Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
போராளிகள் படைப்பு
#21
இடிக்கிறது என்மனம்
மட்டக்களப்பிலிருந்து யாழ். வரையான மண்
பத்துத்தடவை என் பாதத்தை முத்தமிட்டதம்மா
பன்னிரண்டு வருடம் மாரிமழை
என்னைக் குளிப்பாட்டியதம்மா
இத்தனை காலத்து இருளும் என்னை
இன்றுவரை காத்ததம்மா
சுட்டெரிக்கும் வெயிலுமென்னை
சுகமாகத் தோள் தட்டியதம்மா
கொண்டல்காற்று, வாடைக்காற்று
என்மேனி தழுவி இன்பமளித்ததம்மா
இன்னுமென் மனம்மட்டும் அமைதியாக வில்லை!
என் இனத்தின் துயர்கண்டு இடியாய் இடிக்கிறது.
இருபதுக்கு மேல் களம் கண்ட கண் இது
இடையிடையே என் மேனியின் கரும்
தழும்பைக் கண்டு மகிழுது.
இன்றுவரை நான் வித்தாகவில்லை.
வித்தாவேன், சில வேளை வெடிகுண்டேந்தி
வெடித்திடுவேன் கரும்புலியாகி
இச் செய்திமட்டும் உன் செவியில்
ஒரு நாளில் வந்தடையும் அம்மா
பதறாதே பதட்டமடையாதே!
சிங்கத்தின் குகைக்குள் இருப்பதால் அம்மா
மட்டற்ற மகிழ்ச்சி கொள்
மண்ணுக்காய் வித்தானேனென்று

-புஸ்பாகனி
Reply
#22
ஒரு நாள்
காலையில் எழுந்து
காலைக் கடன் கழிக்கச் சென்றேன்
அனுமதி எடுக்க வேண்டியிருந்தது.
நேரமும் குறிக்கப்பட்டது
நேரத்தோடு குளிப்போமென்றால்
நோய்பிடித்த நாய்கள் நோட்டமிட்டன.
பாடசாலைக்குச் செல்லும்போது
பேய்கள் கனைக்கும் பச்சை வார்த்தை
நெஞ்சைக் கொல்லும்.
சோதனை என்று சோதனைச்சாவடி
நேரத்தை இழுக்கும்.
சோதித்து முடிந்ததும் முதல் பாடமும்
முடிந்துவிடும்.
எஞ்சிய பாடத்திற்கும் இடையிடையே
குண்டுச் சத்தம் மனதைக் குழப்பும்.
வீடு வரும்போது ஆறுமணியும் ஆகும்
வீட்டில் படிப்பதற்கும்
விளக்கெரிக்க முடியாது.
நித்திரை கொள்வதற்கு சப்பாத்துவிடாது
இவ வளவும் என் வீட்டில், என் வீதியில்
எனது ஊரில் ஏன் இப்படி ஆனது
எதனால் இப்படிப்போனது ஓ. ஓ
அன்று நான் சிந்திக்கவில்லை
அப்படியானால் இன்று?
-
கலைச்செல்வன
Reply
#23
முயலுவோம் வாhPர்....
மானம் என்பதோர் சொல்லின் பொருளாய்
தானமும் தழைத்திடும் தனிப்பெரும் ஈழமிது
கானமிசைத்தே கலகலவென்றிருப்ப,
ஈனமிழைத்ததே இழிகுலம் காண்மின்!!


ஓங்கு கல்வியுழைப்பை யுடையீர்
தேங்கு தன்மானத் திரவியம் பெற்றீர்
பாங்கு பகரும் பல்கலை படைத்தீர்
வாங்கு வளமெவை யாவுமே வெறுத்தீர்


ஊனமின்று பெரிதிழைக்கின்றீர்
மானமற்றுப் பொற்றமிழ்தனை மறந்து,
ஞானம் நவில் நாட்டினை விட்டகன்றீர்
மண்ணின் வாழ்வே வாழ்வென்போமே


விண்ணதிர வெற்றிகள் கொள்வமே
போனதற்கு வருந்துதல் வேண்டா,
கோனவராயினிக் கோல்களோச்சிட
விந்தைகள் விளைய, விடுதலை விரைய
வேங்கைகளாகி முயலுவோம் வாhPர்
போராளி ஒருவரின்
Reply
#24
கொடியபகை கொன்றொழிக்க
எழுந்திடுவோம் வாடா
ஊரினிலே பகையிருக்க உறங்குவதோ தமிழா?
வீறுமும்புலிப் படையிணையத் தயங்குவதோ தமிழா
அகதி என்றால் தமிழன் என்ற விதியழிப்போம் எழடா
அண்ணன் படை இணைந்து எங்கள் ஊர்பிடிக்க வாடா


