Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போரா சமாதானமா? மக்கள் தீர்ப்பு
#21
றனில் ஏன் அமரிக்கா செல்லவுள்ளார்?
Reply
#22
சுற்றியும் சுற்றியும் சுப்பருடைய கோடிக்குள் என்பார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

வி.புலிகள் அரசியல் யாப்புக்கு அப்பால் அரசியல் அதிகாரம் படைத்த ஒரு இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் திட்டத்தை முன் வையுங்கள் என்கிறார்கள்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவோ அரசியல் யாப்புக்கு உட்பட்ட நிர்வாக அமைப்புப்பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.

உச்ச சபை. (யுpநஒ ஊழரnஉடை )
அபிவிருத்தி சபை.
இடைக்கால நிர்வாக சபை.

என்று குண்டுச் சட்டிக்குள்ளேயே ரணில் விக்கிரமசிங்கா குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்!

அதனால் ''புத்தாக்க முறையிலான பயனுடைய அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றிற்கான வரைவு யோசனைகளை அரசு முன்வைக்க வேண்டும் என்று நாம் விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை"" என வி.புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்டன் பாலசிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மை என்னவென்றால் அரசியல் யாப்புக்கு அப்பால் அரசியல் அதிகாரம் கொண்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க வேண்டும் என்றால் அரசியல் யாப்புத் திருத்தப்பட வேண்டும்.

அரசியல் யாப்புத் திருத்தப்பட வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் அதற்கு மூன்றில் இருண்டு பெரும்பான்மை வாக்குகள் வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இல்லை.

தமிழர் தேசிய கூட்டணியின் வாக்குகளைச் சேர்த்துக் கூட்டிப் பார்த்தாலும் மொத்த உறுப்பினர் தொகை 130க்கு மேல் தேறாது.

யாப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு சரியாக 150 உறுப்பினர்களது ஆதரவு தேவை.

அப்படியென்றால் சட்ட திருத்தம் நிறைவேறுவதற்கு சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தலைமை தாங்கும் மக்கள் முன்னணியின் ஆதரவு தேவை.

ஆனால்; சனாதிபதி சந்திரிகாவோ முதலில் வி.புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஒரு அரசியல் இணக்கப்பாட்டுக்கு வந்தால் மட்டுமே வட-கிழக்குக்கு ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க முடியும் என்கிறார்.

சனாதிபதி சந்திரிகாவின் நிபந்தனைக்கு இணங்க வி.புலிகள் ஆயுதங்களை கீழே வைப்பார்களா? அது நடக்காத காரியம்.

இடியப்பச் சிக்கல் என்பார்களே? அது போன்ற சிக்கல்தான் இதுவும்!

இந்த இடைக்கால நிர்வாகசபை என்பது 1987 ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வி.புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்க முயற்சி செய்யப்பட்டது. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய முன்னணி (ருNகு)? தனது 2001ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பின்வருமாறு கூறியிருந்தது.

"றுந றடைட ளநவ ரி யn iவெநசiஅ உழரnஉடை in வாந ழெசவா யனெ நயளவ கழச ய டiஅவைநன னரசயவழைn."

''நாங்கள் ஒரு குறுகிய காலத்துக்கு வட-கிழக்குக்கு ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவோம்.""

மீண்டும் 2002ம் ஆண்டு யுூன் மாதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பின்வருமாறு கூறியிருந்தார்.

''ளுசi டுயமெயn Pசiஅந ஆinளைவநச சுயnடை றுiஉமசநஅநளiபொந hயள வழடன வாந எளைவைiபெ றுழசடன டீயமெ னழழெச உழஅஅரnவைல வாயவ வாந pசinஉipயட ழடிதநஉவiஎந ழக வாந pசழிழளநன pநயஉந வயடமள டிநவறநநn வாந பழஎநசnஅநவெ யனெ வாந வுயஅடை வுபைநச சநடிநடள in வுhயடையனெ ளழழn றயள வழ ளநவ ரி யn iவெநசiஅ யனஅinளைவசயவழைn in வாந ழெசவா யனெ நயளவ ழக வாந உழரவெசல யனெ ளிநநன னநஎநடழிஅநவெ ழக வாந யசநய." (வுhந Pநழிடந'ள னுயடைல-துரநெ 06இ 2002)

''அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் பேச்சு வார்த்தைகளின் முக்கிய நோக்கம் வட-கிழக்குக்கு ஒரு இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவதே. இவ்வாறு தன்னைச் சந்தித்த உலக வங்கி மற்றும் கொடையாளி சமூகத்திற்கு சிறீலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்தார்."" (பீப்பில்ஸ் டெயிலி - யுூன் 06, 2002)

மீண்டும் தாய்லாந்து பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கு முதல் வாரம் (செப்டம்பர் 9ம் நாள்) கொழும்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஜன பல மெகெயும (துயயெ டீயடய ஆநாநலரஅய) பேரணியின் போது பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பின்வருமாறு குறிப்பிட்டார்.

''Pசiஅந ஆinளைவநச சுயnடை றுiஉமசநஅநளiபொந யனனசநளளiபெ வாந கiயெட துயயெ டீயடய ஆநாநலரஅய சயடடல யவ வாந ஊழடழஅடிழ வுழறn ர்யடட ழn ளுநிவநஅடிநச 9இ 2002இ னநஉடயசநன வாயவ hநnஉந வாந னநஅயனெ கழச யn iவெநசiஅ யனஅinளைவசயவழைn வழ உழஅpடநவந வைள வசயளெவைழைn iவெழ ய pழடவைiஉயட ழசபயnளையவழைn. வுhளை ளை வாந வாiமெiபெ டிநாiனெ வாந னநஅயனெ கழச யn iவெநசiஅ யனஅinளைவசயவழைnஇ" hந ளயனை.

கொழும்பில் நடந்த மே நாள் விழாவில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா "யுலெ அயவவநச வாயவ னழநள ழெவ ளநநம வழ னiஎனைந ளுசi டுயமெய உழரடன டிந வயமநn ரி யவ வாந னளைஉரளளழைn வயடிடந." (வுhந ளுரனெயல டுநயனநச - ஆயல 26இ2003)

''நாட்டைத் துண்டாடதபடி கேட்கப்படும் எந்த விடயமானாலும் பேச்சு வார்த்தை மேசையில் பேசுவதற்கு எடுக்கப்படலாம்."" (த சன்டே லீடர்- மே 26, 2003)

இவ்வாறெல்லாம் தேனொழுகப் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா இப்போது ''அரசியல் யாப்புக்கு உட்பட்ட ஒரு இடைக்கால நிர்வாக சபையைத்தான் எங்களால் உருவாக்க முடியும்'' என்று பேசுகிறார்!

செப்தெம்பர் 15ல் தாய்லாந்தில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் வி.புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்டன் பாலசிங்கம் இடைக்கால நிர்வாக சபை அமைப்பதுபற்றிக் கேட்ட ''அரசியல் யாப்புச் சிக்கல் இருக்கிறது. அதற்குப்பதில் ஒரு கூட்டு செயல் அணி (துழiவெ வுயளம குழசஉந) உருவாக்குவோம்"" என்று அரசியல் யாப்பு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பதிலளித்தார். ஒரு வார காலத்தில் அரசு தரப்பு இப்படி 'தட்டை" மாற்றி வாசித்ததிற்கு என்ன காரணம்?

இந்த இலட்சணத்தில் அமெரிக்க அரசாங்க துணைச் செயலர் றிச்சார்ட் ஆர்மிடேஜ் (புநழசபந யுசஅவையபந) வி.புலிகள் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்குப் போக வேண்டும் என்று பயமுறுத்தும் தொனியில் பேசி இருக்கிறார்.

''நாங்கள் வி.புலிகளை வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் எனப் பட்டியல் இட்டுள்ளோம். உண்மையில் நாங்கள் அவர்களை வேட்டையாடி அவர்கள் நிதி திரட்டுவதை நிறுத்த முயற்சிக்கிறோம். அவர்கள் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்ற வரைவிலக்கணம் செய்வதில் இருந்து தப்பவதற்கான சூழ்நிலையை அவர்கள் உருவாக்க வேண்டும். வன்முறையை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர்கள் முற்றாகக் கைவிட வேண்டும்."" (யப்பானிய தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்- யுூன் 10, 2003)

அமெரிக்க துணை அரசாங்க அமைச்சர் வி.புலிகள் பேச்சு வார்த்தை மேசைக்குப் போக வேண்டும் என்று வற்புறுத்துவதும், வன்முறையை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர்கள் முற்றாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதும் அதிகப் பிரசங்கித்தனமான பேச்சாகும்.

