Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வலி தெரியாக் காயங்கள்
#41
ஐயா (மரியாதை வேணும் என்று அழுறியளே அது தான்) முகத்தாரே என்ன நடந்தது.. அது தான் கொப்பி பண்ணி இங்க அனப்பச்சொல்லியிருக்கு சே அதுக்க நொட்டை. :evil: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#42
நன்றி நண்பர்களே உங்கள் சொல்படி முயற்சிகிறேன் நாளையில் இருந்து என்கதைகள் தொடரும் உங்கள் ஆதரவுக்கு சிரம் தாழ்ந்த நண்றிகள் பார்ப்போம்
inthirajith
Reply
#43
வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 7

அடுத்த நாள் அதிகாலையிலே வந்த சண், வேணியை சந்திக்க வந்தான். அங்கே வெளி நாட்டில் குளிரிலும் பிள்ளைகளுக்காக கஸ்டப்பட்டு அனுப்பிய பணத்தை அம்மாவை இயக்கத்துக்கு போடுவன் என்று சொல்லி பயமுறுத்தி, வாங்கிய மோட்டார் சைக்கிள் மைனர் செயின் தமிழ் படகதாநாயகன் என்ற நினைப்பில் பந்தாவுடன் ஒரு கூட்டம் பொடியங்கள் நின்றார்கள்.

வேணி சண் உடன் வந்ததை பார்த்தவர்கள் நக்கலாக "ஓ வந்தவுடனே பிடித்து விட்டங்காள் நாங்கள் தான் சும்ம பின்னாலே சுத்தியது" என்று ஒருவன் சொல்ல எல்லோரும் கோரஸ்ஸா சிரித்தபோது கோபம் தலைகேற தான் கற்ற கராத்தே வித்தையை ஒருவனிடம் காட்டினான் சண். அதை பார்த்தவர்கள் எப்படி அந்த இடத்தை விட்டு ஓடினார்கள் என்று தெரிய வில்லை வேணி பஸ் ஏறும் போது அவளுடனே அவனும் கூடவே வந்தான் பஸ்ஸில் அவளுக்கு அருகில் யாருமே அவளில் இடிக்காத மாதிரி காவல் நின்றான் சண்.

வேலைக்கு எல்லோரும் போகும் நேரம் இன்று தான் யாருமே அவளை இடிக்காதமாதிரி பயணம் செய்தாள். அவன் விரல் நுனி கூட அவள் மேல் படவில்லை அத்துடன் ஒன்றுமே கதைக்கவும் இல்லை மௌனமாகவே வந்தவனை பார்த்து அவனது நாகரிகமான நடத்தையை தனக்குள்ளே மனதுக்குள் ரசித்தாள் வேணி.

அன்று மாலை வீட்டுக்கு வந்த போது அம்மா சிரித்த போது ஒருகவலை விட்டது போல் சிரித்தா வேணி கேட்டாள் "என்ன அம்மா சிரிப்பு" என்று "இல்லை பிள்ளை காலமை சந்தியில் நின்ற பொடியங்களுக்கு சண் அடித்து விட்டாராம் இப்போ ஒருத்தனையும் அதில காணவில்லை அப்பா சொன்னார் அது தான் சிரித்தன்" என்ற போது.

