Poll:
This poll is closed.
Total 0 vote(s) 0%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...
#41
நவீன விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனிதரை உற்சாகப்படுத்துகின்றதா அல்லது சோம்பேறியாக்குகின்றதா என்னும் கருப்பொருளை/விவாதப்பொருளைத் தந்து "யாழ் கருத்துக்களத் தோழர்களை"யெல்லாம் ஒருங்கிணைத்து ஆக்கபூர்வமானதும் அறிவுபூர்வமானதுமான ஒரு கருத்தாடலை ஒழுங்கமைத்த அன்புத் தோழி தூயாவிற்கு முதலில் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் வணக்கங்களும். பட்டிமன்ற நடுவர்களில் ஒருவராக இருந்து இடையிடையே அனைவரது கருத்துக்களையும் தொகுத்து வழங்கி கருத்தாடலர்களையும் பட்டிமன்றத்தையும் சிறப்பிக்கும் சோழியான் அண்ணாவுக்கும், இன்னொரு நடுவராக அனைத்துக் கருத்துக்களையும் "ஆர்வத்தோடு" பார்த்துக்கொண்டிருக்கும் சண்முகி அக்காவிற்கும் எனது வணக்கங்கள். பட்டிமன்றத்தில் எதிரணியினர் உணர்ச்சிவசப்பட்டு குழப்பம் செய்யாமலும், பார்வையாளர்கள் அழுகிய தக்காளி, முட்டை, கல்லு போன்றவற்றை அவர்கள் மீது வீசாமலும் களத்தின் பின்னணியிலிருந்து கண்காணிக்கும் மட்டுறுத்துனர்களுக்கும் குறிப்பாக மோகன் அண்ணா, இராவணன் அண்ணா ஆகியோர்க்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.இறுதியாக தம் சோம்பேறித்தனங்களையெல்லாம் மறைப்பதற்காகவும், தம்மிடம் நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதரை உட்சாகப்படுத்துகிறது என்பதற்குரிய சரியான வாதங்கள் இல்லாத காரணத்தாலும் எம்மணியினரை சோம்பேறிகள் என்று கூறிக் கூறியே அரைவாசி பக்கங்களை வீணடித்துவிட்டு சோம்பேறிகளாய் ஓய்ந்துபோயிருக்கும் எதிரணியினருக்கும் - உற்சாகமாகவும் தம் வாதத்தில் உறுதியோடும் கருத்தெடுத்துரைத்த என் அணித்தோழர்களுக்கும் எம்மையெல்லாம் வழிநடத்திக்கொண்டிருக்கும் எம்மணித் தலைவர் சியாம் அவர்களுக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம் கூறி என் தரப்பு வாதங்களை முன்வைக்கிறேன்.

1. இணையத்தில் பொருட்களை தெரிவுசெய்து, இணையம் மூலமாகவே அவற்றை வாங்கி வீட்டிற்கு தருவித்தல்:
ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து, ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும். அதேவேளையில் உடற்செயற்பாட்டுக்கு வழிவகுக்கும். போராட்டங்களின் மத்தியில் பெறப்படுகின்ற ஒன்றே எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. உள்ளம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உற்சாகம் பிறக்கும். அதைவிடுத்து கணினிக்கு முன்னால் 24 மணிநேரம் அமர்ந்திருந்து, கணினித்திரையை உற்று நோக்குவதால் கண்கள் சோர்வடைகின்றன - கண்கள் சோர்வடைவதால் மூளை சோர்வடைகிறது. கணினித் திரையின் ஒளிக்கதிர்கள் பார்வைச் சக்தியையும் மெதுமெதுவாகக் குறைக்கிறது. இருக்கையில் நீண்டநேரம் அமர்ந்திருப்பதனால் முதுகுநோ போன்றவற்றின் தாக்கத்திற்கு மனிதஉடல் ஆளாகின்றது.

2. கணினி விளையாட்டுக்கள்:
ஓடியாடி - துள்ளிக்குதித்து - சூரியஒளிபட - மெல்லிய காற்று வருடிச் செல்ல - புழுதிமண் உடல் தழுவ விளையாடிய காலம் போய் கணினித் திரைக்கு முன், அறையை இருட்டாக்கி மணிக்கணக்காக அதில் ஈர்க்கப்பட்டு குந்தியிருக்கும் நம் இளைஞர்களின் உடலில் தேவையான அசைவுகள் எப்படி ஏற்படும்? கண்கெடும் - சோர்வுண்டாகும் - உற்சாகம் எப்படிப் பிறக்கும்?

3. இணைய அரட்டை:
தூரத்திலிருப்பவர்களை சந்தித்து கதைத்து மகிழ இணையம் வழிவகுக்கிற போதிலும், இணைய அரட்டையின் மூலம் அருகில் இருக்கும் நண்பர்களை சந்திப்பதை பலர் குறைத்துக் கொள்கிறார்கள்.இணைய அரட்டை பலரை போதைக்குள்ளாக்கி அடிமைப்படுத்தியுள்ளது. வெளியில் சென்று நண்பர்களை சந்தித்து வீதியோரமாய் நடந்து, ஊர்சுற்றி திரிந்தபோது அதில் உளம் களைகட்டும் - உற்சாகம் தன்னில் பிறக்கும். வீதியில் இளம்பெடியங்கள் பெட்டைகள் பின் சுற்றுவதும் - இளம்பெட்டைகள் பெடியங்கள் பின் சுற்றுவதும் - ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காய் செயல்கள் புரிவதுவும் - உளத்துக்கு எவ்வளவு உற்சாகம் கொடுத்தது? இன்று அப்படியா? கணினித் திரைக்கு முன்னால் இருந்து பொழுது இருள்வதும தெரியாமல் - என்ன செய்கிறோம் என்றும் தெரியாமல் - இருந்த இடத்தைவிட்டு அசையாமல் - உணவுகூட உட்கொள்ளாமல் எத்தனைபேர் இருக்கிறார்கள் தெரியுமா? இப்படி இருந்தால் உடற்பலம் என்னவாகும்? உடல் ஒழுங்காக இயங்கினால் தானே சோம்பேறித்தனம் அற்றிருக்கலாம்.

4. இணையக் காதல்:
காதலிக்கிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு இணைய அரட்டையில் தம் காதலர் பற்றி எதுவுமே அறியாமல் மணிக்கணக்காய் காதலைப் பரிமாறுகிறார்களாம். காதலென்றால் என்னவென்றும் தெரியாது - வாழ்க்கையென்றால் என்னவென்றும் தெரியாது - தான் அரட்டையில் சந்தித்த அந்த "X" எப்படிப்பட்டவர் என்றும் அறியாது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். இணையம் ஊடாக கோப்புக்களை(Files) பரிமாற முடியும், கருத்துக்களைப் பரிமாற முடியும், செய்திகளை பரிமாறமுடியும் ஆனால் மனித உணர்வுகளை , அதன் தன்மைகளையும் எப்படிப் பரிமாறமுடியும்? Smilies போடுவதாலும், Webcam காட்டுவதாலும், Micofon இல் உரையாடுவதாலும் எந்த உணர்வுகளும் உண்மையாகப் போய்ச் சேர்வதில்லை. Digital தொழில்நுட்பம் என்பதே "மாற்றியமைக்கும், திருத்தியமைக்கும்" தன்மை உடையது. அதாவது Webcam மூலமாக உங்கள் முகத்தைக் காட்டும் போது மெருகூட்டி, அழகூட்டி காண்பிக்கலாம். Microfon மூலம் உரையாடும் போது ஆண்குரல் பெண்குரலாகவும், பெண்குரலாகவும் மாற்றப்பட்டு உரையாடலாம். படங்களைக்கூட Grafic மென்பொருள்கொண்டு உருவ அமைப்புக்களை மாற்றியமைக்கலாம். இப்படி உணர்வுகளைக் கூட உண்மையாக வெளிப்படுத்த அல்லது பரிமாற முடியாது போது உற்சாகத்தை இந்த இணைக் காதல் எப்படிப் பிறப்பிக்கும்?

காதல் ஒவ்வொரு மனதருக்குள்ளும் வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைக்கிறதென்கிறார்கள். காதலித்தால் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உடலில் உள்ளத்தில் பாயுமென்கிறார்கள் - அதாவது உற்சாகத்தைத் தான் இப்படி சொல்கிறார்கள். வாழ்வியக்கத்தின் சக்தியாகவே அதனைப் பார்க்கிறார்கள். அந்த சக்தி உண்மையாக வெளிப்படும் போதுதானே உளத்தில் உற்சாகம் என்கிற மின்சாரம் பாயும்? இப்படி இணையஊடகம் மூலமாக காதலிக்கிறோம் என்பவர்களையும், நேரில் பழகி - விரும்பிய இடங்களிற்கெல்லாம் சென்று வாழ்வு பற்றிய கனவுகளை, கருத்துக்களைப் பரிமாறி - மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்.

5. கணினியில் சிறு வேலைகள்:
உடல் உழைப்பின் மூலமும், மூளை உழைப்பின் மூலமும் செய்யக்கூடிய சிறிய சிறிய வேலைகளைக்கூட இன்று கணினி மூலம் செய்கிறார்கள். மனித உழைப்பின் அநாவசியமாக செலவழிக்கிற வேலைகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் மனித உழைப்பு பயன்படுத்தக்கூடிய சிறு சிறு வேலைகளைக்கூட இன்று கணினியைப் பயன்படுத்தி செய்கிறார்கள். உழவு செய்த எம் பாட்டனிடம் உற்சாகமிருந்தது - பாடியாடி வேலைசெய்த அவர்கள் மனதில் தெளிவும் தெம்பும் இருந்தது. இன்று உங்களிடம் என்ன இருக்கிறது? தொழில்நுட்பத்தையும் விஞ்ஞானத்தையும் உங்களை சோம்பேறிகளாக்குவதற்காகத்தானே பயன்படுத்துகிறீர்கள்?

6. பக்கத்தில் நடந்தோ, ஈருருளி மிதித்தோ சென்று பொருட்கள் வாங்கவேண்டிய கடைக்கு சிற்றுந்தில் பயணிக்கிறார்கள். படிகள் பக்கத்தில் இருக்கும், ஆனால் இயந்திரப்படிகள் தான் இவர்களைக் காவவேண்டும். பல்லுத் தீட்டுறதுக்கு பஞ்சியில இவைக்கு அதற்கும் மினசாரத்தில் இயங்கும் துலக்கி தேவைப்படுகிறது. இப்படி சின்னச் சின்ன வேலைகளுக்கே மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் தேவைப்படுகிற இவர்களை இன்னும் இன்னும் சொம்பேறிகளாக்குகிறது தொழில்நுட்பம்.

7. இன்றைய மருத்துவம்: கண்டது நிண்டதுக்கெல்லாம் மருந்து. சாப்பாடு உள்ள போறதுக்கும் மருந்து, மலம் போறதுக்கும் மருந்து. ஓடிஆடி உழைத்தால் பசி தன்னால வரும். பசிக்கேற்றதை வேளாவேளைக்கு உட்கொண்டால் உட்கொண்ட உணவு செமிபாடடைய அதற்கேற்ற உழைப்ப உடலுக்குக் கொடுத்தால் அனைத்து செயற்பாடுகளும் ஒழுங்காக நடைபெறும். உடலின் தொழிற்பாடு ஒழுங்காக இருந்தால் தானே உளம் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும்?

8. இதயேன் கேக்குறீங்கள், பிள்ளை பெறுவதற்கும் ஏதோ வழியிருக்காம். பாவம் அங்க பெண்களாவது பிள்ளையை சுமக்கிற உழைப்பை செய்கிறார்கள். ஆனால் பிள்ளை பிறப்பதற்கு முதல் செய்யவேண்டிய உடல்(காம)உழைப்பை செய்யிறதை தடுத்து மனிதரை மேலும் சோம்பேறியாக்குறது நவீன விஞ்ஞானம்.

Quote:பொதுவாகவே எமது தாய் தந்தையர் காலத்திலே பல விடயங்களை செய்து முடிப்பதற்கே பல நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. ஆனால் தற்போது அதே விடயங்களை ஒரு சில மணித் துணிகளிலேயே முடித்து விட முடிகின்றது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விடயம் கொழும்பிலுள்ளவர் அறியும் முன்பே வெளிநாட்டிலுள்ளோர் அறிந்து விடுகின்றனர் என்றால் சுட்டு விரலுக்குள் உலகத்தை கொண்டு வந்த நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் தானே காரணம்.

சுட்டு விரலுக்குள் உலகத்தைக் கொண்டு வந்ததால் சுற்றித் திரிவதற்கு அவசியமில்லாமல் போயிற்று. உலகம் சுருங்கச்சுருங்க மனிதன் சோம்பேறியாகிக்கொண்டே இருக்கிறான். ஓம்... தாய் தந்தையர் காலத்தில் பலவிடயங்களை செய்து முடிப்பதற்கு பல நாட்கள் தேவைப்பட்டனதான். ஆனால் சிறுவேலையை உடனே செய்துமுடிக்கக் கூடிய வேலையை செய்வதற்கு கணினியையும், நேரத்தையும் விரயம் செய்ய மனிதர்களைத் தூண்டுவது எது? தொழில்நுட்பமும் நவீன விஞ்ஞானமும் தானே?

Quote:எதிரணித் தலைவர் கூறியது போல் ஒருவர் தனது காலைக் கடன்களை செய்யாமல் தனது அன்றாட வேலைகளை செய்யத் தொடங்குகின்றாரெனின் அது அவருடன் பிறந்த சோம்பேறித்தனமே தவிர வேறொன்றுமில்லை.

சோம்பேறித்தனம் கூடப்பிறப்பதாகவே இருக்கட்டும். தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அந்த சோம்பேறிகளை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கி வைத்துக்கொள்ளவே பயன்படுகிறது.

Quote:ஏன் மேலதிகமாக இந்தப் பட்டிமன்றமே மேடையின்றி நடைபெறுவதெப்படி??

ஓம். மேடையில் என்றால் உற்சாகமாக கையை அசைத்து பாவனைகள் செய்து குரலின் நெழிவு சுழிவுகள் மூலம் நாம் எமது கருத்தை/வாதத்தை சொல்கிறோம்.அப்போது நமது உடலும் மூளையும் சமஅளவில் உற்சாகமாக செயற்படுகின்றன. நமது உற்சாகமான கருத்துக்கள் தெளிவாகவும் நேராகவும் மக்களை சென்றடைகிறது. ஆனால் கருத்துக்களத்தில் இப்படி எழுதுவதற்கு கணினித் திரையை உற்றுநோக்கவேண்டியிருக்கிறது - விரல்கள் தொடர்ந்து தட்டச்சு செய்து செய்து கைகளில் நடுக்கம்/தளர்வு ஏற்படுகிறது - கண்களும், விரல்களும் சோர்வடைகின்றன !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Quote:அத நான் இல்லையெண்டு சொல்லிங்கோ. எப்பவாவது நவின தொழில் நுட்பம் சொல்லிச்சுதா மனிசனை ஆரோக்கியமில்லாம இருக்கச்சொல்லி.
ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்.

எதிரணியில் கருத்தெழுதிய குறும்பன் தன் கருத்தின் மூலமே எமது வாதத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார். எனவே அவருக்கு எமது நன்றிகள். அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சோம்பேறித்தனம் என்பது இருக்கிறது. அந்த சோம்பேறித்தனம் வெளிப்படுவதற்கு தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் வழிசமைக்கிறது. உலகத்தில் உள்ள சிறிய பகுதியனர் தான் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். பெரும்பாலானவர்கள் தாம் சுகமாகவும், சொகுசாகவும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே தொழில்நுட்பத்தையும், நவீன விஞ்ஞானத்தையும் அணுகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை மேலும் மேலும் சோம்பேறியாக்குவதற்கு தொழில்நுட்பமும் நவீன விஞ்ஞானமும் பெரிதும் காரணியாகிறது என்பதே உண்மை. இருந்த இடத்தில் தனக்கு சாப்பாடு வரவேண்டும் என்று நினைக்கிற சோம்பேறித்தனம் நிறைந்த மனித சமூகத்தில் தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அவர்தம் அந்த ஆசைகளை கனவுகளை நிறைவேற்றுகிற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது, பயன்படுத்துகிறது. மின்அடுப்பைக் கண்டுபிடித்தார்கள் - சமையலை இலகுவாக்க - மனித உழைப்பை வீணாக செலவழிக்காதிருக்க! ஆனால் Fast food என்ன செய்கிறது? ரின்னுக்குள்ளும் பக்கற்றுகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட சாப்பாடுகள் தனியே இருந்து படிக்கிற, பலமணிநேரம் வேலைசெய்கிற ஆட்களுக்கு சரி - ஆனால் குடும்பத்தவர்கள் வீட்டில பபுதுசா சமைக்கலாம் தானே?