கோயில் குளங்கட்டிக் குடியிருந்த ஊரில்
கொடியபடை கொலுவிருக்கும் நிலை வரலாமோடா?
சூரியக்கதிர் சுட்டெரிக்க நீ தூசா? பஞ்சா?
சூரியனைச் சுட்டெரிக்கும் தீப்பிழம்பாய் எழடா


வலிகாமம் இருந்துவரும் வாடையிளங் காற்றில்
வானரங்கள் மேனியதன் முடைநாற்றம் வீசும்
கோப்பாயில் துயிலுமில்லப் புூச்செடிகள் யாவும்
கொடியவனின் காலணியால் மிதிபட்டு வாடும்
பாயும் புலிக்கொடி பறந்திட்ட கோட்டையிலே
பகைவனின் கொடியது பறந்தாடும் இந்த
நிலை வந்தபோதும் நீளுமா உன் உறக்கம்
நாளை கோவணமும் இழக்கின்ற கேவலத்தை நீக்க
கொடியபகை கொன்றொழிக்க எழுந்திடுவோம் வாடா


ஏழுகடல் ஆண்டுவந்த சோழமகன் நீயடா
சோதனைகள் கண்டுமனம் சோம்பிப்போவ தேனடா?
ஆயுதத்தை ஏந்திடடா இந்தநிலை மாறும்
எங்கள் அண்ணன் புலிக்கொடி மீண்டும் யாழில் ஆடும்.
செ. இரும்பொறை
Reply
#25
உள்ளத்தில் மலர்ந்தவை.
உள்ளத்தில் மலர்ந்த தேசப்பற்றால்
ஊருக்குள் புகுந்து பகைவிரட்ட
உலகம் என்றும் வியக்கும்
உன்னத போராட்டம்
உறுதி மிகுநெஞ்சின்
உணர்வுகளைத் தூண்டியது
உடலென்ற சிகரத்தில்
ஊடுருவும் சன்னத்தால்
ஓனங்கள் வந்தாலும்
உயிரென்று உள்ளவரை
உறங்காது எம் கண்கள்
உலகத்தில் தமிழ் ஓங்க
உன்னத இலட்சியத்தால்
உருக்குலையா மனங்கொண்ட
உத்தமனின் வழி அமைப்பில்
உறுதியுடன் களம் விரைவோம்.

போராளி.
தமிழ்மாறன
Reply
#26
யுத்தம்

செந்தமிழர் நிலம் எங்கும்
மலர்ந்திருக்கும் யுத்தம்
கயவரின் வெறித்தனத்தால்
உறங்குவதற்கே அச்சம்
பல இழசின் ஓசையினால்
பாரெங்கும் பெரும் சேதம்
குண்டுகளின் அறுவடையால்
குடியிருக்க பதற்றம்
அன்றாடம் உணவருந்த
அவனியிலே கஸ்டம்
தமிழ் இனம் அடங்கி
இருப்பதில் இனி ஏதும் இல்லை அர்த்தம்
செந்தமிழன் தேசம் எங்கும்
மீட்பதற்கே சித்தம்
இனி சிந்துவோம் சுதந்திர இரத்தம்.


போராளி
தமிழ்மாறன்.
Reply
#27
என் மீது உன்னகமும் முகமும்
நேற்றய பொழுதொன்றில்
நான் உன்னை இழந்து போனேன்
என்னில் உன்னை விதைப்பதற்காய்
பலமுறை முயன்றும்
தோற்றுப்போனேன்
நீண்ட இரவுப் பொழுதொன்றில்
ஆந்தை அலறும் வேளை
ஆட்காட்டிக்குருவி அவலமாய்க் கத்தி
அமைதியைக் கலைக்கும்
மனிதம் எப்பவோ நடந்து முடிந்த பாதையில்
உன் சிறிய பாதங்களை
வெள்ளை மணலில் பதித்திருப்பாய்
தடம் பதித்து மீண்டும் வருவாயென்று
நினைவுகளைச் சுமந்து எட்டி நடந்திருப்பாய்
நினைவுகள் வழித்தடங்களாக
கரிய இருளொன்றுக்குள்
உந்தனைத் திணித்திருப்பாய்
கருமை படர்ந்த இரவுகள் தான்
உன் இறுதிப்பயண மாயிற்று
இறுதியாய் கானககுடிசை வந்தும் போனாய்
அங்கங்களையும் முகங்களையும் இழந்துபோன
நகரொன்றுக்குள் நீ
இறுதியாய் சரிந்து போனாய்
என்னில் உன் பயணத்தடமிருக்கும்
என் மனதில் நீ
இன்னும் கனமாய் படர்ந்துள்ளாய்
-சத்திய மலரவன்
Reply
#28
இளமை ஒளிர்கின்ற போராளியாய்
வாழ்ந்த காலத்தில்
சற்றும் எதிர்பாராமல் நிகழ்ந்ததுன் மரணம்


எப்போதும் போலவே பேசிச்சிரித்தபடி
விடைபெற்ற பொழுதின் பின்
நீ வீரச்சாவடைந்தாய்


போராயுதங்கள் பற்றிய பரிச்சயம்
நன்கறிந்தும்
நீ அப்படி ஆனாய்


மரணத்தின் கொடுவலி உணர்தலில்லாமல்
உன் போர்முகம் சிதைந்து போயிற்று
சிதைந்தே போயிற்று.


