nalayiny Wrote:இங்கு சீதணம் வாங்கும் மனநிலை அழிந்ததா ஓங்கி வருகிறதா என்பதைதத்தான் நாம் பார்க்க வேண்டும். செலவுசெய்வது என்பது அவரவரது தேவையைப்பொறுத்தது. சீதணம் வாங்காது சிலர் திருமணம் செய்து கொண்டாலும் வளர்ந்து கொண்டும் வருகிறது அது தான் உண்மை. அதாவது புூச்சியங்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.
உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து கவனித்தும், பார்த்தும், வருகிறேன்.இது எனக்கொரு புதிய ஒரு பகுதியாகவே ஆரம்பத்தில் தென்பட்டது.
நீங்கள் எழுதும் ஒவ்வொரு வரியும், பரீட்சைக்கு குறிப்புகள் கிடைப்பது போலவே இருந்தது.
இப்படியான ஒரு சமூகத்தில் பரீட்சயப் படாமல், அது பற்றிய கேள்வி ஞானத்தை வாசிப்பை மட்டும் வைத்துக் கொண்டு சீதனக் கொடுமையை அலசுவதென்பது மிக கடினமான ஒன்று என்றே தோனன்றுகிறது.
என் தந்தை யாழைப்பாணத்தையும், என் தாய் இந்தியாவின் காரைக்குடியையும் சார்ந்தவர்களாக இருந்ததாலும் அவர்கள் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்களாக இருந்ததாலும், அவர்களுக்குள் சாதி மற்றும் இந்திய-இலங்கை என்ற பிரச்சனை தலை துாக்கியிருந்திருக்கலாம் என்றுதான் ஆரம்பத்தில் எண்ணத் தோன்றியது.
இப்போது ஏன் இந்த சீதனப் பிரச்சனையும் இருந்திருக்கக் கூடாது என எண்ணத் தோன்றுகிறது.
அதனால்தானோ என்னவோ என் நினைவு தெரிந்த நாள் வரை என் தாயை என் தந்தையின் குடும்பத்தினர் கண்டு கொள்ளவேயில்லை.
அவளை அவர்கள் வீடுகளுக்கும் வர அனுமதிக்கவில்லை. எமக்கும் மூன்றாம் தர பார்வையே கிடைத்தது.
இந்தியா சென்ற போது என் தாய் வீட்டார் அங்கு மரியாதைக்குரிய இனமாக வாழ்வதோடு என் தந்தையை மணம் செய்து கொண்டு என் தாய் அவர்களுக்கும், அவர்களது குலத்துக்கும் இழுக்கு தேடித்தந்து விட்டதாக அவர்கள் சம்பந்துமே இல்லாத என் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்கள்.
யாரோ செய்த பாவத்துக்கு நாங்கள்தான் பலியானோம்? அல்லது ஒதுக்கப் பட்டோம்?
அன்று எனக்கு கொஞ்சம் அதிகமாகவே வலித்தது.
அதனால்தான் நீ யார் ? என்று கேட்டால் முதலில் நான் ஒரு மனிதன் என்று சொல்லுமளவுக்கு என்னை மாற்றியது.
நல்ல வேளை இப் பிரச்சனையில் என் பெற்றோர் விலகி நின்று ,தம் வாழ்வை நெறிப்படுத்துவதிலேயே வாழ்வைக் கடத்திய புத்திசாலியாக மகிழ்வோடு வாழ்ந்தார்கள்.
இங்கே பிரச்சனைகள் யாருக்கு என்றால் குழந்தைகளுக்குத்தான். ஏனைய குழந்தைகள் தம் உறவினர் , தாத்தா - பாட்டி .......................இப்படி குதுாகல குடும்பமாக வாழும் போது இவர்களது குழந்தைகள், அந்த அன்பான அரவணைப்பையும் கூட்டுக் குடும்பம் போன்ற பாசப் பிடிப்பையும் பெற்றுக் கொள்ள முடியாமல் போய் தனித்து விடுகிறது.
நாங்கள் இழந்தவற்றை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
ஆனால் தற்போதைய சமூகத்தில் பெரிதான மாற்றமொன்று ஏற்படாவிடினும், ஏற்பட்டு வரும் சிறிய மாற்றங்களை உருவாக்கும் தார்மீக கடமை எழுத்துகளால் கோலமிடும் எழுத்தாளர்கள் வசம் உண்டு.
அவற்றை புலம் பெயர் நாடுகளில் உள்ள நீங்கள் செய்ய வேண்டும்.
நான் புலம் பெயர் நாடுகளில் கண்ட பல நிகழ்வுகளில் ஒரு சிலவற்றை மட்டும் தொட்டுச் செல்ல முனைகிறேன்.
1.ஒரு திருமண வைபவத்தில் மணமக்களுக்கு அறுவை அரிசி ஆசீவாதம் செய்வதற்கு முன் 50 ஆயிரம் (1000 swiss Frank தாள் நோட்டுகளை) பிராங்கை பெண்ணின் தகப்பன், மணமகனிடம் ஒரு தட்டில் அதுவும் வெத்திலைத் தட்டில் வெத்திலை பரப்பிக் கொடுப்பது போல் கொடுத்தார். ( அது வீடியோவில் வர வேண்டும் என்று அவர்கள் பட்ட பாடு கோமாளித்தனமானது.)
2. மற்றுமொரு திருமணத்தில் ஒரு புதிய காரை வாங்கி வந்து திருமண மண்டபத்துக்கு முன்னால் நிறுத்தி விட்டு கார் திறப்பை அன்பளிப்பு செய்யுமிடத்தில் வைத்துக் கொடுத்து ஓடிப்போய் காரையும் ஒரு முறை வீடியோவில் காட்டுங்கள் என்று ஒற்றைக் காலில் நின்றது, சிறு பிள்ளைத் தனமாக இருந்தது.
இப்படி எத்தனையோ???????????? இவை முற்றாக அழியும் நாள் எப்போது வரும்?
இதற்குமாறான நிகழ்ச்சிகளும் உண்டு.
என் நண்பனும் எனது குழுவில் ஒரு அங்கமுமான எனது குறும்பட கதாநாகர்களில் ஒருவருமான ஒருவர் கண்ணி வெடியால் ஒரு காலை இழந்து நின்ற ஒருவரை தனது பணத்திலே வரவழைத்து தன் மனைவியாக்கிக் கொண்டு இரு குழந்தைச் செல்வங்களாடு இனிதே வாழ்வதை காணும் போது .................. நெஞ்சம் கனக்கிறது.
வானம் மழையைக் கூட பொழிவது இப்படியானவர்களால் தானோ........................
இப்படியான இதயங்கள் எங்கிருந்தாலும் வளமோடு வாழட்டும்...................................
உங்கள்
AJeevan