களத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளையவர்களே.

சரி வேறு என்ன. பகிர்ந்துகொள்வதற்கு இன்னும் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன. பிறகு பார்ப்போம்.


Reply
#50
அனைவருக்கும் வணக்கம் இங்கு பலரும் தங்கள் யாழ் அறிமுககத்தை பற்றி கூறி கொண்டிருந்ததை தற்சமமயம் இங்கு வந்தபோது பார்த்தேன் நான் வசிக்கும் நகரத்தில் வேறு தமிழர்கள் இல்லை அதனால் எனக்கு யாருடனாவது தமிழில் உரையாட எங்கள் செய்திகள் அறிந்து கொள்ள ஆவல் அதைவிட எனக்கு முன்பு தமிழ் வானொலிகள் கேட்கின்ற வசதியும் இல்லாத காரணத்தால் ஒரு கணணியைவாங்கி அதில் தமிழ் தளங்களை தேடி படித்துவருவேன் தமிழில் தமிழருடன் உரையாடலாம் எண்று சில அரட்டை அறைகளுக்கு போனால் அங்கு நான் யார் ஆணா பெண்ணா? வயது என்ன என்கிற ஆள்பிடிப்பு வேலைகளே அதிகம் அதைவிட ஆபாசபேச்சுகள் வேறு வெறுத்து போய் ஒருமுறை தேடலில் உருப்படியா கருத்தாட ஒரு தளம் இல்லையா எண்று தேடியபோதுதான் யாழ்களம் கண்ணில் பட்டது அதல் நான் உறுப்பினராக ; பதிந்தாலும் ஆரம்பத்தில் தமிழில் எழுதும் சிரமத்தால் அதிகம் எழுதுவதில்லை பின்னர் காலப்போக்கில் தமிழில் எழுதும் முறையை பழகி கொண்ட நான் அங்கு எழுத தொடங்கியபோது பாடசாலை காலங்களிலும் பின்னரும் நான் நிறைய கதை கவிதை என்றும் பின்னரும் சில பத்திரிகைகளிற்கு எழுதியும் இருக்கிறேன் ஆனால் புலம்பெயர் மண்ணின் வேலைபழு மற்றும் காரணங்களால் பலவருடங்கள் எதுவுமே எங்குமே எழுதாமல் இருந்த எனக்கு மீண்டும் ஏதாவது எழுத வேண்டும் என்கிற எண்ணத்தை தந்தது யாழ் களம்தான் அதில் உறுப்பினர்களாக இருந்த சண்முகியக்கா சோழியன் அண்ணா தமிழினி குருவி அயீவன் போன்றவர்கள் தந்த உற்சாகத்தால் பல கதைகள் கவிதை கட்டுரை என்று எழுதினேன் பின்னர் பலர் வந்து தொடர்கதைகள் கவிதை என்று சிறப்பாக எழுத தொடங்க எனது நேரமின்மையாலும் நான் தொடர்ந்து எழுத முடியாமல் இடைக்கிடை வந்து படித்து விட்டு போவேன் ஆனாலும் இன்றும் யாழின் வாசகன்தான் விரைவில் சில கதைகளுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். யாழ் இன்னும் சிறப்பாக தனது சேவையை தொடர வாழ்த்துகள்
; ;
Reply
#51
ம்.. எல்லாரும் அழகா உங்களுடைய யாழ் அறிமுகத்தை சொல்லிருக்குறீங்க... ம் நான் யாழ் இணையத்துக்கு 2003 ல இருந்து வந்து போறனான், முன் பக்கம் மட்டும் தான் வாரது, யாழ்க்கு வந்துதான், தமிழ் பக்கங்களுக்கு போறது. கருத்துக்களம் இருப்பது அப்ப தெரியாது..பேந்து 2004 ல கருத்துக்களத்தை ஒருக்க கிளிக் பன்னி உள்ள வந்தன் ,அப்பத்தான் தமிழ்ல எழுதிற ஒரு தமிழ் களத்தை கண்டன், பேந்து உள்ள பார்த்தால் கூட தமிழினி அக்காட அவாற்றரும், கவிதன் அண்ணாட அவாற்றரும் ,குருவி அண்ணாட அவாற்றரும் , கண்ணில பட்டது ,பிறகு தான் அவர்கள் என்ன எழுதிருக்கினம் எண்டதை வாசித்தன் நகைச்சுவையா கதைக்கிறதுகளையும் பார்த்து ரசித்திருக்கன்.அப்ப குருவி அண்ணாட கவிதை களை அடிக்கடி வந்து பார்ப்பன் , நான் பார்க்கும் போதும் குருவி அண்ணாட கவிதைகளாத்தான் இருக்குறது. :wink:

