Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்திய ஊடகங்கள்...!
#21
தினமும் 10 அல்லது 15 சீரியல், சினிமா பாட்டு, கொமடி, நம் இன விடுலையை நசுககும் செய்திகள்.
உலக நடப்பு என்னெண்டு கூட தெரியத இந்த தொலைக்காட்சிகள் போதைப்பொருள் பேன்றவை! அமரிக்காவின் எம்ரீவி எப்படி இந்தியாவில் ஊடுருவியதோ, அது போல் தான் இந்த தென்னிந்திய தொலைக்காட்சிகளும். அறிவுபூர்வமற்ற நிகழ்சிகள். போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை அப்படியே கொப்பி! அதற்கு பதில் நான் பீபீசி, ஐரீவி பார்ப்பேன். அதில் குறைந்த பட்சம் தனித்துவம், அறிவு, ஆhட்சி இருக்கும். சன் ரீவியில் ஒலிபரப்பாமு; நிகழ்சிகள் எதன் கொப்பி என்பதை வரிசைப்படுத்த முடியும். தரம் என்றால் முதலில் தரமான நிகழ்ச்சிகளை பாருங்கள். நமது தொலைக்காட்சிகள் சரியோ தவறோ இந்த வகையல் சிந்திக்காமல் இல்லை. ஆனால் ஆக்கிரமிப்பு தொலைக்கட்சிகள் இருக்கும் வரை நாம் முன்னால் வர முடியாது. இது நமது தேசியப் பிரச்சனை நமக்கு தந்த பாடம்!
Reply
#22
முகமட் நீங்கள் கண்டீங்களோ இல்லையோ...சுமார் 6 வயதுத் தமிழ் பொடி கேள்பிரண்ட் வச்சிருக்குது.....நாங்களே கேட்டம் ஏன்ரா எந்த நேரமும் அந்தப் பெட்டையோட திரியிறா எண்டு அதுக்கு அவன் சொல்லுறான் அது என்ர கேள்விரன்ட்... வேணும் எண்டா உங்களுக்கு இன்றடியூஸ் பண்ணி வைக்கிறன் எண்டு.....! சரி பொடி சின்னதுதானே உண்மையாகவே விளையாட்டுப் புத்தியில விளையாடுறத்திற்கு பிரண்ட் புடிச்சிருக்கானாக்கும் எண்டு நினைக்க....நாங்கள் கேள்வி கேட்டதும் அவனுக்கு வருகுதே ஒரு சிரிப்பு,,,,,ஆகா என்ன முன்னேற்றம்...வெள்ளைச் சின்னதுகள் கூட அப்பிடி இல்லை...அதுகள் ஒரு பத்து பன்னிரண்டு வயசுக்கு மேலதான்....உதெல்லாம்.....!

இதுக்க கமலின்ர இங்கிலீஸ் கிஸ் கெடுத்திடப் போகுதாக்கும்.....! :wink:

