Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணிமேகலை
#41
<b>உதயகுமாரனை வாளால் எறிந்த காதை</b>


அரசன் ஆணைப்படி எல்லாமே மாற்றப்பட்டன . இதற்கு காரணம் மணிமேகலை என மக்கள் பேசிக் கொண்டனர். மணிமேகலை எவ்விதமும் கவர்ந்து சென்று விடவேண்டும் என்று உலக அறிவியை அடைந்து அங்கேயே காத்திருந்தான். காயசண்டிகை ஊர் சென்றது அறியாதவானய் அவள் கணவன் காஞ்சனன் அங்கு வந்தான் மாறு வேடத்தில் இருப்பது மணிமேகலை என் அறியாத அவன் கஞ்சனையிடம் காதல் மொழி பேசலனான் ஆனால் மணிமேகலை அதை பொருட்படுத்தவில்லை. உதயகுமாரன் அவளை கூர்ந்து கவனித்திக் கொண்டிருந்தான். அவன் தன்னைக் கவனித்து கொண்டிருப்பதை பார்த்த மணிமேகலை காஞ்சனனுக்கு உரைப்பது போல் உதயகுமாரன் உணர வேண்டியும் முதிர்ந்த நிலையிலுள்ள கிழவியை காட்டிப் பேசிக் கொண்டிருந்தாள்.

காயசண்டிகை உருவில் இருந்த மணிமேகலை இவ்வாறு கூற காஞ்சனன் தன்க்கு தான் இவைகளெல்லாம் தன் மனைவி கூறுகிறாள் என்று எண்ணி ஆத்திரப்பட்டான். அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவை அவளது கள்ளக்காதலன் என நினைத்துவிட்டான். உதயகுமாரன் காயசண்டிகையின் கள்ளக்காதலன் என நினைத்து அவனும் அவளும் சந்திக்கும் நேரத்தில் எப்படியும் அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தான். இனிமேலும் மணிமேகலை தன்னை ஏமாற்ற ஏலாது என்று எண்ணியவனய். யாருடைய துணையுமின்றி நள்ளிரவில் பதுங்கி பதுங்கி வந்தான். இதனைக் கண்ட காஞ்சனன் கோவம் கொண்டு அவனது வாளால் அவனை கொண்டான். .

அப்பொழுது காஞ்சனனெ தவறு செய்தாய் ஆத்திரத்தில் அறிவை இழந்து விட்டாய். உன் மனைவி காயசண்டிகை தன் இருப்பிடத்துக்கு எப்போதோ சென்றுவிட்டாள். நீ கண்டது உன் மனைவியை அல்ல மணிமேகலையை என்றும் உதயகுமாரன் அரசிளங்குமாரன் எனவும் அவனுக்கும் உன் மூலம் தண்டனை கிடைத்துவிட்டது அவன் இவ்வாறு இறக்க அவனது நீவினை பயனேஎ காரணம் எனக் கூறியது, இதனைக் கேட்ட காஞ்சனன் உடலும் உள்ளமும் துடித்தான். எவ்விதம் தட்டு தடுமாறி வெளியேறிவிட்டான்.
<b> .. .. !!</b>
Reply
#42
ரசிகை அக்கா...ரொம்ப நன்றி அக்கா...ரொம்பவே நன்றி..நான் இந்த கதைகள் ஒருபோதும் வாசித்ததில்லை..ஆனால் எனக்கு இப்படியான புராணக்கதைகள் ரொம்ப விருப்பம்.
தொடருங்கள்..
இதை எழுதி என்னை உங்கள் ரசிகை ஆக்கி விட்டீர்கள் :wink:
..
....
..!
Reply
#43
ரசிகைக்கே ரசிகையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#44
vennila Wrote:ரசிகைக்கே ரசிகையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ப்ரியசகி நன்றிகள் ரொம்ப புகழாதீங்கள் நான் படிச்சதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுறன் அவ்வளவுதான்
<b> .. .. !!</b>
Reply
#45
vennila Wrote:ரசிகைக்கே ரசிகையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடுத்த லேடி சுப்பர் நீங்கள் தான் ரசிகை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#46
<b>கந்திற்பாவை வருவது உரைத்த காதை</b>