சரி என்னண்டு தான் இப்படி தமிழ்ல கவிதைகளை எழுதுறார்களோ எண்டு நினைத்ததுண்டு... சின்னப்பு எழுதினதுகளையும் பார்த்து சிரிக்கிறனான்... பேந்து சரி நாமளும் முயற்சி செய்து பாப்பம் எண்டு பதிந்தன் 13 வைகாசி 2005 அண்டைக்கு யாழ்ல இணைந்தேன்.இணைந்திட்டு வணக்கம் எண்டு யாரோ எழுதின தலைப்பில தான் வணக்கம் எண்டு எழுதினன் பேந்து எல்லாரும் எனக்கு வணக்கம் போட்டினம் .. நானும் நன்றி சொன்னன்... இருந்தாபோல மதண் வந்து உங்களை பற்றி சொல்லுங்களேன் எண்டார் .... நான் ஏன் இவர் என்னை பற்றி சொல்லச் சொல்லுறார் என்று யோசித்திட்டு மதண் கிட்டேயே திருப்பி கேட்டன் உங்களை பற்றி முதல் சொல்லுங்கோ எண்டு ... அது நல்லா ஞாபகம் இருக்கு... இப்பவும் நினைத்து சிரிப்பன்...

அப்ப தமிழ்ல எழுதுற எண்டால் சரியான கஸ்டம் பாமினி ல தான் எழுதுறனான் . எனக்கு அதுவும் தறவிறக்கம் அது இது எண்ட எழுதுவார்கள் எனக்கு அப்ப இந்த தமிழ் விளங்குறயில்லை என்ன சுத்த தமிழ்ல எழுதினமோ எண்டு யோசித்திருக்கன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தெரியாத நிறைய விசயங்களையும் யாழ் இணையம் மூலம் அறிந்திருக்கன் சோ யாழ் இணையத்தளத்தை மறக்கவே முடியாது .. அந்த அளவுக்கு யாழ் என்னை கவந்துட்டு.. :wink:

சகோதரம் ,கவிதன் அண்ணா இவர்களையும் மறக்க முடியாது இவர்கள் நான் எழுதினதுக்கு மேற்கோள் காட்டி எழுதாட்டி இப்ப நான் யாழ்ல இருந்திருக்க மாட்டன் எண்டுதான் நினைக்கிறன்.. நான் இணைந்த புதுசில் போட்டிகள் ,, பகுதியில் தான் கூட எழுதுறது நான் கேள்வி கேட்டால் சகோதரமும் கவிதன் அண்ணா வந்து பதில் எழுதுவினம் பிறகு அதுக்கு பதில் எழுத வந்து வந்து அப்படியே இப்ப யாழ்ல எழுத துவங்கீட்டன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#52
எல்லோருக்கும் வணக்கம்.
நான் ஒய்வாக இருக்கும்போது ஒவ்வொரு தமிழ் இணையமாக தேடி பார்ப்பேன். அப்போது யாழ் என்று ஒரு சொல் கண்ணில் பட்டது. கருத்துக்களத்தை கிளிக் பண்ணி பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. என்னத்தைப்பற்றி கதைக்கின்றார்கள் என்றே புரியலை. பின்னார் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். முதலில் சின்னப்புவின் பகிடிகள் தான் கண்ணில் பட்டது. அவற்றை வாசிக்கும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் வர தொடங்கினேன். ஆனால் எந்த தலைப்புக்களிக்குள் போய் பார்ப்பது என்று தெரியலை. பின்னார் ஒருவாறு பதிவு செய்தேன். 23 ஆவணி 2005ல் பதிவு செய்தேன். தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியலை. ஆகவே வந்தவுடனே உதவி கேட்டேன். சில உறவுகள் தனிமடல் மூலமாகவும் உதவி செய்தனார்.
மற்றைய உறவுகளின் கதைகள் கவிதைகளை பார்க்கும்போது எனக்கும் எழுத வேண்டும் போல் இருக்கும். ஆனால் தமிழில் எழுதமால் கனகாலங்கள் ஆனபடியால் எழுதுவதற்கு கஸ்டமாக இருந்தது. பின்னார் எல்லோருடைய தகவல்களையும் படித்து நன்றி சொல்லிக்கொண்டிருந்தேன். வலைஞன் அவர்கள் கொண்டு வந்த ஓரு வரி பதில் மூலமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாக எழுத தொடங்கினேன். பின்பு கொஞ்சம் முயற்சி செய்து ஒரு கவிதையை முதல் முதலாக இணைத்தேன். உறவுகள் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் தந்த உற்சாகத்தால் தான் பின்பும் கவிதைகள் கதைகள் என எழுத தொடங்கினேன். எனது தமிழ் அறிவை வளர்த்தது யாழ் என்று சொல்வதில் பெருமையடைகின்றேன். அன்பான உறவுகளையும் இந்த களம் தந்திருக்கின்றது. இரவு 3 மணிவரைக்கும் இருந்து ஒவ்வொருவருடைய கருத்துக்களையும் பார்த்து ரசித்து சிரித்து வீட்டில் குட்டும் வேண்டி இருக்கின்றேன். இப்போ நேரங்கள் கொஞ்சம் கிடைக்காத காரணத்தால் களத்திற்கு வர முடியமால் இருக்கின்றது.மோகன் அண்ணாவிற்கும் அனைத்து மட்டுநிறுத்தினாருக்கும் எனது நன்றிகளை இந்நேரம் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன். யாழ்களம் இன்னும் மேலும் மேலும் பல் ஆயிரக்கான உறுப்பினார்களை பெற்று எல்லா இடத்திலும் ஒளி வீச வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