நினைவுக் கூர்மைகள் மனம் நிறைய
பிரிவின் வலியும் துக்கமும் எழ
பற்றைகளிலும் மரக்கொப்புகளிலும்
உன்னுடலைத் தேடித்திரிந்த கணங்களை


விரித்த சாறத்தில் குருதி சொட்டச்சொட்ட
சின்ன ஒரு பொதியாய்
உன்னை அள்ளி எடுத்த பின்


ஆற்றப்படாத காயங்களினால் மனம் நோக
வலிகள் பெருகும் வார்த்தைகளோடு
உன்னை து}க்கிச் சென்றோம்.


இனி இப்போர் வெளியில்
விழிகள் நிலை குத்திச் செல்கையில்
உனது கணங்கள் மனதில் நிறையும்
மனதில் நிறையும்
நிறைந்தபடியே இருக்கும்.
தமிழ்மாறன
Reply
#29
நீயும் நானும் சமர்க்களத்தில்
எதிரெதிரே இருந்தோம்.
உனது சுடுகுழல் என்னைக் குறிவைக்க
என்னை நீயும் உன்னை நானும்
கவனித்தபடியே எம் காப்பரண் வாழ்வு
ஓடிக் கழிந்தது.
உனது ஊர் பிடிக்கும்
கடமை சுமந்து என்னைக் கொல்ல வரும்
உன்னை முன்னேற விடாத
எனது காவல்.
சமர்க்களமொன்றில் கட்டுடைத்துப் பாய்ந்து
ஆறாய்ப் பெருகிய
என் குருதிக்கு
உனது ரவையொன்றுதான்
காரணமாக இருந்திருக்கலாம்.
எனதருகே காவலிருந்த தோழி
கண்ணொன்றைப் பறி கொடுக்க
நீதான் சிலவேளை சுடுகுழல் இயக்கியிருப்பாய்.


உனது குழுத்தலைவன் தப்பியோடிய
அன்றைய பாரிய மோதலொன்றில்
எனது குழுத்தலைவி
மண்ணுள் விழி மூடிப்போனாள்.
அவளின் புகழுடலுக்கு ஊர்ச்சனம்
மண்போட்ட அன்று
உங்களது பண்டாவும், சமரவீராவும்
நீங்கள் வெட்டித் தறித்த
தென்னந் தோப்புக்கே
உரமாகிப் போயினர்.
அர்த்தமுள்ள எம் சாவுக்குப் பின்னால்
அருகதையின்றிப் போயிற்று
உன் மாந்தர் உயிர்கள்.


சாவுகளை எம் அருகில்
உறங்க விட்டு நாம் விழித்திருக்க
நீயும் உன்னவரும் அதை
எதிர் கொள்ளப் பயந்து விழித்திருக்க
நித்திரையற்ற எத்தனை இரவுகளில்
விடுமுறையில் போய்த்திரும்பியே வராத
நினைப்போடு நீயும்,
என் உறவுகள் ஊர் போகும்
கனவோடு நானும்
கண் விழித்திருப்போம்.


வெடிமுழக்கச் செய்தி கேட்டு
உனது சுஜாதா விகாரைக்குச் செல்வாள்
எனது அம்மாவும்
தேங்காய், கற்புூரம், புூக்கள் சகிதம்
அரசடிப் பிள்ளையாருக்கு முன்னால்
பிரதட்டை பண்ணியிருப்பாள்.
எப்படி இவற்றையெல்லாம்
சுலபமாக மறக்கமுடியும் பகைவீரா!
இவ வளவு நாளும்
உயிருடனிருக்கிறேன் என்பதையே
நம்ப முடியாமலிருக்கிறது எனக்கு.