இப்ப கேள்வி என்னென்றால் இவ்வளவு காலமும் உங்கட தொலைக்காட்சிகள் கலாசாரம் வளர்த்தனவா அல்லது பாக்க ஒண்டுமில்லை எண்டு சனம் பாத்ததுவா.....???!!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
கேர்ள் பிரண்ட் தானே! 6 வயது பையனுக்கு அது விழங்குதோ தெரியது. இண்டைக்கு பத்திரிகையிலை ஒரு செய்தி படித்தன். தாய் தந்தையர் யாராவது ஒருவர் இந்த விடயத்தில் தடுமாறினால் பிள்ளைகள் தடுமாறும். சரி நீங்கள் சொல்வது போல் நானும் உதாரணம் வெள்ளை இனத்தில் சொல்லலாம். எனக்கு தெரிந்த குடும்பம் தாய் தமிழ் (மலேசியா) தந்தை வெள்ளை. பிள்ளகள் இரண்டும் படித்து நல்ல உத்தியோகம். அவைக்கு தாய் தகப்பன் இருவரும் பெண் பார்கிறார்கள். அதுகள் இருந்த இடம் தமிழ் மக்களே இல்லாத இடம். இதற்கு என்ன சொல்கிறீர்கள். அவர்கள் இருவரும் தமது பிள்ளைகளை வழர்க்வில்லையா? அந்த நாளையிலை அந்த பெடியளுக்கு தமிழ் படிக்க வசதியில்லை. இப்ப மலேசியா சென்று தமது பேரனிடம் தமிழ் கற்று தமிழ் கூட பேசுகிறார்கள். வெறுமனே சமுதாயத்தை மட்டும் குiறு கூறுவதை விடுத்து பெற்றோரும் கவனம் எடுக்க வேண்டும். கமலின்றை இங்கிலீஸ் கிஸ்ஸைவிட அவை கதைக்கிற கதைக்கு பிள்ளை விழக்கம் கேட்டால் ??? எல்லாம் வளர்ப்பிலை இருக்கு! இப்ப உந்தமாதிரி குளப்படி விடுற ஆக்கள் கிட்டடியிலை வந்தவை. ஒரு பெண் வந்து 3 வருடம் கூட இல்லை. சித்தி வீட்டில் இருந்தா. தாய் ஊரிலை. அவா கடந்த மாதம் 18 வயது வந்ததும் தான் தனிப் போன் எண்டா, சித்தி தண்டிக்க தனக்கு 18 வயது நீ ஆர் கேட்க எண்டு போட்டு பெலிசுக்கும் போய் பிரண்டுக்கும் அடிச்சுப்போட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டா! இதுக்கென்ன சொல்லுறீங்கள்.
Reply
#24
முன்னையது...பொடி சின்னன்..... வீட்டில சரியான கண்டிப்பு....அது அவன்ர உண்மையான கேள்பிரண்டில்ல ஆனா அவனுக்கு அந்தச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் இருக்கு எண்டது விளங்குது என்பதைத்தான் சொன்னம்....! அப்படிப்பட்ட சின்னதுகளுக்கு கமல் கிஸ் எல்லாம் யு யு பி மாதிரி....!
இன்றைய சின்னதுகள் உண்மையில் நல்லதுகள்... நாங்கள் சின்னதா இருக்கேக்க தெரிஞ்சாலும் வெளியில சொல்லமாட்டம் ஆனா அவங்கள் வெளியில வெளிப்படையாச் சொல்லுறாங்கள்...அது உண்மையைக் கண்டுபிடிக்க லேசு.....! இதுக்கு மேல தாய் தகப்பன் முட்டாள் என்டா நாங்கள் என்ன செய்வம்.....!

அது இருக்கட்டும்...இப்ப உங்கட ரீவியை உண்மையா சனம் விரும்பித்தான் கலாசாரக் கண்ணோட்டத்திலதான் பாத்ததுகள் என்டா பிறகேன் இந்திய ரீவிக்கு போகுதுகள்....! எங்க பிழை ரீவியிலையா உங்கட சமுதாயத்திலையா...அவன் வியாபாரி எங்க சந்தை இருக்கோ அங்க வருவான்...வேண்டும் நாங்கள் தான் தரமாப் பாத்து எடுக்க வேணும்... போட்டிக்கு விக்கிற நாங்களும் தரமா சனரஞ்சகமாக் கொடுத்தா சனம் வேண்டாம் எண்டா சொல்லும்.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
நாமை நம்மை திருத்திக்கொண்டால் சமூகம்
தானாக திருந்திவிடும்
Reply
#26
முகமது அண்ணை
புலம்பெயர் தொலைக்காட்சிகளை விழுங்கும் விதத்தில் இத்தொலைக்காட்சிகள் செயற்படுகின்றன என்றால்....அது எந்த வகையில் மக்களை பாதிக்கின்றன? அதை மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.....

இத்தொலைக் காட்சிகள் ஆங்கிலத்தமிழ் கலப்பு நிகழ்ச்சிகளைப் போடுகின்றன இதனால் பிள்ளைகள் துாய தமிழை மறக்கின்றனர் என்று கூறும் நீங்களே அத்தொடர்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்காது நட்டாற்றில் விட்டன என்றும் கூக்குரலிடுகிறீர்கள்....மொத்தத்தில் அவர்கள் போடும் அதே ஆங்கிலத் தமிழ் கலப்பு நிகழ்ச்சிகளைத்தான் நீங்களும் போட்டிருக்கிறீர்கள்...போடுகிறீர்கள்...என்பது தெளிவாகிறது...அப்பொழுது மட்டும் தமிழ்காக்கும் உங்கள் நல்லெண்ணம் எங்கே போனது?

