Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குறுக்கு வழிகள்
#21
விண்டோஸ்2000 ஆரம்பிக்கும்முன்
கொடுத்த இரகசியசொல்லை தொலைத்துவிட்டார் இப்பொழுது உள்ளே போகமுடியாமல் உள்ளது
எப்படி உள்ளே செல்லலாம்

கணனி லப்ரொப் தொசிபா
Reply
#22
எச்சரிக்கை: தயவு செய்து இதனை உங்கள் தனிப்பட்ட கணணிக்கு மட்டும் பாவிக்கவும். எவ்வகையான தவறான பயன்பாட்டுக்கும் நான் பொறுப்பாளியல்ல <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நீங்கள் windows 2000 system உள்ள கணணி
FAT file system எனில்
1. windows 95 அல்லது windows 98 startup disk ஐப்போட்டு உங்கள் கணணியை start செய்யவும்.
2. இனி C:\ driveற்கு மாற்றிக் கொள்ளுங்கள்
3. இனி c:\winnt\system32\config directory மாற்றிக் கொள்ளுங்கள்
(cd winnt enter அடிக்கவும்
cd system32 அடிக்கவும்
cd config அடிக்கவும்)
இங்கு SAM என்ற பெயருள்ள File இனை அழித்துவிடுங்கள். (தேவைப்பட்டால் இதன் பிரதி ஒன்று எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்). இந்த File இனை அழித்த பின்னர் கணணியை restart செய்தால் password இல்லாது கணணியில் போகமுடியும்.

NTFS file system எனில்
இந்தக் கணணியில் உள்ள hardisk இனை இன்னொரு கணணியில் slave ஆக இணைத்து மேலே குறிப்பிட்ட file இனை அழியுங்கள்.
[i][b]
!
Reply
#23
நன்றி சாமி அவர்களே

நான் தவறாக கூறிவிட்டேன்
பியோஸ் பகுதிக்கு செல்வதற்கான
இரகசியசொல் தெரியாமல் உள்ளது எப்படி பியோஸ் பகுதிக்கு சென்று அங்கு சில
மாற்றங்களை செய்யமுடியும்
Reply
#24
<b>குறுக்குவழிகள்-10</b>

ganesh அவர்களுக்கு!

மேலே உள்ள உங்கள் கேள்விக்கு உரிய விடையை www.annoyances.org ன் கருத்துக்களத்திலிருந்து அப்படியே கேள்வி பதிலாகவே பிரதி எடுத்து தந்துள்ளேன்.

Question: - My BIOS is password protected from when a friend of a friend upgraded my PC from 98se to ME. I have been told to remove the battery from the BIOS or CMOS to fix, any suggestions

Answer: - You were told right. Remove the battery from the motherboard for about 15 min. then put it back in. There may also be a jumper on the motherboard you can set that will do it but the time you spend finding that out would be better spent just removing the battery. If you or your friend knows the BIOS password, there should be a setting in BIOS to clear it. The battery will be a big watch-style battery. About the size of a nickel or quarter. Be very careful not to break anything taking it out, sometimes they are tricky.
Reply
#25
[b]குறுக்குவழிகள்-11

நாளாந்தம் இ-மெயில் அனுப்புகின்றவரா நீங்கள்?
அழைத்தவுடன் உங்கள் இ-மெயிலரை கண்முன் காண ஆசையா? சரி.

கிளிக் ஸ்ராட் -> றன் -> mailto: என ரைப்பண்ணி O.K பண்ணுங்கள். ஜாஹுவா? இல்லை ஹாற் மெயிலா? எதுவானாலும் சரி உடன் திரையில் வந்து நிற்கும்.
அடுத்த நாள் றன் பெட்டியில் mailto: தானாகவே காட்சியளிப்பதை காண்பீர்கள். காணாவிடின் வல பக்க முக்கோணத்தை கிளிக் செய்து தேர்வு செய்து O.K பண்ணவும்.
நேரடியாக மெயிலரை அழைக்கும் முறை இது.
Reply
#26
நன்றி தேவகுரு அவர்கட்கு
நான் முயற்சிசெய்து பார்க்கிறேன்