Quote:மின்சாரத்தை கண்டு பிடித்தார்கள் அதனால் பெரிய நன்மைதான் அதில் சிறிய தீமையும் இருக்கலாம்..அதற்காக மின்சாரத்தை ஒதுக்கிவிடமுடியாது. இந்த மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டதால் மனிதன் சோம்பேறியாகிவிடவில்லை. அதை வைத்து இன்னமும் சாதிக்க வேண்டும் என்று உற்சாகமாக போராடுகிறான்.

மின்சாரம் பெரிய கண்டுபிடிப்புத்தான். நாங்கள் அதை மறுக்கவில்லை. மின்சாரத்தின் மூலம் மனிதனை சோம்பேறியாக்குவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளைத்தான் நாம் குறிப்பிடுகிறோம்.

Quote:சுனாமி வருவதற்கு முன்னரே விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்கமுடிந்திருக்கிறது. அது விஞ்ஞானத்தின் சாதனை. ஆனால் அதை தெரியப்படுத்தாமல் விட்டது உங்கள் பழமை வாதம். அது உடனடியாக தெரியப்படுத்தப்பட்டு உயிழப்புக்கள் இல்லாதிருந்தால் எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்.

சுனாமி வரும் என்பதை அறிவிக்காமல் விட்டது பழமை வாதமல்ல (நாமொன்றும் பழமைவாதிகளும் அல்ல), தொழில்நுட்ப/விஞ்ஞானப் பிரியர்களின் சோம்பேறித்தனமே. விஞ்ஞானத்தாலும் தொழில்நுட்பத்தாலும் சோம்பேறிகளாகிப் போய்விட்ட அவர்கள் உற்சாகத்தோடு செயற்படாததாலேயே இவ்வளவும்.

Quote:வியாசன் குறிப்பிட்டிருந்தார் புதிதுபுதிதாக நோய்கள் உருவாகுவதாக ஐயா வியாசரே நீங்கள் பத்தாம் பசலி கருத்துக்ளை வைத்திருக்கின்றீர்கள். அம்மை மலேரியா காசநோய் போன்ற கொடிய நோய்களை வருவதற்கு முன்னே தடுப்பதற்கான வகைகளை கொடுத்தது இந்த விஞ்ஞானம். நோய்களால் சோர்ந்திருந்த மனிதனை நோய்களிலிருந்து வருமுன்னரே தடுத்துமனிதனை உற்சாகப்படுத்துகின்ற விஞ்ஞானத்தை நீங்கள் குறை கூறுவது கீழேயிருந்து ஏணிமூலம் ஏறி மேலே சென்றுவிட்டு இந்த ஏணி சரியில்லை என்று சொல்வதுபோல இருக்கின்றது.

மருத்துவம் மனித சமூகத்தைக் காத்தது ஒத்துக்கொள்கிறோம். ஆனால், மனித சமூகத்தைக் காத்த அதே மருத்துவமே சோம்பேறியாக்குகிறது என்பதை நான் முன்னர் குறிப்பிட்ட கருத்தில் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளேன். ஒழுங்கான உணவு உட்கொண்டால் - உடலுக்குத் தேவையான உழைப்பைக் கொடுத்தால் இலகுவாக மாறிவிடக்கூடிய சில பலவீனங்களுக்கு - சுகயீனங்களுக்கு எல்லாம் மருந்து கொடுத்து சோம்பேறியாக்குவது எது?

Quote:விஞ்ஞானம் எப்போ தொல்லையாக மாறுகிறது என்றால் அதை அளவுக்கதிகமாக உபயோகிப்பதனால். உதாரணமாக தொலைக்காட்சி அளவுடன் உபயோகித்தால் பிரச்சனை இல்லை அதுவே நாள் முழுவதையும் பிடித்துக்கொண்டால் அதுவே தொல்லை.

நீங்களே சொல்லிவிட்டீர்களே. நன்றி. மனித மனதை போதைக்குள்ளாக்கி, அடிமைப்படுத்தி சோம்பேறியாக்குகிறது தொழில்நுட்பம் என்பது தெளிவு. அளவுடன் எப்படி உபயோகிப்பது? மனித சமூகத்தில் பெரும்பாலானவர்களை அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்க்க வைப்பது எது? சிறுபிள்ளைகள் அதாவது 3, 4 வயது பிள்ளைகள் தொலைக்காட்சி அதிகம்(ஒளித்திரை சார்ந்தவை) பார்ப்பதனால் 7 வயதில் அதன் பாதிப்பு தெரியவரும் என்பது ஆய்வின் முடிவு. அதாவது தொலைக்காட்சியிலோ, அல்லது திரையரங்குகளிலோ, அல்லது கணினியிலோ ஒளி தனியாகவும் ஓலி தனியாகவும் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுகின்றன. அதனால் அக்குழந்தையுடன் ஒருவர் நேரடியாக உரையாடும் போது அந்தக் குழந்தையால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியாமல் போகும்.

Quote:இன்று புலத்திலுள்ள பலரும் வேண்டிய நேரத்தில் ஊரில உள்ள உறவுகளுடன் கதைத்து அவர்களது முகத்தையும் பார்க்க உதவுவது எது? இதே 10 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்து எப்போது கடிதம் வரும் என காத்து கிடந்த நாட்களை எண்ணிபாருங்கள். இன்றோ வேலை முடிந்து வரும் களைப்பும் ஊரிலிருக்கும் உறவினரின் குரலை கேட்டதும் காற்றோடு பறக்க செய்து உற்சாகத்தை தருவது எது இன்றைய விஞ்ஞானம்.

உலகத்தின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் உறவுகளோடு உரையாடுகிறீர்கள் சரி. ஆனால் உங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் பலரை அடிமைப்படுத்தி சோம்பேறிகளாக்கி வைத்திருக்கிறதை அறியாமல் விட்டீர்களோ?

Quote:ரைட் சகோதரர்களின் பறப்பு முயற்சி முதலில் தோல்வியில் தான் முடிந்தது ஆயினும் தொடர்ந்து அது தந்த உற்சாத்தால் பறக்கவில்லையா இன்று அது நவீன இரண்டு மாடி விமானத்தில் வந்து நிக்கிறதே..............விஞ்ஞானம் சோம்பலை வளர்த்திருந்தால் இது நடந்திருக்குமா?
இந்தியா பவ தோல்வினளின் பின் இனறு வெற்றிகரமாக தனது நாட்டிலிருந்து செயற்கை கோளை ஏவுகிறதே விஞ்ஞானம் தந்த சோமபலினாலா உற்சாகத்தாலா? எதிரணி டீசாம்பேறிகளே.
குழந்தை புதிதாக நடைபயிலும் போது விழுந்து எழும்புது இயல்பு தானே..........?

எதிரணி நண்பர் குழைக்காட்டன் உரு விடயத்தை மறந்துவிட்டார். விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறு, விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு. படைப்பாளிகளும் பயனார்களாக இருக்கலாம். ஆனால் பயனாளர்கள் படைப்பாளிகள் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்தார்கள் - போராடினார்கள் - கண்டுபிடித்தார்கள்: இங்கு மனித உழைப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது - அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள். ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்+தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள். விஞ்ஞானப் பயனாளர்கள் அல்ல!!!!

Quote:அந்தக் காலத்தில் தனது கைப்பட ஒவ்வொரு வரவையும் செலவையும் பதிவுப் புத்தகத்தில் பதிந்துவைத்த ஒரு கணக்காளர் நவீன கணனி வசதிகளைப் பாவித்து மிகக் குறுகிய நேரத்தில் தனது வேலையை முடித்துவிட்டு சுருண்டு படுத்திருப்பாரானால் நான் எதிரணியிடம் எமது தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பேன். மாறாக அவர் இன்னும் பல கடைகளுக்கும் கணக்கெழுதி தனது வருமானத்தை பெருக்கியிருக்கிறார் இது ஏன்.

நீங்கள் எங்கள் அணியினரிடம் தலைவணங்கியே ஆகவேண்டும். சுருண்டு படுக்கும் மனிதர் கூட்டம் தான் அதிகம். 1+1 இற்கு கூட கணனியை எடுக்க வைப்பது எது? சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்லலாம். சரி அந்த சோம்பேறித்தனத்தை மேலும் ஊக்குவிப்பது எது?

Quote:மேற்குறிப்பிட்ட சில உதாரணங்களில் பொதுவான ஒரு அம்சம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். எல்லா வகையிலும் வீணாகச் செலவழிக்கப் பட்ட நேரம் நவீன தொழில் நுட்பவசதிகளால் மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த நேரமும் வீணடிக்கப்படவில்லை. இன்னும் தெரியாததைத் தெரிந்து கொள்ளவும் தமது வருமானத்தைப் பெருக்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.

நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது - ஓம் ஒத்துக்கொள்கிறோம், ஆனால் மிச்சப்படுத்தப்பட்ட நேரம் தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து அழுவதற்கும், இணையத்திலே அரட்டையடிப்பதற்கும், போர்த்து மூடிக்கொண்டு படுப்பதற்கும் தானே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்பதை எதிரணியினரே உணர்ந்து கொள்ளுங்கள்.


<b>உலகம் தனக்குள் இருப்பதென்பது ஒன்று. உலகம் தனக்கு வெளியில் (அதாவது உலகில் தான்) இருப்பதென்பது ஒன்று. உளமும் உடலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. உடல் உற்சாகமாக இருந்தால் தான் உள்ளம் உற்சாகமாக இருக்கும். உள்ளம் உற்சாகமாக இருந்தால் தான் உடல் உற்சாகமாக செயலாற்றும். உடலுழைப்பு/உடற்செயற்பாடு போதியளவில் நடந்தால் தான் உடல் உற்சாகம் பெறும். எனவே தொழில்நுட்பம் மனித உழைப்பை அளவுக்குமீறிக் குறைப்பதால் உடலுக்கு உற்சாகம் கிடைப்பதில்லை - உளம் சோம்பேறித்தனத்திற்கு ஆளாகிறது. தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் ஒவ்வொரு மனிதனுள்ளும் உள்ள சோம்பேறித்தனத்தைப் பயன்படுத்தி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது - சந்தைப்படுத்திக்கொள்கிறது. இன்றைய விளம்பரங்களை உற்று நோக்குங்கள். அவை மனிதர்களின் சோம்பேறித்தனத்தைத்தான் கருப்பொருளாகக் கொண்டு பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. தொழில்நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும் தங்கி வாழவேண்டிய சூழ்நிலையை அவை ஏற்படுத்துவதால் சோம்பேறித்தனம் குடியேறிக்கொள்கிறது.</b>

எனவே நவீன விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் மனிதர்களை சோம்பேறியாக்குகிறது என்கிற எமது அணியின் வாதப்பொருளை மொழிந்து, இதுவரை பொறுமையாக எனது கருத்தை படித்து முடித்த அனைவருக்கும் நன்றிகூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

[size=9]பி.கு.: எல்லாம் பட்டிமன்றத்திற்கான கருத்துக்கள் தான். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாகவோ, புண்படுத்துவதற்காகவோ எதுவும் எழுதப்படவில்லை. கலகலப்புக்காக சில அழகூட்டல் சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதாக/புண்படுத்துவதாக ஏதும் இருந்தால் அதனை அழித்துவிடலாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


#42
1. இணையத்தில் பொருட்களை தெரிவுசெய்து, இணையம் மூலமாகவே அவற்றை வாங்கி வீட்டிற்கு தருவித்தல்:
பொருட்களைமட்டுமா? எதையெதையோ எல்லாம் இருந்த இடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுகிறார்கள்..

2. கணினி விளையாட்டுக்கள்:
தாச்சி (கிளித்தட்டு), கிட்டிபுள்ளு என்று விளையாடிய காலம்போய்.. தாச்சியில் உச்சும்போது தேயும் வெறுங்கால் அடைந்த உறுதிபோய்.. பலமடைந்த முள்ளந்தண்டுபோய்... கிட்டிபுள்ளில் மரத்தான் அடிக்கும்போது பாய்ந்து வரும் 'புள்'ளைப் பிடிக்கையில் உரமேறும் கரங்கள் போய்.. விஞ்ஞான விளையாட்டுகளால் எல்லா அவயங்களுமே சோர்வடைகின்றன..

3. இணைய அரட்டை:
பசுமையான சூழலில் நண்பர்களுடன் கும்மாளமடித்ததை விடுத்து... பெண்களின் பின்னால் ஆண்களும் .. ஆண்களை அலைய வைத்து பெண்களும் கண்ணாமூச்சி ஆடி அடையும் உற்சாகங்களை துறந்து.. வெறும் கட்டிடக்காட்டுக்குள் ஒரு கணனித்திரையின் முன்னே இருண்டதும் தெரியாமல் விடிஞ்சதும் தெரியாமல்.. தனக்குள் சிரித்து அழுதுகொண்டிருக்கும் சித்தப்பிரமை பிடித்தவர்களாக சோர்வடையும் மக்களை இணைய விஞ்ஞானம் உருவாக்குகிறது..

4. இணையக் காதல்:
உணர்வுகளைக்கூட உண்மையாக வெளிக்காட்ட உதவாத இணையக்காதலால் எப்படி உற்சாகப்படுத்த முடியும்?

சிறுவேலைகளைக்கூட கணனி செய்கிறது.. படியேறிச் செல்ல வேண்டிய மனிதனை படிகள் காவிச் செல்கின்றன.. பசி ஏற்படவும் மருந்து.. சமிபாடு அடைவதற்கும் மருந்து..

இப்படி எல்லாம் கூறி இறுதியாகப் போட்டாரே ஒரு போடு..
Quote:பிள்ளை பிறப்பதற்கு முதல் செய்யவேண்டிய உடல்(காம)உழைப்பை செய்யிறதை தடுத்து மனிதரை மேலும் சோம்பேறியாக்குறது நவீன விஞ்ஞானம்.
ஆக, விஞ்ஞானம் மனிதனை எதற்குமே உதவாமல் செய்துவிட்டது.. பெண்ணாவது குழந்தையை சுமக்கிறாள்.. ஆணின்நிலை அந்தோ பரிதாபம்.. எதற்குமே வேண்டாத பொருளாகிவிட்டான்..

என்ன கொடுமை இது?

வாழ்த்துக்கள் இளைஞன்.. நிறைவான ஒரு வாதத்தை தந்துள்ளீர்கள்!!
.
#43
அடுத்து.. இரு அணியிலிருந்தும் முறையே அறுவர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.. உற்சாகப்படுத்துகிறது எனும் அணியில் விக்டோர்ப், மழலை, மதுரன் ஆகியோர் கருத்துகளை முன்வைக்க உள்ளனர்..
கணணி விஞ்ஞானத்துடன் நின்றுவிடாதீர்கள்.. நீங்கள் .. பிறந்து 'ஆனா' என எழுத ஆரம்பிக்கும் போதிருந்தே விஞ்ஞானம் உங்களுடன்தான் சேர்ந்திருக்கிறது.. ஆகவே.. உற்சாகமாக கருத்துகளைக் கொண்டுவந்து கொட்டுங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> விக்டோர்ப் நிலை கேள்விக்குறி எனில் அடுத்து மழலை அல்லது மதுரன் கருத்துகளை முன்வையுங்கள்.. தொடர்ந்து 'சோம்பேறியாக்குகிறது' எனும் அணியில் நிலவனும் மதனும் கருத்துகளை முன்வைப்பார்கள்.. மதன் கருத்துகளை முன்வைப்பதில் சந்தேகமில்லை.. நிலவன் பற்றி அறியத் தாருங்கள்..
அணித்தலைவர்கள் புதிதாக கருத்துகளை தேடாதீர்கள்.. நீங்கள் ஒரு தொகுப்புரையையும், மாற்று அணியினருக்கான பதில்களையுமே முன்வைக்க முடியும்.. தங்களின் புதிய கருத்துகள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டா. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
#44
விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உந்தப்பட்டு இடைவிடாது உற்சாகமாக ஓடிக்கொண்டே இருக்கும் நடுவர் சோழியன் அவர்களே..நவீன விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வேகத்தையும் உற்சாகத்தையும் கண்டு வியந்து வாய்தனைக் கையால் மூடியபடியே அதிர்ச்சியின் விளிம்பிற்கே வந்து நிற்கும் சண்முகி அக்கா அவர்களே..விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தின் வேகத்தையும் ஈடு கொடுக்க முடியாது சோம்பேறியாகி சோம்பி இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் சியாம் அவர்களே.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் தொழில்நுட்பத்தையும் புரிந்து கொள்ள சோம்பி தேம்பிக் கொண்டு இருக்கும் சோம்பேறிகளாக தங்களைத் தாங்களே உருவாக்கியவர்களே.. விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும் வம்பாக நினைப்பவர்களின் வீம்பை தகர்த்தெறியவெனவே உற்சாகமாக வீற்றிருக்கும் என் அணித்தலைவர் வசம்பு அவர்களே.. விஞ்ஞானத்தின் வளர்ச்சி தந்த வேகத்தால் வேகமாகவே கருத்துக்களை உற்சாகமாக தந்துகொண்டிருக்கும் சக தோழர்களே வணக்கம்...