Reply
#53
அனைவருக்கும் வணக்கம்

இங்கு எல்லோரும் தங்கள் தங்கள் யாழ் அறிமுககத்தை பற்றி அழகாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எப்படி அறிமுகமாச்சு...?? எனது தங்கை ஒரு நாள்? கணனியில் இருக்கும் போது விழுந்து விழுந்து சிரித்தாள். அப்போ நான் ஒரு கவிதை புத்தகம் வாசித்து கொண்டு இருந்தன். என்டா இவள் இப்படி சிரிக்கிறாள் என்று நிமிர்ந்து ஏண்டி சிரிக்கிறாய் என்று கேட்டால். அவள் சொன்னாள் யாழ் நகைச்சுவை வாசித்து சிரிக்கிறன் என்று நான் கேட்டன் அப்படி என்னதான் அதுல எழுதி இருக்கு என்று அப்ப தான் அவள் சொன்னாள்? சின்னப்புவின் நகைச்சுவை , அத்துடன் கள உறுப்பினர்கள் நகைச்சுவையான கருத்தாடல்கள் , செல்லச்சண்டைகள், புதினங்கள் எல்லாம் இருக்கு பிறகு ஆறுதலாக போய் பார் என்று.

அப்போ எனக்கு கணனியில் இருந்து வாசிக்க எல்லாம் பொறுமை இல்லை பிடிக்கவும் மாட்டுது. எனது பொழுது போக்கு புத்தகங்கள் வாசிப்பது எப்பாலும் இருந்துட்டு சட்? பண்ணுவது. சட்டும் அவ்வளவாக பிடிக்காது. சரி ஒரு நாள் ரொம்ப போர் அடிச்சுது என்று போட்டு தங்கை சொன்ன தளத்துக்கு போய் பார்ப்பம் என்று வந்தன். கவிதைகள் கட்டுரைகள் வாசிக்க ரொம்ப சுவாரிசியமாக இருந்தது. அப்புறம் தொடர்ந்து ஒரு வருடம் தொடர்ந்து வாசிச்சன். போன சமருக்கு 2 பாடம் தன் எடுத்தன் அப்ப நிறைய நேரமும் கிடைத்தது நாம் ஏன் இணையக கூடாது என்ற ஒரு ஆசையும் வந்தது. சரி இணைந்துதான் பார்ப்பமே என்று களத்துல குதிச்சுட்டன்.