''ஆறு சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் போனதில் நேரம் முற்றாக வீணானது"" என்று வி.புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திரு.சு. ப தமிழ்ச்செல்வன் சொல்லி இருக்கிறார். பின் எதற்காக ஏழாவது சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் போய் மேலும் நேரத்தை வீணடிக்க வேண்டும்?

''வன்முறையை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர்கள் முற்றாகக் கைவிட வேண்டும்"" என்று மூக்கைப் பிடித்தால் வாயைத் திறக்கத் தெரியாத குழந்தை போல துணைச் செயலர் சொல்கிறார். மெத்த நல்லது. இந்த உபதேசத்தை இராக் விடயத்தில் அமெரிக்கா ஏன் கடைப்பிடிக்கவில்லை?

ஒன்றரை இலட்சம் அமெரிக்கப் படையை இராக்கில் இறக்கி அந்த நாட்டின் மீது பாரிய குண்டுத்தாக்குதலை நடாத்தி அதன் கட்டுமானத்தை ஏன் வீணாகச் சிதைக்க வேண்டும்?

இராக்கின் முன்னாள் சனாதிபதி சதாம் குசேனோடு பேசிச் சிக்கலுக்கு தீர்வு கண்டிருக்கலாமே? ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையை ஓரங்கட்டிவிட்டு, அதன் அணுவாயுத பரிசோதகர்களின் அறிக்கைக்குக் காத்திராமல் அவசர அவசரமாக படை திரட்டிப் போய் அந்த நோஞ்சான் நாட்டோடு சண்டையிட்டு ஏன் அதனை அழிக்க வேண்டும்? ஐயாயிரத்துக்கும் அதிகமான பொது மக்களைக் கொஞ்சமும் இரக்கமின்றி குண்டு வீசி ஏன் கொல்ல வேண்டும்? கேட்டால் யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று அலட்சியமாகப் பதில் அளிப்பதா?

தெரியாமல்தான் கேட்கிறோம் ''உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறொரு நியாயமா?""

''அவன் கிடக்கிறான் குடிகாரன் எனக்கு வார்"" என்று புளா தூக்கியவன் மாதிரி துணை இராசாங்க செயலர் பேசுகிறாரா இல்லையா?

வி.புலிகள் மீது அழுத்தம் கொடுக்கும் துணை இராசாங்க அமைச்சர் அது போன்ற அழுத்தத்தை ரணில் விக்கிரமசிங்காவின் அரசுக்கு ஏன் கொடுக்கக் கூடாது? சனாதிபதி சந்திரிகா அம்மையாருக்கு அந்த அழுத்தத்தை ஏன் கொடுக்கக் கூடாது?

வி.புலிகளை மட்டும் ''பிள்ளையார் கோயில் ஆண்டிகள்"" என்ற நினைப்பில் வாய்க்கு வந்தபடி ஏசுவதும் ''வேட்டையாடப்"" போவதாகத் திமிரோடு பேசுவதும் ஏன்?

தமிழீழ விடுதலைப் போராட்டம் அமெரிக்கத் தமிழர்களின் நிதியுதவியை மட்டும் நம்பி நடைபெறும் போராட்டம் அல்ல.

வி.புலிகளுக்கு தடை விதிப்பதும், நிதி திரட்டலைத் தடுத்தலும் சீப்பை ஒளித்தால் கல்யாணம் நின்றுவிடும் என்று நினைத்த முட்டாளின் கதை போன்றதுதான். தடைக்குப் பின்னர்தான் ஆனையிறவு வி.புலிகள் கையில் விழுந்தது! பளை விழுந்தது!

எதுவானாலும் துணை இராசாங்க செயலர் யோர்ஜ் ஆர்மிராஜ் அவர்களது சண்டியன் பேச்சை வைத்து நாங்கள் அமெரிக்க நாட்டை எடை போடக் கூடாது. துணை இராசாங்க அமைச்சர் போலல்லாது அமெரிக்க நாட்டை உருவாக்கிய சிற்பிகள் புத்திசாலிகள். மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை உடையவர்கள்.