சம்பாபதியின் ஆலயத்தில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த மணிமேகலையின் காதில் கந்திற்வாவை கூறியது கேட்டது. அவள் அலறிப் புடைத்துக் கொண்டு வந்து பார்க்க வெட்டுண்டு கிடந்தான் உதயகுமாரன். முற்பிறப்பில் அவன் தன்னுடைய கணவன் என்பதால் கண்ணீர்வடித்து கதறினாள். காயசண்டிகை உருவத்தை களைந்து தம் சுய உருவம் கொண்டவளாய் உதயகுமாரன் பக்கத்தில் சென்று பேசலனாள்,.கதறி அழுதாள் உடல் கிடந்த இடத்தின் பக்கம் சென்றாள். அப்போது போகாதே அவன்ருகே போகாதே எனக் கூறி காந்திற் தெய்வம் தடுத்து விட்டது. நீயும் உதயகுமாரனும் பல பிறவிகளில் கணவன் மனைவியாக இருந்து இருக்கலாம்! பிறவியை ஒழிக்க முயலும் நீ இனிமேல் இதைப் பற்றி எண்ணுவதே தவறாகும் என்றது

மணிமேகலை அத்தெய்வத்தை வணங்கி உதயகுமாரன் அப்படி இறப்பதற்கு என்ன காரணம் எனக் கேட்டாள். முற்பிறப்பிலே நீயும் உனது கணவனும் காயங்கரை ஆற்றின் கரையிலே அமர்ந்திருந்த பிரம தருமமுனிவருக்கு உணவளித்து சிறப்பிக்க எண்ணி விடியற்காலை சமையற்காரனை வர சொல்லி இருந்தீர்கள் அவன் நீங்கள் சொன்னது போல் வரமால் பொழுது புலர வந்தான். வந்தவன் கால் தடுக்கி அந்த பாத்திங்கள் மேலேயே விழுந்து விட்டான். இதனால் கோபங்கொண்டு உனது கணவன் வளால் வெட்டி கொண்டான். அத்தீவினையே அவன் இவ்வாறு இறக்க காரணமாவன். எனக் கூறியது. அத்துடன் மேலும் நடக்க இருப்பவைகளைக் கூறியது. கந்திற்பாவை மேலும் கூறியதாவது காஞ்சிநகர் மழை இன்றி வருந்தும் நீ அமுதசுரபியுடன் அங்கு சென்று மக்கள் துயர் துடைப்பாய். உன்னை மக்கள் எல்லொரும் புகழ்ந்துரைப்பார்கள். நீ சென்ற பிறகு அங்கு பல அற்புதங்கள் நடக்கும். தவ நெறியில் பற்றுதல் கொண்ட நீ மேலும் உயர் பெரும் தவநெறி வாழ்க்கை வாழ்ந்து உன்காலம் முழுவதையும் காஞ்சியிலே கழித்து அங்கேயே இறப்பாய். பின்னர் நீ உத்தர மாநாடு சென்று அங்கேயே பல பிறவிகளை எடுப்பாய். அந்தப் பிறவிகளில் ஆண் மகனாகவே பிறந்து புத்தரது தலை மாணவனாக் விளங்கி எவ்விதமும் இந்தப் பிறப்பை ஒழித்து மகிழ்வாய் என்றது. .