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதற்குரிய சான்றுகளை நாங்கள் எமது அன்றாட வாழ்க்கையில் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். அதாவது இன்று விஞ்ஞானம் ஓங்கி வளர்ந்து அண்ட சராசரங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் மனிதன் சோம்பேறியாகியிருந்தால் சாத்தியமா? அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்ததாக அன்றைய மனிதர்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள். ஆனால் நாளைய சந்ததிக்காக இன்றே உற்சாகமாக வித்து இடும் அளவிற்கு இன்றைய மனிதர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் எது? விஞ்ஞானம் தொழில்நுட்பமும் தான். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் இன்று நானும் நீங்களும் பட்டிமன்றம் வைக்கவும் விவாதிக்கவும் கூட முடியாத சோம்பேறிகளாகி படுத்திருப்போம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தந்த உற்சாகத்தால் உற்சாகமாகி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்...

மனிதன் சோம்பியிருந்தால் எப்படி நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தோன்றும்? இல்லை.. அன்றை விஞ்ஞானம் தான் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் எவ்வாறு நவீன அதாவது இன்றைய விஞ்ஞானம் வானை முட்டுமளவிற்கு வளர்ந்து நிற்கும்? சோம்பேறிகளாயாக்யிருந்திருந்தால் மண்ணையல்லவா முட்டியிருக்கும் மானிடம்?

அதை விட உலகத்திலே எத்தனையோ எத்தனையோ சாதனைகளைப் புரிந்திருக்கின்றது விஞ்ஞானம். ஆதி காலவாசியாக அலைந்த நாங்கள் இன்று மாபெரும் மனித வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம் எதனால்? அதுவும் விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியினால் தான்...அன்று வேட்டையாடி உணவு பெறுவதை மட்டும் குறிக்கோளாக வாழ்ந்த மனிதன் இன்று எத்தனை சாதனைகள் புரிந்து இருக்கின்றான் என்றால் அதற்கு விஞ்ஞான வளர்ச்சியும் விஞ்ஞானம் ஊட்டிய உற்சாகம் தான் காரணம்......நாம் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை வரைக்கும் எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் பிறந்தவையே...அப்படி விஞ்ஞானம் செய்திருக்காதுவிட்டால் நாங்கள் இன்று பசி பட்டினியுடன் அலைந்திருப்போம். உதாரணமாக genetically modified foods (GMO) உற்பத்தியாவதால் தான் மனித தொகையின் அளவிற்குரிய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன...இல்லையேல் மனித சமுதாயமே அழிந்து இருக்கும். குறிப்பிட்ட மனித வளர்ச்சியைத்தான் பூமி தாங்க முடியும் (carrying capacity) விஞ்ஞானம் இருந்திருக்காhவிட்டால் அல்லது விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுக்காது விட்டால் எப்படி பூமி தாங்கும் சக்தியையும் மீறி மனித வளர்ச்சியை ஈடு கொடுக்கின்றது? எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகம் தான் மனிதனை தடைகளைத் தாண்டி உழைக்க வைக்கிறது....

<b>இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>

"...ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் <b>நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.."

அலைந்து திரிந்தா எப்படிங்க உற்சாகம் பிறக்கும்?...அலுப்புத்தானே பிறக்கும்...பிறகு வீட்டிற்கு வந்து யப்பா என கட்டிலில் விழத்தான் மனம் சொல்லும்..இதனால் செய்ய வேண்டியிருக்கும் மீத வேலைகளை கூட செய்ய முடியாத நிலை..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் பல வேலைகளை சில மணி நேரத்தில் உடல் அலுப்பின்றி உற்சாகமாகச் செய்ய கூடியதாக இருக்கிறது....

[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>

"..மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - <b>கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்..."

என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டிங்க...நடக்கப் போற எதிர்காலத்தை பேசிஇ இருக்கிற நிகழ்காலத்தை கவுக்கிற காதல் நடக்கிற கால கட்டத்திலை காலாற நடந்தா என்னங்க நிலமை? இந்தக் கால கட்டத்திலை கைகோர்ப்பு எதுவுமில்லாமல் கணனிலயும் நிஜமாக தூய்மையான காதலை வெளிப்படுத்தலாம்...அன்றை காலத்திலை கண்களால் பேசி காதலை வளர்த்தாங்க "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" அப்ப காதல் வளர்ந்ததுதானே அவங்களுக்குள்...கணனில காதலிச்சா மட்டும் இல்லையா என்ன?...
காலாற நடக்கிற காதல் உற்சாகம் தராது உளைச்சலைத் தான் தரும்....ஆனா விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்றபட்ட கணனியால மானிடர்கள் தப்புக்கள் நடக்காது தப்பிக்கிறார்கள்... அதனால் மன உளைச்சல் இன்றி உற்சாகமாக அன்றாட வாழ்க்கையில் ஈடுபடமுடிகிறது...

[b]
இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>

"..தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் <b>அந்த சோம்பேறிகளை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கி வைத்துக்கொள்ளவே பயன்படுகிறது...."

தொடக்கித்திலே சோம்பேறித்தனம் இருக்கிறது என ஒத்துக் கொண்டீர்கள் அப்படியானவர்களை விஞ்ஞானம் தான் சோம்பேறியாக்கணும் என்றில்லை...அவங்க சோம்பேறிங்க தான்...அப்படிப்பட்டவர்கள் எப்படி விஞ்ஞான வளர்ச்சியைப் உற்சாகமாகப் பார்ப்பாங்க? அவங்க எப்பவுமே சோம்பேறிங்க தாங்க...

[b] இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>

"வீதியில் <b>இளம்பெடியங்கள் பெட்டைகள் பின் சுற்றுவதும் - இளம்பெட்டைகள் பெடியங்கள் பின் சுற்றுவதும் - ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்காய் செயல்கள் புரிவதுவும் - உளத்துக்கு எவ்வளவு உற்சாகம் கொடுத்தது?"

இது தாங்க சோம்பேறிங்க செய்ற வேலை...சும்மா சுத்தி சுத்தி சும்மா இருக்கிறவங்களுக்கும் தலையிடி..சமூகத்திற்கும் தலையிடி...விஞ்ஞானத்தால் உற்சாகமானவங்க ரோட்டிலை அலைஞ்சு திரியாமல் வீட்டில் இருந்து மனதிற்கு பிடித்தமானவர்களுடன் பேசிக்கொண்டே பல வேலைகளை செய்து முடிக்கிறார்கள்....

[b] இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>

நீங்கள் எங்கள் அணியினரிடம் தலைவணங்கியே ஆகவேண்டும். சுருண்டு படுக்கும் மனிதர் கூட்டம் தான் அதிகம். <b>1 + 1 இற்கு கூட கணனியை எடுக்க வைப்பது எது? சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்லலாம். சரி அந்த சோம்பேறித்தனத்தை மேலும் ஊக்குவிப்பது எது?

கணணி இன்றி 1000000000000 வரும் கணக்குகளை எல்லாம் நீங்க உங்க 10 விரலால் எண்ணிடுவிங்களா? ஆனால விஞ்ஞானத்தின் வளர்ச்சியால அந்தப் பத்து விரலை வைத்தே நான் மேல் கூறி இலக்கங்களை உடைய கணக்குக்களை பார்த்திடலாம்....அப்படியில்லையேல் நீங்க இன்றும் பெட்டிகடைத்தான் வைத்து இருக்கு முடியும்...Multinational Corporation என்று எதுவுமே உருவாகியிருக்காது.....விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதால் தானே விஞ்ஞானமும் வளர்ந்து கொணடிருக்கிறது...


[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>

"....இருந்த இடத்தில் தனக்கு சாப்பாடு வரவேண்டும் என்று நினைக்கிற சோம்பேறித்தனம் நிறைந்த மனித சமூகத்தில் தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அவர்தம் அந்த ஆசைகளை கனவுகளை நிறைவேற்றுகிற ஒன்றாகவே பார்க்கப்படுகிறதுஇ பயன்படுத்துகிறது. மின்அடுப்பைக் கண்டுபிடித்தார்கள் - சமையலை இலகுவாக்க - மனித உழைப்பை வீணாக செலவழிக்காதிருக்க! ஆனால் குயளவ கழழன என்ன செய்கிறது? ரின்னுக்குள்ளும் பக்கற்றுகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட சாப்பாடுகள் <b>தனியே இருந்து படிக்கிறஇ பலமணிநேரம் வேலைசெய்கிற ஆட்களுக்கு சரி..."

இவர்கள் விஞ்ஞானத்தால் உருவாகிய உற்சாக உழைப்பாளிகள்....துரித உணவுசாலைகள் இருப்பதனால் தான் 24 மணி நேரமும் அடுப்பில் வெந்து சாகாமல் வேறு விடயங்களிலும் கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது..புதிய புதிய கண்டுபிடிப்புக்ளையும் உற்சாகமாக செய்ய முடிகிறது..அப்படி அடுப்படியில் madame currie வெந்திருந்தால் ரோடியே அக்ரிவ் பற்றி யாரு கண்டு பிடித்து இருப்பாங்க?...
இப்ப ஒத்துக் கொள்றிங்க தானே விஞ்ஞானம் சோம்பேறியாக்காமல் உற்சாக உழைப்பாளிகளையும் படிப்பவர்களையும் மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது என்பதை.....

[b]இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்: </b>

"எதிரணி நண்பர் குழைக்காட்டன் உரு விடயத்தை மறந்துவிட்டார். விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறு, விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்+தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள்."

எப்படிங்க நீங்க விஞ்ஞானத்தின் பயனாளர்களையும் படைப்பாளிகளையும் பிரிக்க முடியும்? விஞ்ஞானத்தின் பயனாளிகள் தான் விஞ்ஞானப் படைப்பாளிகளும்...அன்று ரைட் சகோதரர்கள் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் தான் விமானத்தை உருவாக்கினார்கள்...குளக்காட்டான் சொல்வது போல உங்களை மாதிரி சோம்பேறித்தனமாக இருந்திருந்தால் அவர்கள் ஒரு முறையுடன் தங்கள் கண்டுபிடிப்பிற்கான முயற்சியைக் கைவிட்டு இருப்பார்கள்...ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தார்கள்...ஒவ்வொரு முறை விழும்போது துணிந்து எழுந்தார்கள் விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் அதாவது விஞ்ஞானத்திற்கே சவால் விடும் படி பல முறை முயற்சி செய்து தங்கள் குறிக்கோளை அடைந்தார்கள்...அன்று அவர்கள் சோம்பியிருந்தால இன்று உங்களுக்கு சொகுதுப் பயணம் கிடைத்திருக்குமா?....விஞ்ஞானத்தின் உற்சாகத்தால் மனிதன் மேலும் மேலும் உற்சாகமே அடைகிறான் சோம்பல் அடையவில்லை... நீங்கள் குறிப்பிட்டது போலவே விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் "அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள்"


எனவே நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறன என விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உற்சாகம் அடைந்து விவாத அரங்கை ஓடியோடி உற்சாகமாக கண்காணித்துக் கொண்டு இருக்கும் சோழியன் அவர்களுக்கும்... அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாது இருக்கும் சண்முகி அக்கா அவர்களுக்கும்... உற்சாகமேயின்றி சோகமே உருவாக விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் உருவாகிய சோம்பபேறிகள் தாங்கள் என அடம்பிடித்துக் கொண்டிருக்கும் எதிர் அணியினருக்கும்.. விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் தொழில்நுட்பத்தின் வேகத்தினாலும் உற்சாகமா வென்றிடத் துடிக்கும் என் கட்சியினருக்கும் நான் ஆணித்தரமாக கூறிக்கொண்டு பட்டிமன்றத்தை ஒருங்கிணைத்த "பபா" தூயாவிற்கும் மற்றும் அனைவருக்கும் நன்றிகளைக் கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்.
" "
" "

#45
சோறூட்ட அம்மா காட்டிய நிலாவில்.. விஞ்ஞானமின்றேல் மனிதன் காலடி பதித்திருக்க முடியுமா? மனிதனின் உற்சாக வளர்ச்சிக்கு சான்றே விஞ்ஞான வளர்ச்சிதானே.. என்று ஆரம்பிக்கிறார் தனது வாதத்தை மழலை அவர்கள்.
ஆதிகாலத்திலே குழுக்களாக விலங்குகளாக அலைந்த மனிதனை உலகின் சிறந்த உயிரினமாக உயர்த்தியிருப்பதே விஞ்ஞானம்தானே? நிதமும் புதுப்புது விஞ்ஞான தொழில்நுட்ப சாதனைகள் உருவாகிறதென்றால்.. மனிதன் உற்சாகமாக உள்ளான் என்றுதானே அர்த்தம்?
Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:

"...ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.."

அலைந்து திரிந்தா எப்படிங்க உற்சாகம் பிறக்கும்?...அலுப்புத்தானே பிறக்கும்...பிறகு வீட்டிற்கு வந்து யப்பா என கட்டிலில் விழத்தான் மனம் சொல்லும்..இதனால் செய்ய வேண்டியிருக்கும் மீத வேலைகளை கூட செய்ய முடியாத நிலை..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் பல வேலைகளை சில மணி நேரத்தில் உடல் அலுப்பின்றி உற்சாகமாகச் செய்ய கூடியதாக இருக்கிறது....

இந்த விசயம் மழலைகளுக்கெல்லாம் புரியாது.. இளைஞன்(ர்)களுக்குதான் புரியும்.. முன்னும் பின்னும் அலையோ அலையென அலைந்து திரிந்து.. ஒரு புன்முறுவல் கிடைத்தால் போதுமே.. அலுப்பெல்லாம் பறந்துபோயிடும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி மழலை அவர்களே!! அடுத்து, நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறது என்ற அணியிலிருந்து கருத்துகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.
.
#46
பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்து நடாத்தி கொண்டிருக்கும் தூயாவிற்கும் நடுவர்களாக பணியாற்றும் சோழியன் அண்ணா, சண்முகி அக்கா ஆகியாருக்கும் பட்டிமன்ற நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வணக்கம் வணக்கம் வணக்கம்.

எனக்கு பட்டிமன்றத்தில் பேசி பழக்கமில்லை. தூயா இதை ஆரம்பித்தவுடன் ஒரு ஆர்வகோளாறில் இணைந்துவிட்டேன். ஆனால் பின்பு மற்றவர்கள் எழுதிய கருத்துக்களை படித்த பின்பு இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கின்றார்களே நான் எப்படி எழுத போகின்றேனோ என்று தயங்கி நின்றேன். அது தவிர தேர்தல் உள்ளிட்ட சில வேலைகளை காரணாமாக எனது வாதத்தை வைப்பதில் தாமதமேற்பட்டது. அப்போது சோழியன் அண்ணா என்னை உற்சாகப்படுத்தி இயன்றவரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அவ்ருடைய அழைப்பையும் சியாம், இளைஞன், மழலை உட்பட மற்றய நண்பர்களின் அழைப்பையும் ஏற்று இதுவரை என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பை கேட்டுக்கொண்டு எனது வாதத்தை தொடங்குகின்றேன்.

முதலில் பட்டிமன்ற தலைப்பை பற்றி ஒரு விளக்கம். அது <b>"நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா"</b> என்பதே. இந்த தலைப்பில் எதிரணியில் பேசும் பலரும் நவீன விஞ்ஞானதின் பயன்களை கூறுகின்றார்களே அன்றி அது எப்படி மனிதனை உற்சாகப்படுக்கின்றது என்பதை கூறாமல் தவிர்க்கின்றார்கள். பயன்களை மீண்டும் மீண்டும் அழுத்தி கூறி <b>நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் மனிதனுக்கு நன்மையா தீமையா</b> என்று தலைப்பை திசைதிருப்ப பார்க்கின்றார்கள். இதனை நடுவர் அவர்கள் கவனித்து அவர்கள் குறிப்பிட்ட பயன்களை தவிர்த்து உற்சாகப்படுத்துகின்றது என்று கூறிய (கூறி இருந்தால்) கருத்துக்களை மட்டுமே கவனித்தில் எடுக்கவேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.

அடுத்து இந்த நவீன விஞ்ஞானம் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகின்றது என்பது பற்றி பேசுவோம். இந்த நவீன விஞ்ஞான வாரிசுகளில் ஒன்றான தொலைக்காட்சி மனிதனை எப்படி எப்படியெல்லாம் மனிதனை சோம்பேறியாக்குகின்றது. இந்த தொலைக்காட்சியின் சின்னத்திரை தொடர்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மனிதர்களை அவற்றில் முன்னால் கட்டி போடுவதை கண் கூடாக பார்த்திருப்பீர்கள். அவை எப்படி மனிதனை சோம்பேறியாக்குகின்றது என்பதை பாருங்கள் .....