கணேஸ்
Reply
#27
<b>குறுக்குவழிகள்-12</b>

வின்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள "மை பிக்சர்ஸ்" என்னும் கோப்பு தனித்துவமானதும், பிரயோசனம் பற்றி அதிகம் அறியப்படாததுமாகும். இது டிஜிட்டல் கமெறா பாவனையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதாகும். இதில் படங்கள் ஸ்டாம் சைஸில் சேமிக்கப்படுகிறது, ஆனால் படங்களை பலவித அளவுகளில் பார்வையிடலாம், முழுத்திரையளவிலும் பெரிதாக்கி பார்க்கலாம். Actual size, Best fit size, என்னும் அளவுகளும் உண்டு. வேண்டியளவில் zoom பண்ணியும் பார்வையிடலாம்.

இந்த "MY Pictures" கோப்பை போல் இன்னொரு கோப்பை பிரதிபண்ணி பக்கத்தில் போடலாம். (Right click, copy & paste) அப்போது "copy of My Pictures" என வரும். மற்றவேளைகளில் உருவாக்குவதுபோல் புதிய கோப்பை இதே வசதிகளுடன் உருவாக்கமுடியாது. இப்படி பிரதிபண்ணி ஒவ்வொன்றிலும் வகை வகையாக படங்களை சேமிக்கலாம்
Reply
#28
ஏன் copy பண்ண வேண்டும் புதிய கோப்பு ஒன்றை உருவாக்கி அதிலும் படத்தை போடலாம் தானே
Reply
#29
எனக்கு ஒரு சந்தேகம் தேவகுரு அண்ணா. இரண்டு வெப்பதளங்களை பார்கிறோம். ஒன்றை மினிமைஸ் செய்து உள்ளோம். ஆல்ட் டப் பயன்படுத்தி ஒன்றில் இருந்து ஒன்றுக்கு தாவிச்செல்லமுடிகிறது. சிலவேளை அது முழுவதுமாக தெரிவதில்லை. மினிமைஸ் ஆகியோ சிறிய அளவிலோ தெரிகிறது. இதை மினிமைஸ், மக்சிமைஸ் பண்ண shortcut keys என்ன?
Reply
#30
<b>குறுக்குவழிகள்- 13</b>

இன்ரனெட் எக்ஸ்புளோரரில் நாம் பாவிக்கக்கூடிய short cuts

அழுத்தவும்.................. விளைவு

ctrl+d .................... favorites லிஸ்ற்ல் பதியப்படும்
ctrl+b,,,,,,,,,.............. organise டயலக் பொக்ஸ் திறக்கப்படும்
ctrl+f .................. சொற்கள் தேடி கண்டுபிடிக்கப்படும்
winkey+m ............... திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மினிமைஸ் ஆகும்
winkey+shift+m ........ திறந்திருக்கும் எல்லா ஜன்னல்களும் மக்ஸிமைஸ் ஆகும்
alt+tab ................... திறந்திருக்கும் ஜன்னல்களில் மாறிக்கொள்ள

எனக்கும் சிலவேளைகளில் ஜன்னல்கள் பாதியளவில் திறப்பதுண்டு. இடைக்கிடையென்பதால் அலட்டிக்கொள்வதில்லை. ஜன்னல்களை பெருப்பிப்பதற்கு உள்ள ஒரே வழி (short cut) வலபக்க மேல் மூலையில் உள்ள தர அடையாளத்தை கிளிக் செய்வதாகும். வின்கீ+சிவ்ற்+எம் களை ஒருசேர அழுத்தியும் பெருப்பிக்கலாம்.இது சுருக்கு வழியல்ல.

நித்தம் ஒரு ஜன்னல் பாதியளவே திறக்கிறதென்றால் டெஸ்க்ரொப்பில் ஈ என்ற் ஐகொன் ஐ டபுள் கிளிக் செய்து, புறொப்பட்டீஸை கிளிக் செய்து, அங்கே open in large window ( This depend on the o/s you are using) என்று அல்லது அதன் அர்த்தத்தில் உள்ள ஏதாவது ஒன்றை கிளிக் செய்ய்து, ஒகே பண்ணவும்.