எம்மவருக்கு நீங்களே தென்னிந்திய தயாரிப்புக்களைக் காட்டி அடிமையாக்கிவிட்டு...இப்பொழுது பார்க்காதே என்பது கேலிக்குரியதாக உள்ளது....

போட்டி வானொலியையோ அல்லது தொலைக்காட்சிகளையோ விமர்சித்தல் இயலாமையின் வெளிப்பாடுதான்....மக்களைத் தெளிவு படுத்தல் என்பதே எமது வெற்றிக்கு வழிவகுக்கும்....
எதிர்ப்பிரச்சாரங்களை விடுத்து....மக்களைத் தட்டியெழுப்புங்கள்.. விழிப்புணர்வையூட்டி அவர்களை சிந்தித்து முடிவெடுக்க வையுங்கள்...
Reply
#27
இந்தியசினிமா இல்லாமல் நமதுமக்கள் இல்லை என்ற நிலை
முன்பு இருந்தது தற்போது சின்னத்திரை நாடகங்கள் இல்லாமல்
நமது மக்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது எமது நாட்டில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் கவலைப்படாத எமது
மக்கள் சின்னத்திரையைப் பார்த்து
கண்ணீர்விடுகிறார்கள் எமது நாட்டில் எத்தனையோ உயிர்கள்
உண்மையாக பலியாவதை கண்டும்கவலைப்படாதவர்கள் நாடகங்களில் போலியாக இறப்பவர்களுக்காக
கண்ணீர்விடுகிறார்கள்
Reply
#28
வடிவேலு போன்ற தரங்கெட்ட நகைச்சுவையாளரைப் பார்க்க
எமது மக்கள் என்ன பாவம்
செய்தார்களோ தெரியாது
Reply
#29
mohamed Wrote:கேர்ள் பிரண்ட் தானே! 6 வயது பையனுக்கு அது விழங்குதோ தெரியது. இண்டைக்கு பத்திரிகையிலை ஒரு செய்தி படித்தன். தாய் தந்தையர் யாராவது ஒருவர் இந்த விடயத்தில் தடுமாறினால் பிள்ளைகள் தடுமாறும். சரி நீங்கள் சொல்வது போல் நானும் உதாரணம் வெள்ளை இனத்தில் சொல்லலாம். எனக்கு தெரிந்த குடும்பம் தாய் தமிழ் (மலேசியா) தந்தை வெள்ளை. பிள்ளகள் இரண்டும் படித்து நல்ல உத்தியோகம். அவைக்கு தாய் தகப்பன் இருவரும் பெண் பார்கிறார்கள். அதுகள் இருந்த இடம் தமிழ் மக்களே இல்லாத இடம். இதற்கு என்ன சொல்கிறீர்கள். அவர்கள் இருவரும் தமது பிள்ளைகளை வழர்க்வில்லையா? அந்த நாளையிலை அந்த பெடியளுக்கு தமிழ் படிக்க வசதியில்லை. இப்ப மலேசியா சென்று தமது பேரனிடம் தமிழ் கற்று தமிழ் கூட பேசுகிறார்கள். வெறுமனே சமுதாயத்தை மட்டும் குiறு கூறுவதை விடுத்து பெற்றோரும் கவனம் எடுக்க வேண்டும். கமலின்றை இங்கிலீஸ் கிஸ்ஸைவிட அவை கதைக்கிற கதைக்கு பிள்ளை விழக்கம் கேட்டால் ??? எல்லாம் வளர்ப்பிலை இருக்கு! இப்ப உந்தமாதிரி குளப்படி விடுற ஆக்கள் கிட்டடியிலை வந்தவை. ஒரு பெண் வந்து 3 வருடம் கூட இல்லை. சித்தி வீட்டில் இருந்தா. தாய் ஊரிலை. அவா கடந்த மாதம் 18 வயது வந்ததும் தான் தனிப் போன் எண்டா, சித்தி தண்டிக்க தனக்கு 18 வயது நீ ஆர் கேட்க எண்டு போட்டு பெலிசுக்கும் போய் பிரண்டுக்கும் அடிச்சுப்போட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டா! இதுக்கென்ன சொல்லுறீங்கள்.