களத்துல குதிச்சு வேற யாரோ அறிமுகம் என்றதில் நான் தமிங்கிலத்தில் எழுதினன். அப்ப அனிதா? எப்படி தமிழில் டைப் பண்ணுவது என்று எனக்கு மடல் போட்டு சொன்னார். அவர் தந்ததை வாசித்து விட்டு நானும் புதுசாக ஒரு பக்கதில் எல்லோருக்கும் வணக்கம் என்று தட்டச்சு செய்தன், அப்ப இளைஞன் தான் என்னை முதல் முதல் வரவேற்றார். அப்புறம் கவிதன் அப்புறம் இப்ப வினித் முந்தி வீணாய்போனவன் என்ற பெயரில் இருந்தார். அவரும் என்னை வாம்மா மின்னல் என்று வரவேற்று லொள்ளு பண்ணினார். அப்புறம் நிதர்சன் ,டண் பெந்து மழலை வரவேற்று நீங்கள் யாரின் இரசிகை என்று கேட்டார். நான் உங்கள் இரசிகை என்றவிடன் ஆகா எனக்கும் ஒரு இரசிகையா என்றவர்தான் ஆளை இப்போ காணக்கிடைக்குறதில்லை. அப்புறம் வெண்ணிலா சின்னப்பு அருவி தல மாதன் சுண்டல் மயூரன் என்னை வரவேற்றனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

இப்படி ஆரம்பித்த எனது வருகை என்னை யாழுக்கு வாசகி ஆக்கிவிட்டது.அதுமட்டுமல்லாது எனக்கு அன்பான உறவுகளையும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தையும் தந்திருக்கிறது. எல்லா உறவுகளுக்கும் , மட்டுநிறுத்தினருக்கும், மோகனுக்கும் நன்றிகள். யாழ்களம் மேலும் சிறப்புடன் ஒரு ஆலமரம் போல் தனது சேவையை தொடர இந்த இரசிகையின் வாழ்த்துக்கள்

நட்புடன்
இரசிகை
<b> .. .. !!</b>
Reply
#54
எல்லோருக்கும் அன்பு வணக்கம்
யாழ் களத்தை நண்பர் மூலம் அறிந்து கொண்ட நான் பல வருடங்களாக வாசகனாக இருந்தேன் ..பல முறை இணைந்து எழுத முனைந்து தோல்வியை தழுவினேன் எழுத்துயுரு பிரச்சனைகளால்....வெட்டி ஒட்டு முறையுடன் மீண்டும் முயற்ச்சி செய்த போது களத்தில் இணையக் கூடிய தாய் இருந்தது.. முதலில் எழுதிய போது நடு காட்டில் விடப்பட்ட உணர்வுவோடு அறிமுகம் அல்லாத பகுதியில் எழுதிய போது வியாசன் சுட்டி காட்டி என்னை சரியான பகுதியில் எழுத வைத்தார்..தொடர்ந்து சின்னப்பு வெறுப்பு முககுறிகளுடன் எனக்கு அப்பு ஏற்கனவே காது குத்தியாச்சு என்று சொல்லி ஏதோ அந்நியன் போல வரவேற்றார்...தொடர்ந்து எனது பெயர் ஸ்டாலின் பற்றி சர்ச்சை வந்தவுடனையே தொடர்ந்தது....நண்பர் சியாம் அவர்களுடன் ஸ்டாலின் பெயர் பற்றி வாக்குவாதபட்டு அவருடன் பல கருத்துகள் எழுதியதன் மூலம் கணனியில் இலகுவாக தமிழ் எழுத பயிற்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து கள நண்பர்களோடு அந்நியோன்யமாக செல்ல காலமெடுத்தன...குருவிகளும் தமிழினியும் எப்பொழுதும் செல்ல சண்டைகளுடனும் இருப்பார்கள் அதற்க்குள் புகுந்து குருவிகளிடம் கருத்து பரிமாற்றம் வைப்பதன் மூலம் அடிக்கடி குருவிகளுடன் ஆக்கபூர்மாக விவாதிப்போம்...நான் இணந்த காலத்தில். களத்தில்.ஒரு குழு குழுவாக கதைத்து கொண்டிருப்பார்கள்...சின்னப்பு முகத்தார் டக்ளஸ் போன்றோர் கள உறுப்பினர் பகுதிக்குள்ளையே அதிகம் செலவிடுவது வழக்கம்...அப்பொழுது அவர்கள் வெளிப்பிரிவுகளில் கருத்து சொல்வது குறைவாக காணப்பட்டது...கருத்து மோதல்கள் சந்தோசங்கள் அறிமுகங்கள் பலவிடயங்களை அறிய களமைத்து தந்த மோகன் அவர்களுக்கு நன்றி கூறி மேலும் களம் நீண்ட காலம் சிறப்புற வாழ்த்தை தெரிவிதது கொள்கிறேன்
Reply
#55
தமிழ்நெற், சங்கம், தமிழ்ச்சமூகம், தமிழ்கனடியன், புதினம் போன்ற செய்தி ஆய்வுகள் வரும் தளங்களை தவிர வேறு தமிழ்த் தளங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. 2004 மார்கழி ஆழிப்பேரலையின் பின்னர் பலது பட்ட தளங்களிலும் செய்திகள் கருத்துக்கள் தகவல்கள் என்று தேடிய காலத்தில் தான் யாழிலும் பதிவுகளை வாசிக்கத் தொடங்கினன். பின்னர் 6..7 மாதங்கள் சென்றபின்னர் நானும் சில கருத்துக்களை கூறவேண்டும் என்ற தூண்டுதலில் இணைந்து கொண்டேன். ஏற்கனவே வேறு தேவைகளிற்காக பாமினி எழுத்துருவில் எழுதிப்பழகியிருந்ததால் எழுத்துரு தட்டச்சு என்பன பிரச்சனையாக இருக்கவில்லை.
Reply
#56
<span style='font-size:21pt;line-height:100%'>நான் 2003ம் வருடம் யாழில் இணைந்தேன்.