இப்போது நீயும் நானும்
சில மீற்றர் து}ரங்களில்
சிரித்தபடியே பார்த்திருக்கிறோம்.
உனது சாவடி தாண்டி வரும் எம்மவரை
சோதனையிட்டுப்
புன்னகையொன்றை வெளியிட்டபடி
போகச் சொல்கிறாய்.
காலம் தான் எவ வளவு மாறிவிட்டது பார்த்தாயா
என்னையும் உன்னையும்
வழிநடத்திய தளபதிகள்
ஒரே மேசையில் உட்கார்ந்து பேச,
உன்னு}ருக்கு என் சனமும்
என்னு}ரில் உன் உறவுகளும்
சுற்றுலா மேற்கொள்ள
எதிரெதிரே இருந்தவரை
அருகருகே வைத்துள்ளதே இக்காலம்.
ஆட்சியும் அரசும்
மாறி மாறிக் கழிய
என் மாந்தர் துயருக்காய் நானும்
உன் உறவுகளின் பசிபோக்க நீயும்
காப்பரண் வேலிக்கு வந்திருந்தோம்.
இப்போது சமாதானக் கனவில்
அதிகம் மகிழ்ந்திருப்பது
நீதான் என்று எனக்குத் தெரியும்.
நித்திய சாவும் புூரணவாழ்வுமாய்
இருந்த உனக்கொரு இடைவெளி.


கார்த்திகை வந்துள்ளது
கண் மழையுள் எமை வீழ்த்திய
காலங்களை விரட்டிய
எம் வீரர்களுக்குச் சுடரேற்ற
கல்லறைக்குச் செல்லவுள்ளேன் நான்.
நீயெப்படி.....


இன்னமும் கம்பி வேலிக்குள்ளா
காலத்ததைக் கடத்துகிறாய்.
இவ வுடல் மண்வீழும் வரைக்கும்
விடுதலைக்காகவே வாழ்கிறேன் நான்.
உயிர்விடும் கடைசித் துளிவரை
அச்சத்துடன் கழிகிறதே உன்வாழ்வு.
உனது துப்பாக்கியும்
எனது சுடுகுழலும்
இப்போது மௌனித்திருக்கிறது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில்
சிரத்தையாயுள்ளது எம்கரங்கள்.


எப்போதும் சுடுகுழல் காவித்திரியும்
சுமை கொண்ட வாழ்வுக்குச்
சொந்தக்காரனே
உனக்காய் யார் ஏது செய்தார்கள்?
எங்கள் தலைவனின் காலத்தில்
விடியும் நாளுக்காய்
கனவுகள் சுமந்தபடி
ஊர்போக முடியாது காத்திருக்கும்
எம் தமிழர் வீடுகளில்
பாதுகாக்கப்பட்டிருக்கிறதா உன்
வாழ்வு?
இரு
எமது இயல்பு வாழ வுக்காய்
எதையும் செய்வதை விரும்பாதவர்கள்
உனது முள்வேலி வாழ்க்கைக்காவது
ஒரு முடிவு கட்டுவார்களா?


உனது சுஜாதாவுக்காக
இளநீர் சீவிப் பிழைப்பு நடத்த
இனியாவது காலம் உன்னை
அனுமதிக்கட்டும்.
பகைவீரா!
இந்த மண் உன்னைத்
தோழமையுடன் வழியனுப்பி
வைக்கவே விரும்புகின்றது.
நான்கு பேர் சுமக்க முடியாது
உப்பிப் பருத்த
வெற்றுடலாகவல்ல.
அம்புலி
Reply
#30
நீங்களும் இரவும் நாங்களும்
ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தைப் பிடிக்க
விரைந்து கொண்டிருக்கும் எங்களை மறித்து
உங்களின் கரங்கள் நீளும்
நிற்போம்
"அண்ணை நானும்வரட்டா?"
என்பீர்கள்
வாயில் வார்த்தை எதுவுமே வராது போவோம்.
ஏதேனும் சிந்தனையில் மூழ்கி நாங்கள்
ஒரு கணம் நிதானம் இழந்து போனால்
"டிம்" இல்லையோடா?
என்று திட்டுவீர்கள்.
சிரிப்பும் கவலையும் சேர்ந்தே வரும்.