அன்புள்:ள மணிமேகலையே இன்னும் கேட்பாயாக நீ முன்னர் சாது சக்கர் என்னும் மாமுனிவருக்கு உணவு கொடுத்துச் சிறப்பித்ததனால் உன் முன்னோர்களில் ஒருவரை கடலிலிருந்து காப்பாற்றியது; அது போன்று உன்னை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத் தீவிற்கு எடுத்தி சென்று உனது முற்பிறவி பற்றி அறியச் செய்தது என்று அத் தெய்வம் கூறி முடித்தது. இவையனைத்தையும் கேட்ட மணிமேகலை நிம்மதி பெருமூச்சு விட்டவளாய்வலயிலிருந்து விடுபட்ட மயில் போன்று மகிழ்ச்சி அடைந்தாள்.
<b> .. .. !!</b>
Reply
#47
<b>சிறை செய் காதை. </b>


உதயகுமாரன் இறப்பைப் பற்றி அறிந்த சக்கரவாள்க் கோட்டத்து முனிவர்கள் அதுபற்றி மன்னனுக்கு தெரிவித்தார்கள். அத்துடன் இது போன்ற காம விளையாட்டுக்களால் அழிவை தேடி கொண்டவர்கள் இப்போது மட்டுமல்ல முன்னாளிலும் இந்த நகரத்திலே இருந்தார்கள் என்றுரைத்து சுகந்தன் வரலற்றை கூறினார்கள். இதை அனைத்தையும் கேட்ட மன்னன் தவறு செய்தது தன் மகன் தான் என்பதை புருந்து கொண்டு அவனுக்கு இந்த கது உண்டாயிற்று என்பதை மற்ற மன்னர்கள் தெரியும் முன்னன்ர் அவனுக்கு இறுதிக் கடன்களயெல்லாம் செய்துவிடுங்கள் ; அந்த மணிமேகலை என்ற பெண்ணை காவலில் வையுங்கள் என்றான். அவன் கட்டளை நிறைவேற்றப்பட்டது/
<b> .. .. !!</b>
Reply
#48
<b>சிறைவிடு காதை</b>

மன்னர் மகன் உதயகுமாரன் இறந்ததால் மன்னன் மாளிகையில் துயர் நிறைந்து காணப்பட்டது. தன் மகன் உதயகுமாரன் இறந்த்து மணிமேகலையால் தான் என்ற எண்ணம் அரசிக்கு ஏற்பட்டதால் அந்த எண்ணத்தை அவளால் மாற்ற முடியவில்லை. அவள் நெஞ்சில் வஞ்சம் பிறந்த்து. மணிமேகலை குற்றம் அற்றவள் என்று பேசினாள் இதனை கேட்ட மன்னன் மகிழ்ந்தான் .தன் மனைவி திருந்திவிட்டாள் எனௌணர்ந்து மணிமேகலையை சிறையில் இருந்து விடுவிக்கப் போவதாக கூறினான். மணிமேகலையை சிறையிலிருந்து விடுதலை செய்ததௌம் அரசியை காணவேண்டும் என்று பணித்தனர்.அவள் நேராக அரசியைக் கண்டாள். அரசி அவளிடம் அன்பு செலுத்துபவள் போல் நடந்து கொண்டாள். பின்னர் அரசியின் உள்ளத்தில் எழுந்த வஞ்சகச் செயல்கள் தலை விரித்தாடின. அவளை பைத்தியக்காரியாக்க பலவித மருந்துகளை அளித்தாள். அவை எதுவும் மணிமேகலையை ஒன்றும் செஇய்யவில்லை.


இதானால் அரசியார் அவனை மானபங்கபடித்த முயற்சி செய்தார் இதனை அறிந்த ம்ணிமேகலை வேறு உருவத்தை மாற்றிக் கொண்டாள். நோய் வாய்ப்பட்டள். மணிமேகலை என்க்கூறி அவளை தனி அறையில் சாப்பாடு தண்ணிகொடிக்காமல் விட்டு பார்த்தாள். இவை யனைத்தும் மணிமேகலையை ஒன்றும் செய்யவில்லை. எதை எதையோ செய்து பார்த்து எதுவும் மணிமேகலையை ஒன்றும் செய்யவில்லை எனக் க்ண்டதும் மணிமேகலையிடம் இறையருள் என்பதை உணர்ந்தாள்.. அரசி ம்ணிமேகலையிடம் தன்னை மன்னிக்க வேண்டினாள். மணிமேகலை அரசிக்கு அறிவுரை கூறி அரசியே நீ என் கணவனைப் பெற்றவள் மட்டுமன்றி இந்த நாட்டின் ஒப்பற்ற அரசியும் ஆவய். எனவே நீ என்னை வணங்குவது தவறாகும். என்று கூறி அரசியின் பாதங்களை மணிமேகலை வணங்கினாள்.
<b> .. .. !!</b>
Reply
#49
<b>ஆபுத்திரன் நாட்டை அடைந்த காதை.</b>