இதற்குள் பலவந்தமாக தள்ளி விட்ட பொறுப்பு (கண்ணன்)பிரபாவையே சாரும்.

கொலண்டில் வசிக்கும் பிரபாவுக்கும் எனக்குமான உறவு எனது குறும்படமான எச்சில்போர்வைக்கு பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகத்தின் சிறந்த குறும்படத்துக்கான பரிசு கிடைத்ததிலிருந்து ஆரம்பமானது.

அவை பற்றி ஈழமுரசு பத்திரிகையில் வந்த யமுனா இராஜேந்திரனின் கட்டுரைகளும் வழி வகுத்தன.

இதுபற்றி யாழில் நடை பெற்ற விவாதங்களை பிரபா (கண்ணன்) எனக்கு மின் அஞ்சல் வழி அனுப்பி வைத்ததோடு எனது கருத்துகளை எழுதும்படியும் தூண்டினார்.

எழுத முடியாது என தவிர்த்து வந்த என்னை இடை விடாது துன்புறுத்தி எழுதத் தூண்டினார்.
பிரபா மட்டும் அதை செய்யாமல் இருந்திருந்தால்
இன்று உங்களுக்கு என்னையும்
எனக்கு யாழ் நண்பர்களையும் கிடைக்க வாய்ப்பே இருந்திருக்காது.

கணணியில் தமிழில் எழுதவே பரீட்சயமற்ற நான்
தட்டுத் தடுமாறி எழுதத் தலைப்பட்டேன்.

ஏகப்பட்ட வாத - விவாதங்கள்
தலையிடி கொடுத்து தூங்க விடாமல் வைத்த இரவுகள்.........
ஆரம்ப கால போராட்ட விவாதங்கள்
யாழை வெறுக்க வைத்ததுண்டு..............
விட்டு போனதும் உண்டு.

வெறுத்து போக முயன்ற போது போகதே என்று சொன்னவர்களை
இன்று காணவில்லை
ஆனால்
நான் இன்னும் என் உறவுகளோடு..............
சிரிப்பாய் இருக்கிறது.

எதையும் சகிக்கக் கூடிய மனோ நிலையை
டேக் இட் ஈசியாக வாதாடும் தன்மையை
எனக்குத் தந்தது யாழ் என்பதில் மாற்றுக் கருத்து
எனக்குள் இல்லை.

மோகன் - சுரதா - சோழியன் - இளைஞன் - சந்திரவதனா போன்றோருடனான நட்புகள் யாழுக்கு வெளியே தனிப்பட்ட ரீதியில் வளர்ந்தன.

