Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெரியாத பாதை தெளிவானபோது
#41
தம்பி சாத்திரிக்கு இந்த உடுப்புகளைப் பற்றி கவலையில்லையப்பா அட நான் சொன்னது கீழதேச உடுப்புகளைப்பற்றி ஜீன்ஸ் ரி .சேட்டிலை தான் ஆள் இப்ப சிந்து பாடிக் கொண்டு திரியிறார்.........மதன் சும்மா உம்மை சத்தம் போட வைச்சிட்டு பிறகு புூட்டோடை வருவர் இதுகளின் உசாரா இரு அப்பு............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#42
Quote:.மற்றது இன்னொரு விசயம் இங்கை சினேகிதருக்கு வணக்கம் சொல்லேக்கை கன்னத்திலை கொஞ்சுறதுதான் வழக்கம் பாத்திருப்பீர் வெளியாலை அதாலை வாறவன் யாரும் கொஞ்சவந்தால் வெருண்டடிச்சு மரியாதையை வாங்கி போடாதையும் நீரும் பதிலுக்கு கொஞசும் என்ன.

இதென்ன இது புதுவழக்கம். இப்படிவேறை நடக்கிதா.. எப்ப இருந்து. சின்னப்பிள்ளைகளை து}க்கி கொஞ்சிறதைக்கண்டிருக்கன். பெரியாக்கள். :roll: :roll: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#43
தமிழினி

அங்கு குறிப்பிடப்பட்டது பார்ட்டிக்கு வரும் ஐரோப்பியர்கள் செய்வது பற்றியே. நீங்களும் ஐரோப்பாவில் தானே வாழ்கின்றீர்கள். இதுவரை ஐரோப்பியர்களின் விழாக்கள் ஒன்றிலும் கலந்து கொள்ளவில்லையா??
Reply
#44
இந்த முறை கீழ் வீட்டில் வசிக்கும் அந்த இரண்டு இளைஞர்களைபற்றியும் பார்ப்போம்

கதவை திறந்து உள்ளே நுளைந்த சிறி சிவாடேய் எனக்கு ஒரு கடிமொண்டு வந்திருக்கு இதென்ணெண்டு ஒருக்கா வாசியடா என்று ஒரு கடிதத்தை சிவாவிடம் நீட்டினான்

படம்பார்த்து கொண்டிருந்த சிவா. இவனொருத்தன் பெட்டிக்கை போடுற விளம்பரத்தையெல்லாம் தூக்கியந்து படி படியெண்டு தொல்லைஅதுகளை வேறை சேத்து வைச்சு வீட்டுக்கை கடதாசி சேந்து போச்சு அடசீ இதுவும் விளம்பரம்:தானடா கொண்டு போய் குப்பையிலை போடு. என்று அந்த கடதாசியை எறிந்தான்

அட ஏதோ படிக்கிறனெண்டு ஒரு கொப்பியை தூக்கி கொண்டு திரியிறாய் பிரெஞ்சு தெரிஞ்சிருக்குமெண்டு கேட்டன்.உன்னை மாதிரி நானும் அண்ணன் கூப்பிட்டு விட்டிருந்தா பாசை படிக்க போயிருப்பன் நான் கடன் பட்டு வந்திட்டதாலை..........................என்று சிறி தொடங்க

அடடா தொடங்கிட்டான் சோக கதை சொல்ல நிப்பாட்டு அது சரி மேலை ரவியருக்கு மனிசி வந்திட்டுது தெரியுமோ? உனக்கு சொன்னவனோ ? நான் இரண்டு மூண்டுதரம் கண்டனான் தனக்கு ஏற்ற மாதிரித்தான் தேடிப்பிடிச்சிருக்கிறான்.சரியான திமிர்அவாக்கும். முதல்நாள் கண்டு வணக்கம் சொன்னன் பதிலுக்கு ஒரு வணக்கம் ஊகும் சரி ஒரு சிரிப்பு அதுகூட இல்லை நீ கண்டனியோ ஆளை ?