" அம்மா அது என்னை எல்லோரும் நக்கலடித்தவை நான் தான் சண்ணிடம் சொன்னேன் அவர் இண்டைக்கு காலமை என்னோட வந்து தான் அடிச்சவர் அவங்கள் ஓடின ஓட்டமோ " என்று சிரித்தாள் வேணி. "அம்மா அவர் வந்தால் அவரை ஒரு நாள் சாப்பிட கூப்பிடவேணும் அம்மா " என்று சொன்ன வேணியை அம்மா ஆச்சரியமா பார்த்தபடியே கேட்டா "என்ன பிள்ளை சொல்லுறாய்" இல்லையம்மா என்ற வேணியை "இதுவரை யாரையும் சாப்பிட கூப்பிட்டதில்லை இப்போ தான் அந்த நல்லபழக்கம் வந்து இருக்கு கொழும்பு தம்பிக்கு இருக்கிற நல்லபழக்கம் உனக்கும் கொஞ்சம் வருகுது நல்லம் தான் அவைரை வரச் சொல்லு அவை எல்லோரையும் வர சொல்லு என்ன விருப்பம் என்று கேளு அப்போதhன் விரும்பியதை சமைக்கலாம்" என்று சொன்ன அம்மா " உன் பிறந்த நாளுக்கு வரச் சொல்லி கூப்பிடு சந்தோசமக இருக்கும் தானே" என்ற அம்மாவை அப்படியே கட்டி பிடித்து முத்தமிட்டாள் வேணி

-தொடரும்-
inthirajith
Reply
#44
<!--QuoteBegin-inthirajith+-->QUOTE(inthirajith)<!--QuoteEBegin-->அடுத்த நாள்  <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அண்ணா வாழ்த்துக்கள்
அண்ணா என்ன ஆச்சு இந்தப்பாகத்தில் நிறையப்பிழைகள் இருக்குதே.. ஏன் நேரமில்லையா?? அத்துடன் இந்தமுறை உங்கள் பழைய உரைநடையில் கதை ஏனோ அமையவில்லை என் என் மனதில் பட்டதை கூறுகிறேன்
மன்னிக்கவும்

நன்றி
Reply
#45
உண்மைதான் சரியான தூக்க கலக்கம் சரியாக கண்டுபிடித்து விட்டிர்கள்
inthirajith
Reply
#46
இந்திரஜித்

"கவலையை விடுங்கள். இதற்குப் போய் மனதைத் தளர விடலாமா?? இனிமேல் நீங்கள் ஆக்கங்களை எழுதிய பின் மேல் பெட்டியிலுள்ளது முழுவதையும் அடையாளப்படுத்தி அதில் வலது பக்க மௌசை அமுத்தி பிரதி செய்யுங்கள். அதன் பின் உங்கள் ஆக்கத்தை அனுப்பும் போது ஏதாவது பிரைச்சினை வந்தால் நீங்கள் திரும்பவும் மேல் பெட்டியனுள் தொடக்கத்தை மௌசால் அடையாளப்படுத்தி வலது பக்க மௌசை அழுத்தி திரும்பவும் பிரதியீடு செய்யலாம். இதனால் இல்லாமல் போன உங்கள் ஆக்கம் மீண்டும் அங்கு வந்து விடும். இனியென்ன அனுப்ப வேண்டியது தானே. எமக்கேற்படும் ஒவ்வொரு தோல்விகளும் தான் வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன. கவலை வேண்டாம் தொடர்ந்து வாரும் நண்பரே!!!!!!!!"

வசம்பூ... நீர் முதல்ல இந்த கலரில பதில் எழுதுறத விடும்.. நான் கதை எண்டு நினைச்செல்லே வசிச்சிட்டன்...... :roll:



!
--
Reply
#47
நல்லாயிருக்கு... தொடருங்கள்....... எழுத்து பிழைகள் இருந்தால் பருவாயில்லை..... குறைகளை பர்காமல் நிறைகளை பார்ப்போம்



!
--
Reply
#48
ஓ ஓ ஓ உங்களைப் போல் சிலருக்கு கலரிலை எழுதினால்த்தானே தெரியுது. ஆனால் பாருங்கோ நான் கலரிலே <b>கருத்துத் தான் எழுதினேன் வீடு ஒன்றும் கட்டவில்லை</b> நீங்க வந்து வசிச்சிட்டு போக.
Reply
#49
கதையில யார் வசிப்பினம்? அந்த வரிய வாசிக்கேக்க புரியவேண்டாம்? :wink: சரி சரி.. .எண்டாலும் நல்லா ஜோக் அடிக்கிறிங்கள்...