இதற்கும் முடியாவிடின் திறந்திருக்கும் பாதி ஜன்னலின் மேல் இடது பின் கீழ் வலது மூலைகளை ஒவ்வொன்றாக பிடித்து இழுத்து ஜன்னலை பெருப்பிக்கவும். பின் ஜன்னலை வழமைபோல் மூடி அடுத்த முறை திறக்கும்போது சரியாகிவிடும்.

Also, Please see Page No, 3
Reply
#31
தொடர்ந்து செல்லுங்கள் தேவகுரு மிக்க பயனுள்ளதாக உள்ளது.
Reply
#32
<b>குறுக்குவழிகள்-14</b>

டெஸ்க்ரொப் ஐ சுத்தம் செய்யுங்கள்

உங்கள் டெஸ்க்ரொப் அதிக ஐகொன்களாலும் மற்றும் ஈ-புத்தகங்களாலும் நிறைந்து காணப்பட்டு, அவலட்சணமாக காணப்படுகிறதென்றால், அதை இப்படி சுத்தம் செய்யலாம், டெஸ்க்ரொப்பில் வலது கிளிக் செய்து -> நியு ->வ்போல்டர், அதற்கு வேண்டிய பெயர் கொடுக்கவும். இப்போது இந்த புதிய வ்போல்டர் ஐகொன்கள் மத்தியில் காணப்படும், அடுத்து, குறைந்த பாவனையில் உள்ள ஐகொன்கள் முழுவதையும் இழுத்து வந்து இந்த வ்போல்டரின் மேல் போடுங்கள். தற்போது டெஸ்க்ரொபில் ஐகொன்கள் குறைந்து சுத்தமாக காட்சியளிக்கிறதல்லவா?

தேவை ஏற்பட்டால், இந்த வ்போல்டரை டபுள் கிளிக் செய்தால் அது திறந்து நீங்கள் இழுத்து போட்ட ஐகொன்களை காட்டும்.பின் வழமைபோல் அந்த ஐகொனை கிளிக் செய்து அதனுடன் தொடர்புடைய புறோகிறாமை இயக்கலாம்.

நீங்கள் அதிகமாக பாவிக்கும் ஒரு புறோகிறாம் உள்ளதெனில் அதன் ஐகொனை டெஸ்க்ரொப்பிலிருந்தோ அல்லது ஸ்ராட் மெனுவின் பட்டியலில் இருந்தோ இழுத்து வந்து ஸ்ராட் பட்டன் அருகிலிருக்கும் க்விக் லோஞ் பாரில் போட்டும் பாவிக்கலாம். இது ஸ்ரேரஸ் பாரில் இருப்பதால் ஜன்னல்கள் திறந்திருக்கும் போதும் தெளிவாக தெரியும்.
Reply
#33
குறுக்குவழிகள் எல்லாம் வாசிக்க நன்றாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்......
ஆனால் எனது கணனி டொச். நீங்கள் கூறுவது ஆங்கிலத்தில்.
இங்கு டொச் பாதி, இலங்கையில் ஆங்கிலம் பாதி என கலந்து செய்த கலவையாகி விட்டதே ?
Reply
#34
எனது pc உம் டொச் தான்!!!!!!
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Å¡ú쨸 ±ýÀÐ ´Õ §À¡Ã¡ð¼õ ¾¡ý
§À¡Ã¡ð¼ò¾¢ø ¾¡ý ±ò¾¨É§Â¡ º¸¡ô¾í¸û ¯ÕÅ¡¸¢ýÈÉ!!!!!
§À¡Ã¡Îõ §À¡Ð ¾¡ý º¢Ä ºÁÂí¸Ç¢ø ¾Å¨Ç À¡õÀ¢ý À¢Ê¢ø þÕóÐ ¾ôÀ¢ì¸¢ÈÐ
Reply
#35
<b>குறுக்குவழிகள்-15</b>

யுனிகோட் வெப்தளங்களின் பக்கங்களை எம்.எஸ். வேட்டில் கொப்பிபண்ணமுடியாது தவிக்கிறீர்களா? இதோ வழி!