ஓ நான் பின்நேரத்திலை வேலையாலை வரேக்கை காணுறனான் படிக்க பேறவா போலை ஆனால் நான் சிரிச்சா தானும் சிரிச்சிட்;டு போறவா ஆனால் நான் இன்னும் கதைச்சது கிடையாது. நீ வணக்ம் சொன்னதெண்டுறாய் உன்ரை கோலத்தை பாத்ததும் அது பயந்திருக்கும் அதுதான் கதைக்கேல்லை போலை. நீ முதல் உந்த தலைமயிரை தாடியை வெட்டி மனிசர் மாதிரி திரியெண்டு எத்தினை தரம் சொன்னனான் கேட்டாதானே நீ .

எட சிறி நிப்பாட்டு அது என்ன நான் தண்ணிஊத்தியா வழக்கிறன் தானா வளருது அதைவிடு அவாவுக்கு ஒரு நாளைக்கு இருக்கு ஒருநாளைக்கு தனிய இனி லிப்ற்க்கை அம்பிடட்டும் என்ன செய்யிறணெண்டுபார்

சரி சிவா ஏன் ஊர்வம்பை விலைக்கு வாங்கிறாய் அவன் ரவி வேறை அடையார் கட்டு கோஸ்ரியளோடை திரியிறவன் மனிசி இப்பதானே வந்தது இனி போக போக தானே அவனின்ரை விழையாட்டுகள் தெரியும் யாரோ பாவம் மாட்டு பட்டிட்டிது. சரி நீ எழும்பு இண்டைக்கு உன்ரை சமையல் நாள் இந்தா சுறா மீன் வாங்கியந்தனான் எழும்பி சமை என்றவாறு சிறி குளியலறையில் நுளைந்தான்.

ரவியின் வீட்டில் ஆங்கில பாடலின் இசை உச்சத்தில் ஒலித்துகொண்டிருக்க இiளுஞர் யுவதிகள் தங்களிற்கு விரும்பிய மதுவை உள்ளே இறக்கியபடிஆட்டம் பாட்டம் என்று பாட்டி தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது. சாந்தி ஒரு கிளாசில் கொஞ்சம் கொக்கா கோலாவை கையில் பிடித்தபடி இவற்றை புதுமையாக பார்த்து கொண்டிருந்தாள்.

அவர்கள் மாறி மாறி வெளியே பல்கணியில் போய்நின்று புகை பிடித்து கொண்டு நின்றவர்கள் போதை ஏற ஏற உள்ளே வந்திருந்து ஊதி தள்ள தொடங்கினார்கள்.ஒருவன் ஒரு சிறு பொலித்தீன் ihயிலிருந்து எதையோ எடுத்து சுடாக்கி சிகரட்டில் போட்டு எல்லாருக்கும் குடுத்துகொண்டிருந்தான்.

அப்போது ஒருவன் மேசையில் வைத்து விட்டு போன ஒரு சிறு பொலித்தீன் பையை சாந்தி மெதுவாக எடுத்து பார்த்தாள். அதில் சிறிதளவு காய்ந்த கஞ்சா இருந்தது.சாந்தி கஞ்சா பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறாள்.

அதனால் இது கஞ்சாவாக தான் இருக்க வேண்டும் எண்று முடிவெடுத்தாள்.அட கடவுளே இந்த பழக்கம் வேறை இவருக்கு இருக்கா எண்று நினைத்தவள் மேலும் அங்கிருக்க பிடிக்காமல் அறைக்குள் போக நினைத்து எழுந்தவளை தங்களுடன் ஆடதான் எழுந்தாள் என நினைத்த ஒருவன் சாந்தியின் கையை பிடித்து மறு கையை சாந்தியின்இடையில் பிடிக்க அவள் அவனை திமிறிய படி தள்ளிவிட ஏற்கனவே போதையில் தள்ளாடியபடி நின்றவன் அப்படியே மல்லாந்து மேசையில் விழ சாந்தி அறைக்குள் ஓடி விட்டாள்.

