Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆண் - பெண் - நட்பு - காதல்
#21
எத்தனைதான் நாகரிகம் வளர்ந்ததுவிட்டதெனினும் ஆணும் பெண்ணும் கூடி நின்று பேசினால் இன்றும் மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். ஆனாலும் கொஞ்சமாற்றம் நிகழ்ந்துள்ளது எனலாம். இப்போதெல்லாம் யாரும் ஒரு குழுவாக இருக்கும் ஆண் பெண் நண்பர்களை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. இதற்குக் காரணம் சமூகப்பார்வையில் எற்பட்ட பரிணாம வளர்ச்சி எனலாம். இப்பரிணாம வளர்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டபடங்களும் உரியபங்குவகிக்கின்;றன.

ஆனாலும் இன்றும் நட்பென்று ஓரே ஒரு ஆணும் ஒரே ஒரு பெண்ணும் பழகுவது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்டால் கூட இரண்டு பக்க பெற்றோர்களும் அந்த நட்பின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கூர்ந்து அவதானிக்கவே செய்கின்றார்கள்.

முதல் முதல்; ஓரு ஆணும் பெண்ணும் பழக வாய்ப்பு ஏற்பட்டால் அந்த உறவு உடனேயோ அல்லது காலப்போக்கிலோ காதலாகவோ அல்லது நட்பாகவோ மாறுகிறது. இவ்வாறு அது காதலாகவோ நட்பாகவோ மாற காரணமானது ஒருவகை ஈர்ப்புத்தான்.

இங்கே ஈர்ப்பு என நான் குறிப்பிட்டது நிச்சயமாக காமத்துடன் தொடர்புடையது அல்ல. காமத்தினால் வரும் எந்து உறவும் நட்பாகவோ காதலாகவோ பரிணாமிக்க முடியாது. அது விரைவில் உடைந்துபோகக்கூடியது. இச்சை தீர்;;நத பின் எதைப்பற்றியம் கவலைப்பாடது செல்லும் ஒரு சராசரி மிருகத்தின் உறவுபோன்றது.

இந்த ஈர்;ப்பை இனந்தெரியாத அன்பு என்றுகூட சொல்லலாம். சிவனடியார்கள் இத்தகைய ஈர்ப்;பையே ஆண்டவன் மேல் வைத்திருந்தனர். காந்தசக்தி ஆண்டவன் போலவும் இரும்புத்துகள்கள் அடியவர்கள் போலவும் வாழ்பவர்கள். சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்;தவர்களுக்;கு நன்கு தெரிந்திருக்கும் நாயன்மார்கள் ஆண்டவனை ஆணாக(கணவனாக) கற்பனை செய்து தம்மை பெண்ணாக(மனைவி) நினைத்து சேவைசெய்பவர்கள். ஆகவே இந்த ஈர்ப்பு எதிர்பார்ப்பில்லாத ஒரு உயர்ந்த அன்பு எனக்கொள்ளலாம். இனி ஈர்ப்பை அன்பு என்;றே குறிப்பிடுவோம்.

ஓருவர்மேல் ஓருவருக்கு உள்ள அன்பு 90 சதவீதத்திற்கு மேல் இருந்தால்; அது உடனேயே காதலாக மாறுகிறது. இந்த அன்பு இருவரிடமும் சமநிலையில் இருப்பது இதற்கு மிகஅவசியம். இவர்களின் காதலைத்தான் நாம் கண்டதும் காதல் என்கின்றோம். இலக்கியத்திலிருந்து பல உதாரணங்கள் இந்தக்காதலுக்கு எடுத்துக்காட்டலாம். சீதையும் சிறீராமனும் இவ்வகைக் காதலே கொண்டார்கள். பின்பு அவர்கள் சுயம்வரம் மூலமாக திருமணம் செய்தது தனிக்கதை.

அடுத்து ஆண்பெண் அன்பு 90 சதவீதத்திற்குக் குறைவாக இருப்பின் அது நட்பாகத்தொடர்கிறது. இடையிலேயே அது காதலாக பரிணாமிக்க வாய்ப்பும் உள்ளது. இங்கேமட்டும் காதலை வெறும்அன்பு மட்டுமல்லாது பாதுகாப்புணர்வு பொருளாதாரநிலை புரிந்துகொள்ளும்தன்மை ஜாதி வயது என மற்றக்;காரணிகளும் தீர்மானிக்கிறது. இங்கேயும் ஆண்பெண்ணிடம் உள்ள இந்த அன்பு இருபக்கமும் சம நிலையில் இருத்தல் அவசியமாகின்றது. அது சமச்சீராக இல்லாத பட்சத்தில் அது ஒரு தலைக்காதலாகவோ அல்லது வெறும் நட்பாகவோ தொடர்கிறது.

அன்பு 2 வீதத்திற்குக் குறைவாக இருப்பின் அது விரைவிலேயே காணாமல் போய்விடுகிறது. இம்மாதிரி உறவுகளைத்தான் நாம் தினமும் சந்திக்கிறோம். பஸ்ஸில் எதிர்த்த இருக்கையில் இருக்கும் பெண் இந்தவகையில்தான் வருகிறாள். வணக்கம் சொல்கிறாள். இறங்;;கும் இடம்பற்றி கேட்கிறாள். நாமும் சொல்கிறோம். அவளை கொஞ்சம் பிடித்திருந்தாலும் பெரிதாக யாரும் அலட்டிக்கொள்வது கிடையாது.

ஆணுக்கும் ஆணுக்கும் ஏற்படும் நட்பும்; உயர்ந்ததே அதே போல பெண்ணுக்கும் பெண்ணுக்கம் ஏற்படும் நட்பும் உயர்ந்ததே. எஙகே எங்கே எல்லாம் எதிர்பார்பின்;றி அன்பு செலுத்துகிறீர்களோ அந்த உறவு உயர்நத நிலையை அடைகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உறவு வெறும் நட்பாக இருப்பினும் ஒயர்ந்தது தான். இந்து நட்பை காமம் கலக்காத காதல் எனக்கூடச்சொல்லாலம். காதல் என்;;பது ஒரு கோபுரம் போல என்று எடுத்துக்ககொண்டால் உயரத்தில் சிறிதாக இருக்கின்;ற கலசம் காமம் எனக்கொள்ளலாம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)