குறும்படங்கள் - நல்ல சினிமா போன்றவை தவிர அரசியலை தொடாத கருத்துகளுக்குள் என்னை புதைத்துக் கொண்டேன்.

என் மனதுக்கு தவறாக பட்டதை சில தருணங்களில்
சுட்டிக் காட்ட முனைந்ததுண்டு.
இருந்தாலும் அடுத்தவர் மனம் புண்படும் வார்த்தைகள்
என்னையும் நோகடிக்கவே செய்கிறது.
சில சமயம் இவற்றை கண்டு கொள்ளாமல் போவதுண்டு.
இதைத் தவிர வேறு வழி?.....................

என்னதான் இருந்தாலும்
இங்கு அனைவருமே என் உறவுகளே!

யாழில் அனைவரும் என் சொந்தங்களாகவே
இருப்பதாய் எனக்குள் ஒரு பெரு மகிழ்ச்சி.
என்னதான் பிரச்சனை வந்தாலும்
என் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
எனவே யாழ் உறவுகளை பிரிவதென்பதேது!</span>
Reply
#57
யாழ் வந்து கெட்டு குட்டிச் சுவரானதால் இப்ப வாறதில்லை..! வீட்டில பேச்சு..! கூடாத கூட்டமெல்லாம் கூடி..!

என்ன பயந்திட்டுங்களா..உண்மைதாங்க.. யாழ் வர முதல் தமிழ் மீது தமிழர் மீது ஒரு மரியாதை இருந்திச்சு..இப்ப போச்சு..! அதுக்கு...பொறுப்பு...யாழிலும் சிலர்..! சற்றிங்கிலும் சிலர்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
tamilini Wrote:யாழ் எதேச்சையாக வந்து சேந்த ஒரு தரிப்பிடம் தான். இணைய உலாவி மூலம் தமிழ் பற்றி தட்ட வந்து சேந்தது.. ஆரம்ப காலத்தில்.. பார்வையாளராக இருந்தேன்.. அப்போது.. சோழியான் அண்ணாவின் கதைகள் படிக்ககிடைக்கும்.. கதையைத்தேடி வருவேன். அப்போதெல்லாம் பாமினியை அடிக்க தெரியாது. பாடசாலையில்இருந்து பாத்துவிட்டு ஒரு நாள் பதிந்துவிட்டேன். நான் யாழுடன் நெருங்கியது சுவாரசியமான கதை. குளிர் எனக்கு புதிது பாடங்களுக்கான இடைவெளியில்... கூடப்படிப்பவர்கள் கீழ் இறங்கி புகைப்பிடிப்பார்கள் புகையை கண்டால் எனக்கு வருத்தம் வந்துவிடும். அப்படியே குளிரும் எதிரி கணணியை தேடி நூல்நிலையத்தில் அல்லது வகுப்பறைகளில் இருந்து இணையத்தில் வலம்வருவேன்.. அப்போது.. யாழ் பரீட்சையமானது..

நான் வந்த புதிதில் மதித்தாத்தாவின் நகைச்சுவைகள் (இப்ப சின்னப்பு ரேஞ்சிற்கு) இருக்கும். இப்பத்தையே மாதிரி முகமூடி கதைகள் இருந்தது.. முன்னர் கருத்தெழுதப்பயம்... அப்ப உறுப்பினராக இருந்தவர்கள் உற்சாகம் எழுதவைத்தது. பின்னர் கவிதன் ஹரியண்ணா மழலை சியாம்.. தமிழ்நிலா.. வெண்ணிலா... நித்திலா..தூயா... மதுரன்..குளம் ..வியாசன் அண்ணா. நிதர்சன். வசம்பண்ணா.. குறும்பன் அண்ணா என்று புதிதாக உறுப்பினர்கள் இணைந்தார்கள் மோதல் அற்ற சுமூக கருத்தாட்டம்.. மோதல் வந்தாலும் அதை தீர்த்துக்கொண்டு மற்ற இடத்தில் சகஜமாய் உரையாடுவார்கள்.