இதை பார்த்த ரவி ஆவேசமாய் கதவை தள்ளியபடி அறையுள் நுளைந்தவன் ஏன்டி நாயே உனக்கெவ்வளவு திமிர் அவனை ஏனடி தள்ளினனி எண்று கத்தியவாறு சாந்தியை மாறி மாறி அறைந்தான்.

இதனை சற்றும் எதிர் பார்க்காத சாந்தி அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் அடிப்பதை தடுக்ககூட முடியாமல் நிற்க அவனது நண்பர்கள் வந்து ரவியை வெளியே இழுத்து கொண்டு போய்விட்டார்கள்.

சாந்திக்கு அப்போ அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய தெரியவில்லை ரவியா இப்படி தன்னை அடித்தான் என்று அவளால் நினைத்து பார்க்கமுடியவில்லை சாதாரணமாதான் அவனை தள்ளி விட்டனான் அவன் போதையிலை நிண்டவன் விழுந்திட்டான். அதற்கு இப்படியா என நினைத்தவள் தலையணையில் முகத்தை புதைத்தபடி அழுது கொண்டிருக்க ரவியும் மற்றவர்களும் வீட்டிலிருந்து வெளியேறி விட்டனர்.


எவ்வளவு நேரம் அழுதாள்: என்று தெரியவில்லை அப்படியே நித்திரையாகி விட்டாள் Arrow

பிற குறிப்பு: பிரான்சில் அடையார் என்றால் பிரான்சில் வசிக்கும் அல்ஜீரிய இனத்தவரை குறிக்கும்

கட்டைஎன்றால் ஒருவித போதைப் பொருள் பார்த்தால் மரகட்டை போல இருப்பதால் அதனை கட்டை என்பார்கள் எம்மவர்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#45
Vasampu Wrote:தமிழினி

அங்கு குறிப்பிடப்பட்டது பார்ட்டிக்கு வரும் ஐரோப்பியர்கள் செய்வது பற்றியே. நீங்களும் ஐரோப்பாவில் தானே வாழ்கின்றீர்கள். இதுவரை ஐரோப்பியர்களின் விழாக்கள் ஒன்றிலும் கலந்து கொள்ளவில்லையா??

கலந்து கொண்டதுண்டு. ஆனால் கைகுலுக்கலோடு வணக்கத்தை முடிப்பது தான் எங்கள் வழக்கம். இப்படியான முறைகள் புதிசாக்கிடக்கு.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#46
Quote:அதனால் இது கஞ்சாவாக தான் இருக்க வேண்டும் எண்று முடிவெடுத்தாள்.அட கடவுளே இந்த பழக்கம் வேறை இவருக்கு இருக்கா எண்று நினைத்தவள் மேலும் அங்கிருக்க பிடிக்காமல் அறைக்குள் போக நினைத்து எழுந்தவளை தங்களுடன் ஆடதான் எழுந்தாள் என நினைத்த ஒருவன் சாந்தியின் கையை பிடித்து மறு கையை சாந்தியின்இடையில் பிடிக்க அவள் அவனை திமிறிய படி தள்ளிவிட ஏற்கனவே போதையில் தள்ளாடியபடி நின்றவன் அப்படியே மல்லாந்து மேசையில் விழ சாந்தி அறைக்குள் ஓடி விட்டாள்.
ஆகா கதையின் நாயகனிட்ட இந்தப்பழக்கமா?? சாத்திரி சிறிய வருத்தம். நாயகியை அறைந்த உடனை திருப்பி அவா 2 குடிச்ச போதை தீர போட்டிருந்தா றொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எத்தனை நாளைக்குத்தான் இப்படி அடிக்க வாங்கீட்டிருக்கிற மாதிரி கதை எழுதப்போறியளோ.. ம் ம் போகட்டும் வாசிப்பம் வாசிப்பம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#47
ஆகா சாத்திரி ஐயா கதை சூப்பர் அருமை மிகவும் நல்லாயிருக்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Reply
#48
ஆகா கதாநாயகன் விளையாட்டு காட்ட வெளிக்கிட்டரா? அவரின் விளையாட்டில் என்ன என்ன பலி ஆகப்போகுது என்பதை பொறுத்திருந்து பார்க்கின்றோம் சாத்திரியார்