நண்பர் முகமட் என்ன சொல்ல வருகின்றார் என்றே தெளிவில்லாமல் இருக்கின்றார்
Reply
#30
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
Reply
#31
நல்ல கருத்துக்களை ஏற்கமுற்பட்ட கணேஸ் அவர்கட்கு நன்றி
Reply
#32
இஞ்ச பாருங்கோ...உங்களுக்கு உச்சந்தலையில் இடிவிழேக்கதான் கலாசாரம் எண்டு எல்லாம் தெரியும் அது வரைக்கும் எல்லாம் ஜெயம்....ஏன் இந்தியத் திரைப்படங்கள் எல்லாம் எல்லா வகையிலும் தரக்குறைவானவை என்றில்லை.....அதேவேளை உங்கள் படைப்புக்களும் அவர்களின் தழுவல் இல்லாத படைப்புக்கள் என்றில்லை.....ஈழத்தமிழர்களும் இந்தியவாரிசுகள்தான் என்பதையும் மறந்திடாதேங்கோ.....!

எங்களுக்கு தரமான படைப்பு எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளுவம் திணிக்க ஏலாது....! அதேவேளை அரசியல் சண்டை பிடிக்கிற உங்கட ஊடகங்களைக் காட்டிலும் ரசிகர்களைக் கவர சண்டை பிடிக்கிற அவர்களின் ஊடகங்கள் எவ்வளவோ மேல்.....! அந்த வகையில் அரசியல் கடந்து படைப்பால் ரசிகர்களைக் கவர வரும் எந்த தொலைக்காட்சி என்றாலும் வரவேற்போம்...இப்போதைக்கு சனத்துக்குத் தேவை பொழுதுபோக்க தொலைக்காட்சி நிகழ்சியே தவிர ஆருக்கு லாபம் நட்டம் எண்டதில்லை.....முந்தி தாயகத்திலும் கொழும்பிலும் தமிழற்ற ஊடகமே கலாசாரம் தமிழ் வளர்த்தது இல்லையே...என்றாலும் எமக்கென்று வலுவான ஊடகங்களை உலகில் உருவாக்க வேண்டும் எறு நினைத்தால் அதுக்க ஆயிரமாப் பிரிஞ்சு சண்டை போடுறியள்...உங்களுக்கு உதவி செய்து உபத்திரப்படுறதிலும் இந்திய தொலைக்காட்சிகளோடு நிம்மதியா இருக்கலாமெண்டு சனம் நினைக்குது போல.....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
யாழ்/yarl Wrote:எமது ஊடகங்கள் விழிப்பு நிலையில் இருக்க இது போன்ற வரவுகள் அவசியமானவை.

அச்சா வார்த்தை யாழ். சிறுத்த வார்த்தை பெரிய பொருள்.
Reply
#34
இந்திய தமிழ்படங்கள் தரம் குறைந்தவையல்ல ஆனாலும்
அங்கு குப்பைகளும் உண்டு இங்கிருந்து தரமான படம் முதல் சிறந்த உலகம்போற்றக்கூடிய நடிகர்களும்
உருவாகியதும் உண்டு ஆனால் ஆங்கிலப்படத்தின் கதையயை திருடி படமாக்கிய இயக்குனர்களும் உண்டு மேல்நாட்டு இசையை இசைஞானியும் காப்பியடித்ததும் உண்டு

நாணல் மன்மதலீலை இரட்டைவால்குருவி ஒளவைசண்முகி இவற்றுள் சில
உதாரணம்

பரிசுபெற்ற பல இசையமைப்பாளர்கள் மேல்நாட்டு இசையை திருடீயுள்ளார்கள்
Reply
#35
ரொம்ப முக்கியம் . .
முகமட் அண்ணன் சொல்ல வந்தது என்னவோ? . .
நீங்கள் என்னவோ கதைச்சுக் கொண்டு இருக்கிறீங்கள்.