அப்படியே சினிமாவுக்கு பின்னாலோடு அஜீவன் அண்ணாவும்.. எப்பவுமே ஓடியோடி பாரதியாரோடு சண்டை போடும் சோழியான் அண்ணாவும்.. சாத்தியக்கா.. சேது அண்ணா.. (இப்ப காணவேகிடைப்பதில்லை) இளைஞன்.. பரணிஅண்ணா.. ஈழவன்அண்ணா பிபிசி மதன் .. குருவி.. வசி.. அதிபன் அண்ணா..அன்பகம்.. சண்முகியக்கா சந்திரவதனாக்கா.. அடிக்கடி வந்த நினைவு.. இப்படி. பலரும் களத்தில் ஜெலித்தார்கள்.. இவர்கள் நான் வர இருந்தவர்கள்.. நான் வந்தப்பிறகு மதித்தாத்தா.. தலைமறை.. தேடுதல் போட்டு ஒருக்கா வந்த நினைவு.. (இதைப்படிச்சா திரும்ப வருவார் என்ற நம்பிக்க.. இல்லை மறந்திட்டாரோ யாழை.. )

யாழின் வளர்ச்சியில் மோகன் அண்ணா இசைகளை இணைக்கக்கூடிய வசதியை செய்து கொடுத்தார். குறும்பண் அண்ணா அழகிய கவிதைகளை பதிவு செய்து இணைப்பார்.. ஒரு சிறந்த அறிவிப்பாளனை காணவில்லை..?? எங்கே போனாரோ.. அப்படியே கவிதன் மதுரன் போன்றவர்களும் அழகிய கவிதைகளையும் தொடர்களையும் இணைப்பார்கள்.. பின்னர்.. நம்ம சின்னா.. முகம்ஸ் சாத்திரி டக்கண்ணா.. அதிரடி நகைச்சுவைக்கதம்பமே களம் இறங்கியது.. துன்பங்கள் துயரங்கள் என்று எல்லாத்தையும் மூட்டைகட்டி வைச்சு சந்தோசமாய் கொஞ்ச நேரம் சிரிக்க முடிந்தது. அடுத்த கட்டம் பல புதிய உறுப்பினர்கள்.. கருத்துக்கள்.. தொடர்கிறது.. அப்படியே தொடரணும்.. வாழ்த்துக்கள்..

என்ன அறிமுகம் என்று உங்க சுயசரிதையே எழுதிக் கலக்கிறியள் போல..! ம்ம்ம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
எனக்கு யாழ்களம் அறிமுகம் ஆனது Google முலம் தான்
நான் சும்மா இருக்கும் நேரங்களில் Google ல் tamiltiger என்று ஏதும் தேடி கொண்டு இருப்பேன் அப்போது தான் யாழ்களமும் அறிமுகம் ஆனது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எனது கூடும்பத்துக்கும் யாழ்ப்பாணதுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கிறது எனது அம்மாவின் அப்பா யாழ் எனது 2 அண்ணாக்கள் திருமனம் செய்ததும் யாழ்ப்பாணம் தான்(காதலித்து) இப்போது எனது கடசிதங்கை திருமனம் செய்ய போவதும் கண்டாவளை(வன்னி)சேர்ந்த ஒருவரைதான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#60
Quote:<b>யாழ் வந்து கெட்டு குட்டிச் சுவரானதால் இப்ப வாறதில்லை..! வீட்டில பேச்சு..! கூடாத கூட்டமெல்லாம் கூடி..! </b>
இந்த நக்கல் தானே வேணாங்கிறது.. கெடுற பிள்ளை குட்டிச்சுவராகிற பிள்ளை எங்க இருந்தாலும் ஆகியே தீரும்.. அதற்கு வழிகள் பல இருக்கு (வீட்டில பேச்சு வாங்கியும் வாறியள்ல.. அப்படித்தான்).. வரமுடிவதில்லை என்றதக்காக இப்படி நொண்டிக்காரணங்களை அடிச்சு விடக்கூடாது.. :evil: :evil:

Quote:என்ன பயந்திட்டுங்களா..உண்மைதாங்க.. யாழ் வர முதல் தமிழ் மீது தமிழர் மீது ஒரு மரியாதை இருந்திச்சு..இப்ப போச்சு..! அதுக்கு...பொறுப்பு...யாழிலும் சிலர்..! சற்றிங்கிலும் சிலர்..!
அந்த சிலரும் பலரும் இப்படித்தான் ஏதாவது சொல்வாங்க.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)