Reply
#49
tamilini Wrote:
Quote:அதனால் இது கஞ்சாவாக தான் இருக்க வேண்டும் எண்று முடிவெடுத்தாள்.அட கடவுளே இந்த பழக்கம் வேறை இவருக்கு இருக்கா எண்று நினைத்தவள் மேலும் அங்கிருக்க பிடிக்காமல் அறைக்குள் போக நினைத்து எழுந்தவளை தங்களுடன் ஆடதான் எழுந்தாள் என நினைத்த ஒருவன் சாந்தியின் கையை பிடித்து மறு கையை சாந்தியின்இடையில் பிடிக்க அவள் அவனை திமிறிய படி தள்ளிவிட ஏற்கனவே போதையில் தள்ளாடியபடி நின்றவன் அப்படியே மல்லாந்து மேசையில் விழ சாந்தி அறைக்குள் ஓடி விட்டாள்.
ஆகா கதையின் நாயகனிட்ட இந்தப்பழக்கமா?? சாத்திரி சிறிய வருத்தம். நாயகியை அறைந்த உடனை திருப்பி அவா 2 குடிச்ச போதை தீர போட்டிருந்தா றொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எத்தனை நாளைக்குத்தான் இப்படி அடிக்க வாங்கீட்டிருக்கிற மாதிரி கதை எழுதப்போறியளோ.. ம் ம் போகட்டும் வாசிப்பம் வாசிப்பம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்படி எழுதினால் கதையில் யதார்த்தம் இல்லை என்று சொல்லமாட்டீங்களா?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#50
<b>தமிழினி எழுதியது:</b>
கலந்து கொண்டதுண்டு. ஆனால் கைகுலுக்கலோடு வணக்கத்தை முடிப்பது தான் எங்கள் வழக்கம். இப்படியான முறைகள் புதிசாக்கிடக்கு. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அட கை குடுக்கிறது கையிலை கத்தி கடற்பாரை ஒன்றுமில்லையெனக் காட்ட அது போல் கன்னத்திலை முத்தமிடுவது காலையிலே பல் விளக்கினேன் என்பதைக் காட்ட. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#51
Quote:அப்படி எழுதினால் கதையில் யதார்த்தம் இல்லை என்று சொல்லமாட்டீங்களா?!
கண்டிப்பாக கிடையாது. ஒரு ஆணால் அடிக்க முடியுது என்றதை ஏற்கிறம் ஏன் பெண்ணால் அடிக்கமுடியாது..?? குறைந்தது தன்னையாவது பாதுகாக்க திருப்பித்தாக்க முடியாதா. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#52
Quote:அட கை குடுக்கிறது கையிலை கத்தி கடற்பாரை ஒன்றுமில்லையெனக் காட்ட அது போல் கன்னத்திலை முத்தமிடுவது காலையிலே பல் விளக்கினேன் என்பதைக் காட்ட.
அப்படி உண்மையைச்சொல்லுங்களேன. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#53
உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமென்று நினைத்தேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#54
tamilini Wrote:சாத்திரி சிறிய வருத்தம். நாயகியை அறைந்த உடனை திருப்பி அவா 2 குடிச்ச போதை தீர போட்டிருந்தா றொம்ப மகிழ்ச்சியாக இருந்திருக்கும்


அம்மா தாயீ..........எதெதுக்கெல்லாம் மகிழ்ச்சிப்படுகிறீயள் சந்Nhதஷம் ....பிள்ளைக்கு பொண்ணம்மாக்காவைத் தெரியும்போல கிடக்கு.....
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#55
கதை சூப்பரா இருக்கு அடுத்ததையும் சீக்கிறம் போடுங்கப்பா.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#56
தமிழினி நீங்கள் சொன்னது போலை அவாவும் திருப்பி இரண்டு போட்டிருந்தால் எனக்கும் சந்தோசம் தான் ஆனால் என்ன செய்ய இந்த கதையின் நாயகியின் சுபாவம் அப்படியில்லை பின்னர் மாறுதா எண்டு பாப்பம்


கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து நேரத்தை பார்த்தாள்மறுநாள் மணி மதியம் பன்னிரண்டை தாண்டியிருந்தது ரவி தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தான். எழுந்து வந்து ரவியிடம் .நேற்று இரவு நடந்ததுக்கு மன்னிச்சு கொள்ளுங்கோ நான் வேணுமெண்டு அப்பிடி செய்யேல்லை அவரிலை தான் பிழை சும்மா தள்ளிவிட அவரும் விழுந்திட்டார் வேணுமெண்டா நான் அவரிட்டையும் மன்னிப்பு கேக்கிறன்.

ரவி எதுவுமே பேசாமல் போய் கட்டிலில் விழுந்தான் சாந்தி அருகே போய் என்னப்பா கோவமா சரி என்னிலை தான் பிழை உடுப்பை மாத்திட்டு படுங்கோ ஏதாவது சாப்பிட்டனீங்களோ? நீங்கள் சிகரற் தான் பத்திறீங்கள் எண்டு இவ்வளவு நாளும் நினைச்சு கொண்டிருந்தனான் ஆனால் ..என்று சாந்தி முடிக்கமுதல்.

ஓமடி கஞ்சா கட்டை தூள் எல்லாம் தான் பத்திறனான் அதுக்கு இப்ப என்ன உன்ரை வீட்டு காசிலையா பத்திறன் போடி முதலிலை வெளியிலை எண்று கத்தினான் ரவி . சாந்தி பேசாமல் அறையை விட்டு வெளியேறி குளியலறையில் நுளைந்து கண்ணாடியில் முகத்தை பார்த்தாள்.

கன்னம் வீங்கி கண்களும் சிவந்திருந்தது அன்று இருவருமே பின்னர் பேசி கொள்ளவில்லை மறு நாள் ரவி வழைமைபோல வேலைக்கு போய்விட சாந்தி வகுப்பிற்கு போகலாமா வேண்டாமா என் யேசித்தவள் வீட்டிலை இருந்து யோசிச்சு என்ன பிரயோசனம் ரவியின் கோபமும் கொஞ்ச நேரத்திலை குறைந்து விடும் எண்று எண்ணியவளாய் புறப்பட்டு லிப்றறினுள் நுளைந்தாள்.

லிப்ற் இரண்டாம் மாடியில் நிற்க அதில் சிவா ஏறி கொண்டான்.ஆகா இண்டைக்கு தனிய மாட்டு பட்டிட்டா இண்டைக்கு இவாவை நாலு கேள்வி கேக்க வேண்டும் எண்று எண்ணி சிவா சாந்தியை பார்த்த மறு கணம் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டான். சாந்தி அவனைப்பார்த்து வணக்கம் எண்றாள் அதற்கு சிவா தலையை குனிந்த படியே வணக்கம் என்றான்.

இருவரும் பஸ் நிலையத்தை அடைந்ததும் பஸ் வர ஏறி கொண்டனர் . உள்ளே ஒரு தனி இருக்கையில் இருக்க போன சிவா சாந்தியை பாத்து நீங்கள் இருங்கோ என கூற முதலில் மறுத்த சாந்தி பின்னர் அமர்ந்து கொள்ள சிவா சாந்தியிடம்.

நீங்கள் ஊரிலை எந்த இடம்

நான் யாழ்ப்பாணம் நவாலி

ஒ நவாலியோ நான் மானிப்பாய்

தெரியும் ரவி சொன்னவர் உங்களிற்கு தம்பையா மாஸ்ரரை தெரியுமோ தமிழ் படிப்பிச்சவர்


ஓ நல்லா தெரியும் அவரிட்டை நானும் படிச்சிருக்கிறன் அவர் உங்களிற்கு ...........