<i>> தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்ப்பதால் கண்கள், உடல் என்பன சோர்வடைவதுடன் அவை மூளையை களைப்படைய செய்து சோம்பலை உருவாக்குகின்றது. இது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதனை நீங்களே அனுபவித்து உணர்ந்திருப்பீர்கள். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்மவரை பெரிதளவு கட்டி போடும் சின்னத்திரை தொடர்களை எடுத்து பாருங்கள், அவற்றை பார்த்து கோபம், பழிவாங்கும் உணர்ச்சி, ஏமாற்றம், கவலை போன்ற உணர்வுகள் மனதில் உருவாகி மனிதனை சோர்வடைய செய்கின்றதே தவிர எவ்விதத்திலும் உற்சாகப்படுத்துவதில்லை, மனமும் உடலும் சோர்வடையும் மனிதன் சோம்பேறியாகாமல் என்ன செய்வான்?</i>

<i>> இந்த நிகழ்சிகளை பார்பதற்காக தொலைக்காட்சி பெட்டிக்கு முன் முடங்கி கிடப்பதால் அயலவர், நண்பர்கள் உள்ளிட்ட ஏனைய மனிதர்களுடன் பேசும் நேரம் குறைகின்றது, அதனால் மனிதர்களுடனான புரிந்துணர்வு, நட்பு, கருத்து பகிர்வு என்பது குறைகின்றது. இதனால் பார்ப்பவர்கள் எல்லாம் புதியவர்களாகவும் விரோதிகளாவும் தோற்றமளித்து தன்னம்பிக்கை குறைகின்றது, அது குறைந்தால் மனிதன் சோம்பேறியாவான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.</i>

இது தவிர இந்த இடியற் பாக்ஸ் என்று அழைக்கப்படும் தொலைக்காட்சியுடன் முடங்குவதால் வெளியே சென்று உடல்பயிற்சி செய்வது, விளையாட செல்வது போன்ற உற்சாகமூட்டும் செயல்பாடுகள் குறைந்து மனிதன் சோம்பேறியாகின்றான் என்று அடுக்கி கொண்டே போகலாம்.

தொடர்ந்து வருவது நவீன விஞ்ஞானதின் குட்டி பிசாசான கணணியும் இணையமும். இதை குறித்து பலரும் பேசியிருக்கின்றார்கள் என்பதால் சுருக்கமாக இரண்டும் சம்பவங்களை மட்டும் சொல்கின்றேன்.

<i>> பல்கலைகழகங்களிலும் பாடசாலைகளிலும் ஏதாவது ஒரு தலைப்பை தந்து அது குறித்து அலசி ஒரு கட்டுரையை எழுத சொல்வார்கள். அதன் நோக்கம் என்ன விடயமாக இருந்தாலும் அது குறித்து தெரிந்தவர்களிடம் பேசி புத்தகங்களில் அலசி ஆராய்ந்து கட்டுரையை எழுத கூடிய தன்மையை உருவாக்கி அதன்மூலம் உலகம் குறித்து ஒரு விசாலமான பார்வையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கி மனிதனை உற்சாகப்படுத்துவதுதான். ஆனால் இப்போது என்ன நடக்கின்றது? கட்டுரை எழுத சொல்லி கேட்டவுடன் இணையத்தில் சென்று கூகிள் போன்ற ஒரு தேடல் பொறியில் அதை தேடியவுடன் நேரடியாக பதில் கிடைக்கின்றது அந்த பிறர் உழைப்புகளை அனைத்தைய்யும் கலந்து கட்டுரையை எழுதி புள்ளிகளும் பெற்று விடுகின்றோம். இதில் அந்த கட்டுரையை எழுத சொன்ன நோக்கம் அனைத்துமே இல்லாமபோய் பிறர் உழைப்பை உபயோகிக்கும் சோம்பேறிதனத்தையே நவீன விஞ்ஞான இணையம் மூலம் பெறுகின்றோம்.</i>

<i>> இப்போது நவீன விஞ்ஞான வசதிகளுடன் கூடிய ஒரு மென்பொருள் தொழிற்சாலையில் கணணிக்கு முன்னால் இருந்து செய்யும் வேலைக்கு ஒருவர் போகின்றார். அவர் வீட்டுக்கு வரும்போதே களைப்பாக (டயர்டாக இருக்கு, டெட் லைன் முடியபோகுது, தலை வலிக்குது இன்ன பிற புலம்பல்கள்) வருகின்றார். இப்படி அவர் களைப்படைந்து சோம்பேறி தனத்துடன் வர காரணமேன்ன சிந்தித்து பாருங்கள். தாயகத்தில் வயல்வெளிகளிலும் தோட்டங்களிலும் காலையிலிருந்து மாலைவரை வேலை செய்துவிட்டு வருபவர்கள் உடலை வருத்தி வேலை செய்துவிட்டு வந்தாலும் உற்சாகமாக இருக்கின்றார்கள். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே புரியும் நவீன விஞ்ஞானம் மனிதனை எப்படி சோம்பேறியாக்குகின்றது என்பது.</i>

இனி சோம்பேறியாக்குகின்றது என்பதற்கான இறுதி கருத்தை பார்ப்போம். இந்த நவீன விஞ்ஞான தொழிற்நுட்பம் காரணமாக சூழல் மாசடைவதும் பூமியின் வெப்பம் அதிகரிப்பதும் ஓசோன் ஓட்டை விழுவது உங்களுக்கு தெரிந்தகதை, இது தீமைகளை தானே இவற்றால் மனிதன் எப்படி சோம்பேறியாகின்றான் என்று கேட்கிறீர்களா அதுதான் உங்களுக்கு தெரியாத கதை, இந்த சூழல் மாசாக்கம் வளிமண்டல மாசாக்கம் காரணமாக வளியில் ஒட்சிசன் அளவு குறைகின்றது. சுற்று சூழலில் ஒட்சிசன் அழுத்தம் குறைவதனால் நாம் உள்ளேடுக்கும் ஒட்சிசன் அளவும் இரத்ததில் இணையும் மற்றும் மூளைக்கு செல்லும் ஒட்சிசனும் குறைகின்றது, மூளைக்கு செல்லும் ஒட்சிசன் குறைவதால் மூளை சோர்வடைந்து சோம்பல் உருவாகி மனிதன் சோம்பேறியாகின்றான்.

இதனுடன் எனது கருத்துக்கள் நிறைவு பெறுகின்றது இனி மழலையின் கருத்துகளுக்கு பதில் கருத்து எழுதலாம் என நினைக்கின்றேன்.

<span style='font-size:22pt;line-height:100%'>மிகுதியை தொடர்ந்து எழுத முடியாமல் வெளியே செல்லவேண்டியிருக்கின்றது. ஏற்கனவே காலதாமதமாகிவிட்டதால் இவ்வளவையும் இணைத்துள்ளேன். மழலையின் வாதத்திற்குரிய பதிலை இன்றிரவு எழுதி எனது வாதத்தை நிறைவு செய்வேன் கொஞ்சம் காத்திருங்கள் நன்றி</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#47
காத்திருக்கிறோம்..
.
#48
காத்திருந்த அனைவருக்கும் நன்றிகள்.

Quote:இன்று விஞ்ஞானம் ஓங்கி வளர்ந்து அண்ட சராசரங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறது என்றால் மனிதன் சோம்பேறியாகியிருந்தால் சாத்தியமா? அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் மழலை நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது மனிதன் உற்சாகமாக இருந்ததால் தான் விஞ்ஞான வளர்ச்சி சாத்தியமாயிற்று என்று கூறுகின்றாறே தவிர நவீன விஞ்ஞானம் எப்படி மனிதனை உற்சாகப்படுகின்றது என்பதை கூறவில்லை, மனிதன் உற்சாகமாக இருந்தான் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொண்டாலும் கூட அந்த உற்சாகத்துக்கு வேறு ஏதும் காரணம் இருந்திருக்கலாமல்லவா? ஆக நவீன விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகின்றது என்பதை அது எப்படி சாத்தியம் என்று கூறாதாமையின்னால் இந்த கருத்தை கவனத்தில் எழுக்க தேவையில்லை,

Quote:அடுத்ததாக அன்றைய மனிதர்கள் அடிப்படைத் தேவைகளை சந்திப்பதற்கே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள். ஆனால் நாளைய சந்ததிக்காக இன்றே உற்சாகமாக வித்து இடும் அளவிற்கு இன்றைய மனிதர்கள் வளர்ந்து விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் எது? விஞ்ஞானம் தொழில்நுட்பமும் தான். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் இன்று நானும் நீங்களும் பட்டிமன்றம் வைக்கவும் விவாதிக்கவும் கூட முடியாத சோம்பேறிகளாகி படுத்திருப்போம். ஆனால் விஞ்ஞான வளர்ச்சியும் தொழில்நுட்பமும் தந்த உற்சாகத்தால் உற்சாகமாகி விவாதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்

இதில் மனிதர்கள் அடிப்படை தேவைகளை சந்திக்கவே ஆயுள் முழுக்க பாடுபட்டார்கள் என்றால் என்ன அர்த்தம், அப்போது உற்சாகமாக செயல்ப்பட்டார்கள் என்று தன்னையும் அறியாமல் கூறிவிட்டார் மழலை அவருக்கு எனது நன்றிகள், அடுத்து பட்டிமன்றம் வைப்பதற்கு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தேவையில்லை இவற்றின் துணையின்றி தானே போர் சூழலில் யாழில் பட்டிமன்றங்கள் நடந்தன? ஆக இந்த கருத்த்தையும் கவனத்தில் எடுக்க தேவையில்லை,

Quote:மனிதன் சோம்பியிருந்தால் எப்படி நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தோன்றும்? இல்லை.. அன்றை விஞ்ஞானம் தான் மனிதனை சோம்பேறியாக்கியிருந்தால் எவ்வாறு நவீன அதாவது இன்றைய விஞ்ஞானம் வானை முட்டுமளவிற்கு வளர்ந்து நிற்கும்? சோம்பேறிகளாயாக்யிருந்திருந்தால் மண்ணையல்லவா முட்டியிருக்கும் மானிடம்?

மாமல்லபுரம் மாமல்லபுரம் என்று இந்தியாவில் ஒரு இடம் இருக்கின்றது, அங்குள்ள சிற்பங்களை போய் பாருங்கள், அந்த பல்லவன் மன்னன் கட்டிய கோயில்களை போய் பாருங்கள், ஏன் அருகில் எகிப்தில் உள்ள பிரமிட்டுக்கள் இவையேல்லாம் நவீன விஞ்ஞானமும் தொழிற்நுட்பமும் இல்லாத போது கட்டப்பட்டவை, ஆக நவீன விஞ்ஞானம் இருப்பதால்தான் உற்சாகம் பெற்றோம் வானை முட்டுமளவுக்கு வளர்ந்தோம் என்ற உங்கள் கருத்து அடிபட்டு போகின்றது,

Quote:அதை விட உலகத்திலே எத்தனையோ எத்தனையோ சாதனைகளைப் புரிந்திருக்கின்றது விஞ்ஞானம். ஆதி காலவாசியாக அலைந்த நாங்கள் இன்று மாபெரும் மனித வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம் எதனால்? அதுவும் விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியினால் தான்...அன்று வேட்டையாடி உணவு பெறுவதை மட்டும் குறிக்கோளாக வாழ்ந்த மனிதன் இன்று எத்தனை சாதனைகள் புரிந்து இருக்கின்றான் என்றால் அதற்கு விஞ்ஞான வளர்ச்சியும் விஞ்ஞானம் ஊட்டிய உற்சாகம் தான் காரணம்......நாம் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை வரைக்கும் எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் பிறந்தவையே...அப்படி விஞ்ஞானம் செய்திருக்காதுவிட்டால் நாங்கள் இன்று பசி பட்டினியுடன் அலைந்திருப்போம். உதாரணமாக genetically modified foods (GMO) உற்பத்தியாவதால் தான் மனித தொகையின் அளவிற்குரிய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன...இல்லையேல் மனித சமுதாயமே அழிந்து இருக்கும். குறிப்பிட்ட மனித வளர்ச்சியைத்தான் பூமி தாங்க முடியும் (carrying capacity) விஞ்ஞானம் இருந்திருக்காhவிட்டால் அல்லது விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுக்காது விட்டால் எப்படி பூமி தாங்கும் சக்தியையும் மீறி மனித வளர்ச்சியை ஈடு கொடுக்கின்றது? எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகம் தான் மனிதனை தடைகளைத் தாண்டி உழைக்க வைக்கிறது

மீண்டும் நவீன விஞ்ஞானம் உற்சாகத்தை ஊட்டியது என்று சொல்கின்றீர்களே தவிர அது எப்படி ஊட்டியது என்பதை குறிப்பிட தவறியதால் கருத்து பயனற்று போகின்றது, அது தவிர உண்ணும் உடைக்கும் உணவிற்கும் நவீன விஞ்ஞானம் தேவையில்லை, அண்மைக்கால நவீன விஞ்ஞானம் வரும்வரை மனிதன் உணவும் உடையும் இன்றியா இருந்தான்? இந்த உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் உணவளிக்க கூடியதாக தான் பூமி இருக்கின்றது, நவீன விஞ்ஞானத்தால் சோர்வடைந்த மக்கள் உணவு உற்பத்தியை மேற்கொள்ளாமையினால் தான் இந்த மரபணுமாற்றங்கள் மூலம் உணவு உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, இலங்கை முனபு நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இல்லாத போதே உணவில் தன்னிறைவு பெற்ற நாடாக இருந்துள்ளது இப்போது தான் உணவு பற்றாகக்குறை, ஏன் என்று மீண்டும் சொல்லதேவையில்லை என்று நினைக்கின்றேன்.

Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:

"...ஒரு பொருள் வாங்கவேண்டுமென்றால் நகரெல்லாம் நடந்து அலைந்து திரிந்து ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியாக நாம் தேடிய பொருளை வாங்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.."

அலைந்து திரிந்தா எப்படிங்க உற்சாகம் பிறக்கும்?...அலுப்புத்தானே பிறக்கும்...பிறகு வீட்டிற்கு வந்து யப்பா என கட்டிலில் விழத்தான் மனம் சொல்லும்..இதனால் செய்ய வேண்டியிருக்கும் மீத வேலைகளை கூட செய்ய முடியாத நிலை..ஆனால் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் பல வேலைகளை சில மணி நேரத்தில் உடல் அலுப்பின்றி உற்சாகமாகச் செய்ய கூடியதாக இருக்கிறது....

உங்களுக்கு தாகமாக இருக்கின்றது, உடனே சமயலறைக்கு சென்று தண்ணிரை எடுத்து குடிக்கின்றீர்கள், மற்றது அப்படி செய்யாமல் அம்மாவை அழைத்து தண்ணீர்க் கொண்டுவரும் படி கேட்டு குடிக்கின்றீர்கள் இதில் எது சோம்பேறித்தனம் உற்சாகமின்மை? சமயலறைக்கு சென்றதால் அலுப்படைந்தேன் என்று சொல்வீர்களா?

Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:

"..மனித உணர்வுகளை நேருக்கு நேர் வெளிப்படுத்தி - கைகோர்த்து - காலாற நடந்து - கடக்கப்போகும் எதிர்காலத்தைக் கதைத்து - கண்ணெல்லாம் ஒளிபாய - காதில் தேனினிமையூற - மனதெல்லாம் சுகம்தர - வாழ்வதற்கான உற்சாகத்தைப் பெறுகின்ற காதலர்களையும் சந்தித்துப் பாருங்கள் உண்மை விளங்கும்..."

என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டிங்க...நடக்கப் போற எதிர்காலத்தை பேசிஇ இருக்கிற நிகழ்காலத்தை கவுக்கிற காதல் நடக்கிற கால கட்டத்திலை காலாற நடந்தா என்னங்க நிலமை? இந்தக் கால கட்டத்திலை கைகோர்ப்பு எதுவுமில்லாமல் கணனிலயும் நிஜமாக தூய்மையான காதலை வெளிப்படுத்தலாம்...அன்றை காலத்திலை கண்களால் பேசி காதலை வளர்த்தாங்க "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்" அப்ப காதல் வளர்ந்ததுதானே அவங்களுக்குள்...கணனில காதலிச்சா மட்டும் இல்லையா என்ன?...
காலாற நடக்கிற காதல் உற்சாகம் தராது உளைச்சலைத் தான் தரும்....ஆனா விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்றபட்ட கணனியால மானிடர்கள் தப்புக்கள் நடக்காது தப்பிக்கிறார்கள்... அதனால் மன உளைச்சல் இன்றி உற்சாகமாக அன்றாட வாழ்க்கையில் ஈடுபடமுடிகிறது...