பாதுகாப்பாக பீரங்கிகளை நிலைப்படுத்தி
எண்ணியெண்ணி எறிகணை செலுத்திய
காலங்கள் விலகிப்போக
எதிரிகள் ஓடும் வேகத்திற்கேற்ப
எறிகணை செலுத்திகளை நகர்த்தும்
வாகனங்களைச் செலுத்தும் வல்லமை பெற்ற
சகோதரிகளினுடைய சகோதரர்களே.
இரவிலே வாகனங்கள் செலுத்தும் அனைவரும்
ஆண்களாகத்தான் இருப்பார்கள் என்று
எப்படி உறுதியாகத் தீர்மானிக்கிறீர்கள்?
உங்களின் எழுதாத சட்டங்களைத்
து}க்கி எறிந்துவிட்டு
தயவு செய்து கவனியுங்கள்.
நாளைக்கு உங்கள் அக்கா
ர்யைஉந செலுத்திச் செல்லக்கூடும்
உங்களது கடைசி தங்கை
Pயளளழைn இல் பறத்தல் நேரும்
கப்பற் தொகுதிக் கட்டளைத் தளபதியாய்
மருமகள் பிறத்தல் ஆகும்.
தமிழீழத்தில் ஓர் நல்ல விமானியாய்
பெறாமகள் இருத்தல் நிகழும்.
சட்டங்கள் பெற்றாலும் சுதந்திர தமிழீழத்தில்
வேலையில்லாச் சிக்கலிற்குள்
சிக்காது உங்களது
புதல்வியால் கூட வீதிப் புனரமைப்பில் ஈடுபடும்
கனரகங்களை கன கச்சிதமாய்ச் செலுத்த முடியும்
உருளச் சிரமப்படும் உலகத்தை ஒற்றைக் கையால் உருட்டப் போகும் உங்களது
பேத்தியின் பெருமை காணும்
பேறு உங்களுக்கு இருத்தல் நல்லது.


எமதருமை உறவுகளே
இனியேனும் வாகனங்களை மறிக்கும் போது
பொதுப்பெயரில் விளித்துதவி கேளுங்கள்.
உறவுப் பெண்களாயிருந்தால் உந துருளிகளிலும்
ஏனையவர்களானால் ஏனைய வாகனங்களிலும்
இடமிருந்தால் நிச்சயம் உதவுவார்கள்.


நேற்றும் இன்றும் நாளையும்
ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்பதுடன்
இது
சூரியனின் புதல்விகள் உலவும் தேசம்.
நிலா
Reply
#31
காப்பரண் வேலியிலிருந்தோர் கடிதம்
காப்பரண் மரங்கள்
கதைபேசின.
வான்நிலவும் உடுக்களும்
வந்தன சேர்ந்துண்ண
கார்முகிற் துளிகளில்
முகம்பார்த்துத் தலைசீவி
பனிக்கால இரவுகளை
பயிற்சிக்காய் பகலாக்கி இளமைக்
கனவுகளின் முளைகிள்ளி
காவலுக்காய் உயிர்தேக்கி
உடல் தின்ற குண்டுக்கு
உதிரத்தால் பசியாற்றி
விழுப்புண்கள் ஆறமுன்னம்
விரைகின்றேன் எல்லைக்கு
மீண்டும் பதுங்கு குழி.. துப்பாக்கி..
எத்தனை உயிர்களின்
துயிலலுக்கான துயில்மறப்பு.
இன்றோ நாளையோ
என்றிருக்கும் வாழ்வுக்காய்
என்னுறவுகள்
அழுதலில் எனக்காறுதலில்லை
உண்ணும் சோற்றில் ஒருபிடி
உடுக்கும் துணியில் ஒரு முழம்
இல்லாதோர்க்கீயும் மனத்திறன்
எல்லாம் உறவென
நினைக்கும் ஈரம்.
பேதமகற்றிய வாழ்வின் வீரம்
காதலின் மேலெனக் கருதுவேன் யான்
நெஞ்சினிற் சுமக்குமென்
தாகத்தை ஆற்ற
நினைவுகளால் நீர்விடுங்கள் உறவுகளே.

அம்புலி
Reply
#32
லயம்

விளக்கொன்று
கைக்கொண்டு
புறப்படும் பயணம்..
ரூஙூஸசூசி;
இருளோடிக்
கிடக்கும் பெருவெளியிடையில்
தொடர்கிற தேடல்லு}.
எதைக்காணவேண்டி...?
நாமறியோம்!
ஆனாலும்
தேடும் தாகம்
தணிவதேயில்லை
இதுவோ
இதுவோ எனக்கேட்குமறிவு
இதுவன்று இதுவன்று
எனச் சொல்லும்
அனுபவம்
பெருவிருட்சமொன்றின்
ஆணி வேர் காணப்
புறப்படுவனுக்கு
பக்கவேர்க் கீற்றுக்களோடே
பாடம் முடிகிறது.
ஆதிகால முதல்
உன்னையும் என்னையும்
வைத்துக்கொண்டு
சிதம்பர ரகசியம்
காட்டுகிற பயணத்தைச்
சாட்டாக வைத்து
உலகு செய்கிறது
இயற்கைலு}..
தேடல்
தொடர்கிறது
தனது லயம்
பிறழாமல்!
Reply
#33
நீ

எங்கெங்கும் எதிலும்
ஒரு வியாபகமாய்
தெரிகிறாய்- உனக்கே நீ..