அவரின்ரை மகள்தான் நான்

ஒ அவரின்ரை மகளோ நீங்கள் நான் கண்டதேயில்லை

இப்படியாக படித்த பாடசாலை தெரிந்த சிலர் என்று சில ஊர் விடயங்களை இருவரும் பேசி கொண்டிருக்கையில.; அதுசரிமுதலே உங்களையெண்டு கேக்க வேணுமெண்டு நினைச்சனான் உங்களிற்கு ஏதும் சுகமில்லையா ??ஏணெண்ணடா கன்னம் வீங்கின மாதிரி கண்ணும் சிவந்திருக்கு......... என்று சிவா இழுக்க.

சற்று தடுமாறிய சாந்தி ஓம் சுவமில்லை அதோடை பாத்றுமிலை வழுக்கி விழுந்திட்டன் என்றுஅதுதான் கன்னத்திலை அடி பட்டிட்டிது .

அடடா பாத்றுமிலை வழுக்கி விழுந்தா கை கால் தலை தான் அடிபடுறது வழைமை ஆனால் நீங்கள் வித்தியாசமாய் விழுந்திருக்கிறியள் போலை அதுதான் வித்தியாசமாய் கன்னம் இரண்டிலையும் அடி பட்டிருக்கு எற்று சிவா கூற சாந்தியும் தன்னை மறந்து சிரித்தாள் .

சிவா இறங்க வேண்டிய இடம் வர விடை பெற்று கொண்டு போய்விட்டான்.

பின்னர் சாந்தியும் ரவியின் கோபம் குறையும் எண்றெண்ணி ஒவ்வொரு நாளும் முடிந்தளவு பொறுமையாய் ரவியுடன் கதைத்து பார்த்தாள் ஆனால் ரவியின் பேச்சும் திட்டும் இடைக்கiடை அடியும் கூடி கொண்டு போனதே தவிர குறைந்த பாடில்லை.

சில நாட்கள் ரவி வீட்டிற்கே வருவதில்லை .வந்தாலும் எரிந்து விழுந்துதான் பேசுவான். வீட்டில் செலவிற்கும் இப்போ சாந்தி பல தடைவை கேட்டால் தான் ஒருக்கா குடுப்பான். அதுவும் அவனிற்கு விஸ்கி வாங்கிய மிகுதியில்தான் வீட்டு சாமான்கள் வாங்க வேண்டும். அவன் உணவு விடுதியொன்றில் வேலை செய்வதால் அவன் அனேகமாக அங்கேயே சாப்பிட்டு விடுவான்.

மற்றபடி அப்பப்போ அவனது ஆசையை தீர்த்து கொள்ளும் ஒரு இயந்திரமாகவே சாந்தி மாறி போய் விட்டாள். சாந்திக்கும் ஏனிந்த வாழ்க்கை காலமெல்லாம் இப்படிதானா போக போகின்றது ரவி வழைமைக்கு திரும்புவான் எண்று எண்ணி மாதங்கள் நான்கு ஓடி ஏமாற்றமே மிஞ்சியது.



இதே நேரம் சிவாவுடன் அவள் அடிக்கடி கதைத்து அவனிடம் தனது துன்பங்களை பகிர்ந்து கொள்ளுமளவிற்கு அவர்களது நட்பும் வளர்ந்தது. ஒருநாள் திடீரென அவளது ஒன்று விட்ட தம்பியொருவன் இங்கிலாந்திலிருந்து தொலை பேசி முலம் தனக்கு ஒரு வாரம் விடுமுறை இருப்பதாகவும் அவளிடம் வருவதாக கூறிவிட

அவளிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை தம்பி இங்கை வந்து பாத்து அவனும் கவலை பட்டு என்ரை பிரச்சனையளை ஊருக்கு சொல்லி என்னவாக போகுதோ அதை விட அவன் வாறத்திற்கு ரவி என்ன சொலுறானோ என்று பல வித குழப்பங்களுடன் எதற்கும் ரவியிடம் தம்பி வாற விடயத்தை கூற வெண்டும் என்று முடிவெடுத்தாள்.