அமெரிக்க நாட்டின் யாப்பின்படி பேச்சுச் சுதந்திரம், அமைப்புகள் இயங்கும் உரிமை அந்த நாட்டின் அடிப்படைச் சுதந்திரங்களாகும். துணை இராசாங்க செயலர் சரி சனாதிபதி புஷ் சரி அந்த அடிப்படைச் சுதந்திரங்களை தலை கீழாக நின்றாலும் பறித்து விட முடியாது.

துணை இராசாங்க அமைச்சரது பேச்சு பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு அசட்டுத் தைரியத்தைக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில் வி.புலிகள் பேச்சு வார்த்தையில் இருந்து விலகினால் இந்தியாவும் அமெரிக்காவும் சிறீலங்கா இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கவும் ஆயுதங்கள் வழங்கவும் முன்வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த இரண்டு நாடுகளும் சிறீலங்கா இராணுவத்துக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங்களும் போர்க் கப்பல்களும் வழங்கி வரும் நாடுகள்தான். அமைச்சர் தொழிலுக்கு புதிது. அமெரிக்க இராணுவத்தினால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் 53வது படைப் பிரிவுதான் வி.புலிகளிடம் கும்பிடக் கும்பிட அடிவாங்கியது!

தமிழீழ மக்கள் சார்பில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டும்வரை வட-கிழக்கில் தங்களைத் தாங்களே ஆளுகின்ற ஒரு இடைக்கால நிர்வாக அமைப்பையே வி.புலிகள் கேட்கிறார்கள்.

அது முடியாவிட்டால் ''பேசிப் பயனில்லை"" என்ற முடிவுக்கு வி.புலிகள் தள்ளப்படுவார்கள்.

அடுத்தடுத்து அனைத்துலக கடற்பரப்பில் வைத்து வி.புலிகளின் வணிகக் கப்பல்கள் சிறீலங்கா கடற்படையினரால் மூழ்கடிக்கப்படுவதை அவர்கள் எப்போதும் சும்மா பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டு மார்ச் 10, யுூன் 12 திகதினளில் வி.புலிகளின் வணிகக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அவற்றில் பயணம் செய்த வி.புலிகள் அநியாயமாக வீர மரணம் எய்தினார்கள். ஒன்றல்ல இரண்டு வணிகக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டது பாரதூரமான யுத்த நிறுத்த மீறல்களாகும்.

இப்போது வி.புலிகள் கேட்கும் அரசியல் அதிகாரம் படைத்த இடைக்கால நிர்வாக சபையை அமைக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவினதாகும். சுற்றியும் சுற்றியும் சுப்பருடைய கோடியை எவ்வளவு காலத்திற்குத்தான் சுற்றுவது?


கனடா ~நம்நாடு| (20-06-03)
Reply
#23
பொங்கும் தமிழ் எங்கும் தங்குக!




--------------------------------------------------------------------------------



கடல் கடந்து வந்தும் உங்கள் நினைவுகளோடு வாழும் எம் இனிய புலம்பெயர் மக்களின் சார்பாக இந்த வாழ்த்துரையை அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

பல்லாயிரம் ஆண்டு காலமாய் அடிமைப்பட்டுக்கிடந்த எம் இனம் இன்று சுதந்திரத் தேவியின் வருகைக்காய் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றது.

இவ்வுலகமே எம் இனத்தின் துன்பங்களைவேடிக்கை பார்த்தப்போது அவர்களின் துன்பங்களையும் அவர்களின் அபிலாசைகளையும் எதிரியின் முற்றுகை;குள்ளேயிருந்தும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தியவர்கள் நீங்கள். இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் நாமும் பங்கேற்க முடியவில்லை என்கின்ற கவலை எமக்கிருந்தாலும், எம் உணர்வும் எம் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப் படு;த்திக்கொள்கின்றோம்.