உதயகுமாரன் கொலையுண்டான் என்ற செய்தி கேட்ட சித்திராபதிக்கு பெரும் வேதனையை அளித்தது. அவன் மூலம் அவள் பெற எண்ணியிருந்தவைகள் வீணாகி விட்டனவே என்று அவள் எண்ணி வருந்தினாள். மேலும் உதயகுமாரன் இறப்பையோட்டி மணிமேகலையை சிறை வைத்து இருக்கிறார்கள் என்பதையறிந்து அரசியிடம் பேசிப்பார்க்கலம் என்று அங்கு வந்தாள். மணிமேகலையைச்சிறை வைத்து இருக்கிறார்கள் என்பதை அறிந்த மாதவி பெரிதும் வருந்தி தனது தோழியான சுதமதியுடன் அறவணடிகளை சென்று பணிந்தாள். பின்னர் அறவணடிகள் அரசியைக் காணப்புறப்பட்டனர். அவ்ருடன் மாதவி சுதமதி ஆகியோரும் அங்கு சென்றனர்.


அறவணடிகளைக் கண்ட அரசி அவரை தொழுது வரவேற்றாள் உரிய ஆசனத்தில் அமரச் செய்து அவரது வருகையால் மளிகை சிறப்புற்றது எனக் கூறினாள். அறவணடிகள் அவ்ர்களுக்கு அறிவுரைகள் கூறினார். மறுபிறப்பு பற்றி நன்குணர்ந்த மணுமேகலையே நீ மற்ற சமயக் கொள்கைகளை முதலில் அறிந்து வரவும். பின்னர் நான் உனக்கு புத்த மதக் கொள்கைகளை போதிப்பேன் என்று கூறிப் புறப்படலானர். அவர் எழக் கண்டதும். அவரை வணங்கி நான் ஆபுத்திரன் நாட்டிற்குச் செல்லப் போகிறேன். நீங்கள் அனைவரும் இந்த அருந்தவ முனிவர் சொன்னபடி நடந்து வாருங்கள். நான் இந்த நகரத்தில் இருந்த்தால் உதயகுமாரனைக் கொன்றது நான் தான் எனக் குறை கூறுவார்கள். எனவே நான் புத்த பீடிகையை வணங்கி வஞ்சி மாநகரை அடைந்து அங்கேயுள்ள கற்புக்கரசி கண்ணகி கோட்டத்தை வணங்கி நல்லறங்களை முடிந்தவரை செய்வேன். என்னைப்பற்றி யாரும் இனிக் கவலைப் பட வேண்டியதில்லை என்று கூறியவளய் அந்திப் பொழுதில் வான் வழியே புறப்பட்டுச் சென்றாள். அறவணடிகள் தம் தவப் பள்ளியை அடைந்தார்.