உனது சுகம்
உனது தெரிவு
உனது விருப்பு
உனது வெறுப்பு
என..
உனபிறலைகள்
மட்டுமே தெரியுமுன்
கண்ணுக்கு!
அடுத்தவர்...?
உனக்கும் புூச்சிகள்....
ஊதி விலக்கிடை
முடியாதெனில்
உலக்கை போல் கொண்டேனும்
வழி விலக்கி
மீண்டும் கொள்வாய்
உனதான உன்
தரிசனம்!
போதனைகோடி முத்தம்
உனது சிவப்புமைப்பேனா
வாகாய்..
உன் சுகங்காக்க
வழிசமைத்து..!
உனது விழிகளின்
அலட்சிய வெய்யில்
வார்த்தைகளின்
நிர்த்தாட்சண்யம்
செய்கைகளின்
கொடூரம்
இவை புரியும் அழிப்புகள்
உனதறிவில் உறைக்கா....
உன் மணமேடையில்


சிம்மாசன மேறி
மறந்தாலும் புன்னகையோடு
வீற்றிருக்கும்
உன்னையே
பசித்தபடி "நீ"

சத்தியபாலன
Reply
#34
யாழ்பாணத் தரிசனம்
1
மீளவும் உயிர்த்திருக்கிறது பசுமை
தமிழரின் நிமிர்வின் குறியீடாய்
இயக்கச்சியைத் தின்றிருந்த
'அயன் சைற்' றின் நிழலில் அறுத்தெறியப்பட்ட
தாலங்களின் "அடிக்கட்டைத் தோப்பில்"
மீளவும் உயிர்க்கின்றது பசுமை
'உடையவன் கண்டால் தற்கொலைதான் செய்வான்'
என்றவிந்த நெஞ்சுகள் குளிர்ந்தன..
வயிறெரிந்து சாபமிடல், கழிவிரக்கம்
என்பதல்ல எங்கள் வாழ்வியல்
'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' எங்கள் வழி!
வாழ்க தோப்புடையோனே,
நீங்கள் எங்கள் வாழ்வின் துளிர்.
2
பளை தாண்டிப் போகிறது வண்டி
வட்டற்ற தென்னைகள் பனைகள்.
எறிகணைச் சிதறல்களைத் தாங்கி
பலப்பல கோலங்களில் மரங்கள்.
குறுக்கறுத்த புலிகளைச் சூழ்ந்து
அறுபதாயிரம் படையினர் புரிந்த சாதனை!
பதைக்கிறது மனது,
இதனுள் நின்றவர் எப்பாடுபட்டிருப்பர்!