யுனிகோட் பந்தியை கொப்பி பண்ணி, Tscii Format க்கு மாற்றி பின் வேட்டில் கொப்பி பண்ணும்முறைதான் இது.

விரிவாக உதாரணத்துடன் கூறின்,

1) எம்.எஸ். வேட்டை இயக்குங்கள்; View-->Tool Bar-->Clipboard and minimize; இப்போது நீங்கள் 12 முறை அடுத்தடுத்து கொப்பிபண்ணலாம், கிளிப்போட்டில் எல்லாம் பதிவாகும்

2) போங்கள்--> யாழ்.கொம்-->கருத்துக்களம்-->கணனி (கொம்பியூட்டர்)-->குறுக்குவழிகள், ஒவ்வொன்றாக 4 குறுக்குவழிகளை தேர்வு செய்து கொப்பி பண்ணுங்கள். (ஒன்றை மாத்திரம் கொப்பி பண்ணுவதானால் அடுத்தபந்தியை தவிர்த்து 4ம் பந்திக்கு போகவும்)

3)எம்.எஸ்.வேட்டுக்கு மீண்டு, கிளிப்போட்டில் உள்ள Paste All என்ற பட்டனை கிளிக் பண்ணவும்; இப்போது 4 பந்தியும் பிரதி பண்ணப்பட்டுவிடும்; அதை எடிட் செய்யவும்; கிளிப்போட்டில் உள்ள Delete பட்டனை கிளிக் பண்ணி கிளிப்போட்டை துப்பரவுசெய்துவிட்டு, பிரதி பண்ணப்பட்ட 4 பந்திகளையும் ஒன்றாக தேர்வு செய்து மீண்டும் கொப்பிபண்ணவும்.

4) போங்கள்--> http://www.suratha.com/uni2tsc.htm தளபக்கத்திற்கு, அங்கே 2 பெட்டிகள் காணப்படும். அதன் மேல் பெட்டியில் Paste பண்ணி அதனுள் ஒரு முறை கிளிக் பண்ணவும். நீங்கள் பேஸ்ற் பண்ணியவை கீழே Tscii க்கு உருவிற்கு மாற்றப்பட்டு காணப்படும்; இரண்டுபெட்டிகளின் அடியில் காணப்படும் கொப்பி பட்டனை கிளிக் பண்ணவும்.

5) வேட்டுக்கு மீண்டு, ஒரு புதிய பக்கத்தை திறந்து அதில் புதிய Tscii Format ஐ பேஸ்ற் பண்ணவும்; இப்போது எழுத்துக்களை வாசிக்கமுடியாமலிருக்கும்; Edit-->Select All; மேலே formatting Tool Bar ல் உள்ள Font Box ல் உள்ள முக்கோணத்தை கிளிக் பண்ணி TscArialஅல்லது Tscu_Inaimathi ஐ கிளிக் பண்ணவும்; வேண்டிய பெயர் கொடுத்து Save பண்ணவும். இந்த இரண்டுமே தங்களின் Font file லில் காணப்படாவிடின் Download பண்ணி பொருத்திவிடவேண்டியதுதான்

6) இது தவிர வேறு முறை ஏதாவது இருந்தால் தயவுசெய்து யாராவது Post செய்யவும்
Reply
#36
<b>குறுக்குவழிகள்-16</b>

<b>Address Bar</b>

நீங்கள் அடிக்கடி வெப் உலா செல்பவரா?

மூன்று வழிகளில் ஏதாவதொரு வெப்தளத்திற்கு செல்லலாம்.