முகமட் அண்ணன் . .நான் உங்கட முழுக் கருத்துக்கும் ஒத்துப் போகிறேன்.

நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் . .விடிஞ்கா பொழுதுபடும் மட்டும் . . ஓரே நாடகங்கள் . .

கணேஸ் சொன்னதுபோல் . .
நாடகத்தைப் பார்த்து கண்ணீர் விடும் நிலைக்கு புலம்பெயர் தமிழர் வந்திட்டினம் . . எம்மவரை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. . .

நாங்கள் சின்ன ஆக்கள் . . . இஞ்ச வந்த பிறகுதான் . .ஏன் போராட்டம் நடக்குது எண்டே அறிஞ்சு கொண்டம் . . . ஆனால் . .நாட்டிலை இருந்து கஸ்டங்களை அனுபவித்து வந்தவர்களுக்கு விளக்கம் கொடுத்து எனக்கு வெறுத்துப் போச்சு . ..

இதுக்குள்ள ஒண்டு என்ன பேர் . . குருவிகள் எண்டு நினைக்கிறன் . . உது உந்த இந்திய தொலைக்காட்சிகளை தவிர வேற ஒண்டையும் பார்க்கிறதில்லை போல . . .

அண்ணா . . உந்த காட் எல்லாத்தையும் கழட்டி வைச்சிட்டு கொஞ்ச நாளைக்கு உங்கட நாட்டில (இலவசமாக) ஒளிபரப்பாகும் . . தொலைக்காட்சிகளை பாருங்கோ . .

இந்திய தொலைக்காட்சிகளில் வருவது 100 வீதம் குப்பை . . என்பது என் கருத்து . . .

அறிவு பூர்வமான ஒரு நிகழ்ச்சியும் நான் இது வரைக்கும் பார்கவில்லை . .

காவிரியில தண்ணி வரலை எண்டா நான் என்ன செய்ய முடியும் ??

எங்கட நாட்டுப் பிரச்சனையை திட்டமிட்டு மறைத்து வரும் . . .இந்தியா குறிப்பாக தமிழ்நாடு . .எப்படிப் போன எனக்கு என்ன ??? . . . இந்தியாவில எங்கயோ ஒரு மூலையில இருக்கும் பெட்டை நல்லா பாடுதெண்டா . . அது எனக்கு பெரிய விசயமில்லை . . புலம்பெயர் மண்ணிலை இருக்கும் யாராவது பிழையாக பாடினாலும் . . எங்கடது ஒண்டு பாடுது என்று சந்தோசப்படுவேன்.

ஆ . .ஊ . .எண்டு இந்தியாக் காரனுக்கு வால்பிடிக்கிற புலம் பெயர் ஈழத்தமிழர்களே . . உங்களுக்கு . . இந்திய தொலைக்காட்சிகளில மேடை கிடைக்குமெண்டா நினைக்கிறீங்ள் ???

கடைசியாக . .போக முதல் ஒண்டு . .
தொலைக்காட்சி . . வெறுமனே பொழுதுபோக்கு சாதனம் எண்டு யார் சொன்னது . . ???

குருவிகாளுக்கு வேணுமென்டா இருக்கலாம் . . .
Reply
#36
இப்ப பிரச்சனை ஐரோப்பாவில் நல்ல தொலைக்காட்சி சேவைகள் இல்லை என்பதா அல்லது இந்திய தொலைக்காட்சிகளின் ஊடுருவலும் அதனால் இங்கு ஏற்கனவே புலம்பெயர் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சிகளின்/ஊடகங்களின் மீதான தாக்கமுமா....

அறிவியல் வேண்டும் என்றால் BBC..Sky... பாருங்கள் Discovery பாருங்கள்...இதே போல ஒரு போட்டி தாயகத்தில வந்தது சுப்பசோ...அந்தச் சோ...இந்தச்சோ எண்டு தொடங்கிச்சினம் பிறகு பிரச்சனை முத்த அவையெல்லாம் இடம்பெயர்ந்து லண்டன் கனடா எண்டு போய் இப்ப அங்க 'சோக்'காட்டினம்....இதுதான் உண்மை இவையில எத்தனை பேருக்கு உண்மையான சமூகப்பற்று இருந்தது.....இருக்குது...அங்க அப்ப நிதர்சனம் மட்டுமே உண்மைச் செய்திகளைத் தந்தது...!