எம் இனத்தின் அடையாளத்தையும், எம் மக்களின் பிரதிநிதிகளையும் எம் தேசத்தின் தலைமையையும் இந்த உலகமே திரண்டு நின்று புறக்கணித்தாலும், மாணவ சக்தியான நீங்களும் புலம் பெயர்ந்த நாங்களும் அவர்களுக்காக இருக்கும் வரை எம் இனத்தை யாராலும் அசைக்கமுடியாது என்பதனை இதன்மூலம் உறுதிப் படுத்துகிறோம். தடைகள் பல வந்தாலும் உங்கள் பொங்கு தமிழ் இனிதே நடக்கட்டும் அதனை இந்த உலகமே மீண்டும் ஒருமுறை தன் கண்ணைத் திறந்து பார்க்கட்டும்.

நாம் இங்கே தேசிய நிரோட்டத்தில் கலந்து விட்டோம் என்று நீங்கள் கவலைகொள்ளதேவையில்லை. ஒரு தாயின் பாலைக்குடித்து வளந்தவர்கள் எல்லோரும் தேசத்தின் மேல் அளவு கடந்து அன்பு வைத்திருக் கின்றார்கள். எங்களின் ஆதரவு இருக்கும்வரை, யாரும் விலை பேசிட முடியாத தலைமை இருக்கும் வரை, எதையும் துணிந்து நின்று முன்னே செல்லும் நீங்கள் இருக்கும் வரை யாரும் எம்மை இனிமேலும் அடக்கிடமுடியாது. இந்தப் பொங்கு தமிழ் ஒழுங்கே அமைந்து பின் அதுவே உலகநாடுகளில் பரவி எம் இனத்தின் அபிலாசைகளை கட்டியம் கூறிட வாழ்த்துகிறோம்.

கனடா தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டதாரிகள் -
தமிழர் தேசிய அமைப்பு - கனடா
வுயஅடை ருniஎநசளவைல புசயனரயவநள யனெ ளுவரனநவெள உழழசனiயெவiபெ உழஅஅவைவநந-
வுயஅடைள யேவழையெடளைவ யுளளழஉயைவழைn - ஊயயெனய
தொடர்புகளுக்கு: கனடா 00 1 905-201-4964
Reply
#24
சேது பொங்கு தமிழ் ஏன் பொங்கல் தாண்டி பொங்கப்படுகிறது?..ஏதாவது தகவல் கிடைத்ததா?
Reply
#25
இதுவரை எனக்கு தகவல் வரவில்லை வந்தால் அறியத்தருகிண்றென்
Reply
#26
<img src='http://news.tamilnet.com/img/publish/2003/06/slfp_2s.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://news.tamilnet.com/img/publish/2003/06/slfp_3s.jpg' border='0' alt='user posted image'>கடந்த 14ம் திகதி கப்பல் தகர்ப்புக்கு சந்திரிக்கா அம்மையார் நிட்டம்புவையில் வைத்து உரிமை கோரியுள்ளார். ஆயுதக்கடத்தலை முறியடிக்கவும் தேசத்தையும் சிங்கள் பெருங்குடி மக்களையும் பாதுகாக்குமுயரிய எண்ணத்தில் தான் அதை செய்ததாகவும் கூறியுள்ள அம்மையார் எதிர்காலத்தில் வரிப் பொடியளோடு பேசி சமாதானத் தீர்வும் காண்பாவாம் ஆனால் தற்போது தமிழீழம் இருவாகயிருப்பதை தடுக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதற்கிடையில் அணிலார் பீரிஸார் என்று ஒரு குழு லண்டன் வந்துள்ளது அக்குழுவுடன் நோர்வே பிரதிநிதிகளும் இணையவுள்ளானர். அவர்கள் வரிப் பொடியளை இங்கு சந்திக்கக் கூடும் என்வும் கூறப்படுகிறது! இதற்கிடையில் அணிலார் லண்டன் வரமுதல் அம்மாவோடு ஒரு சந்திப்பை பலமணி நேரம் செலவிட்டு நடத்தியதாகவும் அதில் வரிப் பொடியளை எப்படி சர்வதேச ரீதியில் சிக்கவைத்து திணறடிப்பது உள்ளிட்ட பல விடையங்களும் ஆராயப்பட்டனவாம்! அப்ப அம்மாவும் அணிலாரும் ஒன்டுக்க ஒன்டு வெளியில நல்ல நாடகம் போடியினம்.....நல்ல அரசியல் விளயாட்டப்பா..?!

தமிழ் மக்களூம் வரிப் பொடியளும் அவதானமாக இருந்து செயல் பட்டால் தான் அழகாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் பின்னப்படும் பலமிக்க சூழ்ச்சி வலையில் இருந்து தப்ப வழிபிறக்கும்!