மணிமேகலை இந்திரனின் வழித் தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப்புற சோலைக்கு சென்று அங்குள்ள தரும்சாவகன் அடிகளை வணங்லி அவன் மூலம் அங்குள்ள அரசன் பெயரை அறிந்தாள். மழைவளம் சிறந்த இடம் என்று அறிந்து மகிழ்வடைந்தாள். எல்லாவளங்களும் அங்கே குறைவறக் கிடைப்பதை கண்டு நிறைவு கொண்டாள்.
<b> .. .. !!</b>
Reply
#50
<b>ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை.</b>

புண்ணியராசன் தம் மனைவியோடு அந்தச் சோலையில் புகுந்து தரும சாவகன் என்னும் மாமுனிவனை வணங்கி பின்னர் கையில் அமுதசுரபியுடன் நின்றமணிமேகலையை காட்டி யாரெனக் கேட்டான். இந்த நாவலந்தீவில் இந்த நங்கையை போன்று சிறப்புப் பெற்றவர் யாருமே இல்லை. என்று அவளைப் பற்றிக் கூறினார். மணிமேகலை மன்னனிடம் நீ இந்தப் பாத்திரத்தை மறந்து விட்டாயா? நீ உன் கையில் வைத்திருந்த அமுதசுரபி தான் இப்போது என் கையில் இஉர்ப்பதாகும். நீ உன் முற்பிறப்பை அறியாதவனாக இருக்கலாம். ஆனால் நீ ஆவின் வயிற்றில் பிறந்த இந்தப் பிறவியையாவது அறிந்து இருப்பாய் அல்லவா? மணிபல்லவம் சென்று புத்தர் பீடிகையை தொழுது வந்தால் உன்முற்பிறப்பு பற்றி நிச்சயம் தெரிந்து கொள்வாய் எனவே நீ தவறாது புத்தர் பீடிகைக்கு வர வேண்டும் என்று அன்புடன் த்ரிவித்துவிட்டு வான் வழியே பறந்து மணிபல்லவத்தை அடைந்தாள்.

மணிமேகலை வான் வழியே பறந்து மணிபல்லவத்தை அடைந்து புத்த பீடிகையை வலம் வந்து போற்றி வணங்கினாள். மணிமேகலை ஆபுத்திரனிடம் விபரங்களை கூறிசென்றபின்னர் அவன் தன் பழம் பிறப்பு பற்றி எண்ணிப் பார்ந்தான். மணிபல்லவத் தீவை நீண்ட நாளாக அடைந்து வலம் வர வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாகவே அவன் மனதில் எழுந்த வண்ணம் இருந்த்து இப்போது மணிமேகலை அதை வளர்த்து தூண்டி விட்டாள். எனவே அவன் அரச பொறுப்பை அமைச்சர் ஒருவனிடம் ஒப்படைத்து விட்டு மணிபல்லவம் புறப்பட்டன்.மணிபல்லவ தீவிற்ற்கு அவன் வருவான் என் எதிர்பார்த்திருந்த மணிமேகலை அவனைக் க்ண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். புத்த பீடிகையை வண்ங்கி எழுந்ததும் அவன் தன் பழம் பிறப்பை அறிந்தான். பின்னர் மணிமேகலையை அழைத்து கோமுகி என்ற பொய்கையை அடைந்து புன்னை மர நிழலிலே இளைபாறினான்.

அப்பொழுது தீவதிலகை தோன்றி ஆபுத்திரனுக்கு பழம் பிறப்பை உணர்த்தினாள். தீவதிலகை காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்த போது தனது எலும்புக்கூடு இருப்பதை க்ண்டு அஞ்சினான். அப்போது மணிமேகலை அரசே நீ அஞ்சவேண்டாம் உன்னை இங்கு வரழைத்தது நீ பழம் பிறப்பை அறிவதற்கே. உனது புகழ் பரவி நீ அறச்செயல்கள் செய்து நீடுழி வாழ்க வென வாழ்த்தினாள். மன்னவனே நீ இனி எதைபற்றியும் வருந்த வேண்டியது இல்லை நீ உன் நாட்டை விட்டுபிரிந்து வரவே தாங்கிக் கொள்ளாத நாட்டவர் உன்னை அழக்கிறார்கள் எனவே நீ உன் நாடு சென்று வளமுடன் பொலியச் செய் எனக்க்கூறி அவனை அனுப்பிவிட்டு வான் வழியாக வஞ்சி நகரை அடைந்தாள்.
<b> .. .. !!</b>
Reply
#51
<b>வஞ்சி மாநகர் புகுந்த காதை.</b>