அன்றிரவு ரவியிடம். என்னப்பா லண்டனிலை ஒரு தம்பியிருக்கிறான் எண்டு சொல்லியிருக்கிறன் தானே அவன் அடுத்த கிழைமை வாறதா ரெலிபோன் பண்ணினவன் ஒரு கிழைமை நிப்பானாம்

சினத்துடன்:பார்த்த ரவி. நினைச்சனான் என்ன உன்கு என்னாலை பிரச்சனை உடைனை வா எண்டு அடிச்சு சொல்லிட்டியாக்கும் அவர் பஞ்சாயத்து பண்ண வாறாரோ வரட்டும் பாக்கிறன்.

அது சரி அவன் உண்மையா உன்ரை ஒண்ட விட்ட தம்பிதானோ இல்லாட்டி ஏணெண்டா அக்கா தம்பி எண்டு பாசம் பொழிவியள் பிறகென்னடா எண்டா ஒரு நாளைக்கு இரண்டு பேரையும் காணகிடைக்காது ஓடிப்போய் ஒண்டா குடும்பம் நடத்துவியள்.

சாந்திக்கு காதுகள் கூசியது சே ஏன் இப்பிடி கதைக்கிறார் இவருக்கு ஏன் இப்பிடி புத்தி போகிது எண்:று நினைத்தவாறு. என்ரை சின்னம்மான்ரை மகன் தான் ஆனால் நாங்கள ஊரிலை சொந்த சகோதரம் மாதிரித்தான் பழகினனாங்கள். ஏன் நீங்களும் கதைச்சிருக்கிறீங்கள் தானே அவனோடை

சரி சரி வரட்டும ஆனால் நாள் கணக்கா அவன் இங்கை நிக்கிறேல்லை அதோடை எனக்கு புத்தி சொல்ல தொடங்கவும் கூடாது சொல்லிவை

அவனிற்கு நான் ஒண்டும் சொல்லேல்லை ஆனால் அவன் நிக்கேக்கை நீங்கள் கொஞ்சம் உந்த பத்திறதுகளை அவனுக்கு முன்னாலை பத்தாமல் விட்டீங்களண்டா நல்லது பிறகு அவன் ஊருக்கு .. ...

என்று முடிக்கமுதல் என்னடி தொடங்கிட்டியா புத்திமதி சொல்லஎன்று கத்திய ரவியின் கையிலிருந்த சிறிய பியர் போத்தல் சாந்தியை நோக்கி பறந்து வர தற்செயலாக அவளும் விலகி கொள்ள போத்தல் சிவரில் பட்டு தெறித்தது.

வீட்டு அழைப்பு மணிஅடிக்கும் ஓசை கேட்டு ரவி கதைவை திறந்தான் பக்கத்து வீட்டு வெள்ளை காரன் கோபமாக . திருவாளர் அவர்களே தினம் தினம் உங்கள் வீட்டில் சத்தம் எங்கள் வீட்டில் குழந்தைகள் நித்திரை செய்கிறார்கள் எங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டு இனி சத்தம் போட்டால் காவல் துறையை அழைக்கவேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்து விட்டு போய்விட்டான்.

அன்று சாந்தி பக்கத்து வீட்டு காரனால் தப்பி விட்டாள்.ஆனால் ரவியால் இனி என்ன நடக்கும் என்பது நிச்சயமில்லாத ஒரு பயந்த வாழ்க்கையே ஆனாலும் எது நடந்தாலும் தனது தாய் தந்தைக்கு தெரிய படுத்தி அவர்களையும் கவலைபட வைப்பதில்லை என்பதில் உறுதியாய் இருந்தாள்.