தகவல் தமிழ் நெற் மற்றும் பிற ஊடகங்கள்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக இண்ற நோர்வே விசெடதகவல் உறுதிப்படுத்துகிண்றது.
Reply
#28
<span style='font-size:19pt;line-height:100%'>~பத்து வருடங்களுக்கு முன்னர் காரைநகர் ~எலாரா| கடற்படைத்தளம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் பங்குகொண்டார் என்ற குற்றச் சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.நீதிபதி சரத் அம்பேப்பிட்டிய நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் முடிவில் இத்தீர்ப்பை வழங்கினார்.
திலகர் என்று அழைக்கப்படும் சண்முகசுந்தரம் ரகுபதி என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலிகளின் ~ஆஞ்சநேயர்| என்பவரின் தலைமையில் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதியன்றும், 1991ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதியன்றும் 500இற்கும் மேற்பட்ட புலிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தன்னை விசாரித்த பொலீஸாரிடம் எதிரி வழங்கிய குற்றஒப்புதல் வாக்குமூலம் எந்த நிர்ப்பந்தத்தின் பேரிலும் வழங் கப்பட்டதல்ல என்பது முடிவுசெய்யப் பட்டுள்ளது.ஆகவே, இவருக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.</span>
Reply
#29
கப்பல் கொடுத்தவையும் ஆயுதங்கள் கொடுத்தவையும் ஆனையிறவு அடியோடு வயடைத்துப் போய் நின்ற கதை உலகறியும். எம்மிடம் உண்மையும் சத்தியமும் மனத்துணிவும் உண்டு. ஒரு சிறந்த தலைமையுண்டு.வந்து பார் பகையே இனி உன் உடல் எம்மண்ணின் உரம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#30
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->கப்பல் கொடுத்தவையும் ஆயுதங்கள் கொடுத்தவையும் ஆனையிறவு அடியோடு வயடைத்துப் போய் நின்ற கதை உலகறியும். எம்மிடம் உண்மையும் சத்தியமும் மனத்துணிவும் உண்டு. ஒரு சிறந்த தலைமையுண்டு.வந்து பார் பகையே இனி உன் உடல் எம்மண்ணின் உரம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஓடி ஓடிச் சண்டைக்கு வக்காளத்துவாங்குறியள்.. என்ன ஏஜன்சி.. பிசினசோ..?
அவங்கள்தான்.. சண்டையை எப்பிடியும் தெடக்கிப்போட்டு.. உழைக்கிற யோசினையோடை.. செயற்படுறாங்கள்..ஓடித்திரியிறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#31
தாத்தா ஓடி ஓடி கடிநாய்மாதிரி ஏன் ஆக்களோட கொளுவுறியள்.
Reply
#32
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தாத்தா ஓடி ஓடி கடிநாய்மாதிரி ஏன் ஆக்களோட கொளுவுறியள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இல்லை சேது.. நான் உறுமவுமில்லை.. கடிக்கவுமில்லை.. அகிம்சையெண்டு.. ஒருத்தர்.. சொல்ல.. இவரொருத்தர்.. சண்டை சண்டையெண்டு.. குரைக்கிறார்.. அதுதான்.. ஏஜென்சிக்ககராரோ.. உழைப்புக்கு வழி தேடுறாரோ.. எண்டு கேட்டன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#33
இல்லை நிச்சயமாக சண்டைக்கு வக்காலத்து வாங்கவில்லை. நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டு எம் இனத்தை இன்னலுர வைப்பது எனக்கு ஒரு போதும் உடன்பாடல்ல. ஆயினும் எத்தனை காலத்திற்குத் தான் பொறுத்துக் கொண்டிருக்க முடியும். என்ன இப்போது என்ன சண்டையை சிங்களம் நிறுத்தி விட்டது என்றா நினைக்கின்றீர்கள். என்ன தான் முட்டி மோதினாலும் தோல்வி அவர்களுக்குத் தான். எனது ஒரே ஆதங்கம் எம் புனிதமண் இந்த வீணர்களின் புதைகுழியாய் இனியாவது மாறாதிரக்க வேண்டும் என்பதே.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்
seelan
Reply
#34
P.S.Seelan Wrote:இல்லை நிச்சயமாக சண்டைக்கு வக்காலத்து வாங்கவில்லை.
ஓமோம்.. நீங்கள்.. எதுக்கு வக்காளத்து.. வாங்கினீர்களெண்டு.. மீண்டும்.. உங்களது கருத்துக்களைப் போய்.. கிரகித்து வாசித்து.. ஆராயுங்கள்.. புரியும்
தோல்வி.. ஆயுதம் தரித்த... அனைவருக்கும்தான்.. ஆயுதத்தால்.. வெற்றி வெற்றியெண்று முழங்கி.. தினமும் கோஷமெழுப்புவதிலிருந்து.. புரியவில்லையா.. அது தோல்வியெண்று.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#35
தாத்தா பொங்குதமிழ் வெற்றி தெரியுமோ?
Reply
#36
sethu Wrote:தாத்தா பொங்குதமிழ் வெற்றி தெரியுமோ?
[size=12]பொங்கு தமிழ்.. எப்பவும் வெற்றிதான்.. 83 ஆம் ஆண்டு.. போன புத்தி.. கொஞ்சம் கொஞ்சமா வருகுது.. உந்த ஆயுதம்தான்.. இடையிலை நீண்டு பிடிச்சுக்.. குழப்புது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#37
திரந்த இடமே இல்லை 5 ல் வழையாத உங்கழை எப்படி 50 வழைக்குறது.
Reply
#38
வடபகுதியை விட்டு படையினரை வெளியேறுமாறு தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதே இராணு வத்தினரின் பாதுகாப்பிலேயே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான வீ. ஆனந்தசங்கரி யாழ்ப்பாணம் வந்து செல்கிறார். இந்த நிலை ஏன்? இவ்வாறு கேள்வி எழுப்பினார் ரெலோ அமைப்பின் முதல்வர் என்.சிறீகாந்தா.
நேற்று யாழ். ஆஸ்பத்திரி வீதியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று இடம் பெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே ரெலோ முதல்வர் இவ்வாறு பதில் கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரான வீ.ஆனந்தசங்கரி தெரிவிக்கும் கருத்துக்கள் அண்மைக்காலமாக முரண்பாடுகள் நிறைந்தனவாக உள்ளன. அவரது கருத்துக்கள் விளக்க மில்லாதவை. தேர்தல் காலத்தில் புலிகளே தமிழரின் ஏகபிரதிநிதிகள் என தனது கட்சி அங்கத்தவர்களு டன் இணைந்து மேடைகளில் முழங்கினார். ஆனால், இப்போது தான் அப் படிச் சொல்லவில்லை எனக்கூறி வருகின்றார்.
புலிகளே தமிழர்களின் ஏக பிரதி நிதிகள் என்பதை இன்று உலக மெங்கும் பொங்கு தமிழ் நிகழ்வு மூலம் தமிழ்மக்கள் பறைசாற்றியுள்ளார்கள். எவரும் அதனை மறுத்து ரைக்க முடியாது. வீதிகளில் சாகசம் காட்டும் படையினர் எமது மக்களின் உணர்வுகளை அடக்கிவிடமுடியாது. நசுங்கிப்போவதற்கும் நசுக்கப்படுவ தற்கும் தமிழ் மக்கள் அடிமைகள் அல்லர். இராணுவத்தினர் யாழ்ப்பாண வீதிகளில் கலகமடக்குவதுபோல் பாவனைசெய்து பயிற்சி பெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ். மக்களின் பொங்கு தமிழ் எழுச்சியைக் கண்டு அச்சமடைந்த இராணு வத்தினர் தமிழ் மக்களின் மனங்க ளில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக் கோடு மேற்கொள்ளும் ஒரு நடவடிக் கையே இதுவாகும். இத்தகைய நடவடிக்கைகளுக்கெல்லாம் எமது மக்கள் அஞ்சமாட்டார்கள்.
உலக நாடுகளில் இராணுவத்தின்; பயிற்சிகள் மற்றும் செயற்பாடுகள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுவன. அங்கெல்லாம் சுதந்திரதின விழா, நாட்டின் பிதாமகர்களின் நினைவுநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றி லேயே இராணுவ சாகசங்கள் மக்கள் முன் இடம்பெறும். மக்கள் மத்தியில் எந்தப் பயிற்சியையும் படையி னர் மேற்கொள்ளமாட்டார்கள். இந்த வரையறையை மீறி இலங்கை இராணு வத்தினர் யாழ்ப்பாணத்தில் செயற் படுவது மனவேதனைக்குரியவிடயமாகும்.
- இவ்வாறு சிறீகாந்தா தெரிவித்தார்.