வஞ்சி மாநகரை அடைந்த மணிமேகலை ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட கண்ணகி சிலையுடன் கோவலன் சிலையையும் வணங்கி ஏன் தாயே நீ தந்தை இறந்ததும் உன் வாழ்வை முடித்துக் கொள்ளாமல் அறக்கற்புடன் திகழாமல் இதுபோன்ற ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணி மறக்கற்பை மேற்கொள்ளக் காரணம் என்ன? என்று கேட்டாள். இவ்வாறு மணிமேகலை கூறக்கேட்டதும் கற்புக கடவுளான கண்ணகி தோன்றி அக்கதையை கூறினாள்.புத்தசமயத்தை மேற்கொண்டு அதன் வழி ஒழுகிடுவதில் தான் பிறப்பை ஒழிக்க முடியும் என்றெல்லம் கூறிச் சென்றாள்.
<b> .. .. !!</b>
Reply
#52
<b>சமயக் காணக்கர் தம் திறம் கோட்ட காதை. </b>

வஞ்சி மாநகரில் சென்றடைந்த மணிமேகலை ஆண் வேடம் தரித்து சமயவாதிகள் பலருடைய கொள்கைகளை அறிய விரும்பினாள். அவ்வாறே அவள் சைவவாதி , பிரம்மவாதி , வைணவவாது, வேதவாதியின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டாள்.
<b> .. .. !!</b>
Reply
#53
<b>கச்சிமா நகரம் புக்க காதை</b>

கச்சிமாநகரத்திலே மணிமேகலை பலவிதமன தண்ணீர் பாய்ந்து நிரப்பும் அகழியை கண்டு பெரிதும் வியப்புற்றாள்.மணிமேகலை புத்தர் பள்ளியை அடைந்த போது தம் பாட்டனாரான மாசாத்துவானைக் கண்டாள். அவரை வணங்கி அவர் நலம் பற்றிக் கேட்டாள்.காஞ்சி நகரம் பசியால் வாடுவதை தன் பேத்தியிடம் மாசாத்துவான் தெரிவித்தார். அவனும் தன் பாட்டனாரை வணங்கி வான் வழியே காஞ்சிக்கு பறந்தாள். அங்குள்ள மக்களின் துயர் போக்கினாள். அறவணசிகள் மாதவி சுதமதி அவ்ர்கள் இருப்பிடம் தேடி வந்தார்கள். இவர்களை கண்ட மணிமேகலை பெரு மகிழ்வடைந்து அவர்களாஇ வரவேற்று அறவணடிகளுக்கி உரிய ஆசனம் கொடித்து மரியாதை செய்தாள். அறுசுவை உணவளித்து போற்றினாள்.
<b> .. .. !!</b>
Reply
#54
<b>தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை</b>

அறவணடிகள் பூம்புகாரை கடல் கொண்டது பற்றிக் கூறினார். இந்திர விழா நடைபெறாத காரணத்தை கூறி அதனால்தான் கடல் கொண்டது என்றார் அறவணடிகள். பூம்புகார் கடலில் மூழ்கியது மட்டுமன்றி காகந்தி நகரமும் மூழ்கிய விபரத்தையும் அடிகள் கூறினார். எனவே தான் தாம் மாதவியௌயும் சுதமதியையும் அழைத்து வந்து விட்டதாக கூறினார். மணிமேகலை அடிகளிடம் தான் மன அமைதி இன்றி தவித்து கொண்டிருப்பதாக கூறினாள். அவரே தனக்கு அமைதியை தர வேண்டும் எனக் கூறினாள். அவர் மணிமேகலையிடம் காண்டல் கருதல் இரண்டு தத்துவ நூல்களை கற்கச் சொன்னாரவ்ரும் சி உண்மைகளை விளக்கி உரைத்து மணிமேகலைக்கு அமைதியை தந்தார்.
<b> .. .. !!</b>
Reply
#55
<b>பவத் திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை.</b>