விரிகின்றன விழிகள்.
உயிரிழந்து பல்லிளித்து நிற்கிறது
துருப்புக்காவி ஒன்று அப்பாலே ஒரு ட்ரக்.
இதனுள்ளிருந்தா கேட்டாய் எம் தளபதியைச் சரணடைய
காப்போமவற்றை.
எம்பிள்ளைகளின் வீரத்தின் சின்னமாய்.
3
வாய்விட்டுச் சிரித்தேன்
மறுகணம் இறுகிக் கொண்டது மனம்
முட்கம்பியும் காவலரணும் சுவர்க்கரையொன்று
"ளுசடையமெயn யுசஅல ஐள டீநளவ" என்கிறது.
திரும்பிப் பார்த்தேன்
யாழ் வளைவும் செம்மணி வெளியும்
தெளிவாய்த் தெரிந்தன.
4
எட்டாவது ஆண்டில் உன்னைத்
தரிசிக்க வந்தேன் உன் துயிலிடத்தில்
நள்ளிரவில் சுடரேற்றி நாமழுது உரமேற்ற
நாட்கள் எழுந்தன மனதில்
இப்போதும் மஞ்சள் மாலையில்
ஆயிரங்களாய்க் கூடினோம்
'சந்திகளில் நின்றோர்' முகமும் மனமும் அதிர
மீண்டும் உயிர்த்த உன் துயிலிடத்தில்
ஏற்றுகிறேன் சுடர்கள்
சுடர்கிறது ஒளியென் மனதில்.
பு.சிந்துஜன
Reply
#35
நேற்றுவரை நீங்கள் நேரிருந்தீர்
கண்களிலே?..
புூத்ததுபோல் புூத்துப் புன்னகைத்தீர் போய்விட்டீர்
எங்களுடன்
பேசிக் களித்தீர் போய்விட்டீர்
தாயகத்தில்
வீசிவரும் காற்றில் விரித்த சிறகெடுத்துத்
தூரப் பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே!
ஈரவிழியிங்கு எமக்கிங்கு காயங்வில்லை.
ஊரறியோம் உங்கள் உறவறியோம்
தந்தையிட்ட பேரறியோம் ஆனாலும்
புகழறிந்து நிற்கின்றோம்
நெஞ்சினிலே உங்கள் நினைவுக்கு
மாலையிட்டு
நஞ்சணிந்தோம்
நீங்கள் நடந்தவழி நடக்கின்றோம்.
தம்பியென்றும்
அண்ணன் தங்கையென்றும்
எங்களுக்கோர்
வம்சவழி தோன்ற வாழ்ந்தோமே
கல்லறைக்குள் நீங்கள் கண்மூடித்
தூங்குவதாய்
சொல்லுகிறார்
உங்கள் தேகம் தூங்காதே
மொட்டுவிழும் புூவினிலே முகம் தெரியும்
கல்லறைக்குக்
கிட்டவர உங்கள் கண்தெரியும்
வீசுகின்ற
காற்றினிலும் மூச்சுக் கலந்து
எம்மை உயிர்ப்பிக்கும்
கூற்றெனவே வரும் பகையைக்
குடிப்போம்
வென்றிடுவோம்.
புதுவை இரத்தினதுரை
Reply
#36
எட்டி உதைக்கும் கால் எடுத்து
கழுவியொரு முத்தமிட்டுக் கிடந்ததெம் முற்றம்
ஆளவருவோரின் தோள்தழுவத்
துவண்டிருந்ததெம் முற்றம்
வேர்கள் தொழுப்பார்த்து விழுதுகளும் கையெடுத்துக்
காலைக் கழுவிக் கண்துயின்ற முற்றமிது
பாலை, நெடும்பாலைப் பற்றையெனக்
கிடந்தமுற்றம்
வந்தாரெம் சிறுவ வரிசை
வருகையின் பின்
மந்தாரம் போட்டு மழைபொழியும் முற்றமெனச் செய்தார்
செகத்தையிவர் திகைக்க வைத்து விட்டார்கள்
பொய்யாய்க் கிடந்த புலவைப் புதுநிலமாய் உழுதார்
விழுதெறிந்தார் ஊர்முழுதும் விளைச்சலென
எழுதும் படியாக எப்படியோ செய்துவிட்டார்
ஊரழிப்பேன்
உன்னூரில் உலையேற்ற விடமாட்டேன்
சீரழிப்பேன்
உன்னைத் திசையெங கும் சிதறவைப்பேன்
நீவணங்கும் சிவபுரத்தைத் தீயிடுவேன்
பேரழிப்பேன்
தமிழர் நிலமெல்லாம் நானழிப்பேன்
என்றெழுந்தான் எங்கள் எதிரி
அவனையெதிர் கொண்டாரெம் வீரக்குழந்தைகள்
நெருப்பாகி நின்றெதிர்த்து இந்தோ நிலமுறங்கும் மாவீரா
கல்லறைக்கு என்கண்ணீர்க் காணிக்கை
இக்கவிதைச் சொல்லடுக்கையெல்லாம்
சோடித்தேன் கல்லறையில்.
புதுவை இரத்தினதுரை
Reply
#37
திருவெலாம் சூழ
வாழ்க பல்லாண்டு!
விண்வரை விரியும் வியத்தகு வீரம்
விரிந்தோர் மலரை நிகர்த்திடும் அழகு
பண்ணெடுத் தெவரும் பாடிடும் பண்பு
பரணியொன் றெழுத வல்லவுன் வெற்றி
கண்வழி வழியும் கருணையின் கசிவு
களத்தினில் பகையை வெல்லுமுன் ஆற்றல்
இன்னும் பல்லாண்டு ஆண்டென வளர்க.
இளமையோடிருந்து வாழ்க பல்லாண்டு!
ஆயிரம் அகவை நினக்கெனவாகும்
அன்பினர் வாழ்த்து அதையுருவாக்கும்.
நாவிருந் தெழுமென் நற்கவி யெழுதும்.
நலன்பெறும் சொற்கள் நடப்பனவாகும்.
காவியப் பொருளே! காலையின் கதிரே!
கவினுறப் பொலியும் அருள்மிகு திருவே!
தேவியின் கடைக்கண் பார்வை பெற்றவனே
திருவெலாம் சூழ வாழ்க பல்லாண்டு!
புதுவை இரத்தினதுரை
Reply
#38
மாவீரனின் நினைவாக