நன்றி உதயன்
Reply
#39
எதிர்க்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக உப்புச்சப்பற்ற வார்ததைகளை உபயோகித்து வெல்லப்பார்க்கின்றீர்கள் மதி. உண்மையில் யார் படித்து ஆராய்ந்து கிரகிக்க வேண்டியவர் என்பது உங்கள் ஆத்திரமான வார்த்தைகளிலே தெரிகின்றதே. வெட்கப்படாமல் இனியாவது அதைச் செய்யுங்கள். நிச்சயமாய் உண்மையின் பக்கம் நீங்கள் வருவீர்கள். ஒரு கவலை இன்னமும் எம் இனத்திற்குள் இப்படி வேற்றுமைகள் உள்ளதே என்பது தான். உண்மை தோல்வி ஆயுதம் தரித்தவர்களுக்குத்தான். அதாவது பாதிக்கப்பட்டவர்களை அழிக்க ஆயுதம் ஏந்தியவர்களுக்கு.ஒரு இனத்தை அடக்கப்பார்த்தவர்களுக்கு. பொங்கு தமிழ் நிகழ்ச்சி படங்களைப் பார்க்க வில்லையா அங்கே யாருடைய படம் முன்னாலுள்ளது என்று. மாகத்மாகாந்தியினுடையது அல்ல எமது தேசத்தின் நாயகனின் உருவப்படம். இன்னமுமா புரியவில்லை. அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? உறங்குபவனை எழுப்ப முடியும். உறங்குவதாக நடிப்பவரை....!? அஹிம்சையும் நாம் தான் அடியும் நாம் தான் என்று ஈழமக்கள் சொல்லிவிட்டார்கள்.