அவளது தம்பியும் அவளிற்கு ரவிக்கு என்று பல பரிசு பொருட்கள் முக்கியமாக சாந்திக்கு நிறைய சொக்லெற் வகைகள் என்பன வற்றுடன்லண்டனிலிருந்து வந்து விட்டான் .அன்றிரவு சாந்தி அவனுக்கு பிடித்த உணவுவகைகளை செய்து பரிமாறி கொண்டிருக்கையில்.

அக்கா ஞாபகம் இருக்கே நாங்கள ஊரிலை ஒரு துண்டு கண்டொஸ் சொக்லெற்றுக்கு அடிபடுறனாங்கள் அதாலைதான் உனக்கு நிறைய அள்ளி கொண்டு வந்தனான். ஆசை தீர சாப்பிடு ஆனால் கனக்க திண்டு மொத்தமா வந்திடாதை பிறகு அத்தான் என்னைதான் திட்டுவார் என்று கண்ணடித்தபடி அதுசரி அத்தான் எத்தினை மணிக்கு வேலையாலை வருவார் அவர் வந்தா பிறகு சாப்பிடுவும்.

அவர் றிங்ஸ் பாவிக்கிறவர்தானே அவருக்கும் ஒரு ஸ்பெசல் ஸ்கொச் போத்தல் ஒண்டு கொண்டு வந்தனான்.அதுசரி நீ முந்தி வழ வழ எண்டு கதைப்பாய் இப்ப என்ன நடந்தது வந்ததிலை இருந்து பாக்கிறன் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுறாய் ஏன் ஏதும் பிரச்சனையோ? என்று அவளது தம்பி இடைவிடாது கேள்விகளை கேட்டு கொண்டேயிருந்தான்.

ஒண்டுமில்லையடா நீ சாப்பிடு அவருக்கு வேலை சில நேரம் பிந்திதான் முடியும் அவரை பாக்காமல் நீ சாப்பிடு என்று சாப்பாட்டை பரிமாறி கொண்டிருக்கும் போதே ரவி உள்ளே நுளைந்தான் Arrow
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#57
சாத்திரி தமிழினி சொல்லிப் போட்டா என்று கதையிலை மாற்றம் கொண்டு வராமல் உள்ளதை உள்ள மாதிரியே எழுதும். இல்லையேல் பிறகு ரவியும் உம்மில் வழக்குப் போட்டாலும் போடலாம். எனவே கவனமாக எழுதும். பிறகு உம்மை ஜாமீனில் எடுக்க நானெல்லோ அலைய வேண்டும். :roll: :roll:
Reply
#58
சாத்திரி "தெரியாத பாதை தெளிவானபோது, புகழ்பெற்ற விமர்சகர்கள் கேட்டவை" என்று சமாந்தரமாக தொடங்கி எழுதுங்கோ. சாந்தி கராத்தே கறுப்புப்பட்டி என்ற உண்மை தெரியமாயல் களியாணம் முடிக்க ஓமெண்டது பெரிய தப்பு என்று ரவி ஆஸ்பத்திரியில இருந்து வலியில புலம்பிறதா கதை முடியுங்கோ.

கஞ்சா எண்டு சாந்தி குளம்பிறா எண்டு சொல்லி கட்டையோடை நிப்பாட்டிப்போட்டியள், பளிங்கில புகையிரதம் ஓடுறதும் இப்ப சகஜமுங்கோ.
காய்ந்த ஓப்பி பூவை கசக்கி சில சிற்றுண்டிகளில் final touch ஆக தூவுகிறார்கள், அதை சிறுவர்களுக்கும் குடுக்கிறார்கள். அதிக செறிவில நுகருறது அடிமைப்படுறதுகள் தானே பிரச்சனை.
Reply
#59
சாத்திரி உங்கள் தெரியாத பாதை தெளிவானபோது தொடர்கதை விறுவிறுப்பாக செல்கிறது. வாழ்த்துக்கள். அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
<b> .. .. !!</b>
Reply
#60
சாத்திரி
உங்கள் தெரியாத பாதைக்கு வாழ்த்துக்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)