சவால்களை வாழ்கையில் புதிய மனிதர்களை நேருக்கு நேர் சந்திக்க விரும்பாமல் தன்னம்பிக்கையின்றி கணணியில் காதலிப்பது சோம்பேறித்தனத்தின் முழு வடிவம், அப்படி செய்வது நனைந்து விடுவோமே என்று மழைக்கோட்டு போட்டுக்கொண்டு குளிப்பது போல மனிதர்களை சந்திக்க விருப்பமில்லை என்றால் காதல் ஏன்? இந்த இணைய காதலில் தான் எத்தனை ஏமாற்றங்கள் தன்னம்பிக்கை குறைவு சோர்வுகள் சம்பவங்களை குறிப்பிட்டு எழுத தேவையில்லை என்று நினைக்கின்றேன்,

Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:

"..தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அந்த சோம்பேறிகளை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கி வைத்துக்கொள்ளவே பயன்படுகிறது...."

தொடக்கித்திலே சோம்பேறித்தனம் இருக்கிறது என ஒத்துக் கொண்டீர்கள் அப்படியானவர்களை விஞ்ஞானம் தான் சோம்பேறியாக்கணும் என்றில்லை...அவங்க சோம்பேறிங்க தான்...அப்படிப்பட்டவர்கள் எப்படி விஞ்ஞான வளர்ச்சியைப் உற்சாகமாகப் பார்ப்பாங்க? அவங்க எப்பவுமே சோம்பேறிங்க தாங்க...

மழலை அந்த நவீன விஞ்ஞானம் உருவாக்கிய சோம்பேறிகள் அது வளர வளர தாமும் வளர்ச்சியடைகின்றார்கள் சோம்பேறிகளாக ,,, அதைத்தான் இளைஞன் குறிப்பிட்டிருக்கின்றார்,

Quote:இளைஞன் அண்ணா குறிப்பிட்டிருந்தார்:

நீங்கள் எங்கள் அணியினரிடம் தலைவணங்கியே ஆகவேண்டும். சுருண்டு படுக்கும் மனிதர் கூட்டம் தான் அதிகம். 1 + 1 இற்கு கூட கணனியை எடுக்க வைப்பது எது? சோம்பேறித்தனம் என்று நீங்கள் சொல்லலாம். சரி அந்த சோம்பேறித்தனத்தை மேலும் ஊக்குவிப்பது எது?

கணணி இன்றி 1000000000000 வரும் கணக்குகளை எல்லாம் நீங்க உங்க 10 விரலால் எண்ணிடுவிங்களா? ஆனால விஞ்ஞானத்தின் வளர்ச்சியால அந்தப் பத்து விரலை வைத்தே நான் மேல் கூறி இலக்கங்களை உடைய கணக்குக்களை பார்த்திடலாம்....அப்படியில்லையேல் நீங்க இன்றும் பெட்டிகடைத்தான் வைத்து இருக்கு முடியும்...Multinational Corporation என்று எதுவுமே உருவாகியிருக்காது.....விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதால் தானே விஞ்ஞானமும் வளர்ந்து கொணடிருக்கிறது...

பெரிய கணக்கு பார்க்க கணணியை உபயோக்கிக்கலாம் ஆனான் சின்ன கணக்கு பார்க்க கணணி ஏன்? யாழில் படித்து வந்த சிறுவனிடம் இரண்டு சிறிய இலக்கங்களை கூட்டினால் என்ன வரும் என்று கேளுங்கள் உடன் பதில் வரும், இதுவே இங்கு படித்த சிறுவனுக்கு கால்குலேட்டர் தேவை, இதுவே நவீன விஞ்ஞானம் உருவாக்கிய சோம்பேறித்தனம்.

இவ்வாறாக மழலையின் அனைத்து கருத்துகளுக்கும் நான்பதில் கூறிக்கொண்டே போகலாம் நேரம் கருதி இத்துடன் பதில் கருத்துக்களை முடித்து கொள்கின்றேன். பட்டிமன்றத்தில் என்னால் ஏற்பட்ட தாமதத்திற்கு மீண்டும் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை சில நல்ல கருத்துக்களை சுட்டிகாட்டிய பெயர் குறிப்பிட முடியாத கருத்துகள நண்பர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கின்றேன், இறுதியாக நடுவர்கள் இங்கு இருதரப்பிலும் வைக்கப்பட்ட வாதங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் அடிப்படையில் தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுகொண்டு விடை பெறுகின்றேன்,

நன்றி வணக்கம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#49
Quote:அது தவிர தேர்தல் உள்ளிட்ட சில வேலைகளை காரணாமாக எனது வாதத்தை வைப்பதில் தாமதமேற்பட்டது. அப்போது சோழியன் அண்ணா என்னை உற்சாகப்படுத்தி இயன்றவரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அவ்ருடைய அழைப்பையும் சியாம், இளைஞன், மழலை உட்பட மற்றய நண்பர்களின் அழைப்பையும் ஏற்று இதுவரை என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பை கேட்டுக்கொண்டு எனது வாதத்தை தொடங்குகின்றேன்.
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> உற்சாகமாக வேறு விடயங்களையும் கவனித்துக்கொண்டே தனது வாதத்தை முன்வைத்திருக்கிறார் மதன் அவர்கள். வேலைப்பளுக்களிடையேயும் பட்டிமன்றம் தொடர ஒத்துழைத்ததற்கு நன்றி கூறிக்கொண்டு அவரது கருத்துகளைப் பார்ப்போம்.
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாக்குகிறதா? உற்சாகப்படுத்துகிறதா? என பட்டிமன்றத்தை நடாத்த வெளிக்கிட்டால்.. எதிரணிகளே! நீங்கள் என்ன நன்மை தீமைகளைப்பற்றி ஆராய்ந்து தலைப்பைத் திசை திருப்புகிறீர்கள்? என்று அதிரடியாகக் கேட்கிறார் மதன் அவர்கள்.
ஒருவன் மரத்தடியில் களைப்படைந்து தூங்குகிறானா அல்லது களிப்படைந்து தூங்குகிறானா எனப் பார்க்கவிட்டால்.. அவன் நல்லவனா கெட்டவனா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்களே.. இது தேவையற்றது என்று சொல்கிறார் மதன் அவர்கள்.
'சின்னத்திரை' மனிதர்களைக் கட்டிப்போடுகிறது.. எப்படி? அதனால் கட்டுண்டவர்களால் சமையலில்லை.. சாப்பாடில்லை.. ஆகையால் வாயும் வயிறும் கட்டப்பட்ட நிலை.. இது யாருக்கு தெரிகிறதோ இல்லையோ.. மதனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது..!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Quote:இந்த நிகழ்சிகளை பார்பதற்காக தொலைக்காட்சி பெட்டிக்கு முன் முடங்கி கிடப்பதால் அயலவர், நண்பர்கள் உள்ளிட்ட ஏனைய மனிதர்களுடன் பேசும் நேரம் குறைகின்றது, அதனால் மனிதர்களுடனான புரிந்துணர்வு, நட்பு, கருத்து பகிர்வு என்பது குறைகின்றது. இதனால் பார்ப்பவர்கள் எல்லாம் புதியவர்களாகவும் விரோதிகளாவும் தோற்றமளித்து தன்னம்பிக்கை குறைகின்றது, அது குறைந்தால் மனிதன் சோம்பேறியாவான் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
இது மதனின் அனுபவம்.. எனது அனுபவம் என்னவென்றால்.. இப்போதெல்லாம் நகை, புடவை கதைகளெல்லாம் ஓடி விலகி.. சித்தி என்ன செய்யப் போகிறா.. செல்வியை ஆண்டவர் அப்படி ஏமாத்தியிருக்கவேண்டாம்.. போன்ற கதைகளே பெருகி வருவதுபோலத் தோன்றுகிறது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அடுத்து.. பாடசாலையிலே பல்கலைக் கழகத்திலோ ஒரு விடயத்தை எழுதச் சொன்னால்.. உடனே கணனியிலே கூகிள் போன்ற தேடற்பொறிமூலம் மாணவர்கள் சுலபமாக எழுதி சம்பந்தப்பட்டவர்களிடம் சமர்ப்பிக்கிறார்கள்.. 'கூகிள்' தேடலால்.. ஒரு மாணவனது சுயதேடல் குறைந்துவிட்டதே.. தேடலில்லாத மனிதச் சோம்பேறியாகிவிட்டானே என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் மதன் அவர்கள்.
அடுத்து விஞ்ஞான ரீதியாகவே ஒரு கருத்தைக் கூறுகிறார்.. வளியிலுள்ள ஒட்சிசன் குறைவதால்.. மனிதன் சோம்பேறியாகிறான் என்பதே அது.
ஆக, தனது வாதத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் கருத்துகளைத் தந்த மதன் அவர்களுக்கு நன்றி கூறி.. தொடர்ந்து கருத்து கூற மதுரன் அவர்களை வரவேற்கிறோம். நன்றி.
.
#50
அனைத்து கள உறவுகளுக்கும் எனது அன்பு வனக்கங்கள்!

இந்த பட்டிமன்றத்தில் இது எனது இரண்டாவது வாதம். முடலாவது வாதத்தில் நிகள்ந்த தவறிற்கு மீண்டும் கள உறவுகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு.நான் எனதுகருத்தை இங்கு கூறிட அனுமதி அளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைக் கூறிக்கொண்டு எனது வாதத்தினை முன் வைக்கின்றேன்.

நடுவரவர்களே நண்பன் மதன் தலைப்பினையே தனது கருத்திற்கு ஏற்றால் போல் திசைதுருப்பிட எண்ணுகின்றார் போல உள்ளது. (நவீன தொளில் நுட்பம் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா இல்லை சோம்போறி ஆக்குகின்றதா?) என்பதுதான் தலைப்பும் கேள்வியும். சுறுசுறுப்பு ஆக்குகின்றது என்று கூறும்பொழுது அது எவ்வாறு மனிதனை சுறுசுறுப்பு ஆக்குகின்றது என்பதனை விரிவாக சொல்லவேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு. அப்படி விரிவாக சொல்லுகின்றவேளையில் அதன் நன்மை தீமைகளையும் விவாதிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம். உதாரணத்திற்கு கணனியை எடுத்துக் கொள்வோமே, கணனி மனிதனின் செயல்பாடுகளிற்கு ஊக்கபடுத்துகின்றது அதனால் மனிதன் சுறுசுறுப்பு அடைகின்றான் என்று நாம் கூறினால். எதிர்த்தரப்பினர் எவ்வாறு கணனி மனிதனை ஊக்கப்படுத்துகின்றது என்னும் கேள்வியினை எழுப்புகின்ற நேரம் நாம் அதன் பயன்பாடுகள் பற்றி கூறும் பொழுது அங்கே (நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் மனிதனுக்கு நன்மையா தீமையா என்னும் தலைப்பிற்கு உட்பட்டு கிளைவாதமாக வாதம் விரிந்து செல்கின்றது. எனவே இப்போக்கினை நடுவரவர்கள் ஏற்றுக்கொண்டு எமதணியினரின் வாத ஞாயத்தினை புரிந்து கொள்ளல் வேண்டுமென நடுவரவர்களை கேட்டுக் கொண்டு.எதிர்த்தரப்பினரின் அடுத்த குற்றச்சாட்டிற்கு செல்கின்றேன்.

> நடுவரவர்களே எதிரணியினர் தொலைக்காட்சியில் சின்னத்திரைகளையும் பயனற்ற விடயங்களையும் தான் பார்ப்பார்கள் போலும். ஏன் செய்திகள், விபரணங்கள்,ஆய்வுக் கண்ணோட்டங்கள் இப்படி இன்னும் பல நம் வாழ்க்கைக்கு தேவைபடக்கூடிய ந்ல்லவை தொலைக்காட்சியில் இல்லையா? அப்படி நல்ல விடயங்களை மனிதன் பார்ப்பதற்கு, நாவீன தொழில் நுட்பங்கள் சுறுசுருப்பாக மனிதனை மாற்றி அவர்களின் செயல்பாடுகளையும் நேரத்தினையும் மிச்சப்படுத்துகின்றது. இன்று பல புலம்பெயர் மக்கள் தமது நாட்டிற்கு போக ஆவலினைத்தூண்டியதில் தொலைக்காட்சியின் பங்கும் சிறியளவிலேனும் உண்டல்லவா? இதை மறுக்க முடியுமா? எனவே இங்கேயும் எதிர்த்தரப்பினரின் வாதம் நிலைக்க முடியவில்லை.

> கணனி ஆற்றினிற்கும் அளப்பரிய சேவையினை யாரும் பாராட்டாமலோ இல்லை சுறுசுருப்பு அடையாமலோ இருக்க முடியாது. சிந்தியுங்கள் கணனி எவரையும் சோம்போறிகளாக்கவில்லை. மாறாக மனிதனை சுறுசுறுப்படய வைப்பதோடு நேரத்தையும் விரயமாக்குகின்றது. காலம் பொன் போன்றது என்பார்கள். அந்தவகையில் ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கக் கூடிய பொருளை இங்கே எனது வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடிகின்றது. இதனால் ஈழத்திற்கு சென்றுவரும் அனாவசிய போக்குவரத்து செலவு, நேர மிகுதி. அந்த நேர மிகுதியில் என்னும் பல வேலைகள் செய்து முடிக்கப் படுகின்றது. இங்கு நான் கூறியது கணணியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டின் பயனே. இன்னும் எவ்வளவு மனிதனை உற்சாகப்படுத்தும் நல்ல விடயங்கள் உள்ளன என்பதை கருத்தில் கொண்டு நடுவரவர்கள் தீர்பினைக்கூறுவது நன்று.

> இது எதிரணியினரின் அடுத்த புலம்பல். நாட்டிலே ஒருவர் வயல்வெளியில் வேலை செய்து விட்டு களைத்து உடல் ஆரோக்கியத்துடன் வருகின்றாராம். இங்கே நவீன விஞ்ஞானத்துடன் கூடிய மென்பொருட்களை பாவிது வேலை செய்பவர்கள் சோம்போறிகளாகி விட்டார்களாம். இது எந்த கருத்துக் கணிப்போ தெரியவில்லை. நடுவரவர்களே எதிர்த்தரப்பு நண்பர் கூறியதை கவனித்தீர்களா? அவர் கருத்தினை உடனே எழுதமுடியாமைக்கான காரணம் தேர்தல் வேலைகளின் காரணத்தினால் என்று குறிப்பிட்டார். இங்கே ஒரு மனிதன் இருபத்தி இந்து வேலைகளை இழுத்துப்போட்டு செய்வதற்கும். அங்கே ஒருவேலையை மட்டும் செய்பவருக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது. பல வேலை செய்யும் இவர் நோய்வாய்ப்படுவது நவீன தொளில் நுட்பத்தின் கோளாறா? இருந்தும் பாருங்கள் நண்பர் மதன் அவர்கள் தேர்தல் வேலைகளையும் சுறுசுறுப்பாக முடித்து. கணணியில்( நவீன விஞ்னா தொளில்நுட்பம்) நடக்கும் பட்டிமன்றத்திலும் சுறுசுறுப்புடன் கருத்துக்களை முன்வைத்தார். அப்படியாயின் அதன் பொருள்தான் என்ன? நவீன விஞ்ஞானமும் தொளில்நுட்பமும் அவரை போன்ற மானிடரை சுறுசுறுப்படய வைக்கின்றது என்பதுதானே அர்த்தம்.

மதன் அவர்களின் இறுதி கருத்தினைப் பார்ப்போம்.

நீங்கள் குறிப்பிட்டவை யாவுமே உண்மைதான். நான் மறுக்கவில்லை. ஆனால், நவீன விஞ்ஞான தொழிள்நுட்பத்தினால் ஈர்க்கப்பட்டு அதன் பின் சுறுசுறுப்படைந்த பல்வேறு மனிதர்கள் தானே நவீன விஞ்ஞான தொளில் நுட்பக் கருவிகளின் துணையுடன், ஓசோன் சூழல் மாசாக்கத்தினால் வளிமண்டல மாசாக்கத்தின் காரணமாக வளியில் ஒட்சிசன் குறைகின்றதென்பதையும், இன்னும் பல தீமைகள் இதனால் விளைகின்றதென்பதையும் கண்டுபிடித்தார்கள். இல்லையேல் இந்தவிடயம் நமக்கு தெரிந்திருக்க நிஞாயம் இல்லை.