ஒன்றுபடு தமிழா

அன்புன்
சீலன்
seelan
Reply
#40
P.S.Seelan Wrote:எதிர்க்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக உப்புச்சப்பற்ற வார்ததைகளை உபயோகித்து வெல்லப்பார்க்கின்றீர்கள் மதி. உண்மையில் யார் படித்து ஆராய்ந்து கிரகிக்க வேண்டியவர் என்பது உங்கள் ஆத்திரமான வார்த்தைகளிலே தெரிகின்றதே. வெட்கப்படாமல் இனியாவது அதைச் செய்யுங்கள். நிச்சயமாய் உண்மையின் பக்கம் நீங்கள் வருவீர்கள். ஒரு கவலை இன்னமும் எம் இனத்திற்குள் இப்படி வேற்றுமைகள் உள்ளதே என்பது தான். உண்மை தோல்வி ஆயுதம் தரித்தவர்களுக்குத்தான். அதாவது பாதிக்கப்பட்டவர்களை அழிக்க ஆயுதம் ஏந்தியவர்களுக்கு.ஒரு இனத்தை அடக்கப்பார்த்தவர்களுக்கு. பொங்கு தமிழ் நிகழ்ச்சி படங்களைப் பார்க்க வில்லையா அங்கே யாருடைய படம் முன்னாலுள்ளது என்று. மாகத்மாகாந்தியினுடையது அல்ல எமது தேசத்தின் நாயகனின் உருவப்படம். இன்னமுமா புரியவில்லை. அல்லது புரியாதது போல் நடிக்கின்றீர்களா? உறங்குபவனை எழுப்ப முடியும். உறங்குவதாக நடிப்பவரை....!? அஹிம்சையும் நாம் தான் அடியும் நாம் தான் என்று ஈழமக்கள் சொல்லிவிட்டார்கள்.
நீங்கள்.. நான்.. அங்கு எழுதிய கருத்தையே.. இதற்கும் பதிலாக.. எடுக்கலாம்.. படமே.. இல்லாது.. பங்காட்டுவதை.. படங்காட்டுவதை..பார்ப்பவர்கள்.. பார்த்து.. நிர்ணயிக்கட்டுமே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)