தந்தையார்
அவர்
மகனைத் தேடுகின்றார்
விடுவிக்கப்பட்ட கிராமங்களுக்கு
போய்க் கொண்டிருக்கிற
மக்களின் முகங்களிலும்
எல்லாப் பிள்ளைகளும்
இனிதிருக்க எரிந்தொளிர்ந்தான்
என்பது தெரிந்தும்
அவர் மனமோ
வாலறுந்த பட்டமெனக்
கிடந்தலைதலுற்றது
அலைகள் அடங்கா இருளில்
அவனு}ர்ந்த தோணியும்
சிலுவையாய் மாறியது
இராவணன் மீசை ணீ
அவன் தலையில் முள்முடியெனத் தரித்தது
கரையேறக் கரையேற
ஏரோதுவின் கொடும் சகாக்களாக
ஆக்கிரமிப்பாளர் மாறுகையில்
"தந்தையே ஏன் என்னைக் கைவிட்டாய்"
என்றொரு குரல் அநாதரவாய் காலமெல்லாம் அலைந்தது.
மீட்பலைகளின்
வருகை தீராத தீவொன்றின் கரையில்
எழுதிய புதிய காவியமென அவன்
ஒளியின் சொரிக் கதிர் தடவி
விடுதலை வயல் வரம்பில்
புது நடையோடு போனான்
புழுதிமண் சொரியும் தெருவில் போகும் மக்கள் மனங்களில்
அவன் ஆன்மா
குருதியில் குளித்த
விடுதலைச் சிலையெனச் சொரூபிக்கிறது.
Reply
#39
குறும்பன்

தறித்து வீழ்த்திய
தென்னை மரத்தின்
குற்றியில் இருந்தபடி
அவன் தன் நண்பர்களோடு கூடிச் சிரித்தான்
எத்துனை அற்புதமான ஓவியங்களை
மனதில் நிழலாட விட்டபடி
சூரியனை மேற்கில் கொண்டுபோய்
சாய்த்துவிட்டு
நிலவின் ஒளிக் கற்றைகளோடு
வீடு திரும்புவான்
புழுதிப் புூச்சேற்றிய
ஒப்பனைக்குள் மறைந்தபடி
முனிதவம் கலைந்து போனது போலப்
புறப்பட்டு வருகிற
அப்பாவின் கோபக் கனல்களையே
அவன் ஏவுகிற அஸ்த்திரங்கள்
ஒவ வொன்றாய் வீழ்த்தும்.
எந்தப் பாடங்களும்
அவனுக்கு சரிவராது போகையிலும்
புவி அளப்பது மட்டும்
அவனுக்கு மிக நன்றாக வழிப்போகும்
மனக் கணக்குகளை
பிழைபடச் சொல்லுகையிலும்
அப்பா
அவனுக்காக வழக்காடுவார்
அவன் தான்
பின்னாளில்
புூமிக்காக வழக்காடும்
ஒரு போரிலும் நின்றான்
வாழ்வையும் சாவையும் வென்று.
Reply
#40
ஒரு பிசாசின் மரணம்

கால இருளைக் குடைந்து கொண்டு வருகிறது
குதிரைகளின் குளம் பொலியடங்காக்
காற்று
அதோ!
சப்பாத்துக் காலடிகளின் ஓசை
இருளின் கூந்தலைப் பிடித்திழுக்கிறது
மீண்டும், மீண்டும்
முதுகில் கூனல்
நிமிர, நிமிர உதைக்கிறார்கள்
ஆக்கிரமிப்பாளர்கள்
குருதிப் புனலாடவும் இங்கே வந்து
போகிறார்கள்
கூந்தல் கலைய
எமது பெண்கள்
விம்மியழுதவை
காலங்கடந்தும் எமது
உயிரணுக்களிலும் அதிர்கிறது
ஆக்கிரமிப்பாளர்களின் குதிரைகள்
எமது இதய நாடிநரம்புகள் ஊடாகவும்
சவாரி செய்யுமோசை இன்னும் தான் கேட்கின்றது.
ஒளியின் பிடரி பற்றி வீரர்கள்
குதிரையேறத் தொடங்கிய பிறகு தான்
கதையே மாறிற்று
மூதாதையர்களின் கைப்பட
பேரப்பிள்ளைகளுக்கும் புூட்டப் பிள்ளைகளுக்கும்
பிறருக்கும், நிழலும், கனியும் கொடுக்கவென
நாட்டிய முது மரங்களின் நிழலில் ஒதுங்கிக்களைப்பாறினர்
நீண்ட பயணங்களின் பின்
காடுகளின் இரகசியங்களுக்குள்
ஆழமாய் ஊடுருவிப் போயினர்
எனது மண்
என்ற பிரகடனங்களுடன்
வாழ்வைச் சூறையாடிய
ஆக்கிரமிப்புப் பிசாசுகள் சிலதையும்,
துப்பாக்கிகளையும், தொப்பிகளையும், சப்பாத்துக்களையும்
கிராமங்கள் ஊடாக பிசாசின் மரண ஊர்வலமாக எடுத்துப் போயினர்
பிசாசின் மரணத்தை எழுதத் தொடங்கிய
வரலாற்றின் தொடக்கமே
வாழ்க்கைக்கான புதிய திறவுகோல் எனின்
அதற்காக வாழ்ந்தவர்கள்
எப்போது இறந்து போவார்கள் ?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)