!
--
Reply
#50
கதை நல்லா போகுது ...... தொடருங்கள் ... வாசிப்பதற்க்கு ஆவாலாக இருக்கிறோம்..... வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#51
kpiriyan wrote:
கதையில யார் வசிப்பினம்? அந்த வரிய வாசிக்கேக்க புரியவேண்டாம்? :wink: சரி சரி.. .எண்டாலும் நல்லா ஜோக் அடிக்கிறிங்கள்...

:mrgreen: :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#52
ம்ம்ம் அண்ணா தொடருங்கள்

வாழ்த்துக்கள்

ஆனால் பொறுமை இல்லாமல் இருக்கு அண்ணா விரைவில்
<<<<<..... .....>>>>>
Reply
#53
வலி தெரியாக்காயங்கள் பாகம் 8

வேணிக்கு அடிக்கடி சண்ணைப் பார்க்க ஆவலாக இருக்கும். ஆனால் சண் பல்கலைக்கழக புகுமுகவகுப்பு மாணவன் என்பதால் அவன் அப்பா கடிதம் போட்டு இருந்தார். முடிந்தால் ஓர் அறை எடுத்து, திருநெல்வேலியில் தங்கும் படியும்இ அதனால் நாளாந்தம் 4 மணி நேரம்போக்குவரத்தை குறைத்து கூட படிப்பில் கவனம் செலுத்தலாம் என்று அவனுக்கும் அது சரியாகவே பட்டது

வேணியிடம் சொன்னபோது அவள் முகம் வாடி விட்டது "என்னங்கோ நீங்க போனால் அம்மா தனிய தானே உங்கள் தங்கையும் சின்ன பிள்ளை உதவிக்கு நாங்கள் இருந்தாலும் இரவில் ஒரு துணை வேணும் தானே உங்கள் அப்பா இங்கே இடம்மாற்றம் பெற்று வந்ததும் பிறகு தனிய போவது பற்றி யோசிக்கலாம்" என்று சொன்ன வேணியை அன்புடன் பார்த்த சண் "உண்மை தான் வேணி இதை நான் யோசிக்கவே இல்லை நன்றி" என்று கதைத்து கொண்டு இருக்கும் போது அங்கே வந்த சண் அம்மா கேட்டா" என்ன கனக்க யோசிக்கிறீங்கள் "இல்லையம்மா அப்பா கடிதம் போட்டவர் தானே அது தான் வேணிக்கு சொன்னேன் வேணி என்னை தனிய போகவேண்டாம் அப்பா வந்தவுடன் போகலாம் என்று சொல்லுறா நீங்கள் தனியவாம் என்று அபிப்பிராயப்படுரா எனக்கும் அது சரியா படுது நீங்க என்னம்மா சொல்லுறீங்கள்?" சண் என்று கேட்டபோது பக்கத்தில் நின்ற வேணியை அன்பாக தலையை தடவிய படி சண் அம்மா சொன்னா "நன்றி பிள்ளை நானும் அப்படி தான் யோசித்தேன் தனிய ஒரு ஆண்துனை இல்லாமல் இருப்பது சிரமம் தானே சண் நீயும் யோசித்து முடிவு எடு உனக்கு படிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவெணும் தானே?" என்று அம்மா சொன்னபோது "இல்லையம்மா மூன்றாம் வருடம் தான் கனக்க படிக்கவேணும் அதோடை மருத்துவப்பயிற்சி க்கு பெரியாஸ்பத்திரியில் பிறாக்ரீஸ் க்கு போகவேணும் அப்போ தான் தனிய தங்கவேணும் அப்போ யோசிப்போம்" என்று சண் சொன்னபோது வேணிக்கு ஆறுதலாக ஒரு நிம்மதி வந்தது அதோடை வேணி சொன்னாள் "எனக்கும் சந்தேகம் வந்தால் உங்களிடம் கேட்கலாம் தானே? என்று சொன்ன வேணியின் தலையில் அன்பாக குட்டினான். சண் "நல்ல புத்திசாலி என்று உங்கள் விலங்கியல் ஆசிரியர் சொன்னார் அன்று என்னுடன் பஸ்ஸில் கூட வந்தவர் வேணி அப்போ தான் சொன்னார் உங்களுக்கும் என்றன்ஸ் கிடைக்குமாம் " என்ற போது அவனுக்கு தன்னில் இருக்கும் அக்கறையை நினைத்து பெருமையாக இருந்தது வேணிக்கு.