1) Favorites List ல் உள்ள Link ஐ கிளிக் பண்ணலாம்.
2) அட்றஸ் பாரின் வலது பக்க முக்கோணத்தை கிளிக் பண்ணவரும் Dropdown Menu வில் ஒன்றை கிளிக் பண்ணலாம்.
3) அட்றஸ் பார் இல் விலாசத்தை தட்டலாம்

விலாசத்தை தட்டும்போது பொது சொற்களாகிய http://, www, com என்பவற்றை நமக்கு சிரமமின்றி, கம்பியூட்டரையே போடவைக்கலாம். உதாரணம் :- அட்றஸ் பாரில் yarl என தட்டிவிட்டு Ctrl+Enter ஐ அழுத்தினால், http://www.yarl.com என கம்பியூட்டர் தானாகவே போட்டுக்கொள்ளும்.
Reply
#37
<b>குறுக்குவழிகள்-17</b>

Favorites Menu

இந்த மெனுவை கிளிக்பண்ணினால் அது இரண்டு கட்டங்களாக விரிவடையும். முதற்கட்டம் விரிவடைந்தவுடன் அதன் அடியிற் காணப்படும் இரட்டை அம்புக்குறியை கிளிக்பண்ணியவுடன் அடுத்த கட்டம் விரிவடையும். கிளிக்பண்ணாவிடின் அது தானாகவே சில விநாடிகள் தாமதித்து விரிவடையும். வேகமாக வேலை செய்பவர்களுக்கு இது எரிச்சலை கொடுக்கலாம்

இதை தவிர்த்து இரண்டு கட்டங்களும் ஒரேயடியாக முழுமையாக திறக்கவேண்டுமெனில் இப்படி செய்யவும்.

உலாவியை இயக்கி, Tools, Internet Options, Advanced, இவைகளை கிளிக்பண்ணி, Enable Personalized Favorites Menu என்பதன் முன் உள்ள Tick ஐ எடுத்துவிடவேண்டும், பின் உலாவியை மூடி மீண்டும் திறந்து Favorites Menu வை கிளிக்பண்ண; அது ஒரே முறையில் திறக்கும்,
Reply
#38
<b>குறுக்குவழிகள்-18</b>

Opening Many Files at Once

வங்கி அல்லது காரியாலயங்களில் ஒரே நேரத்தில் பல வ்பைல்களை திறந்து வைத்துக்கொண்டு அவற்றில் மாறிமாறி கருமமாற்ற நேரிடலாம். அப்போது பல வ்பைல்களை ஒவ்வொன்றாக திறக்காமல் ஒரே அடியாக எத்தனை வ்பைல்களையும் திறக்க ஒரு வழியுள்ளது. Word, Excel போன்ற ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை இயக்கி, அதில் Open Dialog Box ஐ திறந்து அதில் காணப்படும் பல வ்பைல்களில் தேவையான ஒன்றை முதலில் Click பண்ணவும், பின் மற்றவைகளை Ctrl ஐ அழுத்திப்பிடித்துக்கொண்டு Select பண்ணவும். அந்த வ்பைல்கள் ஒன்றின் பின் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பின்பு Open பட்டனை கிளிக் பண்ணவும். செலெக் செய்யப்பட்ட வ்பைல்கள் ஒன்றன் பின் ஒன்றாக தானாகவே திற்ந்துகொள்ளும்.
Reply
#39
<b>குறுக்குவழிகள்-19</b>

<b>Autoplay</b>

தற்கால CD க்களை CD Rom டிறைவினுள் செலுத்தியவுடன் அது உடனேயே இயங்க ஆரம்பிக்கும். Autoplay எனும் அம்சம் இருப்பதால்தான் இது நடைபெறுகிறது. சிலவேளைகளில் இதை தவிர்க்க வேண்டிய தேவையும் ஏற்படுவது உண்டு. CD ஐ Browse பண்ணி அதன் உள்ளே என்ன இருக்கிறதென்று பார்க்க விரும்புபவர்களுக்கு அப்போதைக்கு இது தேவையில்லாத ஒன்று, இதை நீங்கள் தற்காலிகமாக தடுக்கலாம்.

CD ஐ டிறைவினுள் செலுத்தும்போது Shift கீயை சில விநாடிகள் அழுத்தி பிடியுஙகள்; அது இயங்குவது தடுக்கப்படும்.

Also, please see page no.4
Reply
#40
பயனுள்ள தகவல்களுக்கு நன்றி தேவகுரு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)