எல்லா வழிகளிலும் பூரணத்துவம் பெற்ற மணிமேகலை புத்த தர்மத்தை பெரிதும் போற்றி ஒழுகினாள். அவள் உள்ளம் எல்லாம் புத்தபெருமானின் கருத்துக்கள் நிறைந்திருந்தது. அறவணடிகள் மணிமேகலையின் கூரிய அறிவையும் புத்தர் கொள்கையில் அவள் கொண்ட பற்றையும் பெரிதும் பாராட்டி பேசினார். பவத்திறம் அறுக - அதாவது பிறவி வகைகள் ஒழிய வேண்டும் என்ற எண்ணமுடன் மணிமேகலை தவம் செய்தாள். இனி இது போன்று பலப்பல பிறவிகள் எடுக்கும் நிலையே வேண்டாம் என்பது மணிமேகலையின் கருத்து.


இதையே புத்தரின் கருத்தும் வலியுறுத்துவதால் மணிமேகலை " மறு பிறவியே வேண்டாம்" என்று தவம் இருக்க தொடங்கினாள். மணிமேகலையின் கருத்துப்படி இன்னொரு பிறவி தேவை இல்லை என்பது தான் அறவணடிகளின் கருத்துமாகும்.இன்னொரு பிறவி எடுத்து அதிலும் பாவச் செயல்கள் செது , அந்தப் பாவச் செயல்கள் மேலும் நீண்டு கொண்டே போகக் கூடாது என்பதுதான் நல்லோர்களின் - தெளிந்த அறிஞர்களின் கருத்தாகும். மணிமேகலையும் இதைத்தான் வலியுறுத்துகிறாள்.

[b]மணிமேகலை புகழ் வெல்க!!!!!!

நிறைவு பெறுகிறது. -/\-
<b> .. .. !!</b>
Reply
#56
இரசிகை ஏதாவது ஆராச்சிக்காக படித்தீர்களா?? உங்கள் மூலம் மணிமேகலை எனும் காப்பியம் யாழ்க் களத்தில் வருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி.
Reply
#57
வணக்கம் வம்பு சா வசம்பு அண்ணா

நான் ஒரு ஆராச்சிக்காவும் படிக்கவில்லை இலங்கயில் இருக்கும் போது தமிழில் படித்தது. அப்புறம் இப்ப லீவில் நீக்கும் போது எனது பொழுதுபோக்கு நாவல்கள் வாசிப்பது சோ நான் வாசிச்சதை சுருக்கமாக சொன்னேன் அவ்வளவு தான். எனக்கு ரொம்ப சந்தோசம் என்னால் நீங்கள் எல்லோரும் வாசிக்க முடிந்தையிட்டு. <b>யான் பெற்ற இன்பம் பெறக இவ்வையகம் </b>
<b> .. .. !!</b>
Reply
#58
<b>வாழ்த்துக்கள் ரசிகை.. உங்களது சேவைக்கு நன்றிகள். </b>இன்னும் இறுதிப்பாகங்கள் சில வாசிக்க வேண்டி உள்ளது. வாசித்து பயன் பெறுகிறேன்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#59
Vishnu Wrote:<b>வாழ்த்துக்கள் ரசிகை.. உங்களது சேவைக்கு நன்றிகள். </b>இன்னும் இறுதிப்பாகங்கள் சில வாசிக்க வேண்டி உள்ளது. வாசித்து பயன் பெறுகிறேன்.

நல்லது உங்கள் சந்தோசமே எனது சந்தோசம் நண்பனே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#60
Rasikai Wrote:நல்லது உங்கள் சந்தோசமே எனது சந்தோசம் நண்பனே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தற்சமயம் கைவசம் கொஞ்சம் பிரச்சினைகளும் உள்ளன..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)