எனவே இறுதியாக நான் கூறுவது இதைத்தான். மனிதனின் இனவிருத்தியின் செயல்ப்பாடுகள்ளால். மனிதனின் தேவை அதிகரிக்கின்றது. அன்று காட்டிற்குள் சிறு கூட்டமாக வாழ்ந்தவன். இனவிருத்தி பெருகும் பொழுது. அவர்களின் தேவைகள் அதிகமாயின ஆகையால், காடுகளுக்குள் வாழ்ந்த மனிதன் நதிக்கரையோரங்களை நாடி புதிய நவீன கருவிகளைக்கண்டுபிடுத்து விவசாயம் செய்து தமது தேவைகளை பூர்த்தி செய்ததோடு. குடும்பம் என்னும் புதிய முறைதனை உருவாக்கி இனப்பொருக்கத்தை தொடர்கையில், அவனது தேவைகளை மேலும் மேலும் விரிந்தன. காலத்திற்கு காலம் அவன் விருப்பியோ இல்லை விரும்பாமலோ புதிய கண்டுபிடிப்புக்கள் அவனுக்கு தேவைப்பட்டன. அவன் தனது தேவைகளிற்கே இவற்றினை கண்டுபிடிக்கின்றான். எனவே மனிதன் சுறுசுறுப்பு அடைவதனால்த்தான் இது போன்ற புதிய நவீன விஞ்ஞான தொளில் நுட்பங்கள் உருவாகின்றன. ஆகையால் புதிய நவீன விஞ்ஞான தொளில் நுட்பங்களால் மனிதன் சுறுசுறுப்படைகின்றான் எனக்கூறி, வாய்ப்பு தந்தமைக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.

தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#51
நன்றி மதுரன் அவர்களே! இறுதி நேரத்தில் வந்து அருமையாக விளக்கங்களை முன்வைத்துள்ளீர்கள்.
மதன் அவர்களின் கூற்றுப்படி விஞ்ஞானத்தின் நன்மை தீமைகளை ஆராயவில்லை... மாறாக, விஞ்ஞானம் எவ்வாறு மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம் என்கிறார் மதுரன் அவர்கள்.
அதுமட்டுமா? ஒரு வேலையிலேயே காலத்தை அழிக்காமல்.. விஞ்ஞானத்தின் உதவியினால் உற்சாகமாகப் பல வேலைகளைச் செய்கிறீர்களே.. இது ஒன்றே விஞ்ஞானம் உற்சாகப்படுத்துகிறது என்பதற்குப் போதாதா என்றும் கேட்கிறார்.
சின்னத் தொடர்களைமட்டுமே ஏன் பார்க்கிறீர்கள்.. உங்கள் கண்களுக்கு நல்லனவே தொலைக்காட்சியில் தெரிவதில்லையா? உடனுக்குடன் வரும் செய்திகளைப் பார்ப்பதில்லையா.. தாயக நிகழ்வுகளைப் பார்ப்பதில்லையா.. விபரணங்களைப் பார்ப்பதில்லையா.. சின்னத் திரை சின்னத்திரை என்று கற்பனைக் கதைகளுள் காலத்தைப் போக்கிவிட்டு விஞ்ஞானத்தின் மேல் ஏன் வீண் பழி போடுகிறீர்கள் எனக் கேட்கிறார்?
வித்தை தெரியாதவனுக்கு மண் மண்ணாகத்தான் இருக்கும்.. வித்தை தெரிந்தவனுக்கு மண் பானையாகலாம்.. சிற்பமாகலாம்.. கட்டிடமாகலாம்.. ஆக, சோம்பல் முறித்து வித்தை தெரிந்தவர்களாய் விஞ்ஞானத்தை அணுகினால்.. அது உங்களை உற்சாகப்படுத்தும் என சொல்லாமல் சொல்கிறார் மதுரன் அவர்கள்.
வளிமண்டலத்தில் ஒட்சிசன் குறைகிறது என்பதைக் கூறி, உற்சாகமடையும் வழிவகைகளைக் கண்டுபிடி எனக் கூறுவதும் விஞ்ஞானம்தானே எனக்கூறி தனது கருத்துக்களை நிறைவு செய்து.. ஒத்துழைப்பு நல்கிய மதுரன் அவர்களுக்கு நன்றி.

உற்சாகப்படுத்துகிறது என்ற அணியில் எண்மரும், சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் எழுவரும் பங்குபற்றியுள்ளார்கள்.

சிம்ரன், நிலவன் ஆகியோர் சோம்பல் காரணமாகவோ, என்னவோ வருவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.

ஆகவே, இத்துடன் விவாதங்கள் நிறைவுறுகின்றன. எல்லோரும் சிறப்பாக கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி.

இனி வருவது அணித் தலைவர்களுக்கான நேரம்.

தற்போது தனது நிறைவு கருத்துக்களை.. அல்லது கருத்தின் தொகுப்புகளை அளிப்பதற்காக, 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது' என்ற அணித் தலைவரான வசம்பு அவர்களை கருத்துகளுடன் எதிர்பார்க்கிறோம். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
#52
எல்லோருக்கும் மீண்டும் ஒருமுறை வணக்கம் !

அருமையான ஒரு பட்டிமன்றத்தின் இறுதிக் கட்டத்தில் நாம் நிற்கின்றோம். உண்மையில் ஒரு மனிதனுக்கு உற்சாகமோ சோம்பேறித்தனமோ உளவியலில் ரீதியாகவே ஏற்படுகின்றது. இதனை எனதருமை சகபாடி குருவிகள் மிக அருமையாக எடுத்துச் சொன்னார். உதாரணமாக புதிதாக ஒரு உணவை நாம் ருசி பார்க்கப் போகின்றோம். அந்த உணவை நாம் பார்க்கும்போது முதலிலேயே எமக்கு அருவருப்பு போல் ஏதாவது தோன்றி விட்டால் அந்த உணவு எவ்வளவுதான் நன்றாக இருந்தாலும் அதன் மீது நமக்கு வெறுப்புத்தான் ஏற்படும். இன்னொன்று முன்பு நாம் படித்த நரியும் திராட்சைப் பழமும் கதைதான். சிலருக்கு சில விடயங்கள் இயலாமல் போகும் போது சீ சீ அந்தப் பழம் புளிக்கும் நிலைதான். இந்த நிலையில்த் தான் எதிரத்தரப்பினர் ஏதேதோ எல்லாம் சொல்லிச் சொல்லி சோம்பலாக உட்கார்ந்துள்ளனர்.

நடுவரவர்களே நான் சற்று தலையங்கத்தை விட்டு விலத்திச் சென்றே விளக்கமளிக்க வேண்டிய நிலையிலுள்ளேன். ஏனெனில் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்தால்த்தான் சாப்பிடும் நிலையில் எதிர்த்தரப்பினர் உள்ளனர்.

நாம் எதையாவதொன்றை இளக்காமல் இன்னொன்றை பெறமுடியாது. அதேபோல் புதிய புதிய பல விடயங்கள் நம் வாழ்வில் புகுந்து நாமும் உற்சாகமாக வாழ வேண்டுமென்றால் சில இளப்புக்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தினால் வேலைவாய்ப்புக்கள் குறைந்து மனிதனைச் சோம்பேறி ஆக்கிவிட்டது என்று சொன்னார்கள். மனச்சாட்சியோடு சொல்லுங்கள் வேலைவாய்ப்புக்கள் குறைந்ததற்கு நவீன விஞ்ஞானம் மட்டுமா காரணம் ?? எங்களது தவறான நடவடிக்கைகள் காரணமில்லையா ?? உதாரணமாக ஒருவர் பலசரக்குக் கடை திறந்தால் மற்றவரும் பலசரக்குக் கடைதான் திறப்பார். வித்தியாசமாக வேறு ஏதாவது கடை திறக்கலாமா என சிந்திக்க சோம்பேறித்தனம் விடாது. நன்றாகச் சொன்னார் எதிரணி இளைஞன் நவீன விஞ்ஞானம் சோம்பேறிகளை மேன்மேலும் சோம்பேறிகளாக்குகின்றனவென்று. நாமும் அதைத்தானே சொல்கின்றோம். நவீன விஞ்ஞானம் உற்சாகமானவர்களை மேன்மேலும் உற்சாக்படுத்திக் கொண்டே செல்கின்றது.

இந்த நவீன விஞ்ஞானத்தினால் இன்று பல நோய்கள் ஏற்பட்டு மனிதன் சோம்பேறியாகிவிட்டான் என சிலர் கண்ணீர் வடித்தனர். சிரிப்பதா அழுவதா முன்பு பெரிய மரத்தின் கீழ் இரவு படுத்திருந்த சிலர் இறந்து காணப்பட்டனர். அப்போ ஊரார் பேய் பிசாசு முனி அடித்துவிட்டதாக எண்ணி ஒரு கல்லை வைத்து அந்த மரத்தையே கும்பிட்டதை ( சோம்பேறிகள் சிலர் அங்கு உண்டியல் வைத்து பிழைப்பு நடாத்தியது வேறு கதை ) விஞ்ஞானம்தானே அது பிராணவாயு கிடைக்காமல் கரியமலைவாயு சுவாசித்ததால் ஏற்பட்ட மரணம் என போட்டுடைத்தது. ஏன் வாந்திபேதி போன்றவை ஏற்பட்டபோது ஆத்தாவுக்கு கோபம் வந்திட்டுது என்று ஊரார் நினைக்க இல்லை அதுவும் ஒரு நோய்தான் என எந்த விஞ்ஞானம் எடுத்துச் சொன்னது. ஏன் பல நோய்களே விஞ்ஞான வளர்ச்சியின் பின்தானே கண்டு பிடிக்கப்பட்டது. உண்மை இப்படியிருக்க மக்கள் உற்சாகம் அல்லவா கொண்டிருப்பார்கள். ஆனால் அதையும் சில சாத்திரிகளும் சாமியார்களும் விடவில்லை. தேசிக்காயை வெட்டி உள்ளே சிவப்பாகவிருக்கின்றதைக் காட்டி ஆத்தா கண் சிவந்து விட்டா என்று பயமுறுத்தினார்கள். அந்த தேசிக்காய் வெட்டும்போது உள்ளே எப்படிச் சிவந்தது என்ற உண்மையை விஞ்ஞானம் போட்டுடைக்க பிழைப்புக் கெட்ட சாத்திரிமார் விஞ்ஞானம் சோம்பேறியாக்குகின்றது என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்

எதிரணியலுள்ள என் அன்புச் சகோதரன் மதனை நினைத்தாலோ பரிதாபமாகவுள்ளது. யாழ் களத்தில் உற்சாகமாக ஓடிவந்து நவீன தொழில்நுட்பங்களைப் பக்கம் பக்கமாக எழுதுபவர் அவர். அவரைப் போய் சோம்பேறியாக்குகின்றது என்று எழுதச் சொன்னால் என்ன செய்வார். அதனால்த்; தான் என்னவோ எழுதாமல் இழுத்தடித்து நாய் வேஷம் போட்டால் குலைக்கத்தானே வேண்டும் என்பதற்காக ஏதோ கொஞ்சம் குலைத்துவிட்டு இல்லையில்லை எழுதிவிட்டுச் சென்றுள்ளார். அவர் கணணியோடிருந்து மரரடித்துக் களைத்து மாலையில் வீடு திரும்புவாராம். அவங்க ஆத்துக்காரி களைப்பை போக்க கஞ்சி காச்சி வைச்சு மாலையில் வரவேற்பாவாம். இந்தக் கஷ்டம் பற்றி பில்கேட்ஸிற்கு ஏன் தெரியாமல் போனது. மாமல்லபுரத்தை பார்க்க மக்கள் நிறைய வருகின்றார்களாம். அதற்காக மாமல்லபுரத்தை என்ன அரும்பொருட்காட்சியகத்திலா கொண்டு போய் வைக்கமுடியும். டிஸ்னிலாண்டையும் பார்க்கத்தான் அதைவிட நிறையச் சனங்கள் வருகின்றார்கள். அதுவும் என்ன பல்லவர் காலத்திலா கட்டப்பட்டது.
ஏன் இந்த நவீன விஞ்ஞானம் தானே ஏழை பணக்காரன் போன்றவற்றையும் சாதிபேதங்களையும் உடைத்தெறிந்து மனித குலத்தை உற்சாகமடையச் செய்திருகின்றது. சமீபத்தில் எமது போராளி ஒருவரின் செவ்வியை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அப்போ அவர் சொன்ன செய்தி முன்பு 100 பேர் கொண்ட படையணி செய்த வேலையை இப்போ 10 பேர் கொண்ட படையணியே செய்து முடிக்க எமக்கு நவீன தொழில் நுட்பங்கள் உதவி செய்கின்றனவென மிகவும் உற்சாகமாக எந்தவித மரணபயமுமின்றிச் சொன்னார்.


இந்தியாவில் ஒரு ஏழைச்சிறுவன் பல நாள் பட்டினி சில நாள் சாப்பாடு. அந்த வறிய நிலையிலும் இந்த நவீன விஞ்ஞானத்தில் தானும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று உற்சாகமாகக் கனவு கண்டான். அவன் உற்சாக கனவு பலித்து நாட்டின் தலைமை விஞ்ஞானியானது மட்டுமல்ல இன்று அந்நாட்டின் முதல்குடிமகனும் அவரே. அவர்தான் மரியாதைக்குரிய அப்துல்கலாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவா வேண்டும். ஆபிரக்காம்லிங்கனை நாம் ஏட்டில்த்தான் படித்தோம். ஆனால் அப்துல்கலாமை நேரிலேயே பார்க்கும்போது எம்மையுமறியாமல் எமக்குள் உற்சாகம் பற்றிக் கொள்கின்றதே.

இணர்டாம் உலகப்போர் முடிந்தபோது யப்பானுக்கு எற்பட்ட அழிவுகள் எல்லோரும் அறிந்ததே. ஏன் உலகமே நினைத்தது யப்பான் அவ்வளவுதானென்று. ஆனால் இன்று உலகத்திலேயே தொழில் நுட்பப்புரட்சியில் முன்னணியிலுள்ளது. இது எப்படி நிகழ்ந்தது. யப்பானியரை பொதுவாக எறும்பிற்கு உதாரணமாகச் சொல்வார்கள். அவ்வளவு சுறுசுறுப்பு. எதிரணியினர் சொன்னது போல் சோம்பறிகளாகவா யப்பானியர்கள் இருக்கின்றார்கள். இதேபோல் சீனா தாய்வான் போன்றவற்றையும் உதாரணம் காட்டி நிறைய எழுதலாம். ஆனால் சோம்பலில்லாமல் எதிரணியினர் முழுவதையும் வாசிப்பார்களா என்பதில் எனக்கும் சந்தேகம். ஆதலால் அவர்களுக்கு ஏற்றவாறு விளக்கமாகவும் முடிந்தவரை சுருக்கமாகவும் எழுதி எமதணியின் சார்பில் உற்சாகமாக கருத்துக்கள் படைத்த என்னருமைச் சகாக்களுக்கும் உற்சாகமாகவே தனது பொறுப்பை சரியாகக் கடைப்பிடிக்கும் சாலமன் சோழியானுக்கும் எண்ணத்திலுதித்ததை நடைமுறைப்படுத்தி வெற்றிநடைபோடும் தூயாவிற்கும் களத்தில் என்னேரமும் விழித்திருந்து சிறப்பாக வழிநடாத்தும் பொறுப்பாளர்கள் மட்டுறுத்தினர்கள்; மற்றும் சிறப்பாக குறைநிறைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி எம்மை உற்சாகப்படுத்திய பார்வையாளர்கள் இப்பட்டிமன்றம் சிறப்பாக நிறைவுற ஒத்துழைத்த எதிரணியினருக்கும் எனது உளப்©ர்வமான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து விடை பெறுகின்றேன்
#53
வணக்கம்!
பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கையில் உற்சாக பிறவி நான் எப்படி உடனே பதில் சொல்வது என்று ஒரே ஏக்கம் இருந்தாலும் எமதணியை விட்டு விட்டு மற்ற வேலை பார்க்க நான் தயாராய் இல்லை.... எப்படியோ வந்திட்டன்