சரி இப்ப காலத்தால திருந்தியிருப்பினம் எண்டுபாத்தா எங்க...தாங்கள் உள்ள சினிமா எல்லாம் காட்டுவினம் நாடகங்கள் எடுத்து விளம்பரதாரரட்ட கட்டுக்கட்டா வேண்டிப்போட்டுக் காட்டிவினம்....இவையா எத்தனை நாடகங்கள் போட்டு அவங்கள் மாதிரி சனத்தைக் கவர்ந்திருக்கலாமே...ஏன் செய்யேல்ல...பிறகு இப்படித்தான் சனத்தைத் திட்டுங்கோ...அதுகள் காசு கொடுக்கிறதுகள் கொஞ்சம் எண்டாலும் என்ரரெயின்மென்ர விரும்பிறதில என்ன பிழையிருக்கு.....அதைக் கவனத்தில எடுக்காமல் விட்டது யாரிடைய பிழை...இப்ப BBCயை எடுத்தா எத்தனை செய்தி சொல்லுது அத்தனையும் எமக்கு அவசியமா....உதெல்லாம் வேண்டாப் பொண்டாட்டி கைபட்டா குற்றம் கால்பட்டா குற்றம் எண்ட கணக்கில வாற கருத்துக்கள்...!

சந்தை எண்டு வந்தா போட்டிவரத்தான் செய்யும் எப்பவும் நாங்கள் தனிக்காட்டு ராஜாக்கள் எண்டு இருக்க ஏலாது எனி திறமையாலதான் முன்னேற வேண்டும் பொறாமையை வளர்க்காம திறமையை வளர்த்து முன்னேறப் பாருங்கோ...இல்லாட்டி அவங்கள் உங்களை இருந்த இடம் தெரியாமல் நகர்த்திப் போடுவாங்கள்....! ஊடகங்களில உந்த அரசியல் குத்து வெட்டுக்கு ஒரு முடிவுகட்டுங்கோ...திறமை தன்பாட்டில வளரும்....!

இதில வேடிக்கை என்ன தெரியுமா...இவைதான் அவங்களுக்கு சந்தைக்கான விளமபரம் செய்தது...தாங்கள் செய்தது இப்ப இவைக்கே ஆபத்தா வரேக்கதான் முழிக்கீனம்....! இதெல்லாம் திட்டமிடாத எழுந்தமனமான விளையாட்டுகளால வாறது...உண்மையான சமூக வளர்ச்சிக்கு விழிப்புணர்வுக்கு இப்படியானவை சேவை செய்யமுடியுமா....???????! இப்ப போராட்டத்தை வேற இழுக்கினம்...உங்க சனமும் பொடியளும் போராடினது நீங்கள் தொலைக்காட்சி லண்டனில நடத்த இல்ல....வியாபாரம் நடத்த இல்ல....உங்களுக்கு நட்டம் என்றால் உண்மையான ஈழ மக்கள் ஆர்வலர்கள் பலர் இருகினம் அவை எடுத்து திறமையா நடத்துவினம் குடுங்கோ பாப்பம்.....!

ஊர் இரண்டுபட்டா கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம்.....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#37
Quote:ஊடகங்களில உந்த அரசியல் குத்து வெட்டுக்கு ஒரு முடிவுகட்டுங்கோ...திறமை தன்பாட்டில வளரும்....!
இதுதான் தற்போது தேவை.. நன்றி குருவிகள்.
.
Reply
#38
இந்தியாவில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு தொலைக்காட்சி வைத்துள்ளது. இவர்கள் செய்தித்துறையில் நடுநிலையை கடைப்பிடிப்பது இல்லை. உள்ளே அரசியல் தலைகள் சொல்வது தான் நடக்கிறது. சாதாரண டிவி சனல்களுக்கு மிரட்டல்கள் மற்றும் அரசியல் பலத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். சினிமாவில் இருக்கும் இயக்குனர்களை மிரட்டி பணியவைக்கிறார்கள் கேபிள் டிவி காரர்களைவேறு விலைககுவாங்க முயற்;சித்தார்கள். இப்படி ஏராளமான குற்றச்சாட்டு ஒவ்வொருவர்மேலும் உள்ளது.