அப்போதான் வேணி பக்கத்தில் நின்ற சண் அம்மாவிடம் சொன்னாள் " அம்மா சொன்னவா உங்களை 8ஆம் திகதி வீட்டை வரட்டாம் எல்லோரையும் வர சொல்ல சொன்னா" என்ற போது "என்னபிள்ளை விசேஷமோ? சும்மா தான்வரசொன்னா என்று வேணி சொல்ல அதை கேட்டு சிரித்த சண் " அம்மா அண்டைக்கு தான் இந்த வால் பிறந்த நாள் என்று சொல்லிச் சிரித்தான் அப்போ கேட்டாள் வேணி "எப்படி தெரியும் என் பிறந்த நாள் என்று அப்போ சண் உங்கள் அம்மாவிடம் கேட்டேன் சொன்னாங்க வேணி ம்ம் நல்ல தான் என்னை பற்றி எல்லாரிட்டையும் விசாரித்து திரியுறீங்கள் என்று சொன்ன வேணியின் கன்னம் நாணத்தால் மெல்ல சிவந்தது.

-தொடரும்-
Reply
#54
அன்று வேணியின் பிறந்த நாள். மாலைநேரம் அழகாக தன்னை அலங்கரித்து எப்போ சண் குடும்ப்ம் வருவினம் கேக் வெட்டலாம் என்று ஆவலோடு பதட்டமும் கலந்து இருந்தது வேணிக்கு.

முதல் முதலாக சாறி கட்டியதை சண் பார்க்க போவதை நினைத்து மனம் ஏதோ அவளுக்குள் நாணமாக இருந்தது. அம்மா கேட்டா "என்ன பிள்ளை அடிக்கடி கண்னாடிக்கு முன்னாலை நிக்கிறாய். அதெல்லாம் வடிவாதான் இருக்கு ஏன் ஒருக்கா கோவிலுக்கு போயிருக்கலாம்தானே?" என்று அம்மா சொல்லவும்: சண் அம்மா குரல் கேட்கவும் சரியாக இருந்தது. மனது முயல் குட்டி போல் துடிக்க வாங்கோ என்று வரவேற்றார் அப்பா மெல்ல வெளியே எட்டி பார்த்த வேணிக்கு அங்கே சண் இல்லாதது ஏமாற்றமாக இருந்தது. அப்போ வேணியை கண்ட சண் அம்மா "யாரது? புது பொம்பிளை அங்கே வாறது" என்று ஆச்சரியத்துடன் "பிள்ளை வேணி நல்ல அம்சமாக இருக்கிறீங்க" என்று கன்னத்தில் முத்தமிட்டபடியே பிறந்த நாள் வாழ்த்து சொன்னா

பின்னாலே வந்த சண் தங்கையிடம் ரகசியமாய் கேட்டாள் வேணி "எங்கே உங்கள் அண்ணா? என்று அவருக்கும் சமைத்து விட்டோம் " தெரியாது இப்போ தான் வெளியே போனவர் வருவார் என்று சொல்லி விட்டு விளையாட ஓடிவிட்டா சண் தங்கை.