என்ன அருமை என்ன அருமை சும்மா சொல்லக் கூடாது எங்கட எதிரணியில் இருக்கவர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் இருப்பதை இல்லை என்றும் மாற்ற நன்றாகத்தால் முயல்கின்றனர்...நவீன தொழிநுட்பம் மனிதனை சோம்பொறியாக்குகிறது.... அதற்க்கு உதராணமாக எமது அணியினர் பல கருத்துக்கரளை வெளியீட்டுள்ளனர் அவர்களின் வழியோ நானும் செல்கிறேன் .. முதலில் இன்று குடும்பத்தலைவர்களின் பெரும் தலைவலியாக உள்ள சின்னத்திரை நாடககங்கள் பற்றி பார்ப்போம் இது எதனால் வந்தது? தொழிநுட்ப வளர்ச்சியால் தானே! தமது வீட்டு வேலையை செய்து தமது கணவருக்கு கடமை செய்து பிள்ளைகளை கவனித்து வந்த பல பெண்கள் சின்னத்திரை எப்ப வந்தததோ அப்போதே எல்லாத்தையும் விட்டுவிட்டார்கள். கணவன் வருவது தெரியாமல் நாடகத்தில மூழ்கி சோம்பொறிhயய் அவள் மாறிவிட்டாள்.. அதை விட இரவு 12 1 மணி வரையும் முழித்திருந்து நாடகம் பார்த்து விட்டு காலையில் வேலைக்கு போகும் கணவன் பிள்ளைகள் என்று எதையுமு; கண்டு கொள்ளமல் சோம்பொறிதனமாய் தூங்குகின்றாள்....தற்க்கு காரணம் யார்? எது? சோம்பொறிகளாய் இருந்து கொண்டு உற்சாகப்படுத்துகின்றது என்று அவர்கள் பேசுவதில் தப்பில்லை காரணம் அவர்களின் உற்சாகம் அது தான் நாங்கள் சொல்வது 'உற்சாகத்தை பற்றி" அதற்க்கும் அவர்களுக்கும் சம்பந்தமிருப்பதாய் எனக:கு தெரியவில்லை. ஒருவர் குறிப்பிட்டார் நீங்கள் மேடையின்றி பட்டி மன்றம் நடாத்துவதாக இங்கேயும் சோம்பொறிதனம் தானே இருக்கிறது? வீட்டிலிருந்து கணனியில் இருந்து கருத்தெழுதுவது உற்சாகமா? அல்லது மேடையில் ஒலிவாங்கி முன்னே பேசுவது சோம்பொறிதனாமா? இதில் நாம் கருத்தெழுதுவது உண்மைகளை உங்களுக்கு சொல்லவே தவிர நாங்களும் சோம்பொறிகள் ஆகிவிட்டோம் என்று சொல்லவல்ல. நாங்கள் தலைப்பு மாறி பேசுவதாக ஈஸ்வர் அவர்கள் சொன்னார் ஆனால் நாங்கள் எதை தலைப்புக்கு வெளியே பேசினோம் என்று சொல்ல அவருக்கு அவரின் சோம்பொறிதனம் விடவில்லை..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்  
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது யாரின் கைNயுழுத்து என்று தெரியுமா? வேறு ஒருவரினதும் இல்லை தொழிநுட்பத்தைபற்றி அது ஊக்குவிப்பதாய் வாதாடிய நடா அவர்களின் கையேழுத்து தமிழர்களை மட்டுமல்ல பலரை இன்று சங்கடப்படுத்துவதுடன் நின்று விடாமல் சோம்பொறிகளாக்கி கொண்டிருக்கும் இணையம் பலரை சோம்பொறியாக்குகிறது.
தொடர்ந்து......


................................................................................
நடுவரின் கருத்துப்படி சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது
.................................................................................

நவீண தொழிநுட்பம் மனிதனை சோம்பொறி யாக்குகிறது. அது ஒரு பொதம் மனிதனை உற்சாகப்படுத்தாது என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகின்றேன்
நன்றி வணக்கம்
நிலவன்

<!--c1-->CODE<!--ec1-->இடையில் எதிரணி தலைவருக்கான பதில்  நான் வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்... அதனால் மட்டுறுத்தினர்களால் விடப்பட்ட ஒரு பந்தியையும் நீக்கி விட்டென்

நிலவன்<!--c2--><!--ec2-->
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
#54
________________________________________
கருத்து தேவை கருதி நீக்கப்பட்டுள்ளது
________________________________________
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>
#55
நான் சின்னவன் ஆகையால் இதுபற்றி எழுதுவதற்கு தெரியவில்லை.
ஒருவர் நாள்முழுவதும் கணணிமுன் அமர்ந்திருந்து நவீன விஞ்ஙானம்பற்றி பட்டிமன்னறம் நடாத்திக்கொண'டிருந்தால் அது அந்த விஞஙானத்தையே உருக்குலைத்துவிடும். நன்றி
#56
Sooriyakumar Wrote:நான் சின்னவன் ஆகையால் இதுபற்றி எழுதுவதற்கு தெரியவில்லை.
ஒருவர் நாள்முழுவதும் கணணிமுன் அமர்ந்திருந்து நவீன விஞ்ஙானம்பற்றி பட்டிமன்னறம் நடாத்திக்கொண'டிருந்தால் அது அந்த விஞஙானத்தையே உருக்குலைத்துவிடும். நன்றி
தங்களது ஆலோசனைக்கும் உற்சாகப்படுத்தலுக்கும் நன்றி!! விஞ்ஞானத்தை உருக்குலைக்குதோ இல்லையோ.. சாப்பாடு தண்ணீர் இல்லாமல் உடலையே உருக்குலைத்துவிடும்.
.
#57
Nilavan Wrote:
Quote:உற்சாகப்படுத்துகிறது என்ற அணியில் எண்மரும், சோம்பேறியாக்குகிறது என்ற அணியில் எழுவரும் பங்குபற்றியுள்ளார்கள்.

சிம்ரன், நிலவன் ஆகியோர் சோம்பல் காரணமாகவோ, என்னவோ வருவதற்கான அறிகுறிகளைக் காணவில்லை.

மன்னிக்கவேண்டும் நடுவர் அவர்களே நீங்கள் சிவல வேளை ஏதாவது கோவில்; சாத்திரம் பார்த்து விட்டு நாங்கள் வரமாட்டோம் என்று முடிவெடுத்து விட்டீர்கள் போல.. அது அப்படியல்ல எமக்கு சனி ஞாயிறு தினங்களில் பதிலளிக்க முடியாது காரணம் பாடசாலையில் நின்று தான் நான் கருத்தக்களத்தில் பதிலளிப்பேன்.. அதன்காரணமாகவே என்னால் பதிலளிக்க முடியவில்லை..........
நிலவன்
உங்களுடைய கருத்துப்படி உங்களைது கருத்துகளை ஏற்கிறோம். ஆனால், எல்லோருக்கும் இறுதியாக கருத்தை முன்வைக்க அணித் தலைவர்களுக்கே உரிமையுண்டு. ஆதலால் அணித்தலைவர் வசம்பு அவர்களின் தொகுப்புரைக்கான தங்களின் பதில்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.. எனவே அவற்றை இங்கிருந்து நீக்க சம்பந்தப்பட்ட மட்டுறுத்தினர்களுக்கு அறிவிக்கிறேன்..
அதாவது.. மேற்கோள்:
உரித்து வாயில் வைத்தால்த்தான் சாப்பிடும் நிலையில் எதிர்த்தரப்பினர் உள்ளனர்.... என்பதில் இருந்து,... ...எதிரணிக்கு வாசிக்க முடியுமா என்று கேட்டு நழுவாதீர்கள் என்பது வரையிலான கருத்துகள் நீக்கப்படுகின்றன.

மேலும், நிலவன் அவர்களின் கருத்துக்குமட்டும் அணித்தலைவர் ஏதாவது கருத்து முன்வைக்க விரும்பினால் வையுங்கள்.
அவரைத் தொடர்ந்து அணித்தலைவர் ஷியாம் அவர்கள் கருத்தை முன்வையுங்கள்.. ஷியாம் அவர்களுக்கு 2 நாட்கள் தரப்படுகிறது.. பொறுமையாக விளக்கமாக கருத்துகளை முன்வையுங்கள். நன்றி.
.
#58
பாடசாலையில் இருந்து ஆர்வத்துடன் பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட நிலவன் அவர்களுக்கு நன்றி.
தொழில்நுட்ப வளர்ச்சியால் சின்னத்திரை வந்தாலும் வந்தது.. வீட்டிலை கணவனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு ஆள் இல்லை.. சின்னத்திரை இரவு பன்னிரண்டு.. ஒரு மணிவரையும் சின்னத்திரையை இரசித்துவிட்டு.. சோம்பேறியாக மனைவி தூங்க.. பாவம் கணவனும் பிள்ளைகளும்..

கருத்துகளுக்கு நன்றி நிலவன் அவர்களே! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
#59
அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கங்கள்;
இன்றுடன் நிறைவு பெறும் இந்தபட்டிமனறத்திற்கு எனது தொகுப்புரைக்காக பொறுமையுடன் காத்திருந்த நடுவர் அவர்களிற்கும் மற்றும் எதிரணியினர் எனதணியினர் ஆகியோருக்க்கும் நன்றிகள்.

பட்டிமன்றத்தில் எனதணியினர் மிகவும் சிறப்பாக் தலைப்பிற்கேற்பமாதிரி வாதங்களை அருமையாக முன்வைத்தனர்.
எதிரணியினர்என்ன தலைப்பு என்று சரியாக விளங்காமல் தலையை விட்டு வாலைபிடித்மாதிரி வாதங்களை முனவைத்துள்ளனர் விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறதா இல்லையா என்பதை விட்டு விஞஞான கண்டு பிடிப்புக்ளைபற்றியே எழுதிகளைத்து போனார்கள்

விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறுஇ விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு. படைப்பாளிகளும் பயனார்களாக இருக்கலாம். ஆனால் பயனாளர்கள் படைப்பாளிகள் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்தார்கள் - போராடினார்கள் - கண்டுபிடித்தார்கள்: இங்கு மனித உழைப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது - அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள். ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்10தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள். விஞ்ஞானப் பயனாளர்கள் அல்ல!!!! என்றுஅவர்களிற்கு எமதணியில் இளைஞன் சரியானவிளக்கம் கொடுத்தாலும் அவர்கள் விளங்கி கொள்கிற மாதிரியில்லை ஏனெனில் அவர்களிடம் சொந்த ழூளை இல்லை ஏனெனில் அவர்களால் 2+2எத்தனையென்று கேட்டாலே கூட்டிபார்க்க கருவி வேண்டும் அவர்களிற்கு.

அடுத்ததாக எதிரணியில் மழலை சொன்னார்.[color=red]அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? [/coloநிலவில்மனிதன் காலடி வைத்ததால் அண்டவெளிகளிலும் குப்பை சேர்ந்ததேதவிர மனிதகுலத்திற்கு என்ன முன்னேற்றம் ஏற்பட்டது பாவம் மழலை தானே விட்டு விடுவோம்.அம்மாவின் மடியில்இருந்து சோற்றை சாப்பிடட்டும்.



அடுத்ததாக எமதணியில் நிதர்சன் விஞ்ஞானம் மனித இயக்கத்தின் முக்கிய அங்கமான கதாலைகூட விட்டுவைக்கவில்லை உணர்வுகளோடு உயிராய் இருக்கவேண்டிய காதல் இன்று விஞ்ஞானத்தால் உருக்குலைந்து போயிருக்கிறது என்பதனை அருமையாய் சொன்னார்.

அடுத்து மதன் இன்று சின்னத்திiயினால் வரும் சீரழிவுகள் பற்றி சிந்திக்க தாண்டும் விதமாக விளக்கினார். சின்னத்திரையின் தாக்கம் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை எதிரணியினர் அவர்கள் வீட்டிலேயே பார்க்கலாம். ஞாயிற்ற கிழமையானால் காலை மத்தியானம் இரவுக்கு ழூன்றுநேரத்திற்கு சேர்த்து காலையே சமைத்து வைத்து விட்டு பெண்கள் சின்னத்திரைமுன் போய் இருந்தால் இரவுவரை அசைவதில்லைகுழந்தை கத்தினாலென்ன கணவன் செத்தாலென்ன அவர்கள் கவனம் முழுதும் நாடகத்தை பார்த்து ஊச் உச் என்று உச்சு கொட்டி கொண்டிருப்பார்கள்



எமதணியில் மற்றவர்கள் விஞஙானத்தால் மனிதன் உணர்வால் சோர்ந்து போயிருக்கிறான் என்று உண்மையை கூறிக்கொண்டிருக்க உணர்வால் மட்டுமல்ல உணவாலும் மனிதன இன்றையவிஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்டு சோரந்;து போயுள்ளானென்ற வியாசன் அருமையாக இடித்துரைத்தார்.

அடுத்து இன்றைய குழந்தைகளே நாளை நாட்டின் மன்னர்கள் என்பார்கள் அந்த குளந்தைகள் விஞ்ஞானத்தால் மன்னர்கள் ஆகாமல் நாழைய சோம்பேறி மன்னர்கள் ஆகி கொண்டிருக்கிறார்கள் என்று ஈழப்பிரியன் கவலையாகவும்.புனிதமான பக்தியில் கூட விஞ்ஞானம் புகுந்து சீரழித்தவிட்டதென்று சாத்திரியும் இறுதியாக வந்தாலும் உறுதியாக தனது கருத்துக்களை நிலவனும் வைத்து விட்டு போயிருக்கிறார்கள்.

ஆகவே நடுவர் அவர்களே நான் உங்களை வெறும் நடுவராக மட்டும் பார்க்கவில்லை நடுநிலையாளராகவும் தான் பார்க்கிறேன்.நடுநிலையென்பது வெறுமனே இரண்டு அணிகளுக்கு நடுவில் இருந்து விட்ட போவது அல்ல உண்மையின் பக்கம் நிற்பதே நடுநிலமையாகும்.அந்த உண்மை எமது பக்கமே உள்ளது. எனவே நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள் என நம்புவதுடன் மேலே நடந்து கொண்டிருக்கும் வாக்கெடுப்பு தீர்ப்பை பாதிக்காது என்று நீங்கள் கூறினாலும்.அது பலரின் மன உணர்வு அவர்களின் உணர்வுகளிற்கும் மதிப்பளித்த. எமதணியின் கருத்துக்களால் செய்வதறியாமல் திகைத்து போயிருக்கும் எதிரணியினருக்கும் அதன் தவைருக்கும்.உற்சாகமாய் உங்கள் தீர்ப்பை எதிர்பாரத்து காத்திருக்கும் எமதணியினர் சார்பிலும் உங்கள் தீர்ப்பை கூறுமாறு பணிவுடன் கோட்டுகொள்கிறேன் நன்றிகள்
; ;
#60
வணக்கம் யாழ் உறவுகளே! 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனைச் சோம்பேறியாக்குகிறதா? உற்சாகப்படுத்துகிறதா?' எனும் பட்டிமன்றமானது, தூயா அவர்களது முயற்சியினால் யாழ்களத்தில் சித்திரை 29ம் திகதியில் ஆரம்பித்து இன்று 20ம் திகதி நிறைவடைய உள்ளது. ஏறக்குறைய ஒரு மாதகாலம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில் ஒரு பட்டிமன்றத்துக்கு இவ்வளவு நாட்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாததெனினும், ஒவ்வொருவரது சூழ்நிலைகளையும் மனநிலைகளையும் தாமதத்தின் பொருளாகக் கொள்ளலாம். கடல் பிரிக்கும் பல தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் எல்லோரையும் பயணச் செலவுகளோ அல்லது பயண ஒழுங்குக்கான கால தாமதங்களோ இன்றி, யாழ் இணையத்தில் இணைய வைத்து, ஒரு அருமையான பட்டிமன்றத்தை நிகழ்த்த வைத்திருப்பதை நோக்கும்போது ஒரு மாதம் பெரிதாகப் பேசப்படக்கூடிய காலதாமதமல்ல என்பது எனது கருத்தாகும்.

'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனைச் சோம்பேறியாக்குகிறது' என்ற அணியில் வியாசன், ஈழப்பிரியன், நிதர்சன், நிலவன், இளைஞன், நாத்திரி, மதன் ஆகிய எழுவர் ஷியாம் அவர்களின் தலைமையில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறது' என்ற அணியில் குறும்பன், ஈஸ்வர், குளக்காட்டான், மழலை, மதுரன், நடா, குருவிகள் ஆகிய எழுவர் வசம்பு அவர்களின் தலைமையில் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

வாதத்தை ஆரம்பித்த ஷியாம் அவர்கள், 'பத்திரிகை வாங்க கடைக்குச் செல்லும்போது மனிதன் பெற்ற உற்சாகத்தை கணனி கெடுத்து சோம்பேறிழயாக்குகிறது' என்றொரு கருத்தை வைத்தார். அடுத்து வந்த வசம்பு அவர்கள், 'யாழில் நிகழும் ஒரு செய்தியை கொழும்பிலுள்ளவர்கள் அறிய முதலே வெளிநாடுகளிலுள்ளோர் அறிய தொழில்நுட்பம் உதவுகிறது', 'ஒருவரை சந்திக்க இழக்கும் பயண நேரத்தை தொலைபேசியும் கணனியும் மீதப்படுத்துகின்றன', 'ஓரிடத்தில் உள்ள மருத்துவர் நெற் மீட்டிங் மூலம் வேறு நாட்டு மருத்துவரிடம் உதவி பெறமுடியும்' என்று மனிதனை உற்சாகப்படுத்தும் மூன்று கருத்துகளை முன்வைத்தார்.