ஆரம்ப காலத்தில் சினிமாவைப்போட்டு மக்களை சோம்பேறிகள் ஆக்கினார்கள். இப்போது சின்னத்திரை நாடகங்கள், பலருக்கு திகட்டிவிட்டது. ஆனாலும் ஆரம்பகட்டததில் இருக்கும் எம் மக்கள் எல்லாம் மறந்து முதலில் அடிமையாகிவிடுவார்கள். இதில் இருந்து மீண்டு வர நாள் எடுக்கும். இது போராட்ட உணர்வை மழுக்கடித்துவிடும். ஏன் எம் நாட்டில் என்ன நடக்கிறது என்று அறியும் ஆவலை கூட நீககிவிடும்.

இவர்களுடன்போட்டிபோட எமது சனல்களிடம் திறமை உண்டாதெரியவில்லை. ஆனாலும் இந்தச்சனல்களை புறக்கணிக்கமுடியாது. வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு பெண்களுக்கு குழந்தைகளுக்கு இது சிறந்த பொழுது போக்கு.

இவர்களுடன் பேச்சு நடத்தி எம்மக்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை மட்டும்கொண்ட ஒரு சனலை ஆரம்பிக்கவற்புறுத்தலாம். இவர்களில் சன்டிவியினர் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் ஒரு தனி சனலை ஏற்றபடுத்திக்கொடுத்துள்ளனர். ஓவ்வொன்றும் ஒரு அவரவர்கள் மாநில மொழியில் ஒலிஒளிபரப்பப்படுகின்றது.

நிச்சயமாக எமது மக்கள் ஒன்றிணைந்து நின்;றால் எமக்காக ஒரு சனலை அவர்களால் ஏற்றபடுத்த முடியும். அந்த சனலுக்கான நிகழ்ச்சிகளை எமது தமிழர்களைக்கொண்ட ஒரு குழு தீர்மானிக்கலாம். ஆகவே இப்பபோதே அவர்கள் கொடுப்பதை அப்படியே ஏற்றக்கொள்ளாது எமக்கென்று ஒரு தip சனலை ஏற்படுத்த வற்புறுத்தலாம். அச்சனல் இலங்கை மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கென பிரத்தியேக நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிஒளிபரப்பலாம். மலேசியத்தமிழர்களும் உணர்வால் எம்முடன் ஒன்றுபட்டவர்களே. அவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

எம் மக்களின் ஒற்றுமைதான் இதை வென்றுதரும்
Reply
#39
நல்ல சிந்தனை.. ஆனால் மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன.. நாம் இலங்கையராக உள்ளோம்.. இதில்தான் சற்று முரண்பாடு உள்ளது.

புகலிடத்தில் பல திறமையாளர்கள் உள்ளார்கள். ஆனால் அரசியல் அவர்களுள் திரையாக நிற்கிறது.. அது களையப்பட்டு அரசியலுக்கு அப்பால் தகமைகள் வரவேற்கப்பட்டால்.. புகலிடத் தொலைக்காட்சியும் தனக்கென ஒரு புதிய பாதையில் தளர்வின்றி நடைபோடும்.. ஆனால் இதற்கு தடைபோடதான் பலர் உள்ளனர்.. அதுதான் துரதிஷ்டம்.
.
Reply
#40
கலாநிதி மாறனும் ஜெயலலிதாவும் சம்பாதித்தது போதாது என்று இங்கு வரவில்லை.
இந்த தொலைக்காட்சிகள் வருகைக்குப் பின்னால் பெரிய பின்ணனி ஒன்று இருப்பதாக தோன்றுகிறது.

இந்திய ஊடகங்கள் இலவச ஒளி(லி)பரப்பைக்காட்டி மக்களை தம் மாய வலைக்குள் இழுத்துவிட்டன.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)