கொஞ்ச நேரத்தில் படலை கிறீச்சிட்டது எட்டிப்பார்த்த போது கையில் அர்ச்சனை பொருட்களுடன் சண் வந்து கொண்டு இருந்தார். வந்தவன் குரல் கொடுத்து வேணியை கூப்பிட்டபோது, அதற்காகவே காத்து இருந்த வேணி "ஓம் வாறேன்" என்று கூறியவாறே மான் குட்டி போல துள்ளி ஓடி அருகில் வந்த போது தன் கண்ணையே தன்னால் நம்ப்ப முடியாமல் நின்று விட்ட சண் தன்னை சுதாகரித்து கொன்டவனாய் " கடவுளே இப்பதான் அம்மன் கோவிலுக்கு போனேன் அந்த அம்மன் இங்கேயும் வந்தது போல் இருக்கு வேணி. சாரிக்கு நீங்க அற்புதமாக இருக்கிறீங்க இந்தாங்கோ பிரசாதம் உங்கள் பேரிலை அர்ச்சனை செய்தேன் நெற்றியில் வையுங்கோ வேணி" என்று பிரசாத தட்டை அவளிடம் கொடுத்தான்.

அவளும் குங்குமத்தை நெற்றியில் வைத்தபோது சண் கேட்டான் "ஏன் விபூதி தானே முதல் வைக்கவேணும்" என்று "ம்ம்" என்று விட்டு வேணி கேட்டாள் "எப்படி தெரியும் என் நட்சத்திரம் சொல்லுங்கோ" என்று "ம்ம் உங்கள் அம்மா தான் சொன்னா" என்ற போது அவன் அன்பும் அவளை நினைத்து அவள் நல்ல இருக்கவேணும் என்று கோவிலுக்கு போய் வந்த அவனை பாசத்துடன் பார்த்தபடி "வாங்கோ இண்டைக்கு என்கையால் தான் சாப்பிட வேணும் என்று சொல்லி விட்டு கேக் வெட்ட ஆயத்தமானார்கள் எல்லோரும்.

கேக் ஊட்டிய போது சன் மட்டும் கேக்கை கையில் வெட்டி கொடுத்தான் ஊட்டவில்லை அது அவளுக்கு ஏமாற்றம் தான். அவனின் அந்த குணம் பிடித்து இருந்தது வாஞ்சையை செயலில் காட்டும் அவனது இயல்பு, ஒரு நல்ல அன்பான மற்றவரை மதிக்க தெரிந்தவன் என்று அவள் மதிப்பில் சண் உயர்ந்து நின்றான்.

-தொடரும்-
inthirajith
Reply
#55
அண்ணா கதை உண்மையில் நன்றாகப் போகின்றது வாழ்ததுக்கள் ஆனால் முடிவைப்பார்த்தால் பெரும் சோகமாக அமையும் போல இருக்கு
<<<<<..... .....>>>>>
Reply
#56
கதை நன்றாயிக்கிறது...தயவு செய்து முடிவை சோகமாக முடிக்காதீர்கள்..

Reply
#57
ரமா முடிவு எப்படி இருந்தால் என்ன? அவரின் கற்பனைக்கு
எழுதட்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#58
கதை நன்றாக இருக்கு இந்திரஜித் அண்ணா...தொடருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஒரு தலைப்பின் கீழே எல்லா பாகத்தையும் போட்டால் நல்லாயிருக்கும் ... ஒவ்வொரு பாகமா போடுறதால் எல்லா பாகத்தையும் தேடி தேடி வாசிக்க வேண்டியிருக்கு ... தப்பா சொன்னால் மன்னித்துக் கொள்ளுங்க ... மனதில் பட்டதை சொன்னன்... :roll: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#59
கடவுளே எனக்கு தலை சுற்றுகிறது கதையின் போக்கை மாற்றி எழுதவா இல்லை சீக்கிரமாக முடிக்கவா?சோகம் வேண்டாம் என்கிறார்கள். எனக்கோ 15 மணி நேர வேலையில் குழுப்பமாக இருக்குடா சாமீஈஈஈஈஈ
inthirajith
Reply
#60
உண்மையில் அபிப்பிராயம் சொல்லும் அனைத்து உள்ளங்களுக்கும் திருத்தி எழுதி எனக்கு உதவி பண்னும் உள்ளங்களுக்கும் நண்றிகள்
inthirajith
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)