அடுத்து வசம்பு அவர்களுக்கு ஷியாம் அவர்கள் பதிலளித்தாலும்.. அவரது கருத்துக்கள் பட்டிமன்ற வழமைக்கமைய கவனத்திலெடுக்கப்படவில்லை. மன்னிக்கவும்.

அடுத்து வந்த குறும்பன் அவர்கள், 'ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்' என்ற கருத்தின் மூலம் தனது அணிக்கு பலம் சேர்த்தார்.

தொடர்ந்து வந்த வியாசன் அவர்கள்.. 25 வீத நன்மைக்காக 75வீத எதிர்வினையைப் பெறுகிறோம்.. தொலைக்காட்சி மனிதனை சோம்பேறியாக்குகிறது.. மாடிப்படிகள்கூட சோமட்பேறியாக்குகின்றன என அருமையாகக் கருத்துகளைக் கூறினார். அடுத்து வந்த நடா அவர்கள் விஞ்ஞானம் மனிதனுக்குக் காட்டும் உற்சாக வழிகளை அடுக்கிக்கொண்டே போகிறார்.. மலட்டுத்தன்மையை நீக்குகிறது.. மின்சாரத்தை கண்டு பிடித்தான்.. அதன்மூலம் அடுக்கடுக்காக பற்பலதை கண்டுபிடிக்கிறானே.. இது உற்சாகமில்லையா என்று கேட்ட்டார்.. மலேரியா காசநோய்.. ஏன் அம்மைநோய் போன்றன வருமுன்னே தடுப்பதற்கான வழிவகையை இந்த விஞ்ஞானம்தானே தந்தது என்கிறார்.

அடுத்து வந்த சாத்திரி அவர்கள் விஞ்ஞானத்தால் சுத்தம்.. ஆச்சார அனுஷ்டானங்கள் எல்லாம் போய்விட்டனவே என்றார்.. ஆச்சார அனுஷ்டானங்களை உருவாக்கியவனும் மனிதன்.. விஞ்ஞானத்தையும் உருவாக்கியவன் மனிதன்.. ஆக, விஞ்ஞானத்தால் அஞ்ஞானம் சீர்கெட்டு மனிதன் சோர்வடைகிறான் என்றார்.

'விவசாயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. துலாவுடன் மல்லாடி அல்லாடிய நேரம் போய் உற்பத்தியை அதிகரித்து புதுப்புது பயிர் உற்பத்திக்கு வழிகாட்டுகிறதே விஞ்ஞானம்.. அதனால் நீங்கள் உற்சாகமடையவில்லையா.. பத்து வருடங்களுகஇகு முன் வீட்டிலிருந்து எப்போது கடிதம் வரும் என ஏங்கிநின்ற நாட்கள் எங்கே.. இன்று வேலையால் வந்தவுடன் தாயக உறவுகளின் குரலை மலிந்த விலையில் கேட்குமளவிற்கு விஞ்ஞானம் வசதி செய்து உற்சாகப்படுத்துவது உங்களுக்கு தெரியவில்லையா?' என்று கேட்டார் குளக்காட்டான்.

அடுத்து நிதர்சன் அவர்கள் வானொலிகளுடன் வருகிறார்... 'கடந்த சில மாதங்களுக்கு முன் புதினம் இணையம் செயல் இழந்த போது எமது வானொலிகள் சிலவற்றில் செய்திகள் நிறுத்தப்பட்டன காரணம் அவர்கள் அந்த செய்திகளை புதினத்தில் இருந்தே பெற்று வெளியிட்டு வந்தனர்.' ஆக, விஞ்ஞானம் ஊடகங்கவியலாளர்களையும் சோம்பேறியாக்குகின்றது என்கிறார்..
தொலைபேசி காதலர்களை சோம்பேறியாக்குகிறது.. அதுமட்டுமா.. சோம்பேறித்தனத்தால் உலகின் சனத்தொகை அதிகரிக்கப் போகிறது என்று ஒரு குண்டையும் தூக்கிப் போடுகிறார்? சோம்பேறிகளால் எதையுமே செய்ய முடியாதே.. எப்படி ஐயா சனத்தொகைமட்டும் அதிகரிக்கும்.. அவரது அணியிலுள்ளவர்கள் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்ப்போம்..
தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையில்லாதோர் தொகை அதிகரிக்கிறது.. அதேபோல அவர் முன்பு கூறியவாறு சனத்தொகை அதிகரிப்பாலும் வேலையற்றோர்தொகை அதிகரிக்கிறது.. ஆக விஞ்ஞானம் வேலையற்றோர் தொகையை அதிகரிக்கச் செய்து மனிதனைச் சோம்பேறியாக்குகிறது என்கிறார்..

சோம்பேறித்தனத்துக்கு 'ஒருவன் சொன்னானாம் சோம்பேறிக்கு ஒரு பாயும் தலையணையும் மட்டுமிருந்தால் போதும் என்று அதற்கு ஒரு சோம்பேறி அவசரமாக இடைமறித்து இல்லையில்லை எனக்கு ஒரு தலையணை மட்டும் இருந்தால் போதும் பாயெல்லாம் யார் சுத்தி வைக்கிறது என்றானாம். இதுதான் உண்மையான சோம்பேறித்தனம்' என்ற விளக்கத்துடன் வந்தார் ஈஸ்வர். அதுமட்டுமா.. எனது அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் முன்னர் கதிர்காமத்திந்கு போவதென்றால் வண்டில் கட்டித்தான் போவார்களாம். சொந்தபந்தமெல்லாம் வந்து கட்டிக்குளறி அழுது வழியனுப்பி வைக்குமாம். ஏனென்றால் வெளிக்கிட்டவih திரும்பி வந்தா கண்டு கொள்ள வேண்டியதுதான். ஆனால் நிலைமை இப்ப அப்படியா இருக்கு.. என அன்றைய நிலையை தொட்டுக் காட்டினார்.. தனது வாதத்தின் இறுதியில், நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே... என அருமையான கருத்தொன்றையும் கூறினார்.

ஈழப்பிரியன் அவர்கள், கணிப்புகளை கணனி வெகுவேகமாக்கி சுலபமாக்குகிறதென்கிறீர்களே.. ஒரு மாதம் மின்சாரம் தடைப்பட்டால் நிலமை என்ன.. விஞ்ஞானத்தை நம்பி, கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தலைப் படிக்காமல்விட்ட நிலையில்.. எவ்வாறு கணக்குப் பார்க்கப் போகிறீர்கள்? அவசரத்தில் அவர் விரிவாகக் கேட்காவிட்டாலும், இப்படியும் கேட்டிருக்கலாம்..

'இந்த விஞ்ஞானத்தின் ஆரம்பப் படைப்பாளி யார் என்று அறியப்படாத போதிலும் புவியில் நவீன விஞ்ஞானத்தின் படைப்பாளி மனிதனே....! அப்படி விஞ்ஞான வழி வந்த மனிதன் நவீன விஞ்ஞானம் வரை அதை ஆராய்ந்து விளங்கி வளர்த்து வந்திருக்கிறான் என்றால் அவன் சோம்பேறியாக சிந்தனை அற்றவனாக உழைப்பை அளிப்பவனல்லனவாக இருந்திருந்தால் அது சாத்தியப்பட்டிருக்குமா...???! இல்லை அல்லவா...! எனவே மனிதன் என்பவன் எப்பவுமே ஏதோ ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றானே தவிர சோம்பேறியாக செயலற்று இருக்கவில்லை...என்ற அடிப்படையை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்...!
மனிதன் என்ன எந்த உயிரிக்கும் இயற்கையாக போராடக் கற்றுத்தரப்பட்டுள்ளது...அதைக் கூட செய்ய மறுக்கும் சோம்பேறி நோய் பிடித்தோரே... உங்களுக்கு உங்களைப் போன்ற சக மனிதரின் சமகால அரும் முயற்சியால் உதிக்கும் வளரும் நவீன விஞ்ஞானம் என்ன இயற்கைக் கடன் கழிப்பது கூட உங்களுக்கு அபந்தமாகத்தான் தெரியும்...அது அந்த நோய்த்தாக்கத்தின் விளைவே அன்றி வேறில்லை...! ' என தலைப்புடன் மிகவும் ஒன்றி கருத்துகளை முன்வைத்தார் குருவிகள்.

அடுத்து வந்த இளைஞன் அவர்கள், 'கணனி விளையாட்டு.. இணைய அரட்டை.. இணையக்காதல்.. இன்றைய மருத்துவம் போன்றன பற்றி எடுத்துக்கூறி.. நவீனவிஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை சோம்பேறியாகஇகுகிறது என்ற தலைப்புக்கு வலுச் சேர்த்தார். அத்தோடு, 'உலகத்தில் உள்ள சிறிய பகுதியனர் தான் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். பெரும்பாலானவர்கள் தாம் சுகமாகவும், சொகுசாகவும் எந்த வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே தொழில்நுட்பத்தையும், நவீன விஞ்ஞானத்தையும் அணுகுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை மேலும் மேலும் சோம்பேறியாக்குவதற்கு தொழில்நுட்பமும் நவீன விஞ்ஞானமும் பெரிதும் காரணியாகிறது என்பதே உண்மை. இருந்த இடத்தில் தனக்கு சாப்பாடு வரவேண்டும் என்று நினைக்கிற சோம்பேறித்தனம் நிறைந்த மனித சமூகத்தில் தொழில்நுட்பமும் நவீனவிஞ்ஞானமும் அவர்தம் அந்த ஆசைகளை கனவுகளை நிறைவேற்றுகிற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது, பயன்படுத்துகிறது. மின்அடுப்பைக் கண்டுபிடித்தார்கள் - சமையலை இலகுவாக்க - மனித உழைப்பை வீணாக செலவழிக்காதிருக்க! ஆனால் Fast food என்ன செய்கிறது? ரின்னுக்குள்ளும் பக்கற்றுகளுக்குள்ளும் அடைக்கப்பட்ட சாப்பாடுகள் தனியே இருந்து படிக்கிற, பலமணிநேரம் வேலைசெய்கிற ஆட்களுக்கு சரி - ஆனால் குடும்பத்தவர்கள் வீட்டில பபுதுசா சமைக்கலாம் தானே?' என எதிர்கருத்துக்கு மாற்று கருத்தையும் கூறினார்.

'அன்று அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதன் உற்சாகமாகக் காட்டும் உற்சாகத்தில் தான் அடங்கியிருக்கிறது....மனித உற்சாகமின்றி விஞ்ஞான வளர்ச்சியேது? மனித உற்சாகத்தினால் உண்டான விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மனித உற்சாகத்திற்கு மேலும் ஊட்டச்சத்தாகிறது...மனிதன் உற்சாகம் இன்றியிருந்திருந்தால்; தான் வளர்த்த விஞ்ஞானத்தின் பலனாய் என்றோ மாண்டிருப்பான் மண்ணில்...ஆனால் மனித உற்சாகமும் விஞ்ஞான வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று ஈடுகொடுக்காத வண்ணம் வளர்ந்து கொண்டிருக்கிறது' என்றவாரு ஆரம்பிக்கும் மழலை அவர்கள்.. 'நாம் உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடை வரைக்கும் எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகத்தால் பிறந்தவையே...அப்படி விஞ்ஞானம் செய்திருக்காதுவிட்டால் நாங்கள் இன்று பசி பட்டினியுடன் அலைந்திருப்போம். உதாரணமாக genetically modified foods (GMO) உற்பத்தியாவதால் தான் மனித தொகையின் அளவிற்குரிய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன...இல்லையேல் மனித சமுதாயமே அழிந்து இருக்கும். குறிப்பிட்ட மனித வளர்ச்சியைத்தான் பூமி தாங்க முடியும் (carrying capacity) விஞ்ஞானம் இருந்திருக்காhவிட்டால் அல்லது விஞ்ஞானம் மனிதனுக்கு உற்சாகம் கொடுத்து தட்டிக் கொடுக்காது விட்டால் எப்படி பூமி தாங்கும் சக்தியையும் மீறி மனித வளர்ச்சியை ஈடு கொடுக்கின்றது? எல்லாமே விஞ்ஞானம் தந்த உற்சாகம் தான் மனிதனை தடைகளைத் தாண்டி உழைக்க வைக்கிறது....' போன்ற தனது அணிக்கு பலம்சேர்க்கும் கருத்துகளை முன்வைத்தார்.

அடுத்து வந்த மதன் அவர்களும் தொலைக்காட்சி கணனி போன்றவற்றால் மனிதன் சோம்பலைகிறான் எனக் கூறினார்.. அத்துடன் சூழலில் உற்பத்தி அதிகரிப்பால் ஒட்சிசன் குறைவதால் மனிதன் சோம்பல் நிலைக்கு செல்வதையும் கூறினார்.

அடுத்து வந்த மதுரன் அவர்கள்.. தொழில்நுட்பத்தினால் வேறு வேறு தேசங்களில் வாழும் தொப்புள் கொடி உறவுகள் இறுக்கமாக உற்சாகமாக உள்ளார்கள்.. என்றொரு கருத்தை முன்வைத்தார்.

நிறைவுரை தந்த வசம்பு அவர்கள் விஞ்ஞானம் தரும் உற்சாகத்துக்கு கண்முன்னே காணும் ஒரு சம்பவத்தை அருமையாக முன்வைத்தார். அதுதான், 'இந்தியாவில் ஒரு ஏழைச்சிறுவன் பல நாள் பட்டினி சில நாள் சாப்பாடு. அந்த வறிய நிலையிலும் இந்த நவீன விஞ்ஞானத்தில் தானும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று உற்சாகமாகக் கனவு கண்டான். அவன் உற்சாக கனவு பலித்து நாட்டின் தலைமை விஞ்ஞானியானது மட்டுமல்ல இன்று அந்நாட்டின் முதல்குடிமகனும் அவரே. அவர்தான் மரியாதைக்குரிய அப்துல்கலாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவா வேண்டும். ஆபிரக்காம்லிங்கனை நாம் ஏட்டில்த்தான் படித்தோம். ஆனால் அப்துல்கலாமை நேரிலேயே பார்க்கும்போது எம்மையுமறியாமல் எமக்குள் உற்சாகம் பற்றிக் கொள்கின்றதே.'

ஆக, இந்த சம்பவத்தால் என்ன தெரிகிறது.. ஒரு மனிதனை அவனது மனநிலைதான் சோம்பேறி ஆக்கமுடியுமே தவிர, புதிது புதிதாக கண்டுபிடிக்கப்படும் விஞ்ஞான தொழில்நுட்பங்களல்ல.

உதாரணமாக யாழ் இடப்பெயர்வை எடுத்துக் கொள்ளுவோம்.. அன்று எமது உறவுகள் என்ன ஆனார்கள் என அறிய நாம் மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆனால் இன்று எமது ஊடக வளர்ச்சியானது இனிவரும் காலத்தில் அத்தகைய சிரமத்தை தரமாட்டா என நினைக்கிறேன். ஆக, ஊடகங்களைப் பொறுத்தளவில் அதைக் கையாள்பவனைப் பொறுத்தே அதன் பயன்பாடு அவனைப் போய் சேருகிறது. அந்த வகையில்.. செய்திகளை உடனுக்குடன் அறிய முடியும் என்ற நம்பிக்கை மனிதனை நிச்சயமாக உற்சாகப்படுத்தும். நம்பிக்கைதானே வாழ்க்கை.. பூமி அந்தரத்தில் சுழல்கிறது என்றது விஞ்ஞானம்.. அதனால் மனிதன் 'பூமி விழப்போகிறதே' எனப் பயந்து எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாத சோம்பேறி ஆகிவிட்டானா என்ன?!

நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சோம்பேறியாக்குகிறது என்ற அணிக்கு கருத்து வைத்தவர்கள்.. இணையம், தொலைக்காட்சியின் சின்னத்திரை போன்ற சிலவற்றுக்குள்ளேயே நின்றுகொண்டார்கள். ஆனால் நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உற்சாகப்படுத்துகிறது எனும் அணியிலுள்ளவர்கள்.. ஊடகம்.. உற்பத்தி.. தொடாபாடல்.. புதுப்புது தேடல்கள் பலவிடயங்களைத் தொட்டுச் சென்றார்கள்.

ஆகவே.. எல்லோரும் திறமையாகவும் சிறப்பாகவும் கருத்துகளை முன்வைத்தாலும், யதார்த்த நிலைக்கு பொருத்தமான கருத்துகளை முன்வைத்த அணி என்ற வகையில், அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில், 'நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகிறதே' எனக் கூறி இப்பட்டிமன்றத்தை நிறைவுசெய்கிறேன்

இவளவு நாட்களாக இடையில் குறுக்கீடு செய்யாமல் உற்சாகப்படுத்தி ஒத்துழைத்த யாழ் கள உறவுகளுக்கு எனது பணிவான நன்றிகள்.

வணக்